Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
கைபேசி, நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டாம் ஊக்
  • பதவி, பிபிசி செய்திகள்
  • 16 ஆகஸ்ட் 2024

முதல் கைபேசி அழைப்பு நடந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், நமது சட்டைப் பையில் இருக்கும் இந்தக் கையடக்கக் கருவி இப்போது பூகம்பத்தைக் கண்டறியும் உலகின் மிகப்பெரிய அமைப்பை உருவாக்க உதவி வருகிறது.

2022-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி, அமெரிக்காவின் கலிபோர்னியா விரிகுடா பகுதியில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, இது ஒரு அசைவு போலத்தான் இருந்தது. ஆனால் அப்பகுதி முழுவதும் வசிப்பவர்களின் அந்த நிலனடுக்கத்தை உணர்ந்து அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்துக்குத் தகவல் அனுப்பினர். சேதம் எதுவும் பதிவாகவில்லை. ஆனால், நிலநடுக்கம் மற்றொரு வகையில் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. நிலநடுக்கம் தொடங்குவதற்கு முன்பே அப்பகுதியில் உள்ள பலர் தங்கள் தொலைபேசிகளில் எச்சரிக்கைச் செய்திகளைப் பெற்றனர்.

2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை கலிஃபோர்னியாவின் பேக்கர்ஸ்ஃபீல்ட் நகருக்கு தெற்கே மையம் கொண்ட 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பும் இதே போன்ற எச்சரிக்கைகள் தெற்கு கலிபோர்னியாவில் வசிப்பவர்களுக்கு கைபேசிகளில் வந்தன.

இன்னும் முக்கியமாக, இந்தக் கைபேசிகள் பல பூகம்பங்களை முதலில் கண்டறிய உதவின.

நிலநடுக்கம் வருவதற்குச் சில வினாடிகளுக்கு முன்பு பயனர்களை எச்சரிக்கும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை உருவாக்க, கலிஃபோர்னியாவில் உள்ள பல பல்கலைக்கழகங்கள், மற்றும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்துடன் கூகுள் நிறுவனம் பணி செய்து வருகிறது.

இது சில வினாடிகள் முன்கூட்டிய எச்சரிக்கை தான், ஆனால் ஒரு நிலநடுக்கத்தின் போது சில வினாடிகளில் ஒரு மேஜையின் கீழ் சென்று நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு இது போதுமான நேரத்தை அளிக்கும். ரயில்களின் வேகத்தைக் குறைக்கவும், விமானங்கள் புறப்படுவதை அல்லது தரையிறங்குவதை நிறுத்தவும், பாலங்கள் அல்லது சுரங்கங்களில் கார்கள் நுழைவதைத் தடுக்கவும் இது போதுமான நேரமாகும்.

எனவே, வலுவான நிலநடுக்கங்கள் ஏற்படும் போது இந்த அமைப்பு உயிர்களைக் காப்பாற்றும்.

கைபேசி, நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கூகுள் நிறுவனம், பொதுமக்களுக்குச் சொந்தமான கைப்பேசிகள் மூலம் உலகின் மிகப்பெரிய நிலநடுக்கத்தைக் கண்டறியும் நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது

இது எப்படிச் செயல்படுகிறது?

இது இரண்டு தரவுகளைப் பயன்படுத்துகிறது. ஆரம்பத்தில், அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம், கலிஃபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகம், மற்றும் மாநில அரசு ஆகியவற்றின் நில அதிர்வு நிபுணர்களால் மாநிலம் முழுவதும் நிறுவப்பட்ட 700 நில அதிர்வு அளக்கும் கருவிகளின் வலைப்பின்னலை நம்பியிருந்தது. இவை பூமி அதிர்வுகளைக் கண்டறியும் சாதனங்கள் மூலம் பெறப்படும் தரவுகள்.

ஆனால் கூகுள் நிறுவனம், பொதுமக்களுக்குச் சொந்தமான கைபேசிகள் மூலம் உலகின் மிகப்பெரிய நிலநடுக்கத்தைக் கண்டறியும் நெட்வொர்க்கை உருவாக்கி வருகிறது.

கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் பெரும்பாலான ஸ்மார்ட்ஃபோன்களில் முடுக்க மானிகள் (ஆக்சலெரோமீட்டர்கள் - accelerometers) உள்ளன. இது ஒரு கைபேசி நகர்த்தப்படும் போது அதைக் கண்டறியும் அமைப்பு. கைபேசி சாய்ந்திருக்கும் போது, போர்ட்ரெய்ட் மோடில் இருந்து லேண்ட்ஸ்கேப் மோடுக்கு மாற இது பயன்படுத்தப்படுகிறது. கூகுளின் ‘ஃபிட்னஸ் டிராக்க’ருக்கான தகவலை வழங்கவும் இது உதவுகிறது.

மேலும், ரேடியோ சிக்னல்கள் நில அதிர்வு அலைகளை விட வேகமாகப் பயணிப்பதால், நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து விலகி இருக்கும் பகுதிகளில், நிலநடுக்கம் தொடங்கும் முன்பே எச்சரிக்கைகள் வந்து சேரும்.

ஆண்ட்ராய்டில் உள்ள மென்பொருள் பொறியாளர் மார்க் ஸ்டோகைடிஸ் இதைப் பற்றி கூறுகையில், "நாங்கள் அடிப்படையில் ஒளியின் வேகத்தை (தொலைபேசியில் இருந்து வரும் சமிக்ஞைகளின் வேகம்) பூகம்பத்தின் வேகத்திற்கு எதிராக ஓட்டுகிறோம். மேலும் எங்களக்து அதிர்ஷ்டம், ஒளியின் வேகம் மிக வேகமாக உள்ளது!" என்கிறார்.

பெரும்பாலான தரவுகள் மக்களிடமிருந்து பெறப்படுவதால், விலையுயர்ந்த நில அதிர்வு அளவீடுகளின் விரிவான நெட்வொர்க்குகள் இல்லாத பகுதிகளில் பூகம்பங்களைக் கண்காணிப்பதற்கான சாத்தியத்தை இந்தத் தொழில்நுட்பம் ஏற்படுத்துகிறது. இது உலகின் தொலைதூர மற்றும் ஏழ்மையான பகுதிகளில் கூட பூகம்ப எச்சரிக்கைகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

 
கைபேசி, நிலநடுக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, குறைவாகவே கைபேசி பயன்படுத்துபவர்கள் உள்ள தொலைதூரப் கடலோரப் பகுதிகளில் சுனாமிகளைத் தூண்டக்கூடிய நிலநடுக்கங்கள் ஏற்படலாம்

என்ன சிக்கல்?

2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், நில அதிர்வு அலைகள் மையப்பகுதியிலிருந்து பயணித்தபோது, சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி முழுவதும் உள்ள தொலைபேசிகள் பூகம்ப எச்சரிக்கைத் தரவுகளுடன் ஒளிர்வதை கூகுள்-இன் பொறியாளர்கள் கண்டனர்.

இந்த அமைப்பு இப்போது இந்த நில அதிர்வுகளைக் கண்டறிகிறது. பின்னர் அவை உச்ச வரம்புகளைக் கடக்கும்போது அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் ‘ஷேக்அலர்ட் செயலி’ மூலம் எச்சரிக்கைச் செய்திகளாக வழங்கப்படுகின்றன. இது பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பயனர்களின் மொபைல் ஃபோன்களில் எச்சரிக்கைச் செய்திகளை வழங்குகிறது. ஆண்ட்ராய்டு போன்களில் இந்த எச்சரிக்கைச் செய்திகளைப் பெறமுடியும். இது பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. இது பயனர்களின் மொபைல் போன்கள் நிலையாக இருக்கும் போது அவற்றை நிலநடுக்கத்தைக் கண்டறியும் கருவிகளாக மாற்றி, அதன் தொலைபேசியின் இருப்பிடத்தின் அடிப்படையில் எச்சரிக்கைச் செய்தியை அனுப்புகிறது.

கலிபோர்னியாவில் நிலநடுக்கங்கள் பொதுவான நிகழ்வாகும். அங்கு ஒரு நாளைக்கு 100 சிறிய நிலநடுக்கங்களை ஏற்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை உணர முடியாத அளவுக்குச் சிறியவை. இருப்பினும், கலிபோர்னியாவில் பொதுவாக வருடத்திற்கு பல பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ரிக்டர் அளவு 4.0-க்கு மேல் 15-20 நிலநடுக்கங்கள் ஏற்படலாம்.

இன்னும் பரவலாக, உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள 1,600 கோடி மொபைல் போன்களில், 300 கோடிக்கும் அதிகமானவை ஆண்ட்ராய்டு மென்பொருளில் இயங்குகின்றன. இவற்றில், நிலநடுக்கங்களால் பாதிக்கப்படக்கூடிய 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கைபேசிகளில் இந்த எச்சரிக்கை அமைப்பு இருக்கிறது.

ஆனால் இந்த அமைப்புக்கும் வரம்புகள் உள்ளன. குறிப்பாக, குறைவாகவே கைபேசி பயன்படுத்துபவர்கள் உள்ள தொலைதூரப் கடலோரப் பகுதிகளில் சுனாமிகளைத் தூண்டக்கூடிய நிலநடுக்கங்கள் ஏற்படலாம். அங்கு இந்த எச்சரிக்கை அமைப்பு வேலைசெய்யப் போதுமான தரவுகள் கிடைப்பது கடினம். நிலநடுக்கத்துக்குச் சில வினாடிகளுக்கு முன்னரே எச்சரிக்கைகளை வெளியிட இது உதவும் என்றாலும், அவை நிகழும் முன்னரே கணிக்கும் தொழில்நுட்பம் இன்னும் மேம்பட வேண்டும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.