Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
ராக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நியூட்டனின் மூன்றாம் விதியின் அடிப்படையில் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

செயற்கைக்கோள்கள், விண்வெளி, விண்வெளி வீரர்கள் என இந்த சொற்களைக் கேட்டாலே நினைவுக்கு வருவது விண்ணில் பாயும் ராக்கெட்டுகள் தான். இஸ்ரோ, நாசா போன்ற விண்வெளி மையங்கள் தங்களது செயற்கைக்கோள்களை ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்துவதை பலமுறை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம்.

இந்த ராக்கெட்டுகள் செங்குத்தாக விண்ணில் ஏவப்படும். அப்போது செலவழிக்கப்படும் பெரும் ஆற்றலின் காரணமாக, நெருப்பைக் கக்கிக்கொண்டு அவை விண்ணில் பாய்வதைக் காணலாம். ஆனால் செங்குத்தாக ஏவப்படும் ராக்கெட் சிறிது தூரத்திற்கு பிறகு, சாய்வாகச் சென்று, விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும்.

விண்வெளி வீரர்களை சுமந்துசெல்லும் விண்கலங்களைக் கொண்டு செல்லும் ராக்கெட்டுகளும் செங்குத்தாகவே ஏவப்பட்டு பின்னர் சாய்வாகச் சென்று, விண்வெளியில் ஒரு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

ஆனால் இந்த விண்கலங்கள் பூமிக்குத் திரும்பும்போது, ஒரு விமானம் போலவே தரையிறங்கும். அப்படி இருக்க ராக்கெட் செங்குத்தாக ஏவப்படுவது ஏன்? அவ்வாறு ஏவுவதன் பயன்கள் என்ன? செங்குத்தாக சென்று, பிறகு சாய்வாகச் செல்வதற்கு பதிலாக, சாய்வு நிலையிலேயே ராக்கெட்டை ஏவினால் என்னவாகும்?

ராக்கெட் என்றால் என்ன?

ராக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ராக்கெட் பொதுவாகக் கீழ்நோக்கி வெப்பக் காற்றை (Exhaust) வெளியேற்றும்போது அதே வேகத்தில் ராக்கெட் மேல் நோக்கி உந்தப்படுகிறது

விண்வெளி தொழில்நுட்பத்தில், ராக்கெட் என்பது மனிதர்களையும் பொருட்களையும் விண்வெளிக்கு அனுப்புவதற்கு உதவக்கூடிய ஒரு இயந்திரம். விண்வெளி திட்டங்களின் முக்கியக் கட்டமே ராக்கெட் ஏவப்படுவதுதான். பல கோடி ரூபாய் செலவில் ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படுகின்றன.

‘ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான ஒரு எதிர்வினை உண்டு’, இது நம்மில் பலருக்கும் தெரிந்த நியூட்டனின் மூன்றாம் விதி. இந்த எளிய மற்றும் பிரபலமான விதியின் அடிப்படையில் தான், பலகோடி ரூபாய் செலவில் ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

“ராக்கெட் பொதுவாகக் கீழ்நோக்கி வெப்பக் காற்றை (Exhaust) வெளியேற்றும்போது, அதே வேகத்தில் ராக்கெட் மேல் நோக்கி உந்தப்படுகிறது.” என்று நாசாவின் இணையதளம் விளக்குகிறது.

ஒரு காற்று நிரம்பிய பலூனை, அதன் முனையைக் கட்டாமல் விடும்போது, உள்ளிருக்கும் காற்று வெளியேறி போது பலூன் மேல்நோக்கி செல்லும். அதாவது, பலூனிலிருந்து வெளியேறும் காற்றின் விசை பலூனை முன்னோக்கி தள்ளுவதால் இது நிகழ்கிறது.

ராக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, செங்குத்தாக ஏவப்பட்டாலும் கூட சுற்றுவட்டப்பாதை அல்லது தனது இலக்கை அடைய ராக்கெட் சில நொடிகளில் சாய்வான பாதையைத் தேர்ந்தெடுத்துவிடும்

பொதுவாக மற்ற இயந்திரங்களைப் போலவே, எரிபொருள் எரிக்கப்படுவதன் மூலம் ராக்கெட்டை மேல் நோக்கி அழுத்தும் விசை (Thrust) உருவாகிறது. ராக்கெட் இயந்திரங்கள் எரிபொருளை சூடான வாயுவாக மாற்றுகின்றன. இயந்திரத்தின் பின்புறத்திலிருந்து வாயுவை வெளியே தள்ளுவது ராக்கெட்டை முன்னோக்கி நகர்த்துகிறது.

ராக்கெட் என்பது ஜெட் எஞ்சினிலிருந்து வேறுபட்டது. ஜெட் எஞ்சின் வேலை செய்ய காற்றில் இருந்து ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ராக்கெட் எஞ்சின் தனக்குத் தேவையான அனைத்தையும் சுமந்து செல்கிறது. அதனால்தான் காற்று இல்லாத விண்வெளியில் கூட ராக்கெட் என்ஜின் வேலை செய்கிறது.

ராக்கெட் என்ஜின்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. திரவ எரிபொருள் மற்றும் திட எரிபொருளைப் பயன்படுத்தும் ராக்கெட்டுகள். இது தவிர, ஹைப்ரிட் ராக்கெட்டுகளும் உள்ளன. அதாவது திரவ மற்றும் திட எரிபொருட்கள் என இரண்டும் பயன்படுத்தப்படும்.

 

ராக்கெட் ஏன் செங்குத்தாக ஏவப்படுகிறது?

இஸ்ரோ

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2023இல் இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ‘சந்திராயன்-3’ திட்ட ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது

பூமியின் ஈர்ப்பு விசையை திறன்பட கடந்து செல்லவே ராக்கெட்டுகள் செங்குத்தாக ஏவப்படுகின்றன. செங்குத்தாக ஏவுவதன் மூலம், ராக்கெட்டுகள் விரைவாக பூமியின் வளிமண்டலத்தை விட்டு வெளியேற முடியும். அது மட்டுமல்லாது காற்று எதிர்ப்பு மற்றும் எரிபொருள் நுகர்வும் இதனால் குறைக்கப்படும்” என்று பிபிசி தமிழிடம் கூறினார் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன்.

ஆனால் அதே சமயத்தில் செங்குத்தாக ஏவப்பட்டாலும் கூட, சுற்றுவட்டப்பாதை அல்லது தனது இலக்கை அடைய அது சில நொடிகளில் சாய்வான பாதையைத் தேர்ந்தெடுத்துவிடும் என்று சிவன் கூறுகிறார்.

ராக்கெட் ஏவப்படுவதற்கு, அதன் எடையை விட அதிகமான விசை தேவைப்படும். செங்குத்தாக ஏவும்போது, அந்த விசை முழுவதுமாக புவியீர்ப்புக்கு எதிராக இயக்கப்படுவதை உறுதிசெய்கிறது. அதனால் செங்குத்து நிலையில் ஏவுகிறோம்."

“அதுவே ஏவும்போதே விமானத்தை போல சாய்வாக ஏவினால், தேவையான வேகத்தை அடைய முடியாது அல்லது அதிக எரிபொருள் ஏவுவதற்கே தேவைப்படும்.” என்று கூறுகிறார்.

சிவன்
படக்குறிப்பு, ராக்கெட்டை, விமானத்தை போல சாய்வாக ஏவினால் தேவையான வேகத்தை அடைய முடியாது என்கிறார் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன்

செங்குத்தாக ஏவிய பிறகு என்ன நடக்கும்?

ஒரு ராக்கெட்டை செங்குத்தாக ஏவிய பிறகு என்ன நடக்கும் என்பதையும் விளக்கினார் சிவன்.

ராக்கெட் அப்படியே செங்குத்தாகவே விண்வெளியை நோக்கிச் செல்லாது. 100 முதல் 150 நொடிகளில் அது நேர்கோட்டுப் பாதைக்கு திரும்பத் தொடங்கும். பூமியின் பரப்பிலிருந்து 65 முதல் 70 கி.மீ உயரத்தில் இது நடக்கும். அப்போது திசைவேகம் நொடிக்கு 3000 மீட்டர்கள் என இருக்கும்.”

பின்னர் 1000 நொடிகளுக்குப் பிறகு, 220 முதல் 230 கி.மீ உயரத்தில் அது முழுமையாகச் சாய்ந்து, சுற்றுவட்டப்பாதை அல்லது இலக்கை நோக்கிச் செல்லும். அப்போது அதிகபட்ச திசைவேகம் நொடிக்கு 10,000 மீட்டர்கள் என இருக்கும். இலக்கை அடைந்தவுடன் செயற்கைக்கோள்கள் பிரிந்து அவை விண்வெளியில் நிலைநிறுத்தப்படும். ராக்கெட் பாகங்கள் பிரிந்து விண்வெளிக் குப்பைகளாக மாறி விடும். மறுபயன்பாட்டு ராக்கெட் என்றால் பூமிக்கு திரும்பி விடும்” என்று கூறினார்.

‘ரூமி 1’
படக்குறிப்பு, இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ரூமி 1’

அனைத்து ராக்கெட்டுகளும் செங்குத்தாக ஏவப்பட வேண்டுமா?

சமீபத்தில் இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான ‘ரூமி 1’ (RHUMI-1), சென்னை, கிழக்குக் கடற்கரை சாலையில் இருந்து ஒரு ஒரு மொபைல் ஏவுதளத்தின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் இந்த ராக்கெட் செங்குத்தாக ஏவப்படவில்லை. சற்று சாய்வான நிலையிலேயே ஏவப்பட்டது.

சிறு ராக்கெட்டுகள், பாலிஸ்டிக் ராக்கெட்டுகள் செங்குத்தாக ஏவப்பட வேண்டியதில்லை. ஒரு சிறு கல்லை அப்படியே செங்குத்தாக தூக்கிப்போட்டால் அதிக தூரம் செல்லாது, ஆனால் அதை ஒரு 45 டிகிரி சாய்வாக வீசினால் கூடுதல் தூரம் செல்லும். இங்கே அதுதான் நடக்கிறது” என்கிறார் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஆனால் பெரிய செயற்கைக்கோள்கள், மனிதர்களைச் சுமந்து செல்லும் ராக்கெட்டுகளுக்கு அதிக ஆற்றல் தேவை. அதுவும் சில கிலோமீட்டர்கள் மேலே தள்ளுவதுதான் முக்கியம். அத்தகைய ராக்கெட்டுகளை சாய்வாக ஏவினால், ஈர்ப்பு விசையின் தாக்கம் இருக்கும். ராக்கெட் பரவளையப் பாதையில் செல்லக்கூடும் (Parabolic trajectory). அப்படி நுழைந்தால், அது தனது இலக்கை தவறவிட்டுவிடும்” என்று விளக்கினார்.

 

செங்குத்தாக ஏவுவதில் இருக்கும் சவால்கள் என்ன?

ராக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஏவுதலின் முதல் கட்டத்தில், ஏவு பாதையில் இருந்து ராக்கெட் சற்றும் விலகி விடக்கூடாது என்கிறார் வெங்கடேஸ்வரன்

ஒரு ராக்கெட்டை செங்குத்தாக ஏவுவதில் இருக்கும் சவால்கள் குறித்து பேசினார் வெங்கடேஸ்வரன்.

காற்று தான் மிகவும் முக்கியமான சவால். காற்றியக்க அழுத்தம் மற்றும் ராக்கெட் மேல்நோக்கி செல்லும்போது அதிக அதிர்வுகள் இருக்கும். அதை சமாளிக்கும் விதத்தில் ராக்கெட் கட்டமைக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வளிமண்டலத்தை கடக்கும் முன் ராக்கெட் உடைந்து விடும்.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாசாவிற்கு (NASA) தொடக்க காலத்தில் இந்த அதிர்வுகள் குறித்த போதிய புரிதல் இல்லாததால் அதன் பல ராக்கெட் ஏவுதல்கள் தோல்வியில் முடிந்தன. அதேபோல ஏவுதலின் முதல் கட்டத்தில், ஏவு பாதையில் இருந்து ராக்கெட் சற்றும் விலகி விடக்கூடாது. அப்படி விலகினால் அனைத்தும் வீணாகிவிடும். மற்றபடி பெரிய சவால்கள் ஏதும் இல்லை” என்று கூறினார்.

வெங்கடேஸ்வரன்
படக்குறிப்பு, இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்

இப்போதைக்கு விண்வெளித் தொழில்நுட்பத்தில், செங்குத்தாக ஏவுவதுதான் நடைமுறையில் ராக்கெட் ஏவுவதற்கு ஒரு சிறந்த வழியாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.

வரும்காலத்தில் ஏதேனும் தொழில்நுட்பங்கள் வரலாம், ஆனால் செங்குத்தாக ஏவுவதற்கு சிறந்த மாற்றாக அது இருக்க வாய்ப்பு குறைவு. ஏனென்றால் மற்ற முறைகளில் பெரிய ராக்கெட்களை ஏவ அதிக எரிபொருள் தேவைப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.” என்கிறார் வெங்கடேஸ்வரன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.