Jump to content

யாரை நம்பி நான் பிறந்தேன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வயது வந்த பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்ப்பது இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணம்இதை விமர்சிப்பவர்கள் சிலர் இருந்தாலும், இன்றைய காலத்தில் இந்த நடைமுறைதான்  உலகெங்கும் பரவலாக இருக்கிறது.

யேர்மனியில், உன்னா (Unna) மாவட்டத்தில் உள்ள செல்ம் (Selm) நகரத்தில் தனது 96 வயதான தந்தையை முதியோர் இல்லத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற மகளின்(53)நிலைமை சிக்கலாகிப் போயிருக்கிறது.

தந்தைக்கோ முதியோர் இல்லத்துக்குப் போவதற்கு சிறிதும் விருப்பமில்லை. மகளுக்கோ  தந்தையை அங்கே அனுமதிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இந்த விடயம்  முற்றி தந்தைக்கும் மகளுக்கும் பெரும் வாக்கு வாதமாகப் போனது. ‘இதுதான் முடிவுஎன்று மகள் சொன்னதன் பின்னர், கோவம் கொண்ட தந்தை துப்பாக்கியை எடுத்து நான்கு முறை சுட்டதில் இரண்டு குண்டுகள் மகளின் தொடையிலும் ஒரு குண்டு  அவளின் தோள்பட்டையிலும் பாய்ந்திருக்கின்றன. காயங்களுடன் அலறிக் கொண்டு ஓடிய மகளை  அயலவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள்

மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு அங்கு அவருக்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. மகளின் உயிருக்கு ஆபத்தில்லை என வைத்தியசாலை அறிவித்திருக்கிறது.

தந்தையிடம் துப்பாக்கி பாவிப்பதற்கான அனுமதி இருக்கிறதுஇந்த வயதிலும் குறி தவறாமல் சுடும் அவரை எப்படி வீட்டுக்குள்ளே போய் கைது செய்வது என்று தெரியாமல் பொலிஸார் ஒன்றரை மணி நேரம் வீட்டைச் சுற்றி நின்றிருக்கிறார்கள். தந்தை தானாக வெளியே வந்து சரண் அடைந்திருக்கிறார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு வருமா அல்லது மனநல மருத்துவ மனையில் அவரை அனுமதிப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

பேசாமல் பெரிசு முதியோர் இல்லத்துக்கே போயிருக்கலாம். 96 வயதில் இந்த வீரம் அதிகம்தான்.

 

இந்தச் செய்தியை இங்கே வாசித்தேன் (யேர்மன் மொழி)

https://www.n-tv.de/panorama/96-Jaehriger-schiesst-auf-Tochter-nach-Streit-um-Pflegeheim-article25209186.html

  • Sad 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.