Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தனது சாதனையை முறியடிப்பது என்பது தற்போதைய கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் அல்ல என்றும், அதற்கான காரணம் குறித்தும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார்.

டி20 போட்டிகளால் சமீப காலமாகவே டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதனால் பெரும்பாலான வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து 35 வயதுக்குள்ளேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான், வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்த ஓஃப்-ஸ்பின்னரான இவர், தனது சாதனையை எந்த பந்து வீச்சாளராலும் விரைவில் முறியடிக்க முடியாது என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது;

டெஸ்ட் கிரிக்கெட்டை பற்றி நான் கவலைப்படுகிறேன். இப்போதெல்லாம் ஒவ்வொரு நாடும் 6 – 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றன. இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் ஆஷஸ் தொடரில் விளையாடலாம். பல நாடுகளில் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதே இல்லை. இங்கே குறைவான டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெறுகிறது. எனவே 800 விக்கெட் சாதனையை ஒருவர் உடைப்பது மிகவும் கடினம்.

ஏனெனில் தற்போது கிரிக்கெட் என்பது ஷார்ட் ஃபார்மை நோக்கி நகர்ந்துள்ளது. எங்கள் காலத்தில் நாங்கள் 20 வருடங்கள் விளையாடினோம். ஆனால் இப்போதுள்ள வீரர்களின் விளையாட்டு காலம் என்பது குறைந்துள்ளது. தொடர்ந்து யாரும் விளையாடுவதில்லை என்பது பிரச்னையாகும். அனைத்து வீரர்களிடமும் திறமை இருந்தாலும் அவர்களால் அனுபவத்தை பெற முடியுமா? அதிக தொடர்கள் நடைபெறும் இந்த காலத்தில் அது கடினம்” என்று கூறினார்.

https://thinakkural.lk/article/309250

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, ஏராளன் said:

தனது சாதனையை முறியடிப்பது என்பது தற்போதைய கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் அல்ல என்றும், அதற்கான காரணம் குறித்தும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார்.

டி20 போட்டிகளால் சமீப காலமாகவே டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. அதனால் பெரும்பாலான வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து 35 வயதுக்குள்ளேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான், வேகப்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்த ஓஃப்-ஸ்பின்னரான இவர், தனது சாதனையை எந்த பந்து வீச்சாளராலும் விரைவில் முறியடிக்க முடியாது என கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது;

 

https://thinakkural.lk/article/309250

என்ன‌ செய்தி இது முத்தையா முர‌ளித‌ர‌ன் சுழ‌ல் ப‌ந்து வீர‌ர் என்று வ‌ந்து இருக்க‌னும் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் என்று போட்டு இருக்கு 

 

செய்திய‌ இணைக்கும் போது ச‌ரி பிழை பார்ப்ப‌து இல்லையா ஏராள‌ன் அண்ணா..................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வீரப் பையன்26 said:

என்ன‌ செய்தி இது முத்தையா முர‌ளித‌ர‌ன் சுழ‌ல் ப‌ந்து வீர‌ர் என்று வ‌ந்து இருக்க‌னும் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் என்று போட்டு இருக்கு 

 

செய்திய‌ இணைக்கும் போது ச‌ரி பிழை பார்ப்ப‌து இல்லையா ஏராள‌ன் அண்ணா..................................

பார்ப்பேன், எனக்கு தெரியலையே பையா!
அதுசரி எங்கை ஆளைக் காணோம்? நல்லூருக்கு போனதோ?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஏராளன் said:

பார்ப்பேன், எனக்கு தெரியலையே பையா!
அதுசரி எங்கை ஆளைக் காணோம்? நல்லூருக்கு போனதோ?!

உட‌ல் நிலை ச‌ரி இல்லை

அது தான் யாழில் எழுத‌ முடிய‌ வில்லை............................

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, வீரப் பையன்26 said:

உட‌ல் நிலை ச‌ரி இல்லை

அது தான் யாழில் எழுத‌ முடிய‌ வில்லை............................

சரி கவனமாயிருங்கள் பையா.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஏராளன் said:

சரி கவனமாயிருங்கள் பையா.

ந‌ன்றி அண்ணா🙏....................



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
    • சாவகச்சேரி வைத்தியசாலையில் பிரச்சனை என்று அவசர அவசரமாக வந்த சுகாதார அமைச்சர் யாழ் வைத்தியசாலையில் வைத்தே பேச்சுவார்த்தை முடித்து திருப்பி அனுப்பப்படுகிறார் என்றால் இரும்புக் கரங்கள் இருக்கின்றன.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.