Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள திகதி அறிவிப்பு!

13 SEP, 2024 | 01:30 PM
image
 

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இதன்படி, கல்விப் பொது தராதர  உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/193581

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2024ஆம் கல்வியாண்டிற்கான  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும் என  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள்  மற்றும் நேர அட்டவணை என்பன அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு 

அத்துடன், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை என்பன தபால் மூலம் அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு | G C E A L Exam 2024

மேலும், தபால் மூலமாக  அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள், நவம்பர் 18ஆம் திகதி  முதல் www.doenets.lk  என்ற பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், வழங்கப்பட்ட அனுமதி அட்டையில், பெயர் உள்ளிட்ட திருத்தங்கள் இருப்பின்,  ஊடகம் மற்றும் பெயர் திருத்தங்கள் onlineexams.gov.lk/eic/index.php/clogin என்ற இணையதளத்தின் ஊடாக திருத்தங்களைச் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு | G C E A L Exam 2024

நவம்பர் 18 நள்ளிரவு 12.00 வரை இவ்வாறு திருத்தங்களைச் செய்ய முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், எக்காரம் கொண்டும் பரீட்சை நிலையங்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையில் மாத்திரம் கவனம் செலுத்துமாறும் பரீட்சார்த்திகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/g-c-e-a-l-exam-2024-1730962937

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு!

image

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை (19)  நள்ளிரவுடன் நிறைவடைய வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆலோசனைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, 333,185 மாணவர்கள் பரீட்சார்த்திகளாக பதிவு செய்துள்ள நிலையில் அவர்களில் 253,390 பாடசாலை பரீட்சார்த்திகளும் 79,795 தனியார் பரீட்சார்த்திகளும் ஆவர்.

https://www.virakesari.lk/article/199053

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உயர்தர பரீட்சை தொடர்பில் வௌியான அறிவிப்பு

உயர்தர பரீட்சை தொடர்பில் வௌியான அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் கடந்த மார்ச் மாதம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம், உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த பரீட்சை நடைபெறும் திகதிகளுக்கு அமைய, அடுத்துவரும் சாதாரணதர பரீட்சை உள்ளிட்ட பல பரீட்கைகளுக்கான திகதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டால், ஏனைய பரீட்சைகளுக்கான திட்டமிடல் முற்றிலும் ஒழுங்கற்றதாக மாறிவிடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=196173

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்

உயர்தர பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவித்தல்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சை திணைக்களமும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் வரும் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

எனவே பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளை தவிர்த்து மாணவர்கள் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் நல்ல சூழலை உருவாக்குவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தலைமையில், பரீட்சை திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்ட தேசிய மட்டத்திலிருந்து மாவட்டம் மட்டம் வரையிலான அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தும் வேலைத்திட்டம் அண்மையில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது. 

பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக அவசரகால பதில் ஒருங்கிணைப்பு பொறிமுறையை வலுப்படுத்தவும் இந்த கூட்டுத் திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  முப்படை, பொலிஸ் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயல்முறை தொடர்பான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, பாரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய தடைகளை நிர்வகிக்க தேவையான வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதைத் தடுக்கும் வகையில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு சில தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117 அல்லது விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு அறை இலக்கங்களான 0113 668 020 / 0113 668 100 அல்லது 0113 668 013 / 0113 668 010 மற்றும்076 3 117 117 ஆகிய இலக்கங்களுக்கு அழைக்க முடியும்.

பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் அது குறித்து அறிவிப்பதன் ஊடாக உடனடியாக நிலைமையை தவிர்ப்பதற்கு தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இதற்கிடையில், 2024ஆம் கல்வி பொது தராதர  உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு கடந்த 20ஆம் திகதி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது.

https://tamil.adaderana.lk/news.php?nid=196237

  • கருத்துக்கள உறவுகள்
Posted

க.பொ.த. உயர்தர பரீட்சை திங்கள் ஆரம்பம்!

image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை திங்கட்கிழமை (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. திங்கள் ஆரம்பமாகும் பரீட்சை டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்குமாறு  பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், வினாத்தாள்கள் அச்சிடுதல், பிராந்திய சேகரிப்பு மையங்களை நிறுவுதல், பரீட்சை மையங்களை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

உயர்தரப் பரீட்சை அட்டவணை கடந்த மார்ச் மாதம் 1 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு பரீட்சைக்கு தயார்படுத்துவதற்கு போதுமான நேரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் ஒரு மாற்றம், தேசிய தேர்வு நாட்காட்டியில் குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக சாதாரண தர பரீட்சையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே தற்போது உயர்தர பரீட்சையை காலம் தாழ்த்தி, பின்னர் மீண்டும் திட்டமிடுவது பரவலான தளவாடச் சிக்கல்களை உருவாக்கும் மற்றும் இலங்கையின் கல்வி முறையின் சுமூகமான செயல்பாட்டை பாதிக்கும். இந்தக் காரணிகளின் அடிப்படையில், உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. 

https://www.virakesari.lk/article/199485



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.