Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சென்னை டெஸ்ட்: இந்திய அணி எப்படித் தயாராகிறது? வங்கதேசத்தின் 24 ஆண்டு தாகம் நிறைவேறுமா?

சென்னை டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் முதல் போட்டி வரும் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது.

2வது டெஸ்ட் போட்டி வரும் 27-ஆம் தேதி உத்தரப்பிரசேதம் மாநிலம் கான்பூரில் நடக்கிறது.

2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதில் பங்கேற்க இரு அணிகளுக்கும் இந்தத் தொடரின் வெற்றி அவசியம் என்பதால் தீவிரமாக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

பாகிஸ்தான் பயணம் சென்ற வங்கதேச கிரிக்கெட் அணி அந்நாட்டு மண்ணில் வைத்தே பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

 

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை ஒருமுறை கூட வங்கதேசம் வென்றதில்லை என்ற வரலாறு இந்திய அணிக்கு சாதகமாக இருக்கிறது.

இருப்பினும் சென்னை மைதானத்தில் சுழற்பந்துவீச்சில் மாயஜாலம் நிகழ்த்த இந்திய அணியில் இருப்பது போன்று வலுவான சுழற்பந்துவீச்சாளர்கள் வங்கதேச அணியிலும் உள்ளனர்.

ஆதலால் சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுழற்பந்துவீச்சில் எந்த அளவு நெருக்கடி அளிக்குமோ அதே அளவு அழுத்தத்தை வங்கதேசமும் அளிக்கும்.

கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இந்திய அணியுடன் 13 டெஸ்ட் போட்டிகளில் வங்கதேசம் அணி விளையாடியுள்ளது. ஆனால், இதுவரை ஒரு போட்டியிலும் கூட அது வெற்றி பெறவில்லை, இந்திய அணி 11 வெற்றிகளைப் பதிவு செய்து ஆதிக்கம் செய்கிறது.

கவனிக்கப்படும் வீரர்கள்

இந்திய அணியில் இரு வீரர்கள் நீண்ட இடைவெளிக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்கிறார்கள். விராட் கோலி, ஏறக்குறைய 9 மாதங்களுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளார். அடுத்ததாக ரிஷப் பந்த், கார் விபத்துக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடாமல் இருந்தார். தற்போது அவர் 2 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இருவரின் பேட்டிங் திறமையும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

ஏனென்றால், கோலி இடத்துக்கு ஷூப்மன் கில், சர்ஃபிராஸ் கான், கே எல் ராகுலும்; ரிஷப் பந்த் இடத்துக்கு துருவ் ஜூரெல், கே எல் ராகுலும் போட்டியிடுகிறார்கள். ஆதலால் இருவரும் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப்பின் ஜஸ்ப்ரீத் பும்ரா டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். இடதுகை பந்துவீச்சாளர் யாஷ் தயால் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது தவிர இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக மோர்ன் மோர்கல் புதிதாக நியமிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.

"இந்திய பந்துவீச்சாளர்கள் ஏற்கெனவே திறமையாகப் பந்துவீசுகிறார்கள். அவர்களின் திறமையை மெருகேற்றவே முடிந்தவரை உழைப்பேன் பெரிதாக மாற்றம் செய்யமாட்டேன்", என மோர்கல் தெரிவித்துள்ளார்.

 
இந்தியா- வங்கதேசம்  கிரிக்கெட்

பட மூலாதாரம்,BCCI

படக்குறிப்பு, சேப்பாக்கம் மைதானத்தில் இருவிதமான பிட்ச் இருக்கிறது. ஒன்று கருப்பு மண் கொண்ட பிட்ச், மற்றொன்று செம்மண் பிட்ச்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

வங்கதேசத்துடன் இந்த 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன், நியூசிலாந்து அணியுடன் அக்டோபர் மாதத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது.

இந்தத் தொடர் முடிந்தவுடன், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாட இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணிக்கு இந்த 10 போட்டிகளும் மிகுந்த முக்கியமானதாகும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 74 புள்ளிகளுடன், 68.5% புள்ளிகள் சதவீதமும் (PCT) பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்க குறைந்தபட்சம் 7 டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது, அப்போதுதான் புள்ளிகள் சதவீதத்தை 69.3 ஆக உயர்த்தி இறுதிப்போட்டிக்குள் செல்ல முடியும்.

சென்னையில் பயிற்சி

ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வீரர்கள் விராத் கோலி, யஷஷ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, கே.எஸ்.ராகுல் உள்ளிட்ட பல வீரர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டி என்பதால் உள்ளூர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட அதிக வாய்ப்புள்ளது. இதுதவிர கடந்த சில நாட்களாக ஜெய்ஸ்வால் பந்து வீசிப் பயிற்சி எடுத்து வருகிறார். இதனால் டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படலாம்.

சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்துவீச்சு நன்கு எடுபடும் என்பதால், கடந்த சில நாட்களாக சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால், ரோஹித், கோலி, கில் ஆகியோர் பயிற்சி எடுத்தனர். இவர்களுக்கு தமிழக கிரிக்கெட் வீரர்கள் அஜித் ராம், எம். சித்தார்த் ஆகியோர் வலைபயிற்சி பந்துவீச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர வருண் சக்ரவர்த்தி, அஸ்வினைப் போல பந்துவீசக்கூடிய மும்பை பந்துவீச்சாளர் ஹிமான்சு சிங்கும் பந்து வீசினர்.

 
சேப்பாக்கம் மைதானம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானம் (2016 புகைப்படம்)

சேப்பாக்கமும் – இந்திய அணியும்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 1934-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டுவரை 36 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி மட்டும் 16 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. அதிலும் கடந்த 2001-ஆம் ஆண்டிலிருந்து சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை நடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் 6 போட்டிகளை இந்திய அணி வென்றுள்ளது.

முந்தைய செயல்பாடுகளை பொறுத்தவரை, உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு அதிக வெற்றிகளை குவித்துள்ளது. அதனால் வங்கதேச அணிக்கு இந்திய அணியை சமாளிப்பது பெரிய சவாலாக இருக்கலாம்.

சேப்பாக்கத்தின் பிட்ச் எப்படி உள்ளது?

சேப்பாக்கம் மைதானத்தில் இருவிதமான பிட்ச் இருக்கிறது. ஒன்று கருப்பு மண் கொண்ட பிட்ச், மற்றொன்று செம்மண் பிட்ச். இந்த இரு ஆடுகளமும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானவை. மைதானத்தின் மையத்தில் புற்கள் கொண்ட ஒரு பிட்ச் இருக்கிறது. இந்த பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானதாக அமைந்தாலும், அதில் பெரும்பாலும் போட்டிகள் நடத்தப்படுவதில்லை

இரு அணிகளிலுமே சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் டாஸ் வெல்வது முக்கியமானதாக இருக்கும்.

கடந்த சில நாட்களாக ஜெய்ஸ்வால் பந்து வீசிப் பயிற்சி எடுத்து வருகிறார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த சில நாட்களாக ஜெய்ஸ்வால் பந்து வீசிப் பயிற்சி எடுத்து வருகிறார்.

ரோஹித் சாதிப்பாரா?

வங்கதேச அணிக்கு எதிராக கேப்டன் ரோஹித் சர்மா நீண்டகாலமாக அவப்பெயரை சுமந்து வருகிறார்.

பல அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அரைசதம், சதம் அடித்தாலும் வங்கதேசத்துக்கு எதிராக மட்டும் அவர் இன்னும் ஒரு அரைசதம் கூட அடித்ததில்லை.

அதிலும் குறிப்பாக வங்கதேசத்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 33 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார் அதிகபட்சம் 21 ரன்கள்தான். ஆதலால், வங்கதேச அணிக்கு எதிராக ரோஹித் சர்மாவின் ஆட்டம் உன்னிப்பாக கவனிக்கப்படும்.

 
கோப்புக்காட்சி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோப்புக்காட்சி

மைல்கல் எட்டுமா இந்திய அணி

வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஒரு வெற்றி பெற்றால் டெஸ்ட் போட்டிகளில் 178 வெற்றிகளை இந்திய அணி எட்டும். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் தோல்விகளைவிட அதிகமான வெற்றிகளை பெற்ற அணி, என்ற வரிசையில் இடம்பெறும்.

24 ஆண்டுகள் தாகம் நிறைவேறுமா

வங்கதேச அணி 24 ஆண்டுகளாக இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை ஒரு டெஸ்ட் வெற்றிகூட பெறாதநிலையில் வெற்றி தாகத்துடன் அந்த அணி களமிறங்குகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக2-0 என டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனையுடன் இந்திய அணியை வங்கதேசம் எதிர்கொள்கிறது. இதனால், வங்கதேச அணியை எளிதாக எடைபோட முடியாது. இந்திய அணிக்கு இணையாக வலுவான சுழற்பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது வங்கதேசம். நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணியும் சென்னை வந்துவிட்டனர். பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஆடாத தொடக்க பேட்டர் மெகமதுல் ஹசன் இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடுகிறார்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் காயத்தால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் இவருக்குப் பதிலாக கலீல் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். ஜக்கர் அலி அனிக் எனும் இளம் வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு எதிராக முதல்முறையாக வங்கதேச அணிக்காக களமிறங்க உள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வங்கதேசத்திற்கு எதிரான தனது 101-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சாதிப்பாரா?- அவருக்கு நிறைவேறாத ஒரே ஆசை என்ன?

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“எனக்காக நான் எந்த இலக்கும் நிர்ணயிப்பதில்லை. கும்ப்ளே அவருடைய சாதனையை நான் முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னைப் பொருத்தவரை இலக்குகளை நிர்ணயித்து, அதை அடைந்தபின் கிரிக்கெட் மீதான காதலை நான் இழக்க விரும்பவில்லை.

கடினமான காலங்களுக்குப் பின் என் வாழ்க்கை மாறிவிட்டது என்பதை நான் அறிவேன். கிரிக்கெட் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை இறுகப்பிடித்துள்ளேன். எப்போது அந்த பிடி தளர்கிறதோ அப்போது விலகுவேன்”, என்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். தன்னுடைய ஓய்வு குறித்தும், கிரிக்கெட் மீதான காதல் குறித்தும் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார்.

சென்னையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அஸ்வின் இன்று (செப்டம்பர் 17) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு 38 வயதாகிறது.

செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. அதற்காக சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி வீரர்களோடு சேர்ந்து கடந்த சில நாட்களாக அஸ்வின் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

 

ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை

அஸ்வின் 1986-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று சென்னையில் பிறந்தார். அவரது தந்தை ரவிச்சந்திரன் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர். சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த அஸ்வின், பிடெக் தகவல்தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

அஸ்வின் தனது 9 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அஸ்வினுக்கு சந்திரசேகர் ராவ், சி.கே.விஜயகுமார் ஆகியோர் கிரிக்கெட் பயிற்சி அளித்துள்ளனர். சுழற்பந்துவீச்சைத் தேர்ந்தெடுக்கும் முன், மித வேகப்பந்து வீச்சாளராகவே அஸ்வின் பயிற்சி எடுத்து வந்தார்.

சிஎஸ்கே முதல் சர்வதேச போட்டிகள் வரை

2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சைப் பார்த்த பிசிசிஐ (BCCI) தேர்வுக்குழுவினர் இந்திய அணிக்காக விளையாட அஸ்வினை தேர்ந்தெடுத்தனர்.

2010-ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயில் நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கினார். அதன்பின் 2010 ஆசியக் கோப்பையிலும் இந்திய அணிக்காக விளையாடிய அஸ்வின், உள்நாட்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் தேர்வானார். நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரிலும் அஸ்வின் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இரு போட்டிகளில் மட்டுமே விளையாட அஸ்வினுக்கு வாய்ப்புக் கிடைத்தாலும் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றினார்.

 
அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2010-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அஸ்வின் விளையாடினார்.

டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம்

2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில்தான் அஸ்வின் முதன்முதலாக இந்த வகை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகினார்.

முதல் போட்டியிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டநாயகன் விருதை அஸ்வின் வென்றார். மும்பையில் நடந்த இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சதம் அடித்து, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி புதிய சாதனையை படைத்தார். 1962-ஆம் ஆண்டிற்கு பின், ஒரே போட்டியில் சதம் அடித்து 5 விக்கெட்டுகளையும் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.

அனில் கும்ப்ளே இடத்தை நிரப்பிய அஸ்வின்

இந்திய அணிக்குள் அஸ்வின் அறிமுகமாகும்போது சற்று நெருக்கடியான சூழல் இருந்தது. அனில் கும்ப்ளேயின் கிரிக்கெட் பயணம் முடிந்து அடுத்ததாக ஒரு வலுவான பந்துவீச்சாளரை இந்திய அணி தேடியபோது அஸ்வினை கண்டுபிடித்தது.

ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் தவிர சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லாத காலகட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் இந்திய அணிக்குள் வந்த அஸ்வின், கும்ப்ளே இடத்தை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளார்.

அஸ்வின் தனது முதல் 16 டெஸ்ட் போட்டிகளில் 9 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். டெஸ்ட் போட்டிகளில் அதிகவேகமாக 400 - 450 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார்.

 
அஸ்வின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணிக்குள் அஸ்வின் அறிமுகமாகும்போது சற்று நெருக்கடியான சூழல் இருந்தது.

500 விக்கெட்டுகள் சாதனை

அஸ்வின் தனது 98வது டெஸ்ட் போட்டியில் 500வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய அளவில் 500 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

சர்வதேச அளவில் இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலிய ஜாம்பவான் மறைந்த ஷேன் வார்ன், இந்தியாவின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயான் ஆகியோர் இவருக்கு முன் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த அஸ்வின்

அனில் கும்ப்ளே உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 350 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த சாதனையை அஸ்வின் முறியடித்து, தற்போது 363 விக்கெட்டுகளுடன் அடுத்த போட்டியில் களம் காண உள்ளார்.

இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.

 
சென்னை டெஸ்ட் கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இடக்கை பேட்டர்களின் எதிரி

அஸ்வின் எடுத்த விக்கெட்டுகளில் அதிகபட்ச விக்கெட்டுகள் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டவை.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் தனது 516 விக்கெட்டுகளில் 256 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அஸ்வின் விக்கெட் எடுக்கும் சதவீதம் 46.6% ஆக இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டில் தன்னை காலத்துக்கு ஏற்றார்போல் வளர்த்துக் கொண்டு, தகவமைத்துக் கொண்டு நுட்பமான பந்துவீச்சையும், கூக்ளி, கேரம் பால், பந்தை டாஸ் செய்வது, நக்குல் பால் என வெவ்வேறு முறைகளில் அஸ்வின் பந்து வீசக்கூடியவர்.

இந்திய அணியில் அஸ்வின் கடந்த 2012-ஆம் ஆண்டு அறிமுகமாகி ஏறக்குறைய 12 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.

காத்திருக்கும் சாதனைகள்

உள்நாட்டு மண்ணில் கும்ப்ளே 476 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்து வருகிறார். அதை முறியடிக்க அஸ்வினுக்கு தற்போது 22 விக்கெட்டுகள்தான் தேவைப்படுகிறது.

இதுவரை வங்கதேசத்குக்கு எதிராக 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அஸ்வின் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா அணி பந்துவீச்சாளராக ஜாகீர்கான் உள்ளார். அவர் எடுத்த 31 விக்கெட்டுகளை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 9 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.

அஸ்வின் ஒரே ஆசை என்ன

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அஸ்வின் தனக்கு ஒரே ஒரு சாதனையை மட்டும் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். அது குறித்து அவர் கூறுகையில் “ டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் எடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் இதுவரை அது நடக்கவில்லை. இனிமேல் அது நடக்கப்போவதும் இல்லை” என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா - பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம் : 6 மாதங்களின் பின் டெஸ்ட் அரங்கில் இந்தியா

Published By: DIGITAL DESK 7  19 SEP, 2024 | 10:11 AM

image

(நெவில் அன்தனி)

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் 68.52 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்தில் இருக்கும் இந்தியா, அதனைத் தக்கவைக்கும் முனைப்புடன் பங்களாதேஷுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இன்று ஆரம்பிக்கவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஆறு மாதங்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் இருந்துவரும் இந்தியா, இந்த டெஸ்ட் தொடருடன் அடுத்த மூன்றரை மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடவுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் 13 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில்தானும் வெற்றிபெறாமல் இருந்த பங்களாதேஷ், அண்மையில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் தடவையாக வெற்றிபெற்ற சூட்டோடு இந்தியாவை வீழ்த்தும் குறிக்கோளுடன் இந்தத் தொடரை எதிர்கொள்கிறது.

அதேவேளை, சில கால இடைவெளிக்குப் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடவுள்ள இந்தியா, தனது வெற்றிக் கணக்கை மீண்டும் ஆரம்பிக்க முயற்சிக்கவுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான 14ஆவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது வெற்றியை ஈட்டிய  பங்களாதேஷ், இந்தியாவுக்கு எதிராகவும் 14ஆவது போட்டியில் முதலாவது வெற்றியை ஈட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுவரை இந்தியாவுக்கு எதிராக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பங்களாதேஷ் அவற்றில் 11 டெஸ்ட்களில் தோல்விகளைத் தழுவியுள்ளது. மற்றைய 2 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இந்தியாவில் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷ் தோல்விகளையே தழுவியுள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெறுவதால் இந்தியாவுக்கு சாதகமான முடிவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும் இந்தியா கடந்த 10 வருடங்களில் சொந்த மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இந்த காலப்பகுதியில் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரிலும்  இந்தியா  தோல்வி அடையவில்லை.

இந்தத் தொடரிலும் தனது வெற்றி அலையைத் தொடர்வதற்கு இந்தியா முயற்சிக்கும் அதேவேளை, பங்களாதேஷ் பலத்த சவாலாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி முழு பலத்துடன் இந்தத் தொடரை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடரை முன்னிட்டு விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ரிஷாப் பான்ட் ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விராத் கோஹ்லி கடைசியாக டெஸ்ட் போட்டி ஒன்றில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக விளையாடியிருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் ராகுல் விளையாடியிருந்தார்.

2022இல் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷாப் பான்ட், கிட்டத்தட்ட 2 வருடங்களின் பின்னர் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாட தயாராகிறார். இதனிடையே இந்த வருடம் ஐபிஎல், சர்வதேச ரி20, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர்கள் மூவரும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் இடம்பெறுவதன் மூலம் அணி மேலும் பலமடையும் என நம்பப்படுகிறது.

1909_india.png

அணிகள்

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), யஷஸ்வி ஜய்ஸ்வால், ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, கே.எல். ராகுல், ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், மொஹமத் சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா.

பங்களாதேஷ்: ஷத்மான் இஸ்லாம், ஸக்கிர் ஹசன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), மொமினுள் இஸ்லாம், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ், ஷக்கிப் அல் ஹசன், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அஹ்மத், ஹசன் மஹ்முத், நாஹித் ரானா அல்லது தய்ஜுல் இஸ்லாம்.

1909_bangladesh.png

https://www.virakesari.lk/article/194065

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய அணியை அபார சதத்தால் அஸ்வின் காப்பாற்றியது எப்படி? - சதம் அடித்த பிறகு அவர் கூறியது என்ன?

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்தி ராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

ரவிச்சந்திரன் அஸ்வினின் சதம், ரவீந்திர ஜடேஜாவின் பொறுப்பான பேட்டிங், வலுவான பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி பெரிய சரிவிலிருந்து தப்பித்தது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று ஆட்டநேர முடிவில் இந்திய 80 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை எட்டியுள்ளது.

இந்திய அணியின் டாப்-ஆர்டர் பேட்டர்கள் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்து அணியை நெருக்கடியில் தள்ளினர். நண்பகல் உணவு இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளையும், பிற்பகல் தேநீர் இடைவேளைக்குள் அடுத்த 3 விக்கெட்டுகள் என 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்திய அணி.

ஆட்டத்தின் போக்கைப் பார்த்தபோது, இந்திய அணி 200 ரன்களுக்குள் முதல் இன்னிங்ஸில் சுருண்டுவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், 7-வது விக்கெட்டுக்கு ஆபத்பாந்தனாக வந்த அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கூட்டணி இந்திய அணியை பாதாளத்திலிருந்து மீட்டது.

தவறவிட்ட வங்கதேசம்

இந்திய அணியைக் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹசன் முகமது

வங்கதேசத்தின் பந்துவீச்சாளர் ஹசன் முகமது சிறப்பாகப் பந்துவீசி துவக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு மற்ற பந்துவீச்சாளர்களும் ஒத்துழைத்திருந்தால் ஆட்டம் வேறுவிதமாக திரும்பியிருக்கும். ஆனால், கிடைத்த வாய்ப்பை வங்கதேச அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் தவறவிட்டனர்.

உணவு இடைவேளைக்கு பிறகு வங்கதேச பந்துவீச்சாளர்கள் கூட்டுமுயற்சியுடன் பந்துவீசி இந்திய பேட்டிங் வரிசைக்கு கடும் சவால் அளித்தனர். வங்கதேச பந்துவீச்சாளர்கள் முயற்சிக்கு பலன் கிடைத்து 3 விக்கெட்டுகளை அள்ளினர்.

முழுநேர பேட்டர்களான ரோஹித், கோலி, கில் போன்றோர் களத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில், ஆல்ரவுண்டர்கள் ரவீந்திர ஜடேஜாவும், அஸ்வினும் அணியை மாபெரும் சரிவிலிருந்து மீட்டனர்.

'சென்னை எப்போதுமே ஸ்பெஷல்தான்'

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்டு, சதம் அடித்த அஸ்வின் பெவிலியன் வந்தபின் அளித்த பேட்டியில் “சென்னையில் விளையாடுவது எப்போதுமே ஸ்பெஷலான தருணம். இதே மைதானத்தில்தான் கடந்தமுறை சதம் அடித்தேன். டி20 போட்டி விளையாடிவிட்டு அதிலிருந்து வந்து டெஸ்ட் தொடருக்கு தயாராகினேன். பழைய சென்னை விக்கெட்டில் பந்து பவுன்ஸ் ஆகும், எளிதாக விளையாடலாம், ஆனால், இந்த விக்கெட்டில் பேட் செய்வது கடினமாக இருந்தது.

ஜடேஜா எனக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்து பேட் செய்து உதவினார். ஒரு கட்டத்தில் என்னால் ஓட முடியாத அசதி ஏற்பட்டபோது, ஜடேஜா ஸ்ட்ரைக்கை எடுத்து எனக்கு உதவினார். இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த பேட்டர்களில் ஒருவர் ஜடேஜா. நாங்கள் எந்த 2 ரன்களையும் 3 ரன்களாக மாற்றவில்லை, இருவருக்கும் ஓய்வு தேவைப்பட்டது. பிட்ச், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் ஒத்துழைக்கும். புதியபந்து நாளை சற்று அதன் வேலையை காண்பிக்கும், சமாளித்து ஆட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

ரோஹித் ஏமாற்றம்

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷாண்டோ பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். .

இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினர். ரோஹித் சர்மா நிதானமாக பேட் செய்ய, ஜெய்ஸ்வால் கிடைத்த வாய்ப்புகளில் பவுண்டரிகளுக்கு பந்தை விரட்டி ரன் சேர்த்தார்.

ரோஹித் சர்மாவை தவறு செய்ய வைக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் கடுமையாக முயன்றனர். பின்னர் ரோஹித் சர்மா 19 பந்துகளைச் சந்தித்தநிலையில் 6 ரன்னில் பெவிலியன் திரும்பினார். வங்கதேசத்துக்கு எதிராக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்ற பெயருடன் ரோஹித் வெளியேறினார்.

2வது விக்கெட்டுக்கு வந்த கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். பெரும்பாலும் 3வது பேட்டராக விராட் கோலிதான் கடந்த காலங்களில் களமிறங்கி செயல்பட்டிருந்தார். ஆனால் இந்த முறை சுப்மான் கில் களமிறங்கினார். 8 பந்துகளைச் சந்தித்த சுப்மான் கில், ஒரு பந்தில் கூட தனது வலிமையான ஷாட்களை வெளிப்படுத்த முடியாமல் திணறினார்.

இந்திய அணியைக் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுப்மான் கில் டக்அவுட்

ஹசன் மெஹ்மது லெக்திசையில் லேசாக விலக்கி வீசிய பந்தை கில் பவுண்டரிக்கு அடிக்க முயன்று தட்டிவிட்டார். ஆனால், அது விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸிடம் கேட்சாகவே, கில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 8-வது ஓவரில் 2 விக்கெட்டை இழந்தது.

 

9 நிமிடங்களில் வெளியேறிய கோலி

அடுத்ததாக விராட் கோலி களமிறங்கினார். 8 மாதங்களுக்குப் பின் டெஸ்ட் போட்டியில் கோலி பங்கேற்பதால், பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. சென்னையில் சில நாட்களாக தீவிரமான பயிற்சியில் கோலி ஈடுபட்டதால், அவரின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் இன்று அதிகளவில் வந்திருந்தனர்.

ஆனால், களத்தில் 9 நிமிடங்கள் மட்டுமே இருந்த கோலி 6 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

ரிஷப்பந்த், ஜெய்ஸ்வால் நம்பிக்கை

4வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால்-ரிஷப் பந்த் கூட்டணி சேர்ந்தனர். 600 நாட்களுக்குப்பின் ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியதால் அவர் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் இருவரும் சேர்ந்து ஓரளவு ரன்களைச் சேர்த்ததால் ரன்ரேட் சற்று உயர்ந்தது.

இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை சற்று மேலே கொண்டு வந்தனர். இருவரையும் பிரிக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் சிறிது சிரமப்பட்டு, பந்துவீச்சை மாற்றி, மாற்றி வீசினர்.

விக்கெட் சரிவு

உணவு இடைவேளைக்குப்பின் ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால் இருவரையும் பிரிக்கும் விதத்தில் வங்கதேச பந்துவீச்சாளர்கள் நெருக்கடியாக வீசினர். குறிப்பாக உணவு இடைவேளைக்குப் பின் தஸ்கின், ராணா இருவரும் இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் விதத்தில் பந்துவீசினர்.

ரிஷப் பந்த் 52 பந்துகளில் 39 ரன்கள்(8பவுண்டரி) சேர்த்து வெளியேறினார். மறுபுறம் நிதானமாக பேட் செய்துவந்த ஜெய்ஸ்வால் 95 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

5வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் களமிறங்கி, ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். இருவரும் சிறிது நேரம் மட்டுமே தாக்குப்பிடித்தனர். ராணா வீசிய பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் 56 ரன்களில் பெவிலியின் திரும்பினார். அடுத்து ஜடேஜா களமிறங்கினார்.

தொடக்கத்திலிருந்தே கே.எல்.ராகுல் சற்று தடுமாற்றத்துடனே பேட் செய்தார். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டவிதமும் தடுமாற்றமாக இருந்தது, ரன்களைச் சேர்க்கும் விதமும் விறுவிறுப்பாக இல்லை.

மெஹதி ஹசனின் சுழற்பந்துவீச்சில் ஷார்ட்லெக் திசையில் ஜாகிர் ஹூசேனிடம் கேட்ச் கொடுத்து ராகுல் 16 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 

அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

7-வது விக்கெட்டுக்கு அஸ்வின் களமிறங்கி, ஜடேஜாவுடன் சேர்ந்தார். அஸ்வின் களமிறங்கியபோது, ரசிகர்கள் விசிலடித்தும், கரகோஷம் எழுப்பியும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

அஸ்வினும் ரசிகர்களின் நம்பிக்கையை ஏமாற்றாத வகையில் தொடக்கத்திலிருந்தே பேட் செய்து ரசிகர்களின் சபாஷ் பெற்றார்.

மாலை தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 176 என்று வலுவான நிலையில் இருந்தது. அஸ்வின் 21, ஜடேஜா 15 ரன்கள் என இருவரும் நிதானமாக பேட் செய்தனர். 53வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.

அஸ்வின், ஜடேஜா அமர்க்களம்

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முழுநேர பேட்டர்கள் சென்னை விக்கெட்டில் சொதப்பிய நிலையில் அஸ்வின் வங்கதேச பந்துவீச்சை எதிர்கொண்டு ஷாட்களை ஆடினார். அஸ்வினுக்கு துணையாக ஆடிய ஜடேஜாவும் தன்னை ஆல்ரவுண்டர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஷாட்களை ஆடி ஸ்கோரை உயர்த்தினார்.

விரைவாக ரன்களைச் சேர்த்த அஸ்வின் 58 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 6பவுண்டரி, ஒரு சிக்ஸரும் அடங்கியது. ஜடேஜா, அஸ்வின் இருவரும் வேகமாக ரன்களைச் சேர்க்கவே ஸ்கோர் உயரத் தொடங்கியது. 53ஓவர்களில் 200 ரன்களை தொட்ட இந்திய அணி, அடுத்த 8 ஓவர்களில் 50 ரன்களை விரைவாக எட்டியது.

7-வது விக்கெட்டுக்கு இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, வங்கதேச பந்துவீச்சாளர்களை திணறிவிட்டனர்.

அஸ்வினைத் தொடர்ந்து ஜடேஜா 73 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் வங்கதேச பந்துவீச்சாளர்கள் திணறினர். ஷகிப் அல் ஹசன், மெஹதி ஹசன், மிராஸ் என மாறி மாறி பந்துவீசியும் இருவரையும் பிரிக்க முடியவில்லை.

 

அஸ்வின் சாதனை சதம்

இந்திய அணியை அபார சதத்தால் காப்பாற்றிய அஸ்வின்: கோலி, கில், ரோஹித் ஏமாற்றம்: வங்கதேசம் திணறல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அஸ்வின் 108 பந்துகளில் தனது 6-வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இதில் 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும்.

அஸ்வின் சதம் அடித்தவுடன் ஒரு கையில் ஹெல்மெட்டையும், மற்றொரு கையில் பேட்டையும் பிடித்து துள்ளிக் குதித்தார். அஸ்வினின் சதத்தை கண்டு ரசித்த சென்னை ரசிகர்கள் விசில் அடித்தும், கரகோஷம் எழுப்பியும், தங்களின் பாராட்டுகளையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர்.

8-வது விக்கெட்டுக்கு களமிறங்கி 5 சதங்களை டேனியல் வெட்டோரி மட்டுமே அடித்திருந்தார். அவரின் சாதனையை அஸ்வின் முறியடித்து 6-வது சர்வதேச டெஸ்ட் சதத்தை நிறைவு செய்து புதிய வரலாறு படைத்தார்.

அஸ்வின் களமிறங்கியபோது இந்திய 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், ஜடேஜாவுடன் பார்டனர்ஷிப் அமைத்து, அணியை 400 ரன்களை நோக்கி அஸ்வின் நகர்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 7-வது மற்றும் அதன்கீழான பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்களாக அஸ்வின், ஜடேஜா சாதனை படைத்தனர். இதற்கு முன் 2009ல் ஹேமில்டனில் ஜெஸி ரைடர், வெட்டோரி கூட்டணி 7-வது விக்கெட்டுக்கு 186 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது,அதை அஸ்வின், ஜடேஜா முறியடித்தனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 80 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். உணவு இடைவேளை வரை சீராக விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, கடைசி செஷனில் மட்டும் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 163 ரன்களைச் சேர்த்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னையில் பிறந்த அஷ்வினும் சென்னையுடன் ஒட்டிக்கொண்ட ஜடேஜாவும் இந்தியாவை பலமான நிலையில் இட்டனர்; அஷ்வின் சதம் குவித்து அசத்தல்

Published By: VISHNU  19 SEP, 2024 | 07:47 PM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக சென்னை, சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (19) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 339 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

1909_ryashasvi_jaiswal.png

சென்னையில் பிறந்த ரவிச்சந்திரன் அஷ்வினும் சென்னையுடன் (சுப்பர் கிங்ஸ்) ஒட்டிக்கொண்ட ரவிந்த்ர ஜடேஜாவும் அற்புதமான துடுப்பாட்ட ஆற்றல்களை வெளிப்படுத்தி இந்தியாவை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்து பலமான நிலையில் இட்டனர்.

1909_ravindra_jadeja.png

இவர்கள் இருவரும் துடுப்பாட்டத்தில் அசத்தியிராவிட்டால் இந்தியா பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.

1909_hasan_mahmood.png

இந்தியாவின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா (6), ஷுப்மான் கில் (0), விராத் கோஹ்லி (6) ஆகிய மூவரும் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்து சென்றனர். (34 - 3 விக்.)

1909_ashwin_and_jadeja.png

இந் நிலையில் யஷஸ்வி ஜய்ஸ்வாலும் ரிஷாப் பான்ட்டும் 4ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் சரிவை சீர்செய்தனர்.

1909_ashwin_got_to_his_6th_hundred.png

ரிஷாப் பான்ட் 39 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் யஷஸ்வி ஜய்ஸ்வாலும் கே.எல். ராகுலும் 5ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் இருவரும் 144 ஓட்டங்கள் என்ற ஓரே மொத்த எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தனர்.

ஜய்ஸ்வால் 56 ஓட்டங்களையும் ராகுல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந் நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் போன்று இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் பங்களாதேஷ் ஜமாய்க்கப் போகிறது என கருதப்பட்டது.

ஆனால், வீழ்ச்ச்சியிலிருந்து மீண்டு எழுவதற்கு அதிரடியும் ஆக்ரோஷமுமே சிறந்தது என்பதை நன்கு புரிந்திருந்த ரவிச்சந்திரன் அஷ்வினும் ரவிந்த்ர ஜடேஜாவும் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களை பந்தாடி பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 195 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலமான நிலையில் இட்டனர்.

தனது சொந்த மைதானத்தில் மிகவும் அபாராமாகவும் ஆக்ரோஷமாகவும் துடுப்பெடுத்தாடிய ரவிச்சந்திரன் அஷ்வின் 112 பந்துகளை எதிர்கொண்டு 10 சதங்கள், 2 சிக்ஸ்கள் உட்பட 102 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இது அவர் பெற்ற 6ஆவது டெஸ்ட் சதமாகும்.

மறுபக்கத்தில் நிதானமும் திறமையும் கலந்து துடுப்பெடுத்தாடிய ரவிந்த்ர ஜடேஜா 117 பந்துகளில் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 86 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/194127

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் அஸ்வின் போலிங்கில் தான் திறமையானவராக இருந்தார் . .......ஆனால் இப்போதெல்லாம் பேட்டிங்கில் செமையாய் கலக்கி ஆல்ரவுண்டராகி இருக்கின்றார் . ........கபிலதேவ் போல் ...........பாராட்டுக்கள் அஸ்வின் . ........!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோனி சாதனையை சமன் செய்த அஸ்வின்

சென்னையில் நடந்து வரும் பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் சகலதுறை வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சதமடித்தார். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் தொடரிலும் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய வீரர்களில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, கில், விராட் கோலி, உள்ளிட்ட வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையைக் கட்டினர்.

ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஆகியோர் சற்று நிலைத்து நின்று விளையாடினாலும் அவர்களும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க, ஒரு கட்டத்தில் இந்திய அணி 144 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜாவும், ரவிச்சந்திரன் அஸ்வினும் நங்கூரமிட்டு இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஜடேஜா ஒரு முனையில் நிலைத்து விளையாட, மறுபக்கம் ரவிச்சந்திரன் அஸ்வின் 109 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் 6-ஆவது சதமாகும். இந்த சதத்தின் மூலம் அஸ்வின் இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

https://thinakkural.lk/article/309621

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பும்ரா புயலில் சுருண்ட வங்கதேசம் - சேப்பாக்கத்தில் நடந்த திடீர் மாற்றம் என்ன?

பும்ரா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பும்ராவின் ‘மாஸ்டர் கிளாஸ்’ பந்துவீச்சு, அறிமுக வீரர் ஆகாஷ் தீப், சிராஜ் ஆகியோரின் வேகப்பந்துவீச்சில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களில் சுருண்டது.

ஃபாலோ ஆன் வழங்காமல் 2வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 308 ரன்கள் முன்னிலையுடன் பேட் செய்து வருகிறது. 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்துள்ளது. சுப்மான் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

கோலி, ரோஹித் சொதப்பல்

2வது இன்னிங்ஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 17 ரன்னில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் 5 ரன்னில் தஸ்கின் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சேப்பாக்கமா இது!

சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா 4 விக்கெட், ஆகாஷ், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்துவரும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 91.2 ஓவர்களில் 376 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

வங்கதேசம் அணி 47.1 ஓவர்களில் 149 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை பெற்றது.

227 ரன்கள் முன்னிலை பெற்றாலும் வங்கதேசத்துக்கு ஃபாலோ ஆன் வழங்காமல் தொடர்ந்து இந்திய அணி 2வது இன்னிங்ஸிலும் பேட் செய்தது.

3வது நாளில் இருந்து மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், அஸ்வின், ஜடேஜா பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

முதல்நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் சேர்த்திருந்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து இன்றைய 2வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆனால் நீண்டநேரம் இந்திய பேட்டர்கள் நிலைக்கவில்லை. 10.2 ஓவர்கள் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்கள் இன்று விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

அனைத்துமே கேட்ச்தான்

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் 10 பேருமே கேட்ச் பிடிக்கப்பட்டுதான் விக்கெட்டுகளை இழந்தனர். உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டர்கள் அனைவரும் ஒரு இன்னிங்ஸில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழப்பது இது 4வது முறையாகும்.

சமீபத்தில் 2021-ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தனர்.

 
வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சேப்பாக்கில் 3வது 5 விக்கெட்

வங்கதேசத் தரப்பில் ஹசன் மெஹமது 5 விக்கெட்டுகளையும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வங்கதேச அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

2012-ஆம் ஆண்டுக்குப்பின் இந்தியப் பயணத்துக்கு வந்த ஒரு அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியது இதுதான் முதல்முறையாகும். 2012 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரின் விக்கெட்டுகளையும் வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தியிருந்தனர்.

அது மட்டுமல்லாமல் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இதுவரை 2 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் வீழ்த்தியிருந்தனர். 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், 2013 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக ஜேம்ஸ் பட்டின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இப்போது வங்கதேச வீரர் ஹசன் மெஹ்மது வீழ்த்தியுள்ளார்.

மிரட்டிய இந்திய பந்துவீச்சு

வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இதையடுத்து, வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் மூவரும் சேர்ந்து தொடக்கத்திலிருந்தே வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறவிட்டனர்.

ஷத்மான் இஸ்லாம், ஜாகீர் ஹசன் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் கிடைத்தது.

அடுத்து கேப்டன் ஷான்டோ களமிறங்கி, ஹசனுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். அறிமுக வீரரான ஆகாஷ் தீப் பந்துவீச அழைக்கப்பட்டார். அவரின் இன்ஸ்விங், லெக் கட்டர் முறை பந்துவீச்சு வங்கதேச பேட்டர்களுக்கு புதிதாக இருந்ததால், ஆகாஷ் வீசிய பந்தை எதிர்கொள்ள சிரமப்பட்டனர்.

 

தவறிய ஹாட்ரிக் வாய்ப்பு

ஆகாஷ் வீசிய 9-வதுஓவரில் ஜாகீர் ஹசன் 3 ரன்களில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மோமினுள் ஹக், ஆகாஷ் பந்துவீச்சில் ஸ்டெம்ப் தெறிக்க விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தியதால், ஆகாஷிற்கு ஹாட்ரிக் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முஷ்பிகுர் ரஹிம் தடுத்துவிட்டார்.

வங்கதேச அணி நண்பகல் உணவு இடைவேளைக்குச் செல்லும்போது 9 ஓவர்களில் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சிராஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடைசி விக்கெட்டைான ராணாவை க்ளீன் போல்டாக்கி சிராஜ் விக்கெட் வீழ்த்தினார்

விக்கெட் சரிவு

உணவு இடைவேளைக்குப்பின் வங்கதேச அணி அடுத்தடுத்து ஷான்டோ(20) சிராஜ் பந்துவீச்சில், முஷ்பிகுர் ரஹ்மான்(8) பும்ரா பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஆஃப்சைடில் பவுன்ஸ் ஆன பந்தை தடுத்து ஆட முஷ்பிகுர் ரஹ்மான் முயன்றபோது, 2வது ஸ்லிப்பில் இருந்த ராகுல் எளிதாக பந்தை கேட்ச் பிடித்தார்.

6வது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸ், ஷகிப் அல்ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து 50 ரன்கள் சேர்த்தனர். லிட்டன் தாஸ்(22) விக்கெட்டையும், ஷகிப் அல்ஹசன்(32) விக்கெட்டையும் ஜடேஜா எடுத்து ஆட்டத்தில் ஸ்வாரஸ்யம் சேர்த்தார்.

ஹசன் மெஹ்மது(9), தஸ்கின் அகமது(11) விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தவே, 5 விக்கெட்டுகளை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடைசி விக்கெட்டைான ராணாவை க்ளீன் போல்டாக்கி சிராஜ் வீழ்த்தியதால் பும்ராவுக்கு 5 விக்கெட் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பங்களாதேஷுக்கு பளோ ஒன் கொடுக்காமல் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இந்தியா 308 ஓட்டங்களால் முன்னிலை

Published By: VISHNU   20 SEP, 2024 | 09:59 PM

image

(நெவில் அன்தனி)

சென்னை, சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பங்ளாதேஷஷை 149 ஓட்டங்களுக்கு சுருட்டிய போதிலும் பளோ ஒன் (follow-on) கொடுக்காமல் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இந்தியா 7 விக்கெட்கள் மீதம் இருக்க 308 ஓட்டங்களால் முன்னிலை பெற்று பலமான நிலையில் இருக்கிறது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய  தினம் மொத்தம் 17 விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட போதிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் இந்தியா, பெரும்பாலும் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

001.png

இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவிந்த்ர ஜடேஜா ஆகியோரின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் இந்தியா முதல் இன்னிங்ஸில் 376 ஓட்டங்களைக் குவித்தது. 

போட்டியின் இரண்டாம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (20) காலை 6 விக்கெட் இழப்புக்கு 336 ஓட்டங்கள் என்ற வலுவான நிலையிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா எஞ்சிய 4 விக்கெட்களை 40 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது.

இதற்கு அமைய அதன் மொத்த எண்ணிக்கை 376 ஓட்டங்ளகாக இருந்தது.

ரவிச்சந்திரன் அஷ்வின் 102 ஓட்டங்களுடனும் ரவிந்த்ர ஜடேஜா 86 ஓட்டங்களுடனும் தமது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்தபோது அவர்கள் இருவரும் மேலும் ஓட்டங்களைக் குவிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்று காலை இரண்டாவது புதிய பந்துடன் 81ஆவது ஓவரை ஆரம்பித்த பங்களாதேஷ், 83ஆவது ஓவரில் ரவிந்த்ர ஜடேஜாவை களம் விட்டகலச் செய்தது.

ஜடேஜா முதல் நாள் பெற்றிருந்த 86 ஓட்டங்களுக்கு அப்பால் செல்லவில்லை.

அஷ்வின் 113 ஓட்டங்களைப் பெற்று வெளியேறினார்.

அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதியான 199 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பின்வரிசையில் ஆகாஷ் தீப் 17 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த மூவரையும் புதிய பந்தைக் கொண்டு தஸ்கின் அஹ்மத் ஆட்டம் இழக்கச் செய்தார்.

2009_hasan_mahmood.png

பந்துவீச்சில் ஹசன் மஹ்முத் 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் கடும் சிரமத்திற்கு மத்தியில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்களையும் இழந்து 149 ஓட்டங்களுக்கு சுருண்டது.

2009_shakib_al_hasan.png

ஷக்கிப் அல் ஹசன் (32), மெஹிதி ஹசன் மிராஸ் (27), லிட்டன் தாஸ் (22), அணித் தலைவர் நஜ்முல் ஹொசென் ஷன்டோ (20) ஆகிய நால்வரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

லிட்டன் தாஸும் ஷக்கிப் அல் ஹசனும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 51 ஓட்டங்களே பங்களாதேஷ் இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ், ரவிந்த்ர ஜடேஜா, ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

2009_jasprit_bumrah_celebrating.png

2009_ravindra_jadeja_and_virat_kohli.png

தனது 73ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரவிந்த்ர ஜடேஜா இன்று கைப்பற்றிய 2 விக்கெட்களுடன் தனது டெஸ்ட் விக்கெட் எண்ணிக்கையை 298 ஆக உயர்த்திக்கொண்டுள்ளார்.

இந்த மைதானத்தில் மேலும் 2 விக்கெட்களைக் கைப்பற்றி 300 விக்கெட்களைப் பூர்த்தி செய்ய ஆவலாக இருப்பதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 227 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தபோதிலும் பங்களாதேஷுக்கு பளோ ஒன் கொடுக்க ரோஹித் ஷர்மா விரும்பவில்லை.

இந்நிலையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 81 ஒட்டங்களைப் பெற்றிருந்தது.

ஷுப்மான் கில் 33 ஓட்டங்களுடனும் ரிஷாப் பான்ட் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

யஷஸ்வி ஜய்ஸ்வால் (10), ரோஹித் ஷர்மா (5), விராத் கோஹ்லி (17) ஆகிய மூவரே ஆட்டம் இழந்தவர்களாவர்.

https://www.virakesari.lk/article/194215

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா - வங்கதேசம்: தோனியின் சாதனை சமன் - கடைசி 2 நாட்களில் சேப்பாக்கம் விக்கெட் எப்படி இருக்கும்?

இந்தியா - வங்கதேசம்: தோனியின் சாதனை சமன் - கடைசி 2 நாட்களில் விக்கெட் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

டெஸ்ட் போட்டியில் 814 நாட்களுக்குப் பின் சதம் அடித்து தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷப் பந்த்-இன் அற்புதமான ஆட்டம், சுப்மன் கில்லின் நேர்த்தியான சதம் ஆகியவற்றால் இந்திய அணி வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் ஏற்கெனவே 227 ரன்கள் முன்னிலை பெற்றதையுடம் சேர்த்து வங்கதேச அணி வெற்றி பெற 515 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

சவாலான இலக்கு

இரண்டரை நாட்கள் மீதம் இருக்கும் நிலையில் ஆட்டத்தைத் தங்கள் பக்கம் திருப்பும் நோக்கில் இந்திய அணி 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. பெரிய இலக்கான 515 ரன்களை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி 2 நாட்களில் எட்டுவது வங்கதேசத்துக்கு கடும் சவாலாக இருக்கும்.

வங்கதேச அணி 515 இலக்குடன் களமிறங்கியது. 3வது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது. கேப்டன் ஷான்டோ 51 ரன்கள், சஹிப் அல்ஹசன் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இன்னும் வங்கதேசம் கைகளில் 6 விக்கெட்டுகள் உள்ளன, வெற்றிக்கு 357 ரன்கள் சேர்க்க வேண்டியுள்ளது. மெஹதி ஹசன், லிட்டன் தாஸ் விக்கெட்டை இந்திய அணி விரைவாக எடுத்துவிட்டால், இந்திய அணியின் வெற்றி உறுதியாகிவிடும்.

 

814 நாட்களுக்குப் பின் ரிஷப் பந்த்

இந்திய அணி 2வது இன்னிங்ஸில் விரைவாக ரன்கள் சேர்க்க ரிஷப் பந்த்(109), சுப்மான் கில்(119 நாட்-அவுட்) ஆகியோரின் சதம் மற்றும் 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் முக்கியக் காரணமாக அமைந்தது.

கார் விபத்தில் சிக்கி 634 நாட்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். டெஸ்ட் போட்டியில் ஏறக்குறைய 814 நாட்களுக்குப் பின் தனது 6வது சதத்தை 124 பந்துகளில் பந்த் நிறைவு செய்தார். இதில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும்.

கடைசியாக 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜூலை 1ஆம் தேதி நடந்த டெஸ்டில் ரிஷப் பந்த் சதம் அடித்திருந்தார். அதன்பின் இந்த ஆட்டத்தில் சதம் அடித்துள்ளார்.

இன்னிங்ஸ் ஸ்கோர்

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களுக்கும், வங்கதேசம் 149 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. 2வது நாளான நேற்று மட்டும் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.

இரண்டாவது நாளான நேற்று ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்திருந்தது. கில் 33 ரன்களுடனும், பந்த் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இன்றைய 3வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

கில், பந்த் அரைசதம்

தொடக்கத்தில் இருந்தே கில், ரிஷப் பந்த் இருவரும் வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை அடித்து ஆடி ரன்களை சேர்த்தனர், இருவரின் பேட்டிங்கிலும் ஆக்ரோஷம் காணப்பட்டது. 79 பந்துகளில் சுப்மன் கில் அரைசதத்தை நிறைவு செய்தார். காலை தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் சேர்த்திருந்தது.

அதன் பிறகு ரிஷப் பந்த் பேட்டிங் வேகெடுத்தது. சஹிப் அல்ஹசன், மிராஸ் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர் என வெளுத்த ரிஷப் பந்த் 88 பந்துகளில் அரைசதம் எட்டினார். உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இந்திய அணி 205 ரன்கள் சேர்த்திருந்தது.

தோனியின் சாதனை சமன்

இந்தியா - வங்கதேசம்: தோனியின் சாதனை சமன் - கடைசி 2 நாட்களில் விக்கெட் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதன்பின் களத்துக்கு வந்த ரிஷப் பந்த் ஆட்டத்தில், மோசமான பந்துகளை பவுண்டரி, சிக்ஸர் என விளாசி, 124 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது 6வது சதத்தை நிறைவு செய்தார்.

இதன் மூலம் 2 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் அரங்கில் ரிஷப் பந்த் சதம் அடித்துள்ளார். மேலும், டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக இருந்து தோனி அடித்த 6 சதங்களையும் ரிஷப் பந்த் சமன் செய்தார். ரிஷப் பந்த் சதம் அடித்தபோது, அவரின் கணக்கில் 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் அடக்கம்.

நிதானமாக ஆடிய சுப்மன் கில்லும் 161 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதத்தை எட்டினார். இருவரின் பார்ட்னர்ஷிப் 150 ரன்களை கடந்து சென்றது.

கடந்த முதல் இன்னிங்ஸில் சாஃப்ட் டிஸ்மிசலில் ஆட்டமிழந்தது போல் இந்த முறை எந்தத் தவறையும் ரிஷப் பந்த் செய்யவில்லை. இதனால் இருவரையும் பிரிக்க வங்கதேச பந்துவீச்சாளர்கள் கடும் பிரயத்தனம் செய்தும் முடியவில்லை.

சிக்ஸரில் சாதிக்கும் இந்திய அணி

சுப்மான் கில் தனது 26வது டெஸ்ட் போட்டியில் 28வது சிக்ஸரை அடித்துள்ளார். அதேபோல ரிஷப் பந்த் 34 டெஸ்ட் போட்டிகளில் 59 சிக்ஸர்களை விளாசியுள்ளார். 2024ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டர்கள் மட்டும் 85 சிக்ஸர்களை விளாசியுள்ளனர்.

ஒரு காலண்டர் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை எட்ட இந்திய அணிக்கு இன்னும் 5 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

ரிஷப் பந்த் 109 ரன்கள் சேர்த்த நிலையில் மிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு கில், பந்த் கூட்டணி, 167 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து வந்த கே.எல்.ராகுல் 22 ரன்கள் சேர்த்த நிலையில், இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இன்னும் இரண்டரை நாட்கள் மீதமிருந்த நிலையில் வங்கதேசம் வெற்றிக்கு 515 ரன்கள் இலக்கு நிர்ணியித்தது இந்திய அணி.

 

வலுவான தொடக்கம்

இந்தியா - வங்கதேசம்: தோனியின் சாதனை சமன் - கடைசி 2 நாட்களில் விக்கெட் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்கதேச அணி 515 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது. ஜாகிர் ஹசன், இஸ்லாம் இருவரும் முதல் இன்னிங்ஸைவிட சற்று ஆழமாகவே தங்கள் ஆட்டத்தை தொடங்கி ரன்களை சேர்த்தனர். பும்ரா, சிராஜ், ஆகாஷ் பந்துவீச்சை இருவரும் நன்கு சமாளித்து ஆடி ரன்களை சேர்த்தனர்.

மாலை தேநீர் இடைவேளைக்குப் பின் வங்கதேச அணி முதல் விக்கெட்டை இழந்தது. பும்ராவின் வேகப்பந்துவீச்சில் ஹசன் 33 ரன்கள் சேர்த்த நிலையில் கல்லி பாயின்டில் நின்றிருந்த ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் ஷான்டோ, இஸ்லாமுடன் சேர்ந்தார்.

அஸ்வினின் மாயாஜாலம்

சென்னை விக்கெட் கடைசி இரு நாட்களில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு பலன் அளிக்கும் என்பதைப் புரிந்துகொண்டு அஸ்வின் பந்து வீசினார். அதற்குப் பலன் கிடைத்து, இஸ்லாம் 35 ரன்கள் சேர்த்த நிலையில் ஷார்ட் மிட்விக்கெட்டில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இந்த டெஸ்டில் அஸ்வின் முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.

அடுத்து வந்த மோமினுல் ஹக் 13 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். அதைத் தொடர்ந்து முஸ்பிகுர் ரஹ்மான் 13 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கே.எல்.ராகுலிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் கேப்டன் ஷாண்டோ இந்திய பந்துவீச்சை நன்கு சமாளித்து ஆடி அரைசதம் அடித்தார். ஒரு கட்டத்தில் வங்கதேசம் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் என வலுவாக இருந்தது, ஆனால் கடைசி 10 ஓவர்களில் சீரான இடைவெளையில் 3 விக்கெட்டுகளை இழந்தது.

சஹிப் அல் ஹசன் 5, கேப்டன் ஷாண்டோ 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். கடைசி 10 ஓவர்களில் அஸ்வின் வீழ்த்திய 3 விக்கெட்டுகள் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் 2 நாட்கள் முழுமையாக இருக்கும் நிலையில் வங்கதேசம் வெற்றிக்கு 357 ரன்கள் தேவை.

மீதமுள்ள விக்கெட்டுகளில் லிட்டன் தாஸ், மிராஸ் மட்டுமே ஓரளவு பேட் செய்யக் கூடியவர்கள். இவர்களை வீழ்த்தினால் நாளை இந்திய அணியின் வெற்றி எளிதாகும். சேப்பாக்கத்தில் திடீரென வெளிச்சக் குறைவு ஏற்பட்டதையடுத்து, 9 ஓவர்கள் முன்னதாகவே ஆட்டம் முடிக்கப்பட்டது.

 

கடைசி 2 நாட்களில் சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி இருக்கும்?

இந்தியா - வங்கதேசம்: தோனியின் சாதனை சமன் - கடைசி 2 நாட்களில் விக்கெட் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சேப்பாக்கம் விக்கெட் என்றாலே சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும். ஆனால், இந்த முறை கறுப்பு மண் ஆடுகளத்துக்குப் பதிலாக சிவப்பு மண் ஆடுகளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பந்து நன்கு ஒத்துழைத்து ஸ்விங் ஆகும், பவுன்ஸ் ஆகும். வரும் நவம்பர் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்குத் தயாராகும் பொருட்டு இதுபோன்ற ஆடுகளத்தை பிசிசிஐ நிர்வாகம் தயாரித்துள்ளது.

இந்த ஆடுகளத்தில் கடைசி 2 நாட்களில் பிளவு ஏற்பட்டு பந்து சுழற்பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும். முதல் நாளில் வேகப்பந்துவீச்சில் 1.3 டிகிரி வரை ஸ்விங் ஆன நிலையில், 3வது நாளில் 0.4 டிகிரியாக குறைந்தது.

ஆடுகளம் நன்கு காய்ந்திருக்கிறது ஆனால், எதிர்பார்த்த பிளவுகள் இன்னும் வரவில்லை. பிளவுகள் வந்தால் அடுத்த இரு நாட்கள் வேகப்பந்துவீச்சைவிட சுழற்பந்துவீச்சுக்குத்தான் விக்கெட் ஒத்துழைக்கும். இதனால், அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு நன்கு எடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தோனியை போல் உதவிய பந்த்

இந்தியா - வங்கதேசம்: தோனியின் சாதனை சமன் - கடைசி 2 நாட்களில் விக்கெட் எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூன்றாம் நாள் ஆட்டமான இன்று ரிஷப் பந்த், கில் இருவரும் சிறப்பாக பேட் செய்த நிலையில், திடீரென வங்கதேசத்துக்கு உதவும் வகையில் பந்த் ஃபீல்டிங் செட் செய்து கொடுத்து கேப்டன் ஷாண்டோவுக்கு உதவினார்.

தோனியை போலவே ரிஷப் பந்த் வங்கதேச கேப்டனுக்கு ஃபீல்டிங் செட் செய்வதில் உதவினார். 22 யார்ட் வட்டத்தின் லெக் திசையில் எந்த பீல்டரும் நிறுத்தவில்லை, அங்கு பீல்டரை நிறுத்துங்கள் என்று வங்கதேச கேப்டனுக்கு பந்த் ஆலோசனை கூறினார். இதைக் கேட்ட கேப்டன் ஷாண்டோ மிட்விக்கெட் திசையில் ஒரு பீல்டரை நிறுத்தினார்.

ரிஷப் பந்தின் கிரிக்கெட் குருவான தோனியும் இதேபோல வங்கதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்து உதவியுள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது, பேட் செய்த தோனி, வங்கதேச வீரர் சபிரீ ரஹ்மானை ஸ்குயர் லெக் திசையில் நிற்குமாறு கூறினார்.

வங்கதேச கேப்டன் மோர்தசாவிடம் கேட்காமல் தோனி ஃபீல்டிங் செட் செய்தார். தோனி கூறியவுடன், தனது கேப்டன் மோர்தசாவிடம்கூட ஆலோசனை கேட்காமல் தோனி கூறிய திசையில் சபீர் ரஹ்மான் ஃபீல்டிங் செய்ய நின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை டெஸ்ட்: வங்கதேசத்திற்கு எதிராக வரலாறு படைத்த இந்தியா - அஸ்வின் சாதனைமேல் சாதனை

இந்தியா - வங்கதேசம், சென்னை டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சென்னையில் இந்தியா - வங்கதேசம் மோதிய முதல் டெஸ்டில் கோலியும் அஸ்வினும் கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

அஸ்வினின் மாயாஜாலம் மற்றும் ஜடேஜாவின் துல்லியமான சுழற்பந்துவீச்சால் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மகத்தான வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவுக்கு வெற்றி கிட்டியது.

4வது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. 515 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் 2வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 62.1 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

வங்கதேசத்திற்கு இமாலய இலக்கு

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களும், வங்கதேசம் 149 ரன்களும் சேர்த்தன. 227 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. ரிஷப் பந்த்(109), கில்(119) இருவரும் சதம் அடித்து ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர்.

இதையடுத்து 515 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் அணி நேற்று பிற்பகல் தேநீர் இடைவேளைக்கு முன்பாக ஆட்டத்தைத் தொடங்கியது.

3வது நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி, 37.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் ஷகிப் அல்ஹசன் 5, கேப்டன் ஷாண்டோ 51 ரன்களில் களத்தில் இருந்தனர்.

 
இந்தியா - வங்கதேசம், சென்னை டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜடேஜா வீசிய ஓவரில் ஹஸன் முகமது கிளீன் போல்டான காட்சி

நான்காவது நாள் ஆட்டம்

ஆடுகளத்தில் வெடிப்புகள் தென்பட்டதால், 4வது நாளில் இருந்து சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் மாறும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்திருந்தனர். அதற்கேற்ப, இன்று காலை ஆட்டம் தொடங்கியது முதல் ஒரு மணிநேரம் பந்து வீசிய பும்ரா, சிராஜ் இருவருக்கும் விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. சிராஜ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஷாண்டோ, ஒரு கட்டத்தில்அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றார்.

காலை தேநீர் இடைவேளைக்குப் பின், சென்னை நாயகன் அஸ்வின், ஐ.பி.எல்.லில் சிஎஸ்கே அணி நட்சத்திரமான ஜடேஜா ஆகியோர் பந்துவீச வந்தபின், ஆட்டம் அப்படியே இந்தியா பக்கம் முழுமையாக திரும்பியது. வங்கதேசத்தின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விழுந்தன. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் கைவசம் இருந்த 6 விக்கெட்டுகளையும் 25 ஓவர்களில் வங்கதேசம் இழந்தது. கடைசி 6 விக்கெட்டுகளை 40 ரன்களுக்குள் வங்கதேசம் இழந்தது.

வங்கதேச கேப்டன் ஷாண்டோ 85 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் பும்ராவிடம் எக்ஸ்ட்ரா கவர் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இன்று காலை அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே அனுபவ வீரர் சஹிப் அல் ஹசன் 25 ரன்கள் சேர்த்த நிலையில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் வந்த லிட்டன் தாஸ்(1), மெஹதி ஹசன் மிராஜ்(8), தஸ்கின் அகமது(5), ஹசன் மெஹ்மத்(7) என ஒற்றை இலக்க ரன்னில் அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

2வது இன்னிங்ஸில் அஸ்வின் 6, ஜடேஜா 3 மற்றும் பும்ரா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்தியா - வங்கதேசம், சென்னை டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விக்கெட் வீழ்த்திய அஸ்வினை ரவீந்திர ஜடேஜா பாராட்டுகிறார்.

இந்திய அணி முன்னேற்றம்

இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கான பாதை பிரகாசமாகியுள்ளது. தற்போது 10 போட்டிகளில் 7 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிராவுடன் முதலிடத்தில் இந்திய அணி இருக்கிறது.

இந்திய அணிக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா இருக்கிறது.

புதிய மைல்கல்

இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளது. அதன்படி இந்திய அணி இதுவரை 581 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் தோல்விகளைவிட அதிகமான வெற்றிகளைப் பெற்று இந்திய அணி சாதித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை இந்திய அணி 178 தோல்விகளையும், 179 வெற்றிகளையும் பெற்றுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்துடன் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்று 12-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

 
இந்தியா - வங்கதேசம், சென்னை டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணி கேப்டன் ரோஹித் மற்றும் அஸ்வின்

அஸ்வினுக்கு ரோஹித் புகழாரம்

டெஸ்ட் வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “எங்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. நீண்ட காலத்துக்குப்பின் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் வந்து வென்றுள்ளோம், இதற்கு காரணம் குழுவாகச் செயல்பட்டதுதான். கடினமான நேரத்தில் ரிஷப் பந்தின் பேட்டிங் எப்போதும் அற்புதமாக இருக்கும் அதுபோல் இந்த முறையும் இருந்தது. ஐபிஎல், உலகக் கோப்பையிலும் பந்த் சிறப்பாகச் செயல்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட் அவருக்கு பிடித்த விளையாட்டு. அவர் அற்புதமாக விளையாடினார். துலிப் டிராபியில் விளையாடிவிட்டு இந்திய அணிக்குள் பந்த் வந்துள்ளார், அவர் செட்டிலாக போதுமான நேரம் வழங்கப்படும். எங்கள் பந்துவீச்சு வரிசையை வலிமைப்படுத்த விரும்புகிறோம். எந்த சூழலிலும், காலநிலையிலும், ஆடுகளத்திலும் பந்துவீச தயாராகி வருகிறோம். வெற்றிக்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர்கள் பொறுப்பெடுத்து செயல்பட்டதுதான்." என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "அழகான ஆடுகளம், சிவப்பு மண் விக்கெட் எப்போதும் நல்ல முடிவுகளை வழங்கும், பொறுமையாக ஆட வேண்டும். பெரிய ஸ்கோருக்காகவும், விக்கெட்டுக்காகவும் காத்திருந்தோம். அஸ்வின் வந்து அதை செய்து கொடுத்தார். அவர் என்ன செய்கிறார் என்பதை செயலால் பதில் அளித்துவிடுவார். எங்களுடன் நீண்டகாலம் அஸ்வின் பயணிக்கிறார். இந்திய அணிக்காக அஸ்வின் என்ன செய்துள்ளார் என்பதை இங்கே பேசினால் அதுபோதுமானதாக இருக்குமா என எனக்குத் தெரியாது. ஒருபோதும் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஒதுங்கியதில்லை. ஐபிஎல் ஆடுகிறார், டிஎன்பிஎல் தொடரில் அஸ்வின் கலக்குகிறார், இந்திய அணியிலும் இருக்கிறார். தேவைப்படும் நேரத்தில் அணிக்காக இதுபோல் அருமையாகவும் பேட் செய்கிறார்” என்று தெரிவித்தார்.

 
இந்தியா - வங்கதேசம், சென்னை டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஷான்டோ விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை சக வீரர்களுடன் ஜடேஜா பகிர்ந்து கொள்கிறார்

அஸ்வின் சாதனைமேல் சாதனை

முதல் இன்னிங்ஸில் சதம்(113) அடித்து இந்திய அணியின் ஸ்கோர் உயர்வுக்கும், 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தை விரைவாக ஆல் அவுட் செய்யவும் காரணமாக இருந்த தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் 750 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அது மட்டுமல்லாமல் 37-வது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மறைந்த ஜாம்பவான் ஷேன் வார்ன் சாதனையை அஸ்வின் சமன் செய்து 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 67 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை நாயகனாக தொடர்கிறார்.

அது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை சதம் அடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் இயான் போத்தமுக்கு(5) அடுத்த இடத்தில் அஸ்வின் இருக்கிறார். அஸ்வின் 4 முறை சதம் அடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ந்து 2வது முறையாக இதேபோன்று சதம் அடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 8-வது வீரராகக் களமிறங்கி 522 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம அஸ்வின், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கர்ட்னி வால்ஷின் சாதனையை தகர்த்துள்ளார். வால்ஷ் 519 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுவரையிலும் சாதனையாக இருந்தது. சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் அஸ்வின் 8-வது இடத்தில் இருக்கிறார், ஆஸ்திரேலியாவின் நாதன் லயான் 530 விக்கெட்டுகளுடன் 7வது இடத்தில் உள்ளார்.

இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை 522 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார். அந்த வரிசையில், 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே முதலிடத்தில் இருக்கிறார். 37 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளையும், 10 முறை 10 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் 250, 300, 250 விக்கெட்டுகளை வேகமாக அடைந்ததும் அஸ்வின்தான். பேட்டிங் வரிசையில் 8-வது வீரராகக் களமிறங்கி 4 முறை சதம் அடித்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது வீரர் அஸ்வின்.

(மேற்கூறிய புள்ளிவிவரங்கள் அனைத்தும் கிரிக்இன்ஃபோ இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)

 
இந்தியா - வங்கதேசம், சென்னை டெஸ்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஜடேஜா மற்றும் அஸ்வின்

"சென்னை என்றாலே ஆனந்தம்தான்"

ஆட்டநாயகன் விருது வென்றபின் அஸ்வின் அளித்த பேட்டியில்,“ஆட்டநாயகன் விருதையெல்லாம் நான் கருத்தில் வைப்பது இல்லை, அதை நோக்கி விளையாடுவதும் இல்லை. சென்னையில் ஒவ்வொரு முறை விளையாடும் போதும், அது எனக்குள் எழும் ஆனந்தமான உணர்ச்சி. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள கேலரியில் ஒரு பார்வையாளராக அமர்ந்து ஏராளமான டெஸ்ட் போட்டிகளை இருந்து ரசித்துப் பார்த்துள்ளேன். பல அணி வீரர்கள், சக வீரர்கள் விளையாடுவதை நான் ரசித்திருக்கிறேன். எனக்கு பந்துவீச்சுதான் உயிர், அதுதான் என்னை வாழ வைக்கிறது. இயல்பாகவே நான் ஒரு பந்துவீச்சாளர் என நினைக்கிறேன், அதேசமயம், பேட்டிங்கிலும் நான் என் கவனத்தை செலுத்துகிறேன்.” எனத் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாக்கிஸ்தானில் திற‌மைய‌ வெளிக்காட்டின‌ வ‌ங்கிளாதேஸ் அணி..................இந்தியாவிட‌ம் ப‌டு தோல்வி அடைஞ்சு இருக்கு

 

த‌மிழ‌க‌ வீர‌ர் அஸ்வின் செஞ்ச‌ரி அடிச்சும் இர‌ண்டாவ‌து இனிங்சில் 6 விக்கேட் எடுத்த‌து பாராட்ட‌ த‌க்க‌து.................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொட‌ர்ந்து ம‌ழை பெய்வ‌தால் இர‌ண்டாவ‌து ரெஸ் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும் போல் தெரியுது.................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா கிடைத்த‌ இர‌ண்டு நாளில் வ‌ங்கிளாதேஸ்ச‌ வெல்ல‌ முய‌ற்ச்சிக்கின‌ம்......................20ஓவ‌ர் விளையாட்டை போல் இந்திய‌ வீர‌ர்க‌ள் முத‌ல் இனிங்சில் வேக‌மாக‌ விளையாடினார்க‌ள்😁.................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கான்பூர் டெஸ்ட்: இந்திய அணி அதிவேக ரன் குவித்து புதிய வரலாறு, கடைசி நாளில் இந்தியாவின் திட்டம் என்ன?

கான்பூர் டெஸ்ட், இந்தியா, வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கான்பூரில் இன்று (திங்கள், செப்டம்பர் 30) இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கும் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்.க
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கான்பூரில் இன்று (திங்கள், செப்டம்பர் 30) இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கும் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியைக் கண்ட ரசிகர்கள், நடப்பது டெஸ்ட் போட்டியா அல்லது டி20 போட்டியா என்று குழம்பியிருக்கலாம்.

ஏனென்றால், இந்திய பேட்ஸ்மேன்கள் ரோகித், ஜெய்ஸ்வால், கில், ராகுல், கோலி என அனைவரும் வங்கதேசத்தின் பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி எனப் பறக்கவிட்டு டி20 போட்டியைப் போல் பேட் செய்தனர்.

டெஸ்ட் போட்டிக்கென இருக்கும் தாத்பரியத்தை உடைத்து, தொடக்கத்திலிருந்தே இந்திய பேட்டர்கள் வங்கதேசப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நொறுக்கி, ரன்களைக் அள்ளிக் குவித்தனர்.

கான்பூரில் முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதிலிருந்து கடந்த 3 நாட்களாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் 2-வது டெஸ்ட் எந்தவிதமான முடிவுமின்றி டிராவில் முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்தது.

 

ஆனால், கடைசி இரு நாட்கள்(செப்டம்பர் 30, அக்டோபர் 1) ஆட்டத்தின் வெற்றியை வங்கதேசத்திடமிருந்து பறிக்கும் முயற்சியில் இந்திய அணியினர் வியூகம் அமைத்துச் செயல்பட்டனர்.

ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் எப்படியாவது வெற்றியை எட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் இந்திய அணியினர் பேட் செய்து வருகிறார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு குறைந்தபட்சம் 5 டெஸ்ட் வெற்றிகள் தேவைப்படுகிறது.

ஆஸ்திரேலிய பயணம் கடினமாக இருக்கும் என்பதால், வங்கதேசம், நியூசிலாந்திடம் இந்த 5 வெற்றிகளை பெறும் முயற்சியில் இந்திய அணியினர் திட்டமிட்டுள்ளனர்.

இன்றைய 4-வது நாள் ஆட்டமும் சற்று தாமதமாகத் தொடங்கிய நிலையில், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 74.2 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி அதிகவேகத்தில் ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. 8 என்ற ரன்ரேட்டில் விளையாடத் தொடங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மின்னல் வேகத்தில் ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணியைவிட 52 ரன்களை இந்திய அணி அதிகமாக குவித்து முன்னிலை வகித்தது.

வங்கதேச அணி, 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடி இன்றைய 4வது நாள் ஆட்டநேர முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் சேர்த்திருந்தது. இன்னும் வங்கதேச அணி 26 ரன்கள் பின்தங்கியுள்ளது.

ஒரே நாளில் 18 விக்கெட்டுகள்

இன்று ஒரே நாளில் மட்டும் 18 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் என 18 விக்கெட்டுகள் சரிந்தன.

கடைசி நாள் ஆட்டம் எப்படிச் செல்லும்?

இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியோடுதான் அதிரடியான பேட்டிங் வியூகத்தைக் கையில் எடுத்தது. நாளை (அக்டோபர் 1) கடைசி நாள் ஆட்டத்தில் வங்கதேச அணியை இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்த ஓவருக்குள் வீழ்த்த வேண்டும் அல்லது வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் நிர்ணயிக்கும் இலக்கை எட்டி வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.

இந்திய அணியின் வெற்றியைத் தீர்மானிப்பது வங்கதேசத்தின் பேட்ஸ்மேன்கள் கையில் இருக்கிறது. வங்கதேச அணி ரன்களைப் பற்றிச் சிந்திக்காமல் டிஃபென்ஸ் ஆட்டத்தைக் கையில் எடுத்து விக்கெட் சரியாமல் பார்த்துக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை நகர்த்தினால், ஆட்டம் டிராவில் முடியும்.

ஒருவேளை வங்கதேசமும் இந்தியப் பந்துவீச்சில் நன்றாக விளையாடி, ரன்களைக் குவிக்க முயன்றால் இந்திய அணி விரித்த வலைக்குள் விழுந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவலாம்.

கான்பூர் ஆடுகளம் கடைசி நாளில் சுழற்பந்துவீச்சுக்குக் கூடுதல் சாதகமாக இருக்கும் என்பதால் அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சு முக்கியத் துருப்புச்சீட்டாக இருக்கும்.

 
கான்பூர் டெஸ்ட், இந்தியா, வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது

வங்கதேசம் விக்கெட் சரிவு

வங்கதேச அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. மோமினுள் ஹக் 40, முஸ்பிகுர் ரஹ்மான் 6 ரன்களில் களத்தில் இருந்தனர். மழையால் ரத்து செய்யப்பட்ட ஆட்டம் நான்காவது நாளான இன்று தொடர்ந்தது.

இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பும்ராவின் வேகப்பந்துவீச்சில் முஸ்பிகுர் ரஹிம் 11 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் 11 ரன்கள் சேர்த்த நிலையில், சிராஜ் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அதன்பின் சீரான இடைவெளியில் வங்கதேச அணி விக்கெட்டைப் பறிகொடுத்தது. விக்கெட் சரிந்தாலும், மோமினுல் ஹக் ரன்களை வேகமாகச் சேர்த்தார். மதிய உணவு இடைவேளையின் போது வங்கதேசம் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.

உணவு இடைவேளைக்குப்பின் வங்கதேசம் அணி 28 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணியின் பின்வரிசை பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணித் தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர், ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

 
கான்பூர் டெஸ்ட், இந்தியா, வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

அதிரடி துவக்கம்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் இன்னிங்ஸை அதிரடியாகத் துவங்கினர். டி20 ஆட்டம் போல் துவக்கத்திலிருந்தே பந்தை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் துரத்தி, வங்கதேசத்தின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

ஜெய்ஸ்வால், ரோகித் இருவரும் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி 2.6 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. 31 பந்துகளில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த சுப்மான் கில் (39), ரிஷப் பந்த் (9) ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து (2 சிக்ஸர், 12 பவுண்டரிகள்) ஹசன் மஹ்மூத் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

கடந்த டெஸ்டில் ஏமாற்றிய கோலி, இந்த ஆட்டத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 47 ரன்கள் சேர்த்து 3 ரன்களில் அரைசதத்தைத் தவறவிட்டார்.

அதிரடியாக பேட் செய்த கே.எல்.ராகுல், 33 பந்துகளில் அரைசதம் அடித்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது கணக்கில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

இந்திய அணி புதிய சாதனை

இந்திய அணி 10.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டி புதிய சாதனை படைத்தது. டெஸ்ட் போட்டியில் அதிவிரைவாக சதம் அடித்த அணி என்ற புதிய சாதனையை இந்திய அணி இன்று படைத்தது.

இதற்கு முன் கடந்த ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 12.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியதுதான் சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை இந்த ஆட்டத்தில் இந்திய அணி முந்தி, 2.1 ஓவர்கள் குறைவாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.

18.2 ஓவர்களில் 150 ரன்களையும், 24.2 ஓவர்களில் 200 ரன்களையும் எட்டி அதிவேகத்தில் 150 மற்றும் 200 ரன்களைச் சேர்த்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.

இந்திய அணி 50 ரன்களை எட்டுவதற்கு 3 ஓவர்களே தேவைப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் ஆடவர் அணிப் பிரிவில் இந்திய அணி அதிவேகத்தில் 50 ரன்கள் எட்டியுள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 4.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து 23 பந்துகளில் அரைசதம் பார்ட்னர்ஷிப் அடித்தனர்.

 
கான்பூர் டெஸ்ட், இந்தியா, வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்

ஜடேஜாவின் மைல்கல்

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா 3,000-க்கும் அதிகமான ரன்களையும் 300 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றிய 11-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதற்கு முன் அஸ்வின், கபில்தேவ் இருவரும் அந்த சாதனையைச் செய்திருந்தனர். 74 போட்டிகளில் ஜடேஜா இந்தச் சாதனையை நிகழ்த்தி இயான் போத்தம் (72) அடுத்தார்போல் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்.

உலகளவில் 300 விக்கெட்டுகளையும், டெஸ்டில் 3,000-க்கும் மேற்பட்ட ரன்களையும் சேர்த்த இரண்டாவது இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி இந்த மைல்கல்லை அடைந்திருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா வ‌ங்கிளாதேஸ்சு வெல்ல‌ போகுது

 

ம‌ழையால் விளையாட்டு இர‌ண்ட‌ர‌ நாள் த‌டை ப‌ட்டும் இவ‌ர்க‌ளால் விளையாட்டை ச‌ம‌ நிலை ஆக்க‌ முடிய‌ வில்லை....................இதே இல‌ங்கை அணி என்றால் மெது மெதுவாய் த‌ட்டி த‌ட்டி விளையாடி ச‌ம‌ நிலை ஆக்கி போடுவின‌ம்.................பாக்கிஸ்தானில் போய் ந‌ல்லா விளையாடி விட்டு................இந்தியாவிட‌ம் ப‌டு தோல்வி அடையின‌ம்...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரே நாளில் மாறிய ஆட்டம் - வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் இந்தியா வெற்றி

இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிரடியாக ரன்களைக் குவித்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார். கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ். க
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 30 செப்டெம்பர் 2024
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் டிராவில் முடியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி அச்சமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் எதிரொலியாக, இந்த வெற்றியை இந்திய அணி ருசித்துள்ளது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் அதிரடியாக ரன்களைக் குவித்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்தியா- வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்டின் கடைசி நாளான இன்று, சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால், வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

2 விக்கெட் இழப்புக்கு 26 ரன் என்ற நேற்றைய ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை வங்கதேச அணி தொடங்கியது. இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி இன்று கூடுதலாக 120 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணியின் சரிவுக்கு வித்திட்டனர். வங்கதேச வீரர் ஷத்மன் இஸ்லாம் அதிகபட்சமாக 50 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்தியா - வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணியின் சரிவிற்கு உதவினர்

இதையடுத்து, 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. கேப்டன் ரோகித் சர்மா - இளம் வீரர் ஜெய்ஸ்வால் இருவரும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். முதலிரு ஓவர்களிலேயே அவர்கள் 18 ரன் சேர்த்தனர்.

ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுபுறம் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால், இந்திய அணி வெற்றியை நோக்கி வேகமாக நடைபோட்டது. முதல் இன்னிங்சைப் போலவே இரண்டாவது இன்னிங்சிலும் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். 45 பதுகளில் ஒரு சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 51 ரன் சேர்த்து அவர் அவுட்டானார்.

இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சென்னையில் ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

 

கான்பூரில் நேற்று (திங்கள், செப்டம்பர் 30) இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கும் இடையே நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியைக் கண்ட ரசிகர்கள், நடப்பது டெஸ்ட் போட்டியா அல்லது டி20 போட்டியா என்று குழம்பியிருக்கலாம்.

ஏனென்றால், இந்திய பேட்ஸ்மேன்கள் ரோகித், ஜெய்ஸ்வால், கில், ராகுல், கோலி என அனைவரும் வங்கதேசத்தின் பந்துவீச்சை சிக்ஸர், பவுண்டரி எனப் பறக்கவிட்டு டி20 போட்டியைப் போல் பேட் செய்தனர்.

டெஸ்ட் போட்டிக்கென இருக்கும் தாத்பரியத்தை உடைத்து, தொடக்கத்திலிருந்தே இந்திய பேட்டர்கள் வங்கதேசப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நொறுக்கி, ரன்களைக் அள்ளிக் குவித்தனர்.

கான்பூரில் முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதிலிருந்து கடந்த 3 நாட்களாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் 2-வது டெஸ்ட் எந்தவிதமான முடிவுமின்றி டிராவில் முடியுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்தது.

ஆனால், கடைசி இரு நாட்கள்(செப்டம்பர் 30, அக்டோபர் 1) ஆட்டத்தின் வெற்றியை வங்கதேசத்திடமிருந்து பறிக்கும் முயற்சியில் இந்திய அணியினர் வியூகம் அமைத்துச் செயல்பட்டனர்.

ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியை வென்று 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் எப்படியாவது வெற்றியை எட்ட வேண்டும் என்ற திட்டத்துடன் இந்திய அணியினர் பேட் செய்து வருகிறார்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு குறைந்தபட்சம் 5 டெஸ்ட் வெற்றிகள் தேவைப்படுகிறது.

ஆஸ்திரேலிய பயணம் கடினமாக இருக்கும் என்பதால், வங்கதேசம், நியூசிலாந்திடம் இந்த 5 வெற்றிகளை பெறும் முயற்சியில் இந்திய அணியினர் திட்டமிட்டுள்ளனர்.

நேற்றைய 4-வது நாள் ஆட்டமும் சற்று தாமதமாகத் தொடங்கிய நிலையில், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 74.2 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி அதிகவேகத்தில் ரன்களைக் குவிக்கத் தொடங்கியது. 8 என்ற ரன்ரேட்டில் விளையாடத் தொடங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மின்னல் வேகத்தில் ரன்களைச் சேர்த்தனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணியைவிட 52 ரன்களை இந்திய அணி அதிகமாக குவித்து முன்னிலை வகித்தது.

வங்கதேச அணி, 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய 4வது நாள் ஆட்டநேர முடிவில் 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் சேர்த்திருந்தது.

ஒரே நாளில் 18 விக்கெட்டுகள்

கான்பூர் டெஸ்ட், இந்தியா, வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது

நேற்று ஒரே நாளில் மட்டும் 18 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. வங்கதேச அணியின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் என 18 விக்கெட்டுகள் சரிந்தன.

 
கான்பூர் டெஸ்ட், இந்தியா, வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, வங்கதேச அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது

வங்கதேச அணியின் விக்கெட்டுகள் சரிவு

வங்கதேச அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. மோமினுள் ஹக் 40, முஸ்பிகுர் ரஹ்மான் 6 ரன்களில் களத்தில் இருந்தனர். மழையால் ரத்து செய்யப்பட்ட ஆட்டம் நான்காவது நாளான இன்று தொடர்ந்தது.

நேற்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பும்ராவின் வேகப்பந்துவீச்சில் முஸ்பிகுர் ரஹிம் 11 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்துவந்த விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் 11 ரன்கள் சேர்த்த நிலையில், சிராஜ் பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அதன்பின் சீரான இடைவெளியில் வங்கதேச அணி விக்கெட்டைப் பறிகொடுத்தது. விக்கெட் சரிந்தாலும், மோமினுல் ஹக் ரன்களை வேகமாகச் சேர்த்தார். மதிய உணவு இடைவேளையின் போது வங்கதேசம் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.

உணவு இடைவேளைக்குப்பின் வங்கதேசம் அணி 28 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேச அணியின் பின்வரிசை பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணித் தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், அஸ்வின், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர், ஜடேஜா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

 
கான்பூர் டெஸ்ட், இந்தியா, வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

அதிரடி துவக்கம்

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் இன்னிங்ஸை அதிரடியாகத் துவங்கினர். டி20 ஆட்டம் போல் துவக்கத்திலிருந்தே பந்தை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் துரத்தி, வங்கதேசத்தின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.

ஜெய்ஸ்வால், ரோகித் இருவரும் பவுண்டரி, சிக்ஸர் என விளாசி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். இந்திய அணி 2.6 ஓவர்களில் 50 ரன்களை எட்டியது. 31 பந்துகளில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 23 ரன்கள் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த சுப்மான் கில் (39), ரிஷப் பந்த் (9) ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து (2 சிக்ஸர், 12 பவுண்டரிகள்) ஹசன் மஹ்மூத் பந்துவீச்சில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

கடந்த டெஸ்டில் ஏமாற்றிய கோலி, இந்த ஆட்டத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 47 ரன்கள் சேர்த்து 3 ரன்களில் அரைசதத்தைத் தவறவிட்டார்.

அதிரடியாக பேட் செய்த கே.எல்.ராகுல், 33 பந்துகளில் அரைசதம் அடித்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது கணக்கில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

இந்திய அணி புதிய சாதனை

இந்திய அணி 10.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டி புதிய சாதனை படைத்தது. டெஸ்ட் போட்டியில் அதிவிரைவாக சதம் அடித்த அணி என்ற புதிய சாதனையை இந்திய அணி இன்று படைத்தது.

இதற்கு முன் கடந்த ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 12.2 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியதுதான் சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை இந்த ஆட்டத்தில் இந்திய அணி முந்தி, 2.1 ஓவர்கள் குறைவாக 10.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.

18.2 ஓவர்களில் 150 ரன்களையும், 24.2 ஓவர்களில் 200 ரன்களையும் எட்டி அதிவேகத்தில் 150 மற்றும் 200 ரன்களைச் சேர்த்த அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றது.

இந்திய அணி 50 ரன்களை எட்டுவதற்கு 3 ஓவர்களே தேவைப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் ஆடவர் அணிப் பிரிவில் இந்திய அணி அதிவேகத்தில் 50 ரன்கள் எட்டியுள்ளது. இதற்கு முன் இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக 4.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் சேர்ந்து 23 பந்துகளில் அரைசதம் பார்ட்னர்ஷிப் அடித்தனர்.

 
கான்பூர் டெஸ்ட், இந்தியா, வங்கதேசம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்

ஜடேஜாவின் மைல்கல்

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா 3,000-க்கும் அதிகமான ரன்களையும் 300 டெஸ்ட் விக்கெட்டுகளையும் கைப்பற்றிய 11-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதற்கு முன் அஸ்வின், கபில்தேவ் இருவரும் அந்த சாதனையைச் செய்திருந்தனர். 74 போட்டிகளில் ஜடேஜா இந்தச் சாதனையை நிகழ்த்தி இயான் போத்தம் (72) அடுத்தார்போல் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 7-வது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்.

உலகளவில் 300 விக்கெட்டுகளையும், டெஸ்டில் 3,000-க்கும் மேற்பட்ட ரன்களையும் சேர்த்த இரண்டாவது இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வீரர் டேனியல் வெட்டோரி இந்த மைல்கல்லை அடைந்திருந்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அஸ்வீன் சிற‌ந்த‌ வீர‌ர் 

அஸ்வீனை ஒரு க‌ட்ட‌த்தில் கூப்பில் உக்கார‌ வைச்ச‌வை இங்லாந் தொட‌ரின் போது 

அந்த‌ க‌ச‌ப்பான‌ ச‌ம்ப‌வ‌ம்

அஸ்வினுக்கு ம‌ன‌ உளைச்ச‌ல‌ கொடுத்து இருக்கும்

 

முத்தையா முர‌ளித‌ர‌ன் ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் சொன்னார் த‌ன‌து சாத‌னையை உடைக்க‌ அஸ்வினால் தான் முடியும் என்று

ஆனால் ரோகித் ச‌ர்மா க‌ப்ட‌ன் ஏற்ற‌ பிற‌க்கு அஸ்வினுக்கு விளையாடும் சில‌ தொட‌ர்க‌ளில் கிடைக்க‌ வில்லை

 

இன்னும் ஒரு சில‌ வ‌ருட‌த்தில் அஸ்வின‌ வ‌ய‌தை கார‌ண‌ம் காட்டி அணியில் இருந்து நீக்கிடுவின‌ம்

 

500விக்கேட் எடுத்த‌ இர‌ண்டாவ‌து த‌மிழ‌ன் என்ற‌ பெருமை அஸ்வினுக்கு தான்

 

அதோட‌ 6 செஞ்சேரி அடிச்சு அணிக்கு வ‌லு சேர்த்து இருக்கிறார்......................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரோகித், கோலி இல்லாத இந்திய இளம் படை வங்கதேசத்தை துவம்சம் செய்தது - பாகிஸ்தான் சாதனை சமன்

இந்தியா - வங்கதேசம் முதல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் வங்கதேச வீரர் பர்வேஸ் ஹூசைன் கிளீன் போல்டானார் கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ரோகித், கோலி இல்லாத இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் அபார வெற்றிபெற்றுள்ளது. குவாலியரில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த வங்கதேசம் அணி 19.5ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 128 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49 பந்துகள் மீதமிருக்கையில், 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றது.

வெற்றிக்கு அடித்தளமிட்ட அர்ஷ்தீப் சிங்

இந்த வெற்றிக்கு அடித்தளமிட்டது அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சுதான். தொடக்கத்திலேயே வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை தனது பந்துவீச்சு மூலம் உடைத்தெறிந்து பர்வேஷ் ஹூசைன்(8), லிட்டன் தாஸ்(4) இருவரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசியில் முஸ்தபிசுர் ரஹ்மான் விக்கெட்டையும் அர்ஷ்தீப் எடுத்தார்.

இதனால் அதிரடியாக தொடக்கம் அளிக்க முயன்ற வங்கதேசத்தின் பேட்டிங் உத்தி நொறுங்கியது. 2.1 ஓவர்களில் வங்கதேசம் 14 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்தடுத்துவந்த பேட்டர்கள் தங்கள் விக்கெட்டை நிலைப்படுத்திக்கொள்ள முயன்று ரன் சேர்ப்பை கோட்டைவிட்டனர், விக்கெட்டுகளையும் இழந்தனர்.

 

தமிழக சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 3 ஆண்டுகளுக்குப்பின் சர்வதேச போட்டியில் விளையாடினார். வருண் தனது மாயஜால பந்துவீச்சு மூலம் தெளஹித் ஹிர்தாய்(8), ரிஷாத் ஹூசைன்(11), ஜாக்கர் அலி(8) ஆகிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தின் சரிவுக்கு துணையாகினார்.

அறிமுகப் போட்டியிலேயே மயங்க் யாதவ் அருமையாகப் பந்துவீசி 4 ஓவர்களில் ஒருமெய்டன் உள்பட 21 ரன்கள் கொடுத்து மெகமதுல்லா(1) விக்கெட்டை வீழ்த்தினார். வங்கதேச கேப்டன் ஷாண்டோ(27) ஆங்கர் ரோல் எடுத்து நிதானமாக பேட் செய்த நிலையில் அவர் விக்கெட்டை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி ரன்ரேட் உயர்வுக்கு தடை போட்டார். கடைசி 7 ஓவர்களில் வங்கதேச அணி இரட்டை இலக்க ரன்களைக் கூட சேர்க்க முடியவில்லை, ஆனால், விக்கெட் சரிவு தொடர்ந்தது.

இந்திய அணியில் புதிய நம்பிக்கையுடன் சேர்க்கப்பட்ட இளம் வீரர்கள் தங்கள் தேர்வு நியாயமானது என்பதை நிரூபித்துள்ளனர்.

இந்தியா - வங்கதேசம் முதல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அர்ஷ்தீப் சிங்

இந்தியா அதிரடி தொடக்கம்

இந்திய அணிக்கு சஞ்சு சாம்ஸன், அபிஷேக் ஷர்மா அதிரடியான தொடக்கம் அளித்தனர். தஸ்கின் அகமது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தநிலையில், 16 ரன்னில் அபிஷேக் வெளியேறினார். சாம்ஸன் வழக்கத்துக்கு மாறாக நிதானமாக பேட் செய்து அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார்.

அடுத்துவந்த கேப்டன் சூர்யகுமார் வழக்கம்போல் பந்துகளை மைதானத்தின் நான்கு திசைகளிலும் சிதறவிட்டார். 3 சிக்ஸர்கள், 2பவுண்டரி என 14 பந்துகளில் 29ரன்கள் என கேமியோ ஆடி முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இந்தியஅ ணி பவர்ப்ளே ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் சேர்த்தது.

அடுத்துவந்த நிதிஷ் குமார் ரெட்டி, சாம்ஸனுடன் இணைந்தார். அதிரடியாக ஆட நினைத்த சாம்ஸன் 29 ரன்களில் மிராஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 9.3 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.

ஹர்திக் பாண்டியா களத்துக்கு வந்திபின் ரன்ரேட் வேகமெடுத்து. பாண்டியா தான்சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி அதிரடியாகத் தொடங்கினார். முஸ்தபிசுர் வீசிய 10-வது ஓவரில் ஹர்திக் 2 பவுண்டரிகளை விளாசினார். ஆட்டத்தை விரைவாக முடிக்க நினைத்த ஹர்திக் பாண்டியா, ஹூசைன் வீசிய 11-வது ஓவரில் சிக்ஸரும், தஸ்கின் அகமது வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரும் விளாசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தார்.

 
இந்தியா - வங்கதேசம் முதல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பந்தை அடித்தாடும் ஹர்திக் பாண்டியா

அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகனாக தேர்வு

வங்கதேச அணியின் சரிவுக்கு காரணமாக இருந்த வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3.5 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலிருந்து 3 வீரர்கள் மட்டுமே இந்த புதிய இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். மேலும் 2 வீரர்கள் அறிமுகமாகியிருந்த நிலையில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றி மூலம் வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

குவாலியர் ஸ்ரீ மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடந்த முதல் சர்வதேச டி20 போட்டி இதுவாகும். 14 ஆண்டுகளுக்குப்பின் குவாலியர் நகரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இங்கு கடைசியாக கேப்டன் ரூப் சிங் அரங்கில் நடந்த ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்தார். இதன்பின் இந்த ஆடுகளத்தின் பயன்பாடு கைவிடப்பட்டு, புதிதாக மாதவராவ் சிந்தியா மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.

 
இந்தியா - வங்கதேசம் முதல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மயங்க் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங்

மயங்க் யாதவ் மைல்கல்

இந்திய அணியில் நிதிஷ்குமார் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோர் அறிமுகமாகினர். இதில் ஐபிஎல் டி20 தொடரில் அதிவேகமாகப் பந்துவீசி கலக்கிய மயங்க் யாதவ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் மயங்க் நேற்று 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி வங்கதேச பேட்டர்களை திணறவிட்டார்.

மயங்க் யாதவ் தான் வீசிய முதல் ஓவரையே மெய்டனாக வீசினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சார்பில் அறிமுக ஆட்டத்திலேயே மெய்டன் ஓவர் எடுத்த பந்துவீச்சாளர்களில் 3வதாக மயங்க் யாதவ் இணைந்தார். இதற்கு முன் அஜித் அகர்கர், அர்ஷ்தீப் மட்டும் அந்த சாதனையைச் செய்திருந்த நிலையில் மயங்க் யாதவும் இணைந்தார்.

இந்திய அணிக்கு சிறந்த இரு வேகப்பந்துவீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பும்ராவோடு இணைந்து, மயங்க் யாதவ் பந்துவீசுவதை நினைக்கவே எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும். இதுதவிர ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்தபடியாக புதிய ஆல்ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டி அடையாளம் காணப்பட்டு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

127 ரன்களை இந்திய அணி இந்த ஆட்டத்தில் 12 ஓவர்களில் சேஸ் செய்ய ஹர்திக் பாண்டியா ஆடிய கேமியோ முக்கியக் காரணம். குவாலியர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் தஸ்கின் வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரும், ரிஷாத் ஹூசைன் வீசிய 11வது ஓவரில் ஒருசிக்ஸரும் விளாசி ஹர்திக் பாண்டியா மீண்டும் தனது ஃபார்மை நிரூபித்தார்.

ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 2 சிக்ஸர், 5பவுண்டரி உள்பட 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நிதிஷ் குமார் ரெட்டி தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும், பின்னர் நிலைப்படுத்திக்கொண்டு 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா - வங்கதேசம் முதல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா

"இன்பத் தலைவலியாக இருந்தது"

வெற்றிக்குப் பின் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் “ எங்கள் திறமையை மீண்டும் கொண்டுவர அணியின் ஆலோசனைக்கூட்டத்தில் முடிவெடுத்தோம் அதை செயல்படுத்தினோம். அணி வீரர்களும் தங்களின் பந்துவீச்சு, பேட்டிங் திறமையை களத்தில் வெளிப்படுத்தினர், புதிய மைதானத்தில் முதல்முறையாக விளையாடியது மகிழ்ச்சி.

அடுத்தடுத்த ஆட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். கூடுதலாக பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கும்போது, அவர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது கேப்டனுக்கு இருக்கும் இன்ப தலைவலி. ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் போதும் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறோம். சில விஷயங்களில் இன்னும் நாங்கள் மேம்பட வேண்டும், அது குறித்துப் பேசி, அடுத்த ஆட்டத்தில் அந்தக் குறைபாடுகளைக் களைவோம்” எனத் தெரிவித்தார்.

 
இந்தியா - வங்கதேசம் முதல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர்

பாகிஸ்தான் சாதனை சமன்

இந்த வெற்றி மூலம் இந்திய அணி சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் சாதனையையும் சமன் செய்துள்ளது. டி20 போட்டிகளில் எதிரணிகளை அதிகமுறை ஆல்அவுட் செய்த வகையில் பாகிஸ்தானின் சாதனையை இந்திய அணி நேற்று சமன் செய்தது. பாகிஸ்தான் அணி 42முறை எதிரணிகளை டி20 போட்டிகளில் ஆல்அவுட் செய்தது, இந்திய அணியும் அந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா - வங்கதேசம்: நிதிஷ் குமார் ரெட்டியின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் டி20 தொடரை வென்ற இந்திய அணி

IND vs BAN 2nd T20I

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங்கின் அற்புதமான பேட்டிங் டெல்லியில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற உதவியது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் சேர்த்தது. 222 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் சேர்த்து 86 ரன்களில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையுடன், தொடரை வென்றது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்த அனைத்து டி20 தொடர்களையும் இந்திய அணி வென்று வருகிறது. அந்த வகையில் உள்நாட்டில் இந்திய அணி வெல்லும் 16வது டி20 தொடர் இது.

இளம் கூட்டணி

இந்திய அணி ஒரு கட்டத்தில் 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா(32), ரியான் பராக்(15) அருமையான கேமியோ ஆடி பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றனர்.

ஆட்டநாயகன் நிதிஷ் குமார் ரெட்டி

நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகமாகி 2வது போட்டியிலேயே இந்திய அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டு முத்தாய்ப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் நிதிஷ் குமார் தனது முதலாவது டி20 அரைசதத்தைப் பதிவு செய்து, 34 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

நிதிஷ் குமார் 217 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். அவரது கணக்கில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அற்புதமான ஆட்டத்தையும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிதிஷ்குமார் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய டி20 அணிக்கு நீண்டகாலத்துக்குப்பின் அற்புதமான ஆல்ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டி கிடைத்துள்ளார்.

இதுபோன்ற ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர் என நீண்ட பட்டியல் இந்திய அணிக்கு இருப்பது மிகப்பெரிய பலம்.

வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் பேசியபோது, “மூன்று விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் என்ற நிலையை நான் விரும்பினேன். அப்போதுதான் நடுவரிசை பேட்டர்கள் எவ்வாறு பேட் செய்வார்கள், அணியை தூக்கி நிறுத்துவார்கள் என்பதைப் பார்க்க முடியும்," என்று கூறினார்.

 

7 பந்துவீச்சாளர்களுக்கும் விக்கெட்

IND vs BAN 2nd T20I

பட மூலாதாரம்,GETTY IMAGES

டெல்லி மைதானம் அளவில் சிறியது, பேட்டர்களுக்கு சொர்க்கபுரி, இந்த மைதானத்திலும் தங்களால் சிறப்பாகப் பந்துவீச முடியும் என்பதையும் இந்திய பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்தினர். கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக வந்தபின் அணியில் பந்துவீசும் திறமையுள்ள பேட்டர்கள் அனைவரும் பந்துவீச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு ஏற்றாற்போல் எப்போதுமில்லாத வகையில் நேற்று 7 பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்தியது. ஏழு பந்துவீச்சாளர்களும் ஏமாற்றமின்றி விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதில் நிதிஷ்குமார் ரெட்டி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், அபிஷேக் ஷர்மா, அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், மயங்க் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இந்திய அணியை எந்த நிலையிலும் தூக்கி நிறுத்தக்கூடிய இளம் பேட்டர்கள், ஆல்ரவுண்டர்கள் அதிகமான அணி, பந்துவீச்சு தேர்வுக்குப் பஞ்சமில்லாத வீரர்கள் என வேறு கட்டத்துக்கு இந்திய டி20 அணி முன்னேற்றப்படுகிறது. இந்திய அணியின் இந்த உருமாற்றம், நிச்சயம் உலக அணிகளுக்கு எதிர்காலத்தில் பெரிய சவாலாக மாறக்கூடும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

வங்கதேச அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் 12 ஓவர்கள் வீசி 102 ரன்களையும், சுழற்பந்துவீச்சாளர்கள் 8 ஓவர்கள் வீசி 116 ரன்களையும் வாரி வழங்கினர். ஆனால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் 9 ஓவர்கள் வீசி 49 ரன்களை மட்டுமே வழங்கி, 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் எந்த ஆடுகளத்திலும் பந்துவீச முடியும் என்பதை இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

 

டாப் ஆர்டர் தடுமாற்றம்

IND vs BAN 2nd T20I

பட மூலாதாரம்,GETTY IMAGES

டாஸ் வென்ற வங்கதேச அணி இரவுநேரப் பனிப்பொழிவை பயன்பபடுத்தும் நோக்கில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதற்கு ஏற்றாற்போல் இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் சஞ்சு சாம்ஸன்(10) தஸ்கின் அகமது பந்துவீச்சிலும், ஹசன் சஹிப் பந்துவீச்சில் அபிஷேக் ஷர்மா(15), முஸ்தபிசுர் ரஹ்மான் வேகத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவ்(8) என பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். பவர்ப்ளே முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் சேர்த்து தடுமாறியது.

IND vs BAN 2nd T20I

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாய்ப்புகளை தவறவிட்ட வங்கதேசம்

அதன் பிறகு 4வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். அதிலும் நிதிஷ் குமார் ரெட்டியை ஆட்டமிழக்கச் செய்ய வங்கதேசத்துக்கு கிடைத்த இரு வாய்ப்புகளையும் அந்த அணி வீரர்கள் கோட்டைவிட்டனர்.

நிதிஷ் குமார் 6 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், தன்ஜிம் வீசிய ஓவரில் லிட்டன் தாஸ் கைக்கு ஒரு கேட்ச் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தவறவிட்டார். பிறகு நிதிஷ் குமார் 19 ரன்களில் இருந்தபோது, கால்காப்பில் வாங்கியபோது, நடுவர் அதை நோ-பால் என அறிவித்தார். அது நோபாலாக இல்லாமல் இருந்திருந்தால் நிதிஷ் குமார் ஆட்டமிழந்திருப்பார்.

மெகமதுல்லா வீசிய 9வது ஓவரில் நிதிஷ் குமார் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 15 ரன்களும், ரிஷாத் ஹூசைன் வீசிய 10வது ஓவரில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரும், நிதிஷ் குமார் 2 சிக்ஸர்களும் விளாசி, அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு உயர்த்தினர். ரிஷாத் ஓவரில் மட்டும் 24 ரன்களை இந்திய பேட்டர்கள் சேர்த்தனர்.

 

முதல் டி20 அரைசதம்

IND vs BAN 2nd T20I

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிரடியாக பேட் செய்த நிதிஷ் குமார் ரெட்டி 27 பந்துகளில் தனது முதலாவது டி20 அரைசதத்தை நிறைவு செய்தார். அதேபோல மெஹதி ஹசன் வீசிய 13வது ஓவரில் நிதிஷ் குமார் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 26 ரன்கள் சேர்த்தார். அதன்பின் முஸ்தபிசுர் வீசிய 14வது ஓவரில் மெஹதி ஹசனிடம் கேட்ச் கொடுத்து நிதிஷ் குமார் 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, தனது பங்கிற்கு கேமியோ ஆடி வங்கதேசத்தின் பந்துவீச்சை சிதறடித்தார். ரிஷாத் ஹூசைன் 15வது ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரியும் விளாசினார். தன்சிம் ஹசன் வீசிய 16வது ஓவரில் ரிங்கு சிங் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி 26 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து, தஸ்கின் பந்துவீச்சில் 53 ரன்களில் ரிங்கு சிங் ஆட்டமிழந்தார். கடைசியில் களமிறங்கிய ரியான் பராக்(15), ஹர்திக் பாண்டியா(32) இருவரும் கேமியோ ஆடி ஸ்கோரை 221 ரன்களுக்கு உயர்த்திச் சென்றனர்.

இதில் ரிஷாத் ஹூசைன் வீசிய கடைசி ஓவரில் மட்டும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் என 3 விக்கெட்டுகள மளமளவென இழந்தது சற்றுப் பின்னடைவாகும்.

 

போராடாத வங்கதேசம்

IND vs BAN 2nd T20I

பட மூலாதாரம்,GETTY IMAGES

வங்கதேச அணி 222 ரன்கள் எனும் மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கியது. அர்ஷ்தீப் வீசிய 2வது ஓவரிலேயே வங்கதேசம் முதல் விக்கெட்டை இழந்தது. அதன்பின் ஓவருக்கு ஒரு விக்கெட் வீதம் பவர்ப்ளே முடிவுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் எனத் தடுமாறியது.

வருண் வீசிய ஓவரில் கேப்டன் ஷாண்டோ(11), வாஷிங்டன் சுந்தர் ஓவரில் லிட்டன் தாஸ்(14), அபிஷேக் ஷர்மா ஓவரில் ஹர்தாய்(2) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. வங்கதேச அணி 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது.

ரியான் பராக் வீசிய 11வது ஓவரில் மெஹதி ஹசன்(16) விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கடைசி வரிசை பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக மெஹமதுல்லா (41) ரன்கள் சேர்த்து நிதிஷ்குமார் ரெட்டி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் வங்கதேசம் அணி 33 ரன்கள் மட்டுமே சேர்த்து 2 விக்கெட்டுகளை இழந்தது.

வங்கதேச அணி டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 215 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோரை இதுவரை அந்த அணியாலேயே கடக்க முடியவில்லை. ஏறக்குறைய 6 ஆண்டுகளாகப் பல்வேறு டி20 போட்டிகளில் வங்கதேசம் ஆடியிருந்தாலும், 215 ரன்கள்தான் அதன் அதிகபட்ச ஸ்கோர். இந்த ஆட்டத்திலும் அது தொடர்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முன்னாள் அமைச்சர் ஒருத்தர் தீவுப்பகுதியை சிங்கப்பூராக மாற்றி விட்டார் இந்த அமைச்சர் அனைலதீவை மலேசியாவாக் மாற்றப்போறார் ...ஒரு விகாரையை கட்டி இரண்டு தேனீர் கடை வையுங்கோ  அனைலை தீவு தாய்வான் போல வந்து விடும் .
    • விதண்டாவாதம் செய்வதில் பிரயோசனம் இல்லை..இரண்டு வருடங்களுக்கு முன்பே சிலை வைத்து விட்டார்கள்  தற்போது அதை விகாரையாக்கினார்கள் என்று தான் .நான் கேள்வி பட்டேன்   
    • பகிர்வுக்கு நன்றி @ஏராளன். இதே போன்ற கட்டுரையை ஜெயராஜ் முன்னமும் 2,3 தரம் எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன். @ரசோதரன் கூறுவது போல் இவருடைய பாணி கதை போல இருந்தாலும், பத்தி எழுத்தாளர்களுக்கு இது பொதுவான தன்மை தான். ஜனரஞ்சக பத்திகள் தகவல்களை மட்டும் கொண்டு இருந்தால் பலருக்கு அலுப்புத் தட்டி விடும் என்பதால் அப்பிடி எழுதுகிறார்கள் போலும்.
    • தொண்டர் ஊழியர்கள் தான் அவ்வாறு  நடந்து கொள்கிறார்கள் என்று எப்படி தெரியும்?...அங்குள்ள பெரும்பான்மை வைத்தியர்களுக்கு தாங்கள் கடவுள் என்ட நினைப்பு ...நான் ஊருக்கு போயிருந்த நேரம் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு போயிருந்தோம்....அப்பாயின்மென்ட் இத்தனை மணிக்கு என்று தந்தார்கள்...அரை மணித்தியாலம் முன்பே போய் காத்து இருந்தோம்...கண பேர் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வைத்தியருக்காய் வந்து காத்திருந்தார்கள்...கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் சென்றது அந்த வைத்தியர் வருவதற்கு ...நாங்கள் எழும்பி காட்டாமல் போய் விட்டோம் .பின் விசாரித்ததில் தெரிந்தது அங்கு 4 மணிக்கு வைத்தியர் வருவார் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு 4 மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுப்பார்கள் ...அவர் வந்து முதலில் சின்ன பிள்ளைகள் க,ர்ப்பிணிகள்,வயோதிபர் பார்த்து விட்டு  சாதாரண ஆட்களை பார்க்க வரும் மட்டும் மற்றவர் காத்து இருக்க வேண்டும் ...தனியார் வைத்தியசாலைகளிலேயே இந்த நிலைமை என்றால் அரச வைத்தியசாலைகளில் சொல்லி வேலை இல்லை  போதுமான ஊழியர்கள் இல்லாவிடின் அரசுக்கு அறிவித்து போதுமான பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களை பெற வேண்டியது பணிப்பாளரின் கடமையல்லவா ! இருக்கின்ற வளங்களை முறையாக பயன்படுத்துவதில்லை அல்லது பயன்படுத்த தெரியாது. தொடர்ந்தும் ஒருவரை ஒரே பதவியில் வைத்திருந்தால் தன்னை விட்டால் ஆளில்லை என்ற அசண்டையினம் தான் உருவாகும்  அர்ஜுனா போனவுடனே பேட்டி அது ,இது என்று கொடுத்து தன்னை நிரூபிக்க பாடுகிறார்  அவரில் பிழை இல்லை என்றால் எதற்கு பயப்படுறார்   
    • ஒலியின் வேகத்தை விட ஏறத்தாள  ஐந்து(5) மடங்கு அதிகமான வேகத்தில் பயணம் செய்தால் நியோர்க் நகரத்தில் இருந்து இலண்டன் நகரை ஒரு(1) மணி நேரத்தில் அடையலாம். மஸ்க்கின் SpaceX ராக்கட்டை சுரங்கத்துக்குள்ளால் செலுத்தினால்  மேற்குறிப்பிட்ட சுப்பர்சோனிக் வேகம் (Mach 5)  சாத்தியமாகலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.