Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நியூஸிலாந்துடனான முதலாவது டெஸ்ட்: முதலாம் நாள் பகல்போசன இடைவேளையின்போது இலங்கை 88 - 2 விக்

18 SEP, 2024 | 12:34 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (18) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, மதிய போசன இடைவேளையின்போது அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 88 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

திமுத் கருணாரட்ன 2 ஓட்டங்களுடனும் துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்த பெத்தும் நிஸ்ஸன்க 27 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (33 - 2 விக்.) 

மொத்த எண்ணிக்கை 69 ஓட்டங்களாக இருந்தபோது ஏஞ்சலோ மெத்யூஸ், ஆட்காட்டி விரலில் வலி தாங்க முடியாதவராக களம் விட்டு வெளியேறினார். அவர் அப்போது 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.  

ஆட்டம் பகல்போசன இடைவேளைக்கு நிறுத்தப்பட்டபோது தினேஷ் சந்திமால் 30 ஓட்டங்களுடனும் கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.  

சுழல் பந்துவீச்சாளர் வில்லியம் ஓ'ரூக் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/194005

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கமிந்து மெண்டிஸின் துடுப்பாட்ட ஆற்றல் தொடர்கிறது, 7ஆவது டெஸ்டில் 4ஆவது சதம் குவித்தார்; பலமான நிலையில் இலங்கை

Published By: VISHNU   18 SEP, 2024 | 06:22 PM

image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை (18) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கமிந்து மெண்டிஸ் குவித்த அபார சதத்தின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது.

6_William_O_Rourke__VK95602.jpg

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில்  அதன் முதல் இன்னிங்ஸில்   7 விக்கெட்களை இழந்து 302 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

5_Dinesh_Chandimal_VK9_2914.jpg

மிகத் திறமையாகவும் உறுதியாகவும் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் தனது 7ஆவது டெஸ்டில் 8ஆவது தடவையாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்று 4ஆவது சதத்தைப் பூர்திசெய்தார்.

4_Angelo_Mathews__VK94463.jpg

கமிந்து மெண்டிஸ் 173 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 114 ஓட்டங்களைப் பெற்று 7ஆவதாக ஆட்டம் இழந்தார்.

1_Kamindu_Mendis_100_runs__VK96923.jpg

இன்றைய போட்டியில் ஆட்காட்டி விரலில் பந்து பட்டு காயம் ஏற்பட்டதால் சிறிது நேரம் ஓய்வு பெற்ற ஏஞ்சலோ மெத்யூஸ், 4ஆவதாக தனஞ்சய டி சில்வா ஆட்டம் இழந்த பின்னர் மீண்டும் களம் புகுந்து துடுப்பெடுத்தாடினார்.

3_Kusal_Mendis_50_runs__VK97104.jpg

மெத்யூஸுடன் 5ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்த கமிந்து மெண்டிஸ், தொடர்ந்து குசல் மெண்டிஸுடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டார்.

கமிந்து மெண்டிஸைவிட குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 36 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 30 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸன்க 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

ரமேஷ் மெண்டிஸ் 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் வில்லியம் ஓ'ரூக் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் க்ளென் பிலிப்ஸ் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/194049

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டெஸ்ட் கிரிக்கெட் உலக சாதனை ஒன்றை சமன் செய்தார் கமிந்து : காலியில் பெற்ற சதம் சிறப்பு வாய்ந்தது என்கிறார் கமிந்து மெண்டிஸ்

19 SEP, 2024 | 05:08 PM
image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டிஸ் தனது நான்காவது டெஸ்ட் சதத்தைக் குவித்து அசத்தினார்.

ஏழாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கமிந்து மெண்டிஸ் துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக பிரகாசித்து வருவதுடன் மற்றொரு உலக சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

Copy_of_Kamindu_Mendis_100_runs__VK96923

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 106 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் கமிந்து மெண்டிஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கை 300 ஓட்டங்கள் கடப்பதை உறுதிசெய்தார்.

கமிந்து மெண்டிஸ் 173 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 114 ஓட்டங்களைக் குவித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார்.

1809_kamindu_mendis_world_record_equal.p

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் விளையாடிய முதல் 7 டெஸ்ட்களிலும் ஒரு இன்னிங்ஸிலாவது 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களை 8 சந்தர்ப்பங்களில் பெற்று, பாகிஸ்தான் வீரர் சவூத் ஷக்கீல் கடந்த வருடம் ஏற்படுத்திய  உலக  சாதனையை சமப்படுத்தியுள்ளார்.

இதனிடையே சில்ஹெட் அரங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கமிந்து மெண்டிஸ் சதங்கள் குவித்ததுடன் மென்செஸ்டர், காலி ஆகிய அரங்குகளிலும் சதங்கள் குவித்துள்ளார்.

ஆனால், அவற்றில் காலியில் குவித்த சதமே சிறப்பு வாய்ந்தது என கமிந்து மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

'இது (காலி) எனது சொந்த ஊர். அத்துடன் நான் கல்வி கற்ற றிச்மண்ட் கல்லூரியும் இங்குதான் அமைந்துள்ளது' என முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் கமிந்து மெண்டிஸ் குறிப்பிட்டார்.

'இங்கு சதம் குவிக்க வேண்டும் என எனது உள்மனம் கூறிக்கொண்டே இருந்தது. நேர்மையாகக் கூறுவதென்றால் 100 ஓட்டங்களுடன் மாத்திரம் சந்தோஷம் அடைந்துவிடக் கூடாது. அதற்கும் அப்பால் கடந்து செல்லவேண்டும். துரதிர்ஷ்டவசமாக நான் ஆட்டம் இழந்துவிட்டேன்' என கமிந்து மெண்டிஸ் மேலும் குறிப்பிட்டார்.

இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடியுள்ள கமிந்து மெண்டிஸ் மொத்தமாக 809 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அவரது சராசரி வியத்தகு 80.90 ஆக அமைந்துள்ளது.

சேர் டொனல்ட் ப்றட்மனுக்கு அடுத்ததாக குறைந்த பட்சம் 10 இன்னிங்ஸ்களில் அதிசிறந்த சராசரியைக் கொண்டிருப்பவர் கமிந்து மெண்டிஸ் ஆவார்.

மேலும் தற்போதைய உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் 10 இன்னிங்ஸ்களில் 4 சதங்கள், 4 அரைச் சதங்களுடன் 748 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ள கமிந்து மெண்டிஸின் சராசரி 83.11 ஆகும். நடப்பு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் ஜோ ரூட் மாத்திரமே 5 சதங்களைக் குறித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் 2022இல் விளையாடிய தனது அறிமுகப் போட்டியில் மத்திய வரசை வீரராக 6ஆம் இலக்கத்தில்  61 ஓட்டங்களைப் பெற்ற கமிந்த மெண்டிஸ், சுமார் 2 வருடங்களின் பின்னர் தனது மீள் வருகையில் 7ஆம் இலக்க வீரராக பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட் அரங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து அசத்தினார்.

இதன் மூலம் 7ஆம் இலக்கத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் (102 மற்றும் 164) குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை கமிந்து மெண்டிஸ் நிலைநாட்டினார். அதனைத் தொடர்ந்து சட்டோக்ராம் அரங்கில் ஆட்டம் இழக்காமல் 92 ஓட்டங்களைப் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து மென்செஸ்டர், ஓல்ட் ட்ரபோர்ட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக 113 ஓட்டங்களைக் குவித்த கமிந்து மெண்டிஸ், லோர்ட்ஸ் அரங்கில் முதல் இன்னிங்ஸில் 74 ஓட்டங்களையும் ஓவல் அரங்கில் முதல் இன்னிங்ஸில் 64 ஓட்டங்களையும் பெற்றார்.

7ஆம் இலக்கத்தில் இவ்வாறாக அசத்தி வந்த கமிந்து மெண்டிஸ் இப்போது 5ஆம் இலக்கத்தில் தனது முதல் முயற்சியில் சதம் குவித்து சாதித்துள்ளார்.

இந்த மாதம் 30ஆம் திகதி தனது 26ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள கமிந்த மெண்டிஸ், இலங்கை கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பிரகாசித்து வரலாற்று நாயகனாக உயர்வார் என நம்பப்படுகிறது.

https://www.virakesari.lk/article/194114

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லெதம், வில்லியசன் அரைச் சதங்கள் குவிப்பு: பலமான நிலையை நோக்கி நகர்கிறது நியூஸிலாந்து

Published By: VISHNU   19 SEP, 2024 | 07:51 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (20) டொம் லெதம், முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களின் உதவியுடன் நியூஸிலாந்து பலமான நிலையை நோக்கி நகர்ந்தவண்ணம் உள்ளது.

sri_lanka_vs_nz.jpg

இலங்கை முதல் இன்னிங்ஸில் பெற்ற 305 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்று உறுதியான நிலையில் இருந்தது.

Copy_of_Kane_Williamson___VK99653.jpg

நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் ஒருவரைத் தவிர மற்றையவர்கள் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கினர்.

William_O_Rourke_5_wickets_VK8_9805.jpg

டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

கொன்வே 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் டொம் லெதம், கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டொம் லெதம் 70 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் 3ஆவது விக்கெட்டில் ரச்சின் ரவிந்த்ராவுடன் மேலும் 51 ஓட்டங்களை வில்லியம்சன் பகிர்ந்தார்.

வில்லியம்சன் 55 ஓட்டங்களையும் ரவிந்த்ரா 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களைத் தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டெரில் மிச்செல் 41 ஓட்டங்களுடனும் டொம் ப்ளண்டெல் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இரண்டாம் நாளான நேற்றுக் காலை தனது முதல் இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, கடைசி 3 விக்கெட்களை 3 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது.

14 ஓட்டங்களுடன் தனது துடுப்பாட்டத்தை தொடர்ந்த ரமேஷ் மெண்டிஸ் அதே எண்ணிக்கையில் ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் வில்லியம் ஓ'ரூக் 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் க்ளென் பிலிப்ஸ் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஜாஸ் பட்டேல் 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தனது 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வில்லியம் ஓ'ரூக் தனது 2ஆவது விக்கெட் குவியலை இன்று பதிவு செய்தார்.

https://www.virakesari.lk/article/194128

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திமுத், சந்திமால், மெத்யூஸ், தனஞ்சய ஆகியோரின் துடுப்பாட்டங்களின் உதவியுடன் முன்னிலையில் இலங்கை; ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாளை  ஓய்வு தினம்

Published By: VISHNU   20 SEP, 2024 | 09:44 PM

image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோரின் பொறுமையான துடுப்பாட்டங்கள்  என்பன இலங்கையை முன்னிலையில் இட்டுள்ளது.

2009_darryl_mitchel.png

இரண்டு அணிகளினதும் முதலாவது இன்னிங்ஸ்கள் நிறைவில் 35 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இலங்கை, போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் மீதம் இருக்க 202 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கிறது.

2009_dinesh_chandimal.png

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நாளை சனிக்கிழமை (21) நடைபெறுவதால் டெஸ்ட் போட்டியில் நாளைய தினம் ஓய்வு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நான்காம் நாள் ஆட்டம் ஞாயிறன்று தொடரும்.

இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் பெத்தும் நிஸ்ஸன்க (2) மூன்றாவது ஓவரில் ஆட்டம் இழந்தார்.

திமுத் கருணாரட்னவும் தினேஷ் சந்திமாலும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைக் குவித்தனர். அத்துடன் 2ஆவது விக்கெட்டில் 147 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

ஆனால், மொத்த எண்ணிக்கை 153 ஓட்டங்களாக இருந்தபோது திமுத் கருணாரட்ன 83 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 61 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். இருவரும் தலா 6 பவுண்டறிகளை அடித்திருந்தனர்.

முதல் இன்னிங்ஸில் சதம் குவித்த கமிந்து மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்ஸில் 13 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

ஏஞ்சலோ மெத்யூஸ், அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி தலா 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருக்கின்றனர். 

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

இலங்கை முதலாவது இன்னிங்ஸில் சகல விக்டெக்களையும் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 2ஆம் நாளான வியாழக்கிழமை (19) ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்று உறுதியான நிலையில் இருந்தது.

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 340 ஓட்டங்களைப் பெற்றது.

டெரில் மிச்செல் 51 ஓட்டங்களைப் பெற்றதுடன் க்லென் பிலிப்ஸ் 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 136 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரமேஷ் மெண்டிஸ் 101 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/194214

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியுசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் - இலங்கை 63 ஓட்டங்களால் வெற்றி

23 SEP, 2024 | 10:50 AM
image
 

காலியில் இடம்பெற்ற நியுசிலாந்து அணிக்கு எதிரான  முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 63  ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

வெற்றிபெறுவதற்கு 274 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 211 ஓட்டங்களிற்கு தனது இரண்டாவது இனிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

208 ஓட்டங்களிற்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த நியுசிலாந்து அணி 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

ரச்சின் ரவீந்திர 92 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

பிரபாத் ஜெயசூரிய ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார்.

https://www.virakesari.lk/article/194579

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இலங்கை மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது

23 SEP, 2024 | 01:22 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை (23) காலை நிறைவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 63 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 - 2025 பருவகாலத்திற்கான அணிகள் நிலையில் 3ஆம் இடத்திறகு முன்னேறியுள்ளது.

இதன் மூலம் தற்போது அணிகள் நிலையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியாவுக்கும் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் சவால் விடுக்கும் வகையில் இலங்கை முன்னேறியுள்ளது.

இந்த வெற்றி மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை 1 - 0 என முன்னிலை பெற்றுள்ளது.

காலி சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கை தனது 26ஆவது வெற்றியை ஈட்டியதுடன் இந்த மைதானத்தில் நியூஸிலாந்து 5ஆவது தொடர்ச்சியான தோல்வியைத் தழுவியது.

போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் வெற்றிக்கு மேலும் 68 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 8 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களிலிருந்து நியூஸிலாந்து தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

ரச்சின் ரவிந்த்ரா 91 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்ததால் நியூஸிலாந்துக்கு சிறு நம்பிக்கை இருந்தது.

ஆனால், கடைசி நாள் ஆட்டம் இன்று திங்கட்கிழமை (23)காலை தொடர்ந்தபோது 15 நிமிடங்களில் கடைசி 2 விக்கெட்களை ப்ரபாத் ஜயசூரிய வீழ்த்த இலங்கை வெற்றிபெற்றது.

2309_prabath_jaysuriya.png

ரச்சின் ரவிந்த்ரா மேலதிகமாக ஒரு ஓட்டத்தைப் பெற்று ப்ரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் எல். பி. டபிள்யூ. முறையில் 92 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் இலங்கை வெற்றிபெறுவது உறுதியாயிற்று.

2309_rachin_ravindra.png

மொத்த எண்ணிக்கை 211 ஓட்டங்களாக இருந்தபோது வில்லியம் ஓ'ரூக் கடைசியாக ஆட்டம் இழந்தார்.

மிகவும் துல்லியமாக பந்துவீசிய ப்ரபாத் ஜயசூரிய தனது 15ஆவது டெஸ்ட் போட்டியில் 8ஆவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததுடன் இந்தப் போட்டியில் 9 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றினார்.

முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் மூன்று நாட்களில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டதுடன் நான்காம் நாள் ஆட்டத்தின் பிற்பகுதியிலேயே இலங்கைக்கு சாதகமாக திரும்பியது.

இலங்கை சார்பாக கமிந்து மெண்டிஸ், திமுத் கருணாரட்ன, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், குசல் மெண்டிஸ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் ப்ரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்தனர்.

நியூஸிலாந்து சார்பாக டொம் லெதம், கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல், ரச்சின் ரவிந்த்ரா, க்லென் பிலிப்ஸ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் வில்லியம் ஓ'ரூக், அஜாஸ் பட்டேல் ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்தனர்.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 305 (கமிந்து மெண்டிஸ் 114, குசல் மெண்டிஸ் 50, ஏஞ்சலோ மெத்யூஸ் 36, தினேஷ் சந்திமால் 30, வில்லியம் ஓ'றூக் 55 - 5 விக்.)

நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 340 (டொம் லெதம் 70, டெரில் மிச்செல் 57, கேன் வில்லியம்சன் 55, க்லென் பிலிப்ஸ் 49 ஆ.இ., ப்ரபாத் ஜயசூரிய 136 - 4 விக்., ரமேஷ் மெண்டிஸ் 101 - 3 விக்., தனஞ்சய டி சில்வா 31 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 309 (திமுத் கருணாரட்ன 83, தினேஷ் சந்திமால் 61, ஏஞ்சலோ மெத்யூஸ் 50, தனஞ்சய டி சில்வா 40, அஜாஸ் பட்டேல் 90 - 6 விக்.)

நியூஸிலாந்து (வெற்றி இலக்கு 275) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 211 (ரச்சின் ரவிந்த்ரா 92, கேன் வில்லியம்சன் 30, டொம் ப்ளண்டெல் 30, ப்ரபாத் ஜயசூரிய 68 - 5 விக்., ரமேஷ் மெண்டிஸ் 83 - 3 விக்.)

https://www.virakesari.lk/article/194604

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலி கிரிக்கேட் மைதான‌ம் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ மைத‌னாம்

5வ‌து நாள் உந்த‌ மைதான‌த்தில் நிலைத்து நின்று விளையாட‌ முடியாது விக்கேட்டுக்க‌ள் அடுத்து அடுத்து விழும்.................

 

இர‌ண்டாவ‌து ம‌ச்சையும் இல‌ங்லை வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு..........................................................

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியூஸிலாந்துடனான 2ஆவது டெஸ்டில் மிகவும் பலமான நிலையில் இலங்கை (402 - 5 விக்.)

27 SEP, 2024 | 12:43 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாளான இன்று பகல் போசன இடைவேளையின்போது இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 402 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பலமான நிலையில் இருக்கின்றது.

இன்று (27) காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, ஏஞ்சலோ மெத்யூஸின் விக்கெட்டை முதலாவதாக இழந்தது.

download.jfif

அவர் 88 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.

இதனிடையே கமிந்து மெண்டிஸுடன் 4ஆவது விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸ் 107 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

download__1_.jfif

அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவர் 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களை கமிந்து மெண்டிஸுடன் பகிர்ந்தார்.

பகல் போசன இடைவேளையின்போது உலக சாதனை வீரர் கமிந்து மெண்டிஸ் 93 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் க்லென் பிலிப்ஸ் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/194900

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

நியூஸிலாந்துடனான 2ஆவது டெஸ்டில் மிகவும் பலமான நிலையில் இலங்கை (402 - 5 விக்.)

27 SEP, 2024 | 12:43 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாளான இன்று பகல் போசன இடைவேளையின்போது இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 402 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பலமான நிலையில் இருக்கின்றது.

இன்று (27) காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, ஏஞ்சலோ மெத்யூஸின் விக்கெட்டை முதலாவதாக இழந்தது.

download.jfif

அவர் 88 ஓட்டங்ளைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார்.

இதனிடையே கமிந்து மெண்டிஸுடன் 4ஆவது விக்கெட்டில் ஏஞ்சலோ மெத்யூஸ் 107 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

download__1_.jfif

அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவர் 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களை கமிந்து மெண்டிஸுடன் பகிர்ந்தார்.

பகல் போசன இடைவேளையின்போது உலக சாதனை வீரர் கமிந்து மெண்டிஸ் 93 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் க்லென் பிலிப்ஸ் 65 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/194900

இல‌ங்கை அணி பெரிய‌ இஸ்கோர‌ நீண்ட‌ வ‌ருட‌த்துக்கு பிற‌க்கு அடிச்சு இருக்கின‌ம் நியுசிலாந் ஒன்றில் ச‌ம‌ நிலையில் முடிக்க‌ பார்க்க‌னும் இல்லையேன் இல‌ங்கை வென்று விடும்..............................................

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டாவது டெஸ்ட் - பிரபாத் ஜெயசூரியவின் சுழலில் சிக்கியது நியுசிலாந்து அணி - முதல் இனிங்சில் 88 ஓட்டங்கள்

28 SEP, 2024 | 11:54 AM
image
 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியுசிலாந்து அணி தனது முதலாவது இனிங்சில் 88 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது

காலியில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியா ஆறு விக்கெட்களை வீழ்த்தினார்.

அறிமுக இளம் சுழற்பந்து வீச்சாளர் நிசான் பீரிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இலங்கை அணி தனது முதல் இனிங்சில் ஐந்து விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/194977

இலங்கையுடனான 2ஆவது டெஸ்டில் மிக மோசமான நிலையில் நியூஸிலாந்து

Published By: DIGITAL DESK 3   28 SEP, 2024 | 01:46 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்து நியூஸிலாந்து பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது ஒரு விக்கெட்டை இழந்து 3 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருக்கிறது.

போட்டியின் 3ஆம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 22 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து பகல்போசன இடைவேளைக்கு சற்று முன்னர் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் மைக்கல் சென்ட்னர் (29), டெரில் மிச்செல் (13), ரச்சின் ரவிந்த்ரா (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

514 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பலோ ஒன்முறையில் துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து மதிய போசன இடைவேளையின்போது ஒரு விக்கெட்டை இழந்து 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் ஓவரை வீசிய நிஷான் பீரிஸ் ஓட்டம் கொடுக்காமல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 602 ஒட்டங்களைக் குவித்து டிக்ளயா செய்தது.

https://www.virakesari.lk/article/194984

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியுசிலாந் வீர‌ர்க‌ளின் விளையாட்டு ப‌டு சுத‌ப்ப‌ல்
நிலைத்து நின்று விளையாட அவ‌ர்க‌ளால் முடிய‌ வில்லை

நாளையோட‌ விளையாட்டு முடிந்து விடும்.......இல‌ங்கை அடுத்த‌ இனிங்ஸ் விளையாடாம‌லே வெற்றி பெறுவின‌ம்............இது நியுசிலாந்துக்கு அவ‌மான‌ம்.........................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியூஸிலாந்தை இன்னிங்ஸால் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இலங்கை

29 SEP, 2024 | 03:21 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டி நான்காம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் முடிவுடைந்தது.

முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 360 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முதலாவது இன்னிங்ஸைவிட இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்தின் துடுப்பாட்டம் திறமையாக இருந்தபோதிலும் தோல்வியைத் தவிர்ப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை.

நியூஸிலாந்தின் 2ஆவது இன்னிங்ஸில் டெவன் கொன்வே, டொம் ப்ளண்டெல், க்லென் பிலிப்ஸ், மைக்கல் சென்டனர் ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் பெற்றனர்.

போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்றைய தினம் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து கடைசி 5 விக்கெட்களில் மேலும் 165 ஓட்டங்களைப் பெற்றது.

க்லென்  பிலிப்ஸ், டொம் ப்ளண்டெல் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

டொம் ப்ளண்டெல் 60 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவர் டிம் சௌதீயுடன் 7ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்த க்ளென் பிலிப்ஸ் 78 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

டிம் சௌதீ 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

தொடர்ந்து மிச்செல் சென்ட்னர், அஜாஸ் பட்டேல் ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

எனினும் இருவரும் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இலங்கையின் வெற்றி உறுதியாயிற்று.

அஜாஸ் பட்டேல் 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் கடைசியாக ஆட்டம் இழந்த மிச்செல் சென்ட்னர் 67 ஓட்டங்களைப் பெற்றார்.

நேற்றைய தினம் க்ளென் பிலிப்ஸ் 61 ஓட்டஙகளையும் கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் அறிமுக வீரர் நிஷான் பீரிஸ் 170 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 139 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டியில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டிருந்தது.

கமிந்து மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 106 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 88 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் க்லென்  பிலிப்ஸ் 141 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

மிச்செல் சென்ட்னர் (29), டெரில் மிச்செல் (13), ரச்சின் ரவிந்த்ரா (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: கமிந்து மெண்டிஸ் (182 ஆ.இ.), தொடர் நாயகன்: ப்ரபாத் ஜயசூரிய (18 விக்கெட்கள்)

Copy_of_Tom_Blundell__VK98141.jpg

2909_sl_beat_nz_by_inngs.jpg

https://www.virakesari.lk/article/195065

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சொந்த‌ ம‌ண்ணில் இல‌ங்கைய‌ வெல்வ‌து சிர‌ம‌ம்

ஆனால் சில‌ ச‌மைய‌ம் ம‌ற்ற‌ அணிக‌ளிட‌ம் சொந்த‌ ம‌ண்ணில் இடை சுக‌ம் தோத்து இருக்கின‌ம்

ஆனால் கூட‌ வெற்றிய‌ தான் ப‌திவு செய்து இருக்கின‌ம் அந்த‌க் கால‌ம் தொட்டு...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நியூஸிலாந்தை இன்னிங்ஸால் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது இலங்கை

29 SEP, 2024 | 06:13 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 154 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டி நான்காம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் முடிவுடைந்தது.

முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 360 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முதலாவது இன்னிங்ஸைவிட இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்தின் துடுப்பாட்டம் திறமையாக இருந்தபோதிலும் தோல்வியைத் தவிர்ப்பதற்கு போதுமானதாக இருக்கவில்லை.

நியூஸிலாந்தின் 2ஆவது இன்னிங்ஸில் டெவன் கொன்வே, டொம் ப்ளண்டெல், க்லென் பிலிப்ஸ், மைக்கல் சென்டனர் ஆகியோர் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்கள் பெற்றனர்.

போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இன்றைய தினம் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து கடைசி 5 விக்கெட்களில் மேலும் 165 ஓட்டங்களைப் பெற்றது.

க்லென்  பிலிப்ஸ், டொம் ப்ளண்டெல் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

டொம் ப்ளண்டெல் 60 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் அணித் தலைவர் டிம் சௌதீயுடன் 7ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்த க்ளென் பிலிப்ஸ் 78 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

டிம் சௌதீ 10 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

தொடர்ந்து மிச்செல் சென்ட்னர், அஜாஸ் பட்டேல் ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

எனினும் இருவரும் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இலங்கையின் வெற்றி உறுதியாயிற்று.

அஜாஸ் பட்டேல் 22 ஓட்டங்களைப் பெற்றதுடன் கடைசியாக ஆட்டம் இழந்த மிச்செல் சென்ட்னர் 67 ஓட்டங்களைப் பெற்றார்.

நேற்றைய தினம் க்ளென் பிலிப்ஸ் 61 ஓட்டஙகளையும் கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் அறிமுக வீரர் நிஷான் பீரிஸ் 170 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 139 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Copy_of_Player_of_the_Series_Prabath_Jay

இப் போட்டியில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டிருந்தது.

கமிந்து மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 106 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 88 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் க்லென்  பிலிப்ஸ் 141 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

மிச்செல் சென்ட்னர் (29), டெரில் மிச்செல் (13), ரச்சின் ரவிந்த்ரா (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: கமிந்து மெண்டிஸ் (182 ஆ.இ.), தொடர் நாயகன்: ப்ரபாத் ஜயசூரிய (18 விக்கெட்கள்)

Copy_of_Player_of_the_Match_Kamindu_Mend

download.jfif

2909_sl_beat_nz_by_inngs.jpg

https://www.virakesari.lk/article/195065



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.