Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   22 SEP, 2024 | 03:37 AM

image

லோகன் பரமசாமி

சர்வதேச நாடுகள் மத்தியில் இவ்வருடம் இடம்பெற்று வரும் தேர்தல்களின் பட்டியலில் இலங்கையில் இவ்வாரம் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல் நாட்டின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. 

இலங்கைத் தேர்தல் அத்தீவின் தென்பகுதியில் வெறும் உதிரி வேட்பாளர்களின் தேர்தல் களமாக பார்க்கப்பட்டிருந்த போதிலும் ஒருதேசமாக  தமிழ்பொது வேட்பாளரின் வருகை ஏற்கனவே பிராந்திய அரசியலில் தாக்கத்தை விளைவிக்க ஆரம்பித்துவிட்டது. 

பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச அலகுகளையும் மீண்டுமொரு முறை ‘ஈழத்தமிழர்’ விவகாரத்தில் கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது.  இதற்கு முக்கிய ஆரம்பப்புள்ளியாக தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம் தமிழ் நாட்டில் பிரபல்யமான சரித்திர முக்கியத்துவம் கொண்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் எதிரொலித்திருந்தமை கவனிக்க தக்தாகும். 

ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பால் ஒழுங்கு செய்யபட்டிருந்த இப்பத்திரிகையாளர் சந்திப்பில்,  தமிழ் நாட்டு மக்களுக்கு இலங்கையில் தமிழ் மக்கள் ஒருபொது வேட்பாளரை போட்டியில் நிறுத்தியுள்ளனர் என்பதை அறிமுகம் செய்வதற்கும் அறிவிப்பதற்குமான கூட்டமாக இருந்தது. 

இலங்கையில் தமிழ் பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டமையானது, தேர்தல் விவகாரமாக சில யாழ்பாண ஆய்வாளர்களும் கொழுப்பு ஆய்வாளாகளும் சித்தரிக்க முயலும் அதேவேளை சென்னையில் நடந்த செய்தியாளர் மாநாடு தமிழ் பொதுக் கட்டமைப்பானது அண்மைகால தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பமுனையாக பார்க்கப்படுகிறது. 

பொதுக்கட்டமைப்பை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்வதற்கும் அப்பால் எதிர்க்கட்சிகள், ஆளும்கட்சி என்ற வேறுபாடுகளை கடந்து தமிழ் நாட்டிலுள்ள அனைத்து அரசியல் சமூக செயற்பாட்டாளர்களிடம் இருந்தும் ஆதரவை வேண்டி நிற்கிறது. 

2009ஆம் ஆண்டுக்கு முந்தைய காலங்களில் வெளியகத் தலையீடுகள் பல  தமிழ் மக்களின் தேசக் கட்டுமான நகர்வுகளைச் சிதைக்கும் செயற்பாடுகளை மையமாகக் கொண்டு அமைந்திருந்தன.  

குறிப்பாக போராடும்  தேசிய இனமொன்றின் மீதான வெளியகத் தலையீடு என்பது மொழிப்பிரிவுகள் இனகுழுமப் பிரிவுகள், மதப் பிரிவுகள், வாழும் பிராந்தியங்களுக்கு இடையிலான பிரிவுகள்  என்று பலதரப்பட்ட வகையில் அவரவர் உரிமைகளுக்காக பேசுவது போல் பாசாங்கு செய்து தனித்தனி அலகுகளாக பிரித்து விடுவது வழக்கமாக இருந்தது. 

ஆனால் செப்ரெம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற சென்னை பத்திரிகையாளர் சந்திப்பானது. அனைவரையும் ஒரு தேசியமாக பார்த்த விவகாரம் கவனிக்க தக்கதாகும். இதற்கு தமிழகம் ஒரு தாய் நிலமாக  ஊக்கம் விளைவிக்கும்  சக்தியாக திரள வேண்டும் என்ற வேண்டுகோள் அங்கே விடுக்கபட்டது. 

அத்துடன் தமிழக அரசு நோக்கி விடுக்கப்பட்ட வேண்டுகோளில்  இலங்கையில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவகாரங்களை  தமிழக அரசு டில்லிக்கு அழுத்தம் கொடுக்கும்  விவகாரங்களாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுடன்  தமிழக முதலமைச்சர் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் மக்களிடையே ஒருபொதுவாக்கெடுப்பு நடாத்துவதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

சர்வதேச மன்னிப்பு சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் அனைத்திற்கும் இலங்கையில் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்பட்டுவரும் இனஅழிப்பு விவகாரங்களை எடுத்து கூறக்கூடிய கடிதங்கள் எழுதும்படி தாம் ஏற்கனவே தமிழக அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறபட்டது.  

அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் ஏற்பாட்டாளர்களான பெரியார் திராவிடர் கழக செயலர்  கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலர் தோழர் தியாகு ஆகியோருடன் மேலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய கட்சியைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை வாழ், தமிழ் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு கோரி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் முன்முயற்சியில் சட்டசபை தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. இதனை புதுப்பிக்கும் வகையில் மீண்டுமொரு தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அந்த அமைப்பின் சார்பில் தோழர் தியாகுவினால் வேண்டுகோளாக முன்வைக்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் மக்கள் மீதான தமிழக மக்களின் சரியான புரிந்துணர்வு இந்திய மத்திய அரசுடனான கையாள்கைக்கு மிகவும் இன்றியமையாததாக தெரிகிறது. தோழர் தியாகு போன்றவர்கள் நடைமுறையிலும் சித்தாந்த ரீதியாகவும்  சரியான, தெளிவான சிந்தனைப்போக்குக் கொண்டவாகளாக உள்ளனர். 

ஆயுதப் போராட்ட கால அணுகுமுறைகள் போல் அல்லாது தெற்காசியாவின் பிராந்திய  வல்லரசான இந்தியாவை  ஒரு கூட்டுச் சக்தியாக அணுகுவது என்பது பொதுக் கட்டமைப்பின் நகர்வில் தெரிகிறது. கடந்த காலங்களில் எத்தகைய அழுத்தங்களை பிரயோகித்த போதிலும். 2009ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துவிட்ட நிலையைக் கொண்டிருந்த போதிலும் தமிழ்த் தரப்பு சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் பிடியிலிருந்து விடுபட்டுவிட வேண்டும் என்ற நோக்கம் இன்னமும் மாறவில்லை.

ஆயுதம் தாங்கிய போராட்டக் களத்திலும் சரி தற்போதைய ஜனநாயக போராட்ட களத்திலும் சரி கடந்த பதினைந்து வருடகால தமிழ் மிதவாத, சந்தர்ப்பவாத சக்திகள் வலுவிழந்துள்ள சமகாலத்தில் மீண்டும் பேரினவாத சக்திகளின் பிடியிலிருந்து விடுபட்டு தமது அடையாளங்களை பேண வேண்டும் என்ற அவா தமிழ் மக்களிடம் இன்னமும்  மாறவில்லை.  

இதுவொரு தீர்வைக்காண விளையும் தரப்பிற்கான உருமாற்றமாகவே கருதப்பட வேண்டியுள்ளது என்பதை புதுடில்லி புரிந்து கொள்ளுமா என்பது தான் தற்போதைய கேள்வி.

தெற்காசியப் பிராந்தியத்தில் தற்போது இந்திய சார்பு நாடுகள் என்று எதுவுமில்லை, சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்கம் அந்தளவிற்கு ஆழ ஊடுருவியுள்ளது. இந்நிலையில் புதுடில்லி தமிழக உறவுகளை வலுவாகக் கொண்ட இலங்கைத்த தமிழ் மக்களை தமது சார்பாளர்களாக உறுதிப்படுத்தி கொள்வது மிக அவசியமானதாகத் தெரிகிறது. 

இலங்கையில் தமிழர் தரப்பு தமது நிழல் திணைக்களங்களை ஏற்கனவே அமைத்துக் கொள்வதற்குரிய வியூகங்களை கொண்டுள்ளது. பொதுக்கட்டமைப்பில் இனைந்துள்ள துறைசார் அமைப்புகள் 2009காலப்பகுதிக்கு முன்னரான சூழலின் அனுபவம் கொண்ட பாமர மக்களிடமிருந்தான  தலைமைத்துவங்களை தன்னகத்தே கொண்டு மீண்டும் உயிர்துள்ள நிறுவன தன்மையை  தமிழ் பொதுக் கட்டமைப்பில் காண முடிகிறது.

இவ்வாறு மக்கள் மயபடுத்தப்பட்ட துறை சார்ந்த அனுபவஸ்தர்களையும்  கல்வியாளர்களையும் புத்திதத்துவ ரீதியாக அணுகவல்ல கொள்கை வகுப்பாளர்களையும்  தன்னகத்தே கொண்ட ஒரு கட்டமைப்பாக மீண்டும் தம்மை தகவமைத்து கொள்ள முடியும் என்பதை தமிழ் மக்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.  

அந்த வகையில் தமிழர் சார்பு கொள்கை மாற்றம் ஊடாக  பிராந்திய அளவில் இந்திய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்காதவொரு தேசமாக உருவாக்கி கொள்ளும் சந்தர்ப்பம் தற்பொழுது புதுடில்லிக்கு ஏற்பட்டுள்ளது. 

அண்மைய பங்களாதேஷ அனுபவத்தின் ஊடாக பார்க்கும் பொழுது தொடர்பாடலின் வளர்ச்சியும் உரிமைகளுக்கான தேவைகளும், தமிழ்த் தரப்பின் இருப்பிற்கான பாதுகாப்பும் மேலைத்தேய சார்பு  தன்னார்வ நிறுவனங்களின் தலையீட்டை தவிர்க முடியாது. 

இவை தமிழக தலைவைர்கள் போல் ஈழத்தேசிய அரசியலுக்கு துணையாகவும் தேசக் கட்டுமானம் குறித்த சிந்தனை கொண்டவைகளாகவும் இருக்கும் என்று எதிர்பார்க முடியாது.  

பங்களாதேஷ் போல இலங்கைத் தீவை ஒட்டுமொத்தமாக தமது கட்டுபாட்டின் கீழ் வைத்திருக்கவே மேலைதேய அரச சார்பற்ற நிறுவனங்கள் முயலும் பொழுது இனங்களுக்கு இடையில் அரசியல் தீர்வற்ற இலங்கைத் தீவு, ஒரு பவீனமான அரசு கொண்ட நாடாக மேலும் நீண்ட காலத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.

https://www.virakesari.lk/article/194352

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.