Jump to content

"விலங்கிணை உடைத்தெறி" [இலங்கையில் அரசு மாறும் இந்த தருணத்தில்]   


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"விலங்கிணை உடைத்தெறி" [இலங்கையில் அரசு மாறும் இந்த தருணத்தில்]   
 
 
"வலுவான குரல் வளமான சிந்தனை 
பழமை வாதிகள் கண்களை திறக்கட்டும்!   
கடந்தயுகம் ஒதுக்கித் தள்ளிய மக்கள் 
விழித்து எழுந்து உரிமை கேட்கட்டும்!"
 
 
"சுதந்திர நெருப்பு நெஞ்சில் எரிய
கலங்கரை வெளிச்சம் பாதை காட்டட்டும்! 
இலங்கையில் பிறந்து துன்பம் அனுபவிப்பவனை 
கண்கள் திறந்து அரசு அறியட்டும்!" 
 
 
"வாழ, நேசிக்க, சமபங்கு அடைய 
ஒவ்வொரு அடியிலும் உரிமை கோரட்டும்! 
புராணங்கள் சமயங்கள் பழைய கிடங்கே 
நெகிழ்ச்சி கொண்டு கதவுகள் திறக்கட்டும்!"   
 
 
"கனவுகள் விரிய தைரியம் பெருக
சிறகுகள் அடித்து விடுதலை பெறட்டும்!  
சுதந்திரம் வேண்டும் சிறுபான்மை இனங்கள்    
உரிமை பெற்று விலங்கிணை உடைத்தெறியட்டும்!" 
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
378188288_10223939381855188_7276671929942587763_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=E_rlLjp07xAQ7kNvgEIUml9&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=Au5Z1kNIgzVHxcWcoPRCjXP&oh=00_AYBx9WaYfrU48I1wC5Lhe0T10ag6GUQ77cmP5w1AkV7iQQ&oe=66F82225 Jusoor Post » Sri Lanka Tamils mark 15 years since end of civil war 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, kandiah Thillaivinayagalingam said:
"கனவுகள் விரிய தைரியம் பெருக
சிறகுகள் அடித்து விடுதலை பெறட்டும்!  

உண்மை, பழைய பல்லவியோடு தெற்கு மக்கள் இல்லையென்ற விழிப்புநிலை தோன்றுவதுபோன்ற சிறுகீற்றுத் தென்படும் வேளையில், வட-கிழக்குத் தனது விருப்பை ஒன்றிணைந்து தெரிவிக்காதுவிடினும் பிரிந்து நின்றாவது புலப்படுத்தியிருப்பதை ஒன்றுசேர்ந்து கரைசேர்க்க நீங்கள் சுட்டுவதுபோல் புதிய சிந்தனைகொண்டு எழுவார்களாயின் தமிழினம் துலங்கும். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.