Jump to content

வடக்கு, கிழக்கில் ஊழலற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம் - கே.இன்பராசா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
28 SEP, 2024 | 05:59 PM
image

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஆதரவாளர்கள் மக்களின் அனுசரணையுடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி சுயேட்சையாக வடக்கு, கிழக்கில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று சனிக்கிழமை (28) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது அதிகூடிய சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிடவுள்ளோம்.

தமிழ் மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்த தேர்தல் குறித்து நாங்கள் உங்களைத் தேடி வருவோம். எங்களுக்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்காக நாங்கள் எங்கள் உயிரையே அர்ப்பணித்தோம். அங்கவீனமாக்கப்பட்டுள்ளோம். அனாதரவாக்கப்பட்டுள்ளோம். எனவே முன்னாள் விடுதலைப்புலிகள் ஆகிய நாங்கள் இத்தேர்தலில் களமிறங்கவுள்ளோம்.

தற்போதைய ஜனாதிபதியின் ஊழல் அற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை போல் வடக்கு, கிழக்கில் ஊழலற்ற அரசியலை முன்னெடுக்க நாங்கள் போராடுவோம்.

மன்னார் மாவட்ட முன்னாள் விடுதலைப்புலிகளும் எங்களுடன் இணைந்துள்ளனர். எனவே, தமிழ் மக்களும் எங்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார். 

https://www.virakesari.lk/article/195010

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கருத்துக்களத்தில் உள்ள தமிழ்த்தேசிய தூண்கள் இவர்களுக்கு ஆதரவு அளிப்பார்களா என அறிய ஆவல்.

சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் தொடக்கம் விநாயக மூர்த்தி முரளிதரன், பிள்ளையான் வரை அரசியலில் ஈடுபடலாம் என்றால் இவர்களுக்கு அரசியலில் கிடைக்கக்கூடிய இடம், பெறப்படக்கூடிய இடம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நியாயம் said:

யாழ் கருத்துக்களத்தில் உள்ள தமிழ்த்தேசிய தூண்கள் இவர்களுக்கு ஆதரவு அளிப்பார்களா என அறிய ஆவல்.

சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் தொடக்கம் விநாயக மூர்த்தி முரளிதரன், பிள்ளையான் வரை அரசியலில் ஈடுபடலாம் என்றால் இவர்களுக்கு அரசியலில் கிடைக்கக்கூடிய இடம், பெறப்படக்கூடிய இடம் என்ன?

தற்பொழுது உள்ள அரசாங்கத்திடம் இப்படியானவர்களின் செல்வாக்கு எடுபடுமா? நீங்கள் கூறிய யாவரும் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்து , அரசுகள் தோல்வியடைந்த பின்பு தமிழ்மக்களின் வாக்கு அரசியலுக்கு வந்தவர்கள்

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.