Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பந்துவீச்சாளர்களை சிதறடித்து ரி20இல் மிக இளம் வயதில் சதம் குவித்து சாதனை படைத்தார் 'குட்டிப் பையன்' வைபவ்

Published By: VISHNU

29 APR, 2025 | 01:47 AM

image

(நெவில் அன்தனி)

ஜெய்பூர் சவாய் மான்சிங் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸின் சர்வதேச பந்துவீச்சாளர்களை சிதறடித்து ஆடவர் ரி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் குவித்த வீரர் என்ற உலக சாதனையை வைபவ் சூரியவன்ஷி நிலைநாட்ட, ராஜஸ்தான் றோயல்ஸ் 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

4_2804_vybav_suriyavanshi_cheered_by_tea

தனது மூன்றாவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய 14 வயதான வைபவ் சூரியவன்ஷி, எதிரணிக்காக பந்துவீசிய மொஹமத் சிராஜ், வொஷிங்டன் சுந்தர், ராஷித் கான், கரிம் ஜனத் ஆகிய சர்வதேச பந்துவீச்சாளர்களை சுழற்றி, சுழற்றி அடித்து சதம் குவித்தார்.

2_2804_vaibav_suriyavanshi.png

17 பந்துகளில் அரைச் சதம் குவித்ததன் மூலமும் 35 பந்துகளில் சதம் குவித்ததன் மூலமும் ஆடவர் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் மிக   இளம்  வயதில் வேகமாக அரைச் சதத்தையும் சதத்தையும் குவித்தவர் என்ற சாதனைகளை வைபவ் நிலைநாட்டினார்.

அப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 210 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 15.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீட்டியது.

குஜராத் டைட்டன்ஸின் மோசமான பந்துவீச்சும் மோசமான களத்தடுப்பும் அதன் தோல்விக்கு காரணமாகின.

சாதனை வீரர் வைபவ் சூரியவன்ஷி, யஷஸ்வி ஜய்ஸ்வால் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 71 பந்துகளில் 166 ஓட்டங்களைப் பகிர்ந்து மிகவும் பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

38 பந்துகளை எதிர்கொண்ட வைபவ் சூரியவன்ஷி 7 பவுண்டறிகள், 11 சிக்ஸ்களுடன் 101 ஓட்டங்களைக் குவித்து முதலாவதாக ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து நிட்டிஷ் ரானா 4 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து யஷஸ்வி ஜய்ஸ்வால், அணித் தலைவர் ரியான் பரக் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கை அடைய உதவினர்.

யஷஸ்வி ஜய்ஸ்வால் 40 பந்துகளில் 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 70 ஓட்டங்களுடனும் ரியான் பரக் 15 பந்துகளில் 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 209 ஓட்டங்களைக் குவித்தது.

சாய் சுதர்சன், அணித் தலைவர் ஷுப்மான் கில் ஆகிய இருவரும் 62 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

சாய் சுதர்சன் 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் ஜோடி சேர்ந்த ஷுப்மான் கில், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.

ஷுப்மான் கில் 50 பந்துகளில் 84 ஓட்டங்களையும் ஜொஸ் பட்லர் 26 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆனால், அவர்களது முயற்சிகள் அனைத்தும் இறுதியில் வீண் போயின.

ஆட்டநாயகன்: வைபவ் சூரியவன்ஷி

https://www.virakesari.lk/article/213206

  • Replies 114
  • Views 4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    டூ பிலஸ்சிய‌ விட‌  தென் ஆபிரிக்காவில் ந‌ல்ல‌ இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ளை ஏல‌த்தில் எடுக்க‌லாம்   40வ‌ய‌தை தாண்டின‌வ‌ர்க‌ள் ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம் இள‌ம் வீர‌ர்க‌ளுக்க

  • ஏராளன்
    ஏராளன்

    சுனில் நரைன் பேட்டால் ஸ்டம்பை உரசியும் கூட அவுட் கொடுக்கப்படாதது ஏன்? முதல் ஆட்டத்திலேயே சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்க

  • ஏராளன்
    ஏராளன்

    ஒரேபோட்டியில் குவிக்கப்பட்ட 528 ரன்கள் ! இஷான் கிஷன் சதத்துடன் ஹைதராபாத் அமர்க்கள ஆரம்பம் பட மூலாதாரம்,SUNRISERSHYDERABAD/X PAGE படக்குறிப்பு, 45 பந்துகளில் முதல் ஐபிஎல் சதத்தை அடித்தார் இஷான் கிஷன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைபவ் சூர்யவன்ஷி: 14 வயதில் உலக கிரிக்கெட்டை திரும்பிப் பார்க்க வைத்த விவசாயி மகன்

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி வாங்கப்படும்போது அவருக்கு 13 வயதுதான்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

வைபவ் சூர்யவன்ஷி. 14 வயது 23 நாட்களில் ஐபிஎல் டி20 தொடரில் அறிமுகம், தான் சந்தித்த முதல் பந்திலேயே சர்வதேச பந்துவீச்சாளரான ஷர்துல் தாக்கூரின் பந்தில் சிக்ஸர், முதல் ஆட்டத்தில் சேர்த்த 34 ரன்களில் 26 ரன்கள் சிக்ஸர், பவுண்டரிகளாக சேர்த்து ஆட்டமிழந்தபோது கண்ணீருடன் பெவிலியன் நோக்கிச் சென்றார் அந்தச் சிறுவன்.

ஆனால் நேற்று (ஏப்ரல் 28) 17 பந்துகளில் அரைசதம், 35 பந்துகளில் சதம் அடித்து ஐபிஎல் தொடரில் உச்சம் தொட்டு ஆட்டமிழந்தபோது, எதிரணி வீரர்கள் (குஜராத் டைட்டன்ஸ்) அனைவரும் கை கொடுத்து, தலையிலும், தோளிலும் தட்டிக் கொடுத்து வழியனுப்பினர். அரங்கமே எழுந்து நின்று கரகோஷத்தோடு அந்தச் சிறுவனுக்கு வரவேற்பு கொடுத்தது.

13 வயதில் ஐபிஎல் அறிமுகம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.10 கோடிக்கு போட்டி போட்டு வாங்கப்பட்ட சூர்யவன்ஷிக்கு அடிப்படை விலையாக ரூ.35 லட்சம்தான் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவரின் பேட்டிங் திறமையைப் பார்த்து டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் போட்டியிட்டபோது ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் வாங்கியது.

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த வருடம் துபையில் நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூர்யவன்ஷி

ஐபிஎல் ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி வாங்கப்படும்போது அவருக்கு 13 வயதுதான். 13 வயது சிறுவனை ஏலத்தில் எடுத்து ராஜஸ்தான் அணி என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி பலதரப்பிலும் எழுந்தது.

ஆனால், 13 வயது சிறுவன் சூர்யவன்ஷிக்கு இப்படியொரு அபாரமான பேட்டிங் திறமை ஒளிந்திருப்பதைக் கண்டறிந்து அவரைக் காத்திருந்து தூக்கியது ராஜஸ்தான் அணி.

உலக கிரிக்கெட்டின் கவனம்

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கை 15.5 ஓவர்களில் சேஸ் செய்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் சூர்யவன்ஷியின் மிரட்டலான சதம்தான்.

ஜெய்ஸ்வாலுடன் முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்தபோதே ஏறக்குறைய ராஜஸ்தான் வெற்றியை உறுதி செய்து கொடுத்துவிட்டு 38 பந்துகளில் 101 ரன்கள் (11 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) எடுத்து சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். 265 ஸ்ட்ரைக் ரேட்டில் சூர்யவன்ஷி பேட் செய்தார்.

சூர்யவன்ஷி நேற்றைய ஒரே ஆட்டத்தில் உலக கிரிக்கெட்டின் கவனத்தைத் தன்மீது குவியச் செய்துவிட்டார். உலகளவில் விளையாடப்படும் டி20 லீக் தொடர்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானது. அதில் 14 வயது சிறுவன் 35 பந்துகளில் அடித்த சதம் உலக கிரிக்கெட்டை ஈர்த்துள்ளது.

வின்டேஜ் நினைவுகள்

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டி20 போட்டியில் மிக இளம் வயதில் 50 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி பெற்றார்

சர்வதேச அளவில் 100 டெஸ்ட்களுக்கும் மேல் ஆடிய அனுபவமுள்ள இஷாந்த் ஷர்மா ஓவரில் 28 ரன்கள், ஆப்கானிஸ்தான் வீரர் கரீம் ஜனத் (நேற்றுதான் அறிமுகமானார்) ஓவரில் 30 ரன்கள் மற்றும் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ரஷித் கான் ஓவரில் பெரிய சிக்ஸரை விளாசித்தான் சூர்யவன்ஷி சதத்தையே எட்டினார்.

குஜராத் அணியின் 7 சர்வதேச பந்துவீச்சாளர்களையும் சூர்யவன்ஷி ஓடவிட்டு அவருக்கு யார் பந்துவீசுவது என்ற குழப்பத்தை ஏற்படுத்தினார்.

வின்டேஜ் மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்களின் பேட்டிங்கை பார்த்த நினைவுகளும், பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் அப்துல் காதிரின் பந்துவீச்சை சச்சின் டெண்டுல்கர் இளம் வயதில் வெளுத்த நினைவுகளும் நேற்று சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்தபோது ஏற்பட்டது.

வைபவ் சூர்யவன்ஷி டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 தொடரிலும் ஏராளமான சாதனைகளைச் செய்துள்ளார்.

சூர்யவன்ஷியின் சாதனைகள்

உலக டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் 14 வயது 32 நாட்களில், 35 பந்துகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் விஜய் ஜோல் (18 வயது, 118 நாட்கள்) வைத்திருந்த சாதனையையும் சூர்யவன்ஷி முறியடித்தார்.

ஐபிஎல் தொடரில் அதிவிரைவாகவும், இளம் வயதிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் யூசுப் பதான் 37 பந்துகளில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 2010இல் சதம் அடித்திருந்தார். அதையும் அவர் தற்போது முறியடித்துள்ளார்.

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிஎல் டி20 தொடரில் அதிவேகமாக சதம் அடித்த வகையில் கிறிஸ் கெயிலுக்கு (30 பந்துகள்) அடுத்ததாக 35 பந்துகளில் சதம் அடித்த 2வது வீரராக சூர்யவன்ஷி இடம் பெற்றார்.

டி20 போட்டியில் மிக இளம் வயதில் 50 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி பெற்றார். இதற்கு முன் ஆப்கன் வீரர் முகமது நபியின் மகன் ஹசன் இஷகில் 15 வயது 360 நாட்களில் அரைசதம் அடித்திருந்ததுதான் சாதனையாக இருந்தது.

சூரியவன்ஷி 17 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் ராஜஸ்தான் அணிக்காக அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

சூர்யவன்ஷி நேற்றைய ஐபிஎல் (ஏப்ரல் 28) ஆட்டத்தில் மட்டும் 11 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் ஐபிஎல் டி20 தொடரில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய தமிழக வீரர் முரளி விஜயின் சாதனையைச் சமன் செய்தார். சூர்யவன்ஷி நேற்று அடித்த சதத்தில் 93 சதவீத ரன்கள் பவுண்டரி, சிக்ஸர் மூலமே கிடைத்தன.

ஐபிஎல் தொடரில் இளம் வயதில் சதம் அடித்த வீரர்களில் 4வது வீரராக வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றார். இளம் வயதில் சதம் அடித்தவர்களில் மணிஷ் பாண்டே (19 வயது, 253 நாட்கள்), ரிஷப் பந்த் (20 வயது 218 நாட்கள்), தேவ்தத் படிக்கல் (20 வயது 289 நாட்கள்) இவர்கள் வரிசையில் சூர்யவன்ஷி உள்ளார்.

யார் இந்த சூர்யவன்ஷி?

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி

பிகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் இருந்து 100 கி.மீ தொலைவில் இருக்கும் சமஸ்திபூர் மாவட்டத்தில் மோதிபூர் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் வைபவ் சூர்யவன்ஷி.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி சூர்யவன்ஷி பிறந்தார். இவரின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி ஒரு விவசாயி. தனது மகனின் கிரிக்கெட் கனவுக்காகத் தனக்கு இருந்த நிலத்தையும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விற்று, அந்தக் கனவுகளை நனவாக்க உழைத்தவர்.

சஞ்சீவ் சூர்யவன்ஷி பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "சூர்யவன்ஷி என் மகன் மட்டுமல்ல, பிகார் மாநிலத்தின் மகன். என் மகன் கடினமான உழைப்பாளி, 8 வயதிலேயே கிரிக்கெட் மீது தீவிரமாக இருந்தார்.

எட்டு வயதிலேயே மாவட்ட அளவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிக்கு சூர்யவன்ஷி தேர்வானார். 12 வயதிலேயே ரஞ்சிக் கோப்பையில் ஆடினார். என் மகனின் கனவை நனவாக்க என் நிலத்தையே விற்றேன்" என்று தெரிவித்தார்.

விவிஎஸ் லட்சுமண், திராவிட் பார்வை

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,'ஐபிஎல் தொடரில் ராகுல் திராவிட் தலைமையின் கீழ் சென்ற பிறகு சூர்யவன்ஷியின் பேட்டிங் திறமை பன்மடங்கு மெருகேறியது'

கடந்த 2023-24 ரஞ்சிக் கோப்பை தொடரில் பிகார் அணிக்காக 12 வயது 284 நாட்கள் ஆகியிருந்தபோது வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகி விளையாடினார். வினூமன்கட் கோப்பையில் பங்கேற்ற சூர்யவன்ஷி 5 இன்னிங்ஸ்களில் 96 ரன்களை விளாசினார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான சாலஞ்சர் முத்தரப்பு தொடரில் இங்கிலாந்து, வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானார்.

இந்தத் தொடர்தான் சூர்யவன்ஷியை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தத் தொடரில் சூர்யவன்ஷியின் ஆட்டத்தைப் பார்த்து விவிஎஸ் லட்சுமண் மெய்சிலிர்த்துப் போனார்.

அதன் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 19 வயதுக்கு உட்பட்டோர் 4 நாட்கள் ஆட்டத்தில் 58 பந்துகளில் சூர்யவன்ஷி அடித்த சதம், ராஜஸ்தான் அணியைக் காந்தம் போல் ஈர்த்தது. இந்த ஆட்டத்துக்குப் பிறகு சூர்யவன்ஷியை எப்படியாவது ஐபிஎல் ஏலத்தில் வாங்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு இறங்கி, இவரை வாங்கியது ராஜஸ்தான் அணி.

ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் திராவிட்டிடம் வைபவ் சூர்யவன்ஷியின் திறமையைக் கூறி அவரை ஏலத்தில் எடுக்கக் கோரியது விவிஎஸ் லட்சுமண்தான்.

சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுத்த பிறகு ராஜஸ்தான் அணியின் தலைமை செயல் அதிகாரி ஜேக் லஷ் மெக்ரம் கூறுகையில், "நாக்பூரில் உள்ள எங்கள் உயர் பயிற்சி மையத்துக்கு சூர்யவன்ஷியை அனுப்புகிறோம். அங்கு எங்களுடைய பயிற்சி அவரை மேலும் சிறப்பாக்கும்.

சூர்யவன்ஷி அற்புதமான திறமை கொண்டவர், அவரைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, ஐபிஎல் விளையாட நம்பிக்கையளிக்க வேண்டும். வரும் மாதங்களில் சூர்யவன்ஷிக்கு தீவிரமான பயிற்சியளிப்போம். அவரது திறமையை மெருகேற்றுவோம். எங்கள் அணிக்கு சூர்யவன்ஷி வந்தது உற்சாகமளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

விவிஎஸ் லட்சமணின் பரிந்துரை

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சூர்யவன்ஷி நேற்றைய ஐபிஎல் (ஏப்ரல் 28) ஆட்டத்தில் மட்டும் 11 சிக்ஸர்களை விளாசினார்

வைபவ் சூர்யவன்ஷியின் பயிற்சியாளர் மனோஜ் ஓஜா ஸ்போர்ட்ஸ்டார் தளத்துக்கு அளித்த பேட்டியில், "வைபவ் சூர்யவன்ஷி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான முத்தரப்புத் தொடரில் விளையாடியபோது அவரது ஆட்டத்தைப் பார்த்த விவிஎஸ் லட்சுமண் மெய்சிலிர்த்துவிட்டார். அவர்தான் ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் திராவிட்டிடம் கூறி ஏலத்தில் சூர்யவன்ஷியை எடுக்குமாறு பரிந்துரைத்தார். முதல் ஆட்டத்தில் 36 ரன்களில் சூர்யவன்ஷி ஆட்டமிழந்து வந்தபோது அழுதுகொண்டே பெவிலியன் திரும்பினார்.

இதைப் பார்த்த விவிஎஸ் லட்சுமண், சூர்யவன்ஷியியிடம் சென்று அழுகையைத் தேற்றிவிட்டு, இங்கு யாரும் உன்னுடைய ரன்களை பார்க்கவில்லை, நீண்டகாலத்திற்கு விளையாடக்கூடிய ஒரு வீரரின் திறமையைப் பார்க்கிறார்கள் என்றார்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "சூர்யவன்ஷியின் திறமையை விரைவாக லட்சுமண் புரிந்துகொண்டார், பிசிசிஐ அமைப்பும் சூர்யவன்ஷிக்கு ஆதரவு அளித்தது. சூர்யவன்ஷியின் தந்தை ஒரு விவசாயி. மகனின் கிரிக்கெட் பயிற்சிக்காக தினமும் என் பயிற்சி மையத்துக்கு அழைத்து வருவார்.

காலை 7.30 மணிக்கு பயிற்சியைத் தொடங்கும் வைபவ், மாலை வரை தொடர்ந்து பேட்டிங்கில் ஈடுபடுவார். கடந்த 4 ஆண்டுகளாக சூர்யவன்ஷிக்கு பயிற்சி அளித்து வருகிறேன். சூர்யவன்ஷியின் எதிர்காலத்துக்காக பெற்றோர் அதிக தியாகம் செய்துள்ளனர்.

சூர்யவன்ஷியின் தாயார் அதிகாலை 4 மணிக்கு எழுந்து உணவு தயாரித்துக் கொடுத்த அனுப்புவார். எங்கு போட்டி நடந்தாலும் சூர்யவன்ஷியுடன் அவரின் தந்தையும் வருவார். சூர்யவன்ஷி தந்தையும் கிரிக்கெட் விளையாட விரும்பினார். அவரின் காலத்தில் குடும்பச் சூழலால் முடியவில்லை, தனது கனவை மகன் மூலம் நிறைவேற்றினார்" என்று கூறினார்.

'சூர்யவன்ஷியை ஒரு கட்டத்தில் மறுத்த பிசிசிஐ'

ஐபிஎல், பிசிசிஐ, சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ், கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"பிகார் மாநிலத்தில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்குச் சரியான ஆதரவு இருக்காது என்பது தெரியும். இதனால் பிசிசிஐ அமைப்பும் ஒரு கட்டத்தில் இவரைக் கவனிக்க மறந்துவிட்டது, சூர்யவன்ஷிக்கு இது அதிர்ச்சியாக இருந்தது" என்று கூறியுள்ளார் அவரது பயிற்சியாளர் மனோஜ் ஓஜா.

"இதனால் உடனடியாக சூர்யவன்ஷியை வேறு மாநிலத்துக்கு விளையாட வைக்க முடிவு செய்தேன். பல மாநிலங்களில் ரஞ்சி அணியை அணுகி சூர்யவன்ஷிக்காக வாய்ப்பு தேடினேன். வேறு மாநிலத்துக்காக சூர்யவன்ஷி ஆடினால் நிச்சயம் பார்க்கப்படுவார், வளர்க்கப்படுவார், ஆதரவு கிடைக்கும் என நம்பினேன்.

ஐபிஎல் தொடரில் ராகுல் திராவிட் தலைமையின் கீழ் சென்ற பிறகு சூர்யவன்ஷியின் பேட்டிங் திறமை பன்மடங்கு மெருகேறியது. சிறப்பான பயிற்சியை திராவிட் அளித்து வருகிறார். சக வீரர்களும் சூர்யவன்ஷியை உற்சாகப்படுத்துகிறார்கள். நிச்சயமாக சூர்யவன்ஷிக்கு இது புதிய அனுபவமாக இருக்கும். விவிஎஸ் லட்சமணுடன் சந்திப்பு, ராகுல் திராவிட் பயிற்சி சூர்யவன்ஷிக்கு பெரிய எதிர்காலத்தை அளித்துள்ளது" எனத் தெரிவித்தார்.

அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள்

இன்றைய ஆட்டம்

  • டெல்லி கேபிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • இடம்: டெல்லி

  • நேரம்: இரவு 7.30

  • சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம்

சிஎஸ்கே-வின் அடுத்த ஆட்டம்

  • சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

  • நாள் - ஏப்ரல் 30

  • இடம் – சென்னை

  • நேரம்- இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

  • நாள் – மே 1

  • இடம் – ஜெய்பூர்

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs சிஎஸ்கே

  • நாள் – மே 3

  • இடம் – பெங்களூரு

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

  • சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)- 456 ரன்கள் (9 போட்டிகள்)

  • விராட் கோலி (ஆர்சிபி) 443 ரன்கள் (9 போட்டிகள்)

  • சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) 427 (10 போட்டிகள்)

நீலத் தொப்பி

  • ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள் (10 போட்டிகள்)

  • பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 17 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)

  • நூர் அகமது (சிஎஸ்கே) 14 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cy8ed10jrymo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா - ஆபத்பாந்தவனாக வழிநடத்திய சுனில் நரைன்

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்த கொல்கத்தா - ஆபத்பாந்தவனாக வழிநடத்திய சுனில் நரைன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் வழக்கமான கேப்டன் ரஹானேவுக்கு நேற்று காயம் ஏற்பட்டதால், சுனில் நரைன் கேப்டன் பொறுப்பேற்றுச் செயல்பட்டு வெற்றி பெற்றுக் கொடுத்து ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளார்.

கொல்கத்தா அணியில் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்டு துணைக் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்ட வெங்கேடஷ் அய்யர் இருந்தபோதிலும் அவரை அணியை வழிநடத்த வைக்காமல் ரூ.12 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட சுனில் நரைன் அணியை வழிநடத்த அனுப்பப்பட்டார்.

கொல்கத்தாவின் ஆபத்பாந்தவன்

கொல்கத்தா அணிக்கு ஆபத்பாந்தவனாக இருக்கும் சுனில் நரைன் இந்த முறையும் பந்துவீச்சாளராக, பேட்டராக, கேப்டனாக இருந்து சிறப்பாகச் செயல்பட்டு, அணியை வழிநடத்தினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், சுனில் நரைனுக்கும் இடையிலான உறவு 13 ஆண்டுகளாகத் தொடர்கிறது. ஐபிஎல் டி20 தொடரில் ஒரு குறிப்பிட்ட அணியுடன் நெருக்கமான உறவு வைத்து அதிலேயே தொடர்ந்து வருவது மிகச் சில வீரர்கள் மட்டுமே.

அந்த வகையில் சிஎஸ்கே தோனி, ஆர்சிபி விராட் கோலி ஆகிய இருவருக்குப் பின் கொல்கத்தா அணியில் நீண்டகாலம் விளையாடி வருபவர், தொடர்ந்து தக்கவைத்து வருபவர் சுனில் நரைன் மட்டும்தான்.

கொல்கத்தா அணி பல வீரர்களை ஏலத்தில் எடுத்தாலும், விடுவித்தாலும் சுனில் நரைனை மட்டும் விடுவிக்கவில்லை, அவரின் திறமைக்கான தொகையைக் கொடுத்து தொடர்ந்து 13வது ஆண்டாகத் தக்க வைத்துள்ளது.

ரூ.12 கோடிக்கு தக்கவைப்பு

இதற்கு முன் ரூ.6 கோடிக்குத்தான் சுனில் நரைனை கொல்கத்தா நிர்வாகம் தக்க வைத்திருந்து. ஆனால் பந்துவீச்சு, பேட்டிங்கில் சில ஆண்டுகளாக நரைன் பங்களிப்பு பிரமாதமாக இருந்து வந்தது.

கடந்த 2024 சாம்பியன் பட்டம் வெல்லக் காரணமானவர்களில் ஒருவராக நரைன் இருந்ததைத் தொடர்ந்து, ஏலத்தில் ரூ.12 கோடிக்கு தக்க வைத்தது கொல்கத்தா அணி நிர்வாகம்.

நரைனுக்கு தற்போது 36 வயதானாலும், வயதைப் பொருட்டாகக் கொள்ளாமல் கொல்கத்தா அணி தொடர்ந்து அவரைத் தக்கவைத்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் அதிரடியான தொடக்க பேட்டிங்கிற்கும், நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியைத் தனது சுழற்பந்துவீச்சால் திணற வைப்பதற்கும் சுனில் நரைனுக்கு நிகர் அவர்தான்.

சுனில் நரைன், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொல்கத்தா அணிக்காக 186 போட்டிகளில் ஆடியுள்ளார் சுனில் நரைன்

பேட்டர் அவதாரம்

இத்தனைக்கும் சுனில் நரைன் சிறந்த பேட்டரெல்லாம் கிடையாது. 2017ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஐபிஎல் தொடரில் சுனில் கீழ்வரிசையில் களமிறங்கக்கூடிய வீரராகத்தான் இருந்தார். அவர் கரீபியன் டி20 லீக்கில் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்த கொல்கத்தா நிர்வாகம் ஏன் தொடக்க வீரராகக் களமிறக்கக்கூடாது என யோசித்து அவரை 2017இல் இருந்து தொடக்க வீரராகப் பயன்படுத்தியது.

சுனில் நரேனை தொடக்க வீரராகப் பயன்படுத்தும் கொல்கத்தா அணியின் முடிவைப் பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். வர்ணனையாளர்கள் கிண்டல் செய்துள்ளனர். ஆனால் தனது முடிவில் இருந்து கொல்கத்தா நிர்வாகம் பின் வாங்கவில்லை.

பல போட்டிகளில் சுனில் நரைன் சொதப்பலாக பேட் செய்தாலும், சில போட்டிகளில் சுனில் நரைன் பேட்டிங் கொல்கத்தா அணிக்கு பிரமாண்ட வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

சுனில் நரைன், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், சுனில் நரைனுக்கும் இடையிலான உறவு 13 ஆண்டுகளாகத் தொடர்கிறது (2012இல் எடுக்கப்பட்ட படம்)

கொல்கத்தா அணிக்கு கெளதம் கம்பீர் பயிற்சியாளராகச் சென்ற பிறகுதான் நரைனின் பேட்டிங் மெருகேறியது. நரைன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து அவரைத் தொடக்க வீரராக கம்பீர் களமிறக்கினார்.

சுனில் நரைன் ஒரு பேட்டியில், "ஜிஜி (கெளதம் கம்பீர்) மீண்டும் அணிக்குள் வாருங்கள். உங்களால்தான் நான் பேட்டிங்கில் முழு நம்பிக்கை பெற்றேன். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க முடியும், சிறப்பாக ஆட முடியும் என்பதை அறிந்தேன்" எனக் கூறியிருந்தார்.

அதன் பிறகு கொல்கத்தா அணியில் நிரந்த தொடக்க ஆட்டக்காரராகவே சுனில் நரைன் மாறிவிட்டார். கொல்கத்தா அணிக்காக 186 போட்டிகளில் ஆடியுள்ள சுனில் நரைன், ஒரு சதம், 7 அரைசதங்கள் என 1712 ரன்கள் சேர்த்து 17 சராசரியும், 166 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார்.

பந்துவீச்சில் 190 விக்கெட்டுகளை கொல்கத்தா அணிக்காக மட்டுமே நரைன் வீழ்த்தியுள்ளார், 6.77 ரன்கள் எக்கானமி வைத்துள்ளார்.

அறிமுகமே அசத்தல்

சுனில் நரைன், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொல்கத்தா அணிக்கு கெளதம் கம்பீர் பயிற்சியாளராகச் சென்ற பிறகுதான் நரைனின் பேட்டிங் மெருகேறியது

கடந்த 2012 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணியில் அறிமுகமான சுனில் நரைன் 15 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி, முதல் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 2வது முறையாக கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்லும் அணியிலும் 16 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி நரைன் முக்கியப் பங்காற்றினார். 2012 முதல் 2014 வரை 3 சீசன்களிலும் நரைன் 20 விக்கெட்டுகளுக்கு அதிகமாக வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

அறிமுகத்தில் நரைன் எவ்வாறு பந்து வீசினாரோ அதே தரத்தில், அதே எக்கானமியில் தொடர்ந்து பந்துவீசி வருகிறார்.

ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் விக்கெட் வீழ்த்தியவுடன் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்பார்கள், துள்ளிக் குதிப்பார்கள், பம்பிங் செய்வார்கள்.

ஆனால், சுனில் நரைன் விக்கெட் வீழ்த்தினாலும் சரி, வீழ்த்தாவிட்டாலும் சரி ஒரே மாதிரியாகவே முகத்தை வைத்திருப்பார். விக்கெட் வீழ்த்திவிட்டேன் என்று களத்தில் ஒருமுறைகூட மகிழ்ச்சியை அதிகப்படியாக வெளிப்படுத்தாத அமைதியான வீரர்.

மாறாத நிலைத்தன்மை

சுனில் நரைன், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த சீசனில் (2024) 15 போட்டிகளில் ஆடிய நரைன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்

பந்துவீச்சாளராக அறிமுகமான சுனில் நரைன் கடந்த 13 ஆண்டுகளாக தனது நிலைத்தன்மையை வெளிப்படுத்தி வருகிறார். பவர்ப்ளேவில் பந்து வீசினாலும், நடுப்பகுதி ஓவர்களில் பந்து வீசினாலும் பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாகவே நரைன் பந்துவீச்சு இருக்கும்.

சுனில் நரைன் தனது 13 ஆண்டுகால ஐபிஎல் வாழ்க்கையில் பந்துவீச்சு சராசரி என்பது சராசரியாக 6 ரன்களை கடக்கவில்லை, சில சீசன்களில் மட்டும் 7 ரன்ரேட் சென்றுள்ளது. ஆனால் தொடக்கத்தில் 5 ரன்ரேட்டில் பந்துவீசி பேட்டர்களை திணறவிட்ட நரேன் பின்னர் சில சீசன்களில் பின்தங்கினார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகத் தனது பந்துவீச்சு எக்கானமியை சராசரியாக 6 ரன்களில் பராமரித்து வருகிறார். ஐபிஎல் டி20 போட்டிகளில் ஒரு சுழற்பந்துவீச்சாளர் எக்கானமியை 6 என 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பராமரித்து வருவது வியப்புக்குரியது.

கொல்கத்தா அணியில் இளம் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் எழுச்சி, ஹர்சித் ராணா வருகை, ரஸலின் விக்கெட் வீழ்த்தும் திறமை, ஸ்டார்க் வருகை எனப் பலர் வந்தபோதிலும் சுனில் நரைன் பந்துவீச்சில் இருக்கும் துல்லியம், மிரட்டல், விக்கெட் வீழ்த்தும் திறன், நிலைத்தன்மை மாறவில்லை.

கடந்த சீசனில் 15 போட்டிகளில் ஆடிய நரைன் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார், பேட்டிங்கில் 488 ரன்கள் குவித்திருந்தார்.

கிரிக்கெட்டில் ஒரு பந்துவீச்சாளர் தனது வழக்கமான ஆக்ஷனை மாற்றிவிட்டால் முன்புபோல் சிறப்பாகப் பந்துவீசுவது கடினமாக இருந்துள்ளது. ஆனால், சுனில் நரைன் 2014ஆம் ஆண்டில் இருந்து தனது பந்துவீச்சு ஸ்டைலை பலமுறை மாற்றியுள்ளார், ஆனால் அவரின் நிலைத்தன்மை மட்டும் மாறவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன், கூக்ளி வீசுவது, பந்துவீச்சில் திடீரென வேகத்தைக் கூட்டுவது என நரைன் பந்துவீச்சில் பல உத்திகளைக் கையாள்வார்.

உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவர்

சுனில் நரைன், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுனில் நரேனை தொடக்க வீரராகப் பயன்படுத்தும் கொல்கத்தா அணியின் முடிவைப் பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்

இந்த ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வென்று ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்தது.

கொல்கத்தா அணி 204 ரன்கள் சேர்த்திருந்த போதிலும், அதை சேஸிங் செய்யும் முனைப்பில் டெல்லி அணி ஆடியது.

ஆட்டமும் டெல்லி பக்கம் சென்றது, சுனில் நரைன் ஒரே ஓவரில் அக்ஸர் படேல், டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் விக்கெட்டையும், அடுத்த ஓவரில் டூப்ளெஸ்ஸி விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றியை நோக்கி நகர்த்தினார். பேட்டிங்கில் 27 ரன்களையும், பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை நரைன் வென்றார்.

கொல்கத்தா அணி வெற்றி பெற்றதும், அங்குல் ராய், வருண், குர்பாஸ் என வீரர்கள் பலரும் உற்சாகத்தில் கிண்டல், கேலி செய்து விளையாடினர். ரஹானே, ரிங்கு சிங் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

ஆனால், பொறுப்பான கேப்டனாக செயல்பட்டு வெற்றியைப் பெற்றுத் தந்த சுனில் நரைன் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் தனியாக மைதானத்தில் ஓரத்தில் அமர்ந்திருந்தார்.

அணியை நரைன் வழிநடத்தியது ஏன்?

சுனில் நரைன், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொல்கத்தா அணியின் கேப்டன்சி வாய்ப்பு என்பது சீனியர் வீரரான நரைனுக்கு வழங்கப்பட்டது.

கொல்கத்தா அணியில் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்டு துணை கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்ட வெங்கேடஷ் அய்யர் களத்தில் இருந்தபோதிலும் அவரை அணியை வழிநடத்த அழைக்காமல் ரூ.12 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட சுனில் நரைனை அணியை வழிநடத்த அனுப்பப்பட்டார்.

ரஹானேவுக்கு 12வது ஓவரில் கையில் காயம் ஏற்பட்டதால் அவர் பெவிலியன் சென்றுவிட்டார். அடுத்தபடியாக அணியை வழி நடத்த ஒருவர் வேண்டும் என்பதால், வெங்கடேஷ் அய்யர் வராமல் நரேனிடம் பொறுப்பு வழங்கப்பட்டது வியப்பைக் கொடுத்தது.

வெங்கடேஷ் அய்யர் கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் தடுமாறியதால் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி அவரை இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கியது. அதிலும் சொதப்பிய வெங்கடேஷ் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இம்பாக்ட் வீரராக வருபவர் போட்டியில் முழுநேரம் விளையாட முடியாது.

கடின உழைப்பாளி

சுனில் நரைன், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொல்கத்தா கேப்டன் ரஹானே மற்றும் சுனில் நரைன்

சுனில் நரைன் குறித்து கொல்கத்தா கேப்டன் ரஹானே நேற்று (ஏப்ரல் 29) பேசுகையில், "நரைன் ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர். எப்போது நாங்கள் தடுமாற்றத்தில் இருந்தாலும் வீரர்களுக்கு ஆதரவாக இருப்பார். நரைன் கடினமான உழைப்பாளி, பயிற்சியின்போது அதிகாலையே வந்துவிடுவார், மணிக்கணக்கில் வலைப்பயிற்சியில் பந்து வீசக்கூடியவர்" எனத் தெரிவித்தார்.

உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல், ஜாலியாக இல்லாமல் இருக்கும் நரைன் குறித்து சில நேரங்களில் தவறான எண்ணங்கள் சக வீரர்களிடம் வந்தது உண்டு.

அதுகுறித்து ஆந்த்ரே ரஸல் நேற்று கூறுகையில், "நரைனுடன் நீண்ட கால பழக்கம் எனக்கு இருக்கிறது, அவரின் குணத்தையும், அமைதியான போக்கையும் பார்த்துப் பல வீரர்கள் தவறாக நினைத்துள்ளார்கள். நரைன் எப்போதுமே அமைதியானவர், சில சூழல்கள் அவருக்குச் சரியாக இல்லாவிட்டாலும் பேசமாட்டார்.

அதேவேளையில் களத்தில் அவர் போலச் சுறுசுறுப்பாக யாரும் செயல்பட முடியாது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக சக வீரர்களிடம் அதிகமாகப் பேசுகிறார், தன்னை வெளிப்படுத்துகிறார், போட்டியை ரசிக்கிறார்" எனத் தெரிவித்தார்.

அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள்

இன்றைய ஆட்டம்

  • சிஎஸ்கே vs பஞ்சாப் கிங்ஸ்

  • இடம்: சென்னை

  • நேரம்: இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

  • நாள் – மே 1

  • இடம் – ஜெய்பூர்

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs சிஎஸ்கே

  • நாள் – மே 3

  • இடம் – பெங்களூரு

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

  • சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)- 456 ரன்கள் (9 போட்டிகள்)

  • விராட் கோலி (ஆர்சிபி) 443 ரன்கள் (9 போட்டிகள்)

  • சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) 427 (10 போட்டிகள்)

நீலத் தொப்பி

  • ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள் (10 போட்டிகள்)

  • பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 17 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)

  • நூர் அகமது (சிஎஸ்கே) 14 விக்கெட்டுகள் (9 போட்டிகள்)

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce3vqvv4x59o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"ஏதேனும் ஒன்று குறையென்றால் சமாளிக்கலாம்" விரக்தியின் உச்சத்தில் தோனி - கவுரவரத்தை காப்பாற்றுமா சிஎஸ்கே

சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 30 ஏப்ரல் 2025, 08:40 GMT

"இதுபோன்ற டி20 தொடர்களில், ஏதாவது ஒரு சில குறைபாடுகள் இருந்தால் பரவாயில்லை, சமாளிக்கலாம். ஆனால் பெரும்பாலான வீரர்கள் நன்றாக விளையாடவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அணியில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த முறையிலேயே போட்டிகளை விளையாட முடியாது."

இவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பொறுமை இழந்து பேசிய வார்த்தைகள்.

சிஎஸ்கே அணி தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் டி20 தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறவுள்ளது. அதிலும் ஐபிஎல் சீசனின் நடுப்பகுதியிலேயே சிஎஸ்கே அணியின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை.

சிஎஸ்கே அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி, அதில் 2 வெற்றிகள் 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. அணியின் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.302 என்று மோசமாக இருக்கிறது.

ப்ளே ஆஃப் வாய்ப்பு?

சிஎஸ்கே அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மீதம் இருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிடலாம் என்று யோசித்து பார்க்க முடியாது.

இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால்கூட சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

எஞ்சியிருக்கும் 4 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி எதிர்காலத்துக்குத் தனது சிறந்த வீரர்கள் கலவையைப் பரிசீலிக்கலாம், இளம் வீரர்களுக்கான வாய்ப்பு, அவர்களின் திறமையைக் கண்டறியும் களமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோட்டையில் வீழ்த்தப்பட்ட சிஎஸ்கே

சென்னை சேப்பாக்கம் என்பது சிஎஸ்கே அணியின் கோட்டையாகக் கருதப்பட்டது. இதுவரை சேப்பாக்கத்தில் நடந்த 76 ஐபிஎல் போட்டிகளில் 51 ஆட்டங்களில் வென்று சிஎஸ்கே அணி தன்னை ராஜாவாக நிலைநிறுத்திக் கொண்டிருந்தது. கடந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடந்த 7 போட்டிகளில் 5 ஆட்டங்களில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

ஆனால் இந்த சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே வெற்றியுடன் தொடங்கினாலும், அதன்பின் அடிக்கு மேல் அடி என சிஎஸ்கே அணியை மீண்டெழ விடாமல் விழுந்தது. ஆர்சிபி அணிக்கு எதிராக 17ஆண்டுகளில் முதல்முறையாக சென்னையில் சிஎஸ்கே தோற்றது.

கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக டெல்லி கேபிடல்ஸ் அணியிடமும் சென்னையில் சிஎஸ்கே தோற்றது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் இதுவரை இல்லாத வகையில் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது.

சன்ரைசர்ஸ் அணி சென்னையில் சிஎஸ்கே அணிக்கு எதிராக இதற்கு முன் 5 முறை மோதியும் ஒரு ஆட்டத்தில்கூட வென்றதில்லை. முதல் முறையாக சிஎஸ்கே அணியை அதன் கோட்டையான சென்னையில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது.

கடந்த 13 ஆண்டுகளில் முதல்முறையாக சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சிஎஸ்கே சந்தித்துள்ளது.

சேப்பாக்கத்திலேயே சிஎஸ்கே தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தது ரசிகர்களுக்குப் பெரிய வருத்தத்தையும், ஆதங்கத்தையும் அளித்து வருகிறது. சிஎஸ்கே போட்டி என்றால் டிக்கெட் கிடைக்காத நிலை இருந்த காலத்தில், இப்போது சிஎஸ்கே போட்டிக்கு டிக்கெட் விற்பனை மந்தமாக இருக்கும் நிலை வந்துவிட்டது.

தோல்விக்கான காரணங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே அணியின் படுமோசமான தோல்விகளுக்கு அணி வீரர்கள் தேர்வு, வீரர்களின் செயல்பாடு, பெரிய தொகை வீரர்களைத் தக்க வைப்பதில் தேக்கம், புதிய வீரர்களைத் தேர்ந்தெடுத்தும் வாய்ப்பு வழங்காதது, புதிதாக எதையும் பரிசோதிக்காதது எனப் பல அம்சங்கள் சொல்லப்படுகின்றன.

சிஎஸ்கே அணி இந்த சீசனில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால், இதுவரை தொடக்க ஆட்டக்காரர்களாக நிலையாக எந்த வீரரையும் களமிறக்கவில்லை. ரச்சின் ரவீந்திரா, கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், திரிபாதி, ரஷீத் எனப் பல வீரர்களை முயன்றும் கை கொடுக்கவில்லை.

அது மட்டுமின்றி தொடக்க ஜோடி குறைந்தபட்சம் பவர்ப்ளே ஓவர்கள் வரைகூட விக்கெட்டுகளை இழக்காமல் விளையாட வேண்டும். ஆனால், கடந்த 9 போட்டிகளில் 2 போட்டிகளைத் தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் பவர்ப்ளேவில் சிஎஸ்கே விக்கெட்டுகளை இழந்து, பவர்ப்ளே-ஐ சரியாகப் பயன்படுத்தத் தவறியுள்ளது.

வலுவில்லாத நடுவரிசை

நடுவரிசைக்கென வீரர்களை ஏலத்தில் சிஎஸ்கே அணி தேர்வு செய்தாலும் அந்த வீரர்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. குறிப்பாக தீபக் ஹூடா, சாம் கரன், விஜய் சங்கர், ஜடேஜா, ஷிவம் துபே என யாரும் நடுவரிசையில் எதிர்பார்த்த ஆட்டத்தை வழங்கவில்லை.

நடுப்பகுதி ஓவர்களில்தான் ஸ்கோரை உயர்த்த முடியும். ஆனால், சிஎஸ்கே அணி நடுப்பகுதி ஓவர்களில் படுமந்தமாக ஆடியது, ஷிவம் துபே என்ற பெரிய ஹிட்டரை நம்பி மட்டுமே நடுப்பகுதியில் சிஎஸ்கே சவாரி செய்தது.

ஆனால் ஷிவம் துபே பெரிய ஹிட்டர் என்றாலும், சிறந்த பேட்டர் என்று ஏற்க முடியாது. நின்ற இடத்தில் இருந்துதான் சிக்ஸர், பவுண்டரியை துபே அடிப்பாரே தவிர கால்களை நகர்த்தி, மைதானத்தின் நான்கு புறங்களிலும் ஷாட்களை அடிக்கும் வல்லமையான பேட்டர் இல்லை.

வெற்றிக்கான எண்ணம் இல்லை

சிஎஸ்கே வீரர்கள் தன்னம்பிக்கையற்றுக் காணப்படுகிறார்கள். சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடக்கும் ஆட்டத்தில்கூட வெற்றிக்கான தருணம் எது என்பதைக் கண்டறிந்து அதைக் கைப்பற்றும் விழிப்புணர்வுகூட இல்லாமல் அணி வீரர்கள் இருப்பது கவலைக்குரியது.

பேட்டர்களின் ஷாட் தேர்வு இந்த சீசனில் மிகவும் மோசமாக இருந்தது. எந்தப் பந்தில் எந்த ஷாட்களை ஆட வேண்டும் என்ற தீர்க்கமான முடிவு இல்லாமல் களத்துக்கு வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முயன்று சிஎஸ்கே வீரர்கள் ஆட்டமிழப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

நடுப்பகுதி ஓவர்களில் பார்ட்னர்ஷிப்களை அமைப்பது வெற்றிக்குப் பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே அணி ஆடிய 9 போட்டிகளில் ஒரு பார்ட்னர்ஷிப்கூட 100 ரன்களை கடக்கவில்லை.

ஃபீல்டிங் பிரச்னை

சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஸ்கே அணி இந்த சீசனில் ஃபீல்டிங்கிலும் சரி, கேட்சுகளிலும் சரி கையில் வெண்ணையைத் தடவிக்கொண்டு செயல்படுவதுபோல் இருந்தது. கடந்த 8 போட்டிகளில் 27 கேட்சுகளை சிஎஸ்கே வீரர்கள் பிடித்துள்ளனர். 16 கேட்சுகளை தவறவிட்டுள்ளனர். 13 ரன்அவுட்களை தவறவிட்டுள்ளனர், 26 முறை ஃபீல்டிங்கை சரியாகச் செய்யாமல் கோட்டைவிட்டுள்ளனர்.

ஐபிஎல் அணிகளில் 9 அணிகளின் கேட்ச் திறன் குறைந்தபட்சம் 70 சதவிகிதத்திற்கு அதிகமாக இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணியின் கேட்ச் திறன் 62 சதவீதத்தைக்கூட தாண்டவில்லை.

சிஎஸ்கே அணியின் மோசமான தோல்விகளுக்கு மேற்கூறியவை காரணிகளாக இருந்தாலும், சரியான வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்திருந்தால் குறைந்தபட்சம் சொந்த மண்ணில் நடக்கும் போட்டிகளிலாவது வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் அணி விமர்சிக்கப்படுகிறது.

சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் "சிஎஸ்கே அணி ஏலத்தில் வீரர்களை எடுத்த முறையே தவறு. கடந்த காலத்தில் ஏலத்தின்போது சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி நேரடியாகப் பங்கேற்காவிட்டாலும் ஒவ்வொரு வீரர்கள் ஏலத்திலும் ஆலோசனை நடத்துவார். ஆனால், இந்த முறை ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை, ஒருபோதும் மோசமான ஏலத்தை தோனி ஏற்கமாட்டார்," என்று தெரிவித்தார்.

மேலும், "தோனிதான் கடைசி முடிவை எடுப்பார் என நிர்வாகிகள் கூறலாம். ஆனால் எனக்குத் தெரிந்தவரை தோனி ஏலத்தில் பங்கேற்றதில்லை. சில வீரர்கள் குறித்து தகவல்களை மட்டும் தோனி வழங்கியுள்ளார். ஆனால், தீவிரமாக ஏலத்தில் ஈடுபட்டதில்லை.

தோனிக்கு 43 வயதானாலும் தன்னால் அணிக்கு பங்களிப்பை வழங்க முடியும் எனத் தொடர்ந்து விளையாடுகிறார். ரூ.18 கோடி, ரூ.19 கோடி, ரூ.10 கோடி, ரூ.17 கோடி எனப் பல வீரர்களை அணி வாங்கியது, தக்கவைத்தது. ஆனால் அவர்கள் உச்சபங்களிப்பை வழங்கினார்களா?" என்றும் ரெய்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

குழப்பத்தில் சிஎஸ்கே அணி

சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே சரியான வீரர்கள் கலவையைக் கண்டறிய கடந்த இரு போட்டிகளாக சோதனைகளை செய்யத் தொடங்கியுள்ளது. ஒரு நேரத்தில் நடுவரிசை பேட்டிங்கிற்கு தூண்களாக ரெய்னா, ராயுடு இருவரும் இருந்தனர்.

மெதுவாக ஆட்டத்தைத் தொடங்கினாலும் இருவரும் சரியான நேரத்தில் ஸ்கோரை உச்சத்துக்குக் கொண்டு செல்வர். ஆனால், இருவரும் அணியை விட்டு சென்ற பிறகு சிஎஸ்கே அணியில் இவர்கள் இடத்துக்கு எந்த பேட்டர்களையும் கொண்டு வரவில்லை.

சாம் கரனை 3வது வரிசையிலும், ஜடேஜாவை 4வது வரிசையிலும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி களமிறக்கியது. ஜடேஜாவை பொருத்தவரை 5,6,7வது இடத்தில்தான் 193 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார், 3வது வரிசையில் ஜடேஜா 3 முறை மட்டுமே களமிறங்கியுள்ளார். இப்படிப்பட்ட பேட்டரை எவ்வாறு 4வது வரிசையில் களமிறக்கலாம்.

டெவால்ட் பிரெவிஸ் என்னும் ஸ்பெசலிஷ்ட் பேட்டரை வைத்துக்கொண்டு சாம் கரனையும், ஜடேஜாவையும் களமிறக்கினார்கள்.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன் ஃபார்மில் இல்லை. சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் கைநழுவியதே சாம் கரன் வீசிய 2 ஓவர்களில்தான். அப்படியிருக்க சாம்கரன் பெரும்பாலும் 5வது 6வது வரிசையில் களமிறங்கியவர், அவரை 3வது வீரராகக் களமிறக்கி சிஎஸ்கே கையைச் சுட்டுக் கொண்டதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விமர்சித்தனர்.

நடுவரிசைக்கென ஏலத்தில் எடுக்கப்பட்ட தீபக் ஹூடா 4 போட்டிகளில் 29 ரன்கள், ராகுல் திரிபாதி 5 போட்டிகளில் 55 ரன்கள், ஷிவம் துபே 242 ரன்கள் சேர்த்துள்ளனர். ஷிவம் துபே களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் கடும் அழுத்தம் இருந்ததால், அவரால் 150 ஸ்ட்ரைக் ரேட்டில்கூட விளையாட முடியவில்லை என்பது துரதிர்ஷ்டம்.

தோனி இனியும் தேவையா?

சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே அணியின் தோல்விக்கான காரணம் குறித்த கேள்விக்கு மூத்த விளையாட்டு செய்தியாளர் ஆர் முத்துக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "சிஎஸ்கே அணி என்றால் தோனி, தோனி என்றால் சிஎஸ்கே என்ற பிராண்ட் கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தக் கட்டமைப்பு உடைக்கப்பட வேண்டும்" என்றார்.

மேலும், "43 வயதில் தோனி இன்னும் உடல்தகுதியுடன் இருக்கிறார் என்று சகவீரர்கள் கூறலாம். ஆனால், மனம் ஒத்துழைக்கும் அளவுக்கு உடல்நிலை ஒத்துழைக்காது. கடந்த சீசனோடு ஒப்பிடுகையில் இந்த சீசனில் தோனியால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை என்பதே இதற்குப் பதில்.

முதலில் 43 வயதாகும் தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்று புதிய தலைமையைக் கொண்டு வர வேண்டும். தோனி இன்னும் ஒரு சீசன் விளையாடுவார் என்று சொல்லி ஒரு இடத்தை சிஎஸ்கே வீணடிக்காமல், இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்."

சீனியர் வீரர்களைத் தக்கவைக்கிறேன் என்ற பெயரில் பெரிய தொகையை அதில் செலவிட்டு வருகின்றனர். குறிப்பாக ஜடேஜாவுக்கு ரூ.18 கோடி, அஸ்வின் ரூ.9 கோடி, துபே ரூ.12 கோடி, நூர் அகமது ரூ.10 கோடி செலவிட்டுள்ளனர். இவர்களை மாற்றிவிட்டு, புதிய வீரர்களை அடுத்து நடக்கும் ஏலத்தில் எடுக்க வேண்டும்.

இதைவிட முக்கியமானது தோனியை நீக்க வேண்டும். 43 வயதில் தோனி இனிமேல் என்ன பங்களிப்பு செய்வார் என எதிர்பார்க்கிறார்கள். தோனிக்கான இடத்தை இளம் வீரர் ஒருவருக்கு வழங்க வேண்டும். டி20 ஆட்டம் மாறிவிட்ட நிலையில், தோனியின் பழமையான ஆட்டம் இனிமேல் எடுபடாது. தோனியின் ஃபார்ம் முடிந்துவிட்டு என்ற உண்மையை ஒப்புக்கொள்ளுங்கள்.

கோலியைப் பாருங்கள் மாறிவரும் டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ப தன்னுடைய கேமை மாற்றிக்கொண்டார். ஆனால், தோனியால் தன்னுடைய கேம் பாணியை மாற்றமுடியவில்லை, அவரால் ரிஸ்க் எடுக்க முடிவதில்லை.

ஆகாஷ் சோப்ரா கூறியதைதான் இங்கு நினைவு கூற வேண்டும், தோனி இந்த டவுனில்தான் களமிறங்க வேண்டும், இங்குதான் விளையாட வேண்டும் என்று சொல்வதற்கு சிஎஸ்கே நிர்வாகத்தில் ஆட்கள் இல்லை, இதுதான் சிஎஸ்கே சரிவுக்கு பிரதான காரணம்" என்றார்.

சிஎஸ்கே மீண்டு எழ என்ன தேவை?

சென்னை சூப்பர் கிங்ஸ், தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிஎஸ்கே அணி ஏலத்தில் சரியான வீரர்களே வாங்க முடியாததற்கு முக்கியக் காரணம் தக்கவைப்பில் பெரிய தொகையை இழந்ததுதான்.

பதிராணா (ரூ.13 கோடி), ஜடேஜா (ரூ.18 கோடி), கெய்க்வாட் (ரூ.18 கோடி) துபே (ரூ.12 கோடி), தோனி (ரூ.4 கோடி) ஏறக்குறைய ரூ.65 கோடி தக்கவைப்பிலேயே சிஎஸ்கே நிர்வாகம் செலவிட்டுள்ளது.

இது தவிர ஃபார்மில் இல்லாத அஸ்வினை ரூ.9.75 கோடிக்கும், நூர் அகமது-ஐ ரூ.10 கோடிக்கும் வாங்கியது. இதில் ரூ.20 கோடி வீணானது.

இது தவிர டேவான் கான்வே (ரூ.6.25 கோடி) ரச்சின் ரவீந்திரா (ரூ.4 கோடி). இந்த வீரர்களுக்கு செலவிட்ட தொகையை வைத்து அடுத்த சீசனுக்கான ஏலத்தில் அதிகமான இளம் வீரர்களை ஏலத்தில் வாங்கலாம்.

இது குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத் அவரின் யூடியூப் சேனலில் பேசுகையில், "தக்கவைப்பில் உள்ள சீனியர் வீரர்களை தயக்கம் இல்லாமல் விடுவித்தாலே பெரிய தொகை சிஎஸ்கேவுக்கு கிடைக்கும். சிஎஸ்கே அணியில் அதிக விலைக்கு வாங்கிய வீரர்கள் பலரும் வெளியேதான் அமர்ந்துள்ளனர், ஏறக்குறைய ரூ.25 கோடி சும்மா கிடக்கிறது.

அஸ்வின், கான்வே, ரச்சின் ஆகியோரை சரியாகப் பயன்படுத்தவே இல்லை. சீனியர் வீரர்களை விடுவித்தாலே அந்தப் பணத்தில் அடுத்த சீசனுக்கான மினி ஏலத்தில் புதிய இளம் வீரர்களை அணிக்குள் கொண்டுவரலாம்.

அது மட்டுமல்லாமல் இந்திய அளவில் நடக்கும் பல்வேறு போட்டிகளுக்கு சிஎஸ்கே சார்பில் ஒரு பிரதிநிதியை அனுப்பி இளம் வீரர்களின் ஆட்டத்தை கவனிக்க வேண்டும். உலகளவில் நடக்கும் லீக் போட்டிகளிலும் இளம் வீரர்களை கண்காணித்து அவர்களை ஏலத்தின்போது வாங்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே செல்வது கடினம் என்பதால், அணியில் தற்போதுள்ள இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களில் யார் சிறப்பாக ஆடுகிறார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களைத் தக்கவைக்க வேண்டும். ராமகிருஷ்ணா கோஷ், ஆந்த்ரே சித்தார்த், நாகர்கோட்டி, வன்ஸ் பேடி ஆகியோருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதில் வன்ஸ் பேடி டெல்லி லீக்கில் சிறப்பாக பேட் செய்தவர் அவரை ஏன் இன்னும் பயன்படுத்வில்லை என்பது புரியவில்லை.

இதைவிட முக்கியமான அம்சம் தோனி இன்னும் ஒரு சீசனாவது குறைந்தபட்சம் விளையாடி அணியைக் கட்டமைத்து கேப்டனை உருவாக்கிவிட்டுச் செல்ல வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c70zy0pry9wo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிஎஸ்கே-வை தோல்வியின் பிடியில் தள்ளி தொடரை விட்டே வெளியேற்றிய பஞ்சாப் கிங்ஸ்

சிஎஸ்கே, சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

30 ஏப்ரல் 2025

புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்

இன்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து சென்னை அணியில் ஷேக் ரஷீத் , ஆயுஷ் மாத்ரே தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிலையில், இருவருமே 11 மற்றும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம் கரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் பிரீவிஸ் தவிர்த்து யாருமே 20 ரன்களை எட்டவில்லை. எனினும் தனி ஒருவனாக போராடிய சாம் கரன் 47 பந்துகளில் 88 ரன்களை எடுத்தார்.

சிஎஸ்கே, சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரீவிஸ் 26 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். எம்எஸ் தோனி ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி எடுத்து 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய அன்சுல் கம்போஜ் வந்த தடமே தெரியாமல் டக் அவுட் ஆனார்.

பஞ்சாப் அணியின் யுஸ்வேந்திர சாஹல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். தீபக் ஹூடா, அன்சுல் கம்போஜ், நூர் அகமது ஆகியேரின் விக்கெட்டுகளை ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் அவர் வீழ்த்தினார்.

19.2 ஓவர்களில் சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது.

சிஎஸ்கே, சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய சாஹல்

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிராப்சிம்ரன் சிங் நல்ல தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், 41 பந்துகளில் 71 ரன்களைக் குவித்தார். 19.4 ஓவர்களிவ் பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எட்டியது.

இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் போட்டியில் பஞ்சாப் அணி தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மறுபுறம் சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

சிஎஸ்கே, சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இன்று நடைபெற்ற போட்டி தவிர்த்து சிஎஸ்கே அணிக்கு இன்னும் 4 போட்டிகள் எஞ்சி உள்ளன.

இந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால்கூட சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

"இதுபோன்ற டி20 தொடர்களில், ஏதாவது ஒரு சில குறைபாடுகள் இருந்தால் பரவாயில்லை, சமாளிக்கலாம். ஆனால் பெரும்பாலான வீரர்கள் நன்றாக விளையாடவில்லை என்றால் என்ன செய்ய முடியும். அணியில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இந்த முறையிலேயே போட்டிகளை விளையாட முடியாது."

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வி அடைந்த பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இவ்வாறு பேசியிருந்தார்.

சேப்பாக்கத்திலேயே சிஎஸ்கே தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்தது ரசிகர்களுக்குப் பெரிய வருத்தத்தையும், ஆதங்கத்தையும் அளித்து வருகிறது. சிஎஸ்கே போட்டி என்றால் டிக்கெட் கிடைக்காத நிலை இருந்த காலத்தில், இப்போது சிஎஸ்கே போட்டிக்கு டிக்கெட் விற்பனை மந்தமாக இருக்கும் நிலை வந்துவிட்டது.

சி.எஸ்.கே அணி இந்த சீசனில் இதுவரை 21 வீரர்களை களமிறக்கியுள்ளது. ப்ளே ஆஃப் வாய்ப்பு அந்த அணிக்கு மங்கிவரும் நிலையில் இனி உள்ள ஆட்டங்களை மீதம் உள்ள புதிய வீரர்களை அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பாக கருதி, சி.எஸ்.கே அவர்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு புறம் 11 புள்ளிகளை பெற்றுள்ள பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இன்று நடைபெறும் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c3wx07d0wgpo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிரணிகளுக்கு ரோஹித் அடிக்கும் எச்சரிக்கை மணி - திட்டமிட்டு ராஜஸ்தானை வெளியேற்றிய மும்பை

MR vs RR IPL 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

அணியில் ஒரு சிறந்த கேப்டன் இருந்தாலே அந்த அணி சிறப்பாகச் செயல்படும். ஆனால், 4 சிறந்த கேப்டன்களோடு ஓர் அணி செயல்பட்டால் எதிரணியின் நிலைமை என்ன ஆகும்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா,டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஒரே அணியில் முழு ஃபார்மில் விளையாடும்போது எதிரில் இருப்பது எந்த அணியாக இருந்தாலும் அதன் நிலைமை சற்று கவலைக்குரியதுதான்.

அந்த நிலைதான் நேற்று ராஜஸ்தான் அணிக்கும் ஏற்பட்டது.

தொடரில் இருந்து வெளியேறிய ராஜஸ்தான்

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் மிரட்டலான ஃபார்முக்கு வந்துள்ளது. முதல் 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது மும்பை அணி.

ஆனால் அதன் பிறகு தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி, ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய பிரமாண்ட வெற்றி முதலிடத்துக்கு மும்பையை உயர்த்தியது. மும்பை அணி 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் 1.24 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது.

இந்தத் தோல்வியோடு ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பையயும் இழந்து 2வது அணியாக வெளியேறியது. இனி 8 அணிகளுக்குள் மட்டுமே போட்டி நடக்கிறது. இதில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணி ப்ளே ஆஃப் செல்ல உள்ளதால் அடுத்து வரும் ஆட்டம் கடும் போட்டி நிறைந்ததாக இருக்கும்.

கடந்த 2008 மற்றும் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி இது போலத் தொடர்ந்து 6 போட்டிகளில் இப்போதுதான் வெல்கிறது. அதுமட்டுமல்ல 2021, ஏப்ரல் 17ஆம் தேதிக்குப் பிறகு ஏறக்குறைய 3 சீசன்களுக்கு பின், மும்பை அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 50வது லீக்ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்தது. 218 ரன்கள் எனும் இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 16.1 ஓவர்களில் 117 ரன்களுக்குள் சுருட்டி, 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வென்றது.

மும்பை அணியைப் பொருத்தவரை 200 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டாலே பெரும்பாலும் தோற்றதில்லை. 200 ரன்களுக்கு மேல் சேர்த்து தொடர்ந்து 17வது முறையாக தோல்வியடையாமல் மும்பை அணியின் பயணம் நீள்கிறது.

ரோஹித்தின் அச்சுறுத்தும் ஃபார்ம்

MR vs RR IPL 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பை அணியில் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது ரோஹித் சர்மாவின் ஃபார்ம்தான். கடந்த 6 போட்டிகளிலும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் எதிரணிகளுக்கு அச்சுறுத்தும் விதத்தில் இருக்கிறது. இந்த சீசனில் ரோஹித் சர்மா தனது 3வது அரைசதத்தை நேற்று அடித்துள்ளார். 2020 ஐபிஎல் சீசனுக்கு பின் ரோஹித் சர்மா இதுபோல் 3 அரைசதங்களை அடித்தது இந்த சீசனில்தான்.

ரோஹித் சர்மா தொடக்க வீரராக இருந்து அரைசதம் அடித்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தாலே அடுத்து வரக்கூடிய சூர்யகுமார், ஹர்திக் போன்ற பெரிய ஹிட்டர்களுக்கு சுமை குறைந்துவிடும், அணியும் பெரிய ஸ்கோருக்கு செல்லும்.

இதைத்தான் கடந்த 6 போட்டிகளிலும் ரோஹித் சர்மா கச்சிதமாகச் செய்து வருகிறார். மும்பை அணியும் தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ளது. தொடக்க வீரராக ரோஹித் சர்மா எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்துவிட்டு ஆட்டமிழந்தாலே மும்பை அணி பெரிய ஸ்கோரை எட்டிவிடும்.

சிக்ஸர் அடிக்காத ஹிட்மேன்

MR vs RR IPL 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கத்தில் ரோஹித் சர்மா, ரெக்கில்டன் 3 ஓவர்கள் வரை நிதானமாக ஆடி 16 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் ரோஹித் சர்மாவின் ஆட்டத்தில் சூடுபிடித்து பவுண்டரிகளாக விளாசினார். ஒரு சிக்ஸர்கூட நேற்று ரோஹித் அடிக்கவில்லை 9 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார். ரோஹித் சர்மா 89 போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ஸ்கோர்களை அடித்துள்ளார், அதில் சிக்ஸர் அடிக்காமல் இருந்தது இது 3வது முறை.

அது மட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவின் நேற்றை பேட்டிங் மிகவும் சீராக இருந்தது. ஆஃப்சைடிலும், லெக் சைடிலும் பந்துகளை நிதானமாக அடித்து ரன்களை சேர்த்தார். எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் ரோஹித் சர்மா நின்று பேட் செய்கிறார், விக்கெட்டை எளிதாக இழந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஷாட்களையும் தேர்ந்தெடுத்து பேட் செய்கிறார்.

ரோஹித் சர்மாதனது அரைசதத்தில் 59.1 சதவீதம் ரன்களை ஆஃப் சைடில் அடித்தார். ஏற்கெனவே இந்த சீசனில் அடித்த 2 அரைசதத்திலும் 42% மற்றும் 32% ரன்களை ஆஃப் சைடில் அடித்திருந்தார்.

ஜெய்பூர் ஆடுகளம் தட்டையானது, இதற்கு ஏற்றார்போல் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களும் ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் பந்துவீசவே ரோஹித் சர்மாவை கிராஸ்பேட் போட்டு விளையாடுவதற்கும் ஏதுவாக இருந்தது. ஆர்ச்சர், பரூக்கி என வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை எளிதாக பவுண்டரிக்கு ரோஹித் சர்மா விரட்டினார்.

நளினமான பேட்டிங்

MR vs RR IPL 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

எப்போதும் இல்லாத வகையில் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் நேற்று ஒரு நளினம் இருந்தது. அவரின் ஸ்குயர் லெக் ஷாட், பைன் லெக் ஷாட் பவுண்டரி, வழக்கமான கவர்ட்ரைவ், மிட்ஆப் ஷாட் என 32 ரன்களை ஆப்சைடு சேர்த்தார்.

டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வுக்குப் பிறகு ரோஹித் சர்மா இப்போதுதான் டி20 போட்டிகளில் விளையாடுகிறார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் நல்ல ஃபார்மில் இருந்து அதைக் குறையவிடாமல் ஐபிஎல் தொடருக்கும் எடுத்து வந்துள்ளார். இந்த சீசனில் இதுவரை கடைசி 6 போட்டிகளில் 3 அரைசதங்களை விளாசிய ரோஹித் சர்மா ஒரு ஆட்டநாயகன் விருது மட்டுமே வென்றுள்ளார்.

இந்த ஆட்டத்தின் மூலம் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6,024 ரன்களை எட்டியுள்ளார். ரோஹித் சர்மாவுக்கு முன்பாக விராட் கோலி ஆர்சிபி அணிக்காக 8871 ரன்கள் சேர்த்துள்ளார்.

முதல் 5 போட்டிகளில் ரோஹித் சர்மா 20 ரன்களைக்கூட எட்ட முடியாத நிலையில் அடுத்தடுத்து அரைசதங்களை அடித்து மிரட்டலான ஃபார்முக்கு ரோஹித் சர்மா வந்துள்ளார். அதிலும் நேற்றைய ஆட்டத்தில் தனது ஸ்ட்ரைக் ரேட்டும் குறையாமல், சிக்ஸரும் அடிக்காமல் ரோஹித் சர்மா ஆட்டத்தை நகர்த்திய விதம் அழகானது. ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கச்சிதமடைந்து வருவது. அடுத்து வரும் போட்டிகளில் எதிரணியின் பந்துவீச்சாளர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை என்றும் சமூக ஊடகங்களில் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

4 பேட்டர்களின் மிரட்டல் ஆட்டம்

MR vs RR IPL 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்கார்கள் ரோஹித் சர்மா(53), ரெக்கில்டன்(61), சூர்யகுமார்(48), ஹர்திக் பாண்டியா(48) என 4 பேட்டர்களுமே சேர்ந்து 200 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டனர். ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணியில் முதல் 4 பேட்டர்கள் 40 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 4வது முறை. கடைசியாக 2011இல் ராஜஸ்தானுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டர்கள் இதுபோல் முதல் 4 பேர் 40 ரன்கள் சேர்த்திருந்தனர். அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து இப்போது நடந்துள்ளது.

முதல் விக்கெட்டுக்கு ரெக்கில்டன், ரோஹித் சர்மா அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 116 ரன்களில் பிரிந்தனர். இந்த ஃபார்ம் குறையாமல் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் கொண்டு சென்றனர். வழக்கமாக ஹர்திக் 5வது அல்லது 6வது பேட்டராக களமிறங்குவார். ஆனால், பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் கேப்டனாக முன்வந்து பேட் செய்தார்.

சூர்யகுமார் யாதவ் களத்துக்கு வந்து முதல் 6 பந்துகளிலேயே தனது முதல் சிக்ஸரை விளாசினார். 360 டிகிரி பேட்டர் என்று கூறுவதற்கு ஏற்ப சூர்யகுமார் நேற்று களத்தில் உருண்டு, வித்தியாசமான முறையில் ஷாட்களை ஆடினார். ஆர்ச்சர் வீசிய யார்கர் பந்துகளை யார்கராக வரவிடாமல் கீழே உருண்டு அடித்த ஷாட்கள், தேர்டு மேன் திசையில் அடித்த ஷாட்கள் புதுவிதம். சூர்யகுமார் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 11 முறை 25 ரன்களுக்கும் மேலாக அடித்த வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் பெற்றார்.

ஹர்திக் பாண்டியா எந்த நோக்கத்துக்காக களமிறங்கினாரோ அதை நிறைவேற்றினார். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். பரூக்கியின் 18வது ஓவரில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தி 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் 44 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்தனர். ஒரு இன்னிங்ஸில் மும்பை அணியில் முதல் 4 பேட்டர்கள் 40 ரன்களுக்கு மேல் சேர்த்தது இதுதான் முதல்முறை.

வைபஷ் சூர்யவன்ஷி ஏமாற்றம்

MR vs RR IPL 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பை அணியில் 4 கேப்டன்கள் வியூகம் அமைக்கும்போது, முழுநேரம் இல்லாத, அனுபவமில்லாத கேப்டன் இருக்கும் ராஜஸ்தான் அணியை வீழ்த்துவது அவர்களுக்கு எளிதாக இல்லை. பவர்ப்ளே ஓவர்களிலேயே ஆட்டத்தின் பாதியை மும்பை பந்துவீச்சாளர்கள் முடித்துவிட்டனர்.

மும்பை அணி வீரர்களின் துடிப்பு, உச்சகட்ட உற்சாகம், ஃபீல்டிங்கை சரி செய்த 4 கேப்டன்கள், 4 கேப்டன்களின் உற்சாகப் பங்களிப்பு ராஜஸ்தானுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு பேட்டரையும் கட்டம் கட்டித் தூக்கி, 15 ஓவர்களுக்குள் ஆட்டத்தை முடித்தனர்.

குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த 14 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி 2 பந்துகளில் டக்-அவுட் ஆகி தீபக் சஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜெய்ஸ்வால் அதிரடியாக 2 சிக்ஸர்களை போல்ட் பந்துவீச்சில் அடித்தாலும், அதே ஓவரில் போல்டாகி வெளியேறினார். போல்ட் மற்றும் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சில் பவர்ப்ளே முடிவதற்குள் ராஜஸ்தான் அணி 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஏறக்குறைய தோல்வியில் விழுந்தது.

இந்த சீசனில் மும்பை அணி பவர்ப்ளே ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 3வது முறை. ராஜஸ்தான் அணியில் ஒரு பேட்டர்கூட போராட்ட குணத்தை வெளிப்படுத்தவில்லை. 20 ரன்கள்கூட எந்த பேட்டரும் சேர்க்காமல் தோல்வியை ஒப்புக்கொண்டு வெளியேறியது போல் இருந்தது. போல்ட், கரன் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மும்பை வெற்றி பெற்றது எப்படி?

MR vs RR IPL 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றிக்குப் பிறகு மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், "நாங்கள் பேட் செய்த விதமும், பந்துவீச்சு அணுகுமுறையும் அற்புதமாக இருந்தது. இன்னும் கூடுதலாக 15 ரன்கள் சேர்த்திருக்க முடியும். நானும், சூர்யாவும் பேசிக்கொண்டுதான் ஷாட்களை ஆடினோம். ரோஹித் மற்றும் ரியான் அதேபோன்ற ஆட்டத்தை வழங்கினர்.

இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது. சூழலைப் புரிந்து அனைவரும் விளையாடினர். பேட்டர்கள் நல்ல ஃபார்முக்கு வந்துள்ளனர், நல்ல பேட்ஸ்மேன்ஷிப் தெரிகிறது. பந்துவீச்சாளர்கள் அனைவருமே பங்களிக்கிறார்கள். எளிதான கிரிக்கெட்டை ஆடுகிறோம், நல்ல பலன் கிடைக்கிறது. ஒவ்வோர் ஆட்டத்தையும் பணிவுடன், ஒழுக்கத்துடன் ஆடுகிறோம், வெற்றி கிடைக்கிறது" எனத் தெரிவித்தார்.

அடுத்து வரவுள்ள முக்கிய ஆட்டங்கள்

இன்றைய ஆட்டம்

  • குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  • இடம்: ஆமதாபாத்

  • நேரம்: இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

  • நாள் – மே 6

  • இடம் – மும்பை

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs சிஎஸ்கே

  • நாள் – மே 3

  • இடம் – பெங்களூரு

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

  • சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 475 (11 போட்டிகள்)

  • சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-456 ரன்கள்(9 போட்டிகள்)

  • விராட் கோலி(ஆர்சிபி) 443 ரன்கள்(9போட்டிகள்)

நீலத் தொப்பி

  • ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

  • பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 17 விக்கெட்டுகள்(9 போட்டிகள்)

  • டிரன்ட் போல்ட் (மும்பை) 16 விக்கெட்டுகள்(11 போட்டிகள்)

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g3kqpggvyo

ipl-01-05.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

GT vs SRH: தமிழக வீரர் சாய் சுதர்சன் முதலிடம் - சுப்மன் கில் ரன் அவுட் சர்ச்சையானது ஏன்?

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சாய் சுதர்சன் ஆட்டம் இந்த சீசனில் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 மே 2025, 01:54 GMT

    புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

2025 ஐபிஎல் டி20 சீசனில் தமிழக வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ள அணி குஜராத் டைட்டன்ஸ்.

சாய் சுதர்சன், சாய் கிஷார், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் என அனைவருமே தமிழக மண்ணின் மைந்தர்கள். இவர்கள் 4 பேரும் கிடைக்கின்ற வாய்ப்பில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி, முத்திரை பதித்து வருகிறார்கள். அதிலும் தொடக்க வீரராகக் களமிறங்கும் சாய் சுதர்சனின் ஆட்டம் இந்த சீசனில் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மிரட்டல் ஜோடி

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, குஜராத் அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர்கள் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி அமைத்துக் கொடுக்கும் அடித்தளம் பல போட்டிகளில் வெற்றியைக் கொடுத்துள்ளது

இந்த சீசனில் குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுடன் சேர்ந்து சாய் சுதர்சன் அமைக்கும் கூட்டணி பெரும்பாலான ஆட்டங்களில் பெரிய ஸ்கோருக்கும், வெற்றிக்கும் வழிவகுத்துள்ளது.

ஆமதாபாத்தில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்கூட இருவரின் பார்ட்னர்ஷிப்பும் குஜராத் அணி 200 ரன்களுக்கு மேல் கடக்க உதவியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது. 225 ரன்களை சேஸ் செய்யும் முனைப்பில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

வெளியேறும் சன்ரைசர்ஸ்?

இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 10 போட்டிகளில் 7 வெற்றி பெற்று, 14 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது.

ஆர்சிபி அணியை விட நிகர ரன்ரேட்டில் 0.867 வலுவாக இருப்பதால் குஜராத் அணி 2வது இடம் பிடித்தது. அதேசமயம், சன்ரைசர்ஸ் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு கணித ரீதியாக முடியாவிட்டாலும், நிதர்சனத்தில் அந்த அணி அடுத்துவரும் 4 போட்டிகளிலும் வென்றாலும் 14 புள்ளிகளைக் கடக்க முடியாது.

ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கவும்கூட இந்த 14 புள்ளிகள் போதாது என்பதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் சன்ரைசர்ஸ் அணி வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிம்ம சொப்ன தொடக்க வீரர்கள்

குஜராத் அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர்கள் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி அமைத்துக் கொடுக்கும் அடித்தளம் பல போட்டிகளில் வெற்றியைக் கொடுத்துள்ளது.

இதுவரை 10 இன்னிங்ஸ்களில் சாய் சுதர்சன், கில் ஜோடி 627 ரன்கள் சேர்த்து முதலிடத்தில் உள்ளனர். இதில் 6 முறை 50 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்துள்ளனர். இருவரின் சராசரி 60.27 ரன்களாக உள்ளது.

இருவரின் பேட்டிங்கிலும் இருக்கும் ஆக்ரோஷம், ஆவேசம்தான் குஜராத் அணிக்கு பவர்ப்ளேயில் பெரிய ஸ்கோரைப் பெற்றுக் கொடுத்துள்ளது.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில்கூட 43 பந்துகளில் இருவரும் 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர், இதில் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்களும் அடங்கும்.

இருவரின் பேட்டிங்கிலும் பவர்ப்ளேயில் 6 புல்ஷாட்கள், 2 ப்ளிக் ஷாட்கள், 2 கவர் ட்ரைவ் ஷாட்கள், ஒரு ஸ்ட்ரைட் ட்ரைவ், ஒரு ஸ்டீர், ஒரு கட்ஷாட் ஆகியவற்றின் மூலம்தான் பவுண்டரி, சிக்ஸர் கிடைத்தது. பவர்பளேயில் இருவரும் சேர்ந்து 82 ரன்கள் சேர்த்தது இந்த சீசனில் 6வது அதிகபட்சமாகும்.

சாய் சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அணியை தூக்கி நிமர்த்துவதில் பட்லரின் பேட்டிங் முக்கியமானதாகும்

இந்த சீசன் முழுவதும் கில், சுதர்சன் இருவரும் மிரட்டலான ஃபார்மில் இருப்பதால் எந்த பந்துவீச்சாளர் மோசமாக பந்துவீசினாலும் தண்டிக்கத் தவறுவதில்லை. நேற்றைய ஆட்டத்தில் ஷமியின் 3வது ஓவரில் இருவரும் சேர்ந்து 21 ரன்களை விளாசினர்.

ஐபிஎல் சீசனில் வேறு எந்த அணியிலும் இல்லாத வகையில் குஜராத் அணிக்கு தொடக்க ஜோடி அமைந்துள்ளது. இருவரின் ரன் வேட்கையும், ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்கிறது. அதிரடியாக ஆட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் நிதானமாக, பேட்டிங்கில் கட்டுப்பாட்டுடன், மோசமான பந்துகளை தேர்வு செய்து மட்டுமே ஷாட்களை அடித்து நங்கூரம் அமைக்கிறார்கள்.

இந்த ஆட்டத்தில் கூட சுதர்சன், கில் இருவரின் பேட்டிங்கிலும் 15 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன, ஷாட்களில் கன்ட்ரோல் சதவீதம் 94 ஆக இருக்கிறது. ஒரு பந்துக்கு குறைந்தபட்சம் 2 ரன்கள் சேர்க்கவேண்டும் என்ற சராசரியில் இருவரும் விளையாடுகிறார்கள்.

ஐபிஎல் சீசனில் குஜராத் அணி வெற்றிகரமாக மாறுவதற்கு சாய் சுதர்சன் , கில் கூட்டணி மட்டுமல்லாமல் மற்றொரு அதிரடி வீரர் ஜாஸ் பட்லரும் குறிப்பிடத்தகுந்தவர்.

கில், சுதர்சன் இருவரில் யாரேனும் ஒருவர் விரைவாக ஆட்டமிழந்துவிட்டால் அணியை தூக்கி நிமர்த்துவதில் பட்லரின் பேட்டிங் முக்கியமானதாகும்

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த பேட்டர்கள் வரிசையில் குஜராத் அணியின் டாப்-3 பேட்டர்கள் இடம் பெற்றுள்ளனர். சுதர்சன், கில், பட்லர் மூவருமே இடம் பெற்றள்ளது குறிப்பிடத்தக்கது.

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன் - குஜராத்தின் வெற்றிக்கு தூணாக இருக்கும் மூவர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சச்சினை முந்திய சுதர்சன்

தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்த சீசனில் 500 ரன்களைக் கடந்த முதல் பேட்டர் என்ற பெருமையையும், ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றியுள்ளார். 10 போட்டிகளில் 5 அரைசதங்கள் உள்பட 504 ரன்கள் குவித்து 50 ரன்களுக்கும் மேல் சுதர்சன் சராசரியும், 154 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

சாய் சுதர்சன் பேட்டிங்கில் இருக்கும் நிலைத்தன்மையைப் பார்த்து " மிஸ்டர் கன்சிஸ்டென்சி" என அழைக்கிறார்கள்.

சுதர்சன் நேற்றைய ஆட்டத்தில் 23 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 54 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை எட்டி சச்சின் டெண்டுல்கர் சாதனையை சுதர்சன் முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 59 இன்னிங்ஸ்களில் தான் 2000 ரன்களை எட்டினார். சுதர்சன் விரைவாக 54 இன்னிங்ஸ்களிலேயே இந்த ரன்களை எட்டினார்.

மிகவிரைவாக 2000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை ஷான் மார்ச் 53 இன்னிங்ஸ்களில் வைத்துள்ளார். சுதர்சன் 2வது இடத்தில் இருக்கிறார்.

சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐபிஎல் தொடரில் 54 இன்னிங்ஸ்களில் 2ஆயிரம் ரன்களை எட்டி சச்சின் டெண்டுல்கர் சாதனையை சுதர்சன் முறியடித்துள்ளார்.

குஜராத்தின் 3 தூண்கள்

குஜராத் அணியின் பேட்டிங் வெற்றிக்கு டாப்-3 வரிசையில் இருக்கும் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில், ஜாஸ் பட்லர் ஆகிய 3 பேரும் தான் காரணம். குஜராத் அணி 10 இன்னிங்ஸ்களில் நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் பேட்டிங் செய்ய குறைவாகவே வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏனென்றால் இந்த 3 பேருமே பெரும்பாலான ஆட்டத்தை, ஓவர்களை ஆக்கமிரத்து ஆடுவதால் நடுவரிசை பேட்டர்களுக்கு களமிறங்க வாய்ப்புக் குறைவாக இருக்கிறது. இந்த 3 பேரும் சேர்ந்து சுதர்சன்(48),கில்(76),பட்லர்(64) என நேற்றைய ஆட்டத்தில் 188 ரன்கள் சேர்த்தனர். 218 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த குஜராத் அணி கடைசி ஓவரில் 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சுப்மன் கில் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்

சர்ச்சை ரன் அவுட்

இந்த ஆட்டத்தில் சுப்மன் கில் 76 ரன்கள் சேர்த்திருந்தபோது ஹர்சல் படேல் வீசிய த்ரோவில் விக்கெட் கீப்பர் கிளாசனால் ரன்அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.

ஆனால், இந்த ரன்அவுட் குறித்து 3வது நடுவரிடம் அப்பீல் செய்யவே, அதில் உறுதியற்ற தன்மை நிலவிய நிலையிலும் கில்லுக்கு அவுட் வழங்கினர். அதாவது ஹர்சல் படேல் வீசிய த்ரோவில் பந்து ஸ்டெம்பில் படுவதற்கு முன்பாகவே கிளாசனின் க்ளோவ் ஸ்டெம்பில் பட்டது தெரிந்தது. அதேநேரம், பந்தும் ஸ்டெம்பில் பட்டது. இரு சம்பவங்களும் மைக்ரோ வினாடிகள் இடைவெளியில் நடந்ததால், 3வது நடுவர் அவுட் வழங்கினார்.

இதைப் பார்த்து அதிருப்தி அடைந்த சுப்மன் கில் பெவிலியனுக்கு கோபத்துடன் சென்றார். அங்கிருந்த நடுவர்களிடம் சுப்மன் கில் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார்.அது மட்டுமல்லாமல் பந்துவீச களமிறங்கும்போதும், கள நடுவர்களிடம் தன்னுடைய ரன்அவுட் குறித்து வாக்குவாதம் செய்தார். இது ஐபிஎல் விதிகளின்படி தவறாகும், இதனால் நடுவர்கள் புகார் அளிக்கும்பட்சத்தில் சுப்மன் கில்லுக்கு தண்டனை விதிக்கப்படலாம்.

நம்பிக்கையிழந்த சன்ரைசர்ஸ்

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்சன் - குஜராத்தின் வெற்றிக்கு தூணாக இருக்கும் மூவர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசன் கடந்த சீசன்போல் நம்பிக்கையானதாக அமையவில்லை. குறிப்பாக தொடக்க ஜோடி ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இந்த சீசனில் பெரிய அளவுக்கு வெற்றிகரமான ஜோடியாக இல்லாதது அந்த அணியின் பெரும்பாலான தோல்விகளுக்கு காரணமாகும்.

இருவரில் ஒருவர் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழப்பது, யாரேனும் ஒருவர் மட்டுமே நிலைத்து ஆடுவது சாதகமாக அமையவில்லை.

அதிலும் இந்த சீசனில் அபிஷேக் ஷர்மா 314 ரன்களும், டிராவிஸ் ஹெட் 281 ரன்களும் மட்டுமே சேர்த்துள்ளனர். ஹெட் இதுவரை 2 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார், அபிஷேக் ஒரு சதம், ஒருஅரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.

இந்த ஆட்டத்திலும் டிராவிஸ் ஹெட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் ஷர்மா 41 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அபிஷேக் களத்தி்ல் இருந்தவரை சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கை இருந்தது. இவர் ஆட்டமிழந்தபின் படிப்படியாக அந்த நம்பிக்கை குறைந்தது. கிளாசன் 23, அனிகேத் வர்மா(3) , கமிந்து மெண்டிஸ்(0) என ஆட்டமிழந்தனர்.

பிரசித் கிருஷ்ணா கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சுதர்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றிக்குப்பின் குஜராத் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில் " கறுப்பு மண் ஆடுகளத்தில் சிக்ஸர் அடிப்பது கடினமாக இருந்தது. ஆனாலும் டாப் ஆர்டர் பேட்டர்கள் ஆடியவிதம் சிறப்பாக இருந்தது, ஸ்கோரை உயர்வாக கொண்டு செல்ல வேண்டும் எனும் நோக்கம்தான் இருந்தது. எங்களால் முடிந்தவரை சிறப்பான ரன்களை அடிக்கவே முயல்கிறோம். எங்கள் அணியின் பீல்டிங் இந்த சீசனில் சராசரிக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் இன்று நன்றாக இருந்தது. பிரசித், இசாந்த், கோட்ஸி ஆகியோர் ஸ்கோரை டிபெண்ட் செய்ய சரியாகப் பந்துவீசினர்.களத்தில் வீரர்கள் அனைவரும் 110% பங்களிப்பை வழங்கினர்" எனத் தெரிவித்தார்.

இன்றைய ஆட்டம்

சிஎஸ்கே vs ஆர்சிபி

இடம்: பெங்களூரு

நேரம்: இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

நாள் – மே 6

இடம் – மும்பை

நேரம்- இரவு 7.30 மணி

சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்

கொல்கத்தா vs சிஎஸ்கே

நாள் – மே 7

இடம் – கொல்கத்தா

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 9

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-504 ரன்கள்(10 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 475 (11 போட்டிகள்)

ஜாஸ் பட்லர்(குஜராத் டைட்டன்ஸ்) 470 ரன்கள்(10 போட்டிகள்)

நீலத் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 19 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

டிரன்ட் போல்ட் (மும்பை) 16 விக்கெட்டுகள்(11 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/czrvdg4l2pno

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிய அலட்சியத்தால் தோற்றதா சென்னை? விடாமல் பயம் காட்டும் அந்த ஒரு விஷயம் என்ன?

சிஎஸ்கே அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிஎஸ்கே அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆர்சிபி அணி.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

2024, மே 18 ஆம் தேதி பெங்களூருவில் ஐபிஎல் தொடரில் நடந்தது மீண்டும் நேற்று பெங்களூருவில் நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்திலும் நடந்து "தேஜாவு" நினைவு ஏற்பட்டது.

2024, மே 18 ஆம் தேதியும் ஆர்சிபி, சிஎஸ்கே அணியும் மோதின, கடைசி ஓவரை யாஷ் தயால் வீசி சிஎஸ்கே அணியை ப்ளே ஆஃப் செல்லவிடாமல் தடுத்தார்.

அதேபோன்று நேற்றும் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்கு இடையே லீக் ஆட்டம் நடந்தது, கடைசி ஓவரை யாஷ் தயால் வீசி, 15 ரன்களை சிஎஸ்கே பேட்டர்கள் அடிக்கவிடாமல் டிபெண்ட் செய்து 2 ரன்களில் ஆர்சிபி அணியை வெற்றி பெற வைத்தார்.

கடந்த ஆண்டும் யாஷ் தாயால் வீசிய கடைசி ஓவரில் தோனி ஆட்டமிழந்தார், இந்த முறையும் தோனி ஆட்டமிழந்தார்.

பெங்களுருவில் நேற்று நடந்த 52வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆர்சிபி அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது. 214 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்து 2 ரன்களில் தோல்வி அடைந்தது.

கடைசி நேரத்தில் களமிறங்கிய 14 பந்துகளில் அரைசதம் விளாசிய ஆர்சிபி வீரர் ரோமாரியோ ஷெப்பர்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஐபிஎல் 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதலிடத்தில் ஆர்சிபி

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு நகர்ந்தது, நிகர ரன்ரேட்டைப் பொருத்தவரை 0.482 மட்டுமே இருக்கிறது.

இது மும்பை இந்தியன்ஸ், குஜராத் அணியைவிட குறைவாகும். இன்னும் 2 வெற்றிகள் கிடைத்தால் ஆர்சிபி அணியை ப்ளே ஆஃப் சுற்றில் டாப்-2 இடங்களில் அமரவைக்கும்.

இந்த தோல்வியால் தொடர்ந்து 12வது முறையாக 180 ரன்களுக்கு மேல் அடித்த இலக்கை சேஸ் செய்யமுடியாமல் சிஎஸ்கே தோல்வி அடைந்துள்ளது.

ஆர்சிபி அணிக்கு பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வெற்றி தேடித்தந்தது கடைசி 2 ஓவர்கள்தான். பேட்டிங்கில் ரோமாரியோ ஷெப்பேர்ட் கடைசி 2 ஓவர்களில் அடித்த ரன்களும், பந்துவீச்சில் சூயாஷ் ஷர்மா, தயால் வீசிய 2 ஓவர்களும் திருப்புமுனை.

CSK Vs RCB: ஆர்சிபி 'த்ரில்' வெற்றி - இந்த ஒரு அலட்சியத்தால் தோற்றதா சென்னை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆர்சிபி அணி 18-வது ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்திருந்தது

கடைசி 2 ஓவர்கள்

ஆர்சிபி அணி 18-வது ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்திருந்தது, அடுத்த இரு ஓவர்களிலும் சேர்த்து 184 ரன்களை சேர்க்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் கலீல் அகமது வீசிய 19-வது ஓவரில் ரோமாரியோ ஷெப்பார்ட் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 33 ரன்களையும், பதிராணா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 21 ரன்கள் விளாசி இரு ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்து 14 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்து 213 ரன்கள் சேர்க்க உதவினார்.

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்ததில் 2வது இடத்தை ரோமாரியோ ஷெப்பார்ட் பிடித்தார். முதலிடத்தில் ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் ஷெப்பர்ட் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதற்கு முன் ஆர்சிபி அணிக்காக அதிவேக அரைசதமாக கெயில் 17 பந்துகளில் அடித்திருந்தார், அதை ஷெப்பர்ட் முறியடித்து விட்டார்.

அதேபோல ஆர்சிபி பந்துவீச்சிலும் சூயாஷ் ஷர்மா வீசிய 18வது ஓவரும், யாஷ் தயால் வீசிய 20வது ஓவரும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தின. கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்க 35 ரன்கள் தேவைப்பட்டது.

களத்தில் தோனி, ஜடேஜா இருந்தனர், இரு பெரிய ஃபினிஷர்கள் களத்தில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தோனி களமிறங்கியதும் சுழற்பந்துவீச்சாளர் சூயாஷ் ஷர்மாவை பந்துவீச அழைத்தனர். இளம் சுழற்பந்துவீச்சாளர் சூயாஷ் சர்மா தனது ஓவரில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து சிஎஸ்கே அணியை நெருக்கடியில் தள்ளினர்.

புவனேஷ்வர் வீசிய 19வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸர், ஜடேஜா ஒரு பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தனர்.

CSK Vs RCB: ஆர்சிபி 'த்ரில்' வெற்றி - இந்த ஒரு அலட்சியத்தால் தோற்றதா சென்னை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,புவனேஷ்வர் வீசிய 19வது ஓவரில் தோனி ஒரு சிக்ஸர், ஜடேஜா ஒரு பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்தனர்.

கடைசி ஓவர்

கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது, யாஷ் தயால் பந்துவீசினார். யாஷ் தயால் முதல் இரு பந்துகளை யார்கராக வீசவே தோனி, ஜடேஜா தலா ஒரு ரன் சேர்த்தனர்.

3வது பந்தில் தோனியை கால்காப்பில் வாங்க வைத்து தயால் ஆட்டமிழக்கச் செய்யவே ரசிகர்களின் சத்தத்தால் அரங்கமே அதிர்ந்தது.

இம்பாக்ட் வீரராக வந்த ஷிவம் துபே 4வது பந்தில் சிக்ஸர் விளாசவே ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது, 4வது பந்து ஃபுல்டாஸாக வந்ததால் நோபாலாகவும் மாறியது. இதனால் துபே ப்ரீஹி்ட்டில் மற்றொரு சிக்ஸர் விளாசி ஆட்டத்தை முடித்துவிடுவார் என்று நினைத்த நேரத்தில் ப்ரீஹிட்டில் துபே ஒரு ரன் அடித்தார்.

அதன்பின் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தயால் யார்கராக பந்துவீசவே துபே ஒரு ரன்னும், கடைசிபந்திலும் தயால் யார்கர் விளாச ஜடேஜா ஒரு ரன்னும் எடுக்கவே, ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

CSK Vs RCB: ஆர்சிபி 'த்ரில்' வெற்றி - இந்த ஒரு அலட்சியத்தால் தோற்றதா சென்னை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆர்சிபி வீரர் ரோமாரியோ ஷெப்பர்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

கோலிக்கு ஆரஞ்சு தொப்பி

விராட் கோலி நேற்று 33 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஜேக்கப் பெத்தலுடன் சேர்ந்து 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான அடித்தளம் அமைத்தார்.

கோலி சேர்த்த 63 ரன்களில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் என 187 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 505 ரன்கள் சேர்த்து சாய் சுதர்ஸனை முந்தி கோலி ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார்.

இந்த சீசனில் கோலி 7வது முறையாக 50க்கும் மேற்பட்ட ரன்களை அவர் விளாசியுள்ளார். இந்த 7 ஆட்டங்களிலும் ஆர்சிபி அணி வென்றுள்ளது.

அது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் 8-வது முறையாக கோலி 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக கோலி 1,146 ரன்கள் சேர்த்து, அந்த அணிக்கு எதிராக அதிகபட்ச ரன்கள் சேர்த்த பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார்.

கோலி நேற்று முக்கியமான கட்டத்தில் பவுண்டரி அருகே கேட்சை கோட்டை விட்டு பவுண்டரியும் செல்லவிட்டது ஆட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியது, ஒருவேளை ஆர்சிபி தோல்வி அடைந்திருந்தால், அதற்கான ஒட்டுமொத்த பழியும் கோலி மீது விழுந்திருக்கும்.

கோலி மட்டும் அந்தக் கேட்சை பிடித்திருந்தால் ஜடேஜா ஆட்டமிழந்திருப்பார், ஆர்சிபி வென்றிருக்கும் என்ற ஊகம் கிளம்பி இருக்கும். கோலி கேட்ச் விட்டு, பவுண்டரி சென்றதைப் பார்த்த கேப்டன் பட்டிதார் தலையில் கை வைத்தார்.

ஐபிஎல் 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜடேஜாவுக்கு நேற்றைய ஆட்டத்தில் 3 கேட்சுகளை ஆர்சிபி வீரர்கள் கோட்டைவிட்டும் அதை பயன்படுத்தவில்லை.

3 பேட்டர்கள் அரைசதம்

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணியில் படிக்கல்(17), பட்டிதார்(11) ஜிதேஷ்(7) என சொற்பமாக ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தல் 28 பந்துகளில் தனது 2வது ஆட்டத்திலேயே அரைசதம் அடித்தார், 21 வயது 192 நாட்களில் ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை விளாசியுள்ளார். இவருக்கு முன்பாக குறைந்தவயதில் சாம் கரன்(20வயது), குர்பாஸ்(21வயது 129நாட்கள்) அரைசதம் அடித்திருந்தனர்.

ஆர்சிபி பேட்டர்கள் 3 பேர் கோலி(62), பெத்தல்(55), ஷெப்பர்ட்(53) அரைசதம் அடித்தனர்.

ஐபிஎல் 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,முதலில் பேட் செய்த ஆர்சிபி 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது.

ஆட்டத்தை மாற்றிய ஷெப்பர்ட்

ஆர்சிபி அணிக்கு கோலி, பெத்தல் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தபின் நடுவரிசை வீரர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழக்கவே ஸ்கோர் மந்தமானது. 11ஓவர்கள் முதல் 18வது ஓவர்கள்வரை 4 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை மட்டுமே ஆர்சிபி சேர்த்தது. 157 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ஆர்சிபி இழந்திருந்தது.

கடைசி 14 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் ஷெப்பர்ட் களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் ஷெப்பர்ட் 54 ரன்கள் விளாசினார். கலீல் அகமது வீசிய 19-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், 2பவுண்டரிகள் என 33 ரன்களையும், பதிராணா வீசிய கடைசி ஓவரில் 2சிக்ஸர், 2 பவுண்டரி என அருமையான ஃபினிஷிங் செய்தார்.

சிஎஸ்கே அணிக்கு கிடைத்த அடுத்த முத்து

சிஎஸ்கே அணிக்கு ஏற்கெனவே நடுவரிசையில் பிளாஸ்டர் பேட்டர் பிரெவிஸ் கிடைத்துள்ள நிலையில் அடுத்ததாக அருமையான தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே கிடைத்துள்ளார்.

ஆயுஷ் மாத்ரே, 25 பந்துகளில் அரைசதத்தையும், 48 பந்துகளில் 94 ரன்கள்(5 சிக்ஸர், 9பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே அணி சீசன் தொடக்கத்திலேயே ஆயுஷ் மாத்ரேவை களமிறக்கி இருக்க வேண்டும்.

CSK Vs RCB: ஆர்சிபி 'த்ரில்' வெற்றி - இந்த ஒரு அலட்சியத்தால் தோற்றதா சென்னை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சிஎஸ்கே அணிக்கு அருமையான தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே கிடைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இளம்வயதில் அரைசதம் அடித்த 3வது பேட்டராக ஆயுஷ் மாத்ரே(17வயது291 நாட்கள்) இடம் பெற்றார். இதற்கு முன்பாக வைபவ் ரகுவன்ஷி(14வயது 32நாட்கள்), ரியான் பராக்(17வயது 175 நாட்கள்) ஆகியோர் இளம் வயதில் அரைசதம் அடித்திருந்தனர்.

சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் கெய்க்வாட்டுடன் இணைந்து களமிறங்க அதிரடியான பேட்டரான ஆயுஷ் மாத்ரேவை கண்டுபிடித்துள்ளது. புவனேஷ்வர் வீசிய ஓவரில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 26 ரன்களை மாத்ரே விளாசினார்.

ஜடேஜாவுடன் சேர்ந்து ஆயுஷ் மாத்ரே அமைத்த 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ரவீந்திர ஜடேஜாவும் 29 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் தொடரில் தனது அதிகபட்ச ஸ்கோரான 77 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

29 பந்துகளில் அரைசதம் அடித்த ஜடேஜா, அடுத்த 16 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே சேர்த்து ரன்சேர்ப்பில் மந்தத்தை ஏற்படுத்தினார். ஜடேஜா கடைசி வரை ஒரே சீராக அடித்து ஆடியிருந்தால் நிச்சயமாக ஸ்கோரில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். ஜடேஜாவுக்கு நேற்றைய ஆட்டத்தில் 3 கேட்சுகளை ஆர்சிபி வீரர்கள் கோட்டைவிட்டும் அதை பயன்படுத்தவில்லை.

சிஎஸ்கே அணியில் ஆயுஷ் மாத்ரே, ஜடேஜா இருவரைத் தவிர மற்ற பேட்டர்கள் பெரிதாக ரன்களையும் சேர்க்கவில்லை. ரஷீத்(14), சாம்கரன்(5), பிரெவிஸ்(0), தோனி(12) என சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

CSK Vs RCB: ஆர்சிபி 'த்ரில்' வெற்றி - இந்த ஒரு அலட்சியத்தால் தோற்றதா சென்னை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்த ஆட்டத்தில் விராட் கோலி ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றினார்.

பிரெவிஸ் அவுட்

லுங்கி இங்கிடி வீசிய 17வது ஓவரில் மாத்ரே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததும், அடுத்து டெவால்ட் பிரெவிஸ் களமிறங்கினார்.

முதல் பந்தை இங்கிடி ஃபுல்டாஸாக விசவே, அதை தடுக்கும் முயற்சியில் பிரெவிஸ் கால்காப்பில் வாங்கினார். லுங்கி இங்கிடி அவுட் கேட்டு முறையிடவே களநடுவரும் அவுட் வழங்கினார். இதைப் பார்த்த பிரெவிஸ், மிகவும் ரிலாக்ஸாக நடந்து வந்து, ஜடேஜாவிடம் பேசிவிட்டுவந்து, டிஆர்எஸுக்கு அப்பீல் செய்தார்.

ஆனால், நடுவரோ டிஆர்ஸ் முடிவுக்கு அப்பீல் செய்ய வேண்டுமென்றால், ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்ட 10 வினாடிகளுக்குள் டிஆர்எஸ் எடுக்க வேண்டும், ஆனால், அதனை தாண்டி நேரமாகிவிட்டதால் டிஆர்எஸ் எடுக்க இயலாது எனத் தெரிவித்தனர்.

இதனால் விரக்தியுடன் பிரெவிஸ் வெளியேறினார். ஒருவேளை பிரெவிஸ் ஆட்டமிழக்கமல் இருந்தால், சிஎஸ்கே வெற்றி பெற்றிருக்கவும் வாய்ப்பு இருந்தது. பிரெவிஸின் கடைசி நேர அவுட், சிஎஸ்கே அணியின் தோல்விக்கு ஒருவிதத்தில் காரணமாகும்.

CSK Vs RCB: ஆர்சிபி 'த்ரில்' வெற்றி - இந்த ஒரு அலட்சியத்தால் தோற்றதா சென்னை?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,"தோல்விக்கு நானே பொறுப்பு", என்று தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறினார்

'தோல்விக்கு நானே பொறுப்பு'

தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி அளித்த பேட்டியில் " நான் களத்தில் இருந்தபோது, 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஷாட்களை பெரிய ஷாட்களாக மாற்றியிருந்தால் அழுத்தத்தைக் குறைத்திருக்கலாம் என உணர்கிறேன். ஆதலால், தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். டெத் ஓவர்களில் ஷெப்பர்ட் அருமையாக பேட் செய்தார், நாங்கள் எப்படி பந்துவீசினாலும் அடித்தார். அதிகமான யார்கர்களை வீச இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும். யார்கர்களை வீசமுடியாவிட்டால் அது ஃபுல்டாஸாகி பேட்டர்களுக்கு வாய்ப்பாகிவிடும். பதிராணா பந்துவீச்சில் வேகம் இருக்கிறது, பவுன்ஸர் வீசுகிறார், யார்கர் இல்லை. பெரும்பாலான பேட்டர்கள் பேடில் ஸ்கூப் ஷாட் அடித்து பழகவில்லை, தற்போதுதான் பயிற்சி எடுக்கிறார்கள். பெரும்பாலும் ரிஸ்கான ஷாட் என்பதால் அதற்கு பேட்டர்கள் செல்வதில்லை. பேட்டிங்கில் நாங்கள் இன்னும் பின்தங்கியிருந்தோம். ஆனால், இன்று பேட்டிங் பிரிவு சிறப்பாக செயல்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இன்றைய ஆட்டம்

கொல்கத்தா vs ராஜஸ்தான்

இடம்: கொல்கத்தா

நேரம்: மாலை 3.30

பஞ்சாப் vs லக்னெள

இடம்: தரம்சலா

நேரம்: இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

நாள் – மே 6

இடம் – மும்பை

நேரம்- இரவு 7.30 மணி

சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்

கொல்கத்தா vs சிஎஸ்கே

நாள் – மே 7

இடம் – கொல்கத்தா

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 9

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

விராட் கோலி(ஆர்சிபி) 505 ரன்கள்(11 போட்டிகள்)

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-504 ரன்கள்(10 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 475 (11 போட்டிகள்)

பர்ப்பிள் தொப்பி யாருக்கு?

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 19 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

நூர் அகமது (சிஎஸ்கே) 16 விக்கெட்டுகள்(11 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cly10mpnm3no

  • கருத்துக்கள உறவுகள்

தோல்விக்கு நானே பொறுப்பு - மஹேந்திர சிங் தோனி

%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+-+%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF+

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், இந்த தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக அணியின் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். 

போட்டி நிறைவடைந்த பின்னர் தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். 

”நான் துடுப்பாட்டம் செய்யத் தொடங்கிய போது அழுத்தத்தைக் குறைக்க இன்னும் வேகமாகத் துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும். ஆனால் நான் அதனை செய்யத் தவறிவிட்டேன். தோல்விக்கான முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். பந்துவீச்சில் இன்று சுதப்பி விட்டோம். ”என இதன்போது மஹேந்திர சிங் தோனி குறிப்பிட்டார்.

https://www.hirunews.lk/tamil/404566/தோல்விக்கு-நானே-பொறுப்பு-மஹேந்திர-சிங்-தோனி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது

Published By: VISHNU

05 MAY, 2025 | 01:36 AM

image

(நெவில் அன்தனி)

தரம்சாலா ஹிமாச்சல் ப்ரதேஷ் கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றக்கிழமை (04) இரவு நடைபெற்ற 18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் 54ஆவது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை 37 ஓட்டங்களால் பஞ்சாப் கிங்ஸ் இலகுவாக வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் 15 புள்ளிகளைப் பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நிலையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைக் குவித்தது.

ப்ரப்சிம்ரன் சிங் நான்கு இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து அணிக்கு தெம்பூட்டினார்.

pirab.png

ஜொஷ் இங்லிஷஸுடன் 2ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களையும்  அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயருடன் 3ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களையும் நெஹால் வதேராவுடன் 4ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களையும்  ஷஷாங்  சிங்குடன் 5ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் ப்ரப்சிம்ரன் பகிர்ந்தார்.

48 பந்துகளை எதிர்கொண்ட ப்ரப்சிம்ரன் 6 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 91 ஓட்டங்களையும் ஷ்ரேயஸ் ஐயர் 45 ஓட்டங்களையும் ஜொஷ் இங்லிஸ் 14 பந்துகளில் 30 ஓட்டங்களையும் ஷஷாங் சிங் 15 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 33 ஓட்டங்களையும் மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 5 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆகாஷ் சிங் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் திக்வேஷ் ரதி 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

237 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

bathooni.png

இதல் அயுஷ் படோனி 40 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்ககளுடன் 74 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரும் அப்துல் சமாதும் 6ஆவது விக்கெட்ல் பெறுமதிமிக்க 81 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அப்துல் சமாத் 24 பந்துகளில் 2 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 45 ஓட்டங்களைப் பெற்றார்.

வேறு எவரும் துடுப்பாட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு பிரகாசிக்கவில்லை.

rpsing.png

பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ப்ரப்சிம்ரன் சிங் 

https://www.virakesari.lk/article/213680

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

6 தொடர் சிக்சர்களை பறக்கவிட்டு அச்சுறுத்திய ரியான் பராக் - ஒரு ரன் வித்தியாசத்தில் தப்பிப் பிழைத்த கே.கே.ஆர்

ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐபிஎல், ரியான் பராக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

4 மே 2025

ஐ.பி.எல். தொடரின் 53வது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கெனவே இழந்த ராஜஸ்தான் அணியும், ஒரு போட்டியில் தோற்றாலும் பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோகும் நிலையில் இருக்கும் கொல்கத்தா அணியும் மோதின.

கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி போராடி, ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது. இதனால் பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை கொல்கத்தா அணி தக்க வைத்துள்ளது என்ற போதிலும், அந்த அணி இன்னும் எஞ்சியுள்ள போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐபிஎல், ரியான் பராக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிளே ஆஃப்க்கு முன்னேற அனைத்து போட்டிகளிலும் கொல்கத்தா அணி வென்றாக வேண்டும்

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பவர்பிளேயில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்களை எடுத்தது. அபாயகரமான பேட்டரான சுனில் நரேனை இந்த போட்டியில் ராஜஸ்தான் 11 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. எனினும் ரஹ்மானுல்லா மற்றும் அஜிங்க்யா ரஹானே சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். மற்ற பேட்டர்கள் யாருமே ஏமாற்றாமல் தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

குறிப்பாக ஆண்ட்ரூ ரஸ்ஸல் 25 பந்துகளில் 57 ரன்களை விளாசினார். ரிங்குசிங் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டி 6 பந்துகளில் 19 ரன்களை எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை எடுத்தது.

ராஜஸ்தான் தரப்பில் 4 ஓவர்கள் வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதே போன்று வனிந்து ஹசரங்காவும் 4 ஓவர்களில் 35 ரன்களை கொடுத்திருந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐபிஎல், ரியான் பராக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆட்டநாயகன் விருது பெற்ற ஆண்ட்ரூ ரஸ்ஸல்

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. அதிரடி சதத்தால் எதிர்பார்ப்புக்கு ஆளாகியிருந்த 14 வயது வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் இதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரியான் பராக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

29 பந்துகளில் அரை சதத்தைக் கடந்த ரியான் பராக், மொயின் அலி வீசிய 13வது ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடினார். இந்த ஓவரில் ஒரு வைடு பந்து தவிர்த்து வீசப்பட்ட 5 பந்துகளில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை ரியான் பராக் பறக்கவிட்டார். அடுத்ததாக வருண் சக்ரவர்த்தி வீசிய 14வது ஓவரின் முதல் பந்தை சிம்ரன் ஹெட்மயர் எதிர்கொண்டு ஒரு ரன் எடுத்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐபிஎல், ரியான் பராக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரியான் பராக்கின் அச்சுறுத்தலான ஆட்டம்

மீண்டும் ஸ்டிரைக்கர் எண்டுக்கு வந்த ரியான் பராக் அந்த ஓவரின் 2 வது பந்தில் சிக்சரை விளாசினார். இதன் மூலம் தொடர்ச்சியாக தான் எதிர்கொண்ட 6 பந்துகளில் 6 சிக்சர்களை விளாசி புதிய சாதனை படைத்தார். 45 பந்துகளை எதிர் கொண்ட இவர் 95 ரன்கள் குவித்து ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 22 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் 3வது பந்தில் ஷுபம் துபே சிக்சர் அடிக்கவே ஆட்டத்தில் அனல்பறந்தது. அடுத்த இரண்டு பந்துகளிலும், பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார்.

கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் துபே அடித்த பந்தில் 2 வது ரன்னுக்கு முயற்சிக்கும் போது, அற்புதமாக ஃபீல்டிங் செய்த ரிங்கு சிங் ஜோஃப்ரா ஆர்ச்சரை ரன் அவுட் செய்தார். இதனால் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் ஆண்ட்ரூ ரஸ்ஸல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8jez4j8e87o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஆயுதமாக பிரப்சிம்ரன் உருவெடுத்தது எப்படி?

பஞ்சாப் அணியின் 'மற்றொரு சேவாக்'

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,2019ம் ஆண்டே பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட பிரப்சிம்ரனுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 5 மே 2025

    புதுப்பிக்கப்பட்டது 6 மே 2025

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்டர் 3 பேர் பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டமிழக்கச் செய்து லக்னெளவின் தோல்வியை உறுதி செய்தார் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்.

தரம்சாலாவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 37 ரன்களில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். 5 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி. 237 ரன்கள் இலக்கை துரத்திய லக்னெள அணி 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகள் பெற்று 2வது இடத்துக்கு நகர்ந்து ப்ளே ஆஃப் சுற்றை தக்கவைத்துள்ளது.

இருப்பினும் இன்னும் 2 வெற்றிகள் அந்த அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும். பஞ்சாப் அணி புள்ளிகள் அடிப்படையில் 2வது இடத்தில் இருந்தாலும், அதன் நிகர ரன்ரேட் 0.376 என்று மும்பை(1.274), குஜராத் (0.867) அணிகளைவிடவும் குறைவாக இருக்கிறது.

அடுத்துவரும் போட்டிகளில் ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்கு பெரிய வெற்றிகளைப் பெற வேண்டியது அவசியமாகும்.

அதேசமயம், லக்னெள அணி 11 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் இருக்கிறது நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.456 ஆகக் குறைந்துவிட்டது.

அடுத்துவரும் 3 போட்டிகளிலும் கட்டாயமாக பெரிய வெற்றிகளைப் பெற்று நிகர ரன்ரேட்ட உயர்த்தினால் ப்ளே ஆஃப் சுற்று நிலவரம் தெரியவரும். 16 புள்ளிகள் என்பது கூட இப்போதுள்ள நிலைமையில் சாத்தியமில்லாததாகத் தெரிகிறது.

ஆதலால், லக்னெள அணி 16 புள்ளிகளுடன், நல்ல ரன்ரேட் பெற்றால் வாய்ப்பு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.

பவர்ப்ளே ஓவருக்குள் ஆட்டத்தை முடித்த அர்ஷ்தீப்!

பட மூலாதாரம்,GETTY IMAGES

பஞ்சாப் அணியின் 'மற்றொரு சேவாக்'

பஞ்சாப் அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் இருந்தபோது தொடக்க ஆட்டம் மிக வலிமையாக இருந்தது. அதே காலகட்டத்தை தற்போது பிரப்சிம்ரன் இருக்கும்போது பஞ்சாப் அணி பெற்றுள்ளது.

பிரப்சிம்ரன் இதுவரை சர்வதேச போட்டிகளில் எதிலும் விளையாடாத அன்கேப்டு வீரர், இருப்பினும் ஐபிஎல் தொடரில் சர்வதேச பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை வெளுத்து வாங்குகிறார்.

இந்த ஆட்டத்தில் 30 பந்துகளில் அரைசதம் அடித்த பிரப்சிம்ரன் சிங், 48 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இதில் 7 சிக்ஸர்கள், 6 பவுண்ரிகள். 30 பந்துகளில் அரைசதம் அடித்த பிரப்சிம்ரன், அடுத்த 18 பந்துகளில் 41 ரன்களைச் சேர்த்து 9 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.

முதல் தரப்போட்டிகளிலும், லிஸ்ட் ஏ போட்டிகளிலும் 50 ஆட்டங்களுக்கும் குறைவாகவே பிரப்சிம்ரன் பங்கேற்றுள்ளார். இருப்பினும் பிரப்சிம்ரன் ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து 2019ம் ஆண்டு ஏலத்திலேயே ரூ.4.80 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.

2019ம் ஆண்டே பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட பிரப்சிம்ரனுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. 2023 சீசனில் இருந்துதான் பஞ்சாப் அணி பிரப்சிம்ரனை அனைத்துப் போட்டிகளிலும் பயன்படுத்தத் தொடங்கியது.

கடந்த 3 சீசன்களிலும் சேர்த்து பிரப்சிம்ரன் சிங் 1,100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதன் மூலம் அன்கேப்டு வீரர் ஒருவர் ஐபிஎல் டி20 போட்டியில் 1,100 ரன்களுக்கு மேல் சேர்த்த முதல் பேட்டர் என்ற பெருமையை பிரப்சிம்ரன் சிங் பெற்றார்.

நடப்பு சீசனிலும் 11 போட்டிகளில் ஆடிய பிரப்சிம்ரன் சிங் இதுவரை 4 அரைசதம் உள்பட 437 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 3 போட்டிகளும், ப்ளே ஆஃப் சுற்றுகளும் உள்ளதால் இவரின் ரன் கணக்கு இன்னும் அதிகரிக்கும்.

பஞ்சாப் அணியின் 'மற்றொரு சேவாக்'

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பஞ்சாப் அணி மட்டும் நேற்றைய ஆட்டத்தில் 18 பவுண்டரி, 16 சிக்ஸர்களை விளாசி 200 ரன்களுக்கு மேல் 11 வது முறையாகக் குவித்தது

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரயன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆட்டம் அந்த அணிக்கு மிகப்பெரிய தூணாக அமைந்துள்ளது.

தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தாலே அடுத்து களமிறங்கும் வீரர்கள் மீது அழுத்தம் இருக்காமல், நிதானமாக நினைத்த ஷாட்களை ஆடி ஸ்கோரை உயர்த்த முடியும்.

அந்தப் பணியை பிரப்சிம்ரன் சிங் செய்துள்ளார். ஒரு காலத்தில் பஞ்சாப் அணிக்கு சேவாக் அளித்த அதிரடியான தொடக்கத்தை தற்போது பிரப்சிம்ரன் அளித்து வருகிறார்.

பஞ்சாப் அணி மட்டும் நேற்றைய ஆட்டத்தில் 18 பவுண்டரி, 16 சிக்ஸர்களை விளாசி 200 ரன்களுக்கு மேல் 11 வது முறையாகக் குவித்தது. இந்த சாதனையை மும்பை அணிக்கு அடுத்தார்போல் பஞ்சாப் அணி செய்துள்ளது.

பிரப்சிம்ரன் சிங் ஆட்டம் தொடங்கியதிலிருந்தே அதிரடியாக பேட் செய்தார். பிரப்சிரம்ரன் 22 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழந்திருக்க வேண்டும், ஆனால் நிகோலஸ் பூரன் கேட்சை தவறவிட்டார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை வலுவாகப் பயன்படுத்திய பிரப்சிம்ரன் 91 ரன்களைக் குவித்து பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டார்.

ஸ்ரேயாஸ் அய்யர் (45), இங்கிலிஸ் (30) இருவரும் நடுப்பகுதயில் ஸ்கோரை உயர்த்த உதவினர். கேப்டனுக்குரிய பொறுப்புடன் ஆடிவரும் ஸ்ரேயாஸ் அய்யர் தன்னுடைய இடத்தில் இங்கிலிஸை களமிறக்கி ஆடவைத்து பின்வரிசையில் களமிறங்கினார்.

கடைசி நேரத்தில் சஷாங் சிங் கேமியோ ஆடி 15 பந்துகளில் 33 ரன்கள் சேர்த்தார்.

ஸ்ரேயாஸ் அய்யர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஸ்ரேயாஸ் அய்யர், இங்கிலிஸ் இருவரும் நடுப்பகுதயில் ஸ்கோரை உயர்த்த உதவினர்

அர்ஷ்தீப் எனும் பிரம்மாஸ்திரம்

பஞ்சாப் அணிக்கு பந்துவீச்சில் கிடைத்திருக்கும் பிரம்மாஸ்திரம் அர்ஷ்தீப் சிங். 2019ம் ஆண்டிலிருந்து பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் நீடித்து வருகிறார். இதுவரை பஞ்சாப் அணிக்காக மட்டும் 92 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் வீழ்த்தியுள்ளார்.

இந்த சீசனிலும் இதுவரை 16 விக்கெட்டுகளை அர்ஷ்தீப் வீழ்த்தியுள்ளார். புதிய பந்தில் இடதுகை, வலது கைபேட்டர்களுக்கு ஏற்றவாறு பந்தை ஸ்விங் செய்து வீசுவதில் சிறப்பானவர் அர்ஷ்தீப் சிங்.

இந்த ஆட்டத்தில் பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் லக்னெள அணிக்கு தூண்களாக இருக்கும் டாப்ஆர்டர் பேட்டர்கள் எய்டன் மார்க்ரம் (13), மார்ஷ் (0), நிகோலஸ் பூரன் (6) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னெள அணியின் தோல்வியை ஏறக்குறைய உறுதி செய்தார். 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து லக்னெள அணி தடுமாறியது.

இதைப் பயன்படுத்தி தொடர்ந்து பஞ்சாப் அணி நெருக்கடியளிக்க, கேப்டன் ரிஷப் பண்ட் (18), மில்லர் (11) என ஓமர்சாய் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தவுடன் லக்னெள தோல்வி உறுதியானது.

237 ரன்களை சேஸ் செய்யும் போராட்டத்தில் லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் என்று போராடியது. அப்துல் சமது (45), ஆயுஷ் பதோனி (74) ஆகியோர் இறுதிவரை தங்களால் முடிந்த பங்களிப்பை அளித்து 41 பந்துகளில் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அர்ஷ்தீப் எனும் பிரம்மாஸ்திரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பஞ்சாப் அணிக்கு பந்துவீச்சில் கிடைத்திருக்கும் பிரம்மாஸ்திரம் அர்ஷ்தீப் சிங். 2019ம் ஆண்டிலிருந்து பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் நீடித்து வருகிறார்

லக்னெளவின் கவலைகள்

காயத்திலிருந்து மீண்டுவந்த மயங்க் யாதவை அணியில் சேர்த்தது லக்னெள அணி. கடந்த சீசனில் இருந்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மயங்க் யாதவ் பந்துவீச்சை பிரப்சிம்ரன் வெளுத்துவிட்டார்.

4 ஓவர்கள் வீசிய மயங்க் 60 ரன்களை வாரி வழங்கினார். ஆவேஷ் கான் 19வது ஓவரில் மட்டும் 26 ரன்களை விட்டுக்கொடுத்தார் , இதில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் சென்றது.

பஞ்சாப் அணியில் ஆகாஷ் சிங் மட்டுமே ஓவருக்கு 7 ரன்ரேட்டில் பந்துவீசினார், மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 14 ரன்ரேட்டில் பந்துவீசினர்.

பேட்டர்களில் நிகோலஸ் பூரன் முதல் 6 போட்டிகளில் லக்னெளவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து அதிரடியாக பேட் செய்தார். முதல் 6 போட்டிகளில் 4 அரைசதங்களையும், ஒரு 44 ரன்கள், 12 ரன்கள் என 349 ரன்கள் சேர்த்து 69 சராசரி வைத்திருந்தார். நிகோலன் பூரனின் அதிரடி ஆட்டம் எதிரணிகளுக்கு பெரிய சவாலாக இருந்தது.

பண்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,237 ரன்களை சேஸ் செய்யும் போராட்டத்தில் லக்னெள அணி 5 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் என்று போராடியது

ஆனால் கடந்த 5 போட்டிகளில் நிகோலஸ் பூரன் அதிபட்சமாக 27 ரன்களைக் கடக்கவில்லை, 5 போட்டிகளில் 61 ரன்கள் மட்டுமே சேர்த்து 12.2 ரன்கள் சராசரி வைத்துள்ளார். அதேபோல மிட்ஷெல் மார்ஷ் 2வது பகுதியிலும் பெரிதாக சோபிக்காதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவு.

இதைவிட முக்கியமானது அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இந்த சீசனில் இதுவரை ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.

இந்த சீசனில் 11-வது போட்டியில் 9வது முறையாக 25 ரன்களுக்கும் குறைவாக ரிஷப் பண்ட்நேற்று சேர்த்தார்.

ஐபிஎல் ஏலத்தில் அதிகமான தொகைக்கு ரிஷப் பண்ட் வாங்கப்பட்ட அழுத்தம் காரணமாக, அணியை வழிநடத்துவதிலும், ரன்களைச் சேர்ப்பதிலும் கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறார்.

பண்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மிட்சல் மார்ஷ்

கடின உழைப்புக்கு பலன்

வெற்றிக்குப்பின் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறுகையில் " வீரர்கள் ஒவ்வொருவரும் சரியான நேரத்தில் விஸ்வரூமெடுக்கிறார்கள், அருமையாக பங்களிப்பு செய்கிறார்கள். பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் ஆட்டம் அருமையாக இருந்தது. களத்தில் இறங்கும்போது வெல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு வருகிறோம். அதில் புள்ளிவிவரங்களைப் பற்றி நாங்கள் யோசிப்பதில்லை, எந்த ஸ்கோர் எடுத்தாலும் அதை டிபெண்ட் செய்ய வேண்டும். கடின உழைப்புக்கு பலன் கிடைத்து வருகிறது. ஒவ்வொரு வீரரும் சிறப்பான பங்களிப்பு செய்கிறார்கள். விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். புள்ளிவிவரங்களைப் பற்றி கவலைப்படதீர்கள், வெற்றி மட்டுமே முக்கியம் என்று வீரர்களிடம் தெரிவித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

பண்ட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அர்ஷ்தீப் சிங்

இன்றைய ஆட்டம்

சன்ரைசர்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

இடம்: ஹைதராபாத்

நேரம்: இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

நாள் – மே 6

இடம் – மும்பை

நேரம்- இரவு 7.30 மணி

சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்

கொல்கத்தா vs சிஎஸ்கே

நாள் – மே 7

இடம் – கொல்கத்தா

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 9

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

விராட் கோலி(ஆர்சிபி) 505 ரன்கள்(11 போட்டிகள்)

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-504 ரன்கள்(10 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 475 (11 போட்டிகள்)

பர்ப்பிள் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 19 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

அர்ஷ்தீப் சிங்(பஞ்சாப்) 16 விக்கெட்டுகள்(11போட்டிகள்)

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c8x80qdl5g1o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டேபிள் டாப்பில் குஜராத் டைட்டன்ஸ்: பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்- மும்பையின் நிலை என்ன?

மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 6 மே 2025

    புதுப்பிக்கப்பட்டது 6 மே 2025

நடப்பு ஐபிஎல் சீசனின் 56வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. மழை குறுக்கீடு காரணமாக மாற்றியமைக்கப்பட்ட இந்த போட்டியில், மும்பை அணியை பேட்டிங்கில் சிறப்பாக கட்டுப்படுத்திய குஜராத் அணி சேசிங்கிலும் அசத்தியது. கடைசி பந்து வரை சென்ற இந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது.

இதன் மூலம் குஜராத் அணிக்கான பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் இதுவரையில் ஆடிய போட்டிகளின் நிலவரம் வருமாறு

போட்டிகள்: 11, புள்ளிகள் 16, ரன்ரேட்: 0.793,

எஞ்சியுள்ள போட்டிகள்: டெல்லி, லக்னெள, சிஎஸ்கே

குஜராத் அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. 16 புள்ளிகளை எட்டியுள்ள குஜராத் வலுவான நிகர ரன்ரேட்டில் இருக்கிறது. குஜராத் அணியைப் பொருத்தவரை அடுத்து வரும் 3 போட்டிகளில் 1 போட்டியில் வென்றாலே ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய நிகர ரன்ரேட் துணை செய்யும்.

அதிலும் சொந்த மைதானத்தில் நடக்கும் 3 ஆட்டங்களில் 1 வெற்றி கிடைத்தாலே போதுமானது. சிஎஸ்கே, லக்னெள அணிகள் தடுமாறி வரும் நிலையில் அந்த அணிகளுக்கு எதிரான வெற்றி குஜராத்தை ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கொண்டு செல்லும்.

தோற்றாலும் ரன் ரேட்டில் வலுவான மும்பை அணி

மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

போட்டிகள்: 12, புள்ளிகள்: 14, ரன்ரேட்: 1.156,

எஞ்சியுள்ள ஆட்டங்கள்: பஞ்சாப், டெல்லி

மும்பை அணி வலுவான ரன்ரேட்டில் 14 புள்ளிகளுடன் இருக்கிறது. அடுத்து வரக்கூடிய 2 ஆட்டங்களுமே மும்பை அணிக்கு சவாலானதுதான். இதில் இரண்டையுமே வென்றால் மட்டுமே மும்பை அணி கவலையின்றி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

வெற்றிக்கான கட்டாயம் இருக்கும் போதிலும், மற்ற அனைத்து அணிகளையும்விட ரன்ரேட் மும்பை அணிக்குத்தான் வலுவாக இருக்கிறது. இதனால், மும்பை ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கலாம்.

வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இந்த ஐபிஎல் சீசனில் ப்ளே ஆஃப் செல்லாமல் 3வது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெளியேறியது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றில் 4 இடங்களுக்கு 7 அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கவிருந்த 55வது குரூப் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. டெல்லி அணி முதலில் பேட் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இந்த மழை தொடர்ந்து நீடித்ததால் மேற்கொண்டு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஆகவே ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இழந்தது. 11 போட்டிகளில் 7 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ் அணி இருக்கிறது. இன்னும் 3 போட்டிகளில் அந்த அணி விளையாடி வென்றாலும் 13 புள்ளிகள்தான் பெற முடியும். இது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லப் போதுமானதாக இருக்காது.

இதையடுத்து ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறிய அணிகளின் எண்ணிக்கை சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் என 3 அணிகளாக அதிகரித்துள்ளது. அதேநேரம், ப்ளே ஆஃப் சுற்றில் 4 இடங்களுக்காக 7 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இதில் லக்னெள, கொல்கத்தா அணிகளின் நிலைமை கம்பி மீது நடப்பது போல் இருக்கிறது. இந்த இரு அணிகளும் ஏதாவது ஒரு தோல்வியைச் சந்தித்தாலும் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலையில் இருக்கின்றன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல்,  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சிஎஸ்கே, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆர்சிபி அணிக்கு அடுத்ததாக லக்னெள, சன்ரைசர்ஸ், கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஆட்டங்கள் உள்ளன

போட்டிகள்: 11, புள்ளிகள்: 16, நிகரரன்ரேட்: 0.482.

எஞ்சியுள்ள போட்டிகள்: லக்னௌ, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா

ஆர்சிபி அணி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இருப்பினும் நிகர ரன்ரேட் மும்பை அணியைவிட குறைவாக இருப்பதால் நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டிய நிலையில் இருக்கிறது.

ஆர்சிபி அணிக்கு அடுத்ததாக லக்னெள, சன்ரைசர்ஸ், கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஆட்டங்கள் உள்ளன. இதில் கொல்கத்தா, லக்னெள அணிகளை ஆர்சிபி வென்றாலே அந்த அணிகளின் தலைவிதி தெரிந்துவிடும். ஆர்சிபி அணியைப் பொருத்தவரை அடுத்து வரும் 3 போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு போட்டியை வென்றாலே 18 புள்ளிகளுடன் முடிக்க முடியும், 18 புள்ளிகள் வரை 5 அணிகளும் எடுக்க வாய்ப்புள்ளது.

அதாவது ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் செல்ல நிகர ரன்ரேட்டை பொருட்டாகக் கருத வேண்டாம் என்றால் இன்னும் 2 வெற்றிகள் அவசியம். சொந்த மைதானத்தில் தொடர்ந்து 2 போட்டிகளை ஆர்சிபி வென்றது அந்த அணிக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

அடுத்து வரக்கூடிய 3 ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஏற்கெனவே வெளியேறிவிட்டதால் அந்த அணிக்கு வெற்றி தோல்வி பாதிக்காது, ஆர்சிபி எளிதாக வென்றுவிடலாம். ஆனால், கொல்கத்தா, லக்னெள அணிகளை ஆர்சிபி வெல்லும்பட்சத்தில் அந்த அணிகளின் ப்ளே ஆஃப் வாய்ப்பு சிக்கலாகும்.

பஞ்சாப் கிங்ஸ்

போட்டிகள்: 11, புள்ளிகள்: 15, ரன்ரேட்: 0.376,

எஞ்சியுள்ள போட்டிகள்: டெல்லி, மும்பை, ராஜஸ்தான்

பஞ்சாப் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கிறது, ஆனால், நிகர ரன்ரேட் அடிப்படையில் மும்பையைவிட குறைவாக இருக்கிறது.

ப்ளே ஆஃப் சுற்றில் இடம் பிடிக்க பஞ்சாப் அணிக்கு எஞ்சியுள்ள 3 போட்டிகளில் குறைந்தபட்சம் 2 வெற்றிகள் தேவை. அப்போதுதான் 19 புள்ளிகளுடன் இடத்தை உறுதி செய்ய முடியும்.

ராஜஸ்தான் அணி ஏற்கெனவே வெளியேறிவிட்ட நிலையில் அந்த அணியையும், மும்பை அல்லது டெல்லி அணியையும் வென்றால் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யலாம். ஒருவேளை பஞ்சாப் அணி 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்தால், மற்ற அணிகளின் வெற்றி தோல்விக்காகக் காத்திருக்க வேண்டியதிருக்கும்.

ஐபிஎல்,  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சிஎஸ்கே, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பஞ்சாப் கிங்ஸ் அணி 15 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது

ஐபிஎல்,  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சிஎஸ்கே, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ப்ளே ஆஃப் செல்ல டெல்லி அணிக்கு குறைந்தபட்சம் 2 வெற்றிகளாவது தேவை

டெல்லி கேபிடல்ஸ்

போட்டிகள்:11, புள்ளிகள்: 13, ரன்ரேட்: 0.362,

மீதமுள்ள ஆட்டங்கள்: பஞ்சாப், குஜராத், மும்பை

டெல்லி அணி தொடக்கத்தில் 6 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்தது. ஆனால், அதன் பிறகு 6வது இடத்துக்குச் சரிந்து, கடைசி 4 போட்டிகளில் 3 புள்ளி மட்டுமே கிடைத்துள்ளது. தற்போது அந்த அணி 5 வது இடத்தில் உள்ளது.

டெல்லி அணிக்கு அடுத்து வரக்கூடிய குஜராத், பஞ்சாப், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகவும் சவாலானது. ப்ளே ஆஃப் செல்ல டெல்லி அணிக்கு குறைந்தபட்சம் 2 வெற்றிகளாவது தேவை.

ஆனாலும் 17 புள்ளிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா என்று கூற முடியாது. மும்பை, பஞ்சாப், குஜராத் அணிகளை வீழ்த்துவதும் எளிதானது அல்ல. டெல்லி அணிக்கு அடுத்து வரக்கூடிய 3 போட்டிகளிலும் வெல்வதுதான் ப்ளே ஆஃப் செல்வதற்கான எளிய வழி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஐபிஎல்,  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சிஎஸ்கே, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொல்கத்தா அணி ஒரு தோல்வியைத் தழுவினாலும்கூட தொடரிலிருந்து வெளியேறிவிடும்

போட்டிகள்: 11, புள்ளிகள்: 11, ரன்ரேட்: 0.249,

எஞ்சியுள்ள ஆட்டங்கள்: சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், ஆர்சிபி

நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி மதில்மேல் பூனையாக நிற்கிறது. அடுத்து வரக்கூடிய 3 ஆட்டங்களில் வென்றாலும்கூட 17 புள்ளிகள்தான் கிடைக்கும். இது ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கப் போதுமானதாக இருக்குமா என்று உறுதியாகக் கூற முடியாது.

ஐந்து அணிகள் 18 புள்ளிகள் வரை எடுக்க வாய்ப்பிருக்கும்போது கொல்கத்தா அணியின் 17 புள்ளிகள் ப்ளே ஆஃப் வாய்ப்பைப் பெற்றுத் தராது.

கொல்கத்தா அணி அடுத்து மோதும் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டதால், அந்த அணிகளை வெற்றி தோல்வி பாதிக்காது. ஆனால், கொல்கத்தா அணி ஒரு தோல்வியைத் தழுவினாலும்கூட தொடரிலிருந்து வெளியேறிவிடும்.

ஐபிஎல்,  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சிஎஸ்கே, கிரிக்கெட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,லக்னெள அணி கேப்டன் ரிஷப் பன்ட்

லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ்

போட்டிகள்: 11, புள்ளிகள்:10, ரன்ரேட்: -0.469,

எஞ்சியுள்ள ஆட்டங்கள்: ஆர்சிபி, குஜராத், சன்ரைசர்ஸ்

லக்னெள அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது. அடுத்து வரும் 3 ஆட்டங்களிலும் பிரமாண்ட வெற்றி பெற்றால்தான் 16 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டையும் உயர்த்த முடியும். 16 புள்ளிகள்கூட ப்ளே ஆஃப் செல்ல முடியுமா என்பதை உறுதி செய்யாது.

ஆர்சிபி, குஜராத் அணிகள் ஏற்கெனவே 16 புள்ளிகளை தொட்டுவிட்ட நிலையில் கடைசி இரு இடங்களுக்குத்தான் லக்னெள போட்டியிட முடியும். எஞ்சிய 3 ஆட்டங்களில் ஆர்சிபி, குஜராத்தை வெல்வது லக்னெளவுக்கு கடினமான பணி. நிகர ரன்ரேட்டும் மோசமாக இருப்பதால், ஒரு தோல்வி அடைந்தாலே லக்னெளவின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/crkxg5djppgo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோனி 100 நாட்-அவுட்: கொல்கத்தாவை வீழ்த்தி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வந்த சிஎஸ்கே

CSK vs KKR IPL 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 16 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு 180 ரன்கள் அல்லது அதற்கு அதிகமான ரன்களை சேஸ் செய்வதில் சிஎஸ்கே-வுக்கு இருந்த சிரமம் நேற்றோடு முடிவுக்கு வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏறக்குறைய 12 போட்டிகளுக்குப் பிறகு 180 ரன்களை எட்டி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

நட்சத்திர வீரர்களுக்கே முன்னுரிமை கொடுத்து ஆடி வந்த சிஎஸ்கே, அணியில் மாற்றங்களைச் செய்து, மாத்ரே, ரஷீத், கம்போஜ், உர்வில் படேல், பிரேவிஸ் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்த பிறகு கிடைத்துள்ள 3வது வெற்றி இது.

அதோடு, ஐ.பி.எல் வரலாற்றில் 100 முறை நாட் அவுட்டாக இருந்து தோனி குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்துள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்தது. 180 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 2 பந்துகள் மீதமிருக்கையில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

சிஎஸ்கே அணியின் சுழற்பந்துவீச்சாளர் நூர் அகமது 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

கொல்கத்தாவின் ப்ளே ஆஃப் கனவு?

இந்த வெற்றியால் சிஎஸ்கே அணியின் நிலையில் எந்த மாற்றமும் வரவில்லை. தொடர்ந்து கடைசி இடத்தில்தான் இருக்கிறது. ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் சிஎஸ்கே அடுத்த 2 போட்டிகளில் வென்றாலும் அது பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

கொல்கத்தா அணியைப் பொருத்தவரை இந்தத் தோல்வியால் அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது. கொல்கத்தா அணி தற்போது 12 போட்டிகளில் 11 புள்ளிகளுடன் இருக்கிறது. இன்னும் 2 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில், அதிகபட்சமாக 15 புள்ளிகள் வரைதான் பெற முடியும்.

ஆனால், இது ப்ளே ஆஃப் செல்ல போதுமானதாக இருக்காது. ஒருவேளை கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் செல்ல வேண்டுமென்றால் மும்பை, பஞ்சாப் கிங்ஸ், லக்னெள, டெல்லி அணிகள் அடுத்து வரும் ஆட்டங்களில் தோற்று 14 புள்ளிகளுக்கு மேல் பெறாமல் இருந்தால் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் செல்லும்.

பயம் அறியா இளம் வீரர்கள்

CSK Vs KKR, IPL 2025, மகேந்திர சிங் தோனி, முக்கியச் செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தென் ஆப்பிரிக்க இளம் வீர் பிரேவிஸ் 22 பந்துகளில் அடித்த அரைசதம் சேஸிங்கை விரைவுப்படுத்தியது.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக நூர் அகமது தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால், உண்மையில் சிஎஸ்கே அணியின் சேஸிங் நாயகர்களாக இருந்தது அறிமுகப் போட்டியில் களமிறங்கிய உர்வில் படேல்(31), டெவால்ட் பிரேவிஸ் (52) ஆகியோரின் பயம் அறியா ஆட்டம்தான்.

சிஎஸ்கேவின் தொடக்க வீரர்களான ஆயுஷ் மாத்ரே, கான்வே இருவரும் டக்-அவுட்டில் வெளியேறிய பிறகு, 3வது வீரராக வந்த உர்வில் படேல், அறிமுகப் போட்டி என்ற பதற்றமும், பயமும் இல்லாமல் ஷாட்களை ஆடினார்.

நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசிய உர்வில் படேல் 11 பந்துகளில் 31 ரன்களை விளாசி, அரோரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேவில் உர்வில் படேல் அமைத்துக் கொடுத்த அடித்தளம் பவர்ப்ளே முடியும் வரை விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்ரேட் குறையவில்லை.

ஜடேஜா(19), அஸ்வின்(8) சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. இருப்பினும் சிஎஸ்கே ரன்ரேட் ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரீதியில் ஸ்திரமாக இருந்தது. இதை அடிப்படையாக வைத்து நடுவரிசையில் ஷிவம் துபே, பிரேவிஸ் அணியை வெற்றிக்கு எடுத்துச் சென்றனர்.

அதேபோல தென் ஆப்பிரிக்க இளம் வீரர் பிரேவிஸ் 22 பந்துகளில் அடித்த அரைசதம் சேஸிங்கை விரைவுப்படுத்தியது. வைபவ் அரோரா வீசிய 11வது ஓவரில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்த பிரேவிஸ் ஆட்டத்தைத் தலைகீழாக மாற்றி, வெற்றியை சிஎஸ்கே பக்கம் இழுத்து வந்தார்.

அரோரா வீசிய ஓவருக்கு முன்பு வரை கொல்கத்தா அணியின் வெற்றி சதவிகிதம் 78 ஆக இருந்தது. ஆனால் பிரேவிஸ் 30 ரன்களை விளாசிய பிறகு, சிஎஸ்கேவின் வெற்றி 78 சதவிகிதமாக மாறியது. பிரேவிஸ், உர்வில் படேல் ஆகிய இருவரின் பயம் அறியா ஆட்டம்தான் சிஎஸ்கே சேஸிங்கை எளிதாக்கியது.

CSK Vs KKR, IPL 2025, மகேந்திர சிங் தோனி, முக்கியச் செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆயுஷ் மாத்ரே இந்த ஆட்டத்தில் டக்-அவுட்டில் வெளியேறினாலும், ஆர்சிபிக்கு எதிராக அற்புதமான இன்னிங்ஸ் ஆடினார். மாத்ரே, பிரேவிஸ், உர்வில் ஆகியோர் அனைவரும் ஏப்ரல் 15ஆம் தேதிக்குப் பிறகு காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாக சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டவர்கள்.

கான்வே, ஜடேஜா, விஜய் சங்கர், திரிபாதி, கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிஎஸ்கே அணிக்காகப் பெரிதாக இந்த சீசனிலும் விளையாடாமல் ஏமாற்றிய நிலையில், இளம் வீரர்கள் நீண்ட போட்டிகளுக்குப் பின் 3வது வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

அடுத்து வரும் 2 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வெற்றியைப் பற்றிக் கவலைப்படாமல் அணியில் இருக்கும் இளம் வீரர்களைக் களமிறக்கி, 2026 சீசனுக்கு தயாராவது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

சிஎஸ்கே அணியில் கடந்த போட்டிகளைவிட இந்த ஆட்டத்தில் பேட்டர்கள் ரன் சேர்க்க வேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்தினர். அதற்கு இளம் வீரர்களின் ஆட்டம் முக்கியக் காரணம். கொல்கத்தா அணி ஆட்டத்துக்கு முன்பாக பவர்ப்ளேவில் சிஎஸ்கே ரன்ரேட் இந்த சீசனில் 8.1 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆட்டத்தில் 10 ரன்ரேட்டுக்கு அதிகமாக இருந்தது.

டாப் ஆர்டர் பேட்டர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடவில்லை, சுதந்திரமாக ஆடுவதில் தடுமாறுகிறார்கள். இதனால்தான் இந்த சீசனில் பெரும்பகுதி ஆட்டங்களில் பவர்ப்ளேவில் சிஎஸ்கே குறைந்தபட்சம் 2 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. பவர்ப்ளேவில் சிஎஸ்கே அணியின் தடுமாற்றம் தொடர்கிறது. இந்த ஆட்டத்தில் மோசமாக 5 விக்கெட்டுகளை இழந்தது சிஎஸ்கே. ஆனால் பிரேவிஸ் 11வது ஓவரை பயன்படுத்திய விதம்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.

நடுவரிசையில் ஷிவம் துபே எடுத்த 45 ரன்கள், கடைசி நேரத்தில் தோனி(18 ரன்கள்) ரஸல் பந்தில் அடித்த சிக்ஸர் ஷாட் ஆகியவை சேஸிங்கை எளிதாக்கியது.

தவறைத் திருத்திய தோனி

CSK Vs KKR, IPL 2025, மகேந்திர சிங் தோனி, முக்கியச் செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொல்கத்தா அணி தற்போது 12 போட்டிகளில் 11 புள்ளிகளுடன் இருக்கிறது. இன்னும் 2 ஆட்டங்கள் மீதமிருக்கும் நிலையில், அதிகபட்சமாக 15 புள்ளிகள் வரைதான் பெற முடியும்.

ஆர்சிபிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் தோனி களத்தில் இருந்த போதிலும் எந்த பெரிய ஷாட்டுக்கும் முயலவில்லை. ஆனால், இந்த ஆட்டத்தில் அரோரா வீசி ய 19வது ஓவரில் துபே, நூர் அகமது ஆட்டமிழந்த பிறகு சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது.

ரஸல் வீசிய கடைசி ஓவர் முதல் பந்து "லோ-ஃபுல்டாஸாக" வீசியதை டீப் மிட் விக்கெட்டில் அருமையான சிக்ஸராக மாற்றி, அழுத்தத்தைக் குறைத்தார்.

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் பெரிய ஷாட்களை ஆடாமல் இருந்தது தவறு என்று பேசிய தோனி, இந்த ஆட்டத்தில் அந்த தவறைத் திருத்திக் கொண்டு சிக்ஸர் அடித்து அணியின் அழுத்தத்தைக் குறைத்து வெற்றியைத் தேடித் தந்தார்.

இந்தப் போட்டியில் தோனி இரு கேட்சுகளைப் பிடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 டிஸ்மிஸல் செய்த ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். 153 கேட்சுகள், 47 ஸ்டெம்பிங்குகள் என 270 போட்டிகளில் 200 டிஸ்மிசல்கள் செய்துள்ளார். தோனிக்கு அடுத்து தினேஷ் கார்த்திக் 174 டிஸ்மிசல்கள் செய்துள்ளார்.

போராடும் நடப்பு சாம்பியன்

CSK Vs KKR, IPL 2025, மகேந்திர சிங் தோனி, முக்கியச் செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இந்தப் போட்டியில் தோனி இரு கேட்சுகளை பிடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 டிஸ்மிஸல் செய்த ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்

கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் (11) ஏமாற்றம் அளித்த நிலையில் சுனில் நரேன் (26), கேப்டன் ரஹானே (48) ஆகியோரின் பார்ட்னர்ஷிப் நம்பிக்கையளித்தது. அதன்பின் மணிஷ் பாண்டே(36) ரஸல் (38) நடுப்பகுதியில் சிறப்பாக ஆடிய ஸ்கோரை உயர்த்தினர்.

அதிலும் மணிஷ் பாண்டே களத்துக்கு வந்தது முதல் பெரிய ஷாட்டுக்கு முயன்றும் அவரால் அடிக்க முடியவில்லை. டி20 போட்டியில் களமிறங்கி டெஸ்ட் போட்டி ரீதியில் விளையாடினார். ரிங்கு சிங் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி வைத்திருக்கும் பேட்டிங் வலிமையைக் கொண்டு அந்த அணி இன்னும் கூடுதலாக 20 ரன்களை சேர்த்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், முடியவில்லை.

அதே போல பந்துவீச்சில் சுனில் நரேன், வருண் இருவரின் ஓவர்கள் தான் கட்டுக்கோப்பாக இருந்தது. வருண் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், நரேன் விக்கெட் வீழ்த்தாமல் 28 ரன்களையும் மட்டுமே கொடுத்தார்.

ஆனால், மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவருக்கு 10 ரன்கள் வீதம் வழங்கினர். அதிலும் வைபவ் அரோரா 16 ரன்ரேட்டில் வாரி வழங்கி தோல்விக்கு முக்கியக் காரணமானார். அவர் வீசிய 11வது ஓவரில் பிரேவிஸ் அடித்த 30 ரன்கள்தான் ஆட்டத்தை கொல்கத்தா கைகளில் இருந்து நழுவ வைக்கக் காரணமாக இருந்தது. வெற்றிக்காக அனைவரும் போராடியும் சிலர் செய்த தவறுக்குப் பெரிய விலையை கொல்கத்தா கொடுத்துள்ளது.

எதிர்காலம் பற்றி தோனி கருத்து

CSK Vs KKR, IPL 2025, மகேந்திர சிங் தோனி, முக்கியச் செய்திகள், விளையாட்டு செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கொல்கத்தா அணியைப் பொருத்தவரை இந்தத் தோல்வியால் அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.

வெற்றிக்குப் பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் "இது எங்களுக்குக் கிடைத்த 3வது வெற்றி. பல போட்டிகளில் நாங்கள் நினைத்தது போல சில விஷயங்கள் நடக்கவில்லை. பெருமையைப் பற்றிப் பேசுவதற்கு முன், நிதர்சனத்தை உணர வேண்டும். 25 வீரர்களும் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.

எந்த பேட்டர் உடற்தகுதியுடன் இருக்கிறார், யாரை பந்துவீச வைக்கலாம் என்பதையும் சிந்திக்க வேண்டும். இந்த போட்டியில் பேட்டர்கள் ரன் சேர்க்க வேண்டும் என்ற தாகத்தோடு ஆடியது மகிழ்ச்சியாக இருந்தது," என்று கூறினார்.

மேலும், "எங்களுடன் அணியில் இருக்கும் மற்ற வீரர்களையும் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் பரிசோதிக்க வாய்ப்பாக இருக்கும். தொடரில் இருந்து நாங்கள் வெளியேறியதால், அந்த வீரர்களின் மனநிலை, அழுத்தத்தைத் தாங்கும் திறனை பரிசோதிக்கலாம்.

பிரேவிஸ் ஆட்டத்தைக் கடைசி வரை ஆழமாகக் கொண்டு செல்ல உதவினார். வருண், சுனில் நரேன் பந்துவீச்சில் நான் விக்கெட்டை இழக்கவில்லை. வேகப்பந்துவீச்சு வரட்டும் என்று காத்திருந்தேன்," என்றும் குறிப்பிட்டார்.

அதோடு, தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசிக் கட்டத்தில் இருப்பதாகக் கூறிய தோனி, "ஆண்டுக்கே 2 மாதங்கள்தான் விளையாடுகிறேன். இந்த ஐபிஎல் முடிந்தபின் அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்கு நான் கடினமாக உழைக்கும் அளவு, அழுத்தத்தைத் தாங்கும் அளவு உடல்நிலை தாங்குமா என பார்க்க வேண்டும். இப்போது எதையும் முடியு செய்ய முடியாது. ரசிகர்களின் அன்பும், அரவணைப்பும் அற்புதமாக இருக்கிறது," எனத் தெரிவித்தார்.

IPL 2025

பட மூலாதாரம்,GETTY IMAGES

அடுத்து வரும் முக்கிய ஆட்டங்கள்

இன்றைய ஆட்டம்

  • பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

  • இடம்: தரம்சாலா

  • நேரம்: இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

  • நாள் – மே 6

  • இடம் – மும்பை

  • நேரம்- இரவு 7.30 மணி

சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்

  • ராஜஸ்தான் vs சிஎஸ்கே

  • நாள் – மே 12

  • இடம் – சென்னை

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

  • ஆர்சிபி vs லக்னெள

  • நாள் – மே 9

  • இடம் – லக்னெள

  • நேரம்- இரவு 7.30 மணி

மும்பையின் அடுத்த ஆட்டம்

  • மும்பை vs பஞ்சாப்

  • நாள் – மே 11

  • இடம் – தரம்சலா

  • நேரம்- பிற்பகல் 3.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

  • சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) - 510 (12 போட்டிகள்)

  • சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்) - 509 ரன்கள்(11 போட்டிகள்)

  • சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்) - 508 ரன்கள்(11 போட்டிகள்)

நீலத் தொப்பி

  • பிரசித் கிருஷ்ணா (குஜராத்) - 20 விக்கெட்டுகள்(11 போட்டிகள்)

  • நூர் அகமது(சிஎஸ்கே) - 20 விக்கெட்டுகள்(12போட்டிகள்)

  • ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) - 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c98955eq639o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் திரும்பி வருவார்களா?

ஐபிஎல், பிசிசிஐ,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஐபிஎல் தொடர் மே17 முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிப்பு

12 மே 2025

புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட, நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நாடு முழுவதும் 6 நகரங்களில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை முதல் போட்டிகள் நடைபெறும் 6 நகரங்கள் எவை? ஐபிஎல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் சொந்த நாடு திரும்பிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் திரும்பி வருவார்களா?

பிசிசிஐ அறிக்கை

அரசு மற்றும் பாதுகாப்பு முகமைகள் மற்றும் பங்கேற்பாளர்களுடன் நடத்தப்பட்ட நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, நடப்பு தொடரின் எஞ்சிய போட்டிகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டதாக பிசிசிஐயின் அறிக்கை கூறுகிறது.

எஞ்சிய 17 போட்டிகள் இந்தியாவின் 6 இடங்களில் நடைபெறும், மே 17ம் தேதி போட்டிகள் தொடங்கி ஜூன் 3 ம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கான கால அட்டவணை கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • குவாலிஃபயர்1 போட்டி - மே29ம் தேதி

  • எலிமினேட்டர் போட்டி - மே 30ம் தேதி

  • குவாலிஃபயர்2 போட்டி - ஜூன் 1ம் தேதி

  • இறுதிப்போட்டி - ஜூன் 3ம் தேதி

பிளேஆஃப் சுற்றுக்கான போட்டிகளின் மைதானங்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டை மீண்டும் தொடங்க உதவிய, இந்திய பாதுகாப்புப் படைகளின் வீரத்திற்கு வணக்கம் தெரிவிப்பதாகவும், கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்துவதோடு, தேச நலனில் உறுதியோடு இருப்பதாகவும் பிசிசிஐ கௌரவ செயலாளர் தேவஜித் ஷைகியா பெயரில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள் நடக்கும் 6 நகரங்கள் எவை?

ஐபிஎல் தொடரில் சனிக்கிழமை முதல் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னௌ, ஆமதாபாத், மும்பை ஆகிய நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஜெய்ப்பூர் தவிர மற்ற அனைத்தும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் முன்னணியில் உள்ள அணிகளின் சொந்த மைதானங்களாகும்.

ஐபிஎல் புதிய அட்டவணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்

ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பார்களா?

ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்களா? என்பது குறித்து நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (ACA) தனது வீரர்களே அதுகுறித்து தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவுக்குத் திரும்புவதா இல்லையா என்பது குறித்து வீரர்கள் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகளை ஆதரிப்போம்" என்று கூறப்பட்டுள்ளது.

ஐபில் முடிந்ததும், ஒரு வாரம் கழித்து ஜூன் 11-ஆம் தேதி தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட சாத்தியமான கேப்டன் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் 4 ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல்லில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் புதிய அட்டவணை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடும் ஜோஸ் பட்லர் (கோப்புப் படம்)

இங்கிலாந்து வீரர்கள் திரும்புவார்களா?

ஐபிஎல் போட்டிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனாலும், மற்ற வெளிநாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் இந்தியாவிலேயே உள்ளனர். லீக்கில் முன்னிலை வகிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் வார இறுதி நாட்களில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 இங்கிலாந்து வீரர்களில், 8 பேர் அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் தொடரில் (அதாவது இறுதிப்போட்டி வரையிலும்) முழுமையாக பங்கேற்க அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அட்டவணைப்படி, ஐபிஎல் இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது.

அதேநேரத்தில், மே 29-ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று டி20 மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அணிக்கு திரும்புமாறு வீரர்கள் கேட்டுக் கொள்ளப்படுவார்களா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

ஐபிஎல் ஒரு வாரம் ரத்தானதன் பின்னணி

முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தால் ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்பட்டது.

நடப்பு ஐபிஎல் தொடரின் குரூப் சுற்றின் 58வது போட்டியாக டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த மே 8ம் தேதி இமாச்சல பிரதேச மாநிலம் தரம்ஷாலாவில் நடைபெற்றது. பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில், இந்த போட்டி பாதியில் கைவிடப்பட்டது.

போட்டியின் நடுவே சைரன் ஒலிக்கப்பட்டு, விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவிய நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் புதிய அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq85vw551pqo

  • கருத்துக்கள உறவுகள்

தமது அணி வீரர்களை நாடு திரும்புமாறு தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவிப்பு!

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21

தமது அணி வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இந்த ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் தென்னாபிரிக்காவிலிருந்து மொத்தம் 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

எனினும், அவர்களில் 8 பேர், எதிர்வரும் ஜூன் 11 முதல் லோர்ட்ஸில் ஆரம்பமாகும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உடனான ஆரம்ப ஒப்பந்தத்தில், இந்தியன் ப்ரீமியர் லீக் இறுதிப் போட்டி 25 ஆம் திகதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையின் படி ஜூன் மாதம் 3ஆம் திகதியே ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 30 ஆம் திகதி லண்டனுக்குப் புறப்பட வேண்டியுள்ளமையினால், தமது வீரர்கள் 26 ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்ப வேண்டும் எனத் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவிக்கிறது.

அதற்கமைய, இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள தென் ஆபிரிக்க வீரர்களில் Corbin Bosch, Wiaan Mulder, Marco Jansen, Aiden Markram, Lungi Ngidi, Kagiso Rabada, Ryan Rickelton ஆகியோர், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிக்கான தென்னாபிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளனர்.

https://www.hirunews.lk/tamil/405288/தமது-அணி-வீரர்களை-நாடு-திரும்புமாறு-தென்னாபிரிக்க-கிரிக்கெட்-சபை-அறிவிப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 ஆண்டுகளுக்குப் பின் பிளே ஆஃப் வாய்ப்பு? - படிப்படியாக முன்னேறும் பஞ்சாப்

ப்ளே ஆஃப் கனவில் அந்தரத்தில் தொங்கும் பஞ்சாப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பஞ்சாப் அணியின் சஷாங் சிங் 59 ரன்கள் எடுத்தார்

18 மே 2025

ஜெய்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 59-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது. 220 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் பஞ்சாப் அணி மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது.

பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது, தேஷ்பாண்டே,மபாகா பந்துவீச்சில் முதல் 3 விக்கெட்டுகளை, 34 ரன்களுக்கு இழந்தது பஞ்சாப் அணி. இந்த ஐபிஎல் சீசனில் பவர்ப்ளேயில் ராஜஸ்தான் அணி அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்தது இந்த போட்டியில் தான்.

பஞ்சாப் அணிக்கு சிறந்த தொடக்கத்தை அளித்த பரியன்ஸ் ஆர்யா(9), பிரப்சிம்ரன் சிங்(21) ஆகியோர் தேஷ்பாண்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழக்கவே, மிட்ஷெல் ஓவன் ரன் ஏதும் சேர்க்காமல் மபாகா ஓவரில் ஆட்டமிழந்தார். 19 பந்துகளில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்களுடன் பஞ்சாப் அணி தடுமாறியது.

4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், நேகல்வதேரா ஜோடி சேர்ந்த அணியை மீட்டெடுத்தனர். பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் சேர்த்தது.

அறியப்படாத ஹீரோ வதேரா

நேகல் வதேரா தன்னை நிலைப்படுத்தியபின் ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நேகல் வதேரா தன்னை நிலைப்படுத்தியபின் ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.

நேகல் வதேரா தன்னை நிலைப்படுத்தியபின் ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். அதிகம்அறியப்படாத ஹீரோவா ஐபிஎல் தொடரில் வலம் வரும் நேகல் வதேரா தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி ரன்களைச் சேர்த்தார். இந்த ஐபிஎல் சீசனில் 10 இன்னிங்ஸில் களமிறங்கிய வதேரா 6 இன்னிங்ஸில் தனது ஸ்டிரைக் ரேட்டை 150க்கு மேலாகவைத்துள்ளார். அதிலும் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஸ்ட்ரைக் ரேட்டை 156 ஆகவும், 86 சரசாரி வைத்துள்ளார், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 160 ஸ்ட்ரேக்ரேட் வைத்துள்ளார்.

நடுப்பகுதி ஓவரை சிறப்பாகப் பயன்படுத்திய நேகல் வதேரா ராஜஸ்தான் பந்துவீச்சை வெளுத்து வாங்கி ஸ்கோரை உயர்த்தினார் 10.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடிய வதேரா 25 பந்துகளில் அரைசதம் அடித்தார், இதில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.

ஃபினிஷர் சஷாங் சிங்

ரியான் பராக் வீசிய 11வது ஓவரில் ஸ்ரேயாஸ் 30 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட்டை இழந்தார். 4வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்து இருவரும் பிரிந்தனர். அடுத்துவந்த சஷாங் சிங், வதேராவுடன் சேர்ந்தார். முக்கியமான கட்டங்களில் சிறப்பாக பேட் செய்யக்கூடிய சஷாங் சிங் இந்த ஆட்டத்திலும் தனது பங்களிப்பை அளிக்கத் தவறவில்லை.

சஷாங் சிங் களமிறங்கி சிறிது நேரம் தடுமாறினார், ஆனால் ஒரு பவுண்டரி அடித்தபின் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பிய சஷாங் சிங் ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டார்.

மறுபுறம் வதேரா சதத்தை நோக்கி நகர்ந்தார். ஆனால் வதேரா 37 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தநிலையில் மத்வால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும். 5வது விக்கெட்டுக்கு இருவரும் 58 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த ஓமர்சாய், சஷாங் சிங்குடன் சேர்ந்தார்.

பரூக்கி வீசிய 17வது ஓவரில் சிக்ஸர், 2 பவுண்டரி என 16 ரன்களை சஷாங் விளாசி 27 பந்துகளில் அரைசதம் அடித்து தனது ஃபார்மை நிரூபித்தார். டெத் ஓவர்களில் சிறந்த ஃபினிஷராக கருதப்படும் சஷாங் சிங் இந்த முறையும் அணியை பெரிய ஸ்கோருக்கு நகர்த்தினார், இவருக்கு துணையாக ஆடிய ஓமர் சாய் பவுண்டரி சிக்ஸர் என கேமியோ ஆடி 9 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் அணி 60 ரன்கள் சேர்த்தது.

சஷாங் சிங் 30 பந்துகளில் 59 ரன்களிலும், ஓமர் சாய் 21 ரன்களிலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்தது.

இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி 6வது முறையாக 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது. இதன் மூலம் ஒரு சீசனில் அதிகமுறை 200 ரன்களை எட்டிய மும்பை, கொல்கத்தா,ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் வைத்துள்ள சாதனையை பஞ்சாப் அணி சமன் செய்தது. ராஜஸ்தான் தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதிரடி தொடக்கம்

ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாகத் தொடங்கினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாகத் தொடங்கினர்

220 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாகத் தொடங்கினர். ராஜஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறினாலும் போராட்டக்குணத்தை விடவில்லை. அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 4 பவுண்டரி, சிக்ஸர் என 22 ரன்களைச் சேர்த்தார்.

யான்சென் வீசிய 2வது ஓவரில் சூர்யவன்ஷி 2 சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்களை விளாசினார். 3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 50 ரன்களை எட்டியது. 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் அணி, அதில் 66 ரன்கள் பவுண்டரி, சிக்ஸரில் மட்டும் சேர்த்தது. பஞ்சாப் அணி வீரர்கள் யார் பந்துவீச்சிலும் பந்து பவுண்டரி, சிக்ஸர் என ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி பறக்கவிட்டனர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் பஞ்சாப் அணி வெற்றி சதவீதம் 72% ஆக இருந்தது. ஆனால், 29 பந்துகளில் சூர்யவன்ஷி , ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் வெற்றி சதவீதம் 65% ஆக உயர்ந்தது. வெற்றி இருவரின் பக்கமும் மாறி, மாறி சென்றுவந்தது.

முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தநிலையில் பிரார் பந்துவீச்சில் சூர்யவன்ஷி 15 பந்துகளில் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு சேர்த்த 76 ரன்களில் 74 ரன்கள் பவுண்டரி சிக்ஸரிலேயேதான் வந்தது. பவர்ப்ளே ஓவரில் ராஜஸ்தான் அணி முதல் விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் சேர்த்தது. இந்த ஐபிஎல் வரலாற்றிலேயே ராஜஸ்தான் அணி தனது சிறந்த பவர்ப்ளே ஸ்கோரை பதிவு செய்தது.

நடுவரிசை ஏமாற்றம்

ஹர்பிரீத் பிரார் தொடக்கவீரர்கள் இருவரையும் வீழ்த்தி பஞ்சாப்பை ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹர்பிரீத் பிரார் தொடக்கவீரர்கள் இருவரையும் வீழ்த்தி பஞ்சாப்பை ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார்.

ஜெய்ஸ்வால் 24 பந்துகளில் அரைசதம் அடித்தநிலையில் பிரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். பஞ்சாப் அணிக்கு ஹர்பிரீத் பிரார் தொடக்கவீரர்கள் இருவரையும் வீழ்த்தி பஞ்சாப்பை ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார்.

109 ரன்கள் வரை ஒரு விக்கெட் இழந்திருந்த ராஜஸ்தான் அணி அடுத்த 5 ரன்களில் கேப்டன் சாம்ஸன் விக்கெட்டையும் இழந்தது. சாம்ஸன் 20 ரன்னில் ஓமர்சாய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். நடுவரிசை பேட்டர்களான ரியான் பராக்(13), ஷிம்ரன் ஹெட்மயர்(11) ஆகியோர் ஏமாற்றமே ராஜஸ்தான் அணி தடுமாறியது.

துருவ் ஜூரெல் அணியை வெற்றிக்காக நகர்த்தினார், அதிரடியாக ஆடிய ஜூரெல் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால், துருவ் முயற்சிக்கு நடுவரிசை பேட்டர்கள் ஒத்துழைக்கவில்லை. நடுவரிசை பேட்டிங்கிற்கு ஹெட்மயர், பராக் இருந்தபோதிலும் இந்த சீசன்களில் எதிர்பார்த்த அளவு இருவரும் சிறப்பான ஆட்டத்தை அளிக்கவில்லை.

துருவ் ஜூரெல் போராட்டம்

பஞ்சாப் அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. துருவ் ஜூரெல், ஷுபம் துபே களத்தில் இருந்தனர்.அர்ஷ்தீப் 19வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய ஒரு பவுண்டரி மட்டுமே ஜூரெலால் அடிக்க முடிந்ததால் 8 ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது.

யான்சென் வீசிய கடைசி ஓவரில் ஜூரெல், துபே தலா ஒரு ரன் எடுத்தனர். 3வதுபந்தில் தடுமாறிய ஜூரெல்(53) ரன்னில் ஓவனிடம் கேட்ச் கொடுத்தார், அடுத்த வந்த ஹசரங்கா வந்தவேகத்தில் விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மபாகா கடைசி நேரத்தில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடிக்க முடிந்தது இது வெற்றிக்கு போதுமானதாக இல்லை.

20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் சேர்த்து 10 ரன்களில் தோல்வி அடைந்தது. பிரார் 3 விக்கெட்டுகளையும், ஓமர்சாய், யான்சென் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

14வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் ராஜஸ்தான் அணிக்கு பக்க பலமாக இருந்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,14வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங்கில் ராஜஸ்தான் அணிக்கு பக்க பலமாக இருந்தார்

10 ஆண்டுகளுக்குப்பின் ப்ளேஆஃப்

பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் முழுமையாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவில்லை. பஞ்சாப் அணி தற்போது 12 போட்டிகளில் 17 புள்ளிகள் பெற்று ஆர்சிபிக்கு இணையாக இருந்தாலும் நிகர ரன்ரேட் 0.389 என இருப்பதால், 2வது இடத்தில் இருக்கிறது.

பஞ்சாப் அணிக்கு இன்னும் டெல்லி, மும்பை அணியுடன் இரு ஆட்டங்கள் உள்ளன. இதில் ஏதேனும் ஒரு ஆட்டத்தில் வென்றாலே ப்ளே ஆஃப் உறுதியாகிவிடும். 17 புள்ளிகளை 5 அணிகளும் எடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு 17 புள்ளிகள் பஞ்சாப்புக்கு பாதுகாப்பானது இல்லை, இன்னும் ஒரு வெற்றி கண்டிப்பாகத் தேவை.

ஒருவேளை அடுத்த போட்டியில் பஞ்சாப் அணி வென்றால் ஏறக்குறைய 2014ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் பஞ்சாப் அணி செல்லும்.

அறியப்படாத ஆட்டநாயகர்கள்

அறியப்படாத ஆட்டநாயகர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சஷாங் சிங், ஓமர்சாய் ஜோடி

பஞ்சாப் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்பியது அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பிரீத் பிரார். இவர் எடுத்த முதல் இரு விக்கெட்டுகள் ராஜஸ்தான் அணியின் ஸ்கோருக்கு பிரேக் பேட்டது. அதன்பின் ரியான் பராக் விக்கெட்டை எடுத்து நடுவரிசை பேட்டிங்கை உலுக்கி எடுத்தார் பிரார். 4 ஓவர்கள்வீசிய பிரார் 22 ரன்கள் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

அதேபோல ஆட்டத்தில் அறியப்படாத ஆட்டநாயகர்கள் இருவர் உள்ளனர், அரைசதம் அடித்த நேகல் வதேரா(70), சஷாங் சிங்(59) இருவர்தான். இருவரின் அற்புதமான பங்களிப்பால்தான் பஞ்சாப் அணி 200 ரன்களுக்கு மேல் சேர்த்தது. இருவருமே ஐபிஎல் சீசன்களில் சிறப்பாக கடந்த சில சீசன்களாக ஆடி வருகிறார்கள். அதனால்தான் பஞ்சாப் அணி சஷாங்சிங்கை ஏலத்தில் தக்கவைத்தது.

உச்சம் தொட்ட கூட்டணி

ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி கூட்டணி நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் வரை சேர்த்து ஏறக்குறைய வெற்றியின் பாதிதொலைவுவரை அணியை கொண்டுவந்தனர்.

ஆனால், இருவரும் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்தடுத்துவந்த பேட்டர்கள் யாரும் பயன்படுத்தவில்லை. 24வயது ஜெய்ஸ்வாலும், 14வயது சிறுவன் சூர்யவன்ஷியும் பேட்டிங்கில் ராஜஸ்தான் அணியை உச்சம் தொட வைத்தனர். இருப்பினும், இருவரின் உழைப்புக்கு அணி வெற்றிபெற்றிருந்தால், மதிப்பு இருந்திருக்கும்.

ஒரு கட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால் இருவரின் அதிரடியான ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியின் ப்ளேஆஃப் சுற்று கனவில் ராஜஸ்தான் மண் அள்ளிபோட்டுவிடும் என்று நினைக்கத் தோன்றி இருக்கும். இருவரும் பஞ்சாப் பந்துவீச்சை அரங்கின் நாலாபுறமும் சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்டனர்.

ஆனால், ஹர்பிரீத் பிரார் பந்துவீச வந்து இருவரின் விக்கெட்டையும் எடுத்தபின் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறி, பஞ்சாப் அணியின் கரங்களுக்கு மாறியது. ஒரு கட்டத்தில் வெற்றியை ராஜஸ்தான் துரத்தி ஓடினாலும், துருவ் ஜூரெலுக்கு துணையாக நடுவரிசை பேட்டர்கள் ஒத்துழைக்கவில்லை.

அதேபோல பந்துவீச்சிலும் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது. ஆனால், அந்த தருணத்தை பயன்படுத்தி ஆட்டத்தை கடைசிவரை கொண்டு செல்ல நல்ல பந்துவீச்சாளர்கள் இல்லை. நேகல்வதேரா, ஸ்ரேயாஸ், சஷாங் சிங், ஓமர்சாய் ஆகியோர் ஆட்டத்தை பெரியஸ்கோருக்கு நகர்த்தியது ராஜஸ்தான் அணியின் கட்டுக்கோப்பில்லாத, துல்லியமில்லாத பந்துவீச்சை வெளிப்படுத்தியது. ராஜஸ்தான் அணியில் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் வாரி வழங்கியது தோல்விக்கு மிகப்பெரிய காரணம்.

ஒட்டுமொத்தத்தில் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும், அதை அந்த அணி சரியான திட்டமிடல் இல்லாமல் பயன்படுத்தமுடியாமல் தோல்வி அடைந்தது என்றுதான் சொல்ல முடியும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce3vqyg51zlo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாய் சுதர்சன் சதம்: குஜராத் வெற்றியால் 3 அணிகள் பிளேஆஃப் முன்னேற்றம் - நான்காவது அணி எது?

GT vs DC, சாய் சுதர்சன், ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சாய் சுதர்சன்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 19 மே 2025, 02:22 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

டி20 கிரிக்கெட் வரலாற்றில் 200 ரன்கள் அல்லது அதிகமான இலக்கை விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக எட்டிய இரண்டாவது அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. ஐபிஎல் டி20 தொடரில் நேற்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 200 ரன்களை அந்த அணி சேஸ் செய்தது.

இதற்கு முன் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி கராச்சியில் நடந்த டி20 ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி 200 ரன்களுக்கு மேல் விக்கெட் இழப்பின்றி சேஸ் செய்திருந்ததுதான் சாதனையாக இருந்தது. அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இலக்கை 19.3 ஓவர்களில் சேஸ் செய்திருந்தது, ஆனால், நேற்று 19-வது ஓவரிலேயே குஜராத் அணி சேஸ் செய்து சாதனை படைத்தது.

மிஸ்டர் கன்சிஸ்டென்சி ஆட்டநாயகன்

GT vs DC, சாய் சுதர்சன், ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தமிழக வீரரும், நடப்பு தொடரில் "மிஸ்டர் கன்சிஸ்டென்சி" என்று அழைக்கப்படுபவருமான சாய் சுதர்சன் சதம் அடித்தார்

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்தது. 200 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தமிழக வீரரும், நடப்பு தொடரில் "மிஸ்டர் கன்சிஸ்டென்சி" என்று அழைக்கப்படுபவருமான சாய் சுதர்சன் சதம் அடித்து 108 ரன்களுடனும் (61பந்துகள் - 4 சிக்ஸர், 12 பவுண்டரி), கேப்டன் சுப்மான் கில் 93 (53 பந்துகள் - 7 சிக்ஸர், 3 பவுண்டரி) ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஐபிஎல் டி20 தொடரில் சாய் சுதர்சன் அடிக்கும் 2வது சதம் இதுவாகும். ஆட்டநாயகன் விருதையும் சாய் சுதர்சன் பெற்றார்.

குஜராத் அணியின் ஒரு விக்கெட்டைக் கூட டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களால் வீழ்த்த முடியவில்லை. சாய் சுதர்சன், சுப்மான் கில் இருவரும் தங்கள் பேட்டிங்கில் ஒரு சிறிய தவறைக்கூட செய்யாமல் பேட் செய்தார்கள்.

200 ரன்களை சேஸ் செய்கிறோம், பெரிய இலக்கு என்ற பதற்றம், ரன் சேர்க்க வேண்டும் என்ற வேகம், பெரிய ஷாட்களுக்கு முயற்சி என எதுவும் சுப்மான் கில், சுதர்சனிடம் காணப்படவில்லை. போட்டி தொடங்கியதிலிருந்து கடைசிவரை இருவரும் ஆற்று நீரோடை போன்று சீராக, அலட்டல் இன்றி ரன்களை எடுத்தனர். தேவைப்படும் நேரத்தில் சிக்ஸர், பவுண்டரி அடித்து ரன்ரேட்டை சிறப்பாக பராமரித்து வெற்றியை சிரமமின்றி பெற்றனர். இதனால் டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு காரணமாக இருந்த கே.எல்.ராகுலின் சதம் (112) வீணானது.

சுதர்சன் அதிரடி தொடக்கம்

GT vs DC, சாய் சுதர்சன், ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தமிழக வீரர் சுதர்சன் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடும் முடிவுடன் இருந்தார்.

200 ரன்கள் இலக்கு என்பதைப் புரிந்து கொண்ட தமிழக வீரர் சுதர்சன் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடும் முடிவுடன் இருந்தார். மறுபுறம் சுப்மான் கில் நிதான ஆட்டத்தைக் கடைபிடித்தார். புதிய பந்தில் நடராஜன் பந்துவீச, அந்த ஓவரை வெளுத்த சுதர்சன் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என விளாசி எடுத்தார்.

3வது ஓவர் முடிவில் 13 பந்துகளில் 35 ரன்களை சுதர்சன் சேர்த்திருந்தார். முஸ்தாபிசுர், சமீரா பந்துவீசியும் சுதர்சன் "டைமிங் ஷாட்"களில் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதைத் தடுக்க முடியவில்லை. சுதர்சன் எந்தவிதமான சிரமமும் இன்றி, பந்து செல்லும் போக்கிலேயே பவுண்டரி அடிப்பதும், சரியான டைமிங்கில் சிக்ஸருக்கு பந்தை தூக்கிவிடுவதும் பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்திருந்தது.

அதிரடியாக ஆடிய சுதர்சன் 30 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். சுப்மான் கில் மெதுவாகத் தொடங்கி 8 ஓவர்கள் வரை 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். ஆனால், அடுத்த 3 ஓவர்களில் அக்ஸர், குல்தீப், விப்ராஜ் ஆகியோரின் ஓவரில் தலா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டும், சமீரா ஓவரில் பவுண்டரி அடித்தும் கியரை மாற்றிய கில் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

வெற்றிக்கு வித்திட்ட பார்ட்னர்ஷிப்

GT vs DC, சாய் சுதர்சன், ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வெற்றிக்கு காரணமாக அமைந்த பார்ட்னர்ஷிப்

இருவரும் ஃபார்முக்கு வந்தபின், டெல்லி பந்துவீச்சாளர்களால் எவ்வாறு பந்துவீசுவதென்று தெரியவில்லை. குல்தீப், விப்ராஜ், அக்ஸர் என 3 சுழற்பந்துவீச்சாளர்கள் நடுப்பகுதி ஓவர்களை வீசியும் சிறிய தவறைக்கூட இருவரும் செய்யவில்லை. இருமுறை 3வது நடுவருக்கு டெல்லி அணி சென்றும் விக்கெட் கிடைக்கவில்லை. 15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 154 ரன்களை விக்கெட் இழப்பின்றி சேர்த்தது.

முஸ்தாபிசுர் வீசிய 16-வது ஓவரில் சுதர்சன் தொடர்ந்து இரு பவுண்டரிகளையும், குல்தீப் வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸரும் அடித்து 56 பந்துகளில் சுதர்சன் ஐபிஎல்-ல் தனது 2வது சதத்தை நிறைவு செய்தார். அரைசதத்தை 30 பந்துகளிலும், அடுத்த 26 பந்துகளில் அடுத்த 50 ரன்களையும் சுதர்சன் அடித்தார். இறுதியில் வின்னிங் ஷாட்டாக சுதர்சன் சிக்ஸர் அடித்தார்.

இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய டெல்லி பந்துவீச்சாளர்களின் போராட்டம் கடைசியில் தோல்வியில் முடிந்தது.

கே.எல் ராகுலின் போராட்டம் வீண்

GT vs DC, சாய் சுதர்சன், ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு கே.எல்.ராகுலின் சதம் முக்கியப் பங்கு வகித்தது

டெல்லி அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு கே.எல்.ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் (4 சிக்ஸர், 14 பவுண்டரி) சேர்த்தது முக்கியமாக இருந்தது. டெல்லி மைதானம் மற்ற மைதானங்களைவிட சிறியது என்பதால், வேகப்பந்துவீச்சில் பேட்டர் டிபெண்ட் ஷாட் ஆடினாலே பவுண்டரி செல்லும் நிலையில்தான் இருந்தது. ஆனாலும், ராகுலின் ஒவ்வொரு ஷாட்டும் கண்ணில் ஒத்திக்கொள்ளும் வகையில் இருந்தது.

இந்த சீசனில் முதல்முறையாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராகுல் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார். ரபாடா ஓவரில் 2 சிக்ஸர்கள், பவுண்டரி என ராகுல் ஆட்டம் பவர்ப்ளேயில் மிரட்டலாக இருந்தது. தொடக்கத்திலயே டூப்ளசிஸ் (5) விக்கெட்டை டெல்லி அணி இழந்தாலும், அபிஷேக் போரெல் ராகுலுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார்.

அதிரடியாக ஆடிய ராகுல் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார். 2வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்த நிலையில் போரெல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். குஜராத் அணி ஒரு கேட்சை நழுவவிட்டதை ராகுல் நன்கு பயன்படுத்தினார். சாய் கிஷோர் வீசிய 14-வது ஓவரில் 3 பவுண்டரிகளை ராகுல் விளாசி 60 பந்துகளில் சதம் அடித்தார். கேப்டன் அக்ஸர் படேல் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் கேமியோ ஆடி 21 ரன்கள் சேர்த்தார்.

ராகுல் 112 ரன்களுடனும், ஸ்டெப்ஸ் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி அணியின் ஆட்டம் முழுவதும் ராகுலின் பேட்டிங் வியாபித்திருந்தது. டெல்லி அணிக்கு பெரிய ஸ்கோரை பெற்றுக் கொடுத்த ராகுலின் ஆட்டம் பிற்பாதியில் கில் - சுதர்சன் பேட்டிங்கால் மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

டெல்லி அணியின் தவறுகள்

GT vs DC, சாய் சுதர்சன், ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நடராஜன் மட்டுமல்ல டெல்லி அணியில் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 9 ரன்களுக்குக் குறையாமல் ரன்களை வாரி வழங்கினர்.

டெல்லி அணி புதிய பந்தில் பந்துவீச நடராஜனுக்கு 2வது ஓவரிலேயே வாய்ப்பு அளித்தது தோல்விக்கு முக்கியக் காரணமாகும். இதுவரை ஐபிஎல் மட்டுமின்றி, மற்ற உள்நாட்டுப் போட்டிகளில் கூட நடராஜன் புதிய பந்தில் பந்து வீசியதில்லை. பெரும்பாலும் பவர்ப்ளே முடிந்து பந்து தேய்ந்த பின்புதான் பந்துவீசியிருக்கிறார்.

ஏனென்றால், உள்நாட்டுப் போட்டிகளில் நடராஜன் பந்துவீச்சை எதிர்கொண்ட அனுபவம் உள்ள சுதர்சனுக்கு அவரை பந்துவீசச் செய்தது பெரிய தவறாகும். அந்தத் தவறுக்கான தண்டனையாக 3 பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களை விலையாக டெல்லி அணி கொடுத்தது

காயத்திலிருந்து திரும்பிய நடராஜனை சரியாக அக்ஸர் படேல் பயன்படுத்தி இருக்க வேண்டும். நடுப்பகுதி ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் பந்துவீசி பழக்கப்பட்ட நடராஜனை தொடக்க ஓவரில் பந்துவீசச்செய்தது அவரின் நம்பிக்கையையும் உடைத்தெறிந்தது. 3 ஓவர்கள் வீசிய நடராஜன் 49 ரன்கள் வாரி வழங்கினார்.

நடராஜன் மட்டுமல்ல டெல்லி அணியில் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 9 ரன்களுக்குக் குறையாமல் வாரி வழங்கினர்.

GT vs DC, சாய் சுதர்சன், ஐபிஎல் பிளேஆஃப்

படக்குறிப்பு,டெல்லி அணியை வீழ்த்திய குஜராத்

"நினைத்தது நடந்தது"

ஆட்டநாயகன் விருதுடன் ஆரஞ்சு தொப்பியையும் வசப்படுத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன் அளித்த பேட்டியில், " ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துக் கொடுப்பதில் சிறிய மகிழ்ச்சி இருக்கிறது. 6 ஓவர்களுக்குப் பின் 7 முதல் 10 ஓவர் வரை டெல்லி பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஆனால் நானும், கில்லும் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து எங்களை தயார் செய்தோம்.

12 ஓவருக்குப்பின் பெரிய ஸ்கோர் செய்ய 2 ஓவர்கள் கிடைத்தன. அதை இருவரும் பயன்படுத்தினோம். ஒவ்வொரு போட்டியிலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, ஆட்டத்தை ஃபினிஷ் செய்ய நான் நினைப்பேன் ஆனால் முடியவில்லை. இந்த ஆட்டத்தில் நடந்துள்ளது. பேட்டிங்கில் பெரிதாக நான் மாற்றம் செய்யவில்லை.

ஆனால் மனதளவில் சுதந்திரமாக இருக்கிறேன், 15 ஓவர்களுக்குப் பின் என்னால் சிறப்பாக பேட் செய்ய முடிந்தது, சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடவும் செய்கிறேன். கில்லுக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது, இருவரும் பவுண்டரி, சிக்ஸர் அடித்தால் ஷாட்களைப் பற்றி பாராட்டுகளை பரிமாறிக் கொள்வோம், விக்கெட்டுகளுக்கு இடையே ரன் ஓடுவதிலும் சிறப்பாக செயல்பட்டோம்" எனத் தெரிவித்தார்.

3 அணிகள் ப்ளே ஆஃப் முன்னேற்றம்

GT vs DC, சாய் சுதர்சன், ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குஜராத் அணி இந்த வெற்றியால் 12 போட்டிகளில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. அது மட்டுமல்லாமல் ஆர்சிபி அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பிளேஆஃப் முன்னேற நான்காவது இடத்துக்கு மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் போட்டியிடுகின்றன.

பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஆண்டுகளுக்குப் பின் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆர்சிபி அணி கடந்த 6 சீசன்களில் 5வது முறையும், குஜராத் அணி கடந்த 4 சீசன்களில் 3வது முறையும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்த 3 அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனவே தவிர முதல் 3 இடங்களை எந்தெந்த அணிகள் பிடிக்கப் போகிறது என்பது அடுத்துவரும் ஆட்டங்களின் முடிவில்தான் தெரியும்.

ஐபிஎல் கூடுதல் விவரம்

இன்றைய ஆட்டம்

லக்னெள vs சன்ரைசர்ஸ்

  • இடம்: லக்னெள

  • நேரம்: இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

  • நாள் – மே 21

  • இடம் – மும்பை

  • நேரம்- இரவு 7.30 மணி

சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்

ராஜஸ்தான் vs சிஎஸ்கே

  • நாள் – மே 20

  • இடம் – டெல்லி

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs சன்ரைசர்ஸ்

  • நாள் – மே 23

  • இடம் – பெங்களூரு

  • நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

  • சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-617 ரன்கள்(12 போட்டிகள்)

  • சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-601 ரன்கள்(12 போட்டிகள்)

  • ஜெய்ஸ்வால்(ராஜஸ்தான் ராயல்ஸ்) 523 (13 போட்டிகள்)

நீலத் தொப்பி யாருக்கு?

  • பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்)

  • நூர் அகமது (சிஎஸ்கே) 20 விக்கெட்டுகள் (12போட்டிகள்)

  • ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cm265zvz15vo

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறிய லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி

Sports20 May 2025

1747710622_1554970_hirunews.jpg

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது.

தொடர்ந்து 206 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சன்ரைஸஸ் ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக சன்ரைஸஸ் ஹைதராபாத் அணிக்காக 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த அபிஷேக் ஷர்மா தெரிவுசெய்யப்பட்டார்.

இதற்கமைய 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரிலிருந்து லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://hirunews.lk/tm/sports/404963/lucknow-super-giants-knocked-out-of-ipl

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லக்னௌ வெளியேற்றம்: களத்தில் வீரர்கள் மோதலால் பரபரப்பு - திக்வேஷ் ராதி ஒரு போட்டியில் ஆட தடை

SRH vs LSG, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சிவகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 20 மே 2025, 01:56 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல்லில் லக்னௌ அணியின் பிளேஆஃப் சுற்றுக் கனவை சன்ரைசர்ஸ் அணி கலைத்துள்ளது. நேற்றைய லீக் ஆட்டத்தில் லக்னௌ நிர்ணயித்த 206 ரன் இலக்கை 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே எட்டிய சன்ரைசர்ஸ், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபிஷேக் சர்மா, கிளாசன், மலிங்கா ஆகியோர் இந்த வெற்றியை சாத்தியமாக்கினர். மீண்டும் ஒருமுறை நம்ப முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

ஆட்டத்தின் நடுவே இரு அணி வீரர்களும் திடீரென மோதிக் கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. என்ன நடந்தது? ஏற்கெனவே 3 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், எஞ்சியுள்ள நான்காவது இடத்திற்கு இன்னும் எந்தெந்த அணிகள் போட்டியில் உள்ளன?

லக்னௌ சிறப்பான தொடக்கம்

லக்னௌ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் கண்ட லக்னௌ அணிக்கு சிறப்பாக தொடக்கம் கிடைத்தது. மிட்செல் மார்ஷ் - எய்டன் மார்க்ரம் ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி சன்ரைசர்ஸ் அணியை மிரட்டியது.

அரைசதம் அடித்து அசத்திய இருவரும் சேர்ந்து 11-வது ஓவரிலேயே 115 ரன்களை சேர்த்துவிட்டனர். ஒரு விக்கெட் கூட இழக்காத நிலையில் இருந்த லக்னௌ அடுத்திருந்த 9 ஓவர்களில் மலைக்க வைக்கும் அளவுக்கு ரன்களை குவிக்கும் என்று அந்த அணி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் பதிலடியால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

10.3 ஓவர்களில் 115 ரன் என்ற நிலையில் லக்னௌ இருந்தபோது முதல் விக்கெட்டாக மார்ஷ் வீழ்ந்தார். அவர் 39 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார்.

SRH vs LSG, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மிட்செல் மார்ஷ் - எய்டன் மார்க்ரம் ஜோடி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது.

அடுத்து வந்த வீரர்கள் யாரும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளையாடாததால் அந்த அணியால் எதிர்பார்த்த ஸ்கோரை எட்ட முடியவில்லை. கேப்டன் ரிஷப் பந்த் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பூரன் 26 பந்துகளில் 45 ரன் சேர்த்தார்.

மற்றொரு தொடக்க வீரர் மார்க்ரம் 38 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களே எடுத்ததால் லக்னௌ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களே சேர்த்தது. இந்த ரன் மழையிலும் சன்ரைசர்ஸ் அணியில் சிக்கனமாக பந்துவீசிய மலிங்கா 4 ஓவர்களில் 28 ரன் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சன்ரைசர்ஸ் தடாலடி தொடக்கம்

சன்ரைசர்ஸ் அணிக்கு கடினமான இலக்கு என்பதால் லக்னௌ அணியினர் நம்பிக்கையுடன் பவுலிங்கை தொடங்கினர். ஆனால், அதனை சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிறிது நேரத்திலேயே கலைத்துவிட்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி வர தாமதமானதால் இந்த போட்டியில் பங்கேற்காத டிராவிஸ் ஹெட்டுக்குப் பதிலாக தொடக்க வீரராக, இம்பாக்ட் பிளேயராக களம் கண்ட அதர்வா டைட் 9 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்தபடியாக அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தார்.

இருவருமே வாண வேடிக்கை நிகழ்த்தியதால் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் போர்டு மின்னல் வேகத்தில் எகிறியது. இதனால் அந்த அணி பவர் பிளேயில் 72 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த ஓவரை வீசிய ரவி பிஷ்னோய்க்கு அது ஒரு கொடுங்கனவாக மாறியது. அந்த ஓவரின் கடைசி 4 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி வைத்தார். இதனால், சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 98 என்கிற அளவில் எகிறியது.

SRH vs LSG, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,7வது ஓவரின் கடைசி 4 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா அனைத்து பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி வைத்தார்.

அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் சேர்த்து வெளியேறினார். 18 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், நிகோலஸ் பூரனின் சாதனையை சமன் செய்தார். இருவரும் இதுவரை 4 முறை 20 பந்துகளுக்கும் குறைவாக எதிர்கொண்டு அரைசதம் அடித்துள்ளனர்.

அபிஷேக் சர்மா வெளியேறிய பிறகு ஹென்ரிச் கிளாசன் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் போர்டை கவனித்துக் கொண்டார். அவரது அதிரடியால் அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்ரேட்டை எளிதாக பராமரிக்க முடிந்தது. கிளாசன் 28 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். கமிந்து மென்டிசும் தனது பணியை சிறப்பாக செய்தார். அவர் அதிரடியாக 32 ரன்கள் சேர்த்தார்.

தொடக்கம் முதல் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியதால் சன்ரைசர்ஸ் அணி எந்த சிரமமும் இன்றி 10 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே 206 ரன்கள் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.

SRH vs LSG, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹென்ரிச் கிளாசன் சன்ரைசர்ஸ் அணியின் ரன் ரேட்டை கவனித்துக் கொண்டார்.

அபிஷேக் சர்மா - திக்வேஷ் ராதி மோதல்

ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா தனது அணியின் ஸ்கோரை 7.2 ஓவர்களில் 99 ரன்களாக உயர்த்தினார். பின்னர் அவர் திக்வேஷ் ராதியின் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அபிஷேக் சர்மாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் திக்வேஷ் ராதி தனது தனித்துவமான, 'நோட்புக்' கொண்டாட்டத்தை நிகழ்த்தினார். அத்துடன், அபிஷேக்கை வெளியே செல்லும்படி ஆக்ரோஷமாக சைகையும் செய்தார்.

ஏற்கனவே ஆட்டமிழந்த ஏமாற்றத்தில் இருந்த அபிஷேக், ராதியின் கொண்டாட்ட பாணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

நடுவர்கள் மற்றும் பிற வீரர்களின் தலையீட்டிற்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வீடியோ உடனடியாக சமூக ஊடகங்களில் வைரலானது.

இருப்பினும், போட்டிக்குப் பிறகு, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் லக்னோ உதவி பயிற்சியாளர் விஜய் தஹியா ஆகியோர் அபிஷேக் சர்மா - திக்வேஷ் ராதியுடன் பேசியதைக் காண முடிந்தது. பின்னர் இரு வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி பேசிக் கொண்டனர்.

SRH vs LSG, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,திக்வேஷ் ராதி

திக்வேஷ் ராதி ஒரு போட்டியில் விளையாட தடை

நேற்றைய ஆட்டத்தில் நடத்தை விதிகளை மீறியதாக லக்னௌ பந்துவீச்சாளர் திக்வேஷ் ராதி ஒரு போட்டிக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஊடக அறிக்கையின்படி, இந்த சீசனில் பிரிவு 2.5 இன் கீழ் ராதியின் மூன்றாவது லெவல்-1 விதிமீறல் இதுவாகும்.

ஒழுங்கு நடவடிக்கை எதிரொலியாக, லக்னௌ அணி விளையாடும் அடுத்த போட்டியில் திக்வேஷ் ராதி விளையாட முடியாது. அந்த போட்டி மே 22-ஆம் தேதி ஆமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரானதாகும்.

இந்த சீசனில் லக்னோ அணிக்காக அறிமுகமான திக்வேஷ் ராதி ஒவ்வொரு முறையும் விக்கெட் எடுத்த பிறகு தனது தனித்துவமான பாணியில் 'நோட்புக் கொண்டாட்டத்தை' மேற்கொள்கிறார்.

முதல் இரண்டு போட்டிகளில், நமன் தீர் (மும்பை இந்தியன்ஸ்) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (பஞ்சாப் கிங்ஸ்) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு, அவர் கையில் ஏதோ எழுத சைகை காட்டினார், அதே நேரத்தில் சுனில் நரைனை (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) அவுட் செய்த பிறகு, அவர் தரையில் ஏதோ எழுதுவது போன்ற பாவனை காண முடிந்தது.

3 சந்தர்ப்பங்களிலும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

SRH vs LSG, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அபிஷேக் சர்மா, திக்வேஷ் ராதி இருவரையும் நடுவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

லக்னௌ வெளியேற்றம்

சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த வெற்றியின் மூலம் லக்னௌ அணியின் பிளேஆஃப் வாய்ப்பையும் சன்ரைசர்ஸ் பறித்துள்ளது. ஏனெனில், பிளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க லக்னௌ அணி தனக்கிருந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. முதல் போட்டியிலேயே தோற்றுவிட்டதால் அந்த அணிக்கு பிளேஆஃப் வாய்ப்புக்கான கதவுகள் அடைபட்டுவிட்டன.

பிளேஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் ஆகிய அணிகள் ஏற்கெனவே முன்னேறிவிட்டன. எஞ்சியுள்ள ஒரு இடத்துக்கு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மட்டுமே உள்ளன.

சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்

ராஜஸ்தான் vs சிஎஸ்கே

நாள் – மே 20

இடம் – டெல்லி

நேரம்- இரவு 7.30 மணி

SRH vs LSG, அபிஷேக் சர்மா

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

நாள் – மே 21

இடம் – மும்பை

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs சன்ரைசர்ஸ்

நாள் – மே 23

இடம் – பெங்களூரு

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-617 ரன்கள்(12 போட்டிகள்)

சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-601 ரன்கள்(12 போட்டிகள்)

ஜெய்ஸ்வால்(ராஜஸ்தான் ராயல்ஸ்) 523 (13 போட்டிகள்)

நீலத் தொப்பி யாருக்கு?

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்)

நூர் அகமது (சிஎஸ்கே) 20 விக்கெட்டுகள் (12போட்டிகள்)

ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2rveerj1vo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடம் எடுத்த 14 வயது சிறுவன்: ராஜஸ்தானுடன் தோல்விக்கு வித்திட்ட தோனியின் தவறுகள்

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தோனி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல் 2025 சீசனில் கடைசி லீக் ஆட்டத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியுடன் முடித்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்த சீசனில் 8 போட்டிகளில் சேஸிங்கில் தோற்ற ராஜஸ்தான் அணி கடைசி முயற்சியாக நேற்றைய ஆட்டத்தில் சேஸிங்கில் வெற்றி பெற்றது.

இந்த சீசனில் 7 முறை ராஜஸ்தான் அணி டாஸ் வென்றபோதும் அதில் 7 முறையும் சேஸிங் செய்யவே முயன்றது. ஆனால், 6 முறை தோற்றாலும் மனதை தளரவிடாத கேப்டன் சாம்ஸன் நேற்றும் நம்பிக்கையுடன் சேஸிங்கை தேர்வு செய்து முடிவில் அதில் வெற்றியும் பெற்றார்.

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது.

ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 14வயது பேட்டர் சூர்யவம்சி(57), ஜெய்ஸ்வாலின்(36) அதிரடி தொடக்கம் முக்கியக் காரணமாக இருந்தாலும், பந்துவீச்சில் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசிய ஆகாஷ் மத்வால் முக்கிய காரணமாகும்.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆயுஷ் மாத்ரே

மாத்ரே, பிரெவிஸ் சிறப்பான ஆட்டம்

இந்த சீசன் முழுவதும் சிஎஸ்கே அணிக்கு தலைவலியாகவும், தோல்விக்கு காரணமாகவும் இருந்தது பேட்டர்களும், பேட்டிங்கும்தான்.அது நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது. பவர்ப்ளேயில் 3 விக்கெட்டுகளையும், 7.4 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து நடுப்பகுதி பேட்டர்களுக்குத்தான் அழுத்தம் கொடுத்தது. சுதந்திரமாக ஆடவேண்டிய நடுப்பகுதி பேட்டர்களுக்கு அழுத்தம், நெருக்கடி கொடுத்தால் எவ்வாறு பெரிய ஸ்கோருக்கு செல்ல முடியும் என்பது தெரியவில்லை.

சிஎஸ்கே அணியில் நேற்று அதிகபட்ச ஸ்கோர் தொடக்க ஆட்டக்காரர் மாத்ரே(43), பிரெவிஸ்(42) துபே(39) ஆகியோர் மட்டும்தான். மற்ற அனைத்து பேட்டர்களும் 20 ரன்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்தனர். சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது எனத் தெரிந்தவின் சிறந்தகலவை வீரர்களைக் கண்டறியும் பணியில் 2ம் பகுதி சுற்றில் இறங்கியது. ஆனாலும், இன்னும் அந்த அணியால் சிறந்த பேட்டிங் கலவையை தேர்ந்தெடுக்கமுடியவில்லை.

சிஎஸ்கேயின் நடுவரிசைக்கு ரெய்னா, ராயுடு சென்றபின் யாரைக் கொண்டுவருவது என இதுவரை தேடியும் கிடைக்கவில்லை. ஜடேஜாவையும், அஸ்வினையும் நேற்று நடுவரிசையில் களமிறக்கி கையைச்சுட்டுக்கொண்டனர். அஸ்வினை 4வது வரிசையில் களமிறக்கும் அளவுக்கு டி20 போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டரா எனத் தெரியவில்லை. இந்த சீசன் முழுவதும் ஜடேஜாவின் பேட்டிங்கில் நிலைத்தன்மை இல்லை.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பிரெவிஸ்

கடைசிக் கட்டத்தில் தோனி சொதப்பல்

பிரெவிஸ், துபே களத்தில் இருந்தவரை சிஎஸ்கே அணி 200 ரன்களுக்குமேல் சேர்த்துவிடும் என்று உணரப்பட்டது. ஆனால், இருவரும் சென்றபின் தோனியால் இவ்வளவுதான் பேட் செய்ய முடியும் என்பது நேற்று ரசிகர்களுக்கு புரிந்திருக்கும். 200 ரன்களுக்கு மேல் உயர வேண்டிய ஸ்கோரை இழுத்துப்பிடித்து 188 ரன்களோடு நிறுத்திவிட்டனர்.

தோனி களத்துக்கு வந்தவுடனே ஹசரங்கா, ரியான் பராக் இருவரையும் அழைத்து சாம்ஸன் சுழற்பந்துவீசச் செய்து தோனியைக் கட்டிப்போட்டார். தோனியால் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்து 16 ரன்னில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். டெத் ஓவர்களில் மத்வால், துஷார் தேஷ்பாண்டே இருவரும் சிஎஸ்கே பேட்டர்களை திணறவிட்டனர் இருவரும் சேர்ந்து வைடு யார்கர்களையும், யார்கர்களையும் வீசி, சிஎஸ்கே பேட்டர்களை கட்டிப்போட்டனர். கடைசி 4 ஓவர்களில் சிஎஸ்கே 27 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தோனி

சிஎஸ்கேவை திணறவிட்ட ஜெய்ஸ்வால்

188 ரன்களை சேஸ் செய்யப் போகிறோம் என்ற பதற்றமோ கடைசி ஆட்டம்தானே என்ற அலட்சியமோ ராஜஸ்தான் அணியிடம் இல்லை. ஜெய்ஸ்வால் இந்த சீசன் தொடக்கத்திலிருந்து எவ்வாறு அதிரடியாக பேட் செய்தாரோ அதேபாணியை மாற்றாமல் பொறுப்பாகவும், அதிரடியாகவும் தொடங்கினார். 13-வது முறையாக முதல் பந்தில் பவுண்டரி அடித்து ஜெய்ஸ்வால் ஆட்டத்தைத் தொடங்கினார்.

கலீல் அகமதுவின் முதல் ஓவரில் சற்று திணறிய ஜெய்ஸ்வால் 3வது ஓவரிலிருந்து ஃபார்முக்குத் திரும்பி சிக்ஸர், பவுண்டரி என விளாசினார். ஆனால், கம்போஜ் பந்துவீச்சில் பந்து லேசாக ஸ்விங் ஆகாததை கணிக்காமல் ஜெய்ஸ்வால் ஆடியதால் இன்சைட் எட்ஜ் எடுத்து போல்டாகி 19 பந்துகளில் 36 ரன்களில் வெளியேறினார்.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஜெய்ஸ்வால்

சீனியர்களை மிரட்டிய சூர்யவம்சி

அடுத்துவந்த சாம்ஸன், சூர்யவம்சியுடன் சேர்ந்தார். 14 வயது சிறுவன் சூர்யவம்சிக்கு ஒரு திசையில் மட்டும் ஷாட் அடிக்கத் தெரியும், பெரிய ஷாட்களைத் தவிர பொறுமையாக ஆடத் தெரியாது என்ற விமர்சனங்களுக்கு நேற்று சூர்யவம்சி பதில் அளித்தார். அதிரடியாகவும் அதேநேரத்தில் களத்தில் நிலைத்தும் விளையாடுவது எப்படி என்று சிஎஸ்கே வீரர்களுக்கு பாடம் எடுப்பது போல் அவரது ஆட்டம் இருந்தது.

தன்னால் நிதானமாகவும் பேட் செய்ய முடியும், டிபென்ஸ் செய்து ரன்களைச் சேர்க்க முடியும் என்பதை சூர்யவம்சி வெளிப்படுத்தினார். இருப்பினும் அவ்வப்போது தனது அதிரடி ஆட்டத்தால் சிக்ஸர் பவுண்டரிகளை விளாச சூர்யவம்சி தவறவில்லை. பவர்ப்ளேயில் ராஜஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்தது.

உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்ற அஸ்வின், இந்த சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நூர் அகமது இவர்கள் யாருடைய பந்துவீச்சுக்கும் சூர்யவம்சி அஞ்சவில்லை. ஜடேஜா வீசிய முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர், பவுண்டரி அடித்து ஓரம்கட்டினார். அஸ்வின் பந்துவீச்சிலும் சிக்ஸர், பவுண்டரி என வெளுத்து பிரமிப்பூட்டினார் சூர்யவம்சி. நூர் அகமது ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள், 2பவுண்டரிகளை துவைத்து எடுத்தார் சூர்யவம்சி.

14வயது சிறுவன் தங்கள் பந்துவீச்சை இந்தமாதிரி அடித்து நொறுக்கிறாரானே என மனதிற்குள் புலம்பிக்கொண்டே சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். ஆனாலும் சூர்யவம்சியின் அதிரடிக்கு பிரேக்போட முடியவில்லை. 27 பந்துகளில் சூர்யவம்சி தனது 2வது அரைசதத்தை இந்த சீசனில் பதிவு செய்தார். இதில் 4 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் அடங்கும்.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வைபவ் சூர்யவன்ஷி

அஸ்வின் திருப்புமுனை

சூர்யவம்சியை தட்டிக்கொடுத்து, ஒத்துழைத்து கேப்டன் சாம்ஸனும் பேட் செய்தார். அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றனர். இருவரும் களத்தில் இருந்தவரை ராஜஸ்தான் வெற்றி எளிதாகவிடும் என்று நம்பப்பட்டது.

ஆனால், அஸ்வின் வீசிய 14-வது ஓவரில் சாம்ஸன்(41), சூர்யவம்சி(57) இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டம் சிஎஸ்கே கரங்களுக்கு மாறுகிறதா என எண்ணத் தோன்றியது. ரியான் பராக் 3 ரன்னில் விரைவாக வெளியேறினார்.

ஜூரெல் அதிரடி ஆட்டம்

துருவ் ஜூரெல், ஹெட்மெயர் ஜோடி சேர்ந்து அணியை வெற்றிக்கு நகர்த்தினர்.அதிரடியாக ஆடிய ஜூரெல் அஸ்வின் பந்துவீச்சில் சிக்ஸர்களும், நூர் அகமது, ஜடேஜா ஓவர்களில் சில பவுண்டரிகளும் அடித்து வெற்றியை நெருங்க வைத்தார். ஹெட்மெயரும் கேமியோ ஆடவே ராஜஸ்தான் எளிதாக வென்றது. ஜூரெல் 12 பந்துகளில் 31 ரன்களும், ஹெட்மெயர் 5 பந்துகளில் 12 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ராஜஸ்தான் அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் அந்த அணி வீரர் துருவ் ஜூரெல்

அஸ்வின் சுழற்பந்து எடுபடவில்லையா?

இடதுகை பேட்டர்களுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்ற அஸ்வின் நேற்றைய பந்துவீச்சு சொதப்பலாக இருந்தது. அதிலும் சிறுவன் சூர்யவம்சி அஸ்வின் பந்துவீச்சை வெளுத்துவிட்டார்.

இந்த ஆட்டத்தில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அவரின் எக்னாமி ரேட்டை பார்த்தால் படுமோசமாக உள்ளது. 4 ஓவர்கள் வீசிய அஸ்வின் 42 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இவரின் ஓவரில் 6 சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசப்பட்டன.

கேரம் பால், நக்குல் பால் என அஸ்வின் வீசவதையெல்லாம் பேட்டர்கள் எளிதாக ஆடக் கற்றுக்கொண்டுவிட்டனர். அஸ்வின் பாரம்பரிய ஆஃப் ஸ்பின் வீசியிருந்தாலே ரன்களைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தோனியுடன் அஸ்வின்

தோல்விக்கு வித்திட்ட தோனியின் தவறுகள்

சிறந்த கேப்டன் என அறியப்பட்ட தோனி நேற்று கேப்டன்ஷியில் பல தவறுகளைச் செய்தார். நடுவரிசையில் ஜடேஜாவை முன்கூட்டியே களமிறக்காமல் அஸ்வினை ஏன் களமிறக்கினால் என்பது தெரியவில்லை. விக்கெட் சரிந்துவரும்போது, நிலைத்து ஆடக்கூடிய பிரெவிஸ், அல்லது ஜடேஜா, துபேயை முன்கூட்டியே களமிறக்கி இருக்காலம். அதைவிடுத்து, பிரெவிஸை ஏன் 6வது பேட்டராக களமிறக்கினார் எனத் தெரியவில்லை.

அதேபோல பதிரணாவுக்கு தொடக்கத்தில் ஓவர் அளித்தார் அவரும் சிறப்பாகப் பந்துவீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார், தொடர்ந்து பதிராணாவுக்கு ஓவர் வழங்கியிருக்கலாம் ஆனால், பந்துவீச வாய்ப்புத் தராமல் கடைசி நேரத்தில்வாய்ப்பு வழங்கினார். பதிராணா நேற்று 2.1 ஓவர்கள் மட்டுமே வீச வாய்ப்புக் கிடைத்தது. சூர்யவம்சி, ஜெய்ஸ்வால் அதிரடியால் பதற்றமடைந்த தோனி எந்த பந்துவீச்சாளரை பந்துவீச வைப்பது எனத் தெரியாமல் நேற்று சற்று தடுமாறியதைக் காண முடிந்தது.

கேப்டன் கூல் என்ற பெயரெடுத்த தோனியின் முகத்தில் பதற்றத்தின் தடங்கள் தெளிவாகத் தெரிந்தது. அந்த பதற்றம்தான் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியவுடன் கிடைத்த வாய்ப்பை வெற்றியாக மாற்ற முடியாமல் தடுமாற்றத்தை தோனியால் தடுமாற்றத்தை சந்திக்க முடிந்தது.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தோனி

இதுவே பழைய தோனியாகஇருந்திருந்தால் கடைசி நேரத்தில் கிடைத்த வாய்ப்பைக் கூட வெற்றியாக மாற்ற முயற்சி எடுத்து முடிவை எந்த சூழலிலும் மாற்றியிருப்பார். ஆனால், செட்டில் பேட்டர்கள் சாம்ஸன், சூர்யவம்சி இருவரும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்துமே அந்த தருணத்தை வெற்றியாக தோனியால் மாற்ற முடியவில்லை ஏனோ தெரியவில்லை.

பேட்டிங்கிலும் தோனி நேற்று ஜொலிக்கவில்லை. தோனி களமிறங்கும் போது மீதம் 6 ஓவர்கள் இருந்தது, ஸ்கோர் 138 ஆக இருந்தது. தோனி நல்ல ஃபினிஷிங் அளி்த்திருந்தால் ஸ்கோர் நிச்சயமாக 200 ரன்களைக் கடந்திருக்கும். தோனி களத்துக்கு வந்து மந்தமாக ஆடத் தொடங்கியபின் ரன்ரேட் சரிந்தது.

இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை

தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி கூறுகையில் " சிறந்த ஸ்கோர்தான். பிரெவிஸ் பேட்டிங் சிறப்பாக இருந்தது. நாங்கள் ரன் ரேட்டை உயர்த்தும் அளவு பேட் செய்திருக்க வேண்டும். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். கம்போஜ் பந்துவீச்சு நன்றாக இருந்தது, நன்றாக ஸ்விங் செய்கிறார். பவர்ப்ளேயில் அவரின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

இளம் வீரர்கள் நிலைத்தன்மையைக் கொண்டுவர உழைக்க வேண்டும். 200 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் போது நிலைத்தன்மையை கொண்டுவருவது கடினம்தான். ஆனாலும் எந்த நேரத்திலும் சிக்ஸர் அடிக்கும் திறனை வளர்க்க வேண்டும். எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது சீனியர் வீரர்களிடம் இருந்தும், பயிற்சியாளர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளவேண்டும். அனைத்து இளம் வீரர்களுக்கும் இது எனது அறிவுரை" எனத் தெரிவித்தார்.

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தோனியுடன் ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன்

சிஎஸ்கேவுக்கு இது மோசமான சாதனை

இந்த வெற்றியால் ராஜஸ்தானுக்கும், தோல்வியால் சிஎஸ்கே அணிக்கும் எந்த பாதிப்பும் இல்லை, மற்ற அணிகள் மீதும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால், ராஜஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து 8 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் முடித்தது.

சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் அதில் வென்றாலும்கூட நிகரரன்ரேட்டில் மோசமாக இருப்பதால் 10-வது இடத்தில்தான் முடிக்க முடியும். 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணிக்கு 2025 ஐபிஎல் சீசன் வரலாற்றில் மிகமோசமான கருப்பு சீசனாக என்றென்றும் இருக்கும். இதுநாள்வரை சிஎஸ்கே வரலாற்றில் கடைசி இடத்தில் சிஎஸ்கே அடைந்து தொடரை முடித்தது இல்லை. அந்த மோசமான சாதனையோடு சிஎஸ்கேயின் சீசன் முடியப்போகிறது.

ஆட்டங்களின் விவரம்

மும்பை vs டெல்லி கேபிடல்ஸ்

நாள் – மே 21

இடம்: மும்பை

நேரம்: இரவு 7.30

மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் – மே 26

இடம் – ஜெய்பூர்

நேரம்- இரவு 7.30 மணி

குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே

நாள் – மே 25

இடம் – ஆமதாபாத்

நேரம்- மாலை 3.30 மணி

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 27

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

CSK vs RR, தோனி, வைபவ் சூர்யவன்ஷி, பிரெவிஸ், மாத்ரே

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சாய் சுதர்ஸன்

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-617 ரன்கள்(12 போட்டிகள்)

சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-601 ரன்கள்(12 போட்டிகள்)

ஜெய்ஸ்வால்(ராஜஸ்தான் ராயல்ஸ்) 559 (14 போட்டிகள்)

நீலத் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்)

நூர் அகமது(சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள்(13போட்டிகள்)

ஜோஷ் ஹேசல்வுட் (ஆர்சிபி) 18 விக்கெட்டுகள்(10 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq855dq7jkdo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிளே ஆஃப் சுற்றில் மும்பை - ஆட்டத்தை மாற்றிய 2 ஓவர்கள்; தகர்ந்த டெல்லி அணியின் நம்பிக்கை

ஐபிஎல் : ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வெற்றியை கொண்டாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐபிஎல் 2025 சீசன் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கெனவே 3 அணிகள் தகுதி பெற்ற நிலையில், கடைசியாக இருந்த ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டியிட்ட நிலையில், அதில் மும்பை அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைப் பெற்றது.

மும்பை வான்ஹடே மைதானத்தில் நேற்று (மே 21) நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 63-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பைப் பெற்றது.

முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. 181 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களில் ஆட்டமிழந்தது.

11வது முறை

கடந்த 2020ம் ஆண்டிலிருந்து 2வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றது. ஹர்திக் பாண்டியா கேப்டன்ஷிப் பொறுப்பேற்றபின் முதல்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் மும்பை அணி செல்கிறது. ஒட்டுமொத்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 11வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்கிறது.

ஐபிஎல் : ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா

பிளே ஆஃப் சுற்றில் 4 இடங்கள் யாருக்கு?

ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த 4 அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்குத்தான் தகுதி பெற்றுள்ளன, அதில் முதலிடம் முதல் கடைசி இடம் வரை இன்னும் முடிவாகவில்லை. இதில், மும்பை அணி தவிர மற்ற 3 அணிகளுக்கும் இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருப்பதால், அதில் வெற்றி தோல்வியைப் பொருத்து பிளே ஆஃப் சுற்றில் முதல் 4 இடங்கள் முடிவாகும்.

மும்பை அணிக்கு இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருப்பதால் அதில் வென்றால் 18 புள்ளிகளுடன் 1.292 நிகர ரன்ரேட்டுக்கும் அதிகமாக சென்று, 2 அல்லது 3வது இடத்தைப் பிடிக்கலாம். அதேசமயம், பஞ்சாப் அணி 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், ஒரு ஆட்டத்தில் வென்றால்கூட பஞ்சாப் அணி 3வது இடத்தைப் பிடித்துவிடும். அதேபோல, ஆர்சிபி அணியும் 2 போட்டிகளில் ஒரு போட்டியில் வென்று, பஞ்சாபும் ஒரு போட்டியில் வென்றால் 19 புள்ளிகளில் நிகர ரன்ரேட் அடிப்படையில் 2வது இடம் முடிவாகும். இல்லாவிட்டால், ஆர்சிபி 2 போட்டிகளிலும் வென்றால் 2வது இடம் கிடைக்கும்.

குஜராத் அணி எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் வென்றால் 22 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்க முடியும். ஒருவேளை ஒரு ஆட்டத்தில் வென்று, ஒன்றில் தோற்றால் 20 புள்ளிகள்தான் பெறும். ஆனால், ஆர்சிபி 2 போட்டிகளிலும் வென்றுவிட்டால் 21 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கலாம். ஆர்சிபி ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றால் 19 புள்ளிகளுடன் 2வது இடம் பிடிக்கும். அப்போது, குஜராத்தின் ஒரு வெற்றியே அந்த அணியை முதலிடத்துக்கு உயர்த்தும்.

டெல்லி அணியைப் பொருத்தவரை இன்னும் ஒரு ஆட்டம் மீதம் இருந்தாலும் அதில் வெற்றி பெற்றால்கூட பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாது. ஐபிஎல் வரலாற்றிலேயே தொடக்கத்தில் முதல் 4 போட்டிகளில் வென்று, புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கடைசி நேரத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறிய முதல் அணி என்ற பெயரை டெல்லி கேபிடல்ஸ் பெற்றுள்ளது. முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றாலும், அடுத்த 9 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றதால்தான் டெல்லி அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியவில்லை.

அக்ஸர் படேல் கேப்டன்சியில் அற்புதமாக சீசனைத் தொடங்கி, முதல் 6 போட்டிகள் வரை முதலிடத்தில் இருந்து பிளே ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாகத் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீசனின் பிற்பகுதியில் அடுத்தடுத்து தொடர் தோல்விகளைச் சந்தித்தது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவையும், நிகர ரன்ரேட்டில் பெரிய சரிவையும் ஏற்படுத்தி, பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது.

அதேசமயம், மும்பை அணி முதல் போட்டியிலேயே தோற்றாலும், ரோஹித் சர்மா, ரெக்கில்டன், பும்ரா ஆகியோர் தொடக்கத்தில் ஃபார்மில் இல்லாமல் இருந்து பின்னர் தொடர் வெற்றிகளுடன் மும்பை அணி அற்புதமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் வந்துள்ளது.

ஐபிஎல் : ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஸர் படேல்

ஆட்டத்தை மாற்றிய 2 ஓவர்கள்

டெல்லி அணியைப் பொருத்தவரை பந்துவீச்சில் மும்பையைக் கட்டுப்படுத்தி 18-வது ஓவர் வரை ஆட்டத்தை தங்கள் பக்கம்தான் வைத்திருந்தது. சூர்யகுமார், நமன் திர் இருவரும் கடைசி இரு ஓவர்களில் அடித்த 48 ரன்கள் தான் ஆட்டத்தையே திருப்பிவிட்டது.

ஒருவேளை இந்த இரு ஓவர்களை கட்டுக்கோப்பாக டெல்லி அணி வீசியிருந்தால், 150 ரன்களுக்குள் மும்பை அணி சுருண்டிருக்கும். இந்த 2 ஓவர்களில்தான் ஆட்டத்தை மட்டுமல்ல வெற்றியையும் சேர்ந்து டெல்லி அணி இழந்தது. 43 பந்துகளில் 73 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐபிஎல் : ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ்

சிதைத்த பும்ரா, சான்ட்னர்

மும்பை அணியின் பந்துவீ்ச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, சுழற்பந்துவீச்சாளர் சான்ட்னர் இருவரும் சேர்ந்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, டெல்லி அணிக்கு தோல்வியைக் கொடுத்தனர். சான்ட்னர் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், பும்ரா 3.2 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் எடுத்து, டெல்லி அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாகினர்.

சூர்யகுமார் கடைசி இரு ஓவர்களில் ஆட்டத்தை மாற்றியதைப் போல், இருவரின் 5 ஓவர்களும் டெல்லி அணியின் தோல்விக்கு காரணமாகியது.

ஐபிஎல் : ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்ப்ரித் பும்ரா

சேஸிங்கில் தோல்வியடைந்த டெல்லி

181 ரன்கள் இலக்கை சேஸிங் செய்யும் முயற்சியில் நம்பிக்கையுடன் டெல்லி அணி களமிறங்கியது. தீபக் சஹர் ஓவரில் டூப்பிளசிஸும், போல்ட் ஓவரில் கே.எல்.ராகுலும் ஆட்டமிழந்தபோது பாதி நம்பிக்கை தகர்ந்துவிட்டது. அபிஷேக் போரெல் (6), நடுவரிசையில் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் (6), அசுடோஷ் சர்மா (18) ஆகியோர் ஏமாற்றியது டெல்லி அணியை தோல்விக்கு இழுத்து வந்தது.

சமீர் ரிஸ்வி (39), விப்ராஜ் நிகம் (20) ஆகியோர் சேர்த்ததுதான் டெல்லி அணியின் கௌரவமான ஸ்கோராகும். மற்ற வகையில் எந்த பேட்டர்களும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை.

மும்பை அணி திணறல்

மும்பை அணிக்கு ரெக்கில்டன், ரோஹித் சர்மா பெரிய தொடக்கத்தை அளிக்க முயன்றனர். ஆனால் முஸ்தஃபிசுர் பந்துவீச்சில் ரோஹித் சர்மா (5), முகேஷ் கமார் பந்துவீச்சில் ஜேக்ஸ் (21) ரன்னில் ஆட்டமிழந்தனர். பவர் பிளே ஓவருக்குள் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்தது முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. குல்தீப் பந்துவீச்சில் ரெக்கிள்டன் (25) ரன்களில் ஆட்டமிழந்தபோது ஐபிஎல் போட்டிகளில் குல்தீப் 100-வது விக்கெட்டை எட்டினார்.

விப்ராஜ் நிகம், குல்தீப் இருவரும் சேர்ந்து மும்பை பேட்டர்கள் சூர்யகுமார், திலக் வர்மா திணறவிட்டதால் 10 ஓவர்களில் 80 ரன்கள் மட்டுமே மும்பை சேர்த்தது. தடுமாறிய திலக் வர்மா 27 ரன்களில் சமீரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இருவரும் 55 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த கேப்டன் ஹர்திக் 3 ரன்னில் சமீரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

கடைசி இரு ஓவர்கள்

நமன் திர், சூர்யகுமார் இருவரும் தங்களுக்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தனர். 18வது ஓவரை முகேஷ் குமார் வீசியபோதுதான் சூர்யகுமார், நமன்திர் அதிரடியாக ஆடி சிக்ஸர் பவுண்டரி என 26 ரன்கள் சேர்த்தனர். சூர்யகுமார் 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். சமீரா வீசிய கடைசி ஓவரிலும் 2 சிக்ஸர், 2 பவுண்டரி என சூர்யகுமார் விளாச மும்பை அணி 180 ரன்களை எட்டியது.

18-வது ஓவர் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 2 ஓவர்களில் ஆட்டம் தலைகீழாக மாறி 180 ரன்களை எட்டியது. நமன் திர் 8 பந்துகளில் 24 ரன்களும், சூர்யகுமார் 73 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சூர்யகுமார் கணக்கில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

டெல்லி அணியில் விப்ராஜ், குல்தீப் வீசிய 8 ஓவர்கள் தான் ஆட்டத்தை இறுக்கிப் பிடித்து அவர்கள் கைவசம் வைத்திருந்தது. இருவரும் சேர்ந்து 47 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். வேகப்பந்துவீச்சாளர்கள் முகேஷ், சமீரா இருவரும் கடைசி இரு ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாகினர். முஸ்தபிசுர் 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

ஐபிஎல் : ப்ளே ஆஃப் சுற்றில் மும்பை அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,டெல்லி கேபிடல்ஸ் அணியின் விப்ராஜ் நிகம்

'பணி எளிதாக இருந்தது'

வெற்றிக்குப் பின் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், "உண்மையாகவே நான் யாரிடம் பந்தை வீசி பந்துவீசச் சொன்னேனோ அவர்களிடம் இருந்து பந்துவீச்சில் துல்லியம், கட்டுக்கோப்பு இருந்ததால் என் கேப்டன்சி பணி எளிமையாக இருந்தது. 180 ரன்கள் நல்ல ஸ்கோர்தான் என்றாலும், டெல்லி அணி வலுவாக ஆடியிருந்தால் இது பாதுகாப்பில்லாத ஸ்கோர்தான். நமன் திர், சூர்யாவும் கடைசி இரு ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட்டனர். இல்லாவிட்டால் 160 ரன்களுக்குள்தான் ஸ்கோர் இருக்கும்" எனத் தெரிவித்தார்.

ஆட்டங்களின் விவரம்

இன்றைய ஆட்டம்

குஜராத் டைட்டன்ஸ் vs லக்னெள சூப்பர்ஜெயின்ட்ஸ்

இடம்: ஆமதாபாத்

நேரம்: இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் – மே 26

இடம் – ஜெய்பூர்

நேரம்- இரவு 7.30 மணி

சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்

குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே

நாள் – மே 25

இடம் – ஆமதாபாத்

நேரம்- மாலை 3.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 27

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்)-617 ரன்கள் (12 போட்டிகள்)

சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-601 ரன்கள் (12 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்)

நீலத் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள் (12 போட்டிகள்)

நூர் அகமது (சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள் (13போட்டிகள்)

டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgegqj5g01no

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குஜராத்தை வீழ்த்திய லக்னெள: பரபரப்பான பிளே ஆஃப் சுற்றில் முதல் 2 இடங்கள் யாருக்கு?

ஐபிஎல் : குஜராத்தை வீழ்த்திய லக்னெள

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, குஜராத் டைட்டன்ஸ் அணியினரை வீழ்த்திய லக்னௌ சூப்பர் ஜயண்ட்ஸ் அணியினர்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

2025ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசன் கடைசி நேரத்தில் பரபரப்படைந்துள்ளது, ப்ளே ஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெற்ற நிலையில், 4 இடங்களில் எந்தெந்த அணி இடம்பெறும் என்பது கணிக்க முடியாததாகவே அமைந்திருக்கிறது. இதனால் குவாலிஃபயர், குவாலிஃபயர்-2 சுற்று எந்தெந்த அணிகளுக்கு நடக்கும் என்பது சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

ஆமதாபாத்தில் நேற்று (மே 22) நடந்த ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னெள அணி.

இந்த வெற்றியால் லக்னெள அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் வரமுடியாது என்றாலும், தன்னால் இயன்ற சேதாரத்தை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகளுக்கு ஏற்படுத்த முடியும்.

முதலில் பேட் செய்த லக்னெள அணி 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் சேர்த்தது. 236 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் மட்டுமே சேர்த்து 33 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த தோல்வியால் குஜராத் அணி 18 புள்ளிகளுடன், 0.602 நிகர ரன்ரேட்டில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. லக்னெள அணி 12 புள்ளிகளுடன் மைனஸ் 0.337 ரன்ரேட்டில் 6-வது இடத்தில் இருக்கிறது.

பிளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணி முதல் தகுதிச்சுற்றில் விளையாடும் அதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும். 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ள அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் வெல்லும் அணி, முதல் தகுதிச் சுற்றில் தோற்ற அணியுடன் மோத வேண்டும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

ஆனால், இதுவரை பிளே ஆஃப் சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடிக்கப் போகும் அணிகள் யார் என்பதை கணிக்க முடியவில்லை. குஜராத், மும்பைக்கு தலா ஒரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது, பஞ்சாப், ஆர்சிபிக்கு தலா 2 ஆட்டங்கள் மீதமுள்ளன. இதில் அணிகள் பெறும் வெற்றி, இடங்களை முடிவு செய்யும்.

குஜராத் அணி

குஜராத் அணியைப் பொருத்தவரை 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது. முதல் இரு இடங்களைப் பிடிக்க குஜராத் அணிக்கு வாய்ப்பிருக்கிறது, அதற்கு, கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வெல்ல வேண்டும்.

ஒருவேளை ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தங்களின் கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் வென்றால், இரு அணிகளும் 21 புள்ளிகள் பெற்றுவிடும். அந்த நிலையில், குஜராத் அணி 20 புள்ளிகள் வைத்திருந்தாலும் முதல் இரு இடங்களைப் பெற முடியாது.

ஒருவேளை சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி தோற்றால்கூட பிளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களைப் பெற முடியும். அதற்கு ஆர்சிபி கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், பஞ்சாப் அணி மும்பையை கண்டிப்பாக வென்று மற்றொன்றில் தோற்க வேண்டும். அல்லது ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகள் கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். இது நடந்தால் குஜராத் முதல் இரு இடங்களில் வர முடியும்.

குஜராத் அணி முதல் இரு இடங்களில் வரவேண்டுமானால், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தங்களின் கடைசி இரு லீக் ஆட்டங்களி்ல் வெல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஐபிஎல் 2025, குஜராத் டைட்டன்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்,, பிளே ஆஃப், குவாலிஃபையர் சுற்று

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்

ஆர்சிபி, பஞ்சாப் அணிகள்

ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தலா 17 புள்ளிகளுடன் உள்ளன. இதில் ஆர்சிபி 0.482 ரன்ரேட்டிலும், பஞ்சாப் 0.389 ரன்ரேட்டிலும் உள்ளன. ஆர்சிபி அணி கடைசி லீக் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ், லக்னெள அணிகளைச் சந்திக்கிறது. பஞ்சாப் அணி, மும்பை, டெல்லி அணிகளுடன் மோதுகிறது.

ஒருவேளை குஜராத் அணி கடைசி லீக்கில் சிஎஸ்கே அணியை வென்றால் 20 புள்ளிகளுடன் முடிக்கும். அதேசமயம், ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் தங்களின் கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் வென்றால், 21 புள்ளிகளுடன் டாப்-2 இடங்களில் வரலாம். ஆர்சிபி அணி கடைசி 2 லீக் போட்டிகளில் தோற்றால் டாப்-2 இடங்களில் வரமுடியாது. ஒருவேளை ஒரு ஆட்டத்தில் ஆர்சிபி வென்றால் 19 புள்ளிகள் பெறும்.

பஞ்சாப் அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் தோற்றால், 17 புள்ளிகளுடன் இருக்கும், மும்பை அணி கடைசி லீக்கில் வென்றால் 18 புள்ளிகளுடன் முடித்து வலுவான ரன்ரேட்டில் பஞ்சாப் அணியின் 17 புள்ளிகளை விட சிறப்பாக இருந்து 3வது இடத்தைப் பிடிக்கும்.

ஒருவேளை பஞ்சாப் அணி கடைசி இரு லீக் ஆட்டங்களில் ஒன்றில் வென்று, மற்றொன்றின்றில் தோற்றால் 19 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடிக்கும். மும்பை அணி கடைசி லீக்கில் வென்றால் 18 புள்ளிகளுடன் 4வது இடத்தைப் பிடிக்கும்.

ஆக, பஞ்சாப் அணி 3வது இடத்துக்கு வர குறைந்தபட்சம் ஒரு வெற்றி தேவை. இரு ஆட்டங்களிலும் தோற்றால் 4வது இடம்தான் பெறும், மும்பை வெற்றி பெற்றால் 3வது இடத்தைப் பிடிக்கும், சில நேரங்களில் டாப்-2 இடங்களுக்குள் வரலாம்.

ஆர்சிபி அணி கடைசி இரு லீக்கிலும் வென்றால், 21 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கலாம், ஒரு ஆட்டத்தில் வென்றால் 19 புள்ளிகளுடன் முடிக்க முடியும். 2வது இடத்தைப் பெற முடியும். ஆனால், ஒருவேளை குஜராத் அணி கடைசி லீக்கில் சிஎஸ்கேவிடம் தோற்றால் 18 புள்ளிகளுடன் முடிக்கும், மும்பை அணி வலுவான ரன்ரேட்டுடன் 18 புள்ளிகளுடன் முடித்தால் 2வது இடம் அல்லது 3வது இடம் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு நடக்க பஞ்சாப் அணி 2 போட்டிகளிலும் தோற்க வேண்டும்.

ஐபிஎல் : குஜராத்தை வீழ்த்திய லக்னெள

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பஞ்சாப் கிங்ஸ் அணியினர்

மும்பை அணி

மும்பை அணி 16 புள்ளிகளுடன், 1.292 என வலுவான ரன்ரேட்டுடன் 4வது இடத்தில் இருக்கிறது. கடைசி லீக்கில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி இதில் வென்றால்18 புள்ளிகளுடனும் தோற்றால் 16 புள்ளிகளுடன் முடிக்கும். ஒரு வேளை மும்பை அணி வென்று, பஞ்சாப் அணி தனக்கிருக்கும் கடைசி லீக்கிலும் தோற்றால் 17 புள்ளிகளுடன் பஞ்சாப் முடித்து 4வது இடத்தைப் பிடிக்கும். மும்பை அணி 3வது இடத்தைப் பிடிக்க முடியும்.

ஒருவேளை குஜராத் அணி கடைசி லீக்கில் சிஎஸ்கேயிடம் தோற்றால் 18 புள்ளிகளுடன் முடிக்கும். மும்பை அணியும் 18 புள்ளிகளுடன் இருந்து குஜராத்தைவிட வலுவான ரன்ரேட்டில் இருக்கும் பட்சத்தில் 18 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்க முடியும்.

ஒருவேளை ஆர்சிபி கடைசி இரு லீக்கிலும் சன்ரைசர்ஸ், லக்னெளவிடம் தோற்றால் 17 புள்ளிகளுடன் முடிக்கும். அப்போது 18 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை அணி முதலிடத்தைப் பிடிக்கவும் வாய்ப்புள்ளது. நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், ஆர்சிபி 17 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை, ஆர்சிபி அணி ஒரு போட்டியில் வென்றால்கூட 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும்.

ஐபிஎல் : குஜராத்தை வீழ்த்திய லக்னெள

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மும்பை இந்தியன்ஸ் அணியினர்

மார்ஷ், பூரனின் மிரட்டல் ஆட்டம்

லக்னெள அணி தொடரிலிருந்து வெளியேறினாலும் தன்னால் முடிந்த சேதாரத்தை எதிரணிகளுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆட்டத்தில் மார்ஷ் 64 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்து ஆட்டமிமிழந்தார், நிகோலஸ் பூரன் 27 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். லக்னெள அணியில் இருவரும் சேர்த்த ரன்கள்தான் அதிகபட்சமாகும்.

ரஷீத் கான் பந்துவீசுவதற்கு முன்பாக சாய் கிஷோரை அறிமுகப்படுத்தினார் ஷுப்மன் கில். மார்ஷ் 2 சிக்ஸர்களை கிஷோர் பந்துவீச்சில் விளாசினார். ரஷீத் கான் வீசிய முதல் ஓவரிலேயே மார்ஷ் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்கள் சேர்த்தார். சாய் கிஷோர் ஓவரை விளாசிய பூரன் ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். மார்ஷ் 33 பந்துகளில் அரைசதத்தையும், அடுத்த 23 பந்துகளில் அடுத்த 50 ரன்களையும் விரைந்து எட்டி முதல் சதத்தைப் பதிவு செய்தார். நிகோலஸ் பூரனும் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். சதம் அடித்து 114 ரன்கள் சேர்த்த மிட்ஷெல் மார்ஷ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐபிஎல் : குஜராத்தை வீழ்த்திய லக்னெள

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, லக்னௌ அணியின் வீரர் மிஷல் மார்ஷ் 64 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்தார்.

அரிதாக ஆட்டமிழந்த டாப்-3 பேட்டர்கள்

அதேபோல், குஜராத் அணியின் நம்பிக்கை பேட்டர்கள், தொடக்க கூட்டணியான ஷுப்மன் கில்(35) சாய் சுதர்சன்(21), பட்லர்(33) ஆகியோர் 10 ஓவர்களில் ஆட்டமிழந்தனர். இந்த சீசன் முழுவதும் குஜராத் அணியின் நடுவரிசை பேட்டர்களுக்கு பெரிதாக வேலையின்றி இருந்த நிலையில் நேற்று ஷெர்பானே ருதர்போர்ட், ஷாருக்கான் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 40 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை பரபரப்பாக்கினர்.

கடைசி 4 ஓவர்களில் குஜராத் அணி வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ரூதர்ஃபோர்ட் 38 ரன்களில் ரூர்கே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின், அடுத்துவந்த பேட்டர்கள் சரியாக ஆடாததால் கடைசி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது, ஒரு பவுண்டரிகூட குஜராத் பேட்டர்கள் விளாசவில்லை.

இந்த சீசனிலேயே குஜராத் அணியில் டாப்-3 பேட்டர்களும் அரிதாக குறைந்த ரன்னில் 3 பேருமே ஆட்டமிழந்துள்ளனர். இல்லாவிட்டால், டாப்-3 பேட்டர்களில் யாரேனும் இருவர் பெரிய பார்ட்னர்ஷிப்புக்கு வித்திடுவார்கள், அணியை எப்படியேனும் கரைசேர்த்துவிடுவார்கள். ஆனால், 3 பேருமே குறைந்த ரன்னில் 10 ஓவருக்குள் ஆட்டமிழந்தது அரிது.

குஜராத் அணி இந்த சீசனில் சேர்த்த ரன்களில் 76.87 சதவிகித ரன்கள் டாப்-3 பேட்டர்கள் சுதர்சன், கில், பட்லர் மட்டும் சேர்த்தவை. கடந்த போட்டியில் டெல்லி்க்கு எதிராக 200 ரன்களை விக்கெட் இழப்பின்றி சுதர்சனும், கில்லும் சேஸ் செய்தனர்.

ஆனால் இந்த ஆட்டத்தில் ரூர்கே பந்துவீச்சில் சுதர்சன் அடித்த ஷாட்டை மார்க்ரம் அருமையாக கேட்ச் பிடித்தார். பட்லர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். ஆவேஷ் கான் பந்துவீச்சில் அப்துல் சமதிடம் கேட்ச் கொடுத்து கில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் பட்லர் ஆகாஷ் சிங் பந்துவீச்சில் பட்லர் போல்டாகி விக்கெட்டை இழந்தார். 10 ஓவர்களுக்குள் டாப்-3 விக்கெட்டுகளை இழந்தது.

ஐபிஎல் : குஜராத்தை வீழ்த்திய லக்னெள

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, குஜராத் டைடன்ஸ் அணியின் வீரர் சாய் சுதர்சன்

பரிசோதிக்கப்படாத நடுவரிசை

இந்த சீசன் முழுவதும் குஜராத் அணியின் நடுவரிசை பேட்டர்கள் பரிசோதிக்கப்படவில்லை. அதற்கான வாய்ப்பை கொடுக்காமலே டாப்-3 பேட்டர்கள் ஆட்டத்தை முடித்துவந்தனர். ஆனால் இந்த முறை நடுவரிசை பேட்டர்களுக்கான வாய்ப்பை ஷாருக்கான், ரூதர்ஃபோர்ட் பயன்படுத்தினர். இந்த சீசனில் குஜராத் அணியின் நடுவரிசை பேட்டர்கள் 21 ரன்கள் சராசரியும் 165 ஸ்ட்ரைக் ரேட் வைத்து குறைவாக உள்ளனர். இந்த சீசனில் நடுவரிசை பேட்டர்கள் ஃபினிஷிங் பணிக்கு மட்டுமே பயன்பட்டனர்.

ஆனால் நேற்று ரூதர்ஃபோர்ட், தமிழக வீரர் ஷாருக்கான் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 14-15 ஓவர்களில் மட்டும் இருவரும் சேர்ந்து 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 36 ரன்கள் சேர்த்து ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தினர். ஷாருக்கான் 22 பந்துகளில் முதல் அரைசதத்தை விளாசினார். இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். கடைசி 4 ஓவர்களில் குஜராத் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ரூதர்ஃபோர்ட்(38) ஆட்டமிழந்ததும், ஆட்டம் தலைகீழாகமாறியது. அடுத்தடுத்த பேட்டர்கள் ஆட்டமிழக்கவே, குஜராத் அணி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

'வெற்றிக்குத் திரும்புவோம்'

குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறுகையில், "கூடுதலாக 20 ரன்கள் வரை வழங்கியது தோல்விக்கான காரணங்களில் ஒன்று. 210 ரன்களுக்குள் லக்னெளவை கட்டுப்படுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பவர்பிளேயில் சிறப்பாகவே பந்துவீசினோம், பரிசோதனை முயற்சி எடுக்கவில்லை, அதேநேரம் விக்கெட்டுகளையும் வீழ்த்த சிரமப்பட்டோம். ஆனால் கடைசி 14 ஓவர்களில் லக்னெள 180 ரன்கள் சேர்த்தனர். 17-வது ஓவர்கள் வரை சேஸிங்கில் சிறப்பாக செயல்பட்டோம், ரூதர்ஃபோர்ட், ஷாருக்கான் ஆட்டமிழந்தபின் ஆட்டம் எங்களை விட்டு சென்றது. அடுத்த ஆட்டத்தில் வெற்றிப்பாதைக்கு திரும்புவோம்" எனத் தெரிவித்தார்.

ஆட்டங்களின் விவரம்

இன்றைய ஆட்டம்

ஆர்சிபி vs சன்ரைசர்ஸ்

இடம்: லக்னெள

நேரம்: இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் – மே 26

இடம் – ஜெய்பூர்

நேரம்- இரவு 7.30 மணி

சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்

குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே

நாள் – மே 25

இடம் – ஆமதாபாத்

நேரம்- மாலை 3.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 27

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்)

ஷுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்)

நீலத் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்)

நூர் அகமது(சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள்(13போட்டிகள்)

டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy6gxj84q7o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸி. வீரரின் வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் தடுமாறும் ஆர்சிபி - வெற்றியை நெருங்கி தடம்புரண்டது எப்படி?

RCB vs SRH, விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விராட் கோலி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • 24 மே 2025, 02:03 GMT

ஆர்சிபி அணி, லீக் ஆட்டங்களின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய நிலையில், கடைசி கட்ட போட்டிகளில் சொதப்புவது, அந்த அணியால் ப்ளே ஆஃப் சுற்றில் டாப்-2 இடங்களில் வர முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரில் 65வது லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்தது. 232 ரன்கள் எனும் பெரிய இலக்கை துரத்திய ஆர்சிபி அணி 19.5 ஓவர்களில் 189 ரன்களுக்கு சுருண்டு 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இன்னும் ஒரு போட்டி மட்டுமே ஆர்சிபி அணிக்கு இருப்பதால், டாப்-2 இடங்களில் வருவதற்கு பெரிய வெற்றியும், மற்ற அணிகளின் தோல்வியையும் ஆர்சிபி எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைமை வந்துள்ளது.

ஆட்டநாயகன் இஷான் கிஷன்

சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்ற இஷான் கிஷன் தனது முதல் ஆட்டத்தில் சதம் அடித்ததைத் தொடர்ந்து அதன்பின் 10 போட்டிகளில் 117 ரன்கள் மட்டுமே சேர்த்து பெரிதாக ஸ்கோர் செய்யாமல் இருந்தார்.

ஆனால், நேற்று 48 பந்துகளில் 94 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோருக்கு செல்லக் காரணமாக இருந்தார். சன்ரைசர்ஸ் அணி கடைசியாக சேர்த்த 86 ரன்களில் 54 ரன்கள் இஷான் கிஷன் பேட்டிலிருந்து வந்தவையாகும். சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்கு காரணமாக இருந்த இஷான் கிஷனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

RCB vs SRH, விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஷான் கிஷன்

சன்ரைசர்ஸ் அணியில் இஷான் கிஷனைத் தவிர்த்து பெரிதாக எந்த பேட்டரும் பெரிய ஸ்கோர் செய்யவில்லை. அபிஷேக் சர்மா 17 பந்துகளில் 34 ரன்கள் என அதிரடியாகச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

டிராவிஸ் ஹெட் மீண்டும் சொதப்பலாக பேட் செய்து 17 ரன்னில் வெளியேறினார். பவர்ப்ளேயில் சன்ரைசர்ஸ் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 71 ரன்கள் சேர்த்தது.

அடுத்தடுத்து வந்த வீரர்களான கிளாசன் 13 பந்துகளில் 24 ரன்கள், அனிகேத் வர்மா 9 பந்துகளில் 26 ரன்கள், என கேமியோ ஆடி வெளியேறினர். ஆனால் மற்ற பேட்டர்களை களத்தில் தனக்கு ஒத்துழைப்பாக வைத்து தான் இஷான் கிஷன் தனிநபராக இருந்து ஸ்கோரை உயர்த்தினார்.

12-வது ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் என வலுவாக இருந்தது. கேப்டன் பாட் கம்மின்ஸுடன் 12 பந்துகள் பார்ட்னர்ஷிப் அமைத்த இஷான் கிஷன் 43 ரன்கள் சேர்த்தார். இஷான் கிஷன் என்ற ஒற்றை பேட்டரால் மட்டுமே நேற்று சன்ரைசர்ஸ் அணி பெரிய ஸ்கோரை எட்டியது. அவர் நேற்று சொதப்பி இருந்தால், சன்ரைசர்ஸ் அணி 150 ரன்களுக்குள் சுருண்டிருக்கும்.

RCB vs SRH, விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கிளாசன்

ஃபார்முக்கு வந்த கம்மின்ஸ்

கடந்த சில போட்டிகளில் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் படுமோசமாக செயல்பட்டுவந்தார், லைன் லென்த் கிடைக்காமல் கட்டுக்கோப்பாக வீசாமல் இருந்தார்.

ஆனால், நேற்றைய ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே விராட் கோலி, பில் சால்ட்டை திணறவிட்டார். கம்மின்ஸ் மின்னல் வேக பவுன்சரில் சால்ட்டின் ஹெல்மெட் மீது பந்து பட்டு பவுண்டரி சென்றது. கோலிக்கும் இதே போன்று தொடையில் அடி விழுந்தது. 4 ஓவர்கள் வீசிய கம்மின்ஸ் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கும் நேரத்தில் கம்மின்ஸ் மீண்டும் இயல்பான பந்துவீச்சுக்கு திரும்பியுள்ளார்.

மலிங்கா 4 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், நிதிஷ் ரெட்டி, ஹர்ஷல் படேல், உனத்கட், துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

RCB vs SRH, விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கம்மின்ஸ்

ஹேசல்வுட் வெற்றிடம்

ஆர்சிபி அணி லீக் சுற்றுகளில் பெரிய வெற்றி பெற்றதற்கு ஹேசல்வுட்டின் பந்துவீச்சு பிரதான காரணமாக இருந்தது. ஐபிஎல் ஒருவாரம் நிறுத்தப்பட்ட போது, தோள்பட்டை காயத்தால் ஆஸ்திரேலியா சென்ற ஹேசல்வுட் மீண்டும் வருவது குறித்து தெளிவாக தெரியவில்லை.

அவர் இல்லாத வெற்றிடம் ஆர்சிபி பந்துவீச்சில் தெளிவாகத் தெரிந்தது. இங்கிடி, யாஷ் தயால், புவனேஷ்வர், சூயஷ் சர்மா என 4 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 12 ரன்களை வாரி வழங்கினர். குர்னல் பாண்டியாவும், ஷெப்பர்டும் கூட பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

RCB vs SRH, விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஹேசல்வுட்

3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்தே 11 ஓவர்கள் வீசி 130 ரன்களை வாரி வழங்கினர், 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினர். ஆர்சிபியின் தோல்விக்கு பந்துவீச்சாளர்களின் திறமையற்ற செயல்பாடும் முக்கியக் காரணமாகும். கட்டுக்கோப்பாக பந்துவீசி 30 முதல் 40 ரன்களை சுருக்கி இருந்தால், ஆர்சிபிக்கு வெற்றி கிடைத்திருக்கும்.

இந்த ஆட்டத்தில் மட்டும் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் 15 சிக்ஸர்களையும், 16 பவுண்டரிகளையும் சன்ரைசர்ஸ் பேட்டர்களை அடிக்க அனுமதித்தனர்.

வலுவான தொடக்கம் கிடைத்தும் சறுக்கிய ஆர்சிபி

ஆர்சிபி அணிக்கு பில் சால்ட், விராட் கோலி இருவரும் வலுவான தொடக்கத்தை அளித்து பவர்ப்ளே முடிவில் 80 ரன்கள் சேர்த்து, கோலி(42) ஆட்டமிழந்தார். அதன்பின் பில் சால்ட்(62) அரைசதம் அடித்து விக்கெட்டை இழந்தார்.

ஆர்சிபி அணி 173 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை நோக்கித்தான் நகர்ந்தது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தன.

RCB vs SRH, விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விராட் கோலி - பில் சால்ட் இணை

ஆர்சிபி வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 56 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், கடைசி வரிசை பேட்டர்கள் சொதப்பியதால், 16 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களில் ஆர்சிபி அணிசுருண்டது. விராட் கோலி, பில் சால்ட் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளம் வீணாகிப் போனது. நடுவரிசை பேட்டர்கள் மயங்க் அகர்வால் (11), பட்டிதார் (18), ஜிதேஷ் (24), ஷெப்பர்ட் (0), குர்னல் பாண்டியா (8), டிம் டேவிட் (1), புவனேஷ்வர் குமார் (3) என ஏமாற்றம் அளித்தனர்.

ஏற்கெனவே ஆர்சிபி அணி முந்தைய சீசன்களில் ப்ளேஆஃப் சுற்றுவரை வந்து அடுத்தக் கட்டத்துக்கு முன்னேற முடியாமல் தான் வெளியேறியிருக்கிறது. கடந்த 6 சீசன்களில் 5 சீசன்களில் ப்ளேஆஃப் சுற்றில் இடம் பிடித்த ஆர்சிபி ஒருமுறை மட்டுமே 3வது இடத்தைப் பிடித்தது, மற்றவற்றில் ப்ளே ஆஃப் சுற்றின் தொடக்கத்திலேயே வெளியேறியிருக்கிறது.

ஆனால், இந்த முறை அந்த துரதிர்ஷ்டத்தை உடைக்கும் வகையில் லீக் சுற்றில் ஆடினாலும், நேற்றைய ஆட்டம் மீண்டும் ஆர்சிபிக்கு "பழைய நினைவுகள்" வந்துவிட்டதை காண்பிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்தது.

பேட்டர்கள் வந்தவுடன் பெரிய ஷாட்டுக்கு முயன்று சீராக விக்கெட்டுகளை இழந்தனர். விராட் கோலி, சால்ட் இருவரும் திட்டமிட்டு நிகர ரன்ரேட்டுக்கு ஏற்றார்போல் அணியைக் கொண்டு சென்ற நிலையில் வெற்றிக்கு அருகே வந்துவிட்டு, கடைசி 16 பந்துகளில் ஆர்சிபி சொதப்பியதற்கு தேவையற்ற அழுத்தத்தை தலைக்குள் திணித்ததுதான் காரணம்.

RCB vs SRH, விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கம்மின்ஸ்

"தோல்வி நல்லதுதான்"

ஆர்சிபி அணியின் தற்காலிக கேப்டன் ஜிதேஷ் சர்மா பேசுகையில் "கூடுதலாக 20 முதல் 30 ரன்கள் கொடுத்துவிட்டோம். சன்ரைசர்ஸ் அணியினர் சிறப்பாக ஆடினர். அவர்களின் தாக்குதல் ஆட்டத்துக்கு பந்துவீச்சில் எங்களிடம் பதில் இல்லை. சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான், அப்போதுதான் நம்மைப் பற்றி தீவிரமாக பரிசீலிக்கவும், ஆய்வு செய்யவும் முடியும்.

ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன் எங்களை ஆய்வு செய்ய கிடைத்த வாய்ப்பு. எங்களின் பாதகமான அம்சங்களை ஆய்வு செய்வோம், அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்தார்.

ஆர்சிபிக்கு பின்னடைவு

இந்த வெற்றியால் சன்ரைசர்ஸ் அணிக்கு புள்ளிப் பட்டியலில் எந்த தாக்கமும் ஏற்படப் போவதில்லை. 13 போட்டிகளில் 11 புள்ளிகள் பெற்றுள்ள சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் மீதமிருக்கிறது.

அதேசமயம், ஆர்சிபி அணி 13 போட்டிகளில் 17 புள்ளிகளுடன் இருக்கிறது, இந்தத் தோல்வியால் ஆர்சிபியின் நிகர ரன்ரேட் கடுமையாகச் சரிந்து, 0.255 எனக் குறைந்ததால், 3வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது.

ஆர்சிபி அணிக்கு இன்னும் ஒரு லீக் ஆட்டம் மட்டுமே இருப்பதால் அதில் வென்றால் 19 புள்ளிகள் வரை பெற முடியும், நிகர ரன்ரேட்டை எவ்வளவு உயர்த்தினால் 2வது இடத்துக்கு முன்னேறலாம் என்பது பஞ்சாப் அணியின் வெற்றி தோல்வியில்தான் முடிவாகும்.

RCB vs SRH, விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,விராட் கோலி

ஆர்சிபி 2வது இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும்

ஆர்சிபி அணி கடைசி லீக் ஆட்டத்துக்கு முந்தைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியிடம் அடைந்த தோல்வி, குஜராத், பஞ்சாப் அணிக்கும் கீழே சறுக்க வைத்துவிட்டது. லக்னெள அணிக்கு எதிராக ஆர்சிபிக்கு கடைசி லீக் ஆட்டம் இருக்கிறது. இந்த ஆட்டத்தில் லக்னெளவிடம் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தால்,டாப்-2 ரேஸிலிருந்து வெளியேறி, 3 அல்லது 4வது இடத்துக்கு சரியும்.

ஒருவேளை ஆர்சிபி அணி கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால் 19 புள்ளிகள் பெறும். ஆனாலும் இது டாப்-2 இடத்துக்கு ஆர்சிபி வருவதற்கு போதாது. ஏனென்றால் குஜராத் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வென்றுவிட்டால் 20 புள்ளிகள் பெறும், பஞ்சாப் அணி தனக்கிருக்கும் கடைசி 2 லீக் போட்டிகளிலும் வென்றால் 21 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடிக்கும், 20 புள்ளிகளுடன் குஜராத் 2வது இடத்தைப் பிடிக்கும். ஆர்சிபி 19 புள்ளிகளுடன் 3வது இடத்தையே பிடிக்க முடியும்.

ஆதலால், சிஎஸ்கே அணியிடம் குஜராத் அணி தோற்க வேண்டும், அவ்வாறு நடந்து, ஆர்சிபி அணி லக்னெளவை வென்றால் டாப்-2 இடத்தில் வரலாம். ஒருவேளை குஜராத் அணி சிஎஸ்கே அணியை வென்றால், பஞ்சாப் அணி தனது கடைசி இரு லீக் போட்டிகளில் ஒன்றில் தோற்க வேண்டும்.

அவ்வாறு பஞ்சாப் தோற்றால், பஞ்சாப் நிகரரன்ரேட்டைவிட எவ்வளவு ரன்கள் அதிகமாக எடுத்து வெற்றி பெற்றால் டாப்-2 இடத்தில் இடம் பெற முடியும் என்பது ஆர்சிபிக்கு தெரிந்துவிடும். ஆதலால் ஆர்சிபி அணி 2வது இடத்துக்கு முன்னேற, குஜராத் தோல்வி அல்லது பஞ்சாப் தோல்வி என்பது கண்டிப்பாகத் தேவை.

முக்கிய ஆட்டங்களின் பட்டியல்

இன்றைய ஆட்டம்

பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ்

இடம்: ஜெய்பூர்

நேரம்: இரவு 7.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் – மே 26

இடம் – ஜெய்பூர்

நேரம்- இரவு 7.30 மணி

சிஎஸ்கேயின் அடுத்த ஆட்டம்

குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே

நாள் – மே 25

இடம் – ஆமதாபாத்

நேரம்- மாலை 3.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 27

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு?

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்)

சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்)

நீலத் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்)

நூர் அகமது(சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள்(13போட்டிகள்)

டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8e61p9d8kxo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெல்லிக்கு திருப்பம் தந்த புது ஹீரோ - பிளேஆஃபில் யாருக்கு எந்த இடம்?

DC vs PBKS, சமீர் ரிஸ்வி, ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சமீர் ரிஸ்வி

கட்டுரை தகவல்

  • எழுதியவர், க.போத்திராஜ்

  • பதவி, பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 3 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

டெல்லி கேபிடல்ஸ் அணி இதற்கு முன் 22 முறை 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு 2வது முறையாக அதில் நேற்று வெற்றி பெற்றுள்ளது.

ப்ளே ஆஃ சுற்று தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் டாப்-4 பட்டியலில் யாருக்கு எந்த இடம் என்பது குறித்து இன்னும் தெளிவான முடிவுக்கு வராத நிலை நீடித்து உச்சக் கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ப்ளே ஆஃப் சுற்று எந்தெந்த அணிகளுக்கு இடையே நடக்கும் என்பதை ஊகிக்க முடியாத பரபரப்பான கட்டத்தை நோக்கி ஐபிஎல் சீசன் நகர்ந்துள்ளது.

ஸ்ரேயாஸ் போராட்டம், ஸ்டாய்னிஷ் அதிரடி

பஞ்சாப் அணிக்கு தொடக்கத்திலேயே ஆர்யா ஆட்டமிழக்கவே, பிரப்சிம்ரன், இங்கிலிஸ் ஜோடி சேர்ந்து பவர்ப்ளேயில் ஸ்கோர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கிலிஸ் 32 ரன்னில் விப்ராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழக்கவே, பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி. நிலைக்காத பிரப்சிம்ரனும் 28 ரன்னில் விப்ராஜ் பந்துவீச்சில் போல்டாகினார்.

நடுவரிசையில் நேஹல் வதேரா(16), சஷாங் சிங்(11) ரன்களில் ஏமாற்றவே, கேப்டன் ஸ்ரேயாஸ் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தி அரைசதம் அடித்தார். 53 ரன்களில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்தபோது பஞ்சாப் அணி 172 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

DC vs PBKS, சமீர் ரிஸ்வி, ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஸ்டாய்னிஷ்

ஸ்டாய்னிஷ் களமிறங்கி 16 பந்துகளில் 44 ரன்களை விளாசினார். 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசிய ஸ்டாய்னிஷ் பஞ்சாப் அணி 200 ரன்களைக் கடக்க உதவினார். முகேஷ் குமார் ஓவரில் லாங்ஆப்பில் சிக்ஸர், மோகித் சர்மா ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள், முஸ்தபிசுர் ரஹ்மான் ஓவரிலும் சிக்ஸர் என ஸ்டாய்னிஷ் டெல்லி பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குல்தீப் ஓவரில் ஓமர்சாய், யான்சென் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும் ஸ்டாய்னிஷ் அதிரடிக்கு யாரும் கைவிலங்கிட முடியவில்லை, 16 பந்துகளில் 44 ரன்களுடன் ஸ்டாய்னிஷ் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெல்லி தரப்பில் முஸ்தபிசுர் 3 விக்கெட்டுகளையும், குல்தீப், விப்ராஜ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

DC vs PBKS, சமீர் ரிஸ்வி, ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கருண் நாயர்

கருண் நாயரின் உற்சாகம்

டெல்லி அணிக்கு டூப்பிளசிஸ், ராகுல் இருவரும் வலுவான தொடக்கத்தை அளித்து வெற்றிக்கான தீர்மானத்தோடு ஆடினர். ராகுல் 31 ரன்னில் யான்சென் பந்துவீச்சிலும் அதைத் தொடர்ந்து டூப்பிளசிஸ்23 ரன்னில் பிரார் பந்துவீச்சிலும் வெளியேறினர். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட்டை இழந்து பஞ்சாப் 61 ரன்கள் சேர்த்தது.

இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்குப்பின் இடம் பெற்ற உற்சாகத்தில் ஆடிய கருண் நாயர் நடுவரிசையில் அணியை வழிநடத்திச்செல்ல முக்கியமானவராக நேற்று இருந்தார். பிரவீண் துபே பந்துவீச்சில் வந்த வேகத்தில் கருண் நாயர் தொடர்ந்து 4 பவுண்டரிகளை விளாசினார். யான்சென் பந்துவீச்சில் சிக்ஸரும், பிரார் பந்துவீச்சில் பவுண்டரியும் அடித்து ரன்ரேட்டை குறையவிடாமல் கருண் நாயர் கொண்டு சென்றார்.

ஆனால் பிரார் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட்ஆடமுயன்ற கருண் நாயர், போல்டானார். 27 பந்துகளில் 44 ரன்கள்(2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள்) சேர்த்து கருண் நாயர் ஆட்டமிழந்தார்.

DC vs PBKS, சமீர் ரிஸ்வி, ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரிஸ்வி அசத்தல்

டெல்லி அணிக்கு வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது 21 வயது வீரர் சமீர் ரிஸ்விதான். 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 58 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

ஒரு கட்டத்தில் டெல்லி அணி வெற்றிக்கு 46 பந்துகளில் 91 ரன்கள் தேவைப்பட்டது. ஓவருக்கு 12 ரன் ரேட் தேவை என்ற நிலையில் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை ரிஸ்வி வெளுத்துவாங்கினார். இளம் பேட்டர் ரிஸ்வி அச்சமின்றி பேட் செய்து ஓமர்சாய், யான்சென் பந்துவீச்சில் சிக்ஸரை பறக்கவிட்டார். ஹர்பிரித் பிரார் பந்துவீச்சில் சிக்ஸரும், ஸ்டாய்னிஷ், அர்ஷ்தீப் பந்துவீச்சில் சிக்ஸர் என மிரட்டலாக ரிஸ்வி பேட் செய்தார். ஐபிஎல் தொடரில் ரிஸ்வி 58 ரன்கள் என்பது அவரின் அதிகபட்ச ஸ்கோராகும்.

மோசமான பந்துவீச்சு

பஞ்சாப் அணி சேர்த்த 207 ரன்கள் என்பது வலுவான ஸ்கோர்தான். இதை டிபெண்ட் செய்ய முடியாமவிட்டால் ப்ளே ஆஃப் சுற்றில் எவ்வாறு இதற்கும் குறைவான ஸ்கோரை டிபெண்ட் செய்ய முடியும். பஞ்சாப் அணியில் நேற்று 6 பந்துவீச்சாளர்களும் 10 ரன்ரேட்டுக்கு மேல்தான் வாரி வழங்கினர். வேகப்பந்துவீச்சாளர்கள் யான்சென், ஓமர்சாய், அர்ஷ்தீப், ஸ்டாய்னிஷ் ஆகியோர் 13.3 ஓவர்கள் வீசி 143 ரன்களை வாரி வழங்கினர். இவர்கள் பந்துவீச்சில் 9 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளை வாரி வழங்கி 98 ரன்களை கொடுத்தனர்.

பஞ்சாப் பந்துவீச்சு இன்னும் கட்டுக்கோப்பாக இருந்திருந்தால், குறிப்பாக ஓமர்சாய், யான்சென் பந்துவீச்சு துல்லியமாக இருந்திருந்தால், பஞ்சாப் அணி வென்றிருக்கும். கருண் நாயர், ரிஸ்வி பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் சிரமப்பட்டது, ரிஸ்வியை ஆட்டமிழக்காமல் சிரமப்பட்டபோதே, பஞ்சாப் அணி தோல்வியை நோக்கி செல்வது உறுதியானது.

DC vs PBKS, சமீர் ரிஸ்வி, ஐபிஎல் பிளேஆஃப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,யான்சென்

"பந்துவீச்சு சரியில்லை"

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் " 207 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர்தான். ஆனால், ஆடுகளத்தில் பல இடங்களில் பந்து பிட்ச் ஆகி ஒவ்வொருவிதமாக பேட்டரை நோக்கி வருவதால் பேட் செய்வது கடினமாக இருந்தது. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகசெயல்படவில்லை. ஆடுகளத்தை அறிந்தபின் அதற்கு ஏற்றார்போல் துல்லியமான லென்த்தில் பந்துவீசியிருக்க வேண்டும்.

விக்கெட் எடுக்கும் முயற்சியில் அதிக பவுன்ஸர்களை வீசியது தவறு. இந்த சீசனில் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது, வெற்றிக்கு ஒவ்வொரு அணியும் தகுதியானவர்கள். நாம்தான் நிதானமாக பொறுமையாக, நேர்மறையாக செயல்பட வேண்டும். அடுத்தப் போட்டியில் இன்னும் வலிமையாக திட்டங்களுடன் வருவோம்" எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் பிளேஆஃப் சுற்றில் யாருக்கு எந்த இடம்?

ப்ளே ஆஃப் சுற்றில் டாப்-2 மட்டுமல்ல டாப்-4-ல் யாருக்கு எந்த இடம் என்பது இன்னும் முடிவாகவில்லை. பஞ்சாப், ஆர்சிபி அணிகள் தலா 17 புள்ளிகளுடன் உள்ளன. நிகர ரன்ரேட்டில் பஞ்சாபை விட(0.327) ஆர்சிபி (0.255) குறைவாக இருக்கிறது. இரு அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கிறது. இதில் எந்த அணி அதிகபட்ச ரன்ரேட்டை பெறும் வகையில் வெல்கிறதோ அந்த அணி 19 புள்ளிகளுடன் முன்னேறும்.

அதேபோல குஜராத் அணி 18 புள்ளிகளுடன் இருக்கிறது. கடைசி லீக்கில் இன்று சிஎஸ்கேவுடன் மோதுகிறது. ஒருவேளை குஜராத் வென்றால் 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். தோல்வி அடைந்தால், 18 புள்ளிகளுடன் இப்போதுள்ள 0.602 ரன்ரேட் குறையும்.

அதேநேரம், மும்பை அணி கடைசி லீக்கில் நாளை பஞ்சாபுடன் மோதுகிறது. ஒருவேளை பஞ்சாப் அணி வென்றால் 19 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும், மும்பை 16 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு செல்லும். ஆர்சிபி கடைசி லீக்கில் தோல்வி அடைந்தாலும் 3வதுஇடம் கிடைக்கும், ஒருவேளை மாபெரும் வெற்றி பெற்றால் 2வது இடத்துக்கு செல்லவும் வாய்ப்புள்ளது.

ஒருவேளை பஞ்சாப் அணியை மும்பை வீழ்த்திவிட்டால், இன்று நடக்கும் ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் குஜராத் தோல்வி அடைந்தால், 18 புள்ளிகளுடன் வலுவான ரன்ரேட்டில் மும்பை முதலிடத்தைப் பிடிக்கும். ஆர்சிபி அணி கடைசி லீக்கில் வென்றால் 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும் மும்பை வலுவான ரன்ரேட்டுடன் இருந்தாலும் 18 புள்ளிகளுடன் இருப்பதால் 2வது இடத்தையும், குஜராத் 3வது இடத்தையும், பஞ்சாப் 4வது இடத்தையும் பிடிக்கும்.

எதிர்வரும் முக்கிய ஆட்டங்கள்

இன்றைய ஆட்டம்

குஜராத் டைட்டன்ஸ் vs சிஎஸ்கே

இடம்: ஆமதாபாத்

நேரம்: மாலை 3.30

மும்பையின் அடுத்த ஆட்டம்

மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்

நாள் – மே 26

இடம் – ஜெய்பூர்

நேரம்- இரவு 7.30 மணி

ஆர்சிபியின் அடுத்த ஆட்டம்

ஆர்சிபி vs லக்னெள

நாள் – மே 27

இடம் – லக்னெள

நேரம்- இரவு 7.30 மணி

ஆரஞ்சு தொப்பி யாருக்கு

சாய் சுதர்ஸன்(குஜராத் டைட்டன்ஸ்)-638 ரன்கள்(13 போட்டிகள்)

சுப்மான் கில் (குஜராத் டைட்டன்ஸ்)-636 ரன்கள்(13 போட்டிகள்)

சூர்யகுமார் யாதவ்(மும்பை இந்தியன்ஸ்) 583 (13 போட்டிகள்)

நீலத் தொப்பி

பிரசித் கிருஷ்ணா (குஜராத்) 21 விக்கெட்டுகள்(12 போட்டிகள்)

நூர் அகமது(சிஎஸ்கே) 21 விக்கெட்டுகள்(13போட்டிகள்)

டிரன்ட் போல்ட் (மும்பை) 19 விக்கெட்டுகள்(13 போட்டிகள்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1e6jxl4v42o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.