Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3   30 SEP, 2024 | 04:38 PM

image

2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர  சாதாரண தர பரீட்சை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் நடைபெறும் திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  கல்வி பொதுத் தராதர உயர்தர  பரீட்சைகள்  நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம்  20 ஆம் திகதி வரை நடைபெறும் என ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், அடுத்த சாதாரண தர பரீட்சையை 2025 ஆம்  ஆண்டு  மார்ச் மாதம் நடத்துவதற்கே உத்தேசித்துள்ளோம். பரீட்சைக்கான உரிய திகதிகள்  பின்னர் அறிவிக்கப்படும். 

2026 ஆம் ஆண்டுக்குள்  பரீட்சைகள் தாமதமடைவதை குறைத்து உரிய நேர அட்டைவணைக்கு முன்னெடுக்கப்படும்.

மேலும், தற்போது வெளியாகியுள்ள சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனைக்கு  விண்ணப்பங்கள் நாளை  முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரை இணையத்தளத்தில் குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என ஆணையாளர் நாயகம் ஜயசுந்தர வலியுறுத்தியுள்ளார். 

திங்கட்கிழமை காலை முதல் பரீட்சை பெறுபேறு சான்றிதல்கள் வழங்கப்படும். 

இணையவழி மூலம், ஒரு நாள் சேவைகள் அல்லது வழக்கமான சேவைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்கள் பெறுபேறு சான்றிதல்கள் பெறலாம்.

ஒக்டோபர் மாதம் ஆம் திகதிக்குப் பின்னர் விடைத்தாள் மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. 

தங்களின் பெறுபேறுகளில்  திருப்தி அடையாத விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மீள்பரிசீலனை செயல்முறையை விரைவாக முடித்து பெறுபேறுகளை விரைவாக  வழங்குவதை திணைக்களம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/195147

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

18 DEC, 2024 | 07:15 PM
image

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் புதன்கிழமை (18) பிற்பகல் அறிவித்துள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி. இவ்வருடத்திற்கான பொதுப் பரீட்சை 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளையும் பரீட்சை திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தொலைபேசி எண்கள் – 1911, 0112784208, 0112784537, 0112786616

தொலைநகல் எண் - 0112784422

பொதுத் தொலைபேசி இலக்கங்கள் - 0112786200, 0112784201, 0112785202

மின்னஞ்சல் முகவரி - gceolexamsl@gmail.com

https://www.virakesari.lk/article/201608



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.