Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"பல்கலைக்கழக வாழ்வின் என் நினைவு" - 04/10 பேராதனை பல்கலைக் கழகம் சென்ற தினம்] / "My memory of University life" - 04/10, The day we entered the University of Peradeniya] 

 

"தேடிய இன்பம், ஆடிய நையாண்டி  
மடியில் கொட்டுது, ஆயிரம் பாடல்கள் 
வாடிய இதயம், பூக்குது மீண்டும் 
கூடிய எம்மிடம், குதித்து துள்ளுது" 


"ஆண்டு ஒன்று அஞ்சி கழிந்தது 
ஆண்டு இரண்டு நிமிர்த்தி சென்றது 
ஆண்டு மூன்று துணிந்து நின்றது 
ஆண்டு நான்கு அறிவால்  மலர்ந்தது" 

 

"நிறைந்த படிப்பு, இடையில் காதல் 
குறைந்த கூத்து, மத்தியில் தேர்வு
உறைந்தது நெஞ்சம்,முடிவு கண்டு      
திரையும் வீழ்ந்தது, சிமிட்டில் பறந்தது"  

 

"நினைவுகளை விட்டு, மறைந்தது பல்கலைக்கழகம்
சுனைகளாய் நெஞ்சில், நல்லவை நின்றன
நனைக்கவில்லை எம்மை, பாரபட்சமும் இனவெறியும் 
இணைந்த கைகளாய், நம்மையும் உலகத்தையும் அறிந்தோம்"   

 

"கொஞ்ச ஆண்டு உருள, நண்பர்களை நினைத்தேன் 
நெஞ்சு நனைய, கண்கள் கண்ணீர் சிந்தின  
விஞ்சும் வேகத்தில், ஓயாத பலரின் வாழ்வு 
குஞ்சும் கோழியுமாய், ஊர் உலகம் சுற்றின"

 

"பற்பல ஆண்டுகளின் பின், மீண்டும் கூடுகிறோம்
உற்சாகமாக அன்று விட்டுச்சென்ற, அதே இடத்தில்
அற்புதமான மகிழ்ச்சியையும், தொலைத்த கிண்டலையும் 
உற்ற நண்பர்களையும், இதயத்தில் மீண்டும் சிறைபிடிக்க" 

 

"அன்று கழித்த நேரம், இன்னும் இதயத்தில் பசுமையாக 
இன்றும் என் நெஞ்சில், அந்த கிசுகிசுப்பும் கேலியும் 
குன்று குன்றாய் மரத்தில் வளரும், இலைகளின் கொத்தாய்   
சான்றாய் நின்றன, அந்த நினைவுகள் என்றும்" 


 
"சந்திக்கிறோம் மீண்டும், மனதில் இன்பம் பொங்குது 
சிந்திக்கிறோம் இளைஞராக, உடலில் துடிப்பு பிறக்குது  
நிந்தனை செய்கிறது, இன்றைய கவலை கடமை வாழ்வை  
வந்தனை செய்து, அன்றைய நினைவை மனதில் பதிக்குது"  

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

"My memory of University life" - 04/10, The day we entered the University of Peradeniya] 

 

"We sought enjoyment, we inflicted sarcasm
One thousand songs fill our souls
The withered heart flowers again, and
Dances at the thought of getting together" 

"With fear and trepidation we made it through Year One 
We lifted ourselves to meet Challenges in Year Two
We boldly set forth in Year Three
To blossom with mature knowledge in Year Four"

"Lots of study between some love and fun
Less and less play with exams nearly begun 
The mind was numb as the learning came to an end
The curtain came down as the passing time flew"

"University life faded in our minds
The good stayed with us, the bad did not
Neither ethnic divide nor prejudice tainted us
We learned of ourselves and of the world"

"As years rolled, I remembered old friends
Teared at the thought of past good times
Faced the never-ending battles of life
As families and friends moved far and wide"

"Fifty years on, we gather again
In the place we left behind to conquer the world
To rediscover old joys and laughter among old friends
And to refresh our hearts and our souls"

"The time we spent together is still fresh in the heart.
All the gossip, all those jokes, remembered still.
Like the leaves crowding a tree
The memories will always stay with me"

"Everything is fresh in our minds as we meet again.
Let's laugh, play and rejoice as of old.
E’en with life’s many commitments and countless cares
Etched in our hearts, those cherished moments will forever stay"

[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 

71340001_10215040978000653_4259261652320387072_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=13d280&_nc_aid=0&_nc_ohc=I0jr9rSAqPUQ7kNvgEnKbZJ&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=Ac2xbExTvQSW2EWccBPck--&oh=00_AYDcOgYelKpJMe4DkhVaX7ehu0sOeHvYblA7yBSemU7Q3Q&oe=672711E0 No photo description available.

 

No photo description available. No photo description available. No photo description available.

 


 

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடே, இதுவும் நல்ல தொழிலா இருக்கே! சத்தமில்லாமல், எதிர்ப்பில்லாமல், வந்தோமா போனோமா என்று கைநிறைய பணம். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள், திட்டம் போடுகிறார்கள், கூட்டு சேர்கிறர்கள், இடம் தெரிகிறார்கள், அபாரமாய் உழைக்கிறார்கள், உல்லாசமாய் வாழ்கிறார்கள். திருமண உறவாய்,, தொழில் சிநேகித  இருக்குமோ இருவருக்கும்? 
    • ஆம். எனக்குத் தெரிந்த ஒரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  குடும்பத்தை விபு க்களே இந்தியாவிற்கு தங்கள் படகில் கொண்டு சென்று இறக்கியிருந்தனர். சமாதான காலத்தில் அவர்கள் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்து வவுனியாவில் மீளக் குடியமர்ந்தனர். அவர்கள் தற்போது வட அமெரிக்காவில் இருக்கிறார்கள்.  அக் குடும்ப உறுப்பினர் ஒருவர் மாற்று இயக்கம் ஒன்றின் பெரிய பொறுப்பில் முன்னர் இருந்து பின்னர் பொது வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்.  இதே போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவைகளை எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும்.  @விசுகுகுஎ ஏன்  -1 போட்டிருக்கிறீர்கள்? காரணத்தை அறியத்தர முடியுமா?   
    • இவரும் பல தடவைகள் பொதுவெளியில் நான் டொக்டர் என்னுடன் நீ எப்படி இது போல் பேசலாம் என த்ன்னுடைய ஒளிவட்ட பேச்சுகளை பேசியுள்ளார் ... 
    • ஊழல் அற்ற பட்டம் வேணும் ...லஞ்சம் கொடுப்பது வாங்குவது எல்லாம் நம்ம தோழருக்கு பிடிக்காது..😅 மிச்ச மூன்று பேரையும் யாழில் இலகுவாக எடுத்து போடுவேன் என்ட கிறுக்கல்கள் யாழில் ஒரு மாதத்தில் 500 பேருக்கு மேல பார்க்கினம் வெள்ளி விழா,வைர விழா எல்லாம் தாண்டி ஒடுது ...ஆகவே கலாநிதி பட்டத்திற்கு கையொப்பம் எடுப்பது   இலகுவான விடயம் என நினைக்கிறேன்....😅
    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.