Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
04 OCT, 2024 | 06:31 PM
image

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதி திட்டங்களைத் தற்காலிகமாக முடக்குமாறு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான 16 வங்கிக் கணக்குகள் மற்றும் 05 ஆயுள் காப்புறுதித் திட்டங்களை ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வரை தற்காலிகமாக முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 4ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/195495

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த வெறிக்குட்டி, தான் வெறியில் விழுந்தெழும்பி காலை உடைத்துப்போட்டு, அவுஸ்ரேலிய உல்லாச விடுதியில் பெற்ற தண்டப்பணத்தை மீள செலுத்துமாறும் சேர்த்து  உத்தரவிடுங்கள் நீதிபதியவர்களே!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.