Jump to content

நிற்பது பெரிதல்ல நின்ற இடத்தில் நிற்க வேண்டும் -பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

நிற்பது பெரிதல்ல நின்ற இடத்தில் நிற்க வேண்டும்
-பா.உதயன் 

பல படைகளை உருவாக்கி  ஒரு காலம் சிங்கள அரசையும் அதன் படைகளையும் நிலை குலைத்து போராடி தமிழர் அடையாளத்தை உலகுக்கு சொல்லி யாருக்காகவும் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காது ,எவனுக்கும் தலை வணங்காமல் பல அரசியல் கட்சிகளை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ( TNA ) என்ற அரசியல் பலத்தை உருவாக்கி எல்லோரையும் நிற்பது பெரிதல்ல நின்ற இடத்தில் நிற்க வேண்டும். “Not only must you stand, but you must also stay.” என்று வட கிழக்கு உட்பட நாம் தமிழர் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து போராடி மடிந்த தலைவர் பிரபாகரனுக்கு இருந்த வீரம், நெஞ்சுரம், திறமை, பொறுப்பு, சுய நலன் இல்லாத பார்வை இதில் ஏதாவது  இன்று தேர்தலில் நிற்கும் தமிழ் தலைவர்களிடம் அல்லது பல பிரிவுகளாக தமிழர் தமக்குள்ளேயே போட்டியிடுபவர்களிடம் இருக்கின்றதா என்று எல்லோரும் ஒரு கணம் எண்ணிப் பாருங்கள் ? இருந்த அனைத்தையும் அழித்ததை தவிர. ஒரு சிலரை தவிர இன்று இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காகவும் சுய நலனுக்காகவும் இருப்பவர்கள் இது எம் நிலத்துக்கு மட்டும் இன்றி புலத்துக்கும் பொருந்தும். 

இன்று சுமந்திரனும், சாணக்கியனும், தவராசாவும், கஜேந்திரனும், விக்கினேஸ்வரனும் ஏனைய அனைத்து தேசியக் கட்சிகளும் இணைந்து வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதற்கு இணங்க” “Unity in diversity.” தேர்தலில் ஒரே அணியில் நின்றிருந்தால் எமது பலத்தை ஏனும் நிரூபித்து இருக்கலாம். சிங்கள தேசம் ஒற்றுமையாக நின்று வாக்களித்து பெரும் ஊழல் வாதிகளையும் இனவாதிகளையும் இவர்களுடன் சேர்ந்து நின்ற டமிழ் ஊழல் வாதிகளையும் இருந்த இடம் தெரியாமல் கலைத்து இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி நாமமும் ஒரு திரள்சியாய் எமது பிரச்சினைகளையும் தீர்பதற்கான வழி முறைகளை கையாண்டிருக்கக் கூடிய சந்தர்ப்பமும் ஏற்பட அழுத்தம் கொடுத்திருக்கலாம் சிங்களத்துக்கு ஒரு செய்தியை சொல்லி இருக்கலாம். அதை விடுத்து இன்று தமிழர் தலைமை என்ற அங்கீகாரத்தையும் தொலைத்து எல்லோரும் சிரிக்கும் அளவுக்கு வந்து நிற்கிறது எமது பலம்.

எத்தனையோ மாவீரர்களின் உயிர்த் தியாகங்கள் இந்த மக்கள் பட்ட வலிகள் சொந்த மண்ணை விட்டு அகதியாக தமிழன் அலைந்தும் எல்லாமே மறந்து இன்று நீங்கள் எல்லோரும் நாளுக்கு நாள் பிரிந்து நின்று வட கிழக்கு தமிழர் பிரதேசத்தில் இருந்து பெரும் வாக்கு வங்கியை சிங்களத்துக்கு உருவாக்கி தமிழரை பிரித்து விட்டிருக்கிறீர்கள். இதன் எல்லாப் பொறுப்பும் நீங்கள் தான் என்பதை உணருங்கள். ஈழத் தமிழரிடம் இன்று இருக்கும் பெரும் குறையானது ஒற்றுமையீனம் தான் இதனால் நாமே நம் தலையில் மண்ணை போட்டுக் கொண்டு வாழ்கிறோம். எது எப்படி இருப்பினும்  தமிழ் மக்கள் தம் எதிர்கால இருப்புக்கு சரியான பாதையை தெரிவார்கள் என நம்புவோம். உங்களிடம் இருக்கும் ஒரே அரசியல் கூட்டுப் பலத்தையும் இழந்தீர்களேயானல் உங்கள் எதிர் காலம் பெரும் இருள் சூழ்ந்ததாகவே அமையலாம். இதுவும் போனால் உங்களுக்கு எதுகும் இல்லை என்று நினையுங்கள். வெறும் ஊமை மக்களாகவே உலகம் உங்களைப் பார்க்கும். இருந்தும் நம்பிக்கையோடு இருப்போம் நாளை என்றோ ஒரு நாள் உலக ஒழுங்கு மாற்றத்திற்கு ஏற்ப எமக்கும் ஒரு மாற்றம் வரும் என்றே ஒற்றுமையை அரசியல் பலத்தை தொலைக்காமல் எதிர்காலத்திலாவது வாழப் பாருங்கள்.

பா.உதயன் ✍️

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.