Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ரஷ்யா -  யுக்ரேன்

பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE

படக்குறிப்பு, பூச்சாவின் விட்செஸ் சுமார் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவு ஆகும். கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரா ரெயின்ஸ்ஃபோர்ட்
  • பதவி, கிழக்கு ஐரோப்பா நிருபர், பூச்சா
  • 48 நிமிடங்களுக்கு முன்னர்

யுக்ரேனில் உள்ள பூச்சா (Bucha) நகரத்தில் இருள் சாயும் வேளையில் தான் இந்தக் குழு பணியைத் துவங்குகிறார்கள். ஏனெனில் இரவில் தான் ரஷ்யா இந்த நகரத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தத் துவங்கும்.

இந்தக் குழு கிட்டத்தட்ட முழுதும் பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவு. அவர்கள் தங்களை 'பூச்சாவின் சூனியக்காரிகள்' (The Witches of Bucha) என்று அழைத்துக் கொள்கின்றனர். தற்போது அவர்கள் யுக்ரேனில் வான் பாதுகாப்பிற்காக உதவுகின்றனர். ஏனெனில் ரஷ்யாவுடனான போரில் யுக்ரேன் படையில் அதிக எண்ணிக்கையில் ஆண்கள்தான் முன்னணியில் இருந்து சண்டையிடுகின்றனர்.

இந்த குழு சுட்டு வீழ்த்துவதற்கு அதிகமான ரஷ்ய ட்ரோன்கள் உள்ளன. யுக்ரேன் ஏவுகணை தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக அதன் முக்கிய பாதுகாப்பு படைகளை வீழ்த்த ரஷ்யா ட்ரோன்களை கொண்டு இங்கு தாக்குதல் நடத்துகின்றது.

இந்தக் குழுவில் உள்ள பெண்கள் பகலில் ஆசிரியர், மருத்துவர் போன்ற பணிகளைச் செய்கிறார்கள். ஒருவர் இதில் கை-கால் அழகுக் கலை நிபுணராகவும் உள்ளார். மறுபுறம் இரவில் தங்களது நாட்டை பாதுகாப்பதற்காக அவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள்.

பூச்சா பகுதியில் ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் துவங்கி, இந்தப் பகுதியை ஆக்கிரமித்தபோது, அவர்கள் சக்தியற்றதாக உணர்ந்ததால், அதற்கு ஒரு தீர்வு இது என்று இவர்களில் பலர் கூறுகிறார்கள்.

2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில், யுக்ரேன் படைகள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறிய பின், கொலை, சித்திரவதை, கடத்தல் உட்பட பல பதற்றமூட்டும் நிகழ்வுகள் நடந்துள்ளன.

 

விமானத் தாக்குதல்களும் பழைய ஆயுதங்களும்

“எனக்கு 51 வயதாகிறது. எனது எடை 100 கிலோ, என்னால் ஓட முடியாது. போருக்கு தேவையான ஆயுதங்களை அவர்கள் எனக்கு அனுப்புவார்கள் என்று நினைத்தேன், ஆனால் அதற்குள் என்னை போருக்கு அழைத்துச் சென்றார்கள்," என்று வாலண்டினா கூறுகிறார்.

வாலண்டினா ஒரு கால்நடை மருத்துவர். சில மாதங்களுக்கு முன்பு தான் ரஷ்ய ட்ரோன்களைத் தாக்கும் பணியில் இணைந்தார். அவர் 'வால்கிரி' (Valkyrie - நோர்ஸ் தொன்மத்தில் ஒரு பெண் சிறுதெய்வம்) என்னும் குறிப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

அவரது நண்பர்கள் சிலர் ரஷ்யாவுடனான போரில் யுக்ரேன் ராணுவத்தின் முன்னணி வீரர்களாகப் பணியாற்றி உயிரிழந்தனர், அதனால்தான் அவர் இந்த பணியில் சேர்ந்ததாக கூறுகிறார்.

“இந்த வேலையை என்னால் செய்ய முடியும். ஆயுதங்கள் கனமாக உள்ளன. ஆனாலும் பெண்களால் இதைச் செய்ய முடியும்,” என்கிறார்.

வாலண்டினா பேசிய பிறகு அந்தப் பகுதி முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒன்று வந்தது. அப்போது அவர் இந்தக் குழு எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கினார்.

அடர்ந்த காடுகளின் ஒரு பகுதியில் இருந்து அவரது குழு தாக்குதலுக்குத் தயாராகின்றது. பிபிசி-யின் செய்தியாளர்கள் அவர்களது வாகனத்தைப் பின்தொடர்கிறார்கள். அது ஒரு வயலின் நடுப்பகுதியை நோக்கிச் செல்கிறது. நான்கு பேர் கொண்ட குழு தங்கள் ஆயுதங்களைத் தயார்படுத்தத் துவங்கினர்.

அவர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டவை. அவற்றுள் 1939-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகள் கொண்ட பெட்டிகளும் இருந்தன. அதில் சோவியத் கொடியில் உள்ளது போலவே சிவப்பு நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

 
ரஷ்யா -  யுக்ரேன்

பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE

படக்குறிப்பு, சில மாதத்திற்கு முன்பு தான் ரஷ்ய ட்ரோன்களை தாக்கும் பணியில் இணைந்தார், வாலண்டினா.

‘பிரசவத்தைப் போல பயமானது’

இந்தக் குழுவில் செர்ஹி என்ற ஒரே ஒரு ஆண் மட்டும்தான் உள்ளார். அவர் ஆயுதங்களில் உள்ள சூட்டைத் தணிப்பதற்காகக் கையால் ஏவுகணையில் உள்ள ஒரு பகுதியில் பாட்டில் கொண்டு தண்ணீரை ஊற்றுவார்.

யுக்ரேனிடம் இவ்வளவு ஆயுதங்கள்தான் உள்ளன. அதில் சிறந்தவை போரில் முன்னணியில் பயன்படுத்தப்படுகின்றன. யுக்ரேன் அதன் நட்பு நாடுகளிடம் கூடுதல் ஆயுதங்களைக் கோரி வருகிறது.

ஆனால் இந்தப் பழங்கால ஆயுதங்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுவதாகவும், இதுவரை மூன்று ட்ரோன்களை வீழ்த்தியதாகவும் 'பூச்சாவின் சூனியக்காரிகள்' குழு கூறுகிறது.

"எதிரிகளின் அசைவுகளைக் கேட்பதே எனது வேலை," என்று வாலண்டினா கூறுகிறார். "இது பதட்டமான வேலை. ஆனால் அவர்களின் சிறிய சத்ததிற்கும் நாம் கவனம் செலுத்த வேண்டும்,” என்கிறார்.

அவரது தோழி இன்னா, போரில் முன்னணியில் பணியாற்றி வருகிறார். அவரும் 50 வயதிற்கு மேற்பட்டவர் ஆவார்.

"இது பயமாக இருக்கிறது. ஆனால் ஒரு குழந்தையைப் பிரசவிப்பதும் பயமானதுதான். இருப்பினும் நான் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளேன்," என்று இன்னா சிரித்துக்கொண்டே கூறுகிறார். அவர் 'செர்ரி' என்ற குறிப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

இன்னா ஒரு கணித ஆசிரியர். இந்தக் குழுவில் பணியாற்றிய பிறகு அவர் ஒரு வகுப்பை எடுக்க இந்தக் காட்டுப் பகுதியில் இருந்து விரைந்து செல்ல வேண்டும்.

 
ரஷ்யா -  யுக்ரேன்

பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE

படக்குறிப்பு, இந்த குழுவில் செர்ஹி என்ற ஒரே ஒரு ஆண் மட்டும்தான் உள்ளார்.

‘பெண்களாலும் இதைச் செய்ய முடியும்’

இன்னா, "நான் எனது காரில் ஆடைகள், ஒப்பனை பொருட்கள், ஹீல்ஸ் ஆகியவை வைத்துள்ளேன். எனது காரிலேயே ஆடைகளை மாற்றிக்கொண்டு, வகுப்பு எடுக்க புறப்பட்டுவிடுவேன்," என்கிறார்.

"ஆண்கள் போரிடச் சென்றுவிட்டார்கள். ஆனால் நாங்கள் இங்கே இருக்கிறோம். யுக்ரேனியப் பெண்களால் என்னதான் செய்ய முடியாது? எங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும்," என்கிறார்.

"ஆண்கள் போரில் முன்னணியில் ஈடுபடுகிறார்கள், அவர்கள் சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் என்பது எங்களுக்கு புரிகின்றது," என்கிறார்.

இது போன்ற தன்னார்வப் பிரிவுகளின் மொத்த எண்ணிக்கை, அல்லது எத்தனை பெண்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்த தரவு எதுவும் இல்லை. ஆனால், ரஷ்யா ஒவ்வொரு இரவும் வெடிபொருட்கள் நிரம்பிய ட்ரோன்களைக் கொண்டு இங்கு தாக்குவதால், யுக்ரேனில் உள்ள பெரிய நகரங்களில் கூடுதல் பாதுகாப்பை உருவாக்க இந்தக் குழுக்கள் உதவுகின்றன.

களத்தில் உள்ள இந்தக் குழுகளில் உள்ள யூலியா தனது டேப்லெட்டில் இரண்டு ட்ரோன்களைக் கண்காணிக்கிறார். அவை பூச்சாவிற்கு அருகில்தான் உள்ளன. அதனால் இங்கு எந்த உடனடி ஆபத்தும் இல்லை. ஆனால் எச்சரிக்கை முடியும் வரை துப்பாக்கிகள் கொண்டு இவர்கள் களத்தில் இருப்பார்கள்.

ரஷ்யா -  யுக்ரேன்

பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE

படக்குறிப்பு, இன்னா ஒரு கணித ஆசிரியர்.

'ஆண்கள் யாரும் இல்லை'

இந்தத் தன்னார்வலர் குழுவின் தளபதி ஒரு அஜானுபாகுவான நபர். அவர் கடுமையான சண்டை நடைபெற்று வந்த கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள போக்ரோவ்ஸ்கில் இருந்து தற்போது திரும்பியுள்ளார்.

"அங்கு இடைவிடாமல் தாக்குதல் நடந்தது," என்று ஆண்ட்ரி வெர்லாட்டி ஒரு புன்னகையுடன் அதை விவரிக்கிறார்.

பூச்சா பகுதிகளில் வான் பாதுகாப்பு மற்றும் இரவு நேரப் பாதுகாப்புப் பணிக்காகச் சுமார் 200 ஆட்களை அவர் பணியமர்த்தினார். அவர்களில் பலர் முழுநேர ராணுவச் சேவைக்குத் தகுதியற்றவர்கள்.

பின்பு போருக்கான ஆள்திரட்டல் சட்டத்தை யுக்ரேன் மாற்றியமைத்தது. அந்நாட்டிற்குக் கூடுதல் போர் வீரர்கள் அவசரமாகத் தேவைப்பட்டனர். இதனால் படைத்தளபதியின் குழுவினர் பலர் திடீரென முன்னணியில் பணியாற்றத் தகுதி பெற்றனர்.

"எனது குழுவில் இருந்து 90% ஆட்கள் ராணுவத்தில் சேர்ந்தனர், 10% பேர் எலிகள் போலச் சிதறி ஒளிந்து கொண்டனர். எங்களுக்கென யாரும் எஞ்சியில்லை," என்று படைத்தளபதி ஆண்ட்ரி வெர்லாட்டி கூறுகிறார்.

வயது வரம்பிற்குக் குறைவான ஆண்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்புவது அல்லது பெண்களைக் குழுவில் இணைத்துக்கொள்வது என்பதில் ஒன்றைத் தேர்வு செய்யவேண்டியதாக இருந்தது.

"பெண்களை ராணுவத்தில் பணியமர்த்துவது என்பது முதலில் ஒரு நகைச்சுவையாக இருந்தது. அவர்கள் ராணுவத்தில் பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கையே இல்லை. ஆனால் தற்போது அவர்கள்தான் இங்கு பணியாற்றி வருகின்றனர்," என்று அவர் கூறுகிறார்.

 
ரஷ்யா -  யுக்ரேன்

பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE

படக்குறிப்பு, ஆண்ட்ரி வெர்லாட்டி

‘எங்கள் பங்களிப்பு இல்லாமல் போர் முடியாது’

பூச்சாவின் இந்தப் பெண்கள் குழுவினர் தங்கள் வார இறுதி நாட்களை ராணுவப் பயிற்சிகள் செய்வதில் செலவிடுகிறார்கள். இவர்களைச் சந்திக்க பிபிசி செய்தியாளர் குழு சென்றபோது, அவர்கள் ஒரு கட்டடத்தில் நுழைந்து எவ்வாறு தாக்குவது என்ற முதல் பாடத்தை கற்றுக்கொண்டு இருந்தனர்.

அவர்கள் ஒரு பண்ணை வீட்டின் இடிபாடுகளில் பயிற்சி செய்தனர். வீட்டின் உள்ளே நுழைவதற்கு முன்னர் துப்பாக்கியைக் கொண்டு அந்தப் பகுதியை நோட்டமிட்டு எச்சரிக்கையாக செல்கின்றனர்.

அந்த குழுவில் சிலர் மற்றவர்களை விட உறுதியான தோற்றத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்தப் பெண்களின் அர்ப்பணிப்பு மற்றும் கவனம் தெளிவாக உள்ளது. ஏனெனில் அவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவாதற்கான காரணங்கள் ஆழமானவை மற்றும் தனிப்பட்டவை.

"எதிரி நாட்டுப் படைகள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்தது எனக்கு நினைவிருக்கிறது. அதனால் ஏற்பட்ட பயம் எனக்கு நினைவிருக்கிறது. என் சொந்தக் குழந்தையின் அலறல் எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் தப்பி ஓடும்போது வழியில் கிடந்த சடலங்கள் எனக்கு நினைவிருக்கிறன," என்று வாலண்டினா பிபிசியிடம் கூறினார்.

பூச்சாவில் நடந்த தாக்குதலில் இருந்து வாலண்டினாவின் குடும்பம் தப்பித்தது. ஒரு ரஷ்ய சோதனைச் சாவடியில், ஒரு வீரர் அவர்களின் காரின் ஜன்னலை இறக்கச் சொன்னார். பின்னர் அவர் வாலண்டினாவின் மகனின் தலையில் துப்பாக்கியை வைத்தார். இதனால் வாலண்டினாவிற்கு பெரும்கோபம் வந்தது.

சுமார் 1,000 நாட்கள் முழு அளவிலான போருக்குப் பிறகு யுக்ரேன் நாட்டின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இனிமேல் இதில் யுக்ரேன் வெற்றி பெறும் என்று வாலண்டினா அழுத்தமாக நம்புகிறார்.

"எங்கள் வாழ்க்கை மாறிவிட்டது, எங்கள் திட்டங்கள் அனைத்தும் தகர்ந்துவிட்டன. ஆனால் இந்தப் போர் விரைவாக முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். இங்குள்ள எங்கள் பெண்கள் சொல்வது போல, எங்கள் பங்களிப்பு இல்லாமல் இந்தப் போர் முடிவுக்கு வராது," என்றார் அவர்.

 
ரஷ்யா -  யுக்ரேன்

பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE

படக்குறிப்பு, ரஷ்ய படையெடுப்புகளை தோற்கடிக்க யுக்ரேனின் படைகள் உறுதியாக இருக்கிறார்கள்

'ரஷ்யர்களை மன்னிக்க மாட்டேன்'

இந்தக் குழுவின் அலுவலக மேலாளராக உள்ளார் அன்யா. அவருக்குத் தற்போது 52 வயதாகிறது. இந்த ராணுவப் பயிற்சிகள் அவரை மேம்படுத்துவதாக அவர் கூறுகிறார்.

"எதிரிகள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்தபோது, நான் மிகவும் அர்த்தமற்றதாக உணர்ந்தேன். என்னால் வேறு யாருக்கும் உதவவோ, என்னைத் தற்காத்துக் கொள்ளவோ முடியவில்லை. நான் ஆயுதங்களைப் பயன்படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள விரும்பினேன், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணினேன்,” என்கிறார்.

இந்தப் பயிற்சியின் மத்தியில் அவர்களுக்குள் மகிழ்ச்சியாக பேசிக்கொள்கின்றனர். ஆனால் அந்த இரவு, ஒரு பெண் மனம் திறந்து மனதை கனக்க வைக்கும் ஒரு கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.

பூச்சா நகரத்தைக் கைப்பற்றியதும், ரஷ்யப் படைகள் வீடு வீடாகச் செல்லத் துவங்கின. அவர்கள் அங்குள்ள பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தனர். அப்போது ஒரு நாள் ரஷ்யப் படைகள் குழந்தைகளைக் கொல்ல வருவதாக வதந்தி பரவியது.

"அன்று நான் எடுத்த முடிவுக்காக, நான் ரஷ்யர்களை மன்னிக்க மாட்டேன்," என்று அந்தப் பெண் கூறுகிறார்.

ரஷ்ய வீரர்கள் அவரது வீட்டிற்கு ஒருபோதும் வரவில்லை. அவர் எதுவும் செய்யத் தேவை இருந்ததில்லை. ஆனால் அந்தப் பெண் சொன்ன விவரங்களையும், அதற்குப் பின் அவர் எடுத்த தீவிர முடிவையும் வெளியில் கூற முடியாது. ஆனால் இந்தப் பெண் அன்று நடந்த நிகழ்வினால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பத்திருக்கிறார்.

தன்னையும், தன் குடும்பத்தையும், தன் நாட்டையும் தற்காத்துக் கொள்ளக் கற்றுக்கொண்டபோதுதான் முதன்முதலாக அவர் நிம்மதி அடைந்தார்.

"இங்கே வந்து பணிபுரிவது உண்மையில் எனக்கு உதவியது, ஏனென்றால் நான் மீண்டும் பாதிக்கப்பட்டவளைப் போல மிகவும் பயப்பட மாட்டேன்," என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.