Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

ஶ்ரீலங்கா பாராளுமன்றத் தேர்தல் - தமிழர்கள் யாருக்கு வாக்களிப்பது?

 

👆🏿

ஶ்ரீலங்கா தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொளி என நண்பர் அனுப்பியிருந்தார். பார்த்து கருத்துக்களை வையுங்கள். தேர்தலில் வாக்களிக்கும் தாயகத் தமிழ் உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் எனவும் கேட்டிருந்தார்.

 

ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அநுர திசநாயக்க வெற்றி பெற்று, உடனடியாகவே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலும் நடக்கவுள்ள சூழலில் பல தமிழ் யூடியுப்பர்கள் அநுர அலைக்குப் பின்னால் போயுள்ளது தாயகத்தையும், தேசியத்தையும் நேசிப்பவர்களை பதட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

 

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க ஓர் சரியான தலைமை இல்லாமல், இருந்த கட்சிகள் எல்லாம் குழிபறிப்பு வேலைகளைச் செய்து தமக்குள்ளேயே மோதிச் சிதறிச் சின்னாபின்னமாகி பல்வேறு கட்சிகளிலும், சுயேட்சைக் குழுக்களிலும் தேர்தல் களத்தில் குதித்துள்ளன. இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்குச்சீட்டில் உள்ள சின்னங்களைப் பார்த்தே குழம்பி என்ன செய்வது என்று தெரியாமல் தமக்குப் பரிச்சயமான அல்லது பரிச்சயமற்ற சின்னங்களில் ஒன்றுக்கு வாக்களிக்கும் சாத்தியம் அதிகம் உள்ளதால் எவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படக்கூடும் என்பதைக் கணிப்பதே மிகவும் கடினமாக உள்ளது.

 

இத்தகைய அரசியல் சூழலில் தெற்குப் பகுதியில் சிங்கள மக்களினால் உண்டாக்கப்பட்ட அநுர அலை வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள்மீதும், மலையகத் தமிழ் மக்கள் மீதும் அடித்து, மக்கள் அலையில் அள்ளுண்டுபோகச் சாத்தியம் உள்ளது. எனினும் தமிழ் மக்கள் வாக்கைச் செலுத்தும் முன்னர் நிதானமாகச் சிந்தித்து தமது ஜனநாயகக் கடைமையைச் செய்யவேண்டும்.

 

அநுர திசநாயக்கா ஜனாதிபதித் தேர்தலில் வென்றபின்னர் தினமும் அரசியல் ஆய்வாளர்களாலும், சமூகவலை ஊடகங்களில் கருத்துரைப்போர்களாலும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாகவும், எதிராகவும், சந்தேகத்துடனும், குழப்பமாகவும் கருத்துக்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.  அறகலயப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் கோத்தபாயவை ஜனாதிபதி பதவியிலிருந்து இறக்கியிருந்தும், பொதுமன பெரமுனவின் கைப்பொம்மையாக ரணில் ஜனாதிபதியாக வந்ததை தடுக்கமுடியவில்லை. போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு பலமான அரசியல் கட்டமைப்பு நாடெங்கிலும் இல்லாதுதான் இதற்கு முக்கிய காரணம். இந்த நிலையில் சிங்களப் பகுதி முழுவதிலும் பலமான அரசியல் கட்டமைப்பைக் கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியினர் தேசிய மக்கள் சக்தியினுள் இணைந்து அறகலயப் போராட்டத்தின் விளைச்சலை அறுவடை செய்துள்ளனர். ஊழல் நிறைந்த ராஜபக்‌ஷர்களையும், மேற்தட்டு உயர்குழாமின் நலன்களைக் காக்கும் ரணிலையும், நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது உறுதியான முடிவுகளை எடுத்து தலைமைதாங்காத சஜித்தையும் சிங்கள மக்கள் பின்னே தள்ளி, சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த அநுரவை தமது தெரிவாக்கி ஜனாதிபதியாக்கியுள்ளனர்.

 

அநுரவின் தேசிய மக்கள் சக்தி, அவருக்கு வாக்களித்த சிங்கள மக்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் ஆதரவைத் தொடர்ந்தும் தக்கவைக்க காத்திரமான வேலைத் திட்டங்களை உடனடியாகச் செயற்படுத்தி, அதன் பலாபலன்களை அவருக்கு வாக்களித்த கீழ்த்தட்டு, மத்தியவர்க்க மக்கள் அனுபவிக்க மிகவும் கடினமாக வேலை செய்யவேண்டிய நிலை உள்ளது. அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள கொள்கைத் திட்டங்கள் இடதுசாய்வாக இருந்தாலும், திறந்த பொருளாதாரக் கொள்கையினுள் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நாட்டை, உலக நாணய நிதியம், இந்தியா, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து தலைக்கு மேல் கடன்பெற்ற நாட்டை நிமிர்த்துவதும், பிற சிங்கள கட்சிகளை தலையெடுக்காமல் பார்ப்பதும் சவால் மிக்க செயல்கள். 

 

எனவே, தேசிய மக்கள் சக்தியானது ஈசலைப் போல குறுகிய ஆயுள் இல்லாமல் நீண்டகாலம் அரசை நடாத்த பல சமரசங்களை உள்நாட்டிலும், வெளிநாடுகளுடனும் செய்யவேண்டிய யதார்த்த நிலையை உணர்ந்தே செயற்படுவர். இதனால் அவர்களது “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற தேர்தல் வாக்குறுதிகளிலும், கொள்கைகளிலும் தம்மை ஸ்திரப்படுத்திக்கொள்ள தேவையானதை மட்டுமே முன்னெடுப்பார்கள். சிங்கள மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற தோற்றப்பாட்டை உடனடியாகக் கொடுக்கக் கூடிய செயற்திட்டங்களும், பிற அரசியல் கட்சிகளை  முடக்க அவர்கள் மீதான ஊழல் வழக்குகளையும், குற்றங்களையும் விசாரிப்பதும், இந்தியா, சீனாவோடு சீரான உறவுகளைப் பேணுவதும், உலக நாணய நிதியத்துடன் இணைந்து அவர்கள் நிபந்தனைகளுக்கமைய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதும் முக்கியத்துவம் பெறும் செயற்பாடுகளாக இருக்கும்.

 

ஶ்ரீலங்கா முழுமையாகவே சிங்களவர்களின் தீவு என்ற தம்மதீபக் கொள்கை மகாவம்ச துட்டகைமுனு காலத்தில் இருந்து சிங்கள மக்கள்மீது படியவைக்கப்பட்டுள்ளது. எனவே, பெளத்த சிங்கள பெருந்தேசிய உணர்வும், விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட மிதப்பும் சிங்களவர்களிடமிருந்து அகலும் என்று எதிர்பார்க்கக்கூடாது. “நாம் எல்லோரும் ஶ்ரீலங்கன்” என்ற கொள்கை சிங்களவர்களைச் சிங்களவர்களாகவே வைத்திருக்கவும், சிறுபான்மை இனங்களான தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர், பறங்கியர் தமது தனித்துவங்களை இழந்து, இன அடையாளங்களைத் துறந்து “ஶ்ரீலங்கன்” என்று சிங்களவர்களுடன் கலந்துகொள்ளவே வழிசமைக்கும்.

 

தமிழ் மக்களுக்கு நியாயமானதோர் தீர்வு என்பது முதலில் இனப்பிரச்சினை உள்ளது என்பதை ஒத்துக்கொள்வதில் இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும். ஆனால் தேசிய மக்கள் சக்தி, தமிழர்களின் பிரச்சினையையும் பொருளாதாரப் பிரச்சினை எனக் குறுக்கி, தீர்வை புதிய யாப்பை உருவாக்குவது மூலம் கொடுக்கப்படும் அதிகாரப் பரவலாக்கம் மூலம், அதிக பட்சம் மாகாணசபைகள் மட்டத்தில், தீர்க்கவே முயலும். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தையும், கட்டளை வழங்கிய அதிகாரிகளையும் பாதுகாக்கவே செய்யும். இதனை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கும் எண்ணம் உள்ளவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

 

இலங்கையில் தமிழர்களின் அரசியல் திக்கற்ற கடற்பயணமாகியுள்ளது. தமிழ் அரசியலில் 2009 க்குப் பின்னர் விரிசல்கள் காணப்பட்டாலும், ஜனாதிபதித் தேர்தலுடன் அது சுக்குநூறாகத் துண்டு துண்டாக உடைந்துவிட்டது. தமிழ்த் தேசியத்திற்கு வாக்களிக்கும் நீண்ட பாரம்பரியத்தை உடைத்து, தமிழ் வாக்குகள் முழுமையாகப் பிளவுபட்டுள்ளன. இது தமிழர்களின் அடிப்படையான இனப்பிரச்சினை  மற்றும் அதிகாரத்தை பகிரும் அபிலாஷைகள் மீதான பேரம் பேசும் நிலைகளைத் தடுக்கிறது.

 

பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அதிகபட்சம் 16-17 தமிழ் உறுப்பினர்களே தெரிவு செய்ய்யப்படும் நிலை உள்ளது.  பல்வேறு கட்சிகளும், சுயேட்சைக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. சில சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுவோர் அரசியல் காரணங்களுக்காக இல்லாமல் தமது தனிப்பட்ட நலன்களுக்காகவும் போட்டியிடுகின்றனர். தேர்தலின் பின்னர் வெளிநாடுகளுக்குச் சென்று அகதி விண்ணப்பங்களில் தேர்தலில் போட்டியிட்டமையால் தமக்கு நெருக்கடி உள்ளது என்று காரணம் காட்டவும் சிலர் போட்டியிடுகின்றனராம்!

 

இப்படித் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிப் பிரியும்போது அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் முற்றாக இழக்கப்படவும், மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிகரிக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. இது வடக்கு-கிழக்கில் 13 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களே தெரிவு செய்யப்படக்கூடிய நிலையை உருவாக்கலாம். அதிலும், தமிழ்த் தேசியக் கட்சிகள் சிதறியுள்ளமையால், அவர்கள் மீதான வெறுப்பு பிற தமிழ்க் கட்சிகளுக்கும், தேசிய மக்கள் சக்திக்கும் வாய்ப்புக்களைக் கொடுக்கவும் கூடும்.  ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று தமிழர்களின் ஒற்றுமையைக் காட்டமுனைந்த பொதுக்கட்டமைப்பு, பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களுக்கு வழிகாட்டமுடியாத அளவுக்கு மூக்குடைபட்டுள்ளது. இது தமிழர் சிவில் சமூகக் கட்டமைப்பின் பாரிய தோல்வியாக உள்ளது.

 

எனவே, மக்கள் தங்களது ஒவ்வொரு வாக்கின் பெறுமதியையும் உணர்ந்து, தமிழர்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடியவர்களை குப்பையில் குன்றிமணியைப் போல அடையாளம் கண்டு வாக்கைச் செலுத்தவேண்டும். 

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமுதாய வைத்தியர் Dr முரளி வல்லிபுரநாதன் பதிவு..

 

 

தமிழ் வாக்காளர்களில் மாற்றம் அவசியம்

தென் பகுதி வாக்காளர்கள் ஊழல்வாதிகள், குற்றச் செயல்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில்  ஈடுபடும் அரசியல்வாதிகள், பொது சொத்துக்களை அபகரித்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்கள்  மற்றும் ஏமாற்றுப் பேர்வழிகள் ஆகியோரை தவிர்த்து  புதிய தலைவர்களை தேடி வாக்களிக்க தொடங்கியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் இதன் பிரதிபலிப்பாக தேசிய மக்கள் சக்தி 42% வாக்குகளை பெற்று வெற்றி ஈட்டி இருந்தது. ஆனால் அந்த மாற்றம் தமிழர் மற்றும் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் ஏற்பட்டு இருக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிர்ச்சியால் தென்பகுதியில் பல அரசியல் தலைவர்கள் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் இருந்து முற்றாக ஒதுங்கியுள்ளார்கள் அல்லது ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டு பலமான எதிர்க்கட்சி ஒன்றை அமைப்பதற்கு வாக்கு கேட்க தொடங்கியிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தி தென்பகுதியில் மேலும் அதிக வாக்குகளை பெற்று   50% எல்லையை கடந்து பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பல கருத்துக் கணிப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. அதனால் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை ஆராய்ந்து தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை முன்கூட்டியே எதிர்வு கூறுவது இலகுவாக இருந்தது. ஆனால் இம்முறை ஏனைய ஜனநாயக நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஆய்வுகளை இலங்கை தேர்தல் ஆணையம் தெளிவான காரணம் எதையும் கூறாமல் தடை செய்துள்ளது. 

இது ஒரு புறம் இருக்க தமிழர் வாழும் பகுதிகளில் என்ன நடந்திருக்கிறது என்பதை ஆராய்ந்தால் முன்பை விட இம்முறை அதிகமாக  கயவர்கள், பித்தலாட்டக்காரர்கள் மோசடியாளர்கள்  தமிழர் பகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பது தமிழ் வாக்காளர்களை தொடர்ந்தும் ஏமாற்றலாம் என்ற முழு நம்பிக்கையுடன் இவர்கள் இருப்பதை காட்டியுள்ளது. கடந்த காலங்களில் சிறு சிறு சலுகைகள் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் மூலமாக பெற்றுக்கொண்ட உதவிகளுக்காக தமிழ் வாக்காளர்கள் கொலைகாரர்களுக்கும் ஏனைய குற்றவாளிகளுக்கும் வேடதாரிகளுக்கும் வாக்களித்ததன் விளைவாக இம்முறையும் அதே வெற்றியை பெற முடியும் என்று இந்த வேட்பாளர்கள் எண்ணுகிறார்கள். இதன் பின்னணியில் வெளிநாட்டு வியாபாரிகள் ஐந்தாம் படைகள்  புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் என்ன செய்வது என்று தெளிவான திட்டம் எதுவும்  இன்றி எதாவது செய்யவேண்டும் என்று புலத்திலும் நாட்டிலும் உள்ள சில உணர்ச்சிபூர்வமான அப்பாவிகள் உட்பட்ட பலர் இருக்கிறார்கள், 

இந்தப் பின்னணியில் தேசிய மக்கள் சக்தி முன்னிலைப்படுத்தியுள்ள 7 வழக்குகளில் தமிழர்களுடன் தொடர்புடைய   3 முக்கிய வழக்குகளை எடுத்துக் கொள்ளலாம்.

1. ஊடகவியலாளர் சிவராமின் படுகொலை வழக்கு
அமைதியாக மெல்லிய குரலில் பேசும் சித்தார்த்தன் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை விட விலையுயர்ந்த வாகனங்களை பல தடவைகள் இறக்குமதி செய்து மக்கள் வரிப்பணத்தை சுருட்டி இருக்கிறார் என்பது ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இணைந்து போட்டியிடும் மண்டையன் குழுவின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்   சுன்னாகம் நீர் மாசடைதலில் தமிழ்  மக்கள் தான் தங்களுடைய கிணறுகளில் கழிவு ஒயில் கலந்தார்கள் என்று முதுகில் குத்திய ஐங்கரநேசன் என்று ஒரு ஒட்டுமொத்த குற்றக் கும்பல் ஒன்று பட்டு  போட்டியிடுகிறது 

2. உபவேந்தர் ரவீந்திரநாத் படுகொலை வழக்கு 
பிள்ளையானும் கருணாவும் இணைந்து செயல்[பட்ட காலத்தில் கிழக்கில் பல படுகொலைகள் காணமல் போதல் இடம்பெற்று இருந்தன. 2009 இல் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு சமுதாய மருத்துவம் கற்பிப்பதற்கு உபவேந்தர் காணாமல் போனது  மற்றும் விரிவுரையாளர் தம்பையா  கொல்லப்பட்டது போன்ற நிகழ்வுகளின் பின்னணியில் எவருமே முன்வராத நிலையில் நான் அங்கு சென்றபோது பலருடைய கண்ணீர் கதைகளை  கேட்டேன். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கும் இறந்தவர்களுக்கும்  நீதி கிடைப்பது மிகவும் அவசியம். 

3. 2011 இல் லலித் மற்றும்  குகன் காணாமல் போன படுகொலை வழக்கு 
உறவினர்கள் கோத்தபாயாவின் மீது குற்றம் சாட்டியுள்ள போதிலும் இவர்கள் ஒட்டுண்ணி குழுக்களின் மூலமே காணாமல்  ஆக்கப்பட்டு இருந்தார்கள். 

20 வருடங்களுக்கு மேலாக சிறீதர் திரை அரங்கு கட்டிடம் மற்றும் பல தனியார் சொத்துக்களை அபகரித்து வைத்துக் கொண்டு அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி உரிமையாளர்களின் வழக்குகளை தள்ளிப்போட்டு கொண்டு இருக்கும் குற்றவாளிக் கும்பல் அரசியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் 

தமிழர் பகுதியில் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் தமிழர்கள் தர்மத்தின் வழிநடக்க வேண்டும். தமிழ் வாக்காளர்கள் தொடர்ந்தும் குற்றவாளிகளிடம் பெற்றுக் கொண்ட உதவிகளுக்காக செஞ்சோற்று கடன் தீர்க்க குற்றவாளிகளுக்கு தொடர்ந்தும் வாக்களித்தால் கர்ணனை போல் அழிவுக்கு உள்ளாவார்கள். இந்தக் குற்றவாளிகளுக்கு வாக்களிப்பதை நிறுத்தினால்தான் சட்டத்தின் பிடியில் இவர்களை இலகுவாக நிறுத்தி தமிழர் பகுதிகளில் நீதியையும் தர்மத்தையும்  நிலைநாட்ட முடியும் 

மறுபுறம் தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி பிரபலமான அரசியல் முதிர்ச்சி அடைந்த ஒரு சில வேட்பாளர்களையே குறுகிய காலத்தில் அடையாளம் கண்டு தேர்தலில் நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக தேசிய மக்கள் சக்திக்கு  தென்பகுதியில் வீசும் அதே வெற்றி அலையை வடக்கு கிழக்கில் பேணுவதில் சங்கடம் ஏற்பட்டுள்ளது. இதைவிட விச(ர்) ஊசிக் கும்பல் தமிழ்  வாக்காளர்களை நகைச்சுவை கும்பலாக மாற்ற முயல்கிறது. இதேவேளை தமிழ் தேசியம் என்றால் என்ன என்பதையே அறியாத தமிழ் வாக்காளர்கள் எவ்வாறு வாக்களிக்க போகிறார்கள் என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும். 

Dr முரளி வல்லிபுரநாதன் 
11.11.2024

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

இதைவிட விச(ர்) ஊசிக் கும்பல் தமிழ்  வாக்காளர்களை நகைச்சுவை கும்பலாக மாற்ற முயல்கிறது.

முரளி சாக்கு ஊசியால் அர்ச்சுனாவிற்கு ஒரு குத்து இன்னும் குத்தல்லையே என்ற தேடலுடனேயே முரளியின் பதிவை வாசித்துக்  கொண்டே வர.............. கடைசிப் பந்தியில் விஷ ஊசியால் குத்து விழுந்திருக்கின்றது................🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_9548.png.738a446ad374ca423807e802d0f87c19.pnglarge.IMG_9550.png.52d00ab620b7e056f24a3c6624137e08.pnglarge.IMG_9551.png.aca617eb224ebf98ad9d755c3d335471.pnglarge.IMG_9552.png.09f2cd0edaac3dbeb05d89e2c97d86e5.pnglarge.IMG_9553.png.ef0dd0f6f048e02e2b5a673bc103a6ff.pnglarge.IMG_9554.png.95d03b6465c1dc557e2a9f60cbc6b888.pnglarge.IMG_9555.png.531f6dc8096cc27740113f8c8fcf5692.pnglarge.IMG_9556.png.3a1e9007a3e3c20752b144a0ce477393.pngபாராளுமன்றத் தேர்தலில் யார் வெல்வார்கள் என்று சொல்லும் இலங்கைத் தீவு முழுவதுக்குமான கருத்துக்கணிப்பு!

https://www.scribd.com/document/770823437/Survey-on-Presidential-Election-2024-By-Pradeep-Chanaka

கருத்துக்கணிப்பு யாழில் அநுரகுமார பிரச்சாரம் செய்யமுன்னர்எடுக்கப்பட்டதால் எவ்வளவு தூரம் சரியென்று சொல்லமுடியாது!

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.