Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாள் கிரிக்கெட் தொடர்: மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஹெட்மயர், இங்கிலாந்து அணித் தலைவர் லிவிங்ஸ்டன்

image

(நெவில் அன்தனி) 

இலங்கைக்கு எதிரான இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் தலா 1 - 2 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மேற்கிந்தியத் தீவுகள் தனது சொந்த மண்ணில் இதே வகையான இரண்டு தொடர்களில் இங்கிலாந்தை சந்திக்கவுள்ளது.  

இங்கிலாந்தை 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரிலும் மேற்கிந்தியத் தீவுகள் எதிர்த்தாடவுள்ளது.  

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. 

இத் தொடரை முன்னிட்டு மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு எதிராக விளையாடிய அலிக் அதானேஸ் நீக்கப்பட்டு அதிரடி வீரர் ஷிம்ரன் ஹெட்மயர் குழாத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இந்த ஒரு மாற்றமே மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெற்றுள்ளது. 

தனிப்பட்ட காரணங்களுக்கான இலங்கைக்கான கிரிக்கெட் விஜயத்தில் ஷிம்ரன் ஹெட்மயர் இடம்பெறவில்லை.

இது இவ்வாறிருக்க, கரிபியன் தீவுகளுக்கு ஏற்கனவே பயணமாகியுள்ள இங்கிலாந்து அணியின் தலைவராக லியாம் லிவிங்ஸ்டோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உபாதை காரணமாக ஜொஸ் பட்லர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதால் லியாம் லிவிங்ஸ்டனுக்கு தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அணிகள்

மேற்கிந்தியத் தீவுகள்: ஷாய் ஹோப் (தலைவர்), ஜுவெல் அண்ட்றூ, கியசி கார்ட்டி, ரொஸ்டன் சேஸ், மெத்யூ போர்ட், ஷிம்ரன் ஹெட்மயர், அல்ஸாரி ஜோசப், ஷமார் ஜோசப், ப்றெண்டன் கிங், எவின் லூயிஸ், குடாகேஷ் கேட்டி, ஷேர்ஃபேன் ரதஃபர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஹேடன் வோல்ஷ் துச.

இங்கிலாந்து: லியாம் லிவிங்ஸ்டோன் (தலைவர்), மைக்கல் பெப்பர், பில் சோல்ட், ஜேக்கப் பெத்தெல், சாம் கரண், வில் ஜெக்ஸ், டான் மூஸ்லி, ஜெமி ஓவர்ட்டன், ரெஹான் அஹ்மத், ஜொவ்ரா ஆச்சர், ஜவர் சோஹான், சக்கிப் மஹ்மூத், ஆதில் ராஷித், ரீஸ் டொப்லே, ஜொன் டேர்னர்.

https://www.virakesari.lk/article/197500

WI vs ENG: ‘இங்கிலாந்தை’.. கதறவிட்ட மே.இ.தீவுகள் அணி: மெகா வெற்றி.. லிவிஸ் தொடர்ந்து காட்டடி!

WI vs ENG 1st ODI

மேற்கிந்தியத் தீவுகள் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டி ஆன்டிகுவாவில் துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில், பல இளம் வீரர்கள் இடம்பெற்று இருந்தார்கள். இந்த அணியை லியம் லிவிங்ஸ்டன் தான் வழிநடத்தினார். இளம் இங்கிலாந்து அணியும் பேஸ்பால் ஆட்டத்தை வெளிப்படுத்திமா என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து அணியானது தடுமாற்றத்துடன் விளையாடி, ரன்களை குவிக்க சிரமப்பட்டது. மேலும், ஒரு பேட்டர் கூட 100 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வில்லை.

கேப்டன் லியம் லிவிங்ஸ்டன் மட்டும் 48 (49) 97.96 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை அடித்தார். மற்றவர்களில் யாரும் 90 ஸ்ட்ரைக் ரேட்டை கூட தொடவில்லை. லிவிங்ஸ்டனுக்கு அடுத்தப்படியாக சாம் கரண் 37 (56), பெத்தோல் 27 (33), ஆகியோர் ஓரளவுக்கு பெரிய ஸ்கோரை அடித்திருந்தார்கள். ஓபனர்கள் பிலிப் சால்ட் 18 (29), வில் ஜாக்ஸ் 19 (27), அடுத்து ஜோர்டன் காக்ஸ் 17 (31) போன்றவர்கள் துவக்கத்திலேயே படுமோசமாக சொதப்பியதால்தான், இங்கிலாந்து அணிக்கு, பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இறுதியில், இங்கிலாந்து அணி, 45.1 ஓவர்கள் முடிவில் 209/10 ரன்களை மட்டுமே சேர்த்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியில், ஸ்பின்னர் மோட்டே 10 ஓவர்களில் 41 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்களை சாய்த்தார். அல்ஜாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ், மேத்யூ போர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இலக்கை துரத்திக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, துவக்கம் முதலே அபாரமாக செயல்பட்டது. பவுண்டரிகளை விட சிக்ஸர்களை அதிகம் அடிக்கும் பேட்டர் எவின் லிவிஸ், தற்போதும் பவுண்டரிகளைவிட அதிக சிக்ஸர்களை அடித்து அசத்தினார். இந்நிலையில், 15 ஓவர்கள் முடிந்த உடனே மழை குறுக்கிட்டது. ஆகையால், டிஎல்ஸ் முதிறைப்படி, மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றியைப் பெற, 35 ஓவர்களில் 157 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 14 ஓவர்களில் 81/0 என்ற நல்ல நிலையில் இருந்ததால், அந்த அணி நிச்சயம் வெல்லும் என்ற நிலை இருந்தது.

மழை நின்றப் பிறகு, ப்ரண்டன் கிங் 30 (56) விக்கெட்டை மட்டும்தான், இங்கிலாந்தால் வீழ்த முடிந்தது. எவின் லிவிஸ் 67 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உட்பட 94 ரன்களை குவித்து, ஆட்டம் முடியப் போகும் நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில், ஷாய் ஹோப் 6 (10), கேய்சி கர்டி 19 (20) ஆகியோர் களத்தில் இருந்தபோது, மேற்கிந்தியத் தீவுகள் அணி, வெறும் 25.5 ஓவர்களிலேயே 157/2 ரன்களை சேர்த்து, 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

https://tamil.samayam.com/sports/cricket/news/west-indies-beat-england-by-8-wickets/articleshow/114831125.cms

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள் குவித்து ஹெய்ன்ஸின் மைல்கல் சாதனையை சமப்படுத்தினார் ஷாய் ஹோப்

image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக அன்டிகுவாவில் கடந்த சனிக்கிழமை (02) நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபார சதம் குவித்த அணித் தலைவர் ஷாய் ஹோப், குறைந்த இன்னிங்ஸ்களில் 17 சதங்கள் குவித்த மேற்கிந்தியத் தீவுகள் வீரர் என்ற மைல்கல் சாதனையை நிலைநாட்டினார்.

அப் போட்டியில் ஷாய் ஹோப் சதம் குவித்து டெஸ்மண்ட் ஹெய்ன்ஸின் 17 ஒருநாள் சதங்கள் என்ற மைல்கல் சாதனையை சமப்படுத்திய போதிலும் லியாம் லிவிங்ஸ்டோன் குவித்த சதம் இங்கிலாந்தை வெற்றி பெறச் செய்தது.

download.png

ஷாப் ஹோப் குவித்த சதத்தின் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 328 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லியாம் லிவிங்ஸ்டோன் குவித்த ஆட்டம் இழக்காத 124 ஓட்டங்களின் உதவியுடன் 47.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 329 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

ஷாய் ஹோப் குவித்த 17 சதங்கள் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக அதிக சதங்கள் குவித்தவர்கள் வரிசையில்  மூன்றாவது சம இடத்தைப் பிடித்துள்ளது.

கிறிஸ் கெல் 291 இன்னிங்ஸ்களில் 25 சதங்களையும் ப்றயன் லாரா 285 இன்னிங்ஸ்களில் 19 சதங்களையும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 237 இன்னிங்ஸ்களில் 17 சதங்களையும் பெற்றனர்.

ஆனால், ஷாய் ஹோப் வெறும் 124 இன்னிங்ஸ்களில் 17 சதங்களைக் குவித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் எதிர்காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இன்னும் 5 வருடங்களுக்கு அவர் தொடர்ந்து விளையாடினால் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/197861

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றையான் விளையாட்டு

சூப்ப‌ர்...........................

Edited by வீரப் பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அணித்தலைவருடன் முறைத்துக்கொண்டு ஆட்டத்தின் நடுவே மைதானத்திலிருந்து வெளியேறிய மேற்கிந்திய அணியின் அல்ஜாரி ஜோசப் - இரண்டு போட்டித்தடை

image

அணித்தலைவர் சாய்ஹோப்புடன் முரண்பட்டுக்கொண்டு மைதானத்திலிருந்து வெளியேறிய மேற்கிந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பிற்கு இரண்டு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரிஜ்டவுனில் இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது நான்காவது ஒவரில் அணித்தலைவரின் களதடுப்பு வியூகம் குறித்து திருப்தியடையாத அல்ஜாரி ஜோசப், தனது எதிர்ப்பை வெளியிட்டமை காணமுடிந்தது.

alzari_3.jpg

அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஜோர்டன் ஹோக்சினை ஆட்டமிழக்கச்செய்தார், எனினும் அவர் அதனை கொண்டாடவில்லை.

அந்த ஓவர் முடிவடைந்ததும், அணித்தலைவருக்கு அறிவிக்காமல் மைதானத்திலிருந்து வெளியேறி ஓய்வறைக்கு சென்றார்.

இதன் காரணமாக பத்து வீரர்களுடன் மேற்கிந்திய அணி ஐந்தாது ஓவர் பந்து வீசியது.

எனது அணியில் இவ்வாறான நடத்தைகள் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை என மேற்கிந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் டரன்சமி தெரிவித்துள்ளார். நாங்கள் நண்பர்களாக பழகுவோம், ஆனால் நான் கட்டியெழுப்ப விரும்பும் கலாச்சாரத்தில் இது ஏற்றுக்கொள்ளமுடியாது, என அவர் தெரிவித்துள்ளார்.

ஆறாவது ஓவரில் மீண்டும் ஜோசப் மைததானத்திற்குள் வந்தார் எனினும் 12 ஓவர் வரை அவர் பந்து வீசவில்லை, அதன் பின்னர் இரண்டு ஓவர்கள் பந்து வீசியவர் மீண்டும் மைதானத்திலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் மீண்டும் திரும்பி வந்து ஐந்து ஓவர்கள் பந்து வீசினார் - பத்து ஓவர்கள் பந்துவீசி 45 ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

மேற்கிந்திய தீவுகள் அணி பின்பற்றும் விழுமியங்களுடன் அல்ஜாரி ஜோசப்பின் நடத்தை ஒத்துப்போகவில்லை என மேற்கிந்திய அணியின் கிரிக்கெட் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

alzari.jpg

இவ்வாறான நடவடிக்கைகளை அலட்சியம் செய்ய முடியாது உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்திற்காக அல்ஜாரி ஜோசப் மன்னிப்பு கோரியுள்ளார் - கிரிக்கெட் மீதான எனது வேட்கை என்னை ஆக்கிரமித்துவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/198186

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொழில்முறை வீரரருக்கான நெறிமுறையை மீறிய அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை

image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக பார்படொஸ், ப்றிஜ்டவுன் விளையாட்டங்கில் நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொழில்முறை வீரருக்கான நெறிமுறையை மீறியமைக்காக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

களத்தடுப்பில் வீரர்கள் நிறுத்தப்பட்ட நிலைகள் தொடர்பில் அணித் தலைவர் ஷாய் ஹோப்புடன் ஏற்பட்ட உடன்பாடின்மை காரணமாக போட்டியின் 4ஆவது ஓவர் முடிவில் அல்ஸாரி ஜோசப்  களத்தை விட்டு வெளியேறினார்.

ஜோசப் அல்ஸாரி வெளியேறியதால் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் ஒரு ஓவர் முழுவதும் 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது.

எவ்வாறாயினும் மீண்டும் களத்தடுப்பில் ஈடுபட்ட ஜோசப், மிக முக்கிய 2 விக்கெட்களை வீழ்த்த, அத் தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது.

இது இவ்வாறிருக்க, அல்ஸாரி ஜோசப்புக்கு விதிக்கப்பட்ட இரண்டு போட்டித் தடையை உறுதிசெய்யும் வகையில் மேற்கிந்தியத் திவுகள் கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (08) வெளியிட்டது.

'மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனம் பின்பற்றும் கிரிக்கெட் மதிப்புகளுடன் அல்ஸாரியின் நடத்தை ஒத்துப்போகவில்லை. அத்தகைய நடத்தையை புறக்கணிக்க முடியாது. சூழ்நிலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டும் பெறுமதிகள் உறுதிசெய்யப்படுவதை கருத்தில் கொண்டும் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளோம்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தனது செய்கை குறித்து அணித் தலைவர் ஷாய் ஹோப்பிடமும் ஏனைய வீரர்களிடமும் அல்ஸாரி ஜொசப் மன்னிப்பு கோரியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் நாளை சனிக்கிழமை (09) ஆரம்பமாகவுள்ளது.

https://www.virakesari.lk/article/198229

  • கருத்துக்கள உறவுகள்

@vasee

வெஸ்சின்டீஸ் எதிர் இங்லாந் 

முத‌லாவ‌து 20 ஓவ‌ர் போட்டியில் எந்த‌ அணி வெல்லுவின‌ம் என்று நினைக்கிறீங்க‌ள்....................

 

என‌து க‌ணிப்பு வெஸ்சின்டீஸ்............................................

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏதோ நினைக்க‌ வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் வேறு மாதிரி விளையாடி அவுட் ஆகின‌ம் ஹா ஹா😁..............................................

 

 

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.