Jump to content

தமிழ் மக்களுக்கு தீர்வைத் தாருங்கள் பல்லாயிரம் கோடி முதலீடுகள் வரும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்


கிருபன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு தீர்வைத் தாருங்கள் பல்லாயிரம் கோடி முதலீடுகள் வரும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

suresh.jpg

ஊழல் ஒழிப்பிற்கும் இலஞ்ச ஒழிப்பிற்கும் நிர்வாக ஒழுங்குமுறைக்கும் ஆதரவளிப்பதை தென்னிலங்கை அரசியல் சமூகம் பார்த்துக்கொள்ளட்டும். நாம் எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக பாராளுமன்றத்தில் குரல்கொடுக்கக்கூடிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டுமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் தனக்கும் விருப்பு இலக்கம் 1இல் வாக்களிக்குமாறும் யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாயில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்த

அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

இலங்கையில் ஏறத்தாழ 35 வருடம் உள்நாட்டுப் போர் என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது மூர்க்கத்தனமான இராணுவ தாக்குதல்கள் நடத்தப்பட்டன . இதில் இராணுவ தரப்பிலும் போராளிகள் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலுமாக பல இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்தது.

கடந்த 35 வருட காலத்தில் இந்த நாடு பாரிய அழிவுகளைச் சந்தித்தது மாத்திரமல்லாமல் பாரிய பொருளாதாரப் பின்னடைவுகளையும் சந்தித்தது. அப்பொழுதெல்லாம் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தைக் காரணம் காட்டி ஆட்சியாளர்கள் சிங்கள மக்கள் கிளர்ந்தெழாதவாறு அவர்களின் கைகளையும் வாயையும் கட்டிப்போட்டிருந்தனர்.

இப்பொழுது இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம்கோடி கடன்கள் வெளிநாடுகளுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அதே அளவு கடன்கள் உள்நாட்டிலும் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் முன்னர் இருந்த ஆட்சியாளர்களும்சரி இப்பொழுது வந்திருப்பவர்களும் சரி இந்தப் பொருளாதார பின்னடைவுகளுக்கான சரியான மூலம் எதுவென்பதை வெளியில் சொல்வதற்கு இன்னமும் தயாராகவில்லை.

இப்பொழுது வந்திருக்கக்கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் தேசிய மக்கள் சக்தி என்றிருக்கக்கூடிய ஜனதா விமுக்தி பெரமுனவின் கூட்டணயில் உள்ளவர்களும் இந்த நாட்டில் ஊழல், இலஞ்சம், நிர்வாக சீர்கேடுகள்,வீண்விரயச் செலவுகள் இவைகள்தான் இந்த வங்குரோத்து நிலைக்குக் காரணம் எனக்கூறி உண்மையைப் பூசிமெழுக முற்படுகின்றனர்.

ஊழல், இலஞ்சம், நிர்வாக சீர்கேடுகள் போன்றவற்றிற்கு முழுமையான காரணகர்த்தாக்களாக இருப்பவர்கள் கடந்த காலங்களில் ஆட்சி செய்த சிங்கள அரசாங்கங்களும் அவர்களின் நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளும்தான்.

தமிழ் மக்களுக்கு அரசாட்சியும் கிடையாது. நிர்வாகமும் கிடையாது. வடக்கு-கிழக்கிலுள்ள நிர்வாகங்களும் கொழும்பினாலேயே ஆட்டிப்படைக்கப்படுகின்றன.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களின் கைகளில் அதிகாரங்கள் முழுமையாகக் கிடைக்கப்பெற வேண்டும். ஆனால் முன்னைய அரசாங்கங்களும் சரி இப்பொழுது வந்திருப்பவர்களும்சரி தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்குவதில் பின்நிற்கிறார்கள்.

இலங்கையின் பொருளாதாரம் முன்னோக்கிச் செல்ல வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களுக்கான ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். எமக்கான ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுகின்றபொழுது புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து பல்லாயிரம்கோடி முதலீடுகள் வருவதுடன் எமது அண்டை நாடான இந்தியா குறிப்பாக தமிழகத்து தொழிலதிபர்களும் கூட இங்கு முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவார்கள். அதன் மூலம் ஏற்படுகின்ற வடக்கு கிழக்கின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த இலங்கைக்கும் பாரிய நன்மைகளை ஏற்படுத்தும்.

வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். தொழிற்சாலைகள் அதிகரிக்கும். தொழில்நுட்பக் கல்வி உட்பட கல்விமுறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். ஆகவே இப்பொழுது பதவியில் இருக்கின்ற ஜனாதிபதியும் வரவிருக்கின்ற புதிய அரசாங்கமும் இவற்றை ஆழமாக ஆலோசித்து தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும்.

இந்த விடயங்கள் தொடர்பாக புதிய அரசாங்கத்துடன் பேசக்கூடிய வல்லமையுள்ள இவைபற்றி தெளிவான சிந்தனையுள்ள சரியான உறுப்பினர்களைத் தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்பவேண்டும். அதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து அதிகளவிலான பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றார்.

 

https://akkinikkunchu.com/?p=298032

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊருக்கு. உபதேசம் செய்யும் பல்லி கூழ்ப்பானைக்குள் விழுவதுண்டு என்ற பழமொழியும் உண்டு. சுமந்திரனும் சனாதிபதிக்கு உபதேசம் செய்யும் நிலையில் உள்ள ஒரு பல்லி.😜
    • மோடி உண்மையான நண்பன் – ட்ரமப்க்கு வாழ்த்திய மோடி. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பை தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். குறித்த அழைப்பில் உலக அமைதிக்காக இரு தலைவர்களும் ஒன்றிணைந்து பணியாற்றுவது என உறுதி மேற்கொண்டனர் என அரசியல் தகல்கள் தெரிவித்துள்ளன. ஒட்டுமொத்த உலகமும் பிரதமர் மோடியை விரும்புகிறது. இந்தியா ஒரு பிரமிக்க வைக்கும் நாடு. பிரதமர் மோடி ஒரு உன்னதம் வாய்ந்த நபர். பிரதமர் மோடியையும், இந்தியாவையும் உண்மையான ஒரு நண்பராக கருதுகிறேன் என பிரதமர் மோடியிடம் டிரம்ப் கூறியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெற்றி பெற்ற பின்பு முதன்முதலாக நான் பேசிய உலக தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர் என டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், 2-வது முறையாக பதவி வகிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1407576
    • மன்னார் நீதிமன்றத்தில் வைத்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலை அலுவலர் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி  மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தரை நாளை வெள்ளிக்கிமை (08) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவது,  கடந்த 5 ஆம் திகதி  வவுனியா சிறைச்சாலை  அலுவலர் மன்னார் நீதவான் நீதிமன்றில் கடமைக்காக வந்துள்ளார். குறித்த சிறைச்சாலை  அலுவலர், மன்னார் நீதிமன்ற தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரை பார்வையிடுவதற்காக சென்ற பெண் ஒருவரிடம்  தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபரை பார்வையிடுவதற்காக 1,000 ரூபாய் பணத்தை  பலவந்தமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில்  மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த சிறைச்சாலை அலுவலர் பாதிக்கப்பட்ட பெண்ணினால் அடையாளம் காண்பிக்கப்பட்ட நிலையில் குறித்த  சிறைச்சாலை  அலுவலர்  நீதவான் நீதிமன்றில் வைத்து கைது செய்து  விசாரணைகளின் பின்னர்  கடந்த 5 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், குறித்த சிறைச்சாலை அலுவலரை நாளை வெள்ளிக்கிமை (08) வரை விளக்கமறியலில் வைக்க  உத்தரவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/198096
    • வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ  வாக்காளரட்டை விநியோகம் இன்றுடன் (7) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது உத்தியோகபூர்வ  வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட 27ஆம் திகதி முதல் இன்று வரை வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் நாளை (8) தபால் நிலையங்களுக்கு சென்று தங்களது வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமென சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார். நாளை தொடக்கம் பொதுத் தேர்தல் நடைபெறும் நவம்பர் 14ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளரட்டைகளை தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக வாக்காளர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/311849
    • லொஹான் ரத்வத்தவுக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு! பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்த ஆகியோரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டுள்ளது. லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு  நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198111
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.