Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் எந்தவித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என ஜே.வி.பி கட்சியின் செயலாளர் டில்வின் சில்வா(Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் நேற்று(04.11.2024) கலந்துக்கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்திக்கே ஆதரவளிக்கவுள்ளதாகத் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார். 

எனினும் அதனை நிராகரிப்பதாக டில்வின் சில்வா கூறியுள்ளார்.

 

 

சஜித் பிரேமதாச

 

இதன்படி, அந்த தரப்பினர் சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவளித்தனர் என டில்வின் சில்வா சுட்டிக்காட்டியள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் ஆதரவு: அநுர தரப்பு வெளியிட்ட தகவல் | Anura S Alliance With The Tna Issue

எனவே, தேர்தல் தொடர்பில் அவர்களுடன் எந்தவித கலந்துரையாடலிலும் தற்போது ஈடுபடவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

https://tamilwin.com/article/anura-s-alliance-with-the-tna-issue-1730793981

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரனின்  சுத்துமாத்துக்கள்... வர வர எல்லை இல்லாமல் கூடிக் கொண்டு போகுது.
நவம்பர் 14 திகதி தேர்தலுடன்... இந்தப் பேயை, வேப்பிலை அடித்து விரட்டப் படும். 😂



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.