Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"கீதை பிறந்தது" 

"கீதை பிறந்தது தர்மத்தை விளக்கவே  
மேதை கிருஷ்ணன் அருச்சினனுக்கு போதிக்கவே!
காதை கொடுத்துக் கேட்டவன் தயங்கினான் 
பாதை புரியாமல் போரில் நின்றானே!"  

"தத்துவவாதியின் அறிவுரையோ ஒரு பக்கம்  
தத்துவம் சொன்னவனே மீறியதோ மறுபக்கம்? 
தந்திரம் நிறைந்த மாயோனின் கூத்தில் 
தயாளகுணன் கர்ணன் மடிந்ததும் தெரியாதோ?"

"தர்மத்தை பாதுகாக்கப்  பூமிக்கு வந்தவனே   
அர்த்தமே புரியாமல் வஞ்சகம் புரிந்தானே!  
வார்த்தையில் அழகாய்க்  கூறிய அவனே 
தேர்ந்து எடுத்ததோ பொய்யும் பித்தலாட்டமுமே!"  

"அன்பை விதைத்தால் மனிதம் உயரும் 
அறம் நிலைநாட்டினால் பண்பு மலருமே! 
அவதாரம் எடுத்து போதித்த கொள்கை
அநீதி வழியில் சென்றது ஏனோ?"  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

465865287_10226999206468891_9010154848205190657_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=3y50OeFsynIQ7kNvgG-4rID&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AdFzUjWgZgqizXNRbuqOnKZ&oh=00_AYDsXMUNm1YEoQq0TNLY8dbIs0RaSz1KOnWPhoQEtCb5yw&oe=6733B8CA
  



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.