Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்

போரில் வெற்றி முரசம் முழங்கும்

புலிகள் கழுத்தில் மாலை துலங்கும்"

இப்படியாக உத்தேச தமிழீழத்தின் உதயத்தைப் பற்றிய பூரண நம்பிக்கையைத் தரும் கவிஞர் காசி ஆனந்தனின் பாடலைத் தனது மதுரக்குரலால் மக்களுக்கு எடுத்துக் கூறி வருபவர் தேனிசை செல்லப்பா அவர்களாகும். 1960 களில் தமிழ்நாட்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த நமது கவிஞர் சாசி ஆனந்தன் அவர்கள் காலஞ்சென்ற சி. பா. ஆதித்தனார் அவர்களது தலைமையில் இயங்கிய 'நாம் தமிழர்' இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு இயங்கிய காலத்தில் அவரால் இயற்றப்பட்ட கவிதைகளுக்கு தேனிசை செல்லப்பா அவர்கள் இசைவடிவம் கொடுத்து மேடைகள் தோறும் பாடி தமிழக மக்கள் மத்தியில் தமிழ் உணர்வையும் விழிப்புணர்ச்சியையும் வளர்த்து வந்ததோடு ஈழத்தமிழர்களது அபிலாஷைகளையும் இசைவடிவில் எடுத்துச் சொல்லலானார். தமிழகத்தின் கிராமங்கள், நகரங்கள் தோறும் தேனிசை செல்லப்பா அவர்களது நாவசைவில் காசி ஆனந்தன் பாடல்கள் நாத வடிவாகப் பிரவாகிக்கலாயிற்று.

"மறவர் படைதான் தமிழ்ப்படை - குல

மானம் ஒன்றுதான் அடிப்படை

வெறிகொள் தமிழர் புலிப்படை - அவர்

வெல்வார் என்பது வெளிப்படை"

இந்தப் பாடல் அறுபதுகளில் தமிழகத்தில் பிரபல்யமாகக் காரணமாக இருந்தவர் தேனிசை செல்லப்பா அவர்களாகும். அறுபதுகளில் தமிழகத்தில் பிரபலமான இப்பாடல் எழுபதுகளில் தமிழ் ஈழத்திலும் பிரபலமடையலாயிற்று. 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு விசுவாசம் தெரிவிக்க மறுத்து கவிஞர் காசி ஆனந்தன் தனது அரச பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து ஈழத்து அரசியல் மேடைகளிலும் மேடைப் பேச்சுகளுக்கான முன்னோடி ஒலிபெருக்கி அறிவித்தல்களிலும் இப்பாடல் இடம்பிடித்துக்கொண்டது.

எழுபதுகளின் நடுப்பகுதியில் தமிழ்ப் போராளிகள் 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற பெயரில் விடுதலை ஸ்தாபனத்தை உருவாக்கிய போது அந்த ஸ்தாபனத்தை அக்காலகட்டத்தில் 'புலிப்படை' என்று சுருக்கமாக அழைக்கும் வழக்கம் இருந்தது. கவிஞர் காசி ஆனந்தனின் பாடலில் வரும் "வெறிகொள் தமிழர் புலிப்படை" என்ற வரிகளைப் படித்த இலங்கையின் இரகசிய பொலிசார் சி. ஐ. டி. பஸ்தியாம்பிள்ளை போன்றவர்கள் கவிஞரை விசாரணைக்குட்படுத்திய போது கவிஞரிடம் "நீ புலிப்படைக்காகத் தானே இப்பாடலைப் பாடினாய்" என்று மிரட்டிய போது கவிஞர் காசி ஆனந்தன் கவிஞர் கண்ணதாசனின் திரைப்படப் பாடலான

"கொடி அசைந்ததும் காற்று வந்ததா

காற்று வந்ததும் கொடி அசைந்ததா!'"

என்ற பாடலைச் சுட்டிக்காட்டி "நான் பாடியமையால் புலிப்படை என்ற தீவிரவாத அமைப்பு உருவானதா? அல்லது தீவிர அமைப்பு உருவான பின்னால் நான் பாடினேனா?" என்று பதில் கேள்வி எழுப்பினார். கவிஞர் காசி ஆனந்தன் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாடலுக்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். ஆனால் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களது இப்பாடலையும் இது போன்ற வேறு தமிழ் உணர்ச்சிப் பாடல்களையும் பாடியமைக்காக தேனிசை செல்லப்பா அவர்களோ தமிழகப் பொலிசாரால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே கைதாகி விசாரிக்கப்பட்டார். ஈழத்தமிழர் உரிமைக்குக்குரல் கொடுத்தமைக்காக தமிழக அரசியல்வாதிகள் கைதுசெய்யப்படுவதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரேயே ஈழத் தமிழருக்காகக் குரல் கொடுத்தமைக்காகத் தேனிசை செல்லப்பா அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒரு விடயமாகும்.

நாம் தமிழர் இயக்க ஸ்தாபகரும் முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகருமான சி.பா. ஆதித்தனார் அவர்கள் தான் செல்லப்பாவுக்கு தேனிசை செல்லப்பா என்ற பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தார்.

தமிழ் நாட்டின் திருநெல்லி மாவட்டத்தைச் சேர்ந்த தேனிசை செல்லப்பா அவர்கள் தமிழ் நாட்டிலுள்ள வானொலி நிலையங்களிலும் தூரதர்ஷன் தொலைக்காட்சியிலும் பிலிப்பைன்சிலிருந்து ஒலிபரப்பாகும் வெரித்தாஸ் வானொலியிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

பல்துறை ஆற்றல் பெற்ற செல்லப்பா அவர்கள் பால வயதில் பிரபல திரைப்பட நடிகரும் நாடகக் கலைஞருமான நடிகவேள் எம். ஆர். எம்.ஆர். ராதா அவர்களது நாடகங்களிலும் நடித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் தளபதி மாத்தயா மற்றும் பேபி ஆகியோரைத் திரு. செல்லப்பா 1981 ஆம் ஆண்டு சென்னையில் சந்தித்து அவர்களுக்கு அறிமுகமானதோடு நெருங்கிய நண்பருமானார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கிடைத்த தொடர்பானது தேனிசை செல்லப்பா அவர்களது பாடல்களை ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தியது. 1981 ஆம் ஆண்டில் சென்னையில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி தலைவர் அஜித் மாத்தயா அவர்களின் அயராத முயற்சியால் திரு. செல்லப்பா அவர்களது தமிழீழ விடுதலை பற்றிய பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு நாடாவில் வெளியிடப்படலாயிற்று. அக்காலகட்டத்தில் இவ்வாறாக பாடல்களை ஒலிப்பதிவு செய்து கொள்வதற்கு ஆயிரம் ரூபா மட்டுமே செலவாகியது. பின்னர் தேனிசை செல்லப்பா அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் 'தமிழீழக் கீதங்கள்', 'புயல்கால ராகங்கள்', 'அந்நியர் வந்து புகல் என்ன நீதி' ஆகிய ஒலிப்பதிவு நாடாக்களுக்கு குரல் கொடுத்தார். இந்த ஒலிப்பதிவு நாடாக்களில் கவிஞர் காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, கவிஞர் இன்குலாப் ஆகியோரின் பாடல்களை அவர் இசைத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் ஆதரித்தமையால் இந்திய வானொலியும் இந்திய தொலைக்காட்சியும் இவரை முற்றாக புறக்கணிக்கலாயின. ஆனால் அவர் மனம் தளர்ந்துவிடவில்லை. தொடர்ந்து தமிழ் ஈழ விடுதலைக்காகக் குரல் கொடுத்து வருகின்றார்.

தூரதர்சன் காட்சி வானொலி ஒளிபரப்பாகாத குக்கிராமங்களில் அவரை நேரில் பார்க்க முடிகிறது. இந்திய வானொலியை செவிமடுக்காத தமிழக கிராமத்து மக்களது செவிகளில் எல்லாம் அவரது குரல் கேட்கிறது. இன்று அவர் பாடாத நகரங்களோ கிராமங்களோ தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லும்படியாக அவர் பாடல்கள் எங்கும் கேட்கின்றன. விடுதலைப் புலிகளின் கருத்துக்களை தமிழக மக்களுக்கு இசைவடிவில் எடுத்துச் சொல்லும் ஊடகமாக இன்று அவர் விளங்குகின்றார்.

உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அங்கெல்லாம் இன்று தேனிசை செல்லப்பாவின் குரல் கணீரென்று ஒலிக்கின்றது. அன்று வண. பிதா தனிநாயகம் அடிகளார் தமிழ் இலக்கியத் தூதுவராக தமிழர் வாழும் நாடுகளுக்கெல்லாம் சென்று வந்ததைப் போல் இன்று தமிழ் இசைத் தூதுவராக உலகை வலம் வந்து இவரது குரல் தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது.

இவரது குடும்பமே ஒரு இலட்சியக் குடும்பம். இன்று மேடைக் கச்சேரி என்றால் திரைப்படப் பாடல்களையும் துள்ளிசைப் பாடல்களையும் தான் காணமுடிகிறது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் இவரும் இவரது இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு மகனும் கிராமம் கிராமாகச் சென்று துவிச்சக்கர வண்டியில் தமிழ் உணர்ச்சிப்பாடல்களை மட்டுமே பாடிவருகிறார்கள். இவர்கள் செய்கின்ற பணி புனிதமான விடுதலைப் பணியாகும்.

ஈழம் வருகின்ற இவர்கள் இலங்கையில் தமிழ் மண்ணில் எட்டு மாவட்டங்களிலும் தலா இரண்டு சங்கீதக் கச்சேரிகள் வீதம் பதினாறு கச்சேரிகள் செய்யவுள்ளார்கள். தேனிசை செல்லப்பா குழுவினரோடு தற்போது தமிழகத்தில் பிரபல்யமாகிவரும் சுவர்ணலதாவும் வருகின்றார். இந்த இசைக்குழுவினருக்கு முழுத் தமிழினமும் கடமைப்பட்டுள்ளது. இவர்களது முதல் இசைக்கச்சேரி எதிர்வரும் திங்கட்கிழமை 23ஆம் திகதி யாழ்ப்பாண முற்றவெளி மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முழுத் தமிழினமும் திரண்டு வந்து இவர்களுக்கு ஆதரவு கொடுப்பதே இவர்கள் செய்து வரும் தமிழீழ விடுதலைப் பணிக்கு சிறந்த கைமாறாகும். பன்னிரண்டு ஆண்டுகளின் பின் யாழ். முற்றவெளி மைதானம் தேனிசை செல்லப்பா குழுவினரின் தேனிசை மழைக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. பன்னிரண்டாண்டில் மலரும் குறிஞ்சிமலரைப் போல் பன்னிரண்டு ஆண்டுகளின் பின் முற்றவெளியில் ஓர் இசைமலர் மணம் வீசுகின்றது.

தலைவர் பிரபாகரன் மீது அளவு மீறிய பேரன்பும் பெரும்பற்றும் கொண்டவர் தேனிசை செல்லப்பா அவர்கள். இவர் 1983இல் பாடிய பாடல்களில் தலைவர் பிரபாகரனுக்கு பிடித்த பாடல் "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்" என்ற பாடலாகும்.

நன்றி: ஈழநாதம்-1990.04.22

https://tamileelamarchive.com/article_pdf/article_ee9cbcbbaf7938994b0cbe8b92440aaa.pdf (பக். 11)



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) வெற்றிபெறுவார் என 11 பேர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1)பிரபா - 33 புள்ளிகள் 2)கந்தையா 57 - 28 புள்ளிகள் 3)தமிழ்சிறி - 28 புள்ளிகள் 4)வீரப்பையன் - 28 புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ் தேசியன் - 28 புள்ளிகள் 6)வாதவூரான் - 28 புள்ளிகள் 7) வாலி - 28 புள்ளிகள் 😎 Alvayan - 27 புள்ளிகள் 9) நிலாமதி - 27 புள்ளிகள் 10) நிழலி - 26 புள்ளிகள் 11)சுவைபிரியன் - 25 புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 25 புள்ளிகள் 13) வில்லவன் - 25 புள்ளிகள் 14)ரசோதரன் - 25 புள்ளிகள் 15)நூணாவிலான் - 24 புள்ளிகள் 16)கிருபன் - 23 புள்ளிகள் 17)goshan_che - 23 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 23 புள்ளிகள் 19)வாத்தியார் - 21 புள்ளிகள் 20)புலவர் - 21 புள்ளிகள் 21)புத்தன் - 20 புள்ளிகள் 22)சுவி - 19 புள்ளிகள் 23) அகத்தியன் - 17 புள்ளிகள் 24) குமாரசாமி - 17 புள்ளிகள்  25) வசி - 11 புள்ளிகள் 26) தமிழன்பன் - 10 புள்ளிகள் இதுவரை 1, 4, 7, 10, 11, 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 53)
    • சுமந்திரன் பாராளுமன்றம் போவதற்கான யாழ் கள உறுப்பினர்களின் ஆதரவும் எதிர்ப்பும் இறுக்கமாகப் போகின்றது! இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை😮🫨
    • மாற்றத்தை ஆதரிக்கிறோம் என்பவர்கள் தான் சுமந்திரனின் இந்த மீள் வரவையும் எதிர் பார்க்கிறார்கள். கபடமான பேர்வழிகளின் போக்கு இது தான். 
    • சுமந்திரன் . ....: இன்றைய அரசியலுக்கு தந்திரமும் சூழ்ச்சியும் நிறைந்த ஒருவர் சரியாக இருக்கலாம் . ......ஆனால் நடைமுறையில் அது பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் ........அதைத்தான் இப்பொழுது அவர் சார்ந்த கட்சி அனுபவிக்குது . ...... அதனால் அவர் அங்கு வருவதை நான் விரும்பவில்லை . ........!
    • சமூகவலைத் தளங்களில் இருந்து துரித அறிவைப் பெற்றுக்கொள்ளலாம் என்பவர்களை நினைத்தால் ஆசான் பாஷையில் நகுகவேண்டியதுதான்!   இணையக்குப்பை   பதிவில் இருந்து சில பகுதிகள்     சில அடிப்படைகளை நான் சொல்லமுடியும் அ. ஊடகம் என்பது நமக்கு அறிவூட்டுவது அல்ல, நமக்கு கேளிக்கை அளிப்பது அல்ல, நம் செயற்களமும் அது அல்ல. இந்த தெளிவை நாம் முதலில் அடையவேண்டும். அது நம்மை அடிமைப்படுத்துவது, அது நம்மை வாங்கவைக்கும் விளம்பரத்துக்கான கருவி, அதற்கப்பால் ஒன்றும் அல்ல. ஆ. நமக்கான ஒரு செயற்களத்தைக் கண்டடையவேண்டும். அது வெறும் சொற்களால், சிந்தனைகளால் ஆனதாக இருக்கலாகாது. புறவயமான செயலாக இருக்கவேண்டும். அது எதுவானாலும் சரி. சமூகப்பணி, அறிவுப்பணி, கலைப்பணி, வேளாண்மை, கைத்தொழில். அதில் மட்டுமே முழுமையாக ஈடுபடவேண்டும். இ. அந்தச் செயற்களத்திற்கு தேவையான அளவுக்கு மட்டும் ஊடகத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஊடகத்தை பயன்படுத்துவதற்கு நாமே நமக்கு ஓர் எல்லையை வகுத்துக்கொண்டு அதை கறாராக பின்பற்றவேண்டும். ஈ. நம் செயல்பாடுகள் தனித்தவையாக இருக்கலாகாது. அவை நீடிக்காது. நம்மைப்போன்றவர்களுடன் தொடர்புகொள்ளவேண்டும். ஒரு சிறு ‘துணைச்சமூகமாக‘ நாம் நம்மை திரட்டிக்கொள்ளவேண்டும். நம்முடைய சோம்பல், அகங்காரம், சில்லறைப்பூசல்களால் ஒருபோதும் அந்த சமூகத்தில் இருந்து பிரியக்கூடாது. அச்சமூகம் உடைய வழிவகுக்கலாகாது. அது இருந்தால்தான் நாம் இருப்போம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். கவனச்சிதைவு என்பது மிகையின் இன்னொரு வடிவம். ஒன்று செய்யவேண்டிய இடத்தில் நூறு செய்யவேண்டியிருந்தால் கவனம் சிதறுகிறது. ஒன்று தேவையான இடத்தில் ஆயிரம் அளிக்கப்பட்டால் கவனம் சிதறுகிறது. ஒரு டம்ளர் நீரை ஓர் அறைமுழுக்க பரப்பினால் ஒரே நிமிடத்தில் அது ஆவியாகும். நமக்கு இருக்கும் நேரம், கவனம், நினைவு மூன்றும் ஒரு டம்ளர் நீர் போல எல்லைக்குட்பட்டவை. அவற்றை மிகக்கவனமாக செலவிட்டாகவேண்டும். அதற்கான வழிமுறைகள் அ. நம் செயற்களம் வரையறுக்கப்படவேண்டும். அதற்கு வெளியே நாம் எதையும் கவனிக்கவேண்டியதில்லை. எந்த மனிதனும் உலகை முழுக்க கவனிக்க முடியாது. எல்லா துறைகளையும் கவனிக்க முடியாது. எல்லாருடனும் விவாதிக்கமுடியாது. ஆ. செயல் இல்லாத நிலையிலேயே கவனம் சிதறுகிறது. ‘ஓய்வு நேரம்‘ என ஒன்று தேவையில்லை. நம் வேலை ஒரு களம் என்றால் இன்னொன்றாக நமக்கான தனிப்பட்ட ரசனைக்கான களத்தை வைத்துக் கொள்வோம். அங்கே செயலாற்றுவோம். செயலாற்றும்போது கவனம் குவிந்தே ஆகவேண்டும். ‘சும்மா‘ இருக்கையில்தான் கவனம் சிதறுகிறது. இ. எதையாவது உருவாக்காத, எதையாவது கற்காத எல்லா கேளிக்கைகளையும் முழுமையாகத் தவிர்த்துவிடுவோம். வெற்றுக்கேளிக்கைதான் நம்மை சிதறடிக்கிறது.     https://www.jeyamohan.in/206616/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.