Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கையில் அமெரிக்க போர்க்கப்பல்!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS Michael Murphy’ என்ற போர்க்கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கடற்படை மரபுகளுக்கு அமைய கப்பலை வரவேற்க இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்படி, 155.2 மீற்றர் நீளம் கொண்ட, மொத்தம் 333 பணியாளர்களை கொண்ட ‘USS Michael Murphy’ என்ற Arleigh Burke class guided missile destroyer போர்க்கப்பலே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கப்பலின் கட்டளை அதிகாரியாக Commander Jonathan B. Greenwald செயற்படுகிறார்.

மேலும், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்த பின்னர், 'USS Michael Murphy' கப்பல் இன்று (17) நாட்டை விட்டு புறப்பட உள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=196016

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மற்றொரு அமெரிக்க போர்க்கப்பல்

image

(எம்.மனோசித்ரா)

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான மற்றுமொரு போர்க்கப்பல் திங்கட்கிழமை (18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சேவை மற்றும் வழங்கல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வருகை தந்த யு.எஸ்.எஸ். ஸ்புரூன்ஸ் கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கேற்ப வரவேற்கப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள ஏவுகணை எதிர்ப்பு வகைக் கப்பலான யு.எஸ்.எஸ். ஸ்புரூன்ஸ் 160 மீற்றர் நீளமுடையதாகும். 334 பணியாளர்களைக் கொண்டுள்ள இக்கப்பலின் கப்டனாக தோமஸ் அடாம்ஸ் செயற்படுகின்றார்.

இக்கப்பல் சேவை மற்றும் வழங்கல் தேவைகளை நிறைவு செய்து கொண்டு செவ்வாய்கிழமை (19) நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.

இதேபோன்று அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யு.எஸ்.எஸ் மைக்கேல் மர்பி என்ற போர்க்கப்பலொன்று கடந்த  சனிக்கிழமை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/199113

வழங்கல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமா?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

வழங்கல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமா?!

உங்களுக்கு நாங்க சொல்லி தெரியனுமா நீங்களே வசிட்டர் முனிவர் போல் .



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.