Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க சர்வதேச நாணயநிதியத்துடனான  உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் அதனுடன் இணைந்து செயற்படும் ஊழலில் ஈடுபட்ட திமிங்கிலங்களை பிடிக்கவேண்டும் என தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கை நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து  இந்திய சீன உறவுகளில் சமநிலையை பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

அல்ஜசீராவிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஊழலில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக உரிய ஆதாரங்கள் இல்லாதபோது அவர்களிற்கு எதிரான சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கும் ஆபத்து குறித்தும் எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கேள்வி:- இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி நெருக்கடிகளிற்கு ஜனாதிபதி தீர்வை காண்பார் என மக்கள் எதிர்பார்ப்பது நாடாளுமன்ற தேர்தல் மூலம் தெரியவந்துள்ளது? ஜனாதிபதியிடம் இதற்கான பதில்கள் உள்ளனவா?

பதில்- அவரிடம் இதற்கான அனைத்து பதில்களும் இருக்கும் என என்னால் உறுதியாக கூற முடியாது. ஆனால் அவர் நிச்சயமாக முயற்சி செய்வார் என நம்புகின்றேன்.

முக்கியமான விடயம்- சர்வதேச நாணயநிதியத்தின் கட்டமைப்பிற்குள் பணியாற்றுவது அதனுடன் இணைந்து பணியாற்றுவது எங்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பது.

ஜனாதிபதி பல மானியங்களை நலன்புரி சேவைகளை வழங்குவது குறித்து பேசுகின்றார். வரிகளை குறைப்பது, மாற்றங்களின் சுமைகளை சுமக்க முடியாதவர்களிற்கு  நிவாரணங்களை வழங்குவது குறித்தும் அவர் தெரிவிக்கின்றார்.

அவரால் இதனை சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்குள் செய்ய முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அவர்கள் இலங்கை வரவுள்ளனர். பேச்சுவார்த்தைகள் எவ்வாறானதாக காணமுடியும் என்பதை நாங்கள் பார்க்க முடியும்.

அவருக்கு உள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால், ஊழல் ஒழிப்பு என்பதன் அடிப்படையிலேயே  அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.  இந்த அரசாங்கத்தின் அடிப்படையே அதனை அடிப்படையாக கொண்டது.

இதன் காரணமாக ஊழலில் ஈடுபட்ட பெரிய மீன்களை ஜனாதிபதி சிறையில் தள்ளவேண்டும், இல்லாவிட்டால் இவ்வளவு பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் அவரது கட்சியை சேர்ந்தவர்களே நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என தெரிவிக்க கூடும்.

ஊழலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்வது அவ்வளவு சுலபமான விடயமல்ல.

anurakumara.jpg

கேள்வி:- ஊழலை ஒளிப்பது என்பது ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்டவேளை முன்வைத்த மிகப்பெரிய வாக்குறுதியாக காணப்பட்டது. அனுரகுமார திசநாயக்க அதனை எவ்வாறு செய்யப்போகின்றார்? தன்மீது களங்கத்தை ஏற்படுத்தாமல் அவர் இதனை எவ்வாறு செய்யப்போகின்றார்?

பதில்- அனுரகுமார திசநாயக்கவிற்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

செய்தியாளர் - இல்லை, நான் அவ்வாறு எதனையும் தெரிவிக்கவில்லை

கேள்வி - இந்த கூட்டணியில் உள்ள அரசியல்வாதிகளிற்கு எதிராக ஏதாவது ஒரு கட்டத்தில் விரல்கள் நீட்டப்படலாம்,?

பதில்- இந்த அரசாங்கம் தனியொரு கட்சியை அடிப்படையாக கொண்டது அவர்களிற்கு எதிராக எந்த ஊழல் குற்றச்சாட்டும் பாரிய ஊழல் குற்றசாட்டுகளும்இல்லை.

இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான ஆதாரங்கள் ஜனாதிபதியிடம் உள்ளதா என்பதே.

அரசியல் ரீதியாக செய்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்படும்போது, அரசாங்கத்திடம்  ஆதாரங்கள் இல்லாத போது அவர்கள் நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட பொறிமுறைகளிற்கு செல்வார்களா? இதுவே முக்கியமான கேள்வி?

அது ஜனநாயக சுதந்திரம் உரிமைகளிற்கான மிகமிக ஆபத்தானதாக காணப்படும்.

 

கேள்வி-  இது எங்களை இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்த கேள்விக்கு கொண்டுவருகின்றது. இலங்கை மறுசீரமைப்பை முன்னெடுக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் போன்ற அமைப்புகள் மாத்திரம் விரும்பவில்லை-உலக வங்கி உள்ளது. இலங்கை சீனாவிற்கு அதிக கடனை செலுத்தவேண்டியுள்ளது. சீனாவுடனான அந்த விசேட தொடர்பு காரணமாக அயல்நாடான இந்தியா மற்றும் அமெரிக்கா போன்றவை பிராந்திய மூலோபாய உறவுகள் குறித்து கவலையடைந்துள்ளன?

பதில் - ஆம், ஆனால் அவர்கள் சீனா குறித்த அச்சத்தினை மிகைப்படுத்திவிட்டனர் என நான் கருதுகின்றேன்.

சீனர்கள் நிச்சயமாக இலங்கையில் கால்பதித்திருக்கவே வந்துள்ளனர். இதுவரையில் அபிவிருத்தி திட்டங்களை பொறுத்தவரை அதுவே உண்மை.

இதுவரையில் நாங்கள் அந்த விடயத்தை இந்தியா விவகாரத்தில் சமநிலைப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளோம்.

வெளிவிவகார கொள்கை தொடர்பில் இதுவே மிகப்பெரிய சவால்

எங்களால் சீனர்களை அகற்ற முடியாது. இந்தியர்கள் எங்களுடன் எப்போதும் இருந்துள்ளனர்.

ஆகவே இருவரையும் சீற்றப்படுத்தாமல், அதிருப்தியடைய செய்யாமல் இருவருக்கும் இடையில் சமநிலை காண்பதற்கான வழிமுறைகளை நாங்கள் கண்டறியவேண்டும்.

https://www.virakesari.lk/article/199147



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.