Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"அன்பால் ஆள்வோம்” [27/11/2024]

"அன்பால் ஆள்வோம் அனைவரையும் இணைப்போம் 
பண்பால் கூடி மனிதம் வளர்ப்போம்! 
இன்பம் துன்பம் சமமாக மதித்து 
கண்ணியம் கட்டுப்பாடு காத்து வாழ்வோமே!"

"உரிமை உள்ள மனிதனாக 
பெருமை கொள்ளும் இனமாக 
வறுமை அற்ற குடியாக 
சிறுமை போக்கி நகருவோமே!"

"ஆராய்ந்து எடுக்கும் நீதிவானும்   
ஆக்கம் கொண்ட சமூகமும்     
ஈவிரக்கம் காட்டும் அரசும்     
தரமான உலகைத் தருமே!" 

"பாசம் உலாவும் கண்களாய்  
மோசம் செய்யா இதயமாய் 
எங்களை நாங்கள் ஆக்கினால்
தேசம் ஓங்கிச் சிறக்குமே!"  

"எங்களுக்காக உயிர்க்கொடுத்த தியாகிகளையும்
தன்னலமற்று தாய்நாட்டுக்காக வாழ்ந்தவர்களையும்
மனத்திலேற்றி தீபமேற்றி வணங்குவோமே
ஒருகனமாவது அவர்களைச் சிந்திப்போமே!"     

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

468403385_10227499474815287_9132955742292042167_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=0ol6dh1xvWgQ7kNvgEoFKaP&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AdSaoHATksaipvWWaIjUyRy&oh=00_AYDuYEuYQvE_xhRFJbq4MiNOHgrm_ppgB_QpO8vXADnl0Q&oe=674CB44F 468332700_10227499474775286_4646547874459574606_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=MltZvMNGfWkQ7kNvgHprKc5&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AdSaoHATksaipvWWaIjUyRy&oh=00_AYAOSdnalEN__Y87E9rLfKqJODO1tWBHpC4j98NfSF5RJQ&oe=674CAC1D  468402649_10227499475295299_1830009220010504146_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=k6rklSR-CHgQ7kNvgFa-RYo&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AdSaoHATksaipvWWaIjUyRy&oh=00_AYCpLhfktXUA-OHVfyCSl6Yju_4mOVqffnGxOCsvsQ-S2g&oe=674C984A 

 

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.