Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு வித்தியாசமான முறையில் தயாரான கிண்ணம்

NEWZEALAND-ENGLAND.jpg

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை 28 ஆம் திகதி தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கு குரோவ்-தோர்ப் டிராபி என பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் குரோவ் மற்றும் இங்கிலாந்தின் கிரஹாம் தோர்ப் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை இருநாட்டு கிரிக்கெட் சபைகளும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. சிறப்பம்சமாக இரு வீரர்களின் மட்டைகளிலிருந்து பெறப்பட்ட மரத்திலிருந்து கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரஹாம் தோர்ப் குடும்பத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட மட்டை அவர், 1997-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக தனது முதல் இரண்டு டெஸ்ட் சதங்களை அடிக்க பயன்படுத்தப்பட்டதாகும். அதே நேரத்தில் மார்ட்டின் குரோவ் குடும்பத்தினர் வழங்கிய மட்டை அவர், 1994-ல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்க பயன்படுத்தியதாகும்.

குரோவ் மற்றும் தோர்ப் இருவரும் மிகவும் வெற்றிகரமான டெஸ்ட் வாழ்க்கையை கொண்டவர்கள். நியூஸிலாந்தின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகக் கருதப்படும் குரோவ் 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 17 சதங்களுடன் 45.36 சராசரியைக் கொண்டிருந்தார். அவர், கடந்த 2016-ம் ஆண்டு மரணமடைந்தார். அதேவேளையில் 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற கிரஹாம் தோர்ப் 16 சதங்களுடன், 44.66 சராசரியை கொண்டிருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர், இயற்கை எய்திருந்தார்.

https://thinakkural.lk/article/312730

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு முத‌லாவ‌து டெஸ்ட் விளையாட்டில்..................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்தின் வில்லியம்சன் அரைச் சதம்; இங்கிலாந்தின் பஷிர் 4 விக்கெட் குவியல்

28 NOV, 2024 | 02:49 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கிறைஸ்ட்சேர்ச், ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (28) ஆரம்பமான முதலாவது க்றோ - தோர்ப் கிண்ணம் மற்றும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து முதல் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு முயற்சித்தவரும் 5 அணிகளில் நியூஸிலாந்தும் ஒன்றாகும்.

இந் நிலையில் 3 போட்டிகள் கொண்ட இங்கிலாந்துடனான தொடரை தனது சொந்த மண்ணில் முழுமையாகக் கைப்பற்றும் முனைப்புடன் நியூஸிலாந்து எதிர்கொள்கிறது.

இத் தொடரின் முதலாவது போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்தின் முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் துடுப்பாட்டத்திலும் இங்கிலாந்தின் ஷொயெப் பஷிர் பந்துவீச்சிலும் பிரகாசித்தனர்.

ஆரம்ப வீரர் டெவன் கொன்வே (2) ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை வெறும் 4 ஓட்டங்களாக இருந்தது.

இந் நிலையில் களம் புகுந்த கேன் வில்லியம்சன் திறமையாக துடுப்பெடுத்தாடியதுடன் மூன்று முக்கிய அரைச் சத இணைப்பாட்டங்களில் பங்காற்றி அணியைப் பலப்படுத்தினர்.

அணித் தலைவர் டொம் லெதமுடன் 2ஆவது விக்கெட்டில் 58 ஓட்ட்ஙகளையும் ரச்சின் ரவிந்த்ராவுடன் 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களையும் டெரில் மிச்செலுடன் 4ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களையும் வில்லியம்சன் பகிர்ந்தார்.

நிதானத்துடன் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய வில்லியம்சன் 197 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகளுடன் 93 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்துதுரதிர்ஷ்டவசமாக சதத்தை தவறவிட்டார்.

அவரை விட டொம் லெதம் 47 ஓட்டங்களையும் ரச்சின் ரவிந்த்ரா 34 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆட்டநேர முடிவில் க்ளென் பிலிப்ஸ் 41 ஓட்டங்களுடனும் டிம் சௌதீ 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஷொயெப் பஷிர் 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்றைடன் கார்ஸ் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கஸ் அட்கின்சன் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

2811_ben_stoke_and_tom_latham_with_crow_

2811_kane_williamson_vs_eng_1st_test__1_

https://www.virakesari.lk/article/199932

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்ததும்  நியூஸிலாந்தும் சம அளவில் மோதிய வண்ணம் உள்ளன

29 NOV, 2024 | 07:56 PM
image

(நெவில் அன்தனி)

கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கிறது.

நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 348 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இங்கிலாந்து 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஹெரி ப்றூக் குவித்த அபார சதமம், ஒல்லி போப் பெற்ற அரைச் சதம் என்பன இங்கிலாந்தை நல்ல நிலையில் இட்டன.

எவ்வாறாயினும் இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

நான்காவது ஓவரில் ஸக் க்ரோவ்லி ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து ஜேக்கப் பெதெல் (10), ஜோ ரூட் (0), பென் டக்கெட் (46) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (71 - 4 விக்.)

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஹெரி ப்றூக், ஒல்லி போப் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 151 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.

ஒல்லி போப் 77 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

போப் ஆட்டம் இழந்த பின்னர் ப்றூக், அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 319 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஹெரி ப்றூக் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 132 ஓட்டங்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 37 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

பந்துவீச்சில் நேதன் ஸ்மித் 86 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 348 ஓட்டங்களைப் பெற்றது.

க்ளென் பிலிப்ஸ் 58 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முதல் நாள் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் 93 ஓட்டங்களையும் டொம் லெதம் 47 ஓட்டங்களையும் ரச்சின் ரவிந்த்ரா 34 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு 42 உதிரிகள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் ப்றய்டன் கார்ஸ் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஷொயெப் பஷிர் 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/200044

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்துடனான டெஸ்டில் இக்கட்டான நிலையில் நியூஸிலாந்து

30 NOV, 2024 | 01:58 PM
image

நெவில் அன்தனி

இங்கிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து பெரும் இக்கட்டான நிலையில் இருக்கிறது.

இதன் காரணமாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து தகுதிபெறுமா என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.

போட்டியின் 3ஆம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியில் மேலும் 2 நாட்கள் மீதம் இருக்கும் நிலையில் இங்கிலாந்தை விட வெறும் 4 ஓட்டங்களால் நியூஸிலாந்து முன்னிலையில் இருக்கிறது.

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 499 ஓட்டங்களைக் குவித்தது.

இன்று காலை தங்களது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்த ஹெரி புறூக்ஸ் 15 பவண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 171 ஓட்டங்களையும் அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் 77 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 159 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பின்வரிசையில் கஸ் அட்கின்சன் 48 ஓட்டங்களையும ப்றைடன் கார்ஸ் ஆட்டம் இழக்கமால் 33 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 8ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் மெட் ஹென்றி 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நேதன் ஸ்மித் 141 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் டிம் சௌதீ 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 151 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூஸிலாந்து மிக மோசமாக துடுப்பெடுத்தாடி 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கேன் வில்லியம்சன் 61 ஓட்டங்களையும் ரச்சின் ரவிந்த்ரா 24 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் ஆட்டம் இழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றைடன் கார்ஸ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பெற்றனர்.

கடந்த 28ஆம் திகதி ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 348 ஓட்டங்களைப் பெற்றது.

3011_harry_brooks_eng_vs_nz.png

3011chris_woakes_eng_vs_nz.png3011_ben_stokes_eng_vs_nz.png

https://www.virakesari.lk/article/200078

  • கருத்துக்கள உறவுகள்

முத‌ல் டெஸ்ட் விளையாட்டை இங்லாந் இன்றே வென்று விடும்.................

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் தொட‌க்க‌ வீர‌ர் ட‌வ்ன் கொவின்வெய் இர‌ண்டு இனிங்சிலும் சுத‌ப்ப‌ல்

 

டெஸ்ட் விளையாட்டுக்கு ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் முக்கிய‌ம்................நியுசிலாந் வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்க‌ வில்லை...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்நிய மண்ணில் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து : சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் மண்டியிட்டது

01 DEC, 2024 | 04:45 PM
image
 

(நெவில் அன்தனி)

அந்நிய மண்ணில் இந்தியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த நியூஸிலாந்து, சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் 8 விக்கெட்களால் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்தின் வெற்றியில் ஹெரி குக் குவித்த சதம், ப்றைடன் கார்ஸின் 10 விக்கெட் குவியல் என்பன முக்கிய பங்காற்றின.

download.jpg

இந்தப் போட்டி முடிவை அடுத்து உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நியூஸிலாந்தின் வாய்ப்பு சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லி ஓவல் விளையாட்டரங்கில் நான்கு நாட்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்ற இப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 104 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 2 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் ஜேக்கப் பெத்தெல் 50 ஓட்டங்களுடனும் ஜோ ரூட் 23 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பென் டக்கட் 27 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

முன்னதாக போட்டியின் நான்காம் நாள் காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களிலிருந்து மிகவும் இக்கட்டான நிலையில்  தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றது.

டெரில் மிச்செல் 84 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 61 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ப்றைடன் கார்ஸ் 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 59 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதலாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து 348 ஓட்டங்களையும் இங்கிலாந்து 499 ஓட்டங்களையும் பெற்றன.

download.png

https://www.virakesari.lk/article/200164

  • கருத்துக்கள உறவுகள்

20 ஓவ‌ர் வ‌ருகைக்கு பிற‌க்கு 5 நாள் டெஸ்ட் தொட‌ர் ச‌ம‌ நிலையில் பெரிதாக‌ முடியிற‌தில்லை................இங்லாந் அணி வீர‌ர்க‌ள் டெஸ்ட் போட்டிய‌ கூட‌ ஒரு நாள் போட்டி போல் அதிர‌டியா அடிச்சு ஆடி ர‌ன்ஸ் குவிப்பின‌ம்....................

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்தின் அணி வீர‌ர்க‌ளின் விளையாட்டு ச‌ரியே இல்லை..................வ‌ருவ‌தும் அவுட் ஆகி வெளிய‌ போவ‌துமாய் இருக்கு இவ‌ர்க‌ளின் விளையாட்டு.............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை மீண்டும் மீட்டெடுத்த ப்றூக், போப்

06 DEC, 2024 | 02:53 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (06) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பெற்ற 280 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ஹெரி ப்றூக் தொடர்ச்சியாக குவித்த இரண்டாவது சதம், ஒலி போப் பெற்ற அரைச் சதம் என்பன இங்கிலாந்தை வீழ்ச்சியிலிருந்து மீட்டு நல்ல நிலையில் இட்டன.

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் போன்றே இந்த டெஸ்டிலும் இங்கிலாந்தின் முதல் நான்கு விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழ்த்தப்பட்டன.

அந்த டெஸ்ட் போட்டியில் போன்றே இந்த டெஸ்டிலும் ஹெரி ப்றூக், ஒல்லி போப் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டெடுத்தனர்.

முதலாவது போட்டியில் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 141 ஓட்டங்ளைப் பகிர்ந்ததுடன் இந்த டெஸ்ட் போட்டியில் 174 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஒருகட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட்களை இழந்து 43 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

அப்போது ஜோடி சேர்ந்த ஹெரி  ப்றூக், ஒல்லி போப் ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 217 ஓட்டங்களாக உயர்த்தினர்.

முதலாவது டெஸ்ட் போட்டியில் 171 ஓட்டங்களைக் குவித்த ஹெரி  ப்றூக் இந்தப் போட்டியில் 123 ஓட்டங்களைப் பெற்றர்.

அப் போட்டியில் 77 ஓட்டங்களைப் பெற்ற ஒல்லி போப், இப் போட்டியில் 66 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரை விட வெறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை.

பந்துவீச்சில் நேதன் ஸ்மித் 86 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வில் ஓ'றூக் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெட் ஹென்றி 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றார்.

ப்றைடன் கார்ஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

0612_ollie_pope__nz_vs_eng.png

https://www.virakesari.lk/article/200587

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் வெல்ல‌ போகுது

வாழ்த்துக்க‌ள் இங்லாந் அணிக்கு.............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த‌ ம‌ண்ணில் நியுசிலாந் ப‌டு தோல்வி.........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வில்லியம்சன் அபார சதம்; மிகவும் பலமான நிலையில் நியூஸிலாந்து

16 DEC, 2024 | 12:35 PM
image
 

(நெவில் அன்தனி)

ஹெமில்டன் சிடொன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து மிகவும் பலம்வாய்ந்த நிலையில் இருக்கிறது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று திங்கட்கிழமை (16) நினைத்தப் பார்க்க முடியாததும் மிகவும் கடினமானதுமான  658 ஓட்டங்கள் என்ற  வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 18 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இது இவ்வாறிருக்க, இன்றைய ஆட்டத்தின்போது இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற நேரிட்டது.

நியூஸிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 56ஆவது ஓவரில் 2ஆவது பந்தை வீசிய நிலையில் பென் ஸ்டோக்ஸ் தனது இடது தொடைப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக அரங்கைவிட்டு வெளியெறினார்.

இது இங்கிலாந்து அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதேவேளை, இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றியீட்டிய இங்கிலாந்து, தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியைக் குறிவைத்து நியூஸிலாந்து விளையாடி வருகிறது.

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை 3 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களிலிருந்து தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த நியூஸிலாந்து, சகல விக்கெட்களையும் இழந்து 453 ஓட்டங்களைக் குவித்தது.

முன்னாள் அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மிகத் திறமையாக, அதேவேளை, சற்று வேகமாகத் துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்து அணியைப் பலப்படுத்தினார்.

204 பந்துகளை எதிர்கொண்ட கேன் வில்லியம்சன் 20 பவுண்டறிகள் ஒரு சிக்ஸ் உட்பட 156 ஓட்டங்களைக் குவித்ததுடன் ரச்சின் ரவிந்த்ராவுடன் 4ஆவது விக்கெட்டில் 107 ஓட்டங்களையும் டெரில் மிச்செலுடன் 5ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

1612__darryl_mitchell.png

ரச்சின் ரவிந்த்ரா 44 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 60 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவர்களை விட மிச்செல் சென்ட்னர் 49 ஓட்டங்களையும் டொம் ப்ளண்டெல் ஆட்டம் இழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

1612__mitchell_santner.png

பந்துவீச்சில் ஜெக்கப் பெத்தெல் 72 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பென் ஸ்டோக்ஸ் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷொயெப் பஷிர் 179 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

கடந்த 14ஆம் திகதி ஆரம்மான இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அதன் முதல் இன்னிங்ஸில் 347 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 143 ஓட்டங்களுக்கு சுருண்டது.

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 347 (மிச்செல் சென்ட்னர் 76, டொம் லெதம் 63, கேன் வில்லியம்சன் 44, வில் யங் 42, மெத்யூ பொட்ஸ் 90 - 4 விக்., கஸ் அட்கின்சன் 66 - 3 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 143 (ஜோ ரூட் 32, பென் ஸ்டோக்ஸ் 27, மெட் ஹென்றி 48 - 4 விக்., மிச்செல் சென்ட்னர் 7 - 3 விக்., வில் ஓ'ப்றூக் 33 - 3 விக்.)

நியூஸிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 453 (கேன் வில்லியம்சன் 156, வில் யங் 60, டெரில் மிச்செல் 60, மிச்செல் சென்ட்னர் 49, டொம் ப்ளன்டெல் 44 ஆ.இ., ரச்சின் ரவிந்த்ரா 44, ஜேக்கப் பெத்தெல் 72 - 3 விக்., பென் ஸ்டோக்ஸ் 52 - 2 விக்., ஷொயெப் பஷிர் 170 - 2 விக்.)

இங்கிலாந்து - வெற்றி இலக்கு 658 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 18 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/201406

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிம் சௌதிக்கு ஆறுதல் வெற்றியுடன் பிரியாவிடை கொடுத்து நியூஸிலாந்து

17 DEC, 2024 | 12:45 PM
image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்துக்கு எதிராக ஹெமில்டன், சிடொன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 423 ஓட்டங்களால் ஆறுதல் வெற்றியீட்டிய நியூஸிலாந்து, அந்த வெற்றியுடன் தனது சிரேஷ்ட வீரர் டிம் சௌதீக்கு பிரியாவிடை கொடுத்தது.

இந்த வெற்றியானது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நியூஸிலாதின் மிகப் பெரிய வெற்றியை சமன் செய்வதாக அமைந்தது. ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச் விளையாட்டரங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் நியூஸிலாந்து 423 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 658 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, போட்டியின் நான்காம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை 2 விக்கெட் இழப்புக்கு 18 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து சகல விக்கெட்களையும் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

எனினும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட  க்ரோ - தோர்ப் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தனதாக்கிக்கொண்டது.

நியூஸிலாந்து மண்ணில் 2008க்குப் பின்னர் இங்கிலாந்து ஈட்டிய முதலாவது தொடர் வெற்றி இதுவாகும்.

ஜேக்கப் பெத்தெல் (76), ஜோ ரூட் (54) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியை தாமதம் அடையச் செய்தனர். பகல போசன இடைவேளைக்கு சற்று பின்னர் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் உபாதை காரணமாக துடுப்பெடுத்தாடவில்லை.

1712_ben_stokes_with_crow_-_thorpe_troph

பெத்தெல், ரூட் ஆகியோரைவிட கஸ் அட்கின்சன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 43 ஓட்டங்களைப் பெற்றார்.

இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் வேறு எவரும் 20 ஓட்டங்களை நெருங்கவில்லை.

தனது கடைசி இன்னிங்ஸில் டிம் சௌதீ 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 347 (மிச்செல் சென்ட்னர் 76, டொம் லெதம் 63, கேன் வில்லியம்சன் 44, வில் யங் 42, மெத்யூ பொட்ஸ் 90 - 4 விக்., கஸ் அட்கின்சன் 66 - 3 விக்.)

இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 143 (ஜோ ரூட் 32, பென் ஸ்டோக்ஸ் 27, மெட் ஹென்றி 48 - 4 விக்., மிச்செல் சென்ட்னர் 7 - 3 விக்., வில் ஓ'ப்றூக் 33 - 3 விக்.)

நியூஸிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 453 (கேன் வில்லியம்சன் 156, வில் யங் 60, டெரில் மிச்செல் 60, மிச்செல் சென்ட்னர் 49, டொம் ப்ளன்டெல் 44 ஆ.இ., ரச்சின் ரவிந்த்ரா 44, ஜேக்கப் பெத்தெல் 72 - 3 விக்., பென் ஸ்டோக்ஸ் 52 - 2 விக்., ஷொயெப் பஷிர் 170 - 2 விக்.)

இங்கிலாந்து 2ஆவது இன்: - வெற்றி இலக்கு 658 ஓட்டங்கள் - சகலரும் ஆட்டம் இழந்து 234 (ஜேக்கப் பெத்தெல் 76, ஜோ ரூட் 54, கஸ் அட்கின்சன் 43, மிச்செல் சென்ட்னர் 85 - 4 விக்., டிம் சௌதீ 34 - 2 விக்., மெட் ஹென்றி 62 - 2 விக்.)

ஆட்டநாயகன்: மிச்செல் சென்டனர்.

தொடர்நாயகன்: ஹெரி ப்றூக்.

1712_england_win_series...png

https://www.virakesari.lk/article/201496

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.