Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
29 Nov, 2024 | 03:37 PM
image
 

எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, மாறாக இடதுசாரி,ஜனநாயக முற்போக்கு சக்திகளை உள்ளடக்கிய அரசாங்கம் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் நட்புறவை பேணாவிட்டால் எங்களால் முன்னோக்கி நகரமுடியாது சீனாவின் உதவியும் எங்களிற்கு தேவை என குறிப்பிட்டுள்ள அவர் சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையிலிருந்;து விலகும் எண்ணம் எதுவுமில்லைஎனவும் தெரிவித்துள்ளார்

டெய்லிமிரருக்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

கேள்வி- 

பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உங்கள் கட்சிக்கு கிடைத்த ஆணையின் முக்கியத்துவம் குறித்து நீங்கள் குறிப்பிட்டீர்கள் ? அவ்வளவு பெரும் ஆணை கிடைத்ததால் நீங்கள் பதற்றமடைந்தீர்கள்?

பதில்

- நாங்கள் ஆணை காரணமாக பதற்றமடையவில்லை. எங்கள் அரசியல் சக்தி என்பது ஏனையவர்களிடமிருந்து வேறுபட்டது. எங்கள் தனிப்பட்ட நலன்களிற்காக நாங்கள் மக்கள் ஆணையை கோரவில்லை.நாங்கள் அதிகாரத்துடன் பிடிவாதம் மிக்கவர்களாக இருக்கவிரும்பவில்லை.

இந்த நாட்டை உயிர்ப்பிக்க மாத்திரம் நாங்கள் விரும்புகின்றோம்.

பெரும்பான்மையான மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்கும்போதெல்லாம் அதனை நாங்கள் உரிய தீவிரத்துடன் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அப்போதுதான் அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு நம்மை நிலைநிறுத்த முடியும்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கான இந்த ஆணையின் உண்மையான தீவிரமான செய்தியை நாம்புரிந்துகொள்ளவேண்டும்.

 

rohana.jpg

2

உங்களின் ஸ்தாபகதலைவர் ரோஹன விஜயவீர உட்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவுகூரப்படும் டிசம்பர் மாதத்தில் இந்த ஆணை உங்களிற்கு கிடைத்துள்ளது இந்த ஆணை பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்-   அது தற்செயலானது. எங்கள் தோழர்கள் உயிரிழந்த 35 வருட நினைத்தினத்தின் பின்னர் இந்த தேர்தல்  வெற்றி கிடைத்துள்ளமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

எங்கள் வெற்றி அதற்கே உரிய நேரத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எங்கள் கட்சி நசுக்கப்பட்டு 35 வருடங்களின் பின்னர் கிடைத்த இந்த வெற்றி குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

 

கேள்வி - இந்த காலப்பகுதியில் கட்சியுடன் மிக நெருக்கமாக இருந்திக்கின்றீர்கள்?

பதில்- ஆம் நான் 1978 இல் ஜேவிபியில் இணைந்தேன்.

கேள்வி - இந்த சூழமைவில் கட்சி ஸ்தாபிக்கப்பட்டவேளை காணப்பட்ட கொள்கைககளை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதா?

பதில்- மக்களிற்கு நியாயமான சமூகத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம்.

அதற்காக அரசியலில் ஈடுபட்டோம்,கடந்த காலங்களில் எங்கள் கட்சியை நசுக்க முற்பட்டதை தொடர்ந்து எங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்ல பல வழிமுறைகளை நாங்கள் கையாண்டோம்.

சமூகம் பரிணாமவளர்ச்சியடைந்தது, நாங்களும் அதற்கேற்ப வளர்ச்சியடைந்தோம்.ஆயினும் நாங்கள் எங்கள் ஸ்தாபககொள்கையிலிருந்து ,நோக்கங்களில் இருந்து விலகவில்லை. எங்கள் உத்திகளை மாற்றிக்கொண்டு நாங்கள் எங்களை மறுசீரமைத்துக்கொண்டோம்.

 

கேள்வி - அதனை பற்றி மேலும் குறிப்பிடமுடியுமா?

பதில்-

ஒரு சகாப்தத்தில் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான வழியாக ஆயுதப்போராட்டங்கள் கருதப்பட்டன,சூழ்நிலை ஏற்படும்போது நாங்கள் அதனை நாடினோம்.

பின்னர் உலகில் இது புறக்கணிக்கப்பட்ட ஒரு முறையாக மாறியது.அதன் பின்னர் நாங்கள் ஒரு பொது இயக்கத்தை கட்டமைக்க திரும்பினோம்.

உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டது,தொழில்நுட்பம் வளர்ந்தது வாழ்க்கை முறைமாறியது.

1965 இல் நாங்கள் கட்சியை உருவாக்கியவேளை காணப்பட்ட மக்களின் தேவைகள் மாறிவிட்டன.

அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு முதலில் மக்களின் ஆதரவை பெறவேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள் ஆரம்பத்திலிருந்து செயற்பட்டு வந்தோம்.

ஆரம்பம் முதல் நாங்கள் மக்கள் இயக்கமாக செயற்பட முயன்றோம்.அதனை வெவ்வேறு சொற்பதங்களின் கீழ் முயன்றோம்.இது ஆரம்பத்தில் வெற்றிபெறவில்லை எனினும் 2018 இல் இது வெற்றிபெற்றது.

இது ஒரு பொதுஇயக்கம் - கூட்டணி இல்லை.பொது தேவைகளின் அடிப்படையில் கோசங்களை தெரிவு செய்தோம்.

 

கேள்வி - உங்கள் கட்சி ஆரம்பம் முதல்  சர்வதேச நாணயநிதியத்தை எதிர்த்தது-தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் உங்கள் கட்சி சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையை தொடர தீர்மானித்துள்ளது - இது முரணாண விடயமாக இல்லையா?

 

பதில்-

நாங்கள் சவால்களை தவிர வேறு எதனையும் காணவில்லை.

நாங்கள் ஆட்சி செய்வதற்கு சிறந்த நிலையிலிருந்த நாட்டை சுவீகரிக்கவி;ல்லை.வங்குரோத்து நிலையில் காணப்பட்ட பல வருட கடன்களை செலுத்த முடியாத நிலையிலிருந்த நாட்டை நாங்கள் சுவீகரித்தோம்.

சாதகமற்ற உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடு இது.

தற்போதைய படுகுழியிலிருந்து வெளிவருவதற்காக சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடமால்இருந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும்.

இந்த உடன்படிக்கை ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது.இது சர்வதேச நாணயநிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கை.எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் இதனை மதிக்கவேண்டும்.

நாங்கள் ஒருதலைப்பட்சமாக விலக முடியாது,அவ்வாறு செய்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.

நாங்கள் மக்கள் அளித்த ஆணைபடி எங்கு நெகிழ்வு தன்மையை கடைப்பிடிக்கலாம் என்பது குறித்து ஆராயவேண்டும்.

 

tilvin11.jpg

கேள்வி - சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையிலிருந்து வெளியேறும் திட்டம் ஏதாவது உள்ளதா?

பதில்- இது குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை,இதனை தற்போது செய்ய முடியாது.சில மாற்றங்களுடன் நாங்கள் இந்த உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.நாட்டில் தற்போது ஒரளவு பொருளாதார ஸ்திரதன்மை காணப்படுகின்றது.அதனை மேலும் கட்டியெழுப்ப வேண்டும்.

கேள்வி - வெளிவிவகார கொள்கை குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளன? சில நாடுகள் உங்களுடைய ஆட்சி இடது சாரி கொள்ளைகளை பின்பற்றும் என கருதுகின்றன-நீங்கள் சீனாவின் பக்கம் சாய்வீர்கள்,இந்தியாவுடனான உறவுகளை விட்டுக்கொடுப்பீர்கள் என சிலர் கருதுகின்றனர்.

உங்கள் உண்மையான வெளிவிவகார கொள்கை என்ன

 

பதில்-

முன்னர் இவ்வாறான கரிசனைகைள வெளியிட்டவர்கள் எங்கள் கட்சி புவிசார் அரசியல் கொள்கைகளை உலக அரசியலை விளங்கிக்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.

தற்போது இந்த விடயம் குறித்து அவர்கள் வேறு தொனியில் பேசுகின்றனர்.

இது அவர்களிற்கு விதியின் திருப்பம்.

நாங்கள் அரசியலை படித்துக்கற்றுக்கொள்ளும் கட்சி.உலக அரசியலையும் அதன் முரண்பாடுகளையும் புரிந்துகொண்டுள்ளோம்.நாடுகளுடனான வணிக ஒப்பந்தங்களை நம்பியிருக்கும் கட்சி இல்லை.

இந்த பிராந்தியத்தில் இந்தியா எங்களின் நட்பு நாடு இந்தியாவுடனான நட்பு இன்;றி நாங்கள் முன்னேறுவது சாத்தியமில்லை, கடினம்.

எங்கள் பிராந்தியத்தில் சீனாவே அதிக அபிவிருத்தியடைந்த நாடு.எங்களிற்கு சீனாவின் உதவி அவசியம்.

இந்தியா சீனா போட்டியால் பிரச்சினைகள் உருவாகலாம் நாங்கள் அதில் ஒரு தரப்பு இல்லை.

எங்களுடையது வெளிப்படையான சுதந்திரமான வெளிவிவகார கொள்கை.நாங்கள் எவர் பக்கமும் சார்ந்தவர்கள் இல்லை எவருக்கும் சேவை செய்பவர்கள் இல்லை.

இதன் காரணமாக நாங்கள் இந்தியா சீனாவுடன் சமநிலையான உறவுகளை கொண்டுள்ளோம்.

எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, மாறாக இடதுசாரி,ஜனநாயக முற்போக்கு சக்திகளை உள்ளடக்கிய அரசாங்கம் 

'எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை, இடதுசாரி, ஜனநாயக முற்போக்கு சக்திகளை உள்ளடக்கிய அரசாங்கம் - இந்தியாவின் நட்பின்றி முன்னோக்கி செல்ல முடியாது" - டில்வின் சில்வா | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, பிழம்பு said:
image
 

எங்களுடையது இடது சாரி அரசாங்கமில்லை

                                                                             -  ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா 

அரசினது பிரதிப்பேச்சாளரது குத்துக்கறணத்தை எமது மாக்கள் பார்க்க வேண்டும். இன்னும் வரும். ஏதோ இடதுசாரிகள், எமது துன்பங்களைப் புரிந்துகொண்டவர்கள்...... என்று சொன்னார்கள். ஆனால், நடப்பது நம்பமுடியாததாக இருக்கப்போகிறது என்பதை இவரது கூற்று உறுதிசெய்கிறது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்க இவரு கடும் இனவாதி இப்படி சொல்கிறார்..அங்காலை நாட்டுக்கே தொடர்பில்லாத சீனத்தூதுவர் செய்யும் சண்டித்தனமோ சொல்லில் அடங்காது...அப்ப இலங்கை யாருடைய நாடு



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.