Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
30 NOV, 2024 | 10:47 AM
image
 

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம்  அதிகரிக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளனர்.  

வெள்ள நீர் தணிந்ததன் பின்னர் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக ஆரோக்கியம் தொடரை்பான விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.

வயல்வெளிகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் எலிக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ள தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது அவசியம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/200057

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாணத்தில் டெங்கு தொற்று தீவிரம்

04 DEC, 2024 | 04:57 PM
image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் டெங்கு தொற்று தீவிரமடைந்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-      

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக டெங்கு தொற்று தீவிரமாகி வருகின்றது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 5 ஆயிரத்து 453 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

செப்டெம்பர் மாதம் 42 பேரும், ஒக்டோபர் மாதம் 69 பேரும், நவம்பர் மாதம் 134 பேரும் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

இதன் அடிப்படையில் நாளுக்கு நாள் டெங்கு தொற்று மிகவும் ஆபத்தானதாக மாறி வருகின்றமை தெளிவாகிறது.

யாழ்ப்பாணம், கோப்பாய், கரவெட்டி, பருத்தித்துறை, சண்டிலிப்பாய், சங்கானை, சாவகச்சேரி ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் டெங்குத் தொற்று பரவி வருகிறது.

குறிப்பாக, யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட கொழும்புத் துறையிலும் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட உரும்பிராயிலும் டெங்குத் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/200408



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.