Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
பேஸ்புக் மூலம் தந்தையை கண்டுபிடித்த பத்திரிகையாளர்

பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE

  • எழுதியவர், ஃபே நர்ஸ்
  • பதவி, பிபிசி செய்திகள்

தான் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று தெரிந்து கொண்ட நாள் முதல் தனது பெற்றோரிடம் பேச வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருந்த தமுனா‌ மூசெரிட்சே, ஒரு நாள் தொலைபேசியை எடுத்து தனது தாய் என்று நம்பிய பெண்ணை அழைத்தார். அப்போது அவர் பெருமூச்சுவிட்டார்.

தன்னை‌ப் பெற்ற தாயாக‌ இருக்கலாம்‌ என்று நினைத்த பெண்ணை கடைசியில்‌ கண்டறிந்த அவருக்கு எல்லாம் நல்லவிதமாக முடியாது என்பது‌ தெரிந்தே இருந்தது.

ஆனால், தொலைபேசியின் மறுமுனையில் இருந்த பெண் இவ்வளவு கடுகடுப்போடு, ஆத்திரத்துடன் பேசுவார் என அவர் எதிர்பார்க்கவில்லை.

"தான் ஒரு குழந்தையை பெறவே இல்லை என்றார், கதறினார், கூச்சலிட்டார். என்னுடன் பேச எதுவும் இல்லை" என்று அவர்‌ பேசியதை நினைவுகூர்ந்தார் தமுனா. அந்த பெண்ணின் பதிலால் வருத்தமடைந்ததை விட, தான் வியப்படைந்ததாக என கூறினார் தமுனா.

 

"நான் எதற்கும் தயாராகவே இருந்தேன். ஆனால் அவருடைய எதிர்வினை என்னால் கற்பனை செய்ய முடியாததாக இருந்தது" என்கிறார் 40 வயதான தமுனா.

ஆகஸ்ட் மாதத்தில் தனது தாயை தொலைபேசியில் அழைத்தபோது, அவரது தாய் தன்னை விரும்பவில்லை என்பது தமுனாவுக்குத் தெரிந்து விட்டது.

ஆனால் தமுனா தனது முயற்சியைக் கைவிடவில்லை. தன்னைத் தத்துக்கொடுத்த சூழ்நிலையைப் புரிந்து கொள்ள விரும்பினார்.

மேலும் முக்கியமாக, தனது தாய்க்கு மட்டுமே தெரிந்த தன் தந்தையின் பெயரை அறிய விரும்பினார்.

பெற்றோரை அறிந்துகொள்ளும் தமுனாவின் தேடல் 2016-ல் தொடங்கியது. தன்னை வளர்த்த தாய் மறைந்த பிறகு, அவரது வீட்டை ஒரு முறை சுத்தப்படுத்திய போது, தனது பெயரில் இருந்த பிறப்புச் சான்றிதழைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

அதில் தனது பிறந்த தேதி தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்ட பிறகு, தான் தத்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்‌ தமுனாவிற்கு ஏற்பட்டது.

சில தேடல்களை மேற்கொண்ட பிறகு, தன்னை பெற்றெடுத்தவர்களைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையோடு, “வெட்ஸெப் (Vedzeb)” (“நான் தேடிக்கொண்டிருக்கிறேன்”) என்ற பேஸ்புக் குழுவை தொடங்கினார்.

தனது பெற்றோரை கண்டுபிடிப்பதற்கு பதிலாக, அவர் ஜார்ஜியாவில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பாதித்து வந்த குழந்தை கடத்தல்களை வெளிக்கொண்டுவந்தார்.

பல ஆண்டுகளாக, பிறந்த குழந்தைகள் இறந்துவிட்டதாக பெற்றோரிடம் பொய் சொல்லப்பட்டு, அந்த கைக்குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன என்பது அதில் தெரியவந்தது.

தமுனா ஒரு பத்திரிகையாளர். அவரது செயலால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளன. ஆனால் அதுவரை, அவரால் தனது சொந்த பிறப்பின் மர்மத்தை தீர்க்க முடியவில்லை. மேலும் தானும் அவ்வாறு திருடப்பட்ட குழந்தையோ என்று அவர் வியந்தார்.

பேஸ்புக் மூலம் தந்தையை கண்டுபிடித்த பத்திரிகையாளர்

பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE

படக்குறிப்பு, தனது உறவினருடன் தமுனா.

திருப்புமுனையாக அமைந்த ஃபேஸ்புக் செய்தி

ஒரு கோடை நாளில் பேஸ்புக் குழுவின் மூலம் கிடைத்த ஒரு தகவல், தமுனாவின் தேடலில் திருப்புமுனையாக அமைந்தது.

அந்த செய்தி ஜார்ஜியாவின் கிராமப்புறத்தில் வசிக்கும் ஒருவரிடமிருந்து வந்திருந்தது. 1984 செப்டம்பரில் தபலீசியில்,‌ தான் கருவுற்றதை மறைத்து, குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு பெண்ணைப் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே பொது வெளியில், தான் பிறந்த நேரம் என தமுனா பகிர்ந்திருந்த நேரத்தை ஒட்டியே அதுவும் இருந்தது.

தகவலை அனுப்பிய அந்த நபர், தான் அறிந்த அந்த பெண்தான் தமுனாவின் தாய் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார். மிக முக்கியமாக, தமுனாவின் தாய் என நம்பப்பட்ட அந்தப் பெண்ணின் பெயரையும் கூறினார்.

 

உறுதி செய்த டிஎன்ஏ பரிசோதனை

தமுனா உடனடியாக இணையதள பக்கங்களில் அந்தப் பெண்ணைத் தேடினார். ஆனால் அவரைக் குறித்த தகவல் எதுவும் கிடைக்காததால், ‘அவரை யாருக்காவது தெரியுமா?’ என்று கேட்டு பேஸ்புக்கில் பதிவிட்டார்.

அந்தப் பதிவைப் பார்த்த ஒரு பெண் விரைவில் பதிலளித்தார்.

கருவுற்றதை மறைத்த அந்தப் பெண் தனது சொந்த அத்தை என்றும், அந்த பதிவை நீக்குமாறும் தமுனாவிடம் அவர் கூறினார். மேலும் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கும் அந்தப் பெண் ஒப்புக்கொண்டார். பரிசோதனையின் முடிவுகளுக்காக காத்திருந்த நேரத்தில்தான் தனது தாயை தொலைபேசியில் அழைத்திருந்தார் தமுனா.

ஒரு வாரம் கழித்து, டிஎன்ஏ பரிசோதனையின் முடிவுகள் வந்தன.

தமுனாவும் பேஸ்புக்கில் தொடர்புகொண்ட அந்தப் பெண்ணும் உண்மையில் உறவினர்கள் என்பதைக் கண்டறிந்தனர். இதை ஆதாரமாக வைத்து , உண்மையை ஒப்புக்கொள்ளவும், தன் தந்தையின் பெயரை கூறும்படியும், தமுனா தன்னை பெற்ற தாயை சம்மதிக்க வைத்தார்.

தந்தையுடன் இணைந்த தமுனா

பேஸ்புக் மூலம் தந்தையை கண்டுபிடித்த பத்திரிகையாளர்

பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE

படக்குறிப்பு, தனது தந்தையை சந்தித்த போது தமுனா அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்

பின்னர் ‘குர்கன் கொரவா’ என்பவரே தனது தந்தை என்பதை தமுனா கண்டறிந்தார்.

"இந்த சம்பவம் நடந்த முதல் இரண்டு மாதங்கள் அதிர்ச்சியாக இருந்தது. நான் அவர்களைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை." என்கிறார் தமுனா.

குர்கனின் பெயரைத் தெரிந்து கொண்டவுடன், தமுனா அவரை பேஸ்புக் மூலம் விரைவிலேயே கண்டுபிடித்தார்.

தமுனாவின் சமூக வலைதளப் பதிவுகளை குர்கன் பின்தொடர்ந்து வந்ததும் பின்னர் தெரியவந்தது.

குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்கும் தமுனாவின் பணி ஜார்ஜியா நாட்டில் பரவலாக அறியப்பட்டிருந்தது.

''அவர், என்னுடைய ஃபேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் மூன்று வருடங்களாக இருந்திருக்கிறார்" என்று ஆச்சரியமாக கூறுகிறார் தமுனா‌.

"என்னைப் பெற்ற தாய் கருவுற்றிருந்தது கூட அவருக்குத் தெரியாது" என்று கூறிய தமுனா, "அவருக்கு‌ இது மிகவும் வியப்பாக இருந்தது" என்றார்.

தபலீசியில் அவர் வசிக்கும் இடத்திலிருந்து சுமார் 160 மைல் தொலைவில் மேற்கு ஜார்ஜியாவில் உள்ள அவரது சொந்த ஊரான ஜுக்டிடியில், அவர்கள் விரைவில் சந்திக்க ஏற்பாடு செய்தனர் .

குர்கனுக்கு தற்போது 72 வயதாகிறது. அவரும் தமுனாவும் பார்த்த கணத்தில், இருவரும் ஆர தழுவிக்கொண்டு, பின்பு ஒருவரை ஒருவர் சிரித்தபடி பார்த்துக் கொண்டார்கள்.

"எனக்கு பல கலவையான உணர்வுகள் எழுந்தன. என்னிடம் பல கேள்விகள் இருந்தன. எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்குள் என்ன ஒற்றுமை இருக்கிறது என்று தேடிக் கொண்டிருந்தோம்” என்கிறார் தமுனா.

அவர்கள் பேசத் தொடங்கியதும். அவர்களிடம் பல பொதுவான விருப்பங்கள் இருப்பதை அறிந்து வியந்தனர்.

குர்கன் ஒரு அறியப்பட்ட நடன கலைஞராக இருந்தார். தமுனாவின் மகள்களுக்கும் – அதாவது குர்கனின் பேத்திகளுக்கும் - நடனத்தில் ஆர்வம் இருந்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்தார்.

"அவர்கள் இருவருமே நடனத்தில் ஆர்வம் கொண்டவர்கள், எனது கணவரும்தான்," என்று கூறுகிறார் தமுனா.

குர்கன் தனது முழுக் குடும்பத்தையும், தமுனாவைச் சந்திப்பதற்காக வீட்டுக்கு அழைத்திருந்தார் - சகோதர சகோதரிகள், பேரப்பிள்ளைகள் மற்றும் மாமாக்கள் அத்தைகள் என பெரிய குடும்பத்தை அவருக்கு‌ அறிமுகப்படுத்தினார்.

தமுனாவும் அவரது தந்தையும் மிகவும் ஒத்திருப்பதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். "அவரின் எல்லா பிள்ளைகளிலும் நானே தந்தையை அதிகமாக பிரதிபலிக்கிறேன்," என்கிறார் தமுனா.

அவர்கள் ஒரு மாலை முழுவதும், கதைகளை பேசியபடி, பாரம்பரிய ஜியார்ஜிய பண்டங்களை உண்டபடி கழித்தனர்.

தன் தந்தையை சந்தித்த பின்னரும், வேறு ஒரு கேள்வி தமுனாவை உறுத்திக் கொண்டிருந்தது - வேறு பல ஜியார்ஜிய குழந்தைகளைப் போல அவரும் தன்னை பெற்ற தாயிடமிருந்து திருடப்பட்டு விற்கப்பட்டாரா? என்பதே‌ அது.

அவரை தத்தெடுத்த பெற்றோர் இப்பொழுது இல்லை, அவர்களிடம் கேட்க வழி இல்லை.

 
பேஸ்புக் மூலம் தந்தையை கண்டுபிடித்த பத்திரிகையாளர்

பட மூலாதாரம்,TAMUNA MUSERIDZE

படக்குறிப்பு, புதிதாக சொந்தமான தனது சகோதரிகளுடன் தமுனா

திருடப்பட்ட குழந்தையா?

அக்டோபரில் அவரை பெற்ற தாயிடம் இந்தக் கேள்வியைக் கேட்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ஒரு போலந்து தொலைக்காட்சி நிறுவனம் தமுனா பற்றிய ஆவணப்படம் பதிவு செய்தபோது, அவரை தாயைச் சந்திக்க ஏற்பாடு செய்தனர்.

அவரது தாய், தமுனாவை தனிமையில் சந்திக்க ஒப்புக் கொண்டார்.

அப்போது தான் திருடப்பட்ட குழந்தை அல்ல என்பதை தமுனா அறிந்துகொண்டாளர். மாறாக, அவரது தாய் அவரை கைவிட்டதுடன், அந்த பிறப்பையே 40 ஆண்டுகள் ரகசியமாக வைத்திருந்தார்.

தமுனாவின் தாயும், தந்தையும் சிறு சந்திப்புக்கு பின்னர் எவ்வித நீடித்த உறவிலும் இல்லை.

கருவுற்றதலை அவமானமாக உணர்ந்த தாய், அதனை மறைக்கத் தீர்மானித்தார். 1984 செப்டம்பரில் அவர் தபலீசிக்கு மருத்துவ சிகிச்சைக்கு செல்வதாகச் சொல்லி, அங்கே‌ தன் மகளை பெற்றெடுத்தார். தமுனாவின் தத்தெடுப்பிற்கு ஏற்பாடு ஆகும் வரை அங்கேயே தங்கியிருந்தார்.

தமுனாவின் தாய், தான் ஒரு திருடப்பட்ட குழந்தை என்று வெளி உலகுக்கு பொய் சொல்லும் கேட்டுக் கொண்டுள்ளார்.

"நீ திருடப்பட்ட பிள்ளை என்று சொல்லவில்லை என்றால், நமக்கு இடையில் எந்த உறவும் கிடையாது" - என அவர் கூறியதாக தமுனா கூறினார். ஆனால் தமுனா அப்படி பொய் சொல்ல ஒப்புக் கொள்ளவில்லை.

இதனால் தமுனாவின் தாய் அவரை வீட்டை விட்டு வெளியேறும்படியும் இனிமேல் பேச வேண்டாம் என்றும் கூறிவிட்டார்.

"நான் மீண்டும் இவை எல்லாவற்றையும் செய்வேனா என்று கேட்டால், கண்டிப்பாக செய்வேன், நான் எனது புதிய குடும்பம் குறித்து நிறைய கண்டுபிடித்துள்ளேன்” என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கே புலிகளை judge  பண்ணவில்லை (நல்லது, கெட்டது , சரி, பிழை, நீதி, அநீதி, நியாயம், அநியாயம் - அது  தான் சொன்னேன் உணர்ச்சிகளை தள்ளியையுங்கள் என்று). இது ஆய்வு  (புலிகளின் தேவை, காரணம், உந்தியது போன்றவை) மட்டுமே. ஆனால், எங்காவது புலிகளுக்கு சம வாய்ப்பு அளிக்காமல் நான் சொல்லும் ஆய்வில் இருக்கிறதா? நீங்கள் சொல்வது, நீங்கள் சொன்ன விடயங்களுக்காக, ஆய்வை விடும்படி, அல்லது புலிகளுக்கு விட்டுக் கொடுங்கள் என்று.
    • வான்புலிகளின் வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள்         
    • சுயமாகச் சிந்தித்து, இந்தியாவின் பினாமிகளாகச் செயற்படாத, இலங்கையர்களாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு அவசியம்.  
    • தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
    • 22 DEC, 2024 | 09:49 PM   இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று சமூக வலைத்தளம் ஒன்றில் அவருடைய படத்தை பிரசுரித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த படத்திற்கு கீழ் அந் நபரின சமூக வலைத்தளத்தின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர்.' இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடமே பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தில் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இம்முறை வடக்கு, கிழக்கு பகுதியில் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அரசாங்கத்தின் கெடுபிடிகளற்று இடம்பெற்ற நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/201905
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.