Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வட மாகாண முதற்தர வர்த்தகக் கண்காட்சியின் அனுசரணையாளர்களாக கைகோர்க்கும் Fine Group நிறுவனம்

maheshDecember 4, 2024
8-2-1.jpg

15ஆவது தடவையாகவும் நடைபெறவிருக்கும் யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் (JITF-2025) உத்தியோகபூர்வ கருவிகள் மற்றும் இயந்திரப் பங்குதாரராக கைகோர்ப்பதில் Fine Group பெருமிதம் அடைகிறது. “வடக்கிற்கான உங்கள் நுழைவாயில்” எனும் மகுடத்தின் கீழ் 2025 ஜனவரி 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை பார்வையிட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகைதர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இக்கண்காட்சி தொடர்பில் கடந்த 5ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட Fine Group நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் யஹ்யா அய்யாஷ் கருத்துத் தெரிவிக்கையில்: “JITF-2025 கண்காட்சியின் அனுசரணையாளர்களாகக் கைகோர்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

இதன்மூலம் வடக்கின் உள்ளூர்த் தொழில் துறையை மேம்படுத்தவும், எமது புதிய தொழிநுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வடக்கின் வாடிக்கையாளர்களிடம் கொண்டுபோய் சேர்க்கவும் எதிர்பார்க்கின்றோம். மேலும் எமது விவசாய இயந்திரங்கள், மின்சார செலவில்லா விவசாயத்திற்கு துணை நிற்கும் Solar உற்பத்திகள், பலவகைப்பட்ட Welding இயந்திரங்கள், மற்றும் பிற கருவிகளையும் காட்சிப்படுத்துவன் மூலம் தொழில் முனைவர்களையும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். அத்தோடு இதற்குப் பின்னரான காலத்திலும் Fine Group நிறுவனத்தின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை வடக்கிற்குக் கொண்டுசெல்லும் ஒரு வாயிலாகவே நாம் பார்க்கின்றோம்” எனவும் குறிப்பிட்டார்.

 

https://www.thinakaran.lk/2024/12/04/business/99984/வட-மாகாண-முதற்தர-வர்த்தக/



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.