Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வவுனியா பொலிஸார் திடீரென சோதனை! பலருக்கு எதிராக வழக்கு பதிவு!!

December 8, 2024
5-2-1-696x392.jpg

வவுனியா நகரம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் பொலிஸார் திடீரென சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், டெங்கு நுளம்பு பெரும் வகையில் சூழலை வைத்திருந்த பலருக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்தனர்.

05-03-1024x576.jpg

கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

05-12-1024x577.jpg

இதனையடுதது வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள் என்பனவற்றில் வவுனியா பொலிஸார் நேற்றுத் திடீரென சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

05-06-1024x577.jpg

இதன்போது, ரயர்கள், சிரட்டைகள், வெற்றுப் போத்தல்கள் என்பன பல இடங்களில் காணப்பட்டதுடன், அவற்றில் நீர் தேங்கி நுளம்புக் குடம்பிகளும் இனங்காணப்பட்டன. அவ்வாறு இனங்காணப்பட்ட இடங்களின் வீட்டு உரிமையாளர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

05-04-1024x576.jpg

இதேவேளை, டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதால் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தமது அயல் பகுதிகளை நுளம்புகள் பெருகாத வண்ணம் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தினர்.

 

https://eelanadu.lk/பொலிஸார்-திடீரென-சோதனைப/



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.