Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
இலங்கை
படக்குறிப்பு, அரிசி, வெங்காயம், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன் பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.

இலங்கையில் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காலப் பகுதியில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு, தட்டுப்பாடு நிலவிவந்த பின்னணியில், கடந்த இரண்டு வருடங்களில் பொருட்களின் தட்டுப்பாடு படிப்படியாக குறைந்தது. விலைகளிலும் வீழ்ச்சி காணப்பட்டது.

இந்தநிலையில் தற்போது மீண்டும் விலைவாசி உயந்துள்ளது.

குறிப்பாக அரிசி, வெங்காயம், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவி வருவதை காண முடிகின்றது.

 

இலங்கையில் புதிதாக ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நாட்டில் எதிர்கொள்ளும் பிரதான சவால் மிகுந்த விடயமாக இந்த அரிசி, தேங்காய் விலையேற்றம் காணப்படுகின்றது.

இந்தநிலையில், எதிர்வரும் நத்தார் தினம், புதுவருடம் மற்றும் தைப்பொங்கல் காலப் பகுதிக்குள் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

எனினும், இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் கடந்த நவம்பர் மாதம் முதல் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆனால், இந்த பிரச்னைக்கான சரியான தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை.

இலங்கை
படக்குறிப்பு, இலங்கையில் நாட்டரிசி என்பது வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் அரிசி வகையாகும்.

தற்போது அரிசி விலைகளின் பட்டியல்

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் 200 ரூபாவிற்கு (இலங்கை ரூபாய்) விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டரிசி தற்போது 260 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்ற போதிலும், நாட்டரிசிக்கான தட்டுப்பாடு சந்தையில் இன்றும் காணப்படுகின்றது.

இலங்கையில் நாட்டரிசி என்பது வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் அரிசி வகையாகும்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் 190 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பச்சரிசி தற்போது 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன், 240 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சம்பா அரிசி, தற்போது 260 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

290 ரூபாவிற்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கீரி சம்பா அரிசி, தற்போது 280 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சாதாரண மக்கள் பயன்படுத்தும் நாட்டரிசி மற்றும் பச்சரிசி ஆகியவற்றின் விலைகளே அதிகரித்து காணப்படுகின்றது.

அத்துடன், 100 முதல் 130 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ஒன்றின் தற்போதைய விலை, 180 ரூபா முதல் 220 ரூபா வரை காணப்படுகின்றது.

கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம், நாட்டில் சில இடங்களில் 510 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

காய்கறி வகைகள் மற்றும் மீன்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

இலங்கை
படக்குறிப்பு, ஒரு தேங்காய் 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது

கடந்த காலங்களில் மழையுடனான வானிலை மற்றும் புயல் காரணமாக இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்ற நிலையில், எதிர்வரும் ஓரிரு வாரங்களில் காய்கறி மற்றும் மீன் வகைகளின் விலைகள் குறைவடையும் என நம்பிக்கை வெளியிடுகின்றனர்.

பொருட்கள் விலைகள் மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் பொதுமக்கள் இவ்வாறான கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

''நாட்டில் பொருட்களே இல்லை. அரிசி இல்லை. தேங்காய் இல்லை. தேங்காய் இருந்தாலும் 200 ரூபா வரை விற்கின்றார்கள். தெரிந்த கடைகளில் கேட்டால் மாத்திரமே அரிசி தருகின்றார்கள். இல்லையென்றால், அரிசி இல்லை. சம்பளம் கிடைத்த அடுத்த நாள் கையில் ஒன்றும் இல்லை. வாங்கிய கடனை கொடுப்பதற்கே சரியாக இருக்கின்றது. அடுத்த மாதத்தில் இன்னும் கொஞ்சம் கடனில்தான் ஓட வேண்டியிருக்கின்றது." என யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்ப தலைவியான பிரசாந்த் புகலினி தெரிவிக்கின்றார்.

''பொருட்கள் தட்டுப்பாடு இருக்கின்றது. விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன. சாதாரணமாக வாழகூடிய சூழ்நிலை இன்று மக்களுக்கு இல்லை. பொருட்கள் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. இன்று பொருட்களும் இல்லை. விலையும் அதிகமாக காணப்படுகின்றது." என வெலிமடை பகுதியைச் சேர்ந்த சத்திவேல் கோகுலன் தெரிவிக்கின்றார்.

''டிசம்பர் காலப் பகுதியில் கட்டாயம் காய்கறியின் விலை அதிகரிக்கும். காரணம், மழையுடனான காலநிலை ஏற்படுகின்றமையினால், அது சாதாரணமாக நடக்கின்ற ஒன்று. ஆனால், அரிசி விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாட்டில் எங்களுக்கு நிறையவே சந்தேகம் இருக்கின்றது.'' என கண்டியைச் சேர்ந்த குமாரவேல் கணேஷ் பிபிசி தமிழுக்கு குறிப்பிடுகின்றார்.

''சம்பளம் கூடவில்லை. அதனால், இந்த விலை அதிகரிப்பு வாழ்க்கையில் பாரியளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிசி, தேங்காய் என்பது ஆக அடிப்படையாக இருக்கக்கூடிய ஒருவரின் தேவை. சம்பா அல்லது பாசுமதி அரிசி விலை கூடியிருந்தால், பிரச்னை இல்லை. ஆனால், ஏழைகளின் அரிசியான நாட்டரிசியின் விலையே கூடியுள்ளது. அது நேரடியாகவே மக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுகின்றது." என்கிறார் அவர்

பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் பொருட்களுக்கான விலை அதிகரிப்பு குறித்து, கண்டி பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான யோகா பிபிசி தமிழுக்கு கருத்து வெளியிட்டார்.

''வியாபாரம் நல்ல போகின்றது. ஆனால், விலைதான் அதிகரித்துள்ளன. அரிசி தட்டுப்பாடு இருந்தது. இப்போது அரிசி தட்டுப்பாடு குறைந்துள்ளது" என அவர் கூறுகின்றார்.

ஒரு கிலோ நாட்டரிசியை அரிசி ஆலை உரிமையாளர்கள் தமக்கு 245 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும், அந்த அரிசியை கொண்டு வருவதற்கான செலவு மற்றும் நுகர்வோருக்கு வழங்கும் போது அதற்கான பைகளை வழங்குவதற்கான செலவுகள் என்பது உள்ளடக்கப்படும் பட்சத்தில் 260 ரூபா செலவு காணப்படுகின்றது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், அதற்கு மேல் லாபத்தை வைத்து விற்பனை செய்ய முடியாத சூழ்நிலையில், எந்தவித லாபமும் இன்றி 260 ரூபாவிற்கே அரிசியை விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

இலங்கை
படக்குறிப்பு, கண்டியைச் சேர்ந்த குமாரவேல் கணேஷ்

அரிசி பிரச்னைக்கு தலையீடு செய்த ஜனாதிபதி

அரிசி பிரச்னைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலையீடு செய்துள்ளார்.

இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோவுக்கான மொத்த விற்பனை விலையாக 225 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், சில்லறை விலையாக 230 ரூபா ஜனாதிபதியினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

எதிர்வரும் 10 நாட்களுக்கு இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதுடன், தமது தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி இந்த சந்திப்பின் போது கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை அடுத்து, சந்தையில் நேற்று வரை காணப்பட்ட அரிசிக்கான தட்டுப்பாடு இன்றைய தினத்தில் ஓரளவு குறைந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

https://www.bbc.com/tamil/articles/cwy8ddqy9exo



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.