Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

12 DEC, 2024 | 10:04 AM

image

கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகள் குறித்து தம்மால், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

அதேவேளை இந்திய உயர்ஸ்தானிகர் இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துவதாகத் தெரிவித்ததுடன், ஜனவரியில் முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொள்வதாகத் தெரிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உலக மீனவதின நிகழ்வில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த நவம்பர்மாதம் 21ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயம்தொடர்பில் பேசப்பட்டது.

அத்தோடு இந்தச் சந்திப்பில்  இந்திய இழுவைப்படகுகள் எமது கடல் பகுதிகளுக்குள் அத்துமீறி வருகைதந்து, எமது மீனவ மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடிச் செல்கின்ற விடயத்தினையும் முன்வைத்திருந்தேன்.

நாம் கரையில் இருந்து பார்க்கும்போது தெரியக்கூடிய அளவில் வெளிச்சமிட்டவாறு இந்திய இழுவைப் படகுகள் செய்கின்ற அட்டகாசமான செயற்பாடுகளைப் பற்றி அவரிடம் மிக அழுத்தமாகச் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அந்தவகையில் இந்திய மீனவர்களால் எமது மீனவர்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பில் அவரிடம் மிக விரிவாக எடுத்துக்கூறியிருந்தேன்.

இவ்வாறு அவரிடம் இந்த விடயத்தை முன்வைத்து நான் பேசும்போது ஏனைய தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாகப் பேசியிருந்தனர்.

இதன்போது உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதற்குப் பதிலளிக்கும்போது,

இந்த இழுவைப் படகுகள் அத்துமீறி நுழையும் விடயத்தில் கவனம் செலுத்துவதாகவும், எதிர்வரும் ஜனவரியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் தாம் வருகைதரவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ்வாறாக இந்த விடயங்களில் நாம் தொடர்ந்தும் அவதானம் செலுத்திக்கொண்டேயிருக்கின்றோம்.

இதுமாத்திரமின்றி பாராளுமன்றத்தில் பேசக்கிடைக்கின்ற நேரங்களிலும் இந்த விடயம் தொடர்பில் பேசுவோம்.

இந்திய இழுவைப்படகுகள் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தினைச் சூறையாடுவதற்கு எதிராக இதற்கு முன்னர் எவ்வாறு குரல்கொடுத்துவந்தோமோ  அதேபோல் தொடர்ந்தும் இந்த விடயத்தில் குரல்கொடுப்போம்.

அதேபோல் தென்னிலங்கைமீனவர்களின் தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளைத் தடுப்பதற்காகவும் தொடர்ந்தும் நாம் குரல்கொடுப்போம்.

இந்த விடயங்கள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சருடனும் பேசியிருக்கின்றேன்.

குறித்த விடயம் தொடர்பில் கவனம்செலுத்துவதாக கடற்றொழில் அமைச்சரும் உறுதியளித்திருக்கின்றார்.

அதேவேளை இந்த காற்றாலைத் திட்டம் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின்போது மன்னாருக்குச் சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராயும்போது, அங்குள்ள மக்கள் கூடுதாலாக இந்த காற்றாலைத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பில் தெரிவித்திருந்தனர். அந்தவிடயம் தொடர்பிலும் பேசியுள்ளோம். காற்றாலைத் திட்டத்தால் மன்னாரில் உள்ள பாதிப்பு நிலைமைகள் குறித்தும் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

அத்தோடு யாழ்ப்பாணத்திற்கும் இந்த காற்றாலைத் திட்டத்தைக் கொண்டுவரப்போவதாகத் தெரிவிக்கின்றனர்.

எனவே யாழ்ப்பாணம் காற்றாலை தொடர்பான விடயங்களையும், மன்னார் காற்றாலை தொடர்பானவிடயங்களையும் உரியவர்கள் விரிவாக எம்மிடம் கையளியுங்கள்.

இதேவேளை மன்னாரில் கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினையும் காணப்படுகின்றது. முல்லைத்தீவில் மக்கள் இடப்பெயர்வைச் சந்தித்திருந்த காலத்தில், கொக்கிளாயில் கனியமணல் அகழ்விற்கென மக்களின் காணிகள் சுமார் 44ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதன்பிற்பாடு கனியமணல் அகழ்விற்காக அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் எமது போராட்டங்களினால் கைவிடப்பட்டிருக்கின்றது.

மேலும் சட்டவிரோத கடற்றொழில்கள் என அரசால் அறிவிக்கப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகள் அனைத்தையும் முற்றாகத் தடைசெய்து, எமது மீனவர்களின் முறையான கடற்றொழில் செயற்பாடுகளுக்கு உதவவேண்டும். இந்திய இழுவைப்படகுகளால் எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும். இந்த விடயங்களுக்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடும்போம் - என்றார்.

https://www.virakesari.lk/article/201051



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாநிதி பிரபாகரன் என்று LANAKSRI ல் போட்டார்கள். படித்தவர்கள் எல்லோரும் சிறந்த ஆய்வாளர்களாக இருப்பதில்லை. கள்ளு கடையில் சிறப்பான அரசியல் ஆய்வுகள்நடைபெறுவதாக கேள்விபட்டதுண்டு. ஆனால 2009 ல் இவரின் ஆய்வு கட்டுரைகள் பலரை ஏமாற்றத்துக்கு உட்படுத்தியது. இவரின் கல்வி தகைமை தெரிந்தால்நல்லதுவே.
    • சாதனை படைத்துள்ள அம்பேவெல பால் பண்ணை. அம்பேவெல பண்ணை நாளொன்றுக்கு 62,000 லிட்டர் பாலை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. அதன்படி, இது நாளொன்றுக்கு 3,000 லிட்டரில் இருந்து 60,000 லிட்டராக பாரிய அதிகரிப்பை பிரதிபலிக்கிறது. 2001ல் பொதுப்பணித்துறை கையகப்படுத்தியபோது, தினசரி உற்பத்தி 3000 லிட்டர் பால் குறைவாக இருந்தது. தற்போது இந்த பண்ணையானது இலங்கையின் தேசிய விநியோகத்திற்கு வருடாந்தம் 20 மில்லியன் லீற்றர் பாலை வழங்குகிறது. 2019 இல் 5 பில்லியன் ரூபாய் முதலீடு மற்றும் நவீனமயமாக்கல் மூலம், உற்பத்தி திறன் இரண்டு ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மேலும், மேம்பட்ட இனப்பெருக்கத் திட்டங்கள் உள்நாட்டில் அதிக மகசூல் தரும் மாடுகளை உற்பத்தி செய்வதை சாத்தியமாக்கியுள்ளன. உலகெங்கிலும் உள்ள சிறந்த வணிக மந்தைகளுடன் ஒப்பிடக்கூடிய நாட்டின் மரபணு ரீதியாக உயர்ந்த பசுக்கள், 305 நாட்களில் 12,000 லிட்டர் பால் உற்பத்தி செய்கின்றன. மேலும், கடுமையான சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகள், பசுக்கள் ஆரோக்கியமாகவும் நோயற்றதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. சர்வதேச ஊட்டச்சத்து நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், மாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட துல்லியமான உணவு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக, பண்ணை மேய்ச்சல் நிலங்களில் வளர்க்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட புற்கள் உணவளிக்கப்படுகிறது. இதன் விளைவாக, அம்பேவெல பண்ணையில் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு பசுவிடம் இருந்து 40 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. https://athavannews.com/2024/1411893
    • வடமாகாணத்தில் உயிரிழந்தோரின் பரிசோதனை அறிக்கை வெளியானது வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த 07 பேரிடம் எடுக்கப்பட்ட பல மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அதன் சமூக சுகாதார நிபுணர் டாக்டர் துஷானி பெரேரா இதனைத் தெரிவித்தார். உயிரிழந்த 7 பேரின் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல நோயாளிகளின் மாதிரிகள் எலிக்காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய ஆய்வுப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1411918
    • SJP இன் தேசியப் பட்டியலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்காமல் ஐக்கிய மக்கள் சகதியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு பெயர்களை அனுப்புவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. https://athavannews.com/2024/1411921
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.