Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது

Dr. Yarlveel.jpg

(01)விவேகம்,
(02)வேகம்,
(03)சுறுசுறுப்பு,
(04)நகைச்சுவை உணர்வு

ஆகிய நற்பண்புகள் நிரம்பவே பெற்ற எங்கள் நண்பன் யாழ்வேள் உதவி மருத்துவர் கற்கை நெறிக்காக (Assistsnt Medical Practitioner) முதன் முதலில் தமிழீழ மருத்துவக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டான்.

யாழ் இடப்பெயர்வு நடைபெற்று தமிழீழ விடுதலைப் போராட்டம் நெருக்கடிகளை அதிகம் எதிர்கொண்ட அல்லது தமிழ்மக்கள் மருத்துவ சுகாதார வசதியீனங்களால் அல்லலுற்ற நேரத்தில் தன்னையும் ஓர் விடுதலைப்புலி உறுப்பினராக இணைத்துக்கொண்டு முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பயிற்சிப் பாசறையில் அரசியல், ஆயுதப் பயிற்சி பெற்று ஓர் உன்னதமான புலிவீரனாக வெளியேறினான்!

அதன் பின்னரான காலப்பகுதியில் இவனது திறமைகளைக் கண்ட அன்றிருந்த மூத்த மருத்துவர்கள் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்வேளை தமிழீழ மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் அணியில் MBBS கற்கையைத் தொடருவதற்காக அனுப்பிவைத்தார்.

தாண்டிக்குளப் படைத்தளம் மீதான வலிந்து தாக்குதலில் அன்புத் தோழன் யாழ்வேள் மேற்புயத்தில் விழுப்புண் தாங்கி (Injured on the upper arm) ஒருகட்டத்தில் அதிக குருதியிழப்பால் சோர்வடைந்த போது மேஜர் சந்திரன்/சின்னக்குட்டி (கனகநாதன் பிரகாஷ்) தனது தோளில் தூக்கி வந்து காப்பாற்றினான்!

பின் பிறிதொரு சமரில் சந்திரனும் உயிர்காக்கும் உன்னத பணியில் வவுனியா சேமமடுபகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான்!…

 

https://vayavan.com/?p=11112&



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.