Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

16 DEC, 2024 | 06:33 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் ஆர்ஜன்டீன வேகப்பந்துவீச்சாளர் ஹேர்னன் ஃபெனெல் இணைந்துகொண்டுள்ளார்.

அத்துடன் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு தடவைகள் ஹெட் - ட்ரிக் நிகழ்த்திய வீரர்களுக்கான அரிய சாதனை ஏடுகளிலும் அவர் இணைந்துகொண்டுள்ளார்.

அடுத்த ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான உப பிராந்திய அமெரிக்காக்கள் (Americas) தகுதிகாண் சுற்றிலேயே ஆர்ஜன்டீன வீரர் இந்த அரிய சாதனையை நிலைநாட்டினார்.

புவனஸ் அயர்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற கேமன் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரின் கடைசி 4 பந்துகளில் ஹேர்னன் ஃபெனெல் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியோர் வரிசையில் ஆறாவது வீரராக ஃபெனெல் இடம்பிடித்துள்ளார்.

இதற்கு முன்னர் ராஷித் கான் (ஆப்கானிஸ்தான் எதிர் அயர்லாந்து 2019), லசித் மாலிங்க (இலங்கை எதிர் நியூஸிலாந்து 2019), கேர்ட்டிஸ் கெம்ஃபர் (அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 2021), ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்தியத் தீவுகள் எதிர் இங்கிலாந்து 2022), வசீம் யாக்கூப் (லெசோத்தோ எதிர் மாலி 2024) ஆகியோர் இந்த அரிய மைல்கல் சாதனையை நிலைநாட்டியிருந்தனர்.

ஹேர்னன் ஃபெனெல் தனது கடைசி ஓவரின் கடைசி 4 பந்துகளில் ட்ரோய் டெய்லர், அலிஸ்டெயார் இஃபில், ரொனல்ட் ஈபான்க்ஸ், அலெஸாண்ட்ரோ மொறிஸ் ஆகியோரை ஆட்டம் இழக்கச் செய்து சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்துகொண்டார். அவர் அப் போட்டியில் 14 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இதேவேளை இரண்டு தடவைகள் ஹெட் - ட்ரிக்குகளைப் பதிவு செய்த வீரர்கள் வரிசையில் வசீம் அபாஸ் (மோல்டா), பெட் கமின்ஸ் (அவுஸ்திரேலியா), மார்க் பாவ்லோவிக் (செர்பியா), டிம் சௌதீ (நியூஸிலாந்து), லசித் மாலிங்க (இலங்கை) ஆகியோருக்கு அடுத்ததாக ஃபெனெல் இணைந்துகொண்டுள்ளார்.

கேமன் தீவுகளுக்கு எதிராக ஃபெனெல் சாதனை நிலைநாட்டிய போதிலும் அவரது அணிக்கு தோல்வியே மிஞ்சியது.

அப் போட்டியில் கேமன் தீவுகள் 116 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஆர்ஜன்டீனாவால் 94 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

https://www.virakesari.lk/article/201451



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @goshan_che… இண்டைக்கு “ஓவர் ரைம்” வேலை செய்ய வேண்டி வரப் போகுது. 😂
    • அந்த மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை ..அதை தீர்மாணிப்பது அமெரிக்கா ,ரஸ்யா....மத்திய கிழக்கில் இவ்வளவு காலமும் சியா தீவிரவாத அமைப்புக்களும் ஈரான் ,சிரியா போன்ற சியா அரசுகளும் ஆதிக்கம் செலுத்தினர் ...அவர்களின் ஆதிக்கம் குறைந்து விட்டது...இனி சன்னி இஸ்லாமிய தீவிரவாதம் ஆதிக்கம்  செய்ய போகின்றது இதில துருக்கியா? சவுதியா தலமை எண்ட சிக்கல் வரும் மீண்டும் அங்கு தீவிரவாதம் தொடங்கும்...தியட்டர் ஒவ் ஒப்பெரெசன் எந்த நாடு என தெரியவில்லை....சில சமயம் ஈரான் ஆட்சியும் கலைக்கப்படலாம்...
    • நேற்று சண்டே சாயந்திரம் சாப்பிடலாம் என்று ஒரு ரெஸ்டாரண்ட் போனேன் !!!!!! பார்த்தா ஒரே கூட்டம் !!!!!!! எல்லா டேபிளும் ஆள் உட்கார்ந்து இருக்காங்க !!!! அதுவும் சோடி !!!! !சோடியா !!!!!!! எனக்கு பசி !!!!!!!!!!! மற்றும் கொஞ்சம் லைட்டா வயித்தெரிச்சல் ! உடனே போனை எடுத்தேன் !!!!!!!! நண்பனை அழைத்தேன் !!!!!!   " மச்சான் உன் ஆளு இங்கதான் யாருடனோ !!!!!!!!! கடலை போட்டு கொண்டு !!!!!!! மன்னிக்கவும் சாப்பிட்டு கொண்டு இருக்கு !!!!! சீக்கிரம் வா மச்சான் !!!!!! " என்று சொன்ன மாத்திரம் தான் ! ரெண்டே நிமிசத்தில் !! ஆறு டேபிள் காலி !!!!!! நான் பொறுமையா அமர்ந்து சாப்பிட்டு வந்தேன் ! வயிறும் நிறைந்தது ! வயித்தெரிச்சல் குறைந்தது !  
    • நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் ! ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார். போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய். சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன். இப்படியாக அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார். இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்.. அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது "அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன். அப்பொழுது தானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும். சரி.. உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள், என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்" என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். சொல்லி முடித்தவுடன் மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது அந்தப் பணக்காரரின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து, டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது. அவ்வளவுதான்.. அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம் எவன் இதில் ஜெயிக்கிறான்னு? நிச்சயமா எவனாலும், முடியாது என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர். அப்பொழுது திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம் அத்தனை பேரும் மூச்சுக்கூட விட மறந்து உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர். அந்த இளைஞன்.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி.. விலகி.. மிக வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி வெடவெடவென நின்றான். பணக்காரரால், தன் கண்களை நம்பமுடியவில்லை. "பிரமாதம்.. நான் தருவதாக சொன்ன விஷயங்களுக்கும் மேல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நான் தருகிறேன் எதுவாக இருந்தாலும்". அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை. வாய் தந்தியடித்தது, மிரட்சியில் கண்கள் அரண்டு போய் இருந்தது. பின், ஒருவித வெறியுடன் "அதெல்லாம் இருக்கட்டும்.. என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்.." என்றான். சரி இப்ப நல்ல கருத்துக்களை பார்ப்போம்! 1 :முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை.. உன் திறமை என்னவென்று,உனக்கே தெரியாது.. (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான் என்பதும் புரியவரும்.) 2 :உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள் உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே.. (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே..) 3 :சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும். 4 :சிலருக்கு.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது. (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும், பெற்றோரை நம்புங்கள்..)  
    • கலாநிதி இல்லாமல் சபாநாயகர் ஆக முடியாதா? இதற்கு கட்டாயம் கல்வித் தகமைகள் தேவையா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.