Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

18 DEC, 2024 | 05:19 PM

image

(நமது நிருபர் )

இந்தியாவுக்கான விஜயத்தினை அடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளதாக 'தி ஹிந்து' செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கம் 'இருதரப்ப-கூட்டுவெற்றி' என்ற கோட்பாட்டுடன் அனைத்து நாடுகளுடன் உறவுகளை பேணவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

டில்லியில் உள்ள இந்தியன் பவுண்டேசனில் ஒழுங்கப்பட்ட நிகழ்வென்றில் பங்கேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு நாங்கள் ஒரு புதிய அரசாங்கமாக, சீனாவுடனும், இந்தியாவுடனும், அமெரிக்கா, ரஷ்யா, கியூபா மற்றும் வட கொரியா போன்ற பிற நாடுகளுடனும் நல்ல உறவைக் கொண்டிருக்கவே விரும்புகின்றோம். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தினை மேற்கோள்காண்பித்து வெளியிடப்பட்டுள்ள அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியாவிற்கான ஜனாதிபதி அநுரகுமாரவின் முதல் விஜயத்துக்குப் பிறகு, அவரது அடுத்த பயணம் அடுத்த மாதம் சீனாவுக்காகும். திசாநாயக்க இந்திய வருகையை முதலில் முன்னுரிமைப்படுத்தியிருந்தாலும், எமது அரசாங்கம் டில்லி மற்றும் பீஜிங் ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் தொடர்ச்சியான ஆதரவினை எதிர்பார்கின்றது.

கடந்த மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான சீனத் தூதர் கீ சென்கொங், இலங்கைக்கு அருகில் உள்ள அண்டை நாடு என்பதால் திசாநாயக்கவின் இந்தியா விஜயத்தை சீனா வரவேற்றுள்ளது. திசாநாயக்கவின் பீஜிங் பயணம் 'சீனா - இலங்கை'யின் பாரம்பரிய நட்பை மேம்படுத்தும், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் என்பதோடு அது எமது மக்களுக்கு அதிக நன்மைகளை வழங்குவதாக இருக்கும் என்றுள்ளது.

சுற்றுலாத்துறை

சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருக்கும் அமைச்சர் ஹேரத், 2018 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை உச்சத்தை எட்டிய பின்னர் தொடர்ச்சியாக பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது.

2019இல் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல், 2020-2021 இல் கொரோனா தொற்றுநோய் மற்றும் 2022இல் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் திருப்பிச் செலுத்தாமை ஆகியவை காரணமாக அமைகின்றது.

இந்தியா உட்பட 39 நாடுகளின் குடிமக்களுக்கு விசாக்களை இலவசமாக்கும் வர்த்தமானி அறிவிப்பை திசாநாயக்க அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளது. மேலும் இந்த நடவடிக்கைக்கு இந்தியா பிரதிபலிப்பு செய்ய வேண்டும். இரு நாடுகளிலும் சுற்றுலாவை அதிகரிக்க வேண்டும் என்றார்.

ஆராய்ச்சிக்கப்பல்கள்

அத்துடன், இந்த நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஹேரத், வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்கள், குறிப்பாக சீனக் கப்பல்கள், உட்பட அனைத்து ஆராய்ச்சி கப்பல் பயணங்களுக்கும் இலங்கையால் விதிக்கப்பட்ட ஒரு வருட கால அவகாசம் எதிர்வரும் டிசம்பர் 31 அன்று காலாவதியான பிறகும், இலங்கை துறைமுகங்கள் வருகை தருவதற்கும் நிறுத்துவதற்கும் அனுமதிக்குமா என்பது குறித்து கேள்வி எழுப்பபட்டபோது, இந்த விவகாரத்தில் ஒரு 'தேசியக் கொள்கையை' உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதை ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

அகதிகள் விடயம்

இதேநேரம், குறித்த நிகழ்வின் பின்னர் 'தி இந்து நாளிதழ் ஊடகவியலாளரிடம் உரையாடிய அமைச்சர் ஹேரத், இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் நிலைமையை மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கம் 'பரிசீலனை செய்யும்' என்று கூறினார்.

1980களில் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பல அகதிகள், இந்தியாவில் குடியுரிமை பெறத்தகுதியற்றவர்கள், இலங்கையில் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவர்கள்.

அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்ப விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவை தளமாகக்கொண்ட ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் கூற்றுப்படி, தமிழ்நாட்டில் 104 முகாம்களில் சுமார் 57,000 இடம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர், அதேநேரத்தில் சுமார் 34,000பேர் முகாம்களுக்கு வெளியே மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/201588

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பிடியே ஒரு எட்டு இரஸ்சியாவிற்கும் போய் வந்தால் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, RishiK said:

அப்பிடியே ஒரு எட்டு இரஸ்சியாவிற்கும் போய் வந்தால் என்ன? 

அசாத்து...அங்கை கடத்திக் கொண்டுபோன காசையும் ..தங்கத்தையும் குறைந்த வட்டிவீததுக்கு கடன் கொடுக்கிறாராம்...அதிலையும் கொஞ்சத்தைக் கேட்டுப் பார்க்கலாம்😁 

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஊழல்கள் வெளிவந்தால் நல்லது. ஆனால், அர்ச்சுனா இந்த ஊழல்களைச் சொன்னதால் அல்ல இந்த வழக்கு. கேதீஸ்வரன் மீது போதை வஸ்துக் குற்றம் சுமத்தியது போல சில விடயங்கள் சொல்லியிருக்கிறார். எனவே, வழக்கு இழுபட்டாலும் சத்தியமூர்த்திக்குப் பாதிப்பிருக்குமென நினைக்கவில்லை. இதனால் தான் சொல்வது, தேவையில்லாமல் வாய் வார்த்தையை சென்சேஷன் வேண்டுமென்பதற்காக விடக் கூடாது. அப்படி விடும் போது, அதை விட சென்சேஷனான பதிலை - இப்போது சத்தியமூர்த்தி செய்திருப்பது போல -வெளிவரவைத்து, உண்மையான ஊழல் எல்லாம் அமுங்கிவிடும். மொத்தத்தில், அர்ச்சுனா சத்தியமூர்த்திக்கு உதவி செய்திருக்கிறார். இப்படிப் பலருக்கு அவர் செய்வார் என எதிர்பார்க்கலாம்😂! 
    • ஈழத்தமிழன் என்பதை விட "சிறிலங்கன் இந்து" என்ற அடையாளத்துடன் அரசியல் நடத்துவதை இந்தியா விரும்புகின்றது ...அதற்காக இந்தியா நன்றாகவே செயல் படுகின்றது.,,ஈழத்தமிழர் என்ற அடையாளத்தை நாம் இழந்து சிறிலங்கன் என்ற அடையாளத்தை பெறுவது சிங்கள்வனை விட இந்திய கொள்கை வகுப்பாளருக்கு மிகவும் மகிழ்ச்சி தரும்  செயலாக இருக்கும்... இந்து (இந்தியர்கள்) என்ற அடையாளத்துடன் சிறிலங்காவின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து விளையாடுவார்
    • இந்த வழக்கு இழுபடும்போது வழக்கு போட்டவர்தான்   காசு கட்ட வேண்டி வரும்      செய்த ஊழல்  எல்லாம் ஒவ்வொன்றாக. வெளிவரும்      ...இப்படி ஊழல்கள் செய்தவருக்கு மானம் இருக்க முடியாது     
    • 😂புலவர், நீங்கள் சிறு பையன் அல்ல! அதே புளித்துப் போன "பட்டி தொட்டி பிரபாகரன் பெயர்.." என்ற யூ ரீயூபர்களின் பல்லவியோடு வர. இந்தியா தாண்டியும் கூட  தெரிந்த புலிகளையும், பிரபாகரனையும் பக்கத்தில் இருக்கும், ஒரே மொழி பேசும் மாநிலத்தின் மக்களுக்கு 2009 இற்குப் பிறகு சீமான் பிரபலமாக்கினார் என்பதை கேனையர்கள் நம்புவர் - யாழ் கள வாசகர்கள் கேனையர்கள் அல்ல!
    • பொதுவாக முழுவதையும் நீக்குவதில்லை. சில பகுதிகளை, சொற்களை மட்டுமே நீக்குவதாக சொல்லுவார்கள். 'அவைக்குறிப்பிலிருந்து இந்தச் சொல் நீக்கப்பட்டது............' என்று தமிழ்நாட்டுச் செய்திகளில் பார்த்திருக்கின்றேன். ஆனால், அர்ச்சுனா முறையான அனுமதியே இல்லாமல் அந்த விடயத்தை பேசினார் என்று வரும் போது, முழுவதையும் நீக்கினாலும் ஆச்சரியம் இல்லை.  100 மில்லியன் ரூபாய்கள் கேட்டு சத்யன் வழக்கு தொடர்ந்திருக்கின்றார்............... இந்த நிலையில் அவைக்குறிப்பு இல்லாமல் போனாலும் நல்லது தான்..............  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.