Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

680027499.jpg

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்ட மாற்றமொன்றை மக்கள் கோருவதாகவும், பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளி இல்லாமலாக்கப்படுவதுடன், தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களான, ஆசிய ஆசிரியர் அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி ஆணைக்குழு மற்றும் அரச சார்பற்ற உயர்கல்வி பிரிவு ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை இல்லாமலாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், அதை தமது தொழிலையும் தாண்டிய ஒரு தேசியப் பொறுப்பாகக் கருதி செயற்படுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

கன்னங்கராவின் கல்விச் சீர்திருத்தங்களினால் ஏற்பட்ட கல்விப் புரட்சிக்கு அப்பால் விரிவான கல்வி மாற்றமொன்று தேவைப்படுவதாகவும், அதனை நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இதன்போது தெரிவித்தார்.

தேசிய கல்வி முகாமைத்துவ முறைமையின் அவசியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் எதிர்கால சந்ததியினரை அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய நவீன தொழிநுட்ப உலகிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
 
https://newuthayan.com/article/கல்விச்_சீர்திருத்தங்கள்_தொடர்பில்_விசேட_அறிவிப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

முதலில் வளங்களை சரியாக பகிரமுடியுமா? நகர ஆசிரியர்கள் கிராமங்களுக்குப் போகத்தயாரா? 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.