Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழ்ப்பாணத்தை உலுக்கும் எலிக் காய்ச்சல் – மயூரப்பிரியன் :

adminDecember 22, 2024
IMG-20241212-WA0026-1170x658.jpg

 

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு வார கால பகுதியாக எலிக் காய்ச்சலால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதால் , மக்கள் மத்தியில் ஒரு வித பய உணர்வு ஏற்பட்டுள்ளதுடன், சுகாதார பிரிவினர்கள் அவற்றினை தடுப்பதிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

அண்மைய சில நாட்களில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்களில் இது வரையிலான தரவுகளின் அடிப்படையில் 08 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 121 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்   உயிரிழந்தவர்களில்  ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர். ஏனைய ஏழு பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.

 நோய் தொற்றுக்கான காரணம் 

எலிக்காய்ச்சல் என கூறப்படும் லெப்டோஸ்பைரோசிஸ் என்பது ஒரு பாக்டீரியாவினால் ஏற்படும் நோயாகும், இது சூறாவளி அல்லது வெள்ளத்திற்குப் பிறகு மக்கள் அசுத்தமான நீரில் நடந்து அலையும் போது அல்லது அதை குடிக்க அல்லது குளிக்க பயன்படுத்தும் போது பரவும் நோயாகும்.

யாழ்ப்பாணத்தில் கடந்த நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து இந்நோய் பரவல் அதிகரித்துள்ளது.

லெப்டோஸ்பைரோசிஸ் பாக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளான எலிகள். நாய்கள், கால்நடைகளான ஆடுகள்,மாடுகள் , பன்றிகள் போன்றவரின் எச்சங்கள் , கழிவுகள் வெள்ள நீருடன் கலந்து , கிணறுகள் , நன்னீர் தேக்கங்கள் , குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கலந்து விடுவதனால் , அந்த நீரினை பயன்படுத்துபவர்கள் நோய் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

அந்த நீரை பருகுவதால் மாத்திரமின்றி , கால்கள் , கைகளில் காயங்கள் உள்ளவர்கள் அந்த நீரினால் கை கால்களை கழுவும் போது , அவர்களையும் நோய் தாக்க கூடும். அது மாத்திரமின்றி  கண்கள், மூக்கு போன்ற மென்சவ்வினூடாக  கூட நோய் தொற்று ஏற்பட கூடிய சாத்திய கூறுகள் உண்டு.

நோய் அறிகுறிகள் 

அதிக காய்ச்சல், நடுக்கம் மற்றும் தலைவலி ஆகியவை லெப்டோஸ்பைரோசிஸின் அறிகுறிகளாகும். சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் செயலிழப்பு, மூளைக்காய்ச்சல், சுவாசக் கோளாறு ஆகியவற்றிற்கு வழிவகுத்து உயிரிழப்புக்களை ஏற்படுத்தும்.

அதனால் இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை வழங்கும் சந்தர்ப்பத்தில் நோயினை பூரணமாக குணமாக்க முடியும். எனவே காய்ச்சல் தொடர்பில் அசமந்தமாக இருக்காது வைத்தியர்களை நாடி சிகிசிச்சை பெறுமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பாதிப்பு அதிகமான இடங்கள். 

யாழ்ப்பாணத்தில் நான்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலையே நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். பருத்தித்துறை,  கரவெட்டி, மருதங்கேணி மற்றும்  சாவகச்சேரி ஆகிய நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலையுமே அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

குறித்த நான்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் யாருக்காவது காய்ச்சல் ஏற்படின் ஒரு நாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையை நாடும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள் 

 இந்நோய் பரவக் கூடிய ஆபத்து இலக்கினரான விவசாயிகளுக்கு விவசாய திணைக்களத்தின் உதவியுடன் கிராம மட்ட விவசாய குழுக்கள் மூலம் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் கடல்நீர் ஏரிகளில் , குளங்கள் போன்ற நீர்த்தேக்கங்களில், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் துப்பரவு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.  இத் தடுப்பு மருந்தை வாரத்திற்கு ஒரு தடவை உட்கொள்ள வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை எலிக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கும் தடுப்பு மருந்துகளை வழங்குவதற்காகவும் கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட மருந்துகள் யாழ் மாவட்டத்திலுள்ள சகல சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும், இந்நோய் தீவிரமாக பரவி வரும் பிரதேசங்களிலுள்ள வைத்திசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.

கொழும்பில் இருந்து வந்த விசேட குழு. 

மத்திய சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் குழு இந் நோய் பரம்பலை ஆய்வு செய்வதற்காக யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்தது. அக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் இரண்டு நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர்

யாழ் போதனா வைத்தியசாலைக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கும் , பருத்தித்துறை, மற்றும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கும் சென்று ஆய்வு செய்ததுடன் சில பிரதேசங்களுக்கு கள விஜயமும் மேற்கொண்டிருந்தனர்.

நோயில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள

அசுத்தமான தண்ணீருடன் தொடர்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும். சுகாதார முறைகளை பேணுதல் மூலம்  நோய்த் தொற்றில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

குறிப்பாக தொற்றுக்குள்ளான தண்ணீருடன் நேரடியாக தொடர்பு ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், வெள்ள நீர், சேறு மற்றும் தேங்கி நிற்கும் நீர் என்பன விலங்குகளின் சிறுநீற்றால் தொற்றாக்கப்பட்டிருக்கலாம். அதனால் அந்நீரினை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

அதாவது, சுத்தமான கொதித்து ஆறிய நீரை பருகுதல், குளம் குட்டைகள், வெள்ளத்தால் மூழ்கிய கிணறுகள் என்பவற்றில் குளிப்பதையோ , நீந்துவதையோ தவிர்த்துக்கொள்ளல். அந்த நீரை அருந்தவோ, வாய் கொப்பளிக்கவோ கூட பயன்படுத்த வேண்டாம்.

கால்களில் செருப்பு அல்லது சப்பாத்து இல்லாமல் வெள்ள நீர் தேங்கி நிற்கும் இடங்கள் , சேற்று நிலங்களில் இறங்க வேண்டாம். விவசாயிகள் கூட வயல் நிலங்களில் இறங்கும் போது , சுகாதார முறைமைகளை பின்பற்ற வேண்டும்.

சரியான சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வெளியே சென்று வந்த பின்னரும், விலங்குகளை கையாண்ட பின்னரும் சவர்க்காரம் மற்றும் நல்ல நீர் கொண்டு கை கால்களை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். எலிக்காய்ச்சல் தொடர்பில் விழிப்புடன் இருந்தால் மாத்திரமே  எம்மையும் எம்மை சூழவுள்ளவர்களையும் பாதுகாத்து கொள்ள முடியும்.

IMG_4659-1-800x450.jpegIMG-20241212-WA0024-800x450.jpgIMG-20241212-WA0025-800x450.jpg
 


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நவீன பயணிகள் விமானங்களே.... ஒரு மணித்தியாலத்திற்கு 1200 கிலோ மீற்றர் தூரம்தான் பயணிக்கின்றன. ரயில்... 4800 கிலோ மீற்றர் பயணிக்குமா என்பது கேள்விக்குறிதான்.
    • சீ சீ அவருக்கு தன்னுடைய பிறந்தநாளுக்கு உங்களை அழைத்து விருந்து அளிக்கத்தான் விருப்பம், இல்லையா @குமாரசாமி அண்ணை?!
    • மருத்துவர்கள், தாதியர்கள், உதவியாளர்கள் பெரும் பணிச்சுமையுடன் பணிபுரிகிறார்கள், அவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் சாதாரண நோயாளியின் மனநிலை புரிந்து மருத்துவம் செய்ய வேண்டிய மருத்துவர்கள் சிலர் அவர்களோடு அன்பாக கதைப்பதில்லை. ஏதும் விளக்கம் கேட்டால் சொல்வதுமில்லை. ஒரு சிலரின் தவறுகளுக்கு எல்லோரும் குற்றஞ்சாட்டப்படும் நிலை! ஒரு சில தாதியர்களின் நடத்தை மிகமோசமானது, நோயாளிகளை அநாவசியமாக கடிந்துகொள்வது, தாங்கள் தான் எல்லாம் என்பதுபோல நடப்பது....
    • குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?   Getty Images சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் சுமார் நான்கு நாட்கள் பயணத்திற்குப் பிறகு, ஒரு குட்டையை நெருங்கியிருந்தோம். அதற்கு முந்தைய நாள்தான், பேறுகாலத்தில் இருந்த யானையை நடுவில் விட்டு, முன்னும் பின்னுமாகப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற யானை மந்தையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்றைய தினம், மதிய வெயில் சுளீரெனச் சுட்ட வேளையில் நிழலுக்காக அருகிலிருந்த ஒரு குட்டையை நெருங்கினோம். ஆனால், ஓசையின்றிப் பொறுமையாக வருமாறு உடனிருந்த வனக்காவலர் சைகை காட்டினார். அங்குள்ளது யார் என்பது எனக்கு முன்பாக அவருக்குப் புரிந்துவிட்டது. சுற்றியும் மூங்கில் மரங்கள் புதராய் வளர்ந்திருக்க, நடுவில் கிட்டத்தட்ட வட்டவடிவில் குட்டை. அங்கிருந்து சில அடிகள் வெளியே வந்தால் வெப்பம், உள்ளே சென்றால் மூங்கில் மற்றும் குட்டைநீரின் குளிர்ச்சி. இதமான அந்தக் குட்டையின் ஓர் ஓரத்தில் பாதி நீரிலும் பாதி நிலத்திலும் என இருந்த ஒரு பெரும் பாறையில், அதேபோல, பாதி உடல் நீரிலும், மீதி உடல் மேலேயுமாகப் படுத்திருந்தது அந்தப் பெண் புலி. சிறிதளவு ஓசைக்கே, எங்கள் வருகையுணர்ந்து கனநேரத்தில் அங்கிருந்து பாய்ந்து மறைந்தது. உடனே நாங்கள் அங்கிருந்து வேகமெடுத்தோம். பார்த்தது சில நொடிகளே என்றாலும், அதுவே காட்டில் புலியைப் பார்த்த எனது முதல் மற்றும் கடைசி அனுபவம். சமீபத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரு பெண் புலி உயிரிழந்த செய்தி அறிந்ததும், அந்தப் பழைய அனுபவம் நினைவுக்கு வந்தது. அதேவேளையில், பெண் புலிகளின் வாழ்வியல் குறித்த சில கேள்விகள் தொடர்ச்சியாக எழுவதையும் காண முடிந்தது. உண்மையில், பெண் புலிகளின் வாழ்வியல் எப்படிப்பட்டது? இனப்பெருக்க காலத்தில் அவற்றின் செயல்பாடுகள் யாவை? அவை தம் குட்டிகளைப் பராமரிப்பதில் இருக்கும் தனித்துவம் என்ன?     எல்லை வகுத்து தனிமையில் வாழும் புலிகள்   புலிகள் எல்லை வகுத்து வாழக்கூடியவை. இனப்பெருக்க காலம் தவிர பிற நேரங்களில் புலிகள் தனிமையிலேயே வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட புலியின் எல்லைப் பரப்பு, 10 சதுர கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 100 சதுர கி.மீ வரை இருக்கக்கூடும். வாழ்விடம், இரை உயிரினங்களின் எண்ணிக்கை, காட்டிலுள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை எனப் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இது மாறுபடும். புலிகள் தங்கள் எல்லைகளை சிறுநீர் கழிப்பதன் மூலம் வரையறுக்கின்றன என்கிறார் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயிர் உயிரியலாளராக இருக்கும் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி. அதோடு, அவ்வப்போது உருமுவதன் மூலம் தனது இருப்பை உணர்த்திக் கொள்ளும் பழக்கத்தையும் அவை கொண்டிருக்கின்றன     புலிகள் இனப்பெருக்கம் செய்வது எப்படி?   Getty Images மகாராஷ்டிராவில் உள்ள தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் புலிகள் பெண் புலிகளைப் பொறுத்தவரை, இனப்பெருக்கத்திற்குத் தயாராக இருக்கும் காலங்களில், சிறுநீரில் வெளிப்படும் மணம், ஆண் புலிகளுக்கு ஓர் அழைப்பாகச் செயல்படுகிறது. "அதன்மூலம், பெண் புலி இனப்பெருக்கத்திற்குத் தயாராக இருப்பதை உணரும் ஆண் புலி அதன் எல்லைக்குள் செல்லும். அங்கு இருவரும் சில நாட்களுக்கு இணைந்து வேட்டையாடுவது, இரையைச் சேர்ந்து சாப்பிடுவது, ஒன்றாக நேரத்தைச் செலவிடுவது, இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது எனத் தங்கள் பொழுதைக் கழிக்கின்றன." ஒரு காதல் ஜோடியை போல சில நாட்களுக்கு இணைந்திருக்கும் ஆண், பெண் புலிகள், இனப்பெருக்க செயல்முறை முடிந்த பிறகு பிரிந்து விடுகின்றன. "அதற்குப் பிறகு குட்டிகளை ஈணுவது, அவற்றைப் பராமரிப்பது என்று அனைத்துமே பெண் புலியின் பொறுப்புதான்," என்று விளக்குகிறார் பீட்டர்.   குட்டிகளுக்காக தாய்ப்புலி செய்யும் தியாகம்   ஒரு தாய்ப் புலி, தனது அன்றாடப் பணிகளான வேட்டை, எல்லைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றுடன் குட்டிகளைப் பராமரித்து, உணவூட்டி வளர்க்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும். இதுவரையிலான ஆய்வுகளின்படி, தனது அன்றாட வேலைகளையும் குட்டிகளுக்கான நேரத்தையும் சமநிலையில் கொண்டு செல்ல, அவை தொடர்ந்து ஓய்வின்றிச் செயல்படுகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டில், சைபீரிய தாய்ப்புலிகளின் நடத்தைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இதர அபாயங்களில் இருந்து பாதுகாக்க ஒரு தாய்ப்புலி, தனது அதிகபட்ச நேரத்தைக் குட்டிகளுடனேயே செலவிடுகின்றன. அதாவது தனது நேரத்தில் 80 சதவீதத்தை அவைதம் குட்டிகளுடன் கழிக்கின்றன. Getty Images தனது தாயுடன் கொஞ்சி விளையாடும் சைபீரிய புலிக்குட்டி   புலிக்குட்டிகளுக்கு, கழுதைப்புலி போன்ற உயிரினங்களால் ஆபத்துகள் இருக்கும். ஆகவே தேவைப்பட்டால், சில புலிகள் வாழ்விட எல்லையைக்கூட குறைத்துக் கொள்வதாகக் கூறுகிறார் புலிகள் ஆராய்ச்சியாளர் முனைவர் குமரகுரு. "தாய்ப் புலிகள், குட்டிகளை ஈன்ற பிறகு மிகவும் பலவீனமாக இருக்கும். அந்தச் சூழலில், தன் பாதுகாப்பும் குட்டிகளின் பாதுகாப்புமே முதன்மைக் குறிக்கோளாக இருக்கும். ஆகவே, அது எல்லை முழுவதையுமே கட்டுப்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, தனது பரப்பைச் சுருக்கிக் கொள்ளும்," என்கிறார் அவர். அவரது கூற்றுப்படி, ஒரு தாய்ப்புலி குட்டிகள் பிறந்த புதிதில், அளவில் பெரிதாக இருக்கும் கடமான், காட்டெருது போன்ற இரைகளை வேட்டையாடாது. மாறாக, சிறிய மற்றும் இடைப்பட்ட அளவில் உள்ள இரைகள் மீதே அதிக கவனம் செலுத்தும். "இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, தான் பலவீனமாக இருப்பதால் பெரிய இரைகளை வேட்டையாடுவது சவாலாக இருக்கும், அந்த முயற்சி தனக்கே ஆபத்தாக முடியலாம். இரண்டாவது, குட்டிகளால் கடினமான உணவுகளை உட்கொள்ள முடியாது. இரை மிருதுவாக, எளிதில் செறிக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். ஆகையால், அதற்கேற்ப வெளிமான், புள்ளிமான் குட்டிகள், காட்டு முயல் ஆகியவற்றை வேட்டையாடும்," என்று முனைவர் குமரகுரு விவரித்தார். இத்தகைய காலகட்டங்களில் ஒரு தாய்ப்புலி தனது ஓய்வு நேரம், எல்லைப் பரப்பு ஆகியவற்றோடு, போதுமான இரை கிடைக்காத நேரங்களில் தன் உணவில் ஒரு பகுதியையும் குட்டிகளுக்காகத் தயங்காமல் தியாகம் செய்வதாக சைபீரிய புலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது.     அரிதாக குட்டிகளை வளர்க்கும் ஆண் புலி   Getty Images ராந்தம்போர் புலிகள் காப்பகத்தில் காணப்படும் ஆண் புலி ஒருவேளை குட்டிகளை ஈன்ற ஒன்றிரண்டு மாதங்களிலேயே தாய் இறந்துவிட்டால், அந்தக் குட்டிகள் காட்டில் பிழைப்பது 90% சாத்தியமில்லை என்கிறார் குமரகுரு.  அதேவேளையில், சில தருணங்களில் குட்டிகளின் தந்தையான ஆண் புலி அவற்றுக்கு உணவூட்டி பரமாரிப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார் பீட்டர். ஆனால், அத்தகைய வாய்ப்புகள் 30-40% சந்தர்ப்பங்களில்தான் நடப்பதாகக் கூறுகிறார் முனைவர் குமரகுரு. "ஒருவேளை தாய் இறந்த சில நாட்களிலேயே தந்தையின் கண்ணில் அவை தென்பட்டால், அவற்றுக்குத் தனது இரையில் ஒரு பகுதியைப் பகிர்ந்துவிட்டுச் செல்லும். அப்போது அந்தக் குட்டிகள், ஆண் புலியைப் பின்தொடர்ந்து செல்லும். ஆகவே அவற்றைப் பேணத் தொடங்கும்," என்று விவரிக்கிறார் குமரகுரு. கடந்த 2021இல் மத்திய பிரதேசத்தின் பன்னா புலிகள் காப்பகத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு பெண் புலி குட்டிகளை ஈன்ற ஏழு மாதங்களில் இறந்துவிடுகிறது.  ஆனால், அந்தக் குட்டிகளின் தந்தை அவை இருக்கும் பகுதியிலேயே சுற்றி வருவதையும், குட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்காமல் இருப்பதையும் கண்காணித்த வனத்துறை, அது அவற்றுக்குப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.     புலிக்குட்டிகளை வேட்டையாடப் பழக்குவது எப்படி?   Getty Images புலிக்குட்டி 6 முதல் 9 மாதங்களை எட்டும்போது அதற்கான வேட்டைப் பயிற்சிகள் தொடங்கும். அந்தப் பயிற்சி ஆரம்பத்தில் ஒரு விளையாட்டாகவே தொடங்கும் என்று விளக்கினார் குமரகுரு. குட்டிகள் தாயின் மேற்பார்வையில், வெட்டுக்கிளி, முயல் குட்டிகள், ஓனான் போன்ற சிறிய வகை உயிரினங்களைப் பிடித்து வேட்டையாடி விளையாடும். அந்தப் பயிற்சிகளின்போது, "அம்மாவை மையப்புள்ளியாக வைத்துக்கொண்டு, குட்டிகள் அதிகபட்சமாக 200 மீட்டர் வரை சுற்றி விளையாடும். காட்டெருது, கடமான் போன்றவை சுற்றித் திரியும் பகுதிகளுக்கு நடுவில் ஓடிச் சென்று தன் மழலைக் குரலில் உருமுவது போன்ற வேடிக்கைகளும் நடக்கும்," என்று அவர் விவரித்தார். இந்தச் செயல்முறைகள் அனைத்தும் குழந்தைத்தனமான விளையாட்டாகத் தெரிந்தாலும், அவை குட்டிகளுக்கு வேட்டையின் மீதான நம்பிக்கையை வழங்குவதற்கான தாயின் முதல்கட்ட முயற்சியே என்றார் குமரகுரு. இதற்கு அடுத்தகட்டமாக ஒரு வயது முடிந்த பிறகு, "தாய்ப்புலி ஒரு மானை வேட்டையாடினால், இரையைச் சுற்றி வளைத்து அம்மாவுக்கு உதவும் பணியில் குட்டிகள் ஈடுபடும். அப்போது தன் இரையை ஒரே அடியில் வீழ்த்தாமல், கால்களை உடைத்துவிட்டு, குட்டிகளே அதை வீழ்த்தும் வரை காத்திருக்கும்." இதிலும் பழக்கப்பட்ட பிறகு இறுதியாக, சுமார் ஒன்றரை அல்லது இரண்டு வயதை எட்டும்போது, ஓர் இளம் புலி சுயமாக அதன் வேட்டையைத் தொடங்கும் என்று விளக்கினார் முனைவர் குமரகுரு. இதில் ஆண், பெண் புலிக்குட்டிகள் இடையே இருக்கும் ஒரு வேறுபாட்டை எடுத்துரைத்தார் பீட்டர். அவரது கூற்றுப்படி, ஆண் குட்டிகள் அளவில் பெரிதாக இருப்பதால், ஆதிக்கம் செலுத்தி, சண்டையிட்டு தாயின் இரையில் பெரும்பகுதியை எடுத்துக் கொள்ள்ளும். அதனால், விரைவில் வேட்டையாடிச் சாப்பிட்டாக வேண்டிய கட்டாயம் பெண் குட்டிகளுக்கு ஏற்படும். ஆகவே தேவை கருதி ஆண் குட்டிகளைவிட, பெண் குட்டிகள் முன்கூட்டியே வேட்டையாடுவதில் தேர்ந்துவிடுகின்றன.     வேட்டைக்குப் பழக குட்டிகளைப் பட்டினி போட்ட 'ராஜமாதா'   Getty Images புலிகள் குட்டிகளை வேட்டைக்குப் பழக்குவது எப்படி என்பதற்கு கடந்த 2022ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் தேசியப் பூங்காவில் வயதாகி உயிரிழந்த காலர்வாலி என்ற புலியை உதாரணமாகக் கூறலாம். தனது வாழ்நாளில் 29 குட்டிகளை ஈன்றுள்ள இந்தப் புலியை ஆய்வாளர்கள் 'ராஜமாதா' என்று அழைக்கின்றனர். ராஜமாதா, தனது குட்டிகளை வேட்டையாடப் பழக்குவதற்குப் பயன்படுத்திய அணுகுமுறை குறித்த அவதானிப்புகள் கடந்த 2013ஆம் ஆண்டு சான்ச்சுவரி ஏசியா (Sanctuary Asia) இதழில் வெளியானது. அதன்படி, ராஜமாதாவுக்கு 2008ஆம் ஆண்டு அக்டோபரில் மூன்று ஆண் உள்பட நான்கு குட்டிகள் பிறக்கின்றன. ஒருநாள் அந்தக் குட்டிகளை ராஜமாதா பிரிந்து செல்கிறாள். நாட்கள் உருண்டோடுகின்றன. அவள் குட்டிகளிடம் இருந்து சுமார் ஒன்றரை முதல் இரண்டு கி.மீ தொலைவிலேயே இருக்கிறாள். ஆனால், குட்டிகளை அழைக்க குரல் கொடுக்கவோ, அவற்றை நெருங்கவோ இல்லை. அவள் தன்போக்கில் வேட்டையாடுவதும் ரோந்து செல்வதுமாக நாட்கள் செல்கின்றன. சுமார் 10 நாட்கள் பசியில் வாடிய குட்டிகளில் ஒரு ஆண் புலி இறுதியாக புள்ளி மான் குட்டி ஒன்றை வேட்டையாடுகிறது. பல நாட்கள் பட்டினியில் கிடந்தாலும், அவை சண்டையின்றி தமக்குள் அமைதியாக உணவைப் பகிர்ந்து உண்கின்றன. ஆனால், இப்போதும் தாய்ப்புலியான ராஜமாதா அவர்களை நெருங்கவில்லை. நாட்கள் செல்கின்றன. அடுத்த சில நாட்களில் அந்தக் குட்டிகள் மேலும் இரண்டு புள்ளிமான்களை வேட்டையாடின. Getty Images மத்திய பிரதேசத்தின் பெஞ்ச் தேசியப் பூங்காவில், தனது ஒரு குட்டியுடன் சேர்ந்து சுமார் 400 கிலோ எடையுள்ள கடமானை வேட்டையாடிச் சாப்பிடும் 'ராஜமாதா' இறுதியாக 16வது நாளில், ராஜமாதா தனது குட்டிகளை அழைக்க குரல் கொடுத்துவிட்டு, பெஞ்ச் ஆற்றின் கரையோரத்தில், ஒரு பெரிய புள்ளி மான் இரையுடன் அவள் காத்திருந்தாள். குட்டிகள் வந்ததும், குடும்பத்துடன் சேர்ந்து அவள் தனது இரையை ருசித்துச் சாப்பிட்டாள். இந்த ஆய்வில் சில அம்சங்கள் கண்டறியப்பட்டன. ராஜமாதா, தனது குட்டிகளை பெஞ்ச் ஆற்றில் இருந்து 100 மீட்டர் தொலைவில்தான் விட்டுச் சென்றிருந்தாள். அவள் விட்டுச் சென்ற பகுதி இரை உயிரினங்கள் அபரிமிதமாக வாழும், அடர்த்தி நிறைந்த மரங்கள் மற்றும் தாவரங்களைக் கொண்ட காடு. அதாவது, தனது குட்டிகளை வேட்டைக்குப் பழகுவதற்காக இரைகள் நிறைந்த, தண்ணீருக்குப் பஞ்சமில்லாத, மனித நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் விட்டுச் சென்றிருந்தாள். அதோடு, இவற்றின் தந்தையான டி-2 என்ற புலி இறந்த பிறகு, அதன் எல்லைகளைத் தன்வசப்படுத்திய டி-30 என்ற புலி அங்கு சுற்றி வந்ததால், அதன்மூலம் தனது குட்டிகளுக்கு ஆபத்து நேர்வதைத் தவிர்க்க, ஒரு பாதுகாப்பான தொலைவில் அவற்றுக்குப் பாதுகாப்பும் வழங்கி வந்திருக்கிறாள், ராஜமாதா என்று அழைக்கப்படும் அந்தத் தாய்ப்புலி.     ஆண் குட்டிகளை தாய் அடித்து விரட்டுவது ஏன்?   Getty Images மத்திய பிரதேசத்தின் பந்தவ்கர் தேசியப் பூங்காவில் தன் குட்டியுடன் நடந்து செல்லும் தாய்ப்புலி இப்படியாக, ஈன்ற காலகட்டத்தில் பாதுகாப்பு கருதிப் பல தியாகங்களைச் செய்து வளர்த்து, வேட்டையாடப் பழக்கி, சுயமாக வாழப் பயிற்றுவித்த பிறகு, தமது குட்டிகள் தனித்து வாழும் வயதை எட்டும்போது, அவை தாயைப் பிரிகின்றன. இதில் "பெண் குட்டிகளைப் பொறுத்தவரை, சிலநேரங்களில் தனது எல்லைப் பரப்பிலேயே ஒரு பகுதியை தாய்ப்புலி வழங்கக்கூடும். அனால், ஆண் குட்டிகளைப் பொறுத்தவரை நெடுந்தூரம் வரை அவை விரட்டியடிக்கப்படும்" என்கிறார் காட்டுயிர் உயிரியலாளர் பீட்டர். "ஆண் புலிகள், தாயின் வாழ்விடத்திற்கு அருகிலேயே இருந்தால், ஒருவேளை அவை தமது உடன்பிறப்புகளுடனோ அல்லது சில நேரங்களில் தாயுடனேகூட இனப்பெருக்கத்தில் ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளன" என்று பீட்டர் கூறினார் ''இதனால் மரபணுக் குறைபாடு ஏற்படும், அது எதிர்காலச் சந்ததிகளின் பிறப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதாலேயே ஆண் புலிகள் விரட்டியடிக்கப்படுகின்றன'' என்கிறார் அவர். இவை மட்டுமின்றி, ஒருவேளை தனது குட்டிகளில் ஏதேனும் ஒன்று பலவீனமாக இருந்தால், அவற்றைத் தானே சாப்பிட்டு விடுவதன் மூலம், பலவீனமான சந்ததிகள் பெருகுவதைத் தடுப்பதாகவும் முனைவர் குமரகுரு கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.   https://www.bbc.com/tamil/articles/cx26d17n4qyo?at_campaign=ws_whatsapp  
    • யாழ் மருத்துமனையில் நடப்பது என்ன? December 22, 2024 — கருணாகரன் — இலங்கையில் நான்கு தேசிய வைத்தியசாலைகளும் பதின்மூன்று போதனா மருத்துவமனைகளும்  உண்டு. இதை விட மாவட்ட மருத்துவமனைகள், பிரதேச மருத்துவமனைகள், கண்மருத்துவமனைகள், குழந்தைகளுக்கான மருத்துவமனைகள், புற்றுநோயாளிகளுக்கான மருத்துவமனைகள், கிராமிய வைத்தியசாலைகள் எனப் பல உள்ளன.  ஆனால், யாழ்ப்பாண மருத்துவமனையில்தான் அதிகரித்த உயிரிழப்புகளும் மருத்துவக் கொலைகளும், மருத்துவத் தவறுகளும் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்யப்படுகிறது. இந்தப் பரப்புரையில் படித்தவர்கள், பொறுப்பான பதவிகளில் இருப்போர் தொடக்கம் பொழுதுபோக்காக எழுதுவோரும் ஈடுபடுகிறார்கள்.  இவற்றோடு இப்பொழுது மருத்துவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராமநாதன் அருச்சுனாவும் ஒரு தொகையான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார். இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் பாராளுமன்றத்தில் குறிப்பிடும்போது அது உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை என்று ஹன்ஸ்ஸாட்டிலிருந்தே நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தனிப்பட்ட முறையிலான குற்றச்சாட்டுகள் என்ற அடிப்படையில் நோக்கப்பட்டு பாராளுமன்றப் பதிவேட்டில் சேர்த்துக் கொள்ளப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.  ஆனாலும் சமூக ஊடகங்களிலும் அருச்சுனாவினாலும் தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மீதும் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பரப்புரையில் இரண்டு விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன.  1.    போதனா மருத்துவமனையில் நடந்த / நடக்கின்ற மருத்துவத் தவறுகள், குறைபாடுகள், குற்றங்கள் மற்றும் ஊழல் எனப்படுபவை. மெய்யாகவே அங்கே பெருந்தவறுகளும் ஊழலும்  தொடர்ச்சியாக நடக்கிறது என்றால் அதை ஆதரங்களோடு பட்டியற்படுத்த வேண்டும். ஆனால் அப்படி யாரும் முன்வைப்பதைக் காணமுடியவில்லை வைஷாலினி என்ற ஒரு குழந்தையின் (நோயாளியின்) கை துண்டிக்கப்பட்டது மட்டுமே மிகப் பெரிய குற்றச்சாட்டாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சிற்கு முறைப்பாடு செய்யப்பட்டு, அது உரிய நிபுணர் குழுவின் மூலம்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. அந்த அறிவித்தலில் தவறு இருந்தாலோ பாதிப்புக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என்றாலோ குறித்த நோயாளரான  வைஷாலினியின் பெற்றோர் – அல்லது அவர்கள் சார்பாக பொது அமைப்பினரோ யாரோ வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அதன் மூலம் உரிய நிவாரணத்தைக் கோரலாம். குற்றவாளிகள் அல்லது தவறிழைத்தோர் நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்படுவர். இழப்பீட்டையும் கோரலாம். இதுதான் இந்த மாதிரியான பிரச்சினைக்கான அரசாங்க வழிமுறையாகும்.  ஆனால், பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வைஷாலினிக்கு ஆரம்ப நிலை மருத்துவம் தனியார் மருத்துவமனையொன்றிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது பலிதமாகவில்லை என்ற நிலையிலேயே போதனா மருத்துவமனைக்கு வைஷாலினி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே சிகிச்சையின்போது கை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணம் போதனா மருத்துவமனையின் சிகிச்சையின்போது நடந்ததா அல்லது தனியார் மருத்துவ மனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின்போது உருவாகியதா என்பதை நிபுணர் குழுவின் அறிக்கையே சொல்லும். அதுவரை நாம் இது குறித்துப் பேச முடியாது. ஆனால், வைஷாலியின் விடயம் மிகப் பாரதூரமானது. அது நியாயமான முறையில் அணுகப்பட வேண்டியது.  இதேவேளை இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு உண்மையைச் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் தனியார் மருத்துமனைகளில் சிகிச்சைக்காகச் செல்கின்ற (சேர்க்கப்படுகின்ற) பலர், ஒரு கட்டத்தில் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு போதனா மருத்துவமனைக்கு அல்லது மாவட்ட மருத்துவமனைகளுக்கு  வருகிறார்கள். அப்படி வருவோரில் பலரும் உரிய சிகிச்சையைப் பெற்று சுகமடைந்து வெளியேறிச் செல்கிறார்கள். சிலர் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த உயிரிழப்புகள் தொடர்பான பதிவும் புள்ளி விவரமும் குறித்த மருத்துவமனைகளின் கணக்கிலேயே சேர்க்கப்படுகிறது.  இது யாழ்ப்பாணத்தில் மட்டும் நடப்பதல்ல. இலங்கை முழுவதிலும் அவதானிக்கப்படுகின்ற நிலையாகும். ஆகவே அப்படி வருகின்ற நோயாளர்களின் தொடக்க நிலைச் சிகிச்சை உண்டாக்கும் பாதிப்பை குறித்த அரச மருத்துவமனையே ஏற்க வேண்டியுள்ளது. இதற்கான தனியார் மருத்துவமனையிலிருந்து சிகிச்சைகளை முறித்துக் கொண்டு வருகின்ற நோயாளிகளை தாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரச மருத்துவமனைகள் சொல்ல முடியாது. ஆனால் அதைத் தனியார் மருத்துவமனைகள் சொல்லலாம். அவை சொல்லித் தப்பிக் கொள்கின்றன. இது ஒரு சுருக்கக் குறிப்புத்தான். இதைப்பற்றி விரிவாகப் பேசினால் மேலும் பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகளும் புள்ளிவிவரங்களும் வெளியாகும்.  ஆகவே இந்தப் பிரச்சினையை இந்த யதார்த்தத்தோடு – உண்மையின் அடிப்படையிற்தான் புரிந்து கொள்ள வேண்டும்.  தவிர, போதனா மருத்துவமனையில் ஊழல் நடக்கிறது என்றால், எந்தெந்த இடத்தில் ஊழல் நடந்துள்ளது? யாரெல்லாம் அதில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என அவற்றைக் குறிப்பிட வேண்டும். அதற்கான ஆதாரங்களை முன்வைப்பது அவசியம். அதுவும் இதுவரையில் யாராலும் முன்வைக்கப்பட்டதாக இல்லை.  ஆகவே பொத்தாம் பொதுவாக தமது கணக்குக்கு ‘தர்ம அடி அடிப்பது‘ என்று சொல்வார்களே, அதைப்போல ஒவ்வொருவரும் தமக்குப் பட்டதை எழுதித் தள்ளுகிறார்கள். அப்படி எழுதப்படும் எந்தச் சொல்லுக்கும் மதிப்பில்லை. ஏனென்றால், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவதூறாகவே கருதப்படும். உண்மையும் அதுதான். எனவே நடந்து கொண்டிருப்பது அவதூறு என்ற முடிவுக்கே நாம் வர முடியும். இப்படி அவதூறு செய்யப்படுவதற்கான காரணம் என்ன என்பதை இந்தக் கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.  2.    தனிப்பட்ட முறையில் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி மீதான நிர்வாகக் குறைபாடுகள் என்ற  குற்றச்சாட்டுகள். அதாவது நடக்கின்ற மருத்துவத் தவறுகள், குற்றங்கள், குறைபாடுகள் தொடர்பாகப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி உரிய நடவடிக்கை எடுக்காமல், தவறிழைத்தோரைப் பாதுகாக்கின்றார் என்பது. அத்துடன் ஊழலுடன் சத்தியமூர்த்தி நேரடியாகச் சம்மந்தப்படுகிறார் என்பதாகச் சொல்லப்படுவது.  அத்துடன் போதனா மருத்துவமனையில் தொண்டு அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருப்போருக்கான பணி நியமனங்கள் மற்றும் ஊதியம் தொடர்பாக உரிய நடவடிக்கையை எடுக்கத் தவறியமை என்ற குற்றச்சாட்டு. இந்தப் பிரச்சினையைக் கையில் தூக்கிக் கொண்டே அருச்சுனா பணிப்பாளரின் பணிமனைக்குச் சென்றிருக்கிறார். உண்மையில் இதனுடைய தாற்பரியம் என்ன என்று அருச்சுனாவுக்குத் தெரியும். அவரும் ஒரு காலகட்டத்தில் மருத்துவ நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றியவர். அத்துடன் வடக்கினதும் இலங்கையினதும் அரசியல் – நிர்வாகச் சூழலை விளங்கியவர். அப்படி விளக்கத்தைக் கொண்டுள்ள அருச்சுனா, இந்தத் தொழிலாளர் விவகாரத்தைத் தனியே பணிப்பாளர் தீர்த்து வைக்க வேண்டும். அல்லது பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று கேட்பது நகைப்பிற்குரியது.  நிரந்தரப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புகளை எந்தவொரு அரச நிறுவனத்தின் எந்த அதிகாரியும் தன்னிச்சையாகச்  செய்ய முடியாது. அதற்கான அனுமதியைக் கோரி, அது கிடைத்த பின், அதற்குரிய நேர்முகத்தேர்வு என உரிய ஒழுங்குகளின் அடிப்படையிலேயே அதைச் செய்ய முடியும். அப்படித்தான் இதற்கு முன்னரும் பல நிறுவனங்களிலும் நடந்துள்ளது. ஆகவே அதற்கான குற்றச்சாட்டை எந்த அடிப்படையில் அருச்சுனா முன்வைத்தார் என்பது கேள்வியே. இது தனிப்பட்ட ரீதியில் ஒரே துறைக்குள் பணியாற்றிய இருவருக்கிடையிலான பிணக்காகவே பார்க்க முடிகிறது. இந்த அடிப்படையிலேயே அருச்சுனாவின் பாராளுமன்ற உரை நீக்கப்பட்டதும் போதனா மருத்துவமனைக்குள் தேவையில்லாமல் செல்லக் கூடாது என நீதிமன்றம் அருச்சுனாவைக் கட்டுப்படுத்தியதும் அமைகிறது.  சொல்லப்படும் ஊழல் விவகாரத்தைப் பேசுவதாக இருந்தாலும் அதையும் பட்டியற்படுத்துவது அவசியமாகும். அவை என்ன அடிப்படையில் தவறு எனத் தெரியப்படுத்துவது முக்கியமானது.  இங்கே சில கேள்விகள் எழுகின்றன.  1.    இப்படிப் பரப்புரை செய்யப்படும் அளவுக்கு உண்மையில் போதனா மருத்துவமனையில் தொடர்ந்தும் தவறுகள் நடக்கிறதா? அதிலும் மருத்துவக் கொலைகள் என்பது மிகப் பாரதூரமானது. சிகிச்சையின்போது பல காரணங்களால் உயிரிழப்புகள் நேர்கின்றன. அது வேறு. மருத்துவக் கொலை என்பது திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாகும். அப்படி ஏதும் நடந்திருந்தால் அதைச் சீரியஸாக எடுக்காமல் விடும் தரப்புகளும் தவறுக்கு உடந்தையாகின்றன. ஆகவே இதைக்குறித்து உரிய தரப்புகள் சீரியஸாகவே சிந்திக்க வேண்டும்.  2.    தவறுகள் தொடர்ந்து நடக்கிறது என்றால், அந்தத் தவறுகளை உரியவர்கள் ஏன் பட்டியற்படுத்துவதில்லை? ஏன் அவற்றை உரிய இடங்களுக்கு (ஆளுநர், சுகாதார அமைப்பு உட்பட்ட நிர்வாக அடுக்குகளுக்கு) உரிய முறையில்  தெரியப்படுத்துவதில்லை?  3.    அப்படித் தெரியப்படுத்தியிருந்தால் அவற்றின் விவரம் என்ன? அதாவது அதற்குப் பின் என்ன நடந்தது? உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்கவில்லையா? பொருத்தமான நடவடிக்கையை உரிய தரப்பினர் மேற்கொள்ளவில்லை என்றால் அந்தத் தரப்புகளும் தவறிழைத்ததாக அல்லவா கருத வேண்டும்? அவையும் தவறுகளுக்கும் பாதிப்புகளுக்கும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை.  4.    சொல்லப்படும் அளவுக்கு யாழ்ப்பாணப் போதனா மருத்துமனையில் தவறுகளும் மருத்துவக் கொலைகளும் நடப்பதாக இருந்தால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியில் உள்ள மக்கள் அமைப்புகள், புத்திஜீவிகள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் என அனைத்துத் தரப்பினரும் மௌனம் காப்பது ஏன்? அவர்களும் இந்தத் தவறுகளுக்கு உடந்தையாக இருக்கிறார்களா? தவறுகளோடு போதனா மருத்துமனையைப் பாதுகாக்கிறார்களா? அப்படிக் குறிப்பிடுமளவுக்கு அங்கே தவறுகளும் குற்றங்களும் மருத்துவக் கொலைகளும் நடக்கவில்லை என்றால், சமூக வெளியில் வாரியிறைக்கப்படும் குற்றச்சாட்டுகளை இந்தத் தரப்புகள் மறுத்துரைக்காமலும் கேள்வி கேட்காமலும் மௌனமாக இருப்பது ஏன்? இவர்களும் தவறான சமூகப் போக்கை ஊக்கப்படுத்துகிறார்களா? 5.    சமூக வெளியில் (வலைத்தளங்களிலும் YouTupe களிலும்)  முன்வைக்கப்பட்டுச் சமூகத்தைக் கொந்தளிப்பாக்குவதற்கு முயற்சிக்கப்படும் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசியற் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் என்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை என்ன? அவர்கள் கேளாச்  செவியர்களாகவும் காணக் கண்ணர்களாகவும் இருப்பது ஏன்? சமூகத்தையும் மருத்துவமனையையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கிறார்களா? 6.    யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிகைகளும் இரண்டு மூன்று தொலைக்காட்சிகளும் உள்ளன. இவற்றை விட குறிப்பிடத்தக்க இணையத் தளங்களும் உள்ளன. இந்த ஊடகங்கள் மேற்படி சமூக வலைத்தளங்களின் / அருச்சுனாவின் குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் கவனம் கொள்ளாதிருப்பது ஏன்? டான் தொலைக்காட்சி மட்டும் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தியுடன் ஒரு நேர்காணலைச் செய்துள்ளதாக அறிய முடிகிறது. அதைத் தவிர்த்தால் பெரிய அளவில் இந்த விடயங்கள் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. ஏனையவை அவ்வப்போது நிலவரச் செய்திகளை மட்டும் அளிக்கின்றனவே தவிர, உரிய கள ஆய்வைச் செய்வதைக்காணவில்லை. ஏற்கனவே ஒரு தடவை உதயன் பத்திரிகையில் பணிப்பாளரின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டதொரு நேர்காணல் வந்திருந்தது. 7.    2000 பேருக்கு மேல் பணியாற்றுகின்ற ஒரு அத்தியாவசிய சேவை மையமே யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையாகும். ஏறக்குறைய 400 மருத்துவர்களும் 600 வரையான மருத்துவத் தாதிகளும் பல பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். 1300 நோயாளர் படுக்கைகள் உண்டு. கண், இருதயம், சிறுநீரகம், குழந்தைகள் பிரிவு, நரம்பியல், அவசர சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவுப்பகுதி என 100 க்கு மேற்பட்ட சேவை மையங்கள் உள்ளன. தினமும் 2500 க்கு மேற்பட்ட கிளினிக் நோயாளர்கள் வருகை தருகின்றனர். 1000 க்கு மேலான வெளிநோயாளர் சிகிச்சை பெறுகின்றனர்.  அப்படியிருந்தும் தற்போது (கடந்த சில ஆண்டுகளில் அல்லது சில மாதங்களில்) அளவுக்கு அதிகமான மருத்துவக் கொலைகளும் தவறுகளும் குற்றங்களும் மெய்யாகவே (பொதுவெளியில் குறிப்பிடுவதைப்போல) நடப்பதாயின் அதற்கான பொறுப்பை இந்த மருத்துவ அணியினரும் ஏற்க வேண்டும். அதற்குப் பொறுப்புச் சொல்ல வேண்டும். இவை அனைத்துக்கும் நிர்வாகப் பணிப்பாளர் என்ற ரீதியில் மருத்துவர் சத்தியமூர்த்திக்குக் கூடுதல் பொறுப்பு இருந்தாலும் இவர்களுக்கும் கணிசமான பொறுப்புண்டு. அந்தப் பொறுப்பிலிருந்து தப்பிச் செல்ல முடியாது.  இதேவேளை பலரும் குறிப்பிடுவதைப்போல மருத்துவக் கொலைகளோ, குற்றங்களோ, தவறுகளோ அங்கே நடக்கவில்லை என்றால், அதை மறுத்துரைப்பதற்கான வழிகளில் மருத்துவ அணியினர் அதைச் செய்ய வேண்டும்.  ஏனென்றால், மருத்துவமனை என்பது மக்களின் – குறிப்பாக நோயாளரின் – நம்பிக்கைக்குரிய – நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய ஒரு மையமாகும். நோயாளரின் உளநிலை பொதுவாகவே சமனிலைக் குறைவுடனேயே இருப்பதுண்டு. தமது நோய் குணமாகுமா? அதற்கான போதிய சிகிச்சை நடக்கிறதா? அதற்குரிய வளங்கள் உள்ளனவா? என்ற கேள்விகள் நோயாளரின் உளநிலையில் பொதுவாகவே கொந்தளிப்பை ஏற்படுத்துவதுண்டு.  ஆகவே, அப்படியான சூழலில் மருத்துவமனையைப் பற்றி (மருத்துவ சேவையைப் பற்றி) பீதியூட்டும் செய்திகள் தொடர்ந்தும் பரப்பப்பட்டால், அதற்கு அனுமதியளித்தால் அவை உண்மையென்றே மக்களால் (நோயாளர்களால்) நம்பப்படும். அது அவர்களைப் பெரிதும் பாதிக்கும். அவர்கள் மிகப் பெரிய அவல நிலையைச் சந்தித்துள்ளதாக உணர்வார்கள். இதில் மிக மோசமாகப் பாதிக்கப்படுவோர் ஏழை மக்களாவர். அவர்களே கூடுதலாக அரச மருத்துமனைகளை நாடுகின்றவர்கள். அரச மருத்துவமனைகளே அவர்களுக்கு கதியாகும். இந்த நிலையில் உண்மையை வெளிப்படுத்தி, மக்களுக்கு (நோயாளருக்கு) நம்பிக்கையை அளிக்கும்  பொறுப்புடன்  நடக்க வேண்டியது மருத்துவ அணியினரின் கடமையாகும். அதுவே மக்களை (நோயாளரை) தெம்பூட்டும்.  8.    பொறுப்பான தரப்புகளின் நடவடிக்கை. குறிப்பாக ஆளுநர், சுகாதார அமைச்சு உள்ளிட்ட தரப்புகள் உரிய குற்றச்சாட்டுகளைக் கவனத்திற் கொண்டு முறையான விசாரணைகளை ஆரம்பித்து உண்மைகளைக் கண்டறிய வேண்டும். உண்மைகளுக்கு அப்பாலான பொய்களைக் கட்டமைப்போரையும் அவதூறு செய்வோரையும் நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.  அதைச் செய்யாமல் தவறினால் அது சமூகத்திற்குப் பாராதூரமான பாதிப்பையே ஏற்படுத்தும். மட்டுமல்ல, இந்தப் பரப்புரையாளரின் சதிக்கு உடன்படுவதாகவும் அமையும். மீளவும் இங்கே வலியுறுத்தப்படுவது இது நோயாளரின் உளநிலையுடன் சம்மந்தப்பட்ட பாரதுரமான விடயமாகும். இந்தக் கட்டுரை கூட நோயாளரின் பாதுகாப்பு, அவர்களுடைய உளநிலை மற்றும் பொது நிலைமையைக் குறித்தே விடயங்களைப் பேச முற்படுகிறது. ஒரு சொல்லும் போதனா மருத்துவமனை நிர்வாகத்தையோ மருத்துவ அணியினரையோ வலிந்து பாதுகாப்பதற்கு முற்படவில்லை. அதேவேளை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் பழிசுமத்தல்களையும் கண்டிக்கிறது.  எனவே நோயாளர்களை உளச்சோர்வடைய வைக்கும் தீய முயற்சிக்கு இடமளிக்காமல் உரிய தரப்புகள் அனைத்தும் உடனடியாக முறையான விசாரணைகளை (நடவடிக்கைகளை) மேற்கொண்டு உண்மை நிலவரத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும். வடமாகாணத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் அரச மருத்துமனைகளையே பெரும்பாலானோர் நாடும் சூழலே பொதுவாக உண்டு. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையே வடக்கின் ஆதார (மைய) மருத்துவமனையாக உள்ளது. அது எந்தச் சூழலிலும் நம்பகத்தன்மையை இழக்க முடியாது.  அப்படி நம்பகத் தன்மையை இழக்குமாக இருந்தால் அதனால் பயனடைவது தனியார் மருத்துவத்துறையாகவே இருக்கும். அது இந்தச் சமூகத்துக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதியாகும்.  இந்த நிலையில் நோக்கினால் யாழ்ப்பாணம் போதனா மருத்து மனை தொடர்பாகக் குறிப்பிடப்படும் விடயங்களைப் பொருட்படுத்தாமல் உதாசீனப்படுத்தினால், அது தனியார் மருத்துவத்துறையை வளர்ப்பதற்கே மறைமுகமாக உதவும்.  நாட்டிலுள்ள நூற்றுக் கணக்கான மருத்துவமனைகளில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மட்டும்தான் மிக மோசமான நிலை காணப்படுகிறதா? ஏனைய இடங்களில் தவறுகளே நடக்கவில்லையா? என்பதையும் அரசும் மக்களும் ஆழமாகச் சிந்தித்து அறிய வேண்டும்.  வடக்கில் மன்னார், சாவகச்சேரி ஆகிய இடங்களிலுள்ள மருத்துவமனைகளில் அருச்சுனா வெளிப்படுத்திய பிரச்சினைகளைப் பற்றியும் விசாரிக்க வேண்டும். இங்கெல்லாம் பிரச்சினைகளின் உண்மைத் தன்மை என்ன? அவற்றை எப்படித் தீர்த்து வைப்பது என்பதற்கு அப்பால், அவற்றை வைத்தே தன்னுடைய அரசியல் அதிரடிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் உத்தியையே அருச்சுனா செய்கிறார். இதற்கு வாய்ப்பாக இன்றைய தகவல் உலகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார். இது தன்னைத் தானே ஹீரோவாக்கிக் கொள்ளும் ஒரு உத்தியாகும். நிஜமான கதாநாயகர்களைக் கண்ட வரலாற்றுக்கு இத்தகைய நகைச்சுவையாளர்கள் சிரிப்பையே வரவழைக்கும்.  எனவே இவற்றைத் தீர விசாரித்து உண்மையைக் கண்டறிவதற்கு மேற்குறிப்பிட்ட புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியற் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பும் முயற்சிக்க வேண்டும்.  இல்லையெனில் நேர்மையான முறையில் அர்ப்பணிப்பாகச் சேவை செய்வோர் உளச்சோர்வடையக்கூடிய நிலையே ஏற்படும். மட்டுமல்ல, தவறான அபிப்பிராயம் சமூகத்தில் மேலோங்கியிருந்தால் அது மருத்துவமனையில் நோயாளருக்கும் மருத்துவத்துறையினருக்கும் எப்போதும் முரண்களையே உருவாக்கும். நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையில் இடைவெளி இருக்குமானால் அது சிகிச்சையையே பாதிக்கும். குறிப்பாக நோயாளியின் உள, உடல் ஆரோக்கியத்தை.  தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் புதிய அரசாங்கம் நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளிலுமிருக்கும் குறைபாடுகளையும் சீர்திருத்தம் செய்யவுள்ளதாகக் கூறுகிறது. அப்படியானால் யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனை விடயத்திலும் அது கவனம் செலுத்த வேண்டும்.     https://arangamnews.com/?p=11558
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.