Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழ் மொழியில் தெலுங்கு மொழியின் தாக்கம் என்ன?
 
இரு மொழியாளர்கள் என்றால் என்ன?
 
ஒரு வட்டாரத்தில் மக்கள் தமக்குள் ஒன்றுபட்டிருக்க ஏற்பட்ட தொன்றுதொட்ட பேச்சொலிக் குறியீட்டை மொழி எனலாம். மொழியானது இடத்திற்கு இடம் மாறுபடும் தன்மையுடையது. மொழியியல் ஒன்றை மட்டும் கொண்டு மொழியில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை விளக்குவது கடினம். குறிப்பிட்ட வட்டாரத்தில் பேசப்படும் பேச்சு மொழி அப்பகுதியில் வாழ்வோர் புரிந்துகொள்ளும் அளவிற்கு வேறுபாடின்றி இருத்தல் வேண்டும். இத்தகைய கிளைமொழிக் கூறுகளைப் பிற கிளைமொழியினர் ஓரளவு புரிந்து கொண்டாலும் வேறுபாடுகள் மிகுந்துள்ளதால்தான் இவற்றைத் தனிதனிக் கிளைமொழிகளாகக் கூறுகிறோம்.
பொதுப் பேச்சுத்தமிழும் கிளைமொழியும்
தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள தமிழ்மொழியின் வடக்குக் கிளைமொழியைப் புரிந்து கொள்ளுதலே சற்றுக் கடினம், அதிலும் அயல்மொழியான தெலுங்கின் தாக்கமும் ஏற்படுவதால் அக்கிளைமொழியைத் தமிழகத்தின் தெற்குப் பகுதி மக்கள் புரிந்து கொள்வது மிகவும் கடினம். கற்ற மக்களிடையே ஓரளவு பொதுப் பேச்சுத்தமிழ் வழங்குவதால் அம்மக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் தமிழக ஆந்திர எல்லையில் வசிப்பவராக இருப்பினும் பல்வேறு இடப்பொதுப் பேச்சு வழக்குகளை உள்ளடக்கிய பொதுப்பேச்சுத் தமிழையே (Standard Dialect) ល.
கிளைமொழியும் இருமொழியமும்
கல்லாதவர்கள் மிகுந்துள்ள தமிழக ஆந்திர எல்லையில் பொதுப் பேச்சுத் தமிழ் உண்டாக வாய்ப்புகள் குறைவேயாகும். பொதுப் பேச்சுத்தமிழ் சிதைவதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றுள் மிகவும் முக்கியக் காரணம் அண்டை மொழியான தெலுங்கின் குறுக்கீடே யாகும். வடக்குக் கிளைமொழி மக்கள் பேசும்போது தெலுங்கு மொழியின் சாயல் மிகுந்துள்ளது. இவ்வட்டார மொழியில் தமிழ் தெலுங்கு என இருமொழிகளும் தொடர்பு கொள்ளும்போது தெலுங்குமொழியே செல்வாக்கு மிக்கதாக விளங்குகிறது.
தமிழர் - தெலுங்கர் மொழி உறவு
வடக்குக் கிளைமொழி வழங்கும் தமிழக ஆந்திர எல்லையில் மலைத்தொடர்களும் ஆறுகளும், இருமாநிலங்களுக்கான வரம்பாக அமைந்துள்ளன. எல்லைகளும் பெரும்பாலும் இயற்கையை ஒட்டியே பிரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வட்டாரப் பிரிவினையில் வருந்துதற்குரிய நிகழ்ச்சிகளும் பல உள்ளன. தமிழக ஆந்திர எல்லையில் நகரிக்கு அருகிலுள்ள சத்திரவாடா என்னும் கிராமம் முழுமையும் தமிழ் மக்களைக் கொண்டிருப்பினும் ஆந்திரத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் அவ்வெல்லைப் பிரிவினையை விரும்பாதபோதும் சில அரசியல் காரணங்களால் ஆந்திரத்துடன் இருக்க வேண்டிய நிலை உருவாகியது. தமிழக வட எல்லையிலுள்ள தமிழ் மக்கள் பல காரணங்களால் தெலுங்கர்களுடன் மொழித்தொடர்பு கொள்ள வேண்டி யுள்ளதால் தெலுங்குமொழியின் தாக்கம் தமிழ்மொழியில் பல்வேறு மொழிக் கூறுகளிலும் காணப்படுகின்றது.
தமிழில் தெலுங்கு மொழியின் தாக்கம்
அண்டை மாநிலமொழியான தெலுங்கு மொழி தமிழக - ஆந்திர எல்லையில் பெரும்பான்மையோர் அறிந்த மொழியாக உள்ளது. தமிழகத்தின் பிற மேற்கு எல்லையில் வாழுகின்ற தமிழர் பேசும் தமிழ்மொழி மலையாள மொழியின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதை நாம் நன்கு அறிவோம். பாலக்காடு, கன்னியாகுமரி மாவட்டத் தமிழர்கள் தமிழே பேசினாலும் அம்மொழியில் அண்டை மாநில மொழியான மலையாள மொழியின் தாக்கத்தை நம்மால் உணரமுடியும். தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி அவர்கள் உரையாடினாலும் மலையாள மொழியின் ஒலிக்குறுக்கீட்டை நம்மால் உணரமுடியும். இதே நிலைதான் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. வழக்கு வேறுபாடுகள் ஒலி வேறுபாடுகள் எனப் பலவித வேறுபாடுகளுடன் தனித்ததொரு மொழியோ அல்லது தெலுங்கு மொழியோ என ஐயுறும் வகையில் காரணமாக அமைந்துள்ளது தமிழின் வடக்கு வட்டாரக் கிளைமொழி எனலாம்.
வடக்குக் கிளைமொழி சிதைந்த வடிவமா?
கிளைமொழிகள் திருந்தா வடிவத்தை உடையன. சிதைந்த வடிவத்தைக் கொண்டதாக விளங்குகின்றன என்று கூறுவது பொருத்தமானதா? தமிழின் பிற கிளைமொழிகளை நோக்கும்போது இக்கூற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியதாகின்றது. தமிழக ஆந்திர எல்லையில் தெலுங்கு மொழியின் பின்னணியில் வழங்கப்படும் வடக்குக் கிளைமொழி தமிழல்லாத வேறொரு மொழியோ என்று கூறமளவிற்குக் கூட வேறுபாடுகளை உடையதாக இருப்பதைக் கண்டோம். தமிழின் சிதைந்த வடிவமாக மாறவிருந்த வடக்குக் கிளைமொழியின் வடிவத்தைத் தமிழின் பொதுப்பேச்சுமொழிக்குத் திசைதிருப்பக் கூடியது மக்களுக்குள்ள கல்வி பற்றிய விழிப்புணர்வுதான் என்று கூறலாம்.
இருமொழியாளர்கள்
வெவ்வேறு மொழி பேசும் இரு மாநில எல்லைப்பகுதியில் ஒரு மொழியின் தாக்கம் அண்டை மொழியைப் பாதிக்கும். அவ்வாறு பாதிக்கப்படும்போது ஒரு மொழி மற்றொரு மொழியின் செல்வாக்கைப் பெற்று விளங்கும். ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பள்ளிப்பட்டுப் பகுதியில் (தமிழக - ஆந்திர எல்லை) பெரும்பாலான மக்கள் இருமொழியாளர்கள், (Bilinguals) தாய்மொழியான தமிழுக்கு ஈடாக அண்டை மொழியான தெலுங்கில் திறமை பெற்றுள்ளனர்."
இவ்வாறான இருமொழியாளர்களில் இரு வகையில் உள்ளனர். தாய்மொழியைப் பேசிக் கொண்டிருக்கும்போது பிறமொழியைக் கலப்பவரும் பிற மொழியைப் பேசிக் கொண்டிருக்கும்போது தாய்மொழியைக் கலப்பவருமாக இரண்டு வகையான இருமொழியாளர்கள் உளர். இருமொழியையும் அறிந்த ஒருவன் தாய்மொழியில் பேசும்போது பிறமொழியைக் கலப்பதைவிடப் பிறமொழியைப் பேகம்போது தாய்மொழியைக் கலந்து உரையாடுவான் என்பார் இ. அண்ணாமலை.
விதிவிலக்கு
பள்ளிப்பாட்டுப் பகுதியிலோ இருமொழியத்தின் நிலை அண்ணாமலை அவர்களின் கூற்றுக்குப் புறம்பாய் உள்ளது. தாய்மொழியான தமிழின் தாக்கத்தைவிட அண்டை மொழியான தெலுங்கின் தாக்கம்தான் மிகுதியாக உள்ளது. இதே நிலை கேரள கர்நாடக எல்லையிலுள்ள காசர்கோடு பகுதியில் இருந்ததை ச. ஆரோக்கியநாதன்' குறிப்பிட்டுள்ளார். பள்ளிப்பட்டுப் பகுதியில் இந்நிலை ஏற்படக் காரணமாயிருந்தது அரசியல் சூழ்நிலையே ஆயினும் சமுதாயச் சூழலும் இதற்கு ஒரு காரணமாயிருந்தது. இவ்வட்டாரத்தில் தமிழர் தமிழில் பேசுவதைவிடத் தெலுங்குமொழியில் பேசுவதை உயர்வாக எண்ணினர். இவ்வாறு தாய்மொழிச் செல்வாக்குக் குறைந்து பிறமொழிச் செல்வாக்கு மிகுதியாவதற்குக் காரணங்கள் உண்டு. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவன் நண்பர்களுடன் உரையாடும்போது தன் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்த வேண்டி ஆங்காங்கே பல ஆங்கிலச் சொற்களைக் கலந்து உரையாடுகின்றான். இது பிறமொழி மீது அவன் கொண்ட பற்று மூலமாக வருவதில்லை. பிறரை விடத் தன்னை உயர்த்திக் காட்டும் முனைப்பாலேயே அவ்வாறு பேசுகின்றான்.
தேவையிருந்தும் இயலாமை
திருவள்ளுவர் மாவட்ட ஆரம்பாக்கத்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தமிழ், தெலுங்கு இரண்டிலும் பேசும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். இதற்கு மாறான நிலை திருப்பத்தூர் மாவட்ட கொத்தூரில் காணப்படுகிறது. மலையையே எல்லையாக உடைய இவ்வட்டாரத்தின் மக்களில் தெலுங்கினைப் புரிந்துகொண்ட போதிலும் அம்மொழியில் பேசத் தெரியாத பெண்கள் உள்ளனர். இங்கு மலைக்கு மறுபுறம் (ஆந்திர மாநிலம்) இவர்தம் உறவினர் இருந்தும் பெண்கள் தெலுங்கு மொழியில் பேசும் ஆற்றலற்று விளங்குகின்றனர். ஆரம்பாக்கத்தில் பெண்கள் மீன் விற்பதற்கு வெளியில் சென்று வருகின்றனர். கொத்தூரில் வணிகப் பொருட்டாக ஆண்கள்தான் செல்கின்றனர். இத்தகைய முரண்பாடான நிலைகள் காணப்படும் இடங்களும் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ளன.
மொழிக்கலப்பின் தன்மைகள்
இவ்வட்டாரத்தில் மொழிக்கலப்பு மிகுதியாதலால், தமிழ் மொழியில் ஏற்படும் தெலுங்குமொழியின் குறியீட்டைக் காணலாம். மொழிக்கலப்பு என்று குறிப்பிடும்போது, இவ்வட்டாரத்தில் சொற்கலப்புத்தான் மிகுந்துள்ளது. அதிலும், வினைச்சொல்லை விடப் பெயர்ச்சொல் கலப்பே மிகுதியாக உள்ளது. இம்மொழிக் கலப்புப் பற்றிக் குறிப்பிடும் ச. ஆரோக்கியநாதன்,' மற்றோரிடத்தில் "ஒரு மொழியில் பிறமொழியின் கலப்பு ஏற்படும்பொழுது பெயர்ச்சொல், வினைச் சொல், பெயரடைகள், வினையடைகள், முன்னிடைச் சொற்கள், வியப்பிடைச் சொற்கள் முதலியன இறங்குமுக எண்ணிக்கையில் (decreasing order) கலப்புறுகின்றன" என்கிறார். இம்மொழிக் கலப்பின் விழுக்காடு பற்றிக் கூறும் ச. அகத்தியலிங்கம்' அவர்களும் இக்கருத்தைப் புலப்படுத்தி யுள்ளார்.
மொழிக்கலப்பின் பகுப்புகள்
மொழிக்கலப்பு, மொழி மாறாட்டம் என்ற நிலையில் தமிழ்,தெலுங்கு மொழிகளுள் மொழிக் குறுக்கீடு இருப்பினும், தமிழ் மொழியில்தான் தெலுங்கு மொழியின் குறுக்கீடு மிகுந்து காணப்படுகின்றது.
மொழிக்கலப்பில் சொற்கள் பெறுமிடம்
மொழிக் கூறுகளுள் வடக்கு வட்டாரக் கிளைமொழியில் சொல்நிலை, தொடர்நிலை என்ற நிலைகளில் தெலுங்கு மொழியின் செல்வாக்கைக் காணமுடிகிறது. சொல்நிலைகளிலும் பெயர்ச்சொற்கள் மிகுதியாகக் கலந்துள்ளனவாகச் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன.
பெயர்ச்சொற்களின் கலப்பிலும் வேளாண்மைத் தொடர்பான சொற்களே மிகுந்த கலப்புக்கு உள்ளாகின்றன. பள்ளிப்பட்டுப் பகுதியில் வேளாண்மை முதன்மைத் தொழில் என்பதால் அச்சொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப் படுகின்றன.
பெயர்ச்சொற்களுக்கு அடுத்தநிலையில் உறவுமுறைச் சொற்கள், வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்களின் பெயர்கள், உணவு வகைகள், மனித உடல் 92
உறுப்புகள், இருப்பிடம் பற்றிய சொற்கள், நோயைக் குறிக்கும் சொற்கள். அளவைகளின் பெயர்கள், நேரம் பற்றிய சொற்கள், உடைகள், அணிகலன்கள், விளையாட்டுகள், பறவைகள், விலங்குகளின் பெயர்கள் ஆகியவற்றில் சொற்கலப்பு உண்டாகின்றது.
தமிழக ஆந்திர எல்லையில் வழங்கும் மொழிக்கலப்பையும் பல்வேறான மொழிக் கூறுகளின் அடிப்படையில் பிரித்தறிந்து அவற்றை இரு வகைகளாக் காட்டலாம்.அவ்வகைகள்,
1. சொல் குறுக்கீடு
2. தொடர் குறுக்கீடு
என்பனவாகும்.மொழிக்கலப்பு ஏற்படும் போது பொதுவாகவே அடிப்படையான சொற்களைக் கடன் பெறுவதில்லை. எனினும், தமிழக ஆந்திர எல்லையில் இதற்கு மாறான நிலை காணப்படுகிறது. அவ்வட்டார மக்களின் அடிப்படைத் தொழில் வேளாண்மை என்பதால் இத்தொழில் தொடர்பான சொற்களே மிகுதியாகக் கலந்துள்ளன.
 
471915371_2327611007600459_3309809463319
 
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.