Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் விடைபெற்றது 2024! பிறந்தது புத்தாண்டு!

Published By: VISHNU   31 DEC, 2024 | 08:48 PM

image
 

 

 

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில், 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு பிறந்தது.

002.png

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. பல நகரங்களில் டிசம்பர் 31ஆம் தேதி மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும்.

001.png

2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிகழ்வை உலகமே கொண்டாடத் தயாராகி வருகிறது. பலரும் அவரவருக்கு உரிய முறையில் புத்தாண்டை வரவேற்கத் தயாராவார்கள்.

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. இலங்கை நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 4.40 மணிக்கு, நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி.

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, மக்கள் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

உலக நேரக் கணக்கின்படி, கிரிபாட்டி தீவுக்கு அடுத்த நியூசிலாந்து நாட்டில்தான் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் ஆக்லாந்த நாட்டின் ஸ்கை டவரில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/202668

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2025 புது வருடத்தை வரவேற்ற முதல் நாடு எது தெரியுமா!

மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி (Kiribati) தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி (Kiribati) , டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது.

கிரிபாட்டி (Kiribati) தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வானவேடிக்கை காட்சி

அதேவேளை 2025 ஆம் ஆண்டினை வரவேற்ற முதல் தீவாக கிரிபட்டி தீவு (Kiribati) உள்ளதுடன் நியூசிலாந்திலும் புத்தாண்டு பிறந்துள்ளது.

2025 புது வருடத்தை வரவேற்ற முதல் நாடு எது தெரியுமா ! | Kiribati Becomes First Country To Enter 2025

2025 இல் நுழைந்த உலகின் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றனர். நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில், சின்னமான ஸ்கை டவர் விழாக்களின் மையப்பகுதியாக செயல்பட்டது.

பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வானவேடிக்கை காட்சியுடன் திகைக்க வைத்ததுடன் ஆயிரக் கணக்கானோர் கரையோரத்தில் கூடி ஆரவாரம் செய்தும் பாடியும் வானத்தை வண்ணமயமான வண்ணங்களால் பிரகாசிக்கச் செய்ததுடன் மகிழ்ச்சியுடன் புத்தாட்டை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/kiribati-becomes-first-country-to-enter-2025-1735646134#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2025: உலகின் முக்கிய நகரங்களில் நிகழ்ந்த கொண்டாட்டங்கள்- புத்தாண்டை உலகம் வரவேற்றது எப்படி?

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள்
 

உலகம் 2024-ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து, வாணவேடிக்கைகள், வண்ண ஒளி நிகழ்வுகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளுடன் 2025-ஆம் ஆண்டை வரவேற்றது.

பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் புத்தாண்டை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இங்கே காணலாம்.

 
துபாயின் புகழ்பெற்ற 'புர்ஜ் கலிஃபா'

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புத்தாண்டை வரவேற்கும் விதமாக துபாயின் புகழ்பெற்ற 'புர்ஜ் கலிஃபா' கட்டடத்தில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகள்
குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சி.ஜி சாலையில் புத்தாண்டைக் கொண்டாட குவிந்த மக்கள்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சி.ஜி சாலையில் புத்தாண்டைக் கொண்டாட குவிந்த மக்கள்.
கேட்வே ஆஃப் இந்தியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மும்பையின் 'கேட்வே ஆஃப் இந்தியாவில்' புத்தாண்டைக் கொண்டாட மக்கள் ஒன்றுகூடுவது வழக்கமான ஒரு நிகழ்வு. இம்முறையும் அதுபோல மக்கள் கூடியதைக் காண முடிந்தது.
இந்தோனேசியா

பட மூலாதாரம்,SONNY TUMBELAKA/AFP

படக்குறிப்பு, இந்தோனீசியாவின் பாலியில், '2024ஆம் ஆண்டின் சூரியனை விடுவித்துவிட்டு, 2025ஆம் ஆண்டின் சூரியனை வரவேற்கும்' விதமாக நடனமாடி, புத்தாண்டை வரவேற்கும் நடனக் கலைஞர்கள்.
ஓபரா ஹவுஸ் மற்றும் சிட்னி ஹார்பர் பிரிட்ஜில் நடத்தப்பட்ட வாணவேடிக்கைகள்

பட மூலாதாரம்,BIANCA DE MARCHI/AAP IMAGE VIA REUTERS

படக்குறிப்பு, நள்ளிரவுக்கு (12 மணி) மூன்று மணி நேரத்திற்கு முன்பாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் புகழ்பெற்ற ஓபரா ஹவுஸ் மற்றும் சிட்னி ஹார்பர் பிரிட்ஜில் நடத்தப்பட்ட வாணவேடிக்கைகள்.
ஆஸ்திரேலியா

பட மூலாதாரம்,BIANCA DE MARCHI/AAP IMAGE VIA REUTERS

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில், புத்தாண்டு வாணவேடிக்கைகளை காண வேண்டும் என்பதற்காக சிட்னி நகரில் குடும்பத்துடன் முகாமிட்ட மக்கள்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி ஹார்பர் பாலம்

பட மூலாதாரம்,SAEED KHAN/AFP

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் சிட்னி ஹார்பர் பாலம் பகுதியில் நள்ளிரவில், புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட வாணவேடிக்கைகள். அங்கு பொறுமையாக கூடியிருந்த மக்களுக்கு கண்கவர் விருந்தாக இது அமைந்தது.
ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஓபரா ஹவுஸ்

பட மூலாதாரம்,BROOK MITCHELL/GETTY IMAGES

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஓபரா ஹவுஸ் பகுதியில் வாணவேடிக்கைகளை காண குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்.
ஷி ஜின்பிங் உரை

பட மூலாதாரம்,ADEK BERRY/AFP

படக்குறிப்பு, சீனாவின் பெய்ஜிங்கில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் உரை நிகழ்த்தினார்.
சீனாவின் ஜிலின் நகரில் 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகளைக் காண, அங்குள்ள சோங்குவா ஆற்றுப் பகுதியில் குவிந்த சீன மக்கள்.

பட மூலாதாரம்,VCG VIA GETTY IMAGES

படக்குறிப்பு, சீனாவின் ஜிலின் நகரில் 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகளைக் காண குவிந்த சீன மக்கள்.
சீனாவின் சாங்கிங்

பட மூலாதாரம்,CHENG XIN/GETTY IMAGES

படக்குறிப்பு, சீனாவின் சாங்கிங் நகரின் ஜீஃபாங்பே நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியில் புத்தாண்டை கொண்டாட திரண்ட மக்கள்.
தாய்லாந்து

பட மூலாதாரம்,RUNGROJ YONGRIT/EPA

படக்குறிப்பு, தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் உள்ள 'சிட்டி பில்லர் ஆலயத்தில்' புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ள பௌத்த பக்தர் ஒருவர்.
தைவானின் 'தைபே 101 கோபுரப்' பகுதி

பட மூலாதாரம்,RITCHIE B TONGO/EPA

படக்குறிப்பு, தாய்வானின் 'தைபே 101 கோபுரத்தில்' நடந்த வாணவேடிக்கைகளை காண கூடியிருந்த கூட்டத்தை புகைப்படம் எடுக்கும் ஒரு நபர்.
தைவானின் 'தைபே 101 கோபுரப்' பகுதி

பட மூலாதாரம்,DANIEL CENG/ANADOLU VIA GETTY IMAGES

படக்குறிப்பு, தாய்வானின் 'தைபே 101 கோபுரப்' பகுதியில், புத்தாண்டு பிறப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பாக 'கவுண்ட் டவுன்' தொடங்கியபோது, அங்கு கூடியிருந்த மக்கள் தங்கள் 'ஸ்மார்ட்போன் டார்ச் ஒளியை' உயர்த்திக் காட்டியபோது.
தைவானின் 'தைபே 101 கோபுரப்' பகுதி

பட மூலாதாரம்,GENE WANG/GETTY IMAGES

படக்குறிப்பு, 508 மீட்டர் உயர 'தைபே 101 கோபுரத்தில்' நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை.
ஜப்பானில் புத்தாண்டு

பட மூலாதாரம்,RODRIGO REYES MARIN/ZUMA PRESS WIRE/REX/SHUTTERSTOCK

படக்குறிப்பு, ஜனவரி 1, ஜப்பானில் ஒரு முக்கியமான தேசிய விடுமுறை தினம். புத்தாண்டை வரவேற்கும் விதமாக அங்கு வீடுகள் மற்றும் கோயில்கள் ஜனவரி 1 அன்று சுத்தம் செய்யப்படுகின்றன.
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள போசிங்கக் பெவிலியனின் மணி

பட மூலாதாரம்,JUNG YEON-JE/AFP

படக்குறிப்பு, புத்தாண்டு பிறந்ததும், தென் கொரியாவின் தலைநகர் சோலில் உள்ள போசிங்கக் பெவிலியனின் மணி அடிக்கப்பட்டது. டிசம்பர் 29 அன்று நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து, தென் கொரியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மந்தமாகவே இருந்தன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா

பட மூலாதாரம்,ELOISA LOPEZ/REUTERS

படக்குறிப்பு, பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் நகர மையத்தில் புத்தாண்டை வரவேற்க நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சி.
இந்தோனேசியா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தோனீசியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் காண நள்ளிரவில் கூடிய மக்கள்
சிரியா

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, சிரியாவில், பல ஆண்டுகளாக நிலவிய அசாத்-குடும்ப ஆட்சி அகற்றப்பட்ட பிறகு கொண்டாடப்பட்ட முதல் புத்தாண்டு இதுவாகும். தலைநகர் டமாஸ்கஸில் நடைபெற்ற வாணவேடிக்கைகள்.
இராக் தலைநகர் பாக்தாத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இராக் தலைநகர் பாக்தாத்தில் 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகள்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.