Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
04 JAN, 2025 | 10:51 PM
image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கேப் டவுன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தடுமாற்றம் அடைந்துள்ளது.

தென் ஆபிரிக்கா முதலாவது இன்னிங்ஸில் குவித்த 615 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க தென் ஆபிரிக்காவைவிட 551 ஓட்டங்கள் பின்னிலையில் பாகிஸ்தான் இருக்கிறது.

முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 316 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா, சகல விக்கெட்களையும் இழந்து 615 ஓட்டங்களைக் குவித்தது.

தனது இன்னிங்ஸை 176 ஓட்டங்களிலிருந்து இன்று காலை தொடர்ந்த ரெயான் ரிக்ல்டன் இரட்டைச் சதம் குவித்து அசத்தினார்.

343 பந்துகளை எதிர்கொண்ட ரெயான் ரிக்ல்டன் 29 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 259 ஓட்டங்களைக் குவித்தார்.

போட்டியின் முதலாம் நாளன்று டெம்பா பவுமாவுடன் 4ஆவது விக்கெட்டில் 235 ஓட்டங்களைப் பகிர்ந்த ரிக்ல்டன் இன்றைய தினம் கய்ல் வெரினுடன் 6ஆவது விக்கெட்டில் 148 ஓட்டங்களையும் மார்க்கோ ஜென்சனுடன் 7ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

கய்ல் வெரின் சரியாக 100 ஓட்டங்களைப் பெற்றதுடன் தென் ஆபிரிக்காவின் முதலாவது இன்னிங்ஸில் சதம் குவித்த மூன்றாவது வீரரானார்.

முதல் நாளன்று டெம்பா பவுமா 106 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மார்க்கோ ஜென்சன் 62 ஓட்டங்களையும் கேஷவ் மஹராஜ் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹம்மத் அபாஸ் 94 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சல்மான் அகா 148 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குரம் ஷாஸாத் 123 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிர் ஹம்ஸா 127 ஓட்டங்களையும் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

0401_babar_azam.png

0401_kyle_verreyne.png

0401_ryan_rickleton_double_ton.png

https://www.virakesari.lk/article/202982

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானுடனான 2ஆவது டெஸ்டில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா தொடரை முழுமையாகக் கைப்பற்றியது

06 JAN, 2025 | 10:38 PM
image

(நெவில் அன்தனி)

கேப் டவுடன், நியூலண்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பலோ ஒன்னில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தானின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த தென் ஆபிரிக்கா 10 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது.

போட்டியில் ஒரு நாள் மீதம் இருக்க இப் போட்டியில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என முழுமையாகக் கைப்பற்றியது.

இந்த வெற்றியுடன் நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சிக்கான அணிகள் நிலையில் 69.44 சதவீத புள்ளிகளுடன் முதலாம் இடத்தை தென் ஆபிரிக்கா நிரந்தரமாக்கிக்கொண்டது.

58 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நான்காம் நாளான இன்று திங்கட்கிழமை மாலை இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 425 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த பாகிஸ்தான் பலோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்பட்டது.

போட்டியின் 3ஆம் நாளான நேற்றைய தினம் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான், நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் சகல விக்கெட்களையும் இழந்து 478 ஓட்டங்களைப் பெற்றது.

இன்று காலை தனது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஷான் மசூத் 145 ஓட்டங்களைப் பெற்று  ஆட்டம் இழந்தார்.

மத்திய வரிசையில் மொஹமத் ரிஸ்வான், சல்மான் அகா, ஆமிர் ஜமால் ஆகிய மூவரும் 30க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றதுடன் மேலும் இருவர் 20க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

மொஹம்மத் ரிஸ்வான், சல்மான் அகா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு சிறு சோதனையைக் கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததும் தென் ஆபிரிக்கா இன்றைய தினத்திற்குள் வெற்றிபெற்றுவிடும் என்பது உறுதியானது.

முதல் நாளன்று உபாதைக்குள்ளான சய்ம் அயூப் இரண்டு இன்னிங்ஸ்களிலும் துடுப்பெடுத்தாடவில்லை.

பந்துவீச்சில் கெகிசோ ரபாடா, கேஷவ் மஹராஜ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

தென் ஆபிரிக்கா சார்பாக முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் குவித்த ரெயான் ரிக்ல்டன் 3ஆவது நாளன்று உபாதைக்குள்ளானதால் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடவில்லை. அவருக்கு பதிலாக டேவிட் பெடிங்ஹாம் ஆரம்ப வீரராக ஏய்டன் மார்க்ராமுடன் துடுப்பெடுத்தாடினார்.

எண்ணிக்கை சுருக்கம்

தென் ஆபிரிக்கா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 615 (ரெயான் ரிக்ல்டன் 259, டெம்பா பவுமா 106, கய்ல் வெரிசன் 100, மார்க்கோ ஜென்சன் 62, கேஷவ் மஹராஜ் 40, மொஹம்மத் அபாஸ் 94 - 3 விக்., சல்மான் அகா 148 - 3 விக்.)

பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 194 (பாபர் அஸாம் 58, மொஹம்மத் ரிஸ்வான் 46, கெகிசோ ரபாடா 55 - 3 விக்., கேஷவ் மஹராஜ் 14 - 2 விக்., க்வேனா மஃபாக்கா 43 - 2 விக்.)

பாகிஸ்தான் 2ஆவது இன்: (ஃபலோ ஆன்) சகலரும் ஆட்டம் இழந்து 478 (ஷான் மசூத் 145, பாபர் அஸாம் 81, சல்மான் அகா 48, மொஹம்மத் ரிஸ்வான் 41, ஆமிர் ஜமால் 31, கம்ரன் குலாம் 28, சவூத் ஷக்கீல் 23, கெகிசோ ரபாடா 118 - 3 விக்., கேஷவ் மஹராஜ் 137 - 3 விக்., மார்க்கோ ஜென்சன் 101 - 2 விக்.)

தென் ஆபிரிக்கா - வெற்றி இலக்கு 58 ஓட்டங்கள் - 2ஆவது இன்: விக்கெட் இழப்பின்றி 61 (டேவிட் பெடிங்ஹாம் 47 ஆ.இ., ஏய்டன் மார்க்ராம் 14 ஆ.இ.)

ஆட்டநாயகன்: ரெயான் ரிக்ல்டன். தொடர்நாயகன்: மார்க்கோ ஜென்சன்.

0601_sa_bt_pak.jpg

0601_shan_massod.png

https://www.virakesari.lk/article/203168

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ விளையாட்டு கைபேசியில் இருந்து நேர‌டியா பார்த்து கொண்டு இருந்தேன்

முத‌லாவ‌து இனிங்சில் தென் ஆபிரிக்கா 600ர‌ன்ஸ்ச‌ தான்டி விட்ட‌து 

 

ஒரு க‌ட்ட‌த்தில் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும் போல் இருந்த‌து பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் அவுட் ஆன‌ பிற‌க்கு ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் ச‌ரியாக‌ விளையாட‌ வில்லை விளையாட்டு 4நாளுட‌ன் முடிந்து விட்ட‌து.............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.