Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடி!

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடி!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்வார் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், வருகைக்கான குறிப்பிட்ட திகதிகள் தீர்மானிக்கப்படவில்லை.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த டிசம்பரில் புதுடெல்லிக்கு விஜயம் செய்திருந்த போது விடுத்த அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

அநுரகுமாரவின் இந்தியப் பயணம், பதவியேற்ற பின்னர் அவரது முதல் சர்வதேச விஜயமாக அமைந்தது.

அநுரகுமாவரின் தெரிவைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது உயர்மட்ட வெளிநாட்டு அதிகாரி இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர் ஆவார்.

இதற்கு முன்பு பிரதம் மோடி 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1415617

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணமும் வாறியளோ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, RishiK said:

யாழ்ப்பாணமும் வாறியளோ? 

யாழ்ப்பாணத்துக்கு வந்தால், நல்லூருக்கு போக வேண்டி வரும்.
ஆனால்  இவர், சட்டையை  கழட்ட மாட்டார்.
ஆனபடியால்... யாழ்ப்பாண புரோகிராம் கான்சல். 😂

இந்தியாவால்... 15 மாடியில் கட்டப் பட்ட   யாழ்ப்பாண கலாச்சார மண்டபமும் இந்தியப் பிரதமரால்... உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தி ஒன்று வந்திருந்தது. இப்போதும்... அதே நிலைப்பாட்டில் உள்ளார்களா என தெரியவில்லை.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரும் இந்திய பிரதமருக்கு உயர்மட்ட பாதுகாப்பு

ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 6 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு இந்தியாவிலிருந்து உயர்மட்ட பாதுகாப்பு குழுவொன்று தற்போது நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கொழும்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி உட்பட்டோரை சந்திக்கவுள்ள இந்திய பிரதமர், சம்பூருக்கு ஹெலிகொப்பரில்ல் சென்று மின்திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

அதேபோல அனுராதபுரம் ஸ்ரீ மகாபோதிக்கு சென்று வழிபாடுகளிலும் அவர் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/315583

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-60.jpg?resize=750%2C375&ssl=

ஏப்ரலில் இலங்கை வரும் பிரதமர் மோடி.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு இது தொட்பில் செய்தி வெளியிட்டுள்ள வியோன் செய்திச் சேவை, இந்தப் பயணம் இன்னும் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும், 2025 ஏப்ரல் 5 ஆம் திகதியளவில் விஜயம் அமையலாம் என்றும் கூறியுள்ளது.

இந்தப் பயணத்திற்கான அழைப்பை ஜனாதிபதி அநுர குமார திஸாநநாயக்க 2024 டிசம்பர் நடுப்பகுதியில் புது டெல்லிக்கு இரண்டு நாள் பயணமாக மேற்கொண்டபோது விடுத்தார்.

2024 செப்டம்பரில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அநுரகுமார திஸாநாயக்க மேற்கொண்ட முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இந்த விஜயத்தின் போது, இந்திய அரசாங்கம் ஏழு முடிக்கப்பட்ட கடன் திட்டங்களுக்கான 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியங்களாக மாற்றுவதாக அறிவித்தது.

இது இலங்கையின் கடன் சுமையைக் குறைக்கிறது.

2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது கொழும்புக்கு டெல்லி வழங்கிய 4 பில்லியன் டொலர் ஆதரவை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஈடுபாடு அதிகரித்து வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்திய நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் தனது பிரதேசத்தைப் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று இலங்கை ஜனாதிபதி இந்த விஜயத்தில் உறுதியளித்தார்.

இது இந்தியப் பிரதமர் மோடியின் முதல் இலங்கை வருகை அல்ல.

அவர் இதற்கு முன்பு 2015, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் பல முறை தீவு நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு இந்தியப் பிரதமரின் முதல் இருதரப்பு பயணமான 2015 ஆம் ஆண்டு வருகை, உறவுகளை வலுப்படுத்துவதற்கான முக்கிய அறிவிப்புகளையும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாண மாகாணத்திற்கு விஜயம் செய்வதையும் கண்டது.

2017 மே மாதம் இலங்கை நடத்திய முதல் சர்வதேச வெசாக் தினத்திற்கு அவர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

2019 ஆம் ஆண்டில், ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், மோடி இலங்கையில் ஒரு குறுகிய கால பயணத்தை மேற்கொண்டார்.

அந்த துயரத்திற்குப் பிறகு அங்கு சென்ற முதல் உலகத் தலைவர் ஆனார், நெருக்கடியான நேரத்தில் இலங்கையுடன் ஒற்றுமையைக் காட்டினார்.

இரு நாடுகளுக்கு இடையிலான இணைப்புத் துறையில், இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னர் இடையே ஒரு புதிய படகுப் பாதையை அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

நாகப்பட்டினத்தை திருகோணமலையுடன் இணைக்கும் பல்துறை பெட்ரோலிய குழாய் பாதையை அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இதில் இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) முக்கிய பங்கு வகிக்கிறது.

2024 பெப்ரவரியில் மொரிஷியஸுடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு UPI ஐ ஏற்றுக்கொள்வதில் இந்தியா இலங்கைக்கு உதவி வருகிறது.

இது குறிப்பாக இலங்கையில் உள்ள இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகங்களுக்கு எல்லை தாண்டிய கட்டணங்களை மேம்படுத்துகிறது.

https://athavannews.com/2025/1424123

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மோடி ஏப்ரல் 4 இலங்கை வருகிறார்

09 Mar, 2025 | 08:59 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கொழும்பில் சந்திக்க உள்ளதுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து டெல்லி தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி பிற்பகல் அவர் கொழும்புக்கு வரவுள்ளார்.

இதேவேளை பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பை உறுதி செய்யும் வகையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கடந்த வியாழக்கிழமை ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

இதன் போது, பிரதமர் மோடியின் இலங்கை விஜயம், கொழும்பு சந்திப்புகள் மற்றும் இலங்கையில் அவர் செல்விருக்கும் இடங்கள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், ரணில் விக்கிரமசிங்கவின் ஊடக செயலாளருமான தினித் சிந்தக குறிப்பிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமத நிலை குறித்தும் இதன் போது பேசப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் இலங்கை விஜயம் இதுவல்ல. இதற்கு முன்பு 2015, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவரின் முதல் இருதரப்பு விஜயமாக 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் அமைந்திருந்தது. இந்த விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான முக்கிய அறிவிப்புகள் மாத்திரமன்றி, யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.  

அத்துடன் 2017 ஆம் ஆண்டு மே மாதம், இலங்கை நடத்திய சர்வதேச வெசாக் தினத்திற்கு பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். மேலும் 2019 ஆம் ஆண்டில்,  இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்களுக்கு பிறகு, இலங்கைக்குச் சென்ற முதல் உலகத் தலைவராக பிரதமர் மோடி கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார்.  

இவ்வாறானதொரு நிலையில் இருதரப்பு இணைப்பு திட்டங்கள் உட்பட  இலங்கை - இந்திய உறவில் பல தூண்கள் உள்ளன. இதில் முதன்மையான இணைப்பு திட்டமாக இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய படகுப் பாதை திட்டம் உள்ளது.

அதே போன்று நாகப்பட்டினத்தை திருகோணமலையுடன் இணைக்கும் பல்துறை பெட்ரோலிய குழாய் திட்டமும் உள்ளது. ஆனால்  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான கூட்டு ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தொடர் இழுபறி நிலைகள் நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன.  

குறிப்பாக ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பல விடயங்களில் ஏற்பட்டுள்ள தாமத நிலை குறித்து டெல்லி அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே 2023 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்து கொழும்பு சந்திப்புகளில் பிரதமர் மோடி அவதானம் செலுத்த உள்ளார். இதேவேளை, அநுராதபுரம் மகாபோதி  மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களுக்கும் பிரதமர் மோடி விஜயம் செய்யவுள்ளார்.

அத்துடன் முந்தைய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார வழித்தடத்தின் ஊடாக 6 ரில்லியன் டொலர்  ஏற்றுமதி மற்றும் சுற்றுலா உட்பட பல துறைகளை சார்ந்த பொருளாதார நன்மைகள் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார். இந்த விடயத்தை அண்மைய டெல்லி விஜயத்தின் போது ரணில் விக்கிரமசிங்க நினைவுக் கூர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/208658

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images-2-4.jpg?resize=300%2C168&ssl=1

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை உறுதிபடுத்தினார் ஜனாதிபதி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் தேதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வரவு- செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கும் நிகழ்விலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் எனவும் ஜனாதிபதி, கூறியுள்ளார்.

https://athavannews.com/2025/1426101

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பிரதமர் ஏப்ரல் 4 இலங்கை வருகிறார் – 6 வரையில் தங்கியிருப்பார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 04 முதல் 06 வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மோடி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இந்தியப் பிரதமர் அனுராதபுரத்திற்குச் சென்று புனித ஸ்ரீ மகா போதியில் வழிபாடு நடத்த உள்ளார். மேலும், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார்.

இந்தப் பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.samakalam.com/இந்தியப்-பிரதமர்-ஏப்ரல்-4/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1742564624-modi-akd.jpg?resize=650%2C375

நரேந்திர மோடியின் இலங்கை வருகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்பதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் தங்கியிருக்கும் போது, பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்தில் உள்ள ஜெயகிரக மகா போதிக்கு வழிபாடு நடத்துவார் என்றும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நாட்டில் செயல்படுத்தப்படும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாறிக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் இந்திய வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவு செயலாளர் மற்றும் இந்திய அரசாங்கத்தின் பல மூத்த அதிகாரிகள் இந்தியப் பிரதமருடன் இந்தப் பயணத்தில் பங்கேற்க உள்ளனர் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1426735

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

pm-modi-dissanayake-16101471-16x9_0-1.we

மோடியின் விஜயத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது 1987ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையின் தலையீட்டுக்கு பின்னர் கைச்சாத்திடப்படும் முதலாவது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தமாகும் என இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் முயற்சிகள் தொடர்பான உடன்படிக்கையும் இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கைச்சாத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இலங்கை விஜயத்தின் போது பாதுகாப்பு, வலுசக்தி, உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

https://athavannews.com/2025/1426799

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

487327787_1073447281486910_3446812763824

  • கருத்துக்கள உறவுகள்

மோடியை காப்பாற்றுவது எமது நோக்கம் அல்ல!

294897334.jpeg

எமது நோக்கம் இந்தியாவைக் காப்பாற்றுவதோ அல்லது மோடியைக் காப்பாற்றுவதோ அல்ல என்று அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வுக்குப் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரின் வருகை குறித்த கேள்விக்கு மேலும் பதிலளித்த அவர்,

மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி, இந்தியப் பிரதமருடன் உரையாடலை மேற்கொள்ளவுள்ளார் என்றார்.

இந்தியப் பிரதமரின் வருகை வெறுமனே மீனவர் பிரச்சினைக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தியாவுக்கும் எமக்கும் எந்தவித பகையும் இல்லை. இந்திய மீனவர்களுக்கும் எமக்கும் எந்தவித கோபமும் இல்லை.

இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட ட்ரோலர்களைப் பயன்படுத்தி உங்களது கடற்பரப்பில் செயல்படுவது சரியான வேலை அல்ல.

வடக்கில் உள்ள கடற்பரப்பை முற்றாக அழித்து ஒழிக்கும் நடவடிக்கையையே அவர்கள் மேற்கொள்கின்றனர். இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், இன்னும் பத்து முதல் பதினைந்து ஆண்டுகளில் கடல் பாலைவனமாக மாறுவதைத் தவிர்க்க முடியாது. இதனை யாரும் அனுமதிக்க முடியாது.

எனது வேலை இந்திய அரசாங்கத்தைப் பாதுகாப்பதோ, இந்தியத் தூதுவரைப் பாதுகாப்பதோ, இந்தியப் பிரதமரைப் பாதுகாப்பதோ அல்ல. எமது மீனவர்களைப் பாதுகாப்பதே எனது பணி. அந்த வேலையை நான் சரியாகச் செய்கிறேன் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்."

https://newuthayan.com/article/மோடியை_காப்பாற்றுவது_எமது_நோக்கம்_அல்ல!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

487477088_660064296432786_89743777642768

இந்தியப் பிரதமரை சந்திக்க அனுமதி பெற்றவர்கள்..

1. இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி சார்பாக.. பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பதில் செயலாளர் சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாணக்கியன்.

2. அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் சார்பாக கஜேந்திரகுமார் பா.உ

3. ஜனநாய தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக செல்வம் அடைக்கலநாதன் பா.உ

4. ஏனைய பங்காளிக்கட்சிகள் சார்பாக யாராவது ஒருவர்.

இந்த ஏழு பேரும் சந்திக்க இந்திய தூதரகம் அனுமதி வழங்கியுள்ளது. கட்சிகளே பெயர்களை வழங்கின..

பிரதேசவாதம் இல்லை என நாம் சொல்லியே ஆகவேண்டும் ஆனால் இந்த ஏழுபேரில் திருகோணமலை, அம்பாறை முற்றாக புறக்கணிப்பு மட்டக்களப்பில் மட்டும் ஒருவர்.

மொத்தமாக ஏழு பிரதிநிதிகளில் ஒருவர் மட்டும் கிழக்கை சேர்ந்தவர். இந்த தவறை தொடர்ந்து தமிழரசுக்கட்சி உட்பட தமிழ்தேசிய கட்சிகள் விடுகின்றன என்பதை சுட்டிக்காட்டவேண்டும்.

இது பிரதேசவாதத்தை தூண்டும் கருத்தாக யாரும் பார்க்க வேண்டாம், பிரதேசவாதத்தை முறியடிக்கும் பதிவாகவே நான் இதனை பதிவிடுகிறேன்.

கடந்த பொதுத்தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் இருந்து ஐந்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள் என்பது உண்மை.

இந்தியப்பிரதமரை சந்திப்பதால் ஏதும் நன்மை வரும் என்பது இல்லை. ஒரு செய்தியும், ஒரு படமும் பார்கலாம். மக்களால் தெரிவு செய்யப்படாத தமிழரசுக்கட்சி பதில் தலைவர், பதில் செயலாளருக்கு பதிலாக கிழக்கில் இருந்து இன்னும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை அழைத்திருக்க வேண்டும் என்பது மக்களின் கருத்து.

Malaravan Uthayaseelan

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.