Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் இழந்து விட்ட பொக்கிஷங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய மொழிகளுடன் ஒப்பிடும் போது தமிழ் இலக்கியம் மகா சமுத்திரம் போன்று காட்சியளிப்பதைக் காணலாம். அதன் தொன்மையில், அதன் வண்மையில் அதன் அகலத்தில் அன்றும், இன்றும், என்றும் முதலிடம் வகிப்பது தமிழ் இலக்கியமே என்பதை யாரும் மறுக்க முடியாது. சங்ககால இலக்கியங்கள், சங்கமருவியகால இலக்கியங்கள், பல்வர் கால, சோழர்கால இலக்கியங்கள், பிற்காலச் சிற்றிலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஐம்பெருங் காப்பியங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும் என்ன இந்த ஆழ்ந்தகன்ற சமுத்திரத்தில் ஒரு துளியாவது நம்மவர்கள் அறிவார்களா? பழங்காலத் தமிழ் அறிஞர்களைப் போல இக்காலப் பல்கலைக்கழகப் படைப்பாளிகள் நமது தமிழ் இலக்கியம் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது நிதர்சன உண்மை.

பழந்தமிழ் இலக்கியம் பற்றிப் பேசும் போது சங்ககால நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, நூல்களும், சங்கமருவிய காலத்து பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களும் மட்டுமே நாம் அறிந்தவை.

ஆனால் இத்தொகுப்பினுள் அடங்காது மறைந்து போன ஏராளமான நூல்கள் பற்றி உரையாசிரியர்கள் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு உரையாசிரியர்கள் குறிப்பிட்ட நூல்கள் எப்படியும் 500க்கு மேற்படவேண்டும். ஏன் அதற்கு மேலும் இருக்கலாம்.

இவ்வாறு மறைந்து போன தமிழ் நூல்கள் பற்றிய விபரங்களைத் தேடிப் பொறுக்கி ஒரு நூலாகவே ஒருவர் பெயர் வெளியிட்டிருக்கின்றார். அவர் மயிலை சீனி. வெங்கடசாமி இந்நூல் "மறைந்து போன தமிழ் நூல்கள்" என்ற தலைப்பில் 1998ல் மூன்றாம் பதிப்பாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள சில விபரங்கள் வருமாறு:-

மறைந்து போன தமிழ் நூல்களின் விபரங்களை அவர் பின்வருமாறு தொகுத்துள்ளார் அவை:-

1. அகப் பொருள் பற்றிய இலக்கிய நூல்கள் - 45

2. புறப்பொருள் பற்றிய இலக்கிய நூல்கள் - 44

3. காவிய நூல்கள் (இலக்கியம்) - 48

4. ஏனைய இலக்கிய நூல்கள் - 46

5. இசைத்தமிழ் நூல்கள் - 13

6. நாடகத் தமிழ் நூல்கள் - 29

7. இலக்கண நூல்கள் - 108

மொத்தம் - 333

இவை தவிரப் பெயர் தெரியாத நூல்கள் பலவும் குறிப்பிடப்படுகின்றன. மறைந்து போன இந்த நூல்களிலிருந்து உரையாசிரியர்கள் மேற்கோளாக எடுத்துக் கொள்ள வேண்டிய பகுதிகளும் இந்நூலில் அடங்குகின்றன. அவற்றைப் பார்;க்கும் போது அடடா முழு நூலையும் படிக்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போய் விட்டதே" என்று மனம் அங்கலாய்க்கின்றது.

இக்கணக்கில் இலக்கண நூல்கள் 108 என்பதைப் பார்க்கும் போது இலக்கிய நூல்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்க வேண்டும் என ஊகிக்க முடிகின்றது. நூல்கள் 28 இக்கணக்கில் சேருகின்றன. சுவாமி விபுலானந்தரின் "மதங்க சூளாமணி"யில் குறிப்பிடப்படும் நாடக இலக்கண நூல்களைப் பற்றிப் படிக்கும் போது நாடக நூல்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்க வேண்டுமென ஊகிக்க முடிகின்றது. இந்நூலில் ஆசிரியர் மயிலை சீனி வெங்கடசாமி பின்வருமாறு கூறுகின்றார்.

"...இது மறைந்து போன நூல்களின் முழுத் தொகுப்பல்ல. இதில் விடுபட்ட நூல்களும் உள்ளன. அவற்றைப் பிறகு எழுதித் தொகுக்கும் எண்ணம் உடையேன்" அந்த இரண்டாவது தொகுப்பு நூல் வெளிவந்ததோ இல்லையோ நாம் அறிவோம். ஆனாலும் இவ்விலக்கியத்தை நெஞ்சம் சுமக்கிறது. என்ன செய்வது நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.

தவறிப் போன சங்கப் பாடல்கள்:-

சங்ககாலத்தில் உருவான ஆயிரக்கணக்கான நூல்களில், கடற்கோளில் அழிந்தவை போக எஞ்சிய நூல்கள் பத்துப்பாட்டு எட்டுத் தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். இவ்வாறு தொகுக்கப்பட்ட நூல்களிலும் ஒரு சில பாடல்கள் காணாமற் போய்விட்டன. அது பற்றிய விபரம் வருமாறு:-

1.புறநானூறு:-

இதில் மொத்தம் 400 பாடல்கள் உள்ளன. இவற்றுள் 267,268 எண்ணுள்ள செய்யுள்கள் முழுதாகக் கிடைக்கவில்லை. ஏனைய 282,283,285,287,290 298 ஆகிய செய்யுள்களில் சில சொற்கள் தவறிவிட்டன.

2. முத்தொள்ளாயிரம் :-

இந்நூலில் தலைப்புக்கேற்ப, 900 செய்யுள்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். (சேர சோழ, பாண்டியர் பேரில் இந்நூல் இயற்றப் பெற்றது) ஆனாலும் தற்போது தொகுக்கப்பட்ட நூலி;ல் 110 செய்யுட்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன.

3. உதயணன் கதை:- இந்நூலில் உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம், என்னும் 5 காண்டங்கள் உள்ளன. இதில் முதலாவது உஞ்சை காண்டத்தில் 31 காதைகள் இல்லை. மகத காண்டத்தில் 10ம் கததையில் சில அடிகள் இல்லை. 11ம் காதை முழுவதும் 12ம் காதையின்

4. பரிபாடல்:- இந்நூலில் 70 செய்யுள்கள் இருந்திருக்க வேண்டும். மேற்கோள் ஆசிரியர்கள் அவ்வாறே குறிப்பிடுகின்றனர். அ+னால் இப்போது தொகுக்கப்பட்டுள்ளவை 24பாடல்கள் மட்டுமே!

5. நற்றிணை:-

எட்டுத்தொகை நூல்களுள் இதுவுமொன்று இது 400 செய்யுளைக் கொண்டது. இதில் 234ம் -385ம் செய்யுள்கள் சிதைவடைந்துள்ளன. 234ம் செய்யுள் முழுவதுமில்லை.

6.பதிற்றுப் பத்து:-

எட்டுத் தொகை நூல்களுள் இதுவும் ஒன்று. இதில் முதலாவது பத்துக்குரிய செய்யுள்களும் 10ம்பத்துக்குரிய செய்யுள்களும் காணப்படவில்லை. சங்கத் தொகை நூல்களில் இடம் பெறாது வேறு பல நூல்களிலும் இவ்வாறு பாடல்கள் தவறிப்போயுள்ளன.

1. நீலகேசி:- இந்த நூலில் வேதவாதச் சருக்கத்தில், 22 முதல் 29 வரையுள்ள 8 செய்யுள்கள் அகப்படவில்லை.

2. பரதசேவைதீயம்:-

இந்த நூலின் பாயிரச் செய்யுள்கள் மட்டும் தான் கிடைத்துள்ளனவாம். நூல் முழுவதும் கிடைக்கவில்லை. ஆனாலும் இந்நூலில் இந்த அளவில் டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய வெளியீடாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3. பாரத வெண்பா:-

இந்நூல் உத்தியோக பருவம், வீடு பருவம,; துரோணபருவம், என்னும் மூன்று பருவங்களை உடையது. துரோண பருவத்தில் 13ம் நாட்போர் வரையிலும் செய்யுள்கள் உள்ளன. பிற்பகுதிச் செய்யுள்கள் கிடைக்கவில்லை. வேறு சில பகுதிகளும் கிடைக்கவில்லை. மறைந்த நூல்கள் போலவே மறைந்த செய்யுள்களும் பொக்கிஷங்கள் போன்றவை. ஆனால் இவை பற்றி எல்லாம் நம்மவருக்குத் தெரியாது. தெரிந்து தான் என்ன பிரயோசனம்? ஆனாலும் இத்தகைய தகவல்களை சேகரித்துத் தந்த அன்பரை நாம் மறக்கமுடியாதல்லவா? அவர் தான் பிரபல ஆய்வாளர் மயிலை சீனிவெங்கடசாமி.

"மறைந்து போன தமிழ் நூல்கள்" என்ற நூலில் இவ்விலக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. உண்மையில் தொகுக்கப்பட்ட பாடல்களை விட கறையான் அரித்து அழிந்துபோன பாடல்கள் ஏராளம். இவ்வாறு அழிந்து போன பாடல்கள் பற்றியும் ஒரு சில மேற்கோள் செய்யுள்களைக் கொண்டு அறிந்து கொள்ள முடிகின்றது. அவற்றின் விபரம் வருமாறு:-

அப்பர் பாடிய பதிகங்கள் 49,000 எனக் குறிப்பிடப்படுகின்றது. பாடல்வருமாறு:-

"குருநாம்ப பரஞ்சுடரைப் பரவிச் சூலைக் கொடுங் கடற் கரையினவென்ன வெடுத்துக் கோதில் ஒரு மானைத் தரிக்குமொரு வரையும் கானும் ஒரு நாற்பத்தொன் பதிணாயிரம தரிகம்" இந்த 49,000 பதிகங்களில் தொகுக்கப்பட்டவை 307 பதிகங்கள் தானாம்.

2. திருஞான சம்பந்தர் பாடிய பதிகங்கள் 16,000 எனக் குறிப்பிடப்படுகின்றது. பாடல் வருமாறு:-

"தோடுடைய செவியன் முதற் கல்லூரென்னும் தொடை முடிவாய் பரசமயத் தொகைக் கண் மாயப்

பாடினார் பதிகங்கள் பாவிலொன்றும்

பதினாறாயிரமுறை நாம் பகருமன்றே"

இந்தப் 16,000 பதிகங்களில் 384 பதிகங்களே தொகுக்கப்பட்டன.

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பதிகங்கள் 38,000 எனக் குறிப்பிடப்படுகின்றது. பாடல் வருமாறு:-

"பின்பு சில நாளின் கண் ஆரூர் நம்பி பிறங்கு திரு வெண்ணை நல்லூர்ப் பித்தா எனும் இன்பமுதல் திருப்பதிகம் ஊழி தோறும் ஈறாய் முப்பத் தொண்ணாயிரமாதாகும்"

இந்து 38,000 பதிகங்களுள் தொகுக்கப்பட்டவை 100 பதிகங்களே இவ்விபரங்கள் திருமுறை கண்ட புராணம் என்னும் நூலில் காணப்படுகின்றது. இவ்வாறு 100 பதிகங்களுக்கு மேல் கரையான் அரித்தும் தின்று விட்டன. இந்துக்களின் அசமந்த்ப் போக்கை எண்ணித்ததான் இறைவன் நம்மிடமிருந்து பறித்துக் கறையானுக்குக் கொடுத்தரோ!

http://www.battieezhanatham.com/weeklymatt...0/anpumani.html

  • கருத்துக்கள உறவுகள்

இவையெல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை. அப்பவே எவ்வளவு அற்புதமான விடயங்களைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது. :rolleyes::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.