Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

சத்தம் இல்லாத தனிமை வேண்டாம்…..

அப்ப எங்களுக்கெல்லாம் நேரம் பாக்க மணிக்கூடு தேவையில்லை. காது இருந்தாச் சரி அதிலேம் பாம்புக் காதெண்டா விசேசம். பாம்புக்கு காதில்லாமல் எப்பிடி அதிர்வுகள், உணர்வுகள் மூலம் கேக்குதோ அப்பிடித் தான் எங்கடை சனத்துக்கும் சத்தம் இல்லாமலே எல்லாம் கேக்கும்.

“சின்னவா ஆறு மணி ஆகீட்டு”எண்டு அம்மா கூப்பிட்டா அது அரை மைலுக்க எங்க இருந்தாலும் கேக்கும், இல்லாட்டியும் கேக்கிறமாதிரி இருக்கும். கேட்ட உடனயே அடுத்து வரி “சாமி கும்பிடோணும் விளையாடினது காணும்” எண்டு சொல்லேக்க கிணத்தடீல நிப்பம். 

விடிய நாலரை, ஐஞ்சு எண்டு நேரம் மாறமல் அடிக்கிற கோயில் மணி அவையவையின்டை தேவைக்கு ஏத்த மாதிரி எழுப்பி விடும். காலமைக் கோயில்களின்டை மணியடிக்கிற ஐயர் என்னெண்டு தான் ஆரும் எழுப்பாமல் மணிக்கூடும் இல்லாமல் விடிய எழும்பிறாரோ எண்டு யோசிக்க வைக்கும். ஊரில இருந்து கொஞ்சந் தள்ளி ஏதோ ஒரு கோயில் “விநாயகனைக் கூப்பிட்டு வெவ்வினையை வேரோட அறுக்கிற” சீர்காழீன்டை பாட்டு அறைக்குள்ள இறுக்கி மூடிக்கொண்டு படுத்தாலும் இதமா எழுப்பிவிடும். 

இந்த இடைவெளீக்க பக்கத்து வீட்டை கரப்பைக்கால கலைச்சு விடகொக்கரிக்கிற அடைக்கோழீன்டை சத்தம், பாலுக்கு அவிட்டு விடாம தானே முழுப் பாலையும் கறக்கிற வேலுச்சாமியோட சண்டைக்குப் போற கண்டுக்குட்டி கத்திற சத்தம், வேப்பம் பழம் சாப்பிட்டு தொண்டை கட்டிக் கீச்சிடிற கிளீன்டை சத்தம், தண்ணி தெளிக்காம முத்தத்தைக் கூட்டேக்க புழுதி மணத்தோட வாற சத்தம், எண்ணை விடாத கப்பீல மாசிலாமணியார் தண்ணி இழுத்துக் குளிக்கிற சத்தம் எல்லாம் snooze பண்ணின alarm மாதிரித் தொடந்து எழுப்பிக் கொண்டே இருக்கும். இதையெல்லாம் கேக்காமல் படுத்தாலும் அம்மாவின்டை குரல் எப்பிடியும் எழுப்பி விட்டிடும். 

விடிஞ்சு கொஞ்சம் வெளிக்கத் தொடங்கப் பக்கத்து ஒழுங்கேக்க “டிங் டிங்”எண்டு சைக்கிள் மணி அடிக்கிற பால்க்காரனுக்கு இங்க செம்பு கழுவி ரெடியாகி, அந்த இடைவெளீக்க குப்பைக் காரனின்டை டிரக்டர் சத்தத்துக்கு குப்பை வாளியை ஒழுங்கை முடக்கில வைச்சிட்டு , அவன் குப்பையை மட்டும் தான் எடுத்துக் கொண்டு போறான் எண்டதைக் confirm பண்ணீட்டு இருக்க ஐஞ்சு மணிக்கு வந்திருக்க வேண்டிய வாற மெயில் ரெயின் பிந்தி அரசடி ரோட்டை தாண்டிப் போறது கேக்கும். 

கொஞ்சம் கொஞ்சமாப் பள்ளிக்கூடக் கெடுபிடிச் சத்தமெல்லாம் எட்டு மணிக்கு அடங்க ஒவ்வொரு மீன்காரனா horn அடிக்க எங்கடை மீன்காரன் அடிக்கிறது பிறிம்பாக் கேக்கும். 

எத்தினை சைக்கிள் போனாலும் தபால்க்காரன்டை சைக்கிள் மணி தனியாத் தெரியும், அதுகும் அம்மம்மாவுக்கு பென்சன் வாற நாளில இன்னும் பிலத்தாக் கேக்கும். அப்பப்ப புளியும், ராசவள்ளிக்கிழங்கும், சின்ன வெங்காயமும் கொண்டந்து ரோட்டில கூவி விக்கிற சித்திரம், வருசத்துக்கு ரெண்டு தரம் மூண்டு தரம் எண்டு சுத்தித் திரியிற கூட்டத்தில கத்தி சாணை, அம்மி பொழியிறவன், பழைய போத்தில், பேப்பர் வாங்கிறவன், எப்பாவது சீவப் போகாமல் தேங்காய் புடுங்க, ஓலை வெட்டிறதுக்கு வாறவன் எண்டு கத்திக்கொண்டு எவன் ஒழுங்கையால போனாலும் வீட்டுக்குள்ள எங்க இருந்தாலும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். 

மத்தியானம் வேலை முடிஞ்சு அம்மா அயர்ந்திருக்க முன்வீட்டில பக்கத்துப் பள்ளிக்கூடம் முடிஞ்சு வாறவை படலை துறக்க வாற சத்தம் கேட்டு அம்மா எழும்பி வாற எங்களுக்கு முட்டை பொரிப்பா ஒரு நேரக்கணிப்போட. எல்லாம் முடிச்சுச் சாப்பிட்டிட்டு திருப்பிப் படுக்க காத்துக்கு கூரையில மாங்கொப்பு முட்டிற சத்தம் கேட்டா அடுத்த நாள் குருவிச்சையும் கொப்பும் வெட்ட ஆளைக் கூப்பிட்டிட்டுவா. கொஞ்சம் அயரேக்க வெத்திலைக்கு சுண்ணாம்பு, இண்டையான் பேப்பர், இந்தக் கதைப்புத்தகம் இருக்கா, விளயாட வாறியா எண்டு கேட்டு அரட்டைக்கு வந்து படலைக்க நிண்டு கூப்பிடறவின்டை சத்தம், மற்றாக்களின்டை நித்திரையைக் குழப்பாமல் தேவையான ஆளை மட்டும் எழுப்பும். 

அக்கம் பக்கம் நடக்கிற சண்டை அப்பப்ப காத்தோட கேக்கும். ஒரு வீட்டுச் சண்டை மற்ற வீட்டை தெளிவாக் கேக்காட்டியும் சண்டை பிடிச்ச ஆக்கள், நடந்த நேரம், அப்பப்ப காத்தில வந்து போன அவளின்டை, அவன்டை பேருகளை வைச்சும், போனமுறை வந்த சண்டையை வைச்சும் என்ன பிரச்சினையாம் எண்டு வெத்திலை வாங்க வந்த gapஇல அலசிப் பிடிச்சிடுவினம்.

கலாஜோதி கலையரங்கத்தில நடக்கிற பட்டிமன்றத்தையும், அரசியல் நிகழ்வுகளையும் வீட்டை இருந்தே கேட்டு தீர்ப்புச் சொல்லிறாக்களும் இருந்தவை . அதே போல கோயில்த் திருவிழாக் காலத்தில எல்லாரும் ஒண்டா அந்தரப்பட்டுப் போகத் தேவேல்லை. ஆய்த்த மணி கேட்டு அம்மம்மா போக, அபிசேக மணிக்கு அம்மாவும் தம்பியும் போக, கொடி மரப் பூசை மணிக்கு நாங்கள் வெளிக்கிட்டு சரி இனி வசந்தமண்டபப் பூசை சாமி தூக்கச் சரியா இருக்கும் எண்டு கணிச்சுப் போறனாங்கள்.

இரவில தூரத்தில வாற ஐஷ்கிறீம் வானின்டை பாட்டும், மணத்தோட வாற கரம் சுண்டல் வண்டிலின்டை மணியும் main road ஆல போகும். சத்தத்தை வைச்சு தூர நேரம் பாத்து சரியா ஒழுங்கை முடக்குக்குப் போவம் நாங்கள். 

இரவு படுத்தாப் பிறகு முகட்டில தலைகீழா நிண்ட படி திண்ட பூச்சி சமிக்காம பல்லி உச்சுக்கொட்ட , கதவில மூண்டு தரம் தட்டீட்டு அப்ப தான் நெச்சதுக்கு தடையில்லை, நாளைக்கு போட்டு வரலாம் எண்டிற மாமா, உழுந்து மணம் மணக்குது பாம்புக் கொட்டாவியா இருக்கும் பாத்துப் பின்பக்கம் போ கண்டு பிடிச்சு சொல்லிற ஆச்சி, படுத்தாப் பிறகு நித்திரையில இரவில குசினீக்க வந்தது ஆர் வீட்டுப் பூனை, நேற்றை முழுக்க குலைச்சது எந்த வீட்டு நாய், ரோட்டில குலைக்கிற நாய் பழக்கமான ஆளுக்கு குலைக்குதா இல்லாட்டி ஆமிக்கோ குலைக்குதா, கிறீச் கிறீச் எண்டு இரவு late ஆ ஓடிற சைக்கிள் ஆர்டை, சாமத்தில வேலிக்கு வேலி தட்டித் தடவிப் பாட்டோட போனது அமரசிங்கமா, தளையசிங்கமா எண்டு துப்பறிஞ்சு சொல்லிற அம்மம்மா எண்டு எல்லாருக்கும் ஐம்புலனிலும் செவிப்புலன் அதிகமா வேலை செய்யும். 

எண்பதுகளின் நடுப்பகுதி, இரவில திரியிறது கள்ளனா குள்ளனா எண்டு சனம் பயந்திருந்த காலம் அப்ப. “ஐயோ கள்ளன்” எண்டு தூர எங்கயாவது கேட்டா தகரம் தட்டி, தடி எடுத்து, கோயில் மணி அடிச்சு, ஊரே கள்ளனைத் தேடி, ஓடிறான் எண்டு பின்னால ஓடிப் பிடிக்கப் போய் களைச்சு வாறவைக்குப் பிளேன்ரீ குடுத்து போன கள்ளன் திருப்பி வாறானா எண்டு விடியவிடியப் படுக்ககாமலே பாத்திட்டு அப்பிடியே பள்ளிக்கூடம் போறனாங்கள்.

இதுக்கு எல்லாம் மேலால என்டை மனிசி புலுமைச் சிலந்தி expert , “ இங்கயப்பா சிலந்தி சத்தம் போடுது” எண்டு என்னை அடிக்கடி எழுப்பிறது பயத்திலயா இல்லை அது உண்மையா சத்தம் போடிறது கேக்கிறதா எண்டு தெரியாது. 

எங்கடை சனம் இதில expert ஆகித் தான் பிறகு கோட்டைக்க செல் குத்திக் கேக்கிற சத்தத்தில alert ஆகி சைரன் போட்டுச் சனத்தைக் காப்பாத்தினவை . பொம்மர் சுத்த வாற சத்தத்துக்கு எந்தக் campக்கு அடி விழும் எண்டு தெரியும் , அதுகும் இந்தா குத்திறான், இந்தா போட்டிட்டான் எண்டு கண்டுபிடிச்சு வெடிக்கமுதலே பங்கருக்க போய் safeஆ இருந்து , சரியா நேரம் பாத்து அவன் போகவிட்டு எழும்பி வாறனாங்கள். அம்மாமார், எத்தினைமணிக்கு எவ்வளவு தூரத்திலேம் துவக்குச் சூடு கேட்டால் ரெண்டாவது சூட்டுக்கே எழும்பி இருந்துடுவினம். இப்பிடி கதைக்கிறதைக் கேட்டு, குண்டுச் சத்தத்தைக் கேட்டு , வாகனச் சத்தத்தைக் கேட்டு , பிள்ளை பிடிக்கவாறவனோட சத்தம் போட்டு சண்டை பிடிச்சு எண்டு சண்டைக்கால தப்பினது சத்தத்தால தான். 

சத்தத்துக்குள்ள சத்தமா வாழ்ந்திட்டு இப்ப என்னெண்டா வீட்டுக்குள்ளயே கூப்பிடிற சத்தம் கேக்காம, calling bell அடிக்கிறது உணராம, மழை பெய்யிறது தெரியாம, இருட்டினதும் விடிஞ்சதும் அறியாம சத்தமே இல்லாமல் இருக்கிறம். அக்கம் பக்கத்தில வீட்டிலயோ இல்லாட்டி ரோட்டிலயோ ஏதாவது சத்தம் கேட்டா இங்க light off பண்ணிப் போட்டுப் படுத்திடுறம். அது பயமா இல்லை சுய நலமா எண்டு தெரியேல்லை. 

இந்தச் சத்தம் இல்லாத தனிமை நெச்சும் பாக்கேலாத கொடுமை. 

Dr. T. கோபிசங்கர்

யாழப்பாணம்

  • நிழலி changed the title to சத்தம் இல்லாத தனிமை வேண்டாம்…..- T. கோபிசங்கர், யாழ்ப்பாணம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.