Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   04 FEB, 2025 | 03:35 PM

image
 

அவுஸ்திரேலியாவில் இன்று (4) இடம்பெற்ற தமிழர் ஒடுக்குமுறை தின பேரணியின் பின்னர் இனப்படுகொலை அறிக்கையொன்று அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

475937879_1055263826642620_6343370270497

தமிழ் ஏதிலிகள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று தமிழர் ஒடுக்குமுறை நாள் பேரணி இடம்பெற்றது.

ஈழ தமிழ் மக்களிற்கு எதிரான 77 வருட இனப்படுகொலையை நினைவுகூறும் வகையில் இன்று அவுஸ்திரேலியாவின் கான்பெராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே தமிழர் ஒடுக்குமுறை தின பேரணி இடம்பெற்றது.

476059100_1055260746642928_2219616627666

இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு நீதி பொறுப்புக்கூறலை கோரியதுடன்; இலங்கை அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்தும் ஒடுக்குமுறையை அனுபவிக்கும் தமிழ் அகதிகளிற்கு பாதுகாப்பை கோரினார்கள்.475899884_1055263833309286_5129069047442

இந்த பேரணியின் பின்னர் அதில் கலந்துகொண்டவர்கள் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குள் சென்று ஈழ தமிழர்களிற்கு எதிராக திட்டமிட்ட முறையில் இனப்படுகொலை முன்னெடுக்கப்படுவதை வெளிப்படுத்தும் ஆவணத்தை அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.476073104_1055262056642797_5088861594107

தமிழர் ஏதிலிகள் பேரவையால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணம் இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான திட்டமிடப்பட்ட இனப்படுகொலை குறித்து தெளிவான பல விடயங்களை உள்ளடக்கியுள்ளதுடன் ஏன் தமிழ அகதிகளை திருப்பி அனுப்புவது ஆபத்தானது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.476157176_1055262803309389_3231806094630

இலங்கையின் தசாப்தகால யுத்த குற்றங்கள், பலவந்தமாக காணாமல்போகச்செய்தல், இராணுவ ஆக்கிரமிப்புகள் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை துல்லியமாக பதிவு செய்துள்ள இந்த ஆவணம் இலங்கை அரசாங்கத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றது.

https://www.virakesari.lk/article/205788

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.