Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்வீடன் கல்வி மையத்தில் துப்பாக்கி சூடு: 10 பேர் வரை பலி

ஸ்வீடன் நாட்டின் ஓரேப்ரோ நகரில் உள்ள ஒரு வயது வந்தோர் கல்வி மையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

ஸ்டாக்ஹோம் நகருக்கு மேற்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சம்பவ இடத்தில் பத்து பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

TV4 Nyheterna மற்றும் TT உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்கள், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், சம்பவத்திற்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கின்றன.

ஸ்வீடன் கல்வி மையத்தில் துப்பாக்கி சூடு: 5 பேர் வரை படுகாயம் | Sweden School Shooting 5 Injured

 துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு அருகிலுள்ள கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

காயமடைந்தவர்களின் காயம் எவ்வளவு தீவிரமானது என்பது இன்னும் தெரியவில்லை என்றாலும், அறிக்கைகள் ஒரு குழப்பமான சூழ்நிலையைக் குறிக்கின்றன.

ஸ்வீடன் நாளிதழான Aftonbladet, பள்ளியில் சிக்கியிருந்த ஒரு நபர் பல துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டதாகக் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஸ்வீடன் நீதி அமைச்சர் Gunnar Strommer, வன்முறையை "மிகவும் தீவிரமானது" என்று விவரித்தார்.

மேலும் அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், சட்ட அமலாக்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தினார்.
 

https://news.lankasri.com/article/sweden-school-shooting-5-injured-1738679764

  • கருத்துக்கள உறவுகள்

சுவீடன் வெகுஜன துப்பாக்கி சூடு தொடர்பான அப்டேட்!

சுவீடன் வெகுஜன துப்பாக்கி சூடு தொடர்பான அப்டேட்!

சுவீடனின் மிகக் கொடூரமான வெகுஜன துப்பாக்கிச் சூட்டின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து இன்னும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக ஸ்வீடிஷ் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட 35 வயதான நபர் ஸ்வீடிஷ் பிரஜை என்றும், அவரின் பெயர் ரிக்கார்ட் ஆண்டர்சன் (Rickard Andersson) என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Image

செவ்வாயன்று (04) தாக்குதல் நடந்த ஸ்டாக்ஹோமுக்கு மேற்கே 157 கிமீ (98 மைல்) தெலைவு நகரமான ஓரேபோவில் அமைந்துள்ள கல்வி நிலையத்தின் முன்னாள் மாணவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் தாக்குதல் நடத்தியவர் உட்பட 11 பேர் இறந்தனர், குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியுள்ளது.

இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், மற்றொரு பெண் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபராக ஆண்டர்சன் பெயரிடப்பட்ட ஊடக அறிக்கைகளை உறுதிப்படுத்த பொலிஸார் மறுத்துவிட்டனர்.

ஓரேபோ பொலிஸார் சந்தேக நபரை அடையாளம் கண்டுவிட்டதாகவும் ஆனால் “விசாரணையின் காரணமாக அவரது பெயரை இன்னும் வெளியிடவில்லை” என்றும் கூறினார்.

அவர் எப்படி இறந்தார் என்றும் அவர்கள் கூறவில்லை, ஆனால் அவர் காவல்துறையினருடன் துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என்றும் ஊடக அறிக்கைள் தெரிவிக்கின்றன.

ரிஸ்பெர்க்ஸ்கா கல்வி நிலையத்தை தாக்க துப்பாக்கிதாரி எதற்காகத் தேர்ந்தெடுத்தார் என்பது குறித்து தாங்கள் இன்னும் விசாரணை செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்வீடிஷ் செய்தித்தாள் Aftonbladet சந்தேக நபர் முன்பு கல்வி நிலையத்தில் இணைந்தார், ஆனால் 2021 முதல் வகுப்புகளுக்குச் செல்லவில்லை என்று குறிப்பிட்டது.

சந்தேக நபருக்கு தீவிரவாத கும்பல்களுடன் வெளிப்படையான தொடர்பு இல்லை என்றும், ஏனைய சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

சந்தேகநபருக்கு எதிராக முந்தைய சிறைத் தண்டனைகள் மற்றும் வழக்குகள் எதுவும் இல்லை மற்றும் அவர் சட்டப்பூர்வமாக ஆயுதம் பெற்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண கைரேகைகள், பல் பதிவுகள் மற்றும் டிஎன்ஏ ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புலம்பெயர்ந்தோருக்கான ஸ்வீடிஷ் மொழி வகுப்புகளை கல்வி நிலையம் வழங்குவதோடு, ஆரம்ப அல்லது இடைநிலைப் பள்ளியை முடிக்காத 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வயது வந்தோருக்கான கல்வி நடவடிக்கையினை ரிஸ்பெர்க்ஸ்கா மையம் முன்னெடுத்து வந்தது.

துப்பாக்கிச் சூட்டின் பின்னர், ஓரேப்ரோ குடியிருப்பாளர்கள் கல்வி நிலையத்துக்கு வெளியே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஓரேப்ரோவைச் சுற்றியுள்ள கொடிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அரசாங்க கட்டிடங்கள், நாடாளுமன்ற மற்றும் அரச மாளிகைகளிலும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Sweden mourns victims of deadliest gun attack, as details emerge about  shooter - ABC News

https://athavannews.com/2025/1420121

  • கருத்துக்கள உறவுகள்

சுவீடனில் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி

சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான கல்வி நிறுவனம் ஒன்று உள்ளது.

கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என்று அழைக்கப்படும் இந்தப் கல்வி நிறுவனம், 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறது.

இந்த கல்வி நிறுவனத்தில் தங்கி படித்து வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் பரீட்சை முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

எனினும் ஒரு சில மாணவர்கள் கல்வி நிறுவனத்தில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில் இந்த கல்வி நிறுவனத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதில் 11 பேர் பலியானார்கள். அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து அந்நாட்டு பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

https://thinakkural.lk/article/315106

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.