Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோஷித, டெய்சி ஆச்சி மீது பணச்சலவை வழக்குப் பதிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யோஷித, டெய்சி ஆச்சி மீது பணச்சலவை வழக்குப் பதிவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் 'டெய்சி ஆச்சி' என்றும் அழைக்கப்படும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோரை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாக பொலிஸார் பெயரிட்டு, பணச்சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யோஷித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் 59 மில்லியன் ரூபாய்க்கு மேல் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு அவர் மீதான விசாரணை தொடங்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார். 

பணம் எவ்வாறு வைப்பிலிடப்பட்டது என்பதற்கான நியாயமான விளக்கத்தை யோஷித வழங்கத் தவறிவிட்டார் என்று அவர் கூறினார்.

மேலும் விசாரணைகளில், கேள்விக்குரிய கணக்கு டெய்சி பொரெஸ்டுடன் இணைந்து நடத்தப்பட்டது தெரியவந்தது. இதன் விளைவாக, யோஷிதவுடன் டெய்சியையும் வழக்கில் சந்தேக நபராக சேர்க்குமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

டெய்சிக்கு ஏற்கனவே வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேக நபர்கள் மீதும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் எஸ்எஸ்பி மனதுங்க கூறினார்.
 

https://www.tamilmirror.lk/செய்திகள்/யோஷித-டெய்சி-ஆச்சி-மீது-பணச்சலவை-வழக்குப்-பதிவு/175-351725

  • கருத்துக்கள உறவுகள்

யோஷிதவின் பாட்டிக்கு பயணத் தடை!

யோஷிதவின் பாட்டிக்கு பயணத் தடை!

யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி பாரஸ்டிற்கு (Daisy Forrest) கடுவலை நீதிவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.

பணமோசடி வழக்கு மற்றும் 59 மில்லியன் ரூபாய் கூட்டுக் கணக்கு தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் விசாரணையில் யோஷித ராஜபக்ஷ நிதி தொடர்பாக திருப்திகரமான விளக்கத்தை அளிக்க முடியவில்லை எனக் கண்டறியப்பட்டதை அடுத்து, பணமோசடிச் சட்டத்தின் கீழ் இருவர் மீதும் பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

விசாரணையின்படி, டெய்சி பாரஸ்டுடன் பராமரிக்கப்படும் கூட்டுக் கணக்கு உட்பட, நிலையான வைப்புத்தொகை மற்றும் வங்கிக் கணக்குகளில் கேள்விக்குரிய நிதி வைக்கப்பட்டது.

வழக்கின் சந்தேக நபராக பாரஸ்டைப் பெயரிடுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதன் விளைவாக, பணமோசடிச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு, யோஷித ராஜபக்ஷ மற்றும் பாரஸ்ட் இருவரும் சந்தேக நபர்களாக ஞாயிற்றுக்கிழமை (11) கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முறைப்படி பெயரிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1420879

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

பணமோசடி வழக்கில் இருந்து யோஷித்த ராஜபக்ஷவின் பாட்டி டெய்சிக்கு விடுதலை

Published By: Digital Desk 3

25 Feb, 2026 | 03:54 PM

image

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து, யோஷித்த ராஜக்ஷவின் பாட்டியான டெய்சி பாரஸ்ட் என்பவரை விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது.

டெய்சி பாரஸ்ட் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், கடந்த விசாரணைகளின் போது தமது கட்சிக்காரர் வழக்கு விசாரணைகளை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி மூலம் விசேட மனநல அறிக்கை ஒன்றை பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இன்றையதினம் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த மருத்துவ அறிக்கையின்படி, பிரதிவாதி வழக்கு விசாரணைகளில் பங்கேற்கத் தேவையான மன ஆரோக்கியத்துடன் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி, அவரை வழக்கிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டார்.

சுமார் 73 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சட்டவிரோதமான முறையில் வருமானம் ஈட்டியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக, யோஷித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பாரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

டெய்சி பாரஸ்ட் விடுவிக்கப்பட்டாலும், இந்த வழக்கின் முதலாவது பிரதிவாதியான யோஷித்த ராஜபக்ஷவிற்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையின் கீழ் அவருக்கு எதிரான வழக்குத் தொடரப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/239558

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.