Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 FEB, 2025 | 05:56 PM

image

(நெவில் அன்தனி)

வல்லுநர்கள் (Masters) என விபரிக்கப்படும் புகழ்பூத்த சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் 6 அணிகளுக்கு இடையிலான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் நவி மும்பை, வடோதரா, ராய்ப்பூர் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.

1_captains_masters.png

இப் போட்டியில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாஸ்டர்ஸ் அணிகள் பங்குபற்றுகின்றன.

இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு குமார் சங்கக்கார, இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு ஷேன் வொட்சன், இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு ஒய்ன் மோர்கன், மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிக்கு ப்றயன் லாரா, தென் ஆபிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு யக் கலிஸ் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கும் இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையில் நவி மும்பை விளையாட்டரங்கில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ஆரம்பமாகவுள்ளது.

ஒவ்வொரு அணியும் ஒன்றையொன்று ஒரு தடவை லீக் சுற்றில் எதிர்த்தாடும். லீக் சுற்றில் 15 போட்டிகள் நிறைவில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

அவற்றில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் மார்ச் 16ஆம் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடும்.

2_sri_lanka_masters.jpg

3_india_masters.jpg

4_asutralia_masters.jpg

5_england_masters.jpg

6_west_indies_masters.jpg

7_south_africa_masters.jpg

8_masters_league_umpires_and_officials.j

9_sri_lanka_masters_together.jpg

10_fixtures_navi_mumbai.jpg

11_fixtures_vadodara.jpg

12_fixtures_raipur.jpg

புகழ்பூத்த சர்வதேச வீரர்களைக் கொண்ட 6 அணிகள் பங்குபற்றும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய மாஸ்டர்ஸ் சம்பியன்; அதிக பவுண்டறிகள் அடித்த சங்காவுக்கு 5 இலட்சம் ரூபா பணப்பரிசு

17 MAR, 2025 | 01:40 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கை உட்பட ஆறு நாடுகளின் மாஸ்டர்ஸ் அணிகள் (முதுநிலை வீரர்கள்) பங்குபற்றிய சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (International Masters League) ரி20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி சம்பினானது.

ராய்பூர் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று இரவு மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ப்றயன் லாரா தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணியை 6 விக்கெட்களால் வெற்றிகொண்டு சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணி சம்பியனானது.

1703_india_masters_players_with_the_cup.

சம்பியனான இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் ஒரு கோடி இந்திய ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிக்கு 50 இலட்சம் இந்திய ரூபா பணப்பரிசு கிடைத்தது.

இந்த சுற்றுப் போட்டியில் அதிக பவுண்டறிகள் (38) அடித்த இலங்கை மாஸ்டர்ஸ் அணித் தலைவர் குமார சங்கக்காரவுக்கு 5 இலட்சம் ரூபாவும் அதிக சிக்ஸ்கள் (25) அடித்த அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி வீரர் ஷேன் வொட்சனுக்கு 5 இலட்சம்  ரூபாவும்   வழங்கப்பட்டது.

இறுதிப் போட்டியில் அம்பாட்டி ராயுடு அபார அரைச் சதம் குவித்து இந்திய மாஸ்டர்ஸ் அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.

மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 149 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய மாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

அம்பாட்டி ராயுடு, சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் 45 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து  சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

1703_int_masters_league_sachin_rcng_the_

சச்சின் டெண்டுல்கர் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய அம்பாட்டி ராயுடு 50 பந்துகளில் 9 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 74 ஓட்டங்களைக் குவித்தார்.

அவர்களை விட குர்க்கீத் சிங் மான் 14 ஓட்டங்களையும் யுவ்ராஜ் சிங் 13 ஓட்டங்களையும் ஸ்டுவர்ட் பின்னி ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஏஷ்லி நேர்ஸ் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

ப்றயன் லாரா, வில்லியம்ஸ் பேர்க்கின்ஸ் ஆகிய இருவரும் தலா 6 ஓட்டங்களுடன்  ஆட்டம் இழந்தனர்.

ஆனால், திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ட்வேன் ஸ்மித் 35 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 45 ஓட்டங்களையும் லெண்ட்ல் சிமன்ஸ் 41 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 57 ஓட்டங்களையும் பெற்று அணியைப் பலப்படுத்தினர். 

மத்திய வரிசையில் தினேஷ் ராம்டின் (12 ஆ.இ.) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

பந்துவீச்சில் வினய் குமார் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷாபாஸ் நதீம் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: அம்பாட்டி ராயுடு

https://www.virakesari.lk/article/209434

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.