Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாய்ப் (VOIP) அல்லது வாய்ஸ் ஓவர் ஐபி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாய்ப் (VOIP) அல்லது வாய்ஸ் ஓவர் ஐபி என்ற இணைய வழி குரல் பரிமாற்ற நுட்பம் இன்று நன்றாகவே வளர்ச்சியடைந்து வருகிறது. வாய்ப் (VOIP) என்ற எளிதாகப் புரிந்துக் கொள்ள வேண்டுமெனில் யாஹூ மெஸென்ஜரிலோ அல்லது ஸ்கைப் (SKYPE) வழியாகவோ கணனி டூ கணனி வழியாக பேசிக் கொள்வது. இது 100% இணையத்தை பயன்படுத்தி டெலிபோன் எக்ஸேஞ்ச்கள் இல்லாமல் குரலை பரிமாறிக் கொள்வது. குரல்கள் இணையத்தில் பாக்கெட்டுகளாக போகிறது, மூட்டைகளாக போகிறது என்று நுணுக்கி ஆராய அல்ல இந்த பதிவு. எளிய வழியில் எப்படி வாய்ப்-களை பயன்படுத்தலாம். கணனி குறுக்கீடு இல்லாம் இணையத்தின் வழியாக மட்டும் எப்படி வாய்ப்-களை பயன்படுத்தலாம். இந்தியாவிற்கு குறைந்த முதலீட்டில்/விலையில் எப்படி வாய்ப்-பின் வழியாக பேசலாம் என்பதை சிறிது அலசலாம்.

Head phone & USB phone & SKYPE phone

ஸ்கைப் வழியாகவோ அல்லது அதைப் போன்ற வேறு ஏதாவது மென்பொருள் மூலமாகவோ கணனி டூ கணனி வழியாக இந்தியாவிற்கு பேசுகிறீர்களா? அப்போ நீங்க கட்டாயம் மைக் சிண்ட்ரோமால் பதிக்கப்பட்டு இருப்பீர்கள். கணனியில் மைக்கை இணைத்து ஹெட்போஃனை வைத்து ஊரில் உள்ளவர்களிடம் பேசுவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். ஹெட்போனே வேண்டாமென்று நினைப்பர்வர்களுக்கு இந்த மாதிரி USB போன்கள் சந்தையில் நிறையவே கிடைக்கிறது. அதுவும் ஸ்கைப் பிரபலம் அடைந்த பிறகு ஸ்கைப் போஃன், ஸ்கைப் கர்சீப், ஸ்கைப் ட்ரவுசர் என்று ஏகப்பட்ட அயிட்டங்கள் கிடைக்கிறது. என்ன தான் பிரபலமாக இருந்தாலும் கணனியை ஆன் செய்து மென்பொருளை இயக்கி தான் பேச வேண்டும். கணனி தெரிந்தவர்கள் என்றால் பரவாயில்லை. ஊரில் இருக்கும் கணனி தெரியாத அம்மா அப்பாக்கள் ஸ்கைப் மாதிரியான மென்பொருள்கள் வழியாக பேச வேண்டுமென்றால் ரொம்பவே கஷ்டப்படுவர்கள். இந்த தொல்லைகளே வேண்டாமென்று மகன்களும்/மகள்களும் பழையபடி calling card-களுக்கு சென்று விடுவதுண்டு

Vonage & Sun rocket

அடுத்த வழி மேல் சொன்ன வழியை விட நல்ல வழி. Vonage, sunrocket, packet8 என ஏகப்பட்ட வாய்ப் போஃன் கம்பெனிகள் இருக்கின்றன. வழக்கமான போன் கால்களின் விலையை விட மிக குறைந்த விலைக்கு வாய்ப் கம்பெனிகளால் போன் கால்களை கொடுக்க முடியும். Vonage $24.99/மாதம் -க்கு அமெரிக்கா, கனடா, போர்டோரிக்கோ, சில ஐரோப்பா நாடுகளுக்கு unlimited-ஆக பேச முடியும். அதற்கு ஒரு படி Sunrocket போய் $199-க்கு ஒரு வருடம் முழுவது மேல் சொன்ன இடங்களுக்கு unlimited-ஆக பேசிக்கிட்டேடேடேடேடே இருக்கலாம். இந்த வாய்ப் போன்களால் பெரிய சுதந்திரம் நமக்கு கிடைக்கிறது. உங்களிடம் அகலப்பட்டை (Broadband) இணைய வசதியிருந்தால் போதும். முக்கியமாக கணனி தேவையில்லை. அவர்கள் கொடுக்கும் adapter-ஐ உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் கொண்டுப்போய் adapter-இன் ஒரு முனையை அங்குள்ள அகலப்பட்டையில் இணைத்து, மறுமுனையை ஒரு தொலைப்பேசிக் கருவியுடன் இணைத்து பேசலாம்.

நிறைய நண்பர்கள் ஊருக்கு செல்லும் போது வீட்டில் அகலப்பட்டை இணையத்தை வாங்கி அமெரிக்காவிலிருந்து vonage, sunrocket போன்றவற்றின் adapter-களை இணைத்து விடுகிறார்கள். வழக்கமாக வாய்ப் adapter-களுடன் அந்நாட்டின் உள்ளூர் தொலைப்பேசி எண்ணும் கொடுப்பார்கள். அந்த adapter இந்தியாவில் அகலப்பட்டை இணையத்தில் இணைக்கப்பட்டால் வெளிநாட்டின் உள்ளூர் தொலைப்பேசி எண் வீட்டில். adapter சுவிட்ச் ஆன் செய்யப்பட்டிருக்கும் வரை வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு லோக்கல் கால் விலையில் பேசலாம்.

இதில் என்ன குறை என்றால் மாதா மாதமோ இல்லாவிடில் வருசத்திற்கு ஒரு தடவையோ நிறைய பணம் கட்ட வேண்டியிருக்கும். நீங்கள் ஊருக்கு வாரம் அரைமணி நேரம் பேசுபவராகயிருந்தால் மாதம் $24.99 + tax கட்டிக் கொண்டிருக்க முடியுமா? அதைவிட calling card-களே மேல் என்று தோன்றும். நீங்கள் தினமும் மணிக்கணக்காக பேசுபவர் என்றால் இந்த ஆப்ஷனை கண்டிப்பாக நாடலாம்.

SIP (Session initiation Protocol) Telephoney

இப்படி மாதக்கணக்கிலோ அல்லது வருடகணக்கிலோ பணம் கட்டாமல் நமக்கு தேவைப்படும் போது மட்டும் பணம்(Prepaid) கட்டி பேசிக்கொள்ளும் வாய்ப் provider-ஐ தேடிக் கொண்டிருந்தேன். இணையத்தில் மேய்ந்ததின் பலனாக வாய்ப் பற்றி நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. SIP protocol என்ற internet protocol-ஐ பயன்படுத்தி ஏகப்பட்ட சர்வீசுகள் கிடைக்கின்றன. இதில் என்ன வசதி என்றால் ஸ்கைப் மாதிரி டெலிபோன் எக்சேஞ்ச் வழியாக போகாத இணைய peer to peer கால்கள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. அதில் அகப்பட்ட ஒரு விசயம் ipvaani. ஒரு analog phone adapter (ATA)-க்கு $85 செலுத்தி இரண்டு adapter-கள் வாங்கி இரு வேறு இடங்களில் அகலப்பட்டை இணையத்தில் இணைத்தால் (கணனி இல்லாமல்) ஹாட்லைன் போல் இந்த இருவரும் எப்போது வேண்டுமானாலும் உரையாடி மகிழலாம். நான் மேல் குறிப்பிட்ட இருவேறு இடங்கள் வெளிநாடு & இந்தியா, சென்னை & திருநெல்வேலி, 7 மேற்குத் தெரு & 8 மேற்குத் தெரு என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இருக்கவேண்டியதெல்லாம் வெறும் அகலப்பட்டை வசதியும், இரு ATA adapter மட்டுமே.

இப்படியே இன்னொரு நண்பர் இந்த ATA adapter-ஐ வாங்கி இணைத்துக் கொண்டால் அவரிடமும் இலவசமாக பேசலாம்.

IPVanni-யின் குறை: இதில் இன்னும் குறை இருக்கிறது. 1. ATA adapter-ன் விலை கொஞ்சம் அதிகம். one time investment-ஆக எடுத்துக் கொண்டாலும் இன்னும் வளைந்துக் கொடுக்காத சில குறைப்படுகள் இருக்கிறது. 2. இந்த ATA adapter -ன் வழியாக சாதாரண தொலைப்பேசிகளுக்கு (அதாவது எக்சேஞ்ச் வழியாக வரும் தொலைப்பேசிகளுக்கு) பேச முடியாது. அதற்கான வசதியையும் அவர்கள் செய்துக் கொடுக்கவில்லை.

vonage, sunrocket, lingo போன்றவர்கள் அவர்கள் கொடுக்கும் ATA adapter-களை பூட்டி (lock) வைத்து விடுவதால் அந்த ATA adapter-களை வேறு விசயத்திற்கு பயன்படுத்த முடியாமல் போய் விடுகிறது. மேல் சொன்ன வாய்ப் provider-களும் SIP protocol-களை தான் பயன்படுத்துகிறார்கள். இவர்களை போல் அல்லாமல் இன்னும் நிறைய வாய்ப் கம்பெனிகள் “உங்கள் இஷ்டப்பட்ட ATA adapter-ஐ கொண்டு வாருங்கள். எங்களுடன் இணையுங்கள்” என்ற உரக்க கூவி அழைக்கிறார்கள். அவற்றில் சில பேர்

www.fonosip.com

www.gizmoproject.com

www.sipphone.com

www.callcentric.com

www.voipcheap.com

www.webcalldirect.com

இவற்றில் எந்த வாய்ப் கம்பெனியை தேர்ந்தெடுப்பது என்பதற்குள் மண்டை காய்ந்து விடுகிறது. ஒருவர் ஒரு வசதி கொடுத்தால் இன்னொருவர்

அந்த வசதிக் கொடுப்பதில்லை. சிலவற்றில் payment பிரச்சனை என ஏகப்பட்ட குழப்பங்கள். சில ஏமாற்று வேலை செய்யலாம் எனவும் உள்ளுணர்வு சொல்லும்.

இந்த இணையத்தளத்தில் அந்த நாட்டில் இருக்கும் வாய்ப் கம்பெனிகளை பட்டியலிடுகிறார்கள். இந்தியாவில் ஒரு ரூபாய் திட்டத்தில் வெளிநாடுகளுக்கு பேசும் முறையை அறிமுகப்படுத்திய கம்பெனிகளும் இருக்கின்றன. அதற்கான பட்டியல் இங்கே.

vonage, sunrocket என்று போகாமல் உங்கள் வீட்டிலும் வாய்ப் இணைப்பு கொடுக்க செய்ய வேண்டியது இது தான்:

1. நீங்கள் செலவழிக்கும் திறன் பொறுத்து ஒரு ATA adapter-ஐ வாங்கிக் கொள்ளுங்கள். அந்த ATA adapter வாங்க இந்த தளங்களை நாடலாம். 1 & 2

2. மேல் சொன்ன ஏதாவது வாய்ப் கம்பெனி தளத்தில் கணக்கு தொடங்குங்கள். அந்த தளங்களின் உதவி பக்கத்தில் எப்படி நீங்கள் வாங்கிய adapter–ஐ நிறுவுவது என்ற விளக்கங்கள் கிடைக்கும்.

3. நீங்கள் சாதாரண தொலைப்பேசிகளுக்கு (PSTN lines) பேச வேண்டுமென்றால் கொஞ்சம் பணத்தை உங்கள் கணக்கில் நிரப்பிக் கொள்ள வேண்டியிருக்கும். இது மிக மிக சகாய விலையிலே கிடைக்கும்.

இப்போது உங்கள் வீட்டில் வாய்ப் ரெடி. அதே போல் ஊரில் அகலப்பட்டை வாங்கி மேல் சொன்னப்படி இன்னொரு adapter-ஐ நிறுவுங்கள். அப்புறம் பேசுங்க பேசுங்க பேசிக்கிட்டே இருங்கள். adapter to adapter எப்போதுமே இலவசம் தான். நீங்கள் வீட்டில் இல்லாத போது இந்தியாவிலிருந்து யாராவது உங்கள் மொபைலில் பேச வேண்டுமென்றால் அதிகபட்சம் 1 நிமிடத்திற்கு 2 காசு சார்ஜ் பண்ணுவார்கள். So easy.

வாய்ப் போன் பயன்பாட்டில் என்னுடைய அனுபவம்:

பலவித ஆராய்ச்சிக்கு அப்புறம் அமெரிக்காவில் பயன்படுத்த கண்டெடுத்த இரண்டு

1. Grandstream Telephone adapter

2. Callcentric - SIP Provider

இதை சோதித்துப் பார்ப்பதற்கு grandstream phone adpter-ஐ வாங்கினேன். அப்புறம் ஒரு டெலிபோன் கருவியை வாங்கிக் கொண்டேன்.

அப்புறம் www.callcentric.com இணைய தளத்திற்கு சென்று ஒரு கணக்கு தொடங்கினேன். கணக்கு தொடங்கியவுடன் 1777****** என்று ஒரு எண்ணை எனக்கு ஒதுக்கினார்கள். உதாரணத்துக்கு 17772345678 என்று வைத்துக் கொள்வோம். அவர்களுடைய உதவி பக்கத்தில் என்னுடைய Grandstream adapter-ஐ எப்படி நிறுவுவது என்பதை விரிவாகவே கொடுத்திருக்கிறார்கள். அகலப்பட்டை இணையத்துடன் இணைத்து அவர்கள் சொன்னபடி configure செய்ய வேண்டியது தான். adapter-உடன் இணைந்த தொலைப்பேசி கருவியில் டயல் டோன் கேட்டால் நீங்க வெற்றிகரமாக voip-ஐ இணைத்து விட்டீர்கள் என்று அர்த்தம். அவர்கள் சொல்லியிருக்கும் மாதிரி எண்ணுக்கு அழைத்து எண்ணுடைய தொடர்பு சரியாக இருக்கிறது என்று தெரிந்தவுடன் $5 என் கணக்கில் சார்ஜ் செய்தேன். இப்போது என்னால் எந்த ஊருக்கும் இந்த வாய்ப்-பின் மூலம் அழைக்க முடியும். சிங்கப்பூருக்கு 2 காசு, அமெரிக்கா உள்ளூர் அழைப்புக்கு 2 காசு, இந்தியாவின் சாதாரண தொலைப்பேசிக்கு 8.2 காசு என்ற விலையில் அழைக்கலாம். அவுட் கோயிங் ஒகே.

இப்போ இன்கமிங் எப்படி வேலை செய்யும். இதிலிருக்கும் சிக்கல் அவர்கள் கொடுக்கும் 17772345678 என்ற எண்ணை மற்ற தொலைப்பேசியிலிருந்து அழைக்க முடியாது. அதற்கு இருக்கவே இருக்கு sipbroker.com. இந்த இணையதளத்தில் ஏகப்பட்ட தொடர்பு எண்களை அதாவது வேறு வேறு நாடுகளின் தொடர்பு எண்கள் கிடைக்கும். நீங்கள் பண்ண வேண்டியதெல்லாம் ஒரு எண்ணை அழைத்து callcentric-ன் code *462. அதனால் *462 என்பதை உள்ளிட்டு பிறகு எனக்கு கொடுக்கப்பட்ட எண்ணை அழுத்தினால் (அதாவது *46217772345678) போதும், இன்கமிங் கால் வர ஆரம்பித்து விடும். callcentric-க்கு *462 என்ற ஆரம்ப எண் இருப்பது போல பலவிதமான வாய்ப் கம்பெனிகளுக்குரிய ஆரம்ப எண்களும் இங்கே கிடைக்கும். ஆகவே எந்த போனிலிருந்தும் உங்கள் வாய்ப் adapter-ஐ அழைக்கலாம்.

இதெல்லாம் வேலைக்காவாது. எனக்கு தனி ஒரு போன் நம்பர் அந்த adapter-க்கு தேவை என்றால் அதற்கு மாதம் $2 முதல் $5 வரை செலவழிக்க வேண்டும். அதுவும் என்னால் முடியாது இலவசமாக தான் வேண்டுமென்றால் இருக்கவே இருக்கு www.ipkall.com. இந்த தளத்தில் ஒரு கணக்கு தொடங்கினால் 360 என்று ஆரம்பிக்கும் ஒரு அமெரிக்கா நம்பரை கொடுப்பார்கள் [ஓசியிலே கொடுப்பதால் நீங்க கேட்கும் நம்பர் எல்லாம் கெடைக்காதுங்கோ]. அந்த தளத்தில் போய்

SIP PROXY; in.callcentric.com

SIP number: 17772345678 [உங்க SIP எண்]

என்று உள்ளிட்டு சேமித்து வைத்தால் ஒரு மணி நேரத்தில் உங்களுக்கும் கொடுக்கப்படும் 360-***-**** என்ற அமெரிக்கா நம்பரை அழைக்க ரெடியாகிவிடும். அப்புறம் என்ன? எந்த தொலைப்பேசியிலேயிருந்து அந்த எண்ணை அழைத்து ஜமாயுங்க.

எல்லாம் சரி. இதனால் என்னால் எப்படி இந்தியாவிற்கு சீப்பா பேச முடியுது. அது தானே மேட்டரே. நான் செய்ததெல்லாம் இது தான்.

1. நெல்லையில் உள்ள என் வீட்டாரிடன் Rs. 250-க்கு BSNL கிடைக்கும் அகலப்பட்டை இணைப்பை வாங்க சொன்னேன். DSL modem அது இதுவென ஒரு சில ஆயிரம் ஆகியது. ஒகே.

2. வீட்டிற்கு இன்னொரு Grandstream Telephone adapter-ஐ வாங்கினேன்.

3. callcentric.com-ல் இன்னொரு கணக்கு ஆரம்பிக்க இன்னொரு voip எண் கிடைத்தது. எடுத்துக்காட்டுக்கு 17772223456 என்று வைத்துக் கொள்வோமே.

4. அந்த adapter-ஐ சொன்னபடி configure செய்தேன். அதில் $5 சார்ஜ் செய்தேன்.

5. அப்படியே ipkall.com போய் இன்னொரு கணக்கு 17772223456-காக தொடங்க இன்னொரு அமெரிக்கா நம்பர் 360-***-**** என்று கிடைத்தது.

6. ஊருக்கு சென்ற சமயத்தில் அகலப்பட்டை modem-வுடன் இந்த adapter-யும் ஒரு தொலைப்பேசி கருவியும் இணைக்க நெல்லையில் ஒரு அமெரிக்கா நம்பர் (அது தான் அந்த 360-***-****) ரெடி.

7. சில நண்பர்களை 360 எண்ணுக்கு அழைக்கச் சொல்லி இன்கமிங், அவுட்கோயிங்கை உறுதி செய்தேன்.

All set. என் வீட்டில் உள்ளோர் என்னுடன் பேச கனணியை ஆரம்பிக்க வேண்டியதில்லை. என்னுடன் அவர்கள் பேச வேண்டுமென நினைக்கும் போது DSL modem-ஐ சுவிட்ச் ஆன் செய்ய வேண்டும் கொஞ்ச நேரத்திற்கு அப்புறம் phone adapter-ஐ சுவிட்ச் ஆன் செய்ய வேண்டும். சில வினாடிகளில் அதில் இணைக்கப்பட்ட போனில் டயல் டோன் கேட்கும். என் voip எண் 17772345678 அழுத்தினால் மறுகண்டத்தில் இருக்கும் எனக்கு டெலிபோன் மணி ஒலிக்கும். இது முற்றிலும் இலவசம். மணிக்கணக்காக பேசலாம். ஒரு வேளை நான் வீட்டில் இல்லையானால் 1-***-****-**** என்று என் செல்லை அவர்கள் தொடர்புக் கொள்ளலாம். பேசலாம். அவர்கள் அங்கிருந்து என் செல்பேசிக்கு பேசினால் சார்ஜ் பண்ணிய $5 குறைய தான் செய்யும். அதையும் தவிர்க்க செய்ய அவர்களை போனை வைக்க சொல்லி விட்டு அவர்களுக்குரிய 360 எண்ணை என் செல்பேசியிலிருந்து அழைக்கலாம் அல்லது sipbroker முறைப்படி கூட அழைக்கலாம். இப்போது வீட்டில் உள்ளோர் கணனி குறுக்கீடு இல்லாமையால் வெகு இலகுவாக பயன்படுத்த முடிகிறது.

இன்னும் சிக்கனம் பிடிக்க நினைத்தால் ஒரே ஒரு phone adapter-ஐ வீட்டில் வாங்கி வைத்துவிட்டு ipkall எண்ணை வாங்கிக் கொண்டு நீங்கள் மறுமுனையில் எந்த தொலைப்பேசியிலிருந்தும் வீட்டிற்கு அழைக்கலாம்.

BSNL Rs 250 ரூபாய் அகலப்பட்டை வசதிக்கு 1GB தகவல் பரிமாற்ற அளவு கொடுக்கிறார்கள். adapter-ல் நீங்க கொடுக்கும் vocoder [voice encoder decoder] பொறுத்து செலவாகும். உங்கள் காலின் வாய்ஸ் குவாலிட்டி நல்ல இருக்க வேண்டுமென்றால் கொஞ்ச அதிகப்படியான தகவல் அளவாக மாறும். எப்படியிருந்தாலும் சராசரியாக 1GB தகவல் பரிமாற்ற அளவில் குறைந்தது 20 மணி நேரமாவது பேசமுடியும் [கணனியில் இணைக்கப்படாமல் இருந்தால்]. அதிக நேரம் பேசுவேனென்றால் Rs 500 திட்டத்திற்கு மாறலாம். 2.5 GB தகவல் பரிமாற்ற அளவுடன் night unlimited என்ற போனஸ் கிடைக்கிறது. இதெல்லாம் இல்லாம உங்களிடன் unlimited அகலப்பட்டை திட்டம் வீட்டில் வைத்திருக்கிறீர்களா? எந்த பிரச்சனையுமில்லை. விடிய விடிய விடிந்த பின்னும் பேசிக்கொண்டேயிருக்கலாம்.

SIP & மென்தொலைப்பேசி

நான் அடிக்கடி பயணம் செய்கிறேன். என்னுடன் மடிகணனி எப்போது இருக்கும். ஹோட்டலில் அடிக்கடி தங்க நேரிடும் போது என் voip எண்ணை என்னுடன் எடுத்துச் செல்ல முடியுமா? என்று கேட்டால் முடியும் என்று சொல்லுவேன். அதற்கு தீர்வு X-lite என்ற மென்பொருள். மேல் சொன்ன adpter–ல் என்ன என்ன configure செய்ய முடியுமோ அதையெல்லாம் இந்த மென்பொருளிலும் பண்ணலாம். என் மடிக்கணனியில் x-lite நிறுவியிருப்பதால் 17772345678 என்ற எண்ணும் எப்போது பயணப்படும். இந்த மென்பொருள் வழியாக என்னால் போன்கால்களை பெறவும் முடியும் போன்கால்களை பண்ணவும் முடியும்.

Disclaimer: நான் voip பற்றி அறிந்ததையும் தெரிந்ததையும் நடைமுறைப்படுத்தியதையும் இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன். ATA adpter configuration நினைத்த மாதிரி இல்லாமல் சில சமயம் router-களால் பிரச்சனைகள் வரவும் வாய்ப்புள்ளது. மேல் சொன்னவை எல்லாம் உங்கள் சொந்த Risk-ல் செய்து பார்த்துக் கொள்ளவும். பதிவில் சொல்லியபடி செய்து பார்த்து உங்கள் voip முயற்சி எதுவும் வேலை செய்யவில்லை என்றால் நானோ,halwacity.com-ஒ பொறுப்பாக முடியாது. Technical சார்ந்த கேள்விகள் எதாவது வந்தால் எனக்கு கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து பின்னூட்ட பதிலாகவோ, பதிவாகவோ சொல்ல முயல்கிறேன். அதுபோல் இணையத்தில் இதைப் பற்றிய விசயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவைகளும் உங்களுக்கு உதவலாம்.

http://halwacity.com/blogs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.