Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இளங்கவியும் 'ஏடிஎச்டி' யும் [ADHD]"

பரபரப்பான திருகோணமலை நகரில், இளங்கவி என்ற சாதாரண மனிதர் வாழ்ந்து வந்தார். தனது வாழ்க்கையின் முதன்மையான ஆண்டுகளை பொறியியலாளராக அர்ப்பணித்த இளங்கவி, பிற்பகுதியில் சூழ்நிலை காரணமாக ஒரு நிறுவனத்தின் கிளையில் மேலாளராக பணியாற்றி இன்று ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெற்ற பிறகு, ஒரு பொழுது போக்காக தமிழர்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை மையமாக வைத்து எழுதும் ஆர்வத்தை அவர் ஏற்படுத்தினார். அவரது கட்டுரைகள், கவிதைகள் மற்றும் சிறு கதைகள் வலைத்தளங்களில் ஓரளவு ஆழமாக எதிரொலித்தது, அவருக்கு ஒரு அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றது.

ஒரு முறை சிரிப்பும் உரையாடல்களும் அவரின் வீட்டின் காற்றில் நிறைந்திருக்க, இளங்கவி ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து தன் சொந்த எண்ணங்களில் மூழ்கி இருந்தார். அங்கு நடப்பனவற்றில், உரையாடல்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை, ஆனால் தனக்கு தெரிந்தவற்றில் மற்றும் உடனடி தேவையானவற்றில் மட்டும் இடைக்கிடை பங்கு பற்றினார். மற்றும் படி அங்கு இருந்தாலும், முழுமையாக ஈடுபடவில்லை. அவர் எதோ யோசனையில் மூழ்கி மூழ்கி இருந்தார். ஒரு குடும்ப உறுப்பினர் அவரை அங்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் உரையாடலில் ஈடுபடுத்த முயன்ற போது அவர் உடனடியாக பதிலளிக்கத் தவறிவிட்டார். இந்தச் சம்பவம் குடும்பத்தாரின் பெருகிய சந்தேகத்திற்கு தூண்டுதலாக அமைந்தது.

மீண்டும் ஒரு முறை, அவர் தனது அறையில் சிறு கதை ஒன்றை எழுதுவதில் கணனியில் மூழ்கி இருக்கும் தருவாயில், அவர் அறைக்குள் நுழைந்த ஒரு குடும்ப உறுப்பினர் அங்கு எதோ ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே போனார். ஆனால் இளங்கவி அதை, அவரை திரும்பி பார்க்கவில்லை, கணனியிலேயே தன் கவனத்தை செலுத்தியபடி இருந்தார். ஆனால் அவருக்குத் தெரியும் வந்தது ஒரு குடும்ப உறுப்பினர், வெளியார் யாரும் இல்லை, எனவே தமக்கு வேண்டியதை அவர் எடுப்பதில் அவருக்கு எந்த ஆட்சேபமும், அதேநேரம் அது எது என்று அறிவதும் முக்கியமாக அவருக்கு இருக்கவில்லை, அதற்கு முக்கிய காரணம் அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் மேல் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும் ஆகும். மேலும் அவை எல்லா குடும்ப உறுப்பினருக்கும் பொதுவானவையும் கூட. ஆனால் அந்த குடும்ப உறுப்பினரோ, இப்படி கவனக் குறைவாக இருந்தால், வீடு எதோ ஒரு குறைபாடால் தீ பற்றினாலும், அது தெரியாமல் இருந்து விடுவார் என்று அவர் மேல் ஐயப்பாடு கொண்டார்.

இன்னும் ஒரு முறை ஒரு சாப்பாட்டு மேசை விவாதத்தின் போது, அவர் இப்ப எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு புதிய கதையின் நுணுக்கங்களை உணர்ச்சியுடன் விரிவாக குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஆனால், குடும்பம், அவரது இந்த உண்மையைப் போன்று அல்லது உயிருடையது போன்று கதை சொல்லலை மனக்கிளர்ச்சியான நடத்தை [impulsive behavior] என்று தவறாகப் மீண்டும் புரிந்து கொண்டனர்.

எனவே இளங்கவி ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்தும் பொழுது, சுற்றாடலில் நடப்பதை கவனிப்பது இல்லை என்ற ஒரு குறைபாடை அவர் மேல் கூறி, அது சிலவேளை ஆபத்துகளை கொண்டு வரலாம் என நேரடியாகவே அவரிடம் கூறியதுடன், அவரது நடத்தையை அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு [ஏடிஎச்டி (ADHD; attention deficit hyperactivity disorder)] என்று முடிவும் எடுத்து, அதைப் பற்றி ஒரு விளக்கமும் எப்படி அதில் இருந்து வெளியே வருவது என்ற அறிவுறுத்தலும் கொடுத்தனர். இளங்கவி பொறுமையாக கேட்டார்.

தான் கவனக் குறைவு இல்லை என்றும், ஆனால் தேவை இல்லாதவற்றில் அல்லது அந்த நேரம் தனக்கு அல்லது ஏதாவது பாதுகாப்புக்கு முக்கியம் இல்லாதவற்றில் அக்கறை செலுத்துவது இல்லை, அவ்வளவுதான் என்று கூறினார்.

இளங்கவி அதன் பின் அவரின் வீட்டுக்கு அண்மையில் இருந்த சிவன் கோவிலுக்கு முன்னால் இருக்கும் மதகில் இருந்து கொண்டு தன் ஆரம்ப வாழ்க்கையை அலசிப் பார்த்தார். பாடசாலையில் படிக்கும் காலத்தில் கொஞ்சம் முரடாகவும், தன் பாட்டிலும் மற்றும் தனக்கு விருப்பமானவற்றில் அல்லது அந்த நேரம் தேவையானவற்றில் மட்டும் கவனம் செலுத்தி, மற்றவற்றில் அக்கறை எடுக்காதது தெரிய வந்தது. கணிதம், கணிதத்தை உள்வாங்கிய ஏனைய பாடங்களில் மனம் விரும்பி, கூட அக்கறையுடன் படித்ததையும், அதேநேரம் மொழி, சமயம், உயிரியல் போன்ற பாடங்களில் எனோ பின் நின்றதும் தெரியவந்தது. அதுமட்டும் அல்ல, மொழி இன்னும் ஒரு பிரச்சனையாக தொடர்வதும் தெரியவந்தது.

இளங்கவி ஆரம்பகாலத்திலேயே அவரின் ஆர்வத்தைப் பிடிக்கும் அல்லது உடனடி மனநிறைவை அளிக்கும் பணிகளில் அல்லது பாடங்களில் அதி தீவிர கவனம் செலுத்தியதும், அதனால்த்தான், மொழியில் அதை ஒத்த பாடங்களில் குறைபாடுகள் இருந்தாலும், கணிதம் அல்லது கணிதத்தை உள்ளடக்கிய குறிப்பிட்ட பாடங்களில் பெரும் சித்தி அடைந்து பல்கலைக்கழகம் போனது ஏன் என்பதை இளங்கவி அறிந்து கொண்டார். என்றாலும் இக்குறைபாடு வயது போகப்போகச் பொதுவாக சீர்நிலைக்குத் திரும்புமாயினும் சிலருக்கு முதிர்பருவத்திலும் நிலைத்து நிற்க வாய்ப்புண்டு என்பதை இளங்கவி நிராகரிக்கவில்லை. ஆனால் அவர்கள் கருதுவது போல் இன்று தனக்கு சில குறைபாடுகள் இருந்தாலும், முக்கியமானவற்றில் அல்லது உடனடி வாழ்க்கைக்கு தேவையான வற்றில் கவனக்குறைவு ஒன்றும் இல்லை என்பது தான் அவரின் நிலைப்பாடு.

இன்று ஓய்வு பெற்று வெற்றிகரமான வாழ்வும் வாழ்ந்து விட்டேன், இனி மொழியின் குறைபாடு பெரும் பிரச்சனையாகாது, அதேபோல தேவை இல்லாத நாளாந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தாதது ஒரு பெரும் பிரச்சனையாகாது. ஆனால் கட்டாயம் குடும்ப உறுப்பினர் கவலைப்படுவது போல் முக்கியமானவற்றில் கட்டாயம் தன் கவனம் இருக்கும் என்பது தான் இளங்கவியின் வாதம். இன்றும் ஏடிஎச்டி நோயால் பாதிக்கப் படுகிறேனோ இல்லையோ என்பது இனி தேவை இல்லாத ஒன்று, எனவே குடும்ப உறுப்பினர் தனது நடத்தையைப் நல்ல நோக்கத்துடன் புரிந்து கொள்ளாமல், அவர்களின் தவறான கணிப்பும் தொடர்ச்சியான உரையாடல்களும் இளங்கவிக்கு மனஉளைச்சலை கொடுத்தது. அது தான் அந்த மதகில் தனிய இருந்து யோசித்துக் கொண்டு இருந்தார்.

அவர்களின் இந்தப்போக்கால் தான் தனிமைப் படுத்தப்பட்டதாக உணர்ந்த இளங்கவி, குடும்பக் கூட்டங்கள் மற்றும் சமூக நிகழ்வுகளில் இருந்து ஓரளவு மேலும் விலகி இருக்க முடிவு செய்தார். அவர் தனது எழுத்தில் முழுக்கவனம் செலுத்தி, தனிமையைக இருக்க மேலும் மேலும் விரும்ப தொடங்கினார். ஆனால் அதை ஏடிஎச்டி உடன் மேலும் தொடர்பு படுத்தி, குடும்ப உறுப்பினர் குழப்பத்தில், கவலையில் ஆழ்ந்தனர். இதனால், ஒரு காலத்தில் துடிப்பான குடும்ப இயக்கம் ஒரு பதட்டமான சூழ்நிலையாக மாறியது,

இதனால் அவரது இலக்கிய எழுத்து முயற்சிகள் வெற்றியடைந்தாலும், இளங்கவியின் தனிமை ஆழமடைந்தது. அவரது குடும்பத்தினர் அவரது இந்த நடத்தையை, அதற்கான காரணத்தை தேடாமல், அமைதியான தொனியில் தொடர்ந்து தங்களுக்குள் விவாதித்தனர். அந்த சரியான புரிதல் இல்லாத அல்லது விளக்கம் இல்லாத விவாதம் தான் அவரை இப்படி மேலும் மேலும் ஆக்குகிறது என்பதை அவர்கள் எனோ புரியவில்லை. அவர் தனது சொந்த வீட்டிலேயே ஒரு அமைதியான நபராக மாற்றப்பட்டார் அல்லது ஒதுக்கப்பட்டார்.

இளங்கவி ஏடிஎச்டி தான் தனது மொழி மற்றும் சில விடயங்களில் கவனம் செலுத்தாமல் போனதுக்கு இளமையில் காரணமா இருந்தது என்பதை உணர்ந்தார். ஆனால் அது காலம் கடந்த முடிந்த முடிவு, என்று தனக்குள் கூறிக்கொண்டார். ஏன் என்றால் இனி இளமை திரும்பவும் வராது. என்றாலும் காரணம் அறிந்தது ஒரு நிம்மதியும், மற்றும் இப்படியான நிலையில் இருப்பவர்களை சரியாக கணிக்க, உணர அது உதவும் என்பதில் மகிழ்ச்சி அடைந்தார். "நான் நானாக தான் இன்னும் இருக்கின்றேன். எனக்கு ஏடிஎச்டி இருந்தது, அது எப்படி இப்ப இருக்கிறது என்பது இனி கவலை இல்லை " அவர் தான் அதனால் உடைந்து விட்டதாக உணரவில்லை, எனவே தன்னைத் அவர்கள் சொல்வது போல, இந்த முதிர்ந்த காலத்திலும் சிரமப்படுத்த வேண்டும் என்பது அவசியமும் இல்லை, ஆனால் தன்னைப் பற்றிய சிறந்த வெளிப்பாட்டை குடும்பத்தினருக்கு காட்ட வேண்டிய உத்திகளைப் சிந்தித்தார்.

தனிமையில் இளங்கவி தன் எழுத்தில் ஆறுதல் கண்டார். ஒவ்வொரு வார்த்தையும் அவரைச் சூழ்ந்திருந்த தவறான எண்ணங்களுக்கு எதிரான அமைதியான எதிர்ப்பாக மாறியது. அவரது படைப்புகள் வெறும் கதைகள் அல்ல; தனிமைப் படுத்தப்பட்ட போதிலும் அவரது ஆர்வத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அவரது நெகிழ்ச்சி மற்றும் உறுதியின் பிரதிபலிப்பாக அவை இருந்தன.

காலம் செல்ல செல்ல இளங்கவி குடும்பத்தினர் தங்களின் நிலைப்பாட்டை அல்லது புரிதலின் தன்மையை உணர ஆரம்பித்தனர். அவர்களின் அனுமானங்கள் சரியாக இருந்தாலும், இன்றைய அவரின் முதிர்ந்த காலத்தில், அது அவரின் மனநிலையில், நல்வாழ்வில் சில தாக்கங்களை தெரிந்தும் தெரியாமலும் ஏற்படுத்தியது, ஒரு காலத்தில் வெளிப்பாடாக இருந்த மனிதரை அவரது சொந்த வீட்டிற்குள்ளேயே அமைதியான பார்வையாளராக மாற்றியது. மெதுவாக, அவர்கள் தங்கள் முன்கூட்டிய கருத்துக்களைக் கேள்வி கேட்கத் தொடங்கினர் மற்றும் அவரது எழுத்தின் மீதான அர்ப்பணிப்பின் ஆழத்தைப் புரியத் தொடங்கினர்.

ஏடிஎச்டி- ஐச் சுற்றியுள்ள களங்கத்தின் ஒரு பகுதியை அனுபவித்து விட்டேன், ஆனால் அதை இன்னும் தொடருகிறேனா என்பது தான் இளங்கவியின் இன்றைய கேள்வி? இது பெரும்பாலும் இன்னும் தனக்கு ஒரு குறைபாடா அல்லது குறைபாடாக கட்டமைக்கப் படுகிறதா? என்பது தான் இளங்கவியின் ஆதங்கம்! - இது துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால் இந்த வகையான மூளை வயரிங் [brain wiring] உண்மையில் நிறைய பரிசுகளுடனும் வருகிறது என்பதாகவே இளங்கவி உணர்ந்தார்.

எடுத்துக்காட்டாக, ஏடிஎச்டி உள்ளவர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமான சிந்தனையாளர்களாக இருப்பார்கள் என்று இளங்கவி தன் நேரடி அனுபவம் மூலமும் மற்றும் ஆய்வுகள் மூலமும் கண்டறிந்தார். அதாவது இப்படியானவர்கள் ஒரு பிரச்சனையை, மற்றவர்கள் நினைக்காத புதிய வழிகளில் அணுகக் கூடியவர்கள் என்று அறிந்தார்.

நமது நிலைமைகள் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் களங்கங்கள் எவ்வளவு அதிகமாக சவால் செய்யப்படுகிறதோ, அந்தளவுக்கு ஒவ்வொரு வகையான மூளைக்கும் இடமளிக்கும் கலாச்சாரத்தை நோக்கி நாம் மாற முடியும் என்பது இன்று இளங்கவியின் நம்பிக்கை.

மேலும் ஏடிஎச்டி உள்ளவர்களை சில வல்லுநர்கள் கூற்றின்படி "ஆர்வம் அடிப்படையிலான நரம்பு மண்டலம் [interest-based nervous system]" உள்ளவர்கள் என்கிறார்கள். இதைத்தான் இளங்கவியும் நம்புகிறார். அவர்களுக்கு ஆர்வமுள்ள ஒரு தலைப்பு அல்லது ஒரு யோசனை பற்றிய சாத்தியமான ஒவ்வொரு உண்மையையும் கற்றுக் கொள்வதில் அவர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள் என்பதாகும். அது தான் ஓய்வின் பின் இளங்கவி தமிழர் தொடர்பான அல்லது தமிழ் இலக்கியம் தொடர்பான பலவற்றை ஆய்வு செய்து அவ்வற்றை கட்டுரை, கவிதை, சிறுகதை போன்ற தளங்களில் இளங்கவி எழுதத் தொடங்கினார், அது தான் உண்மை!

"எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியர் ஆகப்பெரின்", என வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பே கூறியதையும், "எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணவேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும்", என மகாகவி பாடியதையும், முணுமுணுத்தபடி இளங்கவி தன் சாய்வு நாற்காலியில், குடும்பத்தாரின் கதைகளை ஓரம்கட்டிவிட்டு சற்று தனிமையில் ஓய்வு எடுத்தார். அது இப்ப அவருக்குப் பழக்கப் பட்ட ஒன்றே!!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

434394776_10224911221110562_783202862032

434385039_10224911221950583_698140656267


  • கருத்துக்கள உறவுகள்

Copilot Answer

Attention Deficit Disorder (ADD) PPT Slide 2

The causes of Attention Deficit Hyperactivity Disorder (ADHD) are not fully understood, but several factors may contribute to its development:

Psychiatry.org+4

இது சம்பந்தமாக விளங்கி கொள்ள இலகுவாக இருக்கும் என்பதால் பதிக்கிறேன்.

கவனம்-பற்றாக்குறை/அதிக செயல்பாடு கோளாறு (ADHD) என்பது பல்வேறு வயதினரைப் பாதிக்கும் ஒரு பரவலான நரம்பியல் …

படித்ததில் பிடித்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.